Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam...24...2

  • Thread Author
அத்தியாயம்…24…2

இன்றுமே நேரம் கடந்து விட்டதில் அப்படியே டைப் செய்து அனுப்பி விட்டேன்.. இனி தான் சாப்பிடனும்..

நினைத்து கூட பார்க்க முடியவில்லை தட்சணா மூர்த்தியினால், இரண்டு நாட்களிலேயே இருபது வயது கூடி விட்டது போல தீக்ஷயனின் தனிப்பட்ட வீட்டில் தான் இருந்தார் அவர்…

அவர் பிறந்தது வாழ்ந்தது திருமணம் முடித்த அந்த வீட்டை விட்டு ..

“இனி என்னால் இங்கு இருக்க முடியாது தீக்க்ஷா… என்னை எங்காவது உன்னுடன் கூட்டிட்டு போயிடுடா.. தீக்க்ஷா… “ என்று காவல் நிலையத்தில் இருந்து வீடு வரும் போதே பக்கத்து வீட்டு திண்ணையில் இரு குழந்தைகளையும் வைத்து கொண்டு அந்த திண்ணையின் சுவரில் சாய்ந்து அமர்ந்து இருந்தவளுன் கோலத்தை பார்த்த தீக்ஷயனுக்கு..

அய்யோ என்றதற்க்கு மேல் என்ன என்ன உணர்வோ அத்தனை உணர்வுகள் மனதில் எழுந்தது..

மனைவியின் அருகில் தீக்ஷயன் செல்ல அவனை தொடர்ந்து தட்சணா மூர்த்தி மகெந்திரனுமே பின் தொடர்ந்தனர்..

ஸ்வேதாவுமே உடன் வர.. யாருமே அவளை தன்னுடம் ஒருத்தி வருகிறாள் என்ற எண்ணம் இல்லாது தான் நடந்து கொண்டனர்..

தன் மீது நிழல் விழவும் தான் கண் மூடிக் கொண்டு இருந்தவள் கண் திறந்தது.. கண்ணை திறந்தவளின் பார்வைக்கு மூன்று ஆணும் ஸ்வேதாவும் விழ..

ஸ்வேதாவை பார்த்த கண்ணில் அப்படி ஒரு அருவெருப்பு வர்ஷினியின் கண்ணில் தெரிந்தது.. ஆம் ஸ்ருதியிடம் பேசும் விதத்தில் பேசி அனைத்து விசயத்தையுமே வாங்கி விட்டாள்..

கேட்டவளுக்கு நம்ப முடியவில்லை.. குழந்தை அந்த ஆட்டோ ஓட்டுனரை தப்பாக புரிந்து கொண்டு சொன்னது போல சொல்கிறாளோ என்று நினைத்து மீண்டும் கேட்க.

மீண்டுமே. சொன்னவள் கூடவே… “ம்மா யாரு கிட்டேயும் சொல்ல கூடாது என்று சொன்னாங்க சித்தி.. நான் உங்க கிட்ட சொல்லிட்டேன்.. நீங்க யார் கிட்டேயும் சொல்லிடாதிங்க சித்தி.. அப்புறம் அப்பா தாத்தா பாட்டி சித்தா அம்மாவையும் என்னையுமே வீட்டை விட்டு அனுப்பி விட்டு விடுவாங்க.

ம்மா உங்களை போல வேலைக்கு போகலே தானே.. அதனால அப்பா இந்த வீட்டை விட்டு அனுப்பிட்டா திரும்ப அந்த தாத்தா பாட்டி வீட்டிற்க்கு தான் போக வேண்டி இருக்கும்.. அங்கு வேண்டால் சித்தி.. மாமா வெரி வெரி பேட்.. இங்கு இங்கு எல்லாம் பேட் டச் பண்ணுவார்…” என்று ஸ்ருதி காட்டிய அங்கங்களை பார்த்தவளுக்கு அய்யோ என்றாகி விட்டது..

அய்யோ அய்யோ என்று தான் மனது பரிதவித்து போய் விட்டது.. என்ன இது..? என்ன இது..? மனது ஆறவில்லை..

ஸ்ருதி சரியில்லை என்று நினைத்த நான் இன்னுமே கவனித்து இருக்க வேண்டுமோ.. அய்யோ என்றாகிய மனதே.. அதே வேலை ஸ்வேதாவை நினைத்து.. சீ இவள் என்ன ஒரு அம்மா…? அம்மாவா. எல்லாத்திலேயேயும் கலப்படம் இருக்கும் ஆனால் அம்மாவில் இருக்காது,,கடவுள் எல்லோர் கூடவும் இருக்க முடியாது தான் அம்மாவை படைத்தாங்க என்று சொல்லுவாங்க. ஆனா இவளை போலவுல் ஒரு தாய் இருப்பாளா என்று நினைக்கும் அளவில் இருக்கும் அவள் முகத்தை பார்க்க கூட வர்ஷினிக்கு பிடிக்கவில்லை..

அதனால் யாரும் பேசும் முன். தன் கணவனிடம்..

“ தீனா நான் இனி அந்த வீட்டில் அடி எடுத்து வைக்க மாட்டேன்..” என்று இரு வீடு தள்ளி இருந்த தட்சணா மூர்த்தியின் வீட்டை காட்டி சொன்னவளிடம்..

தீக்ஷயனும்… “ நான் வா என்று சொல்லலையே வசி..” என்றவன்.

“ இன்னுமே கொஞ்ச நேரம் உட்கார முடியுமா. நான் நம்ம திங்கஸ் பேபியோடது எடுத்துட்டு வந்துடுறேன்..” என்று கேட்ட போது வர்ஷினி தலையாட்டிய போது தான் தட்சணா மூர்த்தி

“என்னையுமே உன் கூட கூட்டிட்டு போயிடுடா தீக்ஷா…” என்று சொன்னது.. அவரை தொடர்ந்து மகெந்திரனுமே தம்பியின் கை பற்றிக் கொண்டவன்..

“நானுமே வந்துடுறேன் டா.” என்று சொன்னவன் ஸ்ருதியின் அருகில் செல்ல.. ஸ்ருதியோ இன்னுமே சித்தியிடம் நெருங்கி அமர்ந்து கொண்ட தன் மகளை பார்த்து..

நடு வீதி என்று கூட பாராது தலையில் அடித்து அழுதானே தவிர. இனி அடிக்க கூட தன் கை ஸ்வேதாவின் மீது விழ அவன் விரும்பவில்லை..

சின்ன விசயமா.. அய்யோ கொலை செய்து இருந்தாலுமே, எந்த மாதிரி சூழ்நிலையில் தன் மனைவி அதை செய்தாளோ என்று யோசித்து இருப்பான்.. ஆனால் காவல் நிலையத்தில் ஒரு பெண் அதிகாரிக் கொண்டு விசாரிக்கும் விதத்தில் விசாரித்ததில் அய்யோ என் மகள் ஒன்னரை மாதமாக மனதில் இதை வைத்து.. கடவுளே கடவுளே.. தன் மனைவி அனைவரோடு தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவள்.. என்று மட்டும் நினைத்து கொண்டு இருந்தவனின் தலையில் இறக்கிய அந்த இடியான பேச்சில், இனி மனைவி தனக்கு வேண்டாம் என்று முடிவு செய்து விட்டான்.

பெண் குழந்தையை வைத்து கொண்டு தனித்து செல்ல முடியாது.. அதுவும் தன்னை கண்டாலே விலகி ஓடும் மகளுக்கு இப்போது ஒரு பெண் துணை கட்டாயம் தேவை.. ஆனால் இந்த சூழ்நிலையில் தன் அன்னையை கூட மகேந்திரன் முற்றிலுமாக வெறுத்தான்.. இப்போது இது போல சூழ்நிலையில், வர்ஷினியின் அதாரவு தன் மகளுக்கு தேவை என்று நினைக்க.. தம்பியின் கரத்தை பற்றிக் கொண்டவன்..

“என்னை விட நீ சின்னவன் தீக்ஷா.. இல்லேன்னா காலில் கூட விழுந்து இருப்பேன்..” என்ற அண்ணனுக்கு உடனடியாக பதில் சொல்ல முடியாத நிலையில் பாவம் தீக்க்ஷயன் இருந்தான்.. காரணம் அவனின் வசி..

அதில் மனைவியை பார்க்க.. எப்போதுமே மகேந்திரனை பார்த்தால் கடந்து விடும் வசி ..

“மாமா வாங்க மாமா. என்று பதில் கணவனிடம் சொல்லாது மகேந்திரனிடம் சொல்லி விட.மூன்று பேரும் தங்கள் வீடு செல்ல கூட ஸ்வேதாவுமே தான் வந்தாள்.

ஆனால் இனி இதுவே தங்கள் வீடு என்று இல்லாத போது அந்த வீட்டிற்க்குள் யார் வந்தால் என்ன போனால் என்ன என்பது போல் தான் மூன்று ஆண்மகன்களும் வீடு வந்தனர்..

சரஸ்வதியை சட்டை செய்யாது, ஏன் சுப்ரியா நின்று இருப்பது கூட யாரும் சட்டை செய்யாது தான் தீக்க்ஷயனின் இன்னொரு வீடாக இங்கு வந்து இரண்டு நாட்கள் கடந்து விட்டது..

வர்ஷினி இங்கு வந்த நாளே தன் உடல் நிலை ஏன் தன் மனநிலையை கூட கருத்தில் கொள்ளாது அவள் செய்த முதல் வேலை ஸ்ருதியை ஒரு நல்ல மனதத்துவமருத்துவரிடம் ம அப்பாயிட்மெண்ட் வாங்கியது தான்..

அவரசம்.. என்று சில விசயத்தை சொல்லி ஏற்கனவே நாட்கள் கடந்து விட்டது என்று சொன்னதில் அன்று இரவே வாங்கி விட்டாள்..

தீக்ஷயனும் மகேந்திரனும்.. “உன் உடம்பு நிலைக்கு நீ வர வேண்டாம். நாங்க மட்டும் போகிறோம்..” என்றதுமே ஸ்ருதி வர்ஷினி கையை கெட்டியாக பிடித்து கொள்ள.

“இப்போதைக்கு என் துணை தீராவோடு இவளுக்கு தான் தேவை.. அதோடு அதே ஆஸ்பிட்டலில் தான் நானுமே அப்பயிர்மெண்ட் வாங்கி இருக்கேன்.. அதனால நானுமே வரேன்.. என்றதில் இரண்டு நாட்கள் ஸ்ருதியோடு பேசி அவர்கள் அவளை பேச வைத்து அவர்கள் ஒரு சில விசயத்தை தெளிவு படுத்தி.. என்று இந்த மூன்று முறை சென்றதிலேயே ஸ்ருதிக்கு நல்ல முன்னேற்றம் தான்..



ஸ்வேதா இங்கே வந்து காலில் விழுந்து கூட பார்த்து விட்டாள் மகேந்திரன் துளி கூட அசைவதாக இல்லை,,

ஸ்வேதா பின் தன் தாய் மாமன் காலில் விழுந்து..

“மாமா நான் உங்க தங்கை மகள் தானே..” என்று ஆரம்பித்ததும் தான்..

“சீ இனி உன் ஆத்தா அப்பன் அந்த கேடு கெட்டவன்.. இவனுங்களை எல்லாம் சொல்லிட்டு இருந்தேன்.. நான் உன்னை கொலை பண்ண கூட தயங்க மாட்டேன்,.. ஆனா அதுக்கு கூட உன்னை நான் தொடனும்.. வேண்டாம் முதல்ல இங்கு இருந்து நீ போ சீ போடி..” என்று சொல்லி விட்டார்..

இது வரை காலி விழுந்து கதறி அழுத ஸ்வேதா..” அப்போ என் மகளை நான் கூட்டிட்டு போகிறேன்..” என்றதில் மகேந்திரன் யாரோ வந்து இருக்காள்.. என்னவீ பேசிக் கொண்டு இருக்கிறாள் என்று இருந்தவன்..

“கூட்டிட்டு போறியா.. ஏன் அந்த கேடு கெட்ட நாய் செய்ய பார்த்ததை உன் அப்பன் அந்த கிழட்டு நாய் செய்யவே..”
“என்னங்க என் அப்பா அப்படி இல்ல. தம்பி கூட அன்னைக்கு குடிச்சி..” எனும் போதே ஸ்வேதாவின் கன்னத்தில் அறை.. அறைந்தது நம் வர்ஷினி தான்..

அரைந்தவள்.. “ இது என் வீடு உன்னை போல ஆளுங்களுக்கு எல்லாம் இங்கு வர கூடாது வெளியில் போ..” என்று விட..

ஸ்வேதா… “ பெண் குழந்தை.. அதுவுமே சின்ன பெண் அம்மா கிட்ட தான் இருக்கனும்..” என்றது தான் தாமதம்..

“அடி செருப்பாலே..” என்றவள் அதை செய்தும் முடித்து இருந்தாள்.. வீட்டில் அணிந்து இருந்த தன் காலில் இருந்த செருப்பை கழட்டி… அடித்தவள்..

“நீ செய்ததை சொன்னால் உன் தம்பி இல்ல உன் தம்பிக்கு துணையா நீயுமே கம்பி எண்ண வேண்டியது தான்..” என்று வெளியில் அனுப்பி விட்டாள்..



வர்ஷினி செருப்பை கழட்டி அடிக்கும் அளவுக்கு தான் ஸ்வேதா செய்த செயல் இருந்தது..

வர்ஷினி தான் ஸ்ருதி சொன்னதும்.. மற்ற ஆண்கள் காவல் நிலையத்தில் ஸ்வேதாவை அங்கு இருந்த பெண் அதிகாரி கேட்கும் விதத்தில் கேட்டதில்..

அனைத்து உண்மையையும் கக்கி விட்டாள்..

அதாவது வர்ஷினி இடம் வாங்கியது அவள் பெயரில் பதிவு செய்யும் போது நான் இருக்க எனக்கு என்ன சூடு இல்லையா சுரணை இல்லையா என்று சொல்லி தாய் வீடு சென்றவள்..

இரண்டு நாட்கள் நல்ல முறையில் தான் சென்றது.. மூன்றாவது நாள் பத்து மணியளவில் வீடு வந்த அவளின் தம்பி ரகு.. குடித்து விட்டு வீடு வர.

ஸ்வேதா ஒரு நல்ல அக்காவாக.. “ இது என்னடா பழக்கம். இந்த கெட்ட பழக்கத்தினாக் தானேடா உன் பொண்டாட்டி உன் கூட வாழ மாட்டேன் என்று அம்மா வீட்டிற்க்கு போய் உட்கார்ந்துட்டு உனக்கு விவாகரத்து நோட்டிஸ்சும் அனுப்பி வைத்தா… பெரியவங்க எல்லாம் சேர்ந்து பேசி இப்போ தான் உன் பொண்டாட்டி கொஞ்சம் மனசு இறங்கி வரப்போல இருக்கு. இப்போ திரும்ப நீ குடிக்க ஆரம்பிக்க ஆரம்பித்து வெச்சிட்டியா..” என்று கேட்டதுக்கு.

ஏதேதோ பேச சமாளித்து விட்டவன் பின் தூங்கும் சமயம்.. “ஸ்ருதி என் கூட படுக்கட்டும் ஸ்வேதா …” என்று கேட்டதும்..

ஸ்வேதாவுமே சரி என்று விட்டாள்.. ஒரு பன்னிரெண்டு மணி இருக்கும்.. ஸ்ருதியில் அழு குரலும் சத்தமும் கேட்டதில் தான் ஸ்வேதா ஓடி போய் பார்த்தது..

தம்பி அறையை கதவை .. தட்டி… “ ரகு ஸ்ருதி ஏதுக்கு அழுவுறா கதவை திற கதவை திற..” என்று அத்தனை தட்டு தட்ட.. இவளின் சத்தம் கேட்டு ஸ்வேதா அப்பா அம்மாவுமே தட்ட. கதவை திறவாது போக.. கொஞ்ச நேரம் கழித்து தான் ரகுவுடைய கதவு திறந்தது..

அதுவும் ரகு திறக்கவில்லை குழந்தை ஸ்ருதி தான் திறந்தாள்..திறந்தவளின் உதடு கொஞ்சம் வீங்கியது போல் இருக்க,.

பாவம் அப்போது கூட ஸ்வேதா பூச்சி கடித்து விட்டதா..? அதனால் தான் குழந்தை அழுதாளா இப்படி தான் நினைத்தது…

ஆனால் மா மாமா பேட் மாமா. கிஸ் இங்கு தானே கொடுக்கனும்.. இங்கு கொடுத்து கடிச்சிட்டார் இதழை தொட்டு காட்டியவள்..

பின் சட்டி உள் கை விட்டார்.. என்று அவன் செய்ததை சொல்ல. ஸ்வேதா ஆடி போய் விட்டாள்..

என்ன டா இது என்று போதையில் மெத்தையில் மல்லாக்காக படுத்து கொண்டு இருந்த தம்பியின் சட்டையை பிடித்து கேட்க..

“ப்ரியா ப்ரியா…” என்று மனைவியின் பேரை முனக… பின் ரகுவை அம்மா அப்பா ஸ்வேதா என்று அடித்தாலுமே..

ஸ்வேதாவின் காலில் அவளின் அம்மா அப்பா சாட்சங்கமாக விழும் போது கூட..

“நான் அவனை விட மாட்டேன்.. “ என்று மகளின் உதட்டை தடவி தடவி கதறி தான் அழுதாள் துடித்தாள்..

ஆனால் ஸ்வேதாவின் அம்மா…” ஏற்கனவே உன் மாமியார் வீட்டில் என்ன அண்ணவே நம்ம குடும்பத்தை துளியும் மதிக்கிறது கிடையாது.. இதுல இந்த விசயத்தை நீ கடை பரப்பினால், அவ்வளவு தான்ன்.

அதோடு விடாது.. இந்த விசயம் தெரிந்தால் உன் புருஷன் உன்னொடு வாழ்வானா.. கண்டிப்பா கிடையாது… அதே போல உன் மாமியார் காரியுமே உன்னை வாழ விட மாட்டா.. அதோடு இப்போ வந்து இருக்கும் அந்த பெண் உன்னை பத்தி என்ன நினைப்பா.? என்று கேட்டவள் அந்த பாட்டி குழந்தையிடம்.. ஒரு சிலது கேட்க.

“பார்த்தியா. பெருசா எல்லாம் நடக்கவில்லை..” என்று விட்டார்.

ஸ்வேதாவுக்கு இந்த விசயம் தன் மாமியார் வீடு வரை சென்றால், கண்டிப்பாக பெரிய பிரச்சனை ஆகும் என்று நினைத்தவள் கூடவே அவளின் அம்மா சொன்னது போல பெருசா நடக்கிறதுக்கு முன் தான் நாம் காப்பாற்றி விட்டோமே என்று தன்னை தானே தேற்றிக் கொண்டவள்..

பின் தான் மகளிடம். “தாத்தா பாட்டி வீட்டில் யாரு கிட்டேயும் சொல்ல கூடாது என்றும் சொன்னால் அங்கு இருந்த அனுப்பி விடுவார்கள் பின் நாம் இங்கு தான் வர வேண்டியதா இருக்கும் என்று சொன்னவள் கூடவே

அப்போது தான் குட டச் பேட் டச் சொல்லி கொடுத்தள்.. இனி யாரையும் தொட விட கூடாது என்று விட்டாள்..



பின் அன்றே அங்கு இருந்து கிளம்பி வீடு வந்தவள் குழந்தை பயந்து போய் விட்டவள் அதற்க்கு ஏதும் செய்யாது வீட்டிற்க்கு இது தெரியக்கூடாது என்ற முனைப்பில் மகளின் மனநிலையை அறிய தவற விட்டு விட்டாள்… தட்சணா மூர்த்திக்கு தான் தன் வீட்டு பெண்களின் கேடு கெட்ட இந்த தனத்தை தன் மனைவி தன் வீட்டு வாரிசையே அழிக்க துணிந்ததே ஜீரணிக்க முடியாது இருந்தவரின் தலையில் அடுத்த இடியாக அடுத்து அடுத்து நடந்த நிகழ்வுகளில், நிலை குலைந்து போய் விட்டார் அந்த பெரிய மனிதர்…


 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
குடிகார நாயை நம்பி எப்படி பொண்ணை அவன் கூட தூங்க அனுப்புனா 😈😈😈

ஸ்வேதாவுக்கு இந்த செருப்படி பத்தாது 🥶🥶🥶🥶🥶

வர்ஷினி அப்படியே அந்த ஷண்மதிக்கும் இதே செருப்படி இரண்டு போடு 👿👿👿👿👿👿👿👿
 
Last edited:
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
ஸ்வேதா 😈😈😈😈😈 குடிச்சுட்டு வந்துருக்கவன் கூட சின்ன குழந்தையை படுக்க விட்டிருக்கா அறிவே இல்லையா இவளுக்கு எல்லாம் .... 🤬🤬🤬🤬🤬

இவளும் இவ குடும்பமும் அவங்க தப்பிக்க சுயநலமா யோசிச்சாங்களே தவிர குழந்தையோட மனநிலையை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கல..... 😡😡😡😡

இதுல உண்மையை சொன்னா திரும்பவும் அங்கேயே போக வேண்டியது தான்னு மிரட்டி வேற வச்சுருக்கா....😈😈😈

இந்த செருப்படி போதாது இவளுக்கு..... இவ்வளவு நடந்தும் ஸ்ருதியை கேட்கிறா எவ்வளவு தைரியம்... 😡😡😡
 
Top