Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam...23..1

  • Thread Author
அத்தியாயம்…23… 1

நான் இதை பிழை திருத்தம் செய்யல… அவசரமா வெளியில் போகிறேன்..

தங்கள் அறையில் நுழைந்த தீக்க்ஷயன் கையில் வாழை பழமும், ஒரு பால் கவரும் இருந்தது…

“என்ன வசி.. காலையில் அந்த கஞ்சி குடித்தது வாந்தியும் வரல.. பரவாயில்ல போலவும் இருந்ததே வசி… இப்போ என்ன ஆச்சு…”

சோர்ந்து போன முகத்தையும் கலக்கமான கண்களையும் பார்த்து பதை பதைத்து தான் போய் விட்டான் வசியின் தீனா…

கணவனின் இந்த கரிசனமான பேச்சில் மீண்டும் சற்று முன் அவள் அறிந்து கொண்ட விசயத்தை கணவனிடம் கொட்டி..

அவனின் மார்பில் சாய்ந்து ஒரு முறை அழுது தீர்த்து விடலாம் என்று தான்.., அவளின் சோர்ந்து போன மனம் நினைத்தது.. அதுவும் இது போலான நேரத்தில், பெண்களின் மனநிலை நேரத்துக்கு நேரம் மாற்றம் அடையும் என்பார்கள்.. அப்படி இருக்க அவள் தெரிந்து கொண்ட விசயம் என்ன சாதாரணமான விசயத்திலா சேரும்.. அனைத்தும் கணவனிடம் கொட்டி விட்டு…

இனி தாங்க என்னால் முடியாது எல்லாம் நீங்களே பார்த்து கொள்ளுங்கள் என்று அக்காடா என்று ஒரு மூலையில் படுத்துக் கொள்ள தான் அவளின் மனது நினைத்தது..

ஆனால் இந்த விசயமானது எப்படி வேண்டுமானலும் மாற்றிக் கொள்ள சரஸ்வதியம்மாவால் முடியும்.. அதுவும் ஒரே ஒரு முறை தன் கணவன் தன்னை தவறாக கேட்க வேண்டாம் மனதில் நினைத்தால், கூட அவளாள் தாங்க முடியாது..

இது தன் குடும்பம் ஒரு பக்கம் கணவன் தன் தலையை கோதிக் கொண்டு இருக்க மறுப்பக்கம் தன் கன்னத்தில் முத்தம் இட்டு..

“ம்மாவுக்கு ஒன்னும் இல்ல.. ஒன்னும் இல்ல.” என்று சொல்லும் தீரா.. இது என் குடும்பம்.. இது எனக்கு வேண்டும்.. அதே சமயம் என் வயிற்றில் இருக்கும் குழந்தையும் தங்களின் குடும்பத்தில் சேர வேண்டும்.. ஒரு நாள் ஒரே நாள் அமைதியாக இரு வசி.. அமைதியாக இரு என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள்..

சட்டென்று தன் முக பாவனையை மாற்றிக் கொண்டவளாக..

“ஓன்னும் இல்ல தீனா. நீங்க போன கொஞ்ச நேரம் பரவாயில்லையா தான் இருந்தது.. ஆனா அப்புறம் வாந்தி. அது தான் முடியல… உங்களுக்கு வேலை முடிந்தா வீட்டுக்கு வாங்க..என்று மெசஜ் செய்தேன்..” என்று கணவனிடம் பேசிக் கொண்டே அங்கு இருக்கும் நேரம் காட்டியை பார்க்க. அது நான்கு தான் என்று தான் காட்டியது..

இந்த நேரம் அந்த மீட்டிங் முடிந்து இருக்காது.. தன் வேலையை மற்றவர்களின் கொடுத்து விட்டு தான் தன் கணவன் வீடு வந்து இருக்கிறான் என்று புரிந்து கொண்டவள் ஒரு பேச்சுக்கு கூட ஏன் வேலையை விட்டு வந்திங்க என்று வர்ஷினி கணவனிடம் கேட்கவில்லை..

காரணம் இப்போது அவளுக்கு தன் கணவனின் அருகாமை வேண்டும் போல் தோன்றியது…

ஒன்றும் பேசாது கணவனின் மார்பில் சாய்ந்து கொண்டவளை சிறிது நேரம் அப்படியே விட்டவன்.. பின்

“பழமும் பாலும் வாங்கிட்டி வான்னு மெசஜ் செய்து இருந்த.. பழம் ஒகே பால் வீட்டில் இல்லையா.?” என்று கேட்டவனிடம்..

கணவன் கேட்டால், என்ன சொல்ல வேண்டும் என்று நினைத்து இருந்ததை கூறினாள்..

“வீட்டில் பசும் பால் வாங்குறாங்க தீனா. என்னவோ அந்த ஸ்மெல் எனக்கு பிடிக்கல… “ அது தான் என்றவள்..

தங்கள் அறையில் குழந்தை எழுந்தால் பால் கலக்கி கொடுக்க என்று எப்போதும் இன்டெக்ஷன் ஸ்டவ் இருக்கும்.. பால் காச்சிம் பாத்திரமும்.. அதே போல் நாட்டு சர்க்கரையுமே.. பால் கவரை எடுத்துக் கொண்டு வர்ஷினி இன்டெக்ஷன் ஸ்டவ் பக்கம் போகும் போதே எதற்க்கு என்று புரிந்து கொண்டவன்,.

மனைவியின் கையில் இருந்த பால் கவரை வாங்கியவன் பால் காச்சி கொடுத்து விட்டு இரண்டு பழம் கொடுக்க. அதை சாப்பிட்ட பின் தான் வர்ஷினிக்கு உயிர் வந்தது போல் இருந்தது..

பின் அதே அறையில் தான் இருந்தாள்… வெளி வரவில்லை.. அதே பால் பழம் வைத்து கொண்டே இரவு மறு நாள் காலை பொழுதை வைத்து ஒப்பு ஏத்தி விட்டாள்..

காலை பத்து மணி… அவள் எதிர் பார்த்து காத்திருந்த நேரம்.. எப்போதுமே அந்த அறையின் பால் கனி அவளுக்கு மிக மிக பிடிக்கும்..

தங்கள் அறையில் இருக்கும் பெரும்பாலின் நேரத்தை இங்கு தான் கழிப்பாள்.. கணவன் குழந்தை இருந்தால், அவர்களுமே இவள் பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்வார்கள்..

அங்கு இருக்கும் ஒவ்வொரு நேரமும் அவளுக்கு ஏகாந்த நேரமாக தான் கழியும்.. இப்போதும் அங்கு தான் பெண்ணவள் அமர்ந்திருந்தாள்..

ஆனால் இன்று ஏகாந்ததிற்க்கு பதில் மனது படப்படப்பாக இருந்தது.. குழந்தையை பள்ளிக்கு அனுப்பி விட்டு கணவனின் வீடு வந்து விட்டான்..

“எனக்கு ஒரு மாதிரி இருக்கு தீனா. இன்னைக்கு வேலைக்கு போக வேண்டாமே…” காலையில் எழுந்ததுமே கணவனிடம் சொல்லி விட்டாள் வர்ஷினி…

தீக்ஷயனுமே.. “நீ சொல்லலேன்னாலுமே நானே இன்னைக்கு லீவ் போடனும் என்று தான் நினைத்தேன் வசி.. அதை விடு.. ரொம்ப முடியலேன்னா வா நாம ஆஸ்பிட்டலுக்கு போயிட்டு வந்து வடலாம்..” என்று அழைத்த போது..

வர்ஷினி.. “ வேண்டாம் ங்க “ என்று மறுத்த போது..

தீக்க்ஷயன்.. “ அம்மா நல்ல நாள்… நல்ல நேரம் சொன்னாங்க என்று பார்த்துட்டு இருக்க கூடாது வசி… வா போகலாம்..”மனைவியின் கலங்கிய முகமும் சோர்ந்து போன குரலையும் பார்த்தவனுக்கு உடம்புக்கு ரொம்ப முடியலையோ.. என்று தான் கேட்டது.

“அத்த நல்ல நேரம் நல்ல நாள் பார்த்து நம்ம குழந்தைக்கு என்று பார்த்து பார்த்து செய்யும் போது நாம அதை மதிச்சி தான் ஆகனும் தீனா… அத்த சொன்னது போல இன்னும் இரண்டு நாள் கழித்தே ஆஸ்ப்பிட்டல் போகலாம்..” என்று சொன்னவளின் உள் குத்து புரியாது தான் தீக்ஷயன்..

“ஆமா வசி… அம்மா கிட்ட அவ்வளவு சேஞ்ச்… அம்மா கிட்ட இத்தனை மாற்றம் நானே எதிர் பார்க்கல. ஒரு மகன் செய்யாததை பேத்தியோ பேரனோ செய்ய வைச்சிடுதுலே வசி..”

“அதனால் தானோ என்னவோ.. இந்த லவ் மேரஜ் மகனுக்கு மகளுக்கு என்று பார்க்காதவங்க. லவ் மேரஜ் செய்த பின் அவங்களை ஏத்துக்காம இருப்பவங்க.. பேரனோ பேத்தியோ பிறந்தா எல்லாத்தையும் மறந்துட்டு சேர்த்துக்குறாங்க…” என்று சொன்ன கணவனின் பேச்சை கேட்டவளுக்கு அப்படி இருந்தது..

கத்தி சொல்ல வேண்டும் போல. ஆனால் இப்போது சொல்லும் நேரம் கிடையாது. பொரு பொரு இன்னுமே கொஞ்சம் நேரம் என்று இதோ காத்து கொண்டு இருந்தவளின் அருகில் தீராவை பள்ளியில் விட்டு விட்டு வந்து அவளின் அருகில் வந்து அமர்ந்து கொண்ட தீக்க்ஷயன்..

“என்ன வசி.. ஒரு மாதிரி இருக்கே.. இந்த இடத்தில் அமர்ந்தாளே… முகத்தில் ஒரு தேஜஸ் வந்து ஒட்டிக்கும்.. ஆனா இன்னைக்கு ஏதோ யோசிச்சிட்டே இருப்பது போல இருக்கு… உடம்பு ஏதாவது பண்ணுதா..?” என்று கவலையுடன் கேட்ட கணவனிடம் இல்லை என்று தலையாட்டியவள் கணவனின் கையை பிடித்து கொண்டாள்..

அவனின் ஒவ்வொரு விரலுக்கும் நட்டு உடைத்த வாறே..

“நான் ஏதாவது கோபப்பட்டாலோ.. இல்ல ஒருத்தர் பத்தி ஏதாவது சொன்னாலோ.. அதுல என் பக்கம் நியாயம் இருக்கும் என்று நீங்க நம்புவீங்க தானே.?” என்று கேட்டவள் ஒரு எதிர் பார்ப்போடு தான் கணவனின் முகத்தை பார்த்தாள்..

மீன்க்காரி வரும் நேரத்தில் இங்கு அமர்ந்ததில் இருந்து புதியதாக ஒரு பயம். ஒரு வருடத்திற்க்கு மேலாக தானே அவனுக்கு என்னை தெரியும்.. ஆனால் அம்மா. அத்தனை வயதுடைய பெண்மணி.. மூன்று குழந்தைக்கு தாய்.. தான் எப்படி உங்க அம்மா செய்யிறாங்க. சொன்னாங்க என்று சொன்னால் நம்புவானா..? தன்னை தப்பாக நினைத்தால், அவளுக்கு அந்த பயம் இப்போது..

மனைவியின் இந்த பேச்சும் முகத்தில் தெரிந்த அந்த பதட்டத்தையும் பார்த்த தீக்க்ஷயன் அமர்ந்து இருந்தவன் எழுந்து மனைவியின் இருக்கைக்கு கீழ் அமர்ந்து கொண்டவன்..

“என்ன வசி.. என் கிட்ட ஏதாவது சொல்லனுமா…?” என்று கேட்டவன் பின் அவனே யோசிப்பது போல யோசித்தவன் பின் அவனுக்கு அவனே

‘அண்ணி இப்போ எல்லாம் அவங்க ரூமை விட்டு கூட வராது கிடையாது.. பேச்சுமே கிடையாது.. அம்மா முன் தான் இப்போ பேத்தியோ பேரனே வர போறதில், உன் மீது அக்கறையா தான் இருக்காங்க.. வேறு என்ன பிரச்சனை..’ என்று தனக்கு தானே பேசிக் கொண்டவன் பின்..

சட்டென்று அமர்ந்து இருந்தவன் எழுந்து மனைவியின் தலையை தன் மீது சாய்த்து கொண்டவன்..

“ அம்மா அப்பா நியாபகம் வந்துடுச்சா வசி..?” என்று கேட்டதற்க்கு

கணவன் மீது இருந்த தலையை அசைத்து ஆமாம் என்று சொன்னாள்..

உண்மையில் வர்ஷினிக்கு நேற்றில் இருந்து அவளின் அம்மா அப்பாவை அதிக அளவில் தான் நினைத்துக் கொண்டாள்..

சாதாரணமாக குழந்தை உணடாகி இருக்கும் இந்த சமயத்தி.. அம்மா நியாபகம் வரும் தான்.. இதில் இவள் நேற்று தெரிந்த அந்த விசயத்தில் இன்னுமே நினைத்தாள் என்று தான் சொல்ல வேண்டும்..

நேற்று சரஸ்வதி சொன்ன.. “ அக்கா அண்ணாவிடம் கூட சொல்லாதே..” என்றது.. அவர்கள் இதை சொல்லாது இருந்தாலுமே சொல்லி இருக்க மாட்டாள் தான்..

ஆனால் அம்மாவிடம்.. கணவனுக்கு அடுத்தப்படியாக இந்த விசயத்தை நான் என் அம்மாவிடம் தானே சொல்லி இருப்பேன்..

ஒரு தாயாக இப்படி இரு அப்படி இரு.. இதை சாப்பிடாதே அப்படி சாப்பிடாதே என்று சொல்லி இருப்பாங்க தானே..

இதோ நேற்றில் இருந்து இந்த வீட்டில் பச்சை தண்ணீர் கூட குடிக்க பயந்து கொண்டு இருக்கும் நிலமை எனக்கு வந்து இருக்காதே..

“என் அம்மா வீட்டில் இருக்கிறேன்..” என்று சொல்லி விட்டு சென்று இருக்கலாமே…

தனக்கு யாரும் இல்லை என்று தானே.. எது மாதிரி ஒரு விசயத்தை செய்ய நினைத்து இருக்காங்க… என்று தன்னை தானே கழிவிரக்கத்தோடு நினைத்து கொண்டு இருந்தவளுக்கு உண்மையில் எப்போதையும் விட இப்போது அவளின் பெற்றோரின் இழப்பு வேதனையை கொடுத்தது தான்..

அதனால் ஆம் என்று சொன்னவள் ஒன்றும் பேசாது கணவனின் வயிற்று பகுதியை கட்டி பிடித்து கொண்டவள் தன் முகத்தையுமே அதில் பதித்துக் கொண்டு விட்டாள்.. அவள் உடலில் மெல்லிய ஒரு அதிர்வு… அந்த அதிர்வுக்கு காரணம்… கீழே மீன் விற்க்கும் பாட்டி சத்தம் கேட்டதினால்,

ஆனால் அதை புரியாது தீக்க்ஷயனோ… “என்ன வசி என்னம்மா…. பயமா.. இருக்கா..?” என்று கேட்டதற்க்கு. ஆமாம் என்று தலையாட்டினாள் வர்ஷினி..

தீக்ஷயன் கேட்டது.. குழந்தை பிறப்பை நினைத்து பயமோ என்று நினைத்து கேட்டது.. ஆனால் வர்ஷினி தலையாட்ட காரணம் இன்னும் சிறிது நேரத்தில் நடக்க போகும் நிகழ்வை நினைத்து..

தான் பேசும் பேச்சு தனக்கு எதிராக கூடமுடிய கூடும்.. இரு பக்கம் கூர் கொண்ட கத்தியை வைத்து கொண்டு இருக்கும் நிலை தான் வர்ஷினியுடையது..

“பார்த்தியா தனக்கு குழந்தை என்று ஒன்று வந்த உடனே தனியா போக அவள் சித்தி குணத்தை காட்டிட்டா பார்த்தியா..?’” வயதான ஒரு பெண்மணி அழுது கொண்டு சொன்னால், அவளின் மாமனார் அவளின் மூத்தார்.. அவர் மனைவி ஏன் வெளி ஆள் கூட சரஸ்வதி அம்மாவை தான் நம்புவார்கள்.. ஆனால் அது எல்லாம் நினைத்து கூட அவளுக்கு பயம் கிடையாது..

அவளின் பயமே அவளின் கணவன். தீரா குழந்தை இது பற்றி தெரியாது.. அதனால் கணவன் என்ன நினைப்பான்.. இது தான் அவளின் கவலையாக இருந்தது.

அந்த கவலை பயத்தில் கணவனோடு ஒன்றியவள் தான் அவனை விட்டு அவளும் விலக வில்லை… அவனையும் விலக அனுமதிக்கவில்லை..

தீக்ஷயன் காலை உணவை கூட சாப்பிடவில்லை.. பசி தான்.. ஆனாலுமே மனைவி பயப்படுகிறாள் என்று அவனுமே மனைவியை அரவணைத்து கொண்டான்…



சிறிது நேரம் அப்படியே இருவரும் இருந்தனர்.. சிறிது நேரம் என்றால், மூன்று மணி நேரம்.. . அப்படியே தான் இருவரும் இருந்தனர்.

அந்த பால் கனி பக்கத்தில் மரம் இருப்பதால் வெயில் தெரியாது கொஞ்சம் குளுமையாக தான் இருக்கும் என்பதினால் மதியம் கடந்து விட்ட நிலையில் கூட இருவரும் அங்கு இருந்து எழவில்லை..

இடையில் தீக்க்ஷயன் தான்.. “வசி ஏதாவது சூடா குடிக்கிறியா…? நேத்துல இருந்து அந்த பால் பழத்தை தவிர வேறு எதுவும் சாப்பிடல..” என்று சொன்னவன்..

அதோடு விடாது.. “அம்மா மீன்கார பாட்டிக்கிட்ட நண்டு வாங்க போறாங்கலாம்.. சூப்பு வைத்து கொடுக்குற உன்னை குடிக்கிறியா என்று கேட்டாங்க… என்ன குடிக்கிறியா வசி..” என்ற இந்த பேச்சில் வசி சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள் கொஞ்சம் விலகியும் அவனை விட்டு அமர்ந்தாள்..

அவளின் அந்த செய்கையில் தான் முதல் முறையாக அவளை தன்னை நன்றாக பார்க்க வைத்தவன்..

“வசி என் கிட்ட இருந்து ஏதாவது மறைக்கிறியா..? என்று கேட்டவன்..

பின் ஏதோ யோசித்தவனாக அம்மா தன்னிடம் நல்ல மதிரியாக பேசி விட்டு நான் இல்லாத போது வசியை ஏதாவது சொன்னார்களா.. அதனால் தான் கீழ் அறையில் இல்லாது மேல் அறைக்கு வந்து விட்டாளா.. அதனால் தான் அவங்க சமைப்பது வேண்டாம் என்று வெறும் பால் பழம் மட்டுமே சாப்பிடுகிறாளா..?” என்று அவனின் எண்ணம் இப்படி நினைத்த நொடி..

“வசி வசி என்னை பார்.. என்னை பார்..” தன்னை பார்க்காது உடல் நடுங்க அமர்ந்திருந்தவளை தன்னை பார்க்க வைத்தவன்..”

மீண்டுமே.. “வசி என் கிட்ட இருந்து ஏதாவது மறைக்கிறியா… ?” என்று கேட்ட கணவனின் வர்ஷினி சொல்லி விடலாமா…? இதே நிலை கொஞ்ச நேரம் நீடித்தால் கூட தன் குழந்தைக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற பயம் வந்து விட்டது..

அதோடு கொஞ்சம் நேரம் முன் தான் கணவனின் வயிற்றில் முகத்தை புதைத்துக் கொண்டு இருந்த போது இருவருமே கன் மீடிக் கொண்டு இருந்த சமயம்..

கணவனுக்கு தெரியாது தன் மாமனார் மூத்தாருக்கு. மதியம் சாப்பிட வாங்க என்ற மெசஜை தட்டி விட்டவள்..

வீட்டில் சொல்லாது வாங்க என்றும் அனுப்பி வைத்து இருந்தாள்.. அது வரை கூட கொஞ்சம் தைரியமாக தான் இருந்தாள்..

ஆனால் நேரம் ஆக ஆக.. அதுவும் கணவனே நண்டு சூப் அம்மா செய்யிறாங்க குடிக்கிறியா என்று கேட்டாங்க என்று சொன்னதில், கொஞ்சம் பயமும் மீதி.. ஏதோ ஒரு நம்பிக்கை சரஸ்வதி மீது இருந்தது.

என்ன தான் இருந்தாலும் அவர்களும் மூன்று குழந்தைகளை பெற்றவள் தானே.. கடைசி நேரத்தில் கூட அவள் மனது மாற கூடும் என்று..

ஆனால் கணவன் பேச்சில், இல்லை தான் நினைத்ததை செயல்படுத்தாது இவர்கள் விட மாட்டார்கள் என்று புரிந்து விட்டது..

அதில் தான் சரியாக கீழே பேச வேண்டும்.. பேசியே ஆக வேண்டும்.. யார் புரிந்து கொள்கிறார்களோ இல்லையோ.. என் கணவன் என்னை புரிந்து கொண்டால் போதும் இதையே தான் வர்ஷினி திரும்ப திரும்ப நினைத்தது..

அதில் கணவன் பேச்சில் கீழே என்ன சொல்வது இங்கேயே சொல்லி விடலாமா என்று நினைக்கும் போது தான் சரஸ்வதியிடம் இருந்து தீக்ஷயனுக்கு அழைப்பு. பேசியை எடுத்தவன் மனைவியை கவனித்து கொண்டே தான் தன் அன்னையிடம் பேசியது..

தான்.. “சொல்லுங்கம்மா.” என்று ஆரம்பித்ததுமே வசியின் முகம் இன்னுமே பதட்டத்தை காட்டியது.. கூட கோபமும்.. அதை பார்த்தவனுக்கு புரிந்து விட்டது.. தன் அம்மா தான் ஏதோ சொல்லி இருக்கிறார்கள் இல்லை செய்து இருக்கிறார்கள் என்று.

ஆனால் அவனுக்கு தெரியாத விசயம் எதுவும் சொல்லவில்லை.. செய்யவும் இல்லை.. இனி தான் செய்ய போகிறார்கள் என்ற விசயம். அதுவும் அவனுமே கூட நினைத்து இருக்க மாட்டான். தன் அம்மா இதை செய்வார்கள் என்பதை..

மனைவியை பார்த்த வாறே. “ம்மா வரேன்.. இல்ல இன்னும் வசி பால குடிக்கல. ம் ம்,” என்று கணவன் பதில் பேசுவதையே கேட்டு கொண்டு இருந்த வர்ஷினி தீக்ஷயன் பேசியை வைத்ததுமே..

“என்ன சொன்னாங்க உங்க அம்மா…?”

இது வரை இது போல ஒரு ட்யூனில் வசி பேசி அவன் கேட்டது இல்லை.. உங்க அம்மா என்று கேட்கும் போதே தீக்ஷயனுக்கு வித்தியாசம் புரிந்தது..

அதை கேட்காது.. “தீரா ஸ்கூல்ல இருந்து வந்து சாப்பிட்டு தூங்கிட்டாலாம்.. அப்பா அண்ணன் கூட வந்து இருக்காங்கலாமா.. நம்மையும் சாப்பிட வர சொன்னாங்க..” என்றதுமே..

வர்ஷினி.. “என்னையுமே சாப்பிட கூப்பிட்டாங்கலா..?” என்று கேட்கும் போதே வர்ஷினியின் குரலில் அடக்கப்பட்ட கோபம் அப்பட்டமாக தெரிந்தது..

அதை கவனித்துக் கொண்டே தான் தீக்ஷயனுமே தன் பேச்சை தொடர்ந்தான்..

“ஆமாம்..” என்று சொன்னவன் பின்..

“நேத்துல இருந்து நீ சரியாவே சாப்பிடல. இது போல நேரத்தில் சரியா சாப்பிடாது இருக்க கூடாது.. அதனால உன்னையும் தான் சாப்பிட கூப்பிட்டாங்க…”

அவனின் அம்மா சொன்னதை அப்படியே சொன்னான்.. தீக்ஷயன்.. அவனுக்கு ஒரு சில விசயங்களை அனுமானிக்க வேண்டி இருந்தது..

அவன் எதிர் பார்த்தது போல் தான் வர்ஷினியின் முகம் செந்தணல் போல கொதித்தது..

“ஆமாம் ஆமாம் இது போல நேரத்தில் சாப்பிடுவது போல நல்ல சத்தான சாப்பாட்டை தான் ஆக்கி இருப்பாங்க உங்க அம்மா.” என்று சொன்னவன் தன் நிலையை கூட மறந்து விடு விடு என்று மாடி படிக்கட்டில் இறங்க தொடங்கி விட்டாள்..

இத்தனை நேரம் இருந்த பயம் இப்போது அவளுக்கு இல்லை.. இதோ அதோ என்ற நிலையில் தான் மனது பட பட என்று இருக்கும்.. ஆனால் அந்த சூழ்நிலை வந்த பின் அதை எதிர் கொள்ள ஒரு துணிவு வந்து விடும்… அந்த நிலையில் தான் வர்ஷினி இருந்தாள்..

அதனால் விரு விரு என்று விரைந்து நடந்தாள்.. தீக்ஷம் சிறிது நேரம் சென்ற பின் தான் மனைவியின் பின் தொடர்ந்தான்..

தான் இல்லாத போது தன் அம்மா மனைவியிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரிய வேண்டி இருந்தது அவனுக்கு..’

தீக்ஷயன் படிக்கட்டில் நடந்து கொண்டு இருந்த போது அவன் கண்டது.. வசியை..

“வா வா உட்காரு நேத்துல இருந்து நீ ஒன்னுமே சாப்பிடல…” என்று சொன்னதோடு அவரே வசி அமர தோதாக இருக்கையை இழுத்து போடும் போது தான்..

தன் அன்னையில் செயல்கள் அனைத்துமே செயற்க்கையாக தெரிவதை கண்டான்.. இப்போது தன் மனைவியின் முகத்தை பார்க்க..

அவன் இது வரை பார்க்காத அந்த முக பாவனையோடு தான் தன் அம்மா காட்டிய இருக்கையில் வசி அமர்ந்தது.

சரஸ்வதியின் இந்த பேச்சுக்கு தட்சணா மூர்த்தி மகேந்திரன்.. ஏன் ஸ்வேதாவே சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் அதிர்ந்து போய் சரஸ்வதியை பார்த்தனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள்..

இருக்கையில் வர்ஷினி அமர்ந்ததுமே தட்சணா மூர்த்தியும் மகேந்திரனும்.. ஏதோ கேட்க முயலும் முன்னவே வர்ஷினி.. எதுவும் பேச வேண்டாம் என்பது போல சொல்ல..

தட்சணா மூர்த்தியும் மகேந்திரனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.. வர்ஷினியிடம் இருந்து மெசஜை பார்த்ததுமே இருவரும் ஒன்று போல் நினைத்து கொண்டது இதை தான்..

அதாவது இரண்டு நாள் முன் அவர் அவர் மனைவியின் மூலமாக வர்ஷினி குழந்தை உண்டாகிய விசயம் தெரிந்த உடனே அவளை இருவரும் வாழ்த்தினர்..

இன்று அழைத்தது.. ட்ரீட் வைக்கவோ என்று தான்.. ஆனால் இப்போது சைகையில்.. அதுவும் சரஸ்வதி சமையல் அறையில் இருந்து வந்து விடுவாரே என்று அவரை ஒரு பார்வை பார்த்து கொண்டே செய்ததில் அப்பா மகன் இருவரும் பார்த்தனர்..

ஆம் இவர்கள் கேட்கும் போது சரியாக அந்த நேரம் தான் சரஸ்வதி வர்ஷினிக்கு என்று ஸ்பெஷலாக சமைத்து வைத்திருந்த நண்டு சூப்.. நண்டு சாப்ஸ் எடுத்து வர சென்று இருந்தார்..

இதை எல்லாம் கவனித்து கொண்டு தான் தீக்ஷயனுமே மனைவியின் பக்கத்தில் வந்து அமர்ந்தது.

தீக்ஷயன் தானே ஒரு தட்டை எடுத்து வைத்தவன் அவனே தான் உணவை தன் தட்டில் போட்டுக் கொண்டான்..

சரஸ்வதியம்மாவுக்கு இப்போது மகனுக்கு உணவை பரிமாறுவதை விட மருமகளுக்கு அந்த சத்தாண உணவை கொடுப்பது தான் முக்கியமாக இருந்தது..

என்ன தான் இருந்தாலுமே தீராவுக்காக செய்ய வேண்டும் செய்து ஆக வேண்டும் என்ற முடிவோடு செயல் படுத்தினாலுமே அந்த உணவை வர்ஷினியின் முன் வைக்கும் போது சரஸ்வதியின் கை நடுங்க தான் செய்தது..

அதனால் அந்த சூப் கப்பில் இருந்து சூப் ஒரு சிறு துளி சிந்தவும் செய்தது.. அனைத்துமே அவதனித்து நிதானத்துடன் தன் மாமியார் செய்வதை பார்த்து கொண்டு தான் அமர்ந்திருந்தாள் வர்ஷினி..

தன் முன் இருந்த அந்த நண்டு சூப்பை கையிலுமே எடுத்து விட்டாள்.. கடைசி நேரத்திலாவது தான் சாப்பிடாது தடுத்து விடுவாள் என்ற நம்பிக்கை போல வர்ஷினிக்கு..

ஆனால் சரஸ்வதியம்மாவோ ஆவளோடு வசி அதை பருக போகும் நிமிடத்தை ஆவளோடு பார்ப்பது போல பார்த்து கொண்டு நின்று இருக்க..

தன் கையில் இருந்த அந்த பீங்கான் கப்பை விசிறி அடித்தாள்… சில்லு சில்லாக அந்த பீங்கான் கப் நெருங்கியது..

சாப்பிட்டு கொண்டு இருந்தவர்கள் அனைவருமே வசியின் இந்த செயலில் அதிர்ந்து எழுந்து விட்டனர்.. தீக்ஷயனுக்குமே அதிர்ச்சி தான்.

ஆனால் சரஸ்வதிக்கு அதிர்ச்சியை விட பயம் பற்றிக் கொண்டது மருமகளின் இந்த செய்கையில், இது போலான சமயத்தில் இது சாப்பிட கூடாது என்று தெரியுமே என்ற பயம் தான்.. ஆனால் அவருக்கு தெரியாது மீங்கார்ரி சொல்லி விசயம் தெரியும் என்று..

இப்போது தட்சணா மூர்த்தி அதிர்ச்சியில் இருந்து கோபத்துக்கு மாறியவராக.

“என்ன செய்யிற,.. உன்னை ரொம்ப நல்ல பெண் என்று நினச்சிட்டு இருந்தேன்.. என்ன இது..?” என்று கோபமாக தான் கேட்டார்.

வர்ஷினி இப்போது திருப்பி தன் முன் இருந்த தட்டை மாமனார் பார்க்க .. “அது தான் இது என்னது…?” என்று கேட்க.

அப்போது தான் அனைவருமே அந்த தட்டை பார்த்தது… தீக்ஷயனுக்கு தெரியும் நண்டு சமைத்து இருப்பது.. அதனால் அதிராது பார்த்தான்.. மகேந்திரன் நண்டு இதுல என்ன இருக்கு.? என்று கேட்டவன் பின் நியாபகம் வந்தவனாக..

“ம்மா நம்ம வீட்டில நண்டு வாசனையே பிடிக்காதே.. ஏன் சமைச்சிங்க…?” என்று கேட்டவனுக்கு ஏதோ தோன்ற…

வர்ஷினியிடம்.. “ உனக்குமே அந்த வாசனை பிடிக்கலேன்னா சொல்ல வேண்டியது தானே வேண்டாம் என்று. இப்படி தான் விசிறி அடிப்பியா…என்ன..?” என்று கேட்டான்.

சரஸ்வதியோ அதையே பற்றிக் கொண்டு.. “ இல்ல மகி அவளுக்கு பிடிக்கும் என்று சாந்தா பையனுக்கு இவளை முடிக்கும் போது போனேன் தானே.. அப்போ சொன்னா அதனால தான் வைத்தேன்..” இதையே பிடித்து கொண்டாள் சரஸ்வதி.. ஆனால் வர்ஷினி அதற்க்கு பதில் அளிக்காது தன் மாமனார் தன் ஒரவத்தியை பார்த்தாள்..

ஸ்வேதாவுமே வர்ஷினியின் இந்த நடவடிக்கையில் தன் நினைவில் இருந்து வெளி வந்து நடப்பதை கவனிக்க. அவளுமே நண்டு சமைத்தது.. அதுவுமே வர்ஷினி சாப்பிட கொடுத்ததை பார்த்து அதிர்ந்து போனவளாக தான் தன் மாமியாரை பார்த்தது..

ஆனால் தட்சணா மூர்த்தியின் முகம் அதிர்வோடு.. வேறு ஒரு உணர்வு.. அதை சொல்ல முடியவில்லை..

ஒன்றே ஒன்று தான் வர்ஷினியிடம் கேட்டார் அவர்..

“ அந்த சூப்…?”

தட்சணா மூர்த்தியின் கேள்வியிலும், அவர் கேட்ட பாவனையிலேயே வர்ஷினிக்கு புரிந்து விட்டது.. இவருக்குமே இதை சாப்பிட கூடாது என்பது தெரியும் என்று..

ஆனால் வர்ஷினிக்கு தெரியாத ஒரு விசயம் ஒன்று உண்டு .. அது சுப்ரியாவுக்கு பின் நான்காவதாக சரஸ்வதி குழந்தை உண்டாகிய போது. சுப்ரியா ஐந்து மாத குழந்தை தான்..

குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும்.. அதோடு இப்படி அடுத்தே குழந்தை பெற்றால் மருமகள் உடம்பு என்ன ஆவது என்று.. தட்சணா மூர்த்தியின் அம்மா.. நண்டு சமைத்து இது போல சூப்பாகவும்.. சாப்சாகவும் செய்து மருமகளுக்கு சாப்பிட கொடுத்தது..

சரஸ்வதிக்கு நண்டு வாசமையே சுத்தமாக பிடிக்காது அந்த நண்டை மூக்கை பிடித்து கொண்டு தான் குடித்ததும் சாப்பிட்டதுமே..

தட்சணா மூர்த்தி கூட தன் அம்மாவிடம்.. “ இது எல்லாம் எண்ணம்மா ஆஸ்பிட்டலுக்கு போகலாம்..” என்று சொன்ன போது கூட நாளை பாரு தட்சா என்று சொன்னார்.. சொன்னப்படியே தான் மறு நாளே கரு கலைந்து விட்டது..

சரஸ்வதி தெரியாது சமைத்தாள் என்று தட்சணா மூர்த்தியினால் நினைக்க குடியவில்லை…

காரணம் தினம் தினம் தங்கள் அறையில், அவளுக்கு என்று ஒரு குழந்தை வந்து விட்டால் தீராவை விட்டு விடுவா என்ற மனையின் பேச்சை அவர் கேட்டுக் கொண்டு தானே இருக்கிறார்…

இப்படியா தன் வீட்டு சந்ததியை எந்த பொம்பளையாவது அழிக்க பார்ப்பாளா நினைக்க நினைக்க கொதித்தது தட்சணா மூர்த்திக்கு..

மருமகள்.. “அது நண்டு சூப்பு. தான்..” என்று சொன்ன நொடி தட்சணா மூர்த்தியின் கை சரஸ்வதியின் கன்னத்தில் பதிந்ததோடு… மனைவியின் முடியை பிடித்து கொண்டு வாசலை நோக்கி இழுத்து செல்ல..

வாசலுக்குள் ஒரு கூட்டமே வந்தது.. அந்த கூட்டத்தில் ஸ்ருதி அழுதுக் கொண்டும்… ஸ்ருதியை அழைத்து வரும் ஆட்டோ ஓட்டுனர் அடி வாங்கிய அடையாளமாக முகத்தில் ரத்தம் காயத்துடனும் சட்டை கிழிந்து தொங்கி கொண்டும் நடந்து வந்தனர்..


 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
வர்ஷினி 😣 😣 😣 வயிற்றில் குழந்தையோடு பசிக்கு சாப்பிட கூட பயந்து பட்டினியா இருக்கா 🥺🥺🥺🥺

தீஷன் பாவம் 😥 😥 நிறைய கஷ்ட பட்டிருக்கான் 😔😔😔 இப்போ அம்மா செய்ய நினைச்சது தெரிஞ்சா மொத்தமா உடைஞ்சு போயிடுவான் 🤭🤭🤭🤭🤭🤭🤭


ஸ்வேதா இப்போ அதிர்ச்சி ஆகி என்ன பிரயோஜனம் 😨 😨 எல்லாம் நீ தூண்டி விட்டதோட விளைவு தான் 😈😈😈😈

தட்சணாமூர்த்தி 🤗🤗 நீங்கள் அடிச்சதை விட சரசுவ வீட்டை விட்டு துரத்துனது தான் சூப்பர் 🤩 🤩 🤩 ஆனால் அதுக்குள்ள ஸ்ருதி ஏதோ பிரச்சினையோடு வந்துட்டாளே 🤧🤧🤧🤧


ஆட்டோ டிரைவர் ஸ்ருதி கிட்ட தப்பா நடந்துக்கிட்டானா 🥶🥶🥶🥶😱
 
Last edited:
Member
Joined
Jul 9, 2024
Messages
14
கஷ்டமா இருக்குப்பா. அடுத்த எபி spelling mistakes இருந்தாலும் பரவாயில்லை பா. நான் என்ன மிஷினா னு கேக்குற உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது. சாரி ப்பா
 
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
சரஸ்வதிக்கு இது போதாது இன்னும் நாலு அறை விட்டு வீட்டை விட்டு விரட்டியிருக்கணும்.... 😡😡😡😡 என்ன நியாயம் சொல்லப் போறாங்க புருஷன் பிள்ளைக்குன்னு பார்க்கணும்....
அதுக்குள்ள ஸ்ருதி பிரச்சனை வந்து தப்பிச்சுடுச்சு....

பாவம் தீக்க்ஷன் இதனால இன்னும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாவான்.... 😐😐😐😐
முதல்ல இங்க இருந்து கிளம்பி தனியா போயிடு அதான் உனக்கும் உன் குடும்பத்துக்கும் நல்லது....

ஸ்ருதிக்கு ஆட்டோக்காரனால தான் பிரச்சனையா.... ஸ்வேதாக்கு இது தெரியுமா தெரிஞ்சும் எதுவும் பண்ணலயா... 🙄🙄🙄🙄
 
Top