Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam...24...3

  • Thread Author
அத்தியாயம்….24…3

அதே காவல் நிலையம் இல்லாது வேறு ஒரு காவல் நிலையம் அது… இந்த முறை அந்த காவல் நிலையத்திற்க்கு அழைத்து செல்லப்பட்டவர்கள்.. சுப்ரியாவின் கணவன் அவள் மாமியார் மாமனார் ஷன்மதி.. காரணம் ஷன்மதியின் பெற்றோர்கள் தற்கொலை செய்து கொண்டனர்..

மனைவி சென்ற பின்… அன்று மாலையே ராஜேஷ் ஷன்மதி வீட்டிற்க்கு சென்றான்… இந்த முறை குழந்தை அது இது என்று சாக்கு சொல்லி எல்லாம் செல்லவில்லை.. ஷன்மதியோடு இருக்க தான் வந்தேன் என்பது போல் தான் அன்றைய வருகை இருந்தது..

முழுவதும் நனைந்த பின்னே முக்காடு எதற்க்கு என்று நினைத்து விட்டான் போல.. ஷன்மதியின் அம்மா கலா தான் கதவை திறந்து விட்டது..

எப்போதுமே மதிப்போடு பார்க்கும் ராஜேஷை அன்று கலா நிமிர்ந்து கூட பார்க்காது தன் கணவன் இருந்த அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டு விட்டார்..

ராஜேஷ் அதற்க்கு கவலைப்பட்டார் போல தெரியவில்லை.. ஷன்மதி தான் செல்லும் தன் அம்மாவை பார்த்து கொண்டு நின்றது..

அந்த பார்வை கூட ராஜேஷ் அவளின் தோள் மீது கை வைக்கும் வரை தான்… பின் மீண்டுமே அவள் அறைக்கு இருவரும் சென்று விட.

பின் அம்மா பேசாது சென்றது என்ன.. தன்னை பற்றி இகழ்வாக பேசிய யாரின் பேச்சும் கூட ஷன்மதிக்கு நியாபகத்தில் இல்லை…

எப்போதுமே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தன் வீடு சென்று விடும் ராஜேஷ்.. அன்று ஷன்மதி வீட்டிலேயே தங்கி கொண்டு விட்டான்..

அவனின் அம்மா வசந்தி தான்.. “ எப்போ வீடு வருவ..?” என்று மூன்று முறை அழைத்து கேட்டவள்..

பின்.. “இப்படி வராதவன் உம் மவனை உன் பொண்டாட்டியிடமாவது அனுப்பி விட்டு இருக்கனும்.” என்று கத்தி விட்டு கணவனிடம் சொல்லி மூவருக்குமே வெளியில் உணவை வாங்கி வர சொல்லி சாப்பிட்டு முடித்து விட்டனர்..

பாவம் சுப்ரியா மகன் தான்.. தூங்கும் போது அம்மா அப்பா என்று கேட்டவன் பின் கொஞ்ச நேரம் அழுது தூங்கியும் விட்டான்..

இங்கு ஷன்மதி விடியலில் தான் தன் அறையை விட்டு வெளியில் வந்தது.. அப்போது கூட மூடி இருக்கும் தன் பெற்றோரின் கதவை பார்த்தவள் ஒரு பெரும் மூச்சுடன் சமையல் அறைக்கு சென்று ராஜேஷுக்கும் தனக்கும் உண்டான காபியை கலந்த பின் படுக்கை அறைக்கு சென்றாள்..

மீண்டும் ஒரு அவசர கலவி.. பின் அலுவலகத்திற்க்கு நேரம் ஆவதில் ராஜேஷின் உடை இங்கு இல்லை என்பதினால் தன் வீட்டிற்க்கு சென்று அலுவலகத்திற்க்கு கிளம்ப வேண்டும் என்பதினால் சென்று விட்டான்.. செல்லு முன்

அது வரை கூட ஷன்மதியின் பெற்றோரின் படுக்கை அறை திறக்கவில்லை.. இப்போது கதவை தட்டலாமா என்று யோசிக்க..

ராஜேஷ் தான்.. “ என்னை பார்க்க கொஞ்சம் சங்கடமா தான் இருக்கும் ஷம்மூ… விடு.. அவங்க எங்கே போயிட போறாங்க பார்த்துக்கலாம்..” என்று சொல்லி விட்டு தன் வீடு சென்று விட்டான்..

இது தான் ஒருவர் நம்மையே சார்ந்து இருக்க நேரிட்டால் அந்த நபர்கள் மீது நமக்கு இது போலான எங்கு போயிட போறாங்க. நம்மை விட்டால் என்று ஒரு எகத்தாலம் வந்து ஒட்டிக் கொள்ளும்.. அந்த மனப்பான்மை போல் தான் ஷன்மதிக்கும் .

பின் என்ன. திருமணம் ஆனவர்களே அப்பா அம்மாவின் முன் கணவனோடு படுக்கை அறைக்குள் சென்று கதவை சாற்றவே அத்தனை யோசிப்பார்கள்.. அப்படி இருக்க முறையற்ற உறவு.. இப்படி செய்ததோடு.. எப்போதுமே காலையில் எழுந்து அனைத்தும் செய்யும் அம்மா இன்று இத்தனை நேரம் கழித்தும் கூட எழவில்லை என்றால், பதற வேண்டாமா..?

தன் மீது கோபம் அதனால் தான் எழவில்லை போல என்று அவளுமே காபியோடு அலுவலகம் சென்று விட்டாள்… எப்போதுமே ஷன்மதி சமையல் அறைப்பக்கம் எல்லாம் சென்றது கிடையாது..

அனைத்துமே அவள் அன்னை கலா தான் செய்து டப்பாவில் கட்டியும் கொடுத்து விடுவார்… ஆனால் உழைப்பு என்பது உலகில் சொல்வது வேலைக்கு சென்று பணத்தை ஈட்டுவதை தான் ஊழைப்பில் சேர்த்து கொள்கிறார்கள்.. எத்தனையோ பெண்மணிகள் கணவன் மகள்கள் வேலைக்கு சென்று வருமானத்தை ஈட்ட வீட்டில் அனைத்துமே செய்து கொடுத்து அனுப்புவதோடு வீட்டின் பிரச்சனை அனைத்துமே பார்த்து கொள்ளும் பணத்தை ஈட்டாத இவர்களின் வேலை ஊழைப்பில் சேராது சும்மா என்னை சார்ந்து தான் இருக்கிறார்கள் என்று தானே மற்றவர்களை நினைக்க வைக்கிறது…

அந்த நினைப்பில் தான் ஷன்மதியும் இருந்தால் போல அதனால் தானே தந்தை நோயாளி அம்மா வயதானவர்கள் இன்னுமே காபி கூட குடிக்காது அறையில் இருக்கிறார்களே என்று கூட நினைத்து பாராது அவளுமே வேலைக்கு சென்று விட்டாள்..

சென்றவள். ராஜேஷுக்கு மூன்று முறை அழைத்து பேசியவள்.. ஒரு முறை கூட தன் வீட்டிற்க்கு அழைக்காது போய் விட்டாள்..

ஷன்மதி தன் சுயநலத்திற்க்கு என்று அன்னையை பூங்காவுக்கு அனுப்பியதில் ஒரு நன்மையாக மூன்று நாட்களாக ஒரு சின்ன பையனை அழைத்து வரும் கலா காணுமே..

அதிலும் அந்த மூதியவரின் இளைய மகன் விவாகரத்து ஆனவன்.. திருமணம் பற்றி இவர் பேசும் போது.. கலாவுமே தன் மகளுக்கும் வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை..

காரணம் நாங்கள் என்று வருந்த. அந்த மூத்த பெண்மணி..

“இரண்டாம் தாரம் எல்லாம் பார்க்க மாட்டிங்க என்றால், என் மகனுக்கு கல்யாணம் செய்து கொடுப்பிங்கலா…?” என்று கேட்டதுமே கலாவுக்கு மகிழ்ச்சி தான்..

ஆனாலுமே தன் மகளிடம் ஒரு வார்த்தை கேட்டு சொல்றேன்.. என்று சொல்லி விட்டு வீடு வந்தவருக்கு தான்… நீங்க என்ன எனக்கு திருமணம் செய்து வைப்பது.. சீமந்தம் செய்யும் நேரம் வந்து விட்டது என்று மகள் நிலை சொல்ல.

வீட்டோடு அடைந்து விட்டவரை தேடி அந்த மூத்த பெண்மணி வந்து அத்தனை நேரம் கதவை தட்டி காலிங் பெல் அடித்துமே ஷன்மதி வீட்டின் கதவு திற்க்கப்படவில்லை..

அந்த மூத்த பெண்மணி தட்டிய தட்டலில் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பக்கத்து வீடு எதிர் வீடு ஏன் கீழ் தளத்தில் இருப்பவர்கள் கூட வெளியில் வந்து நின்று விட்டனர்..

ஆனால் ஷன்மதி வீடு மட்டும் கதவை திறக்க காணும்… அங்கு இருந்தவர்களுக்கு லேசு பாசலாக ஷன்மதியின் விசயமும் தெரிந்து இருந்தது..

அதுவும் எதிர் வீடு குடியிருப்பில் இருப்பவர்கள் காலையில் ராஜேஷ் இங்கு இருந்து சென்றதில் இருந்து, காலையில் இருந்து ஷன்மதியின் வீட்டின் கதவு திறக்கப்படாததினால், சந்தேகம் கொண்டு காவல் நிலையத்தை அழைத்து விட்டனர்.. சந்தேகம் கொண்டு..

காவல் துறையும் உடனே வந்து ஷன்மதியை அழைத்து இன்னொரு சாவீயை வாங்க எல்லாம் காத்திருக்கவில்லை.. காரணம் அனைத்துமே சொல்லி விட்டனர்..

அதனால் உடைத்து.. பின் கலாவின் அறையையும் உடைத்து பார்க்க.. அனைவரும் சந்தேகித்தது போல் தான் மூத்த இருவருமே இறந்து விட்டனர்.. பக்கத்தில் ஒரு தற்கொலை கடிதமும்..

வழக்கம் போல் தான் இறக்கும் போது மகளை காட்டிக் கொள்ளாது.. என் கணவன் வருடக்கணக்காக படுக்கையில் இருப்பதினாலும்.. நானுமே அவருக்கு செய்து செய்து அலுத்து போய் விட்டதினாலுமே. வயது ஆகி விட்டதினால் தினம் ஒரு தூக்க மாத்திரையை போட்டு நிரந்தரம் இல்லா தூக்கத்தை கொடுத்த அந்த தூக்க மாத்திரை உதவியுடன் நிரந்தரமாக தூங்க என் கணவருக்கும் கொடுத்து விட்டு நானுமே போட்டு கொண்டு விட்டேன்.. என்று எழுதி இருந்த ஷன்மதியின் அம்மா கலா..

கடைசியில் ஒரு வரியாக.. முறையற்ற உறவு முறையில்லாது தான் போய் விடும்.. நீ ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும்.. என்பது தான்..

இங்கு ஷன்மதி வீட்டில் காவல் துறை உடனடியாக அதன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்து விட்டது…

அவருக்கு ஒரு மகன் இருக்கும் விசயம் தெரிந்து.. கலாவின் கை பேசியில் இருந்தே மகனை அழைத்து முறைப்படி செய்ய வேண்டியதை செய்ய ஆரம்பித்து விட்டனர்..

இங்கோ ஷன்மதியின் அலுவலகம் முன் ராஜேஷ் காத்து கொண்டு இருந்து அழைத்து இருவரும் ஒன்றாக வீடு வந்த போது தான் ஷன்மதிக்கு விசயம் தெரிய பதைத்து போய் விட்டாள்..

இது வரை அனுதாபப்பட்டு பேசிக் கொண்டு இருந்த அந்த குடியிருப்பு வாசிகள் இவர்கள் இருவரையுமே பார்த்து ..

“இதுங்களும் ஜென்மம்.. அப்பனை ஆத்தாலையும் முழுங்கிடுச்சி.. “ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக பேசி விட்டு தங்கள் கதவை அடைத்து தாழ் இட்டுக் கொண்டு விட்டனர்..

இவர்கள் பேசுவதோடு சரி காவல் துறை அப்படி பேசுவதோடு விட்டு விடுமா என்ன..? கேட்டறிந்த விசயங்களை கொண்டு அனைவரையும் காவல் நிலையத்திற்க்கு அழைத்து வந்து விட்டனர்..

சுப்ரியாவின் மாமனார் மாமியாரையும் சேர்த்து தான். ராஜேஷை காவல் நிலையத்தில் அத்தனை கழுவி கழுவி ஊற்றி ஷன்மதியிடம்..

“பேசாது அவங்களை முதியோர் இல்லத்தில்லாவது சேர்த்து விட்டு விடலாம்..” என்று பேசி.. இப்படியாக பேசி விட்டு அந்த காவல் நிலையத்தில் இருந்து வெளி வந்த போது ஷன்மதியின் பின் பக்கம் உடையின் மீது சிகப்பின் திட்டுக்கள்…

இது வரை பெற்றோர்களை பார்த்து கொள்ளாத மகன் தான் அவர்களின் இறுதிகாரியத்தை செய்து அவர்களை முறையாக வழி அனுப்பி வைத்தது..

அந்த சமயம் அவன் அனைவரின் பார்வைக்கும் நல்லவனாக தெரிந்தான் போல…

முறையற்ற கரு வந்த வழி தெரியாது அழிந்து விட்டது போல …

செய்யும் போது தெரியாத ஷன்மதியின் தவறு.. அவளின் அப்பா அம்மா இறந்த பின் தெரிந்து விட்டது. அதுவும் அவளின் தம்பியும் தம்பி மனைவியும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டு வந்த எங்களை அத்தனை பேச்சு பேசின. ஆனா நீ…

“எங்களுடையது காதலில் சேர்த்தி உங்களுடையது..” என்று அப்படி பெசி சென்று விட்டனர்.. அதுவும் குழந்தையும் கலைந்து விட… அவளுமே வேறு இடத்திற்க்கு குடிபுகுந்து விட..

சுப்ரியா மீண்டுமே கணவன் வீடு வந்தவளின் வாழ்க்கை நரகத்தை விட கொடுமை என்று தான் சொல்ல வேண்டும்..

முன்பு ராஜேஷை அத்தனை பிடிக்கும் சுப்ரியாவுக்கு.. அதனால் தான் தன் அண்ணனின் வாழ்க்கையை கூட பாராது தன் காதலை ஜெயிக்க வைத்தது..

ஆனால் இப்போது கணவன் மீது காதல் இல்லை.. கடமை.. அது கூட இல்லை.. கட்டாயம் ஒரு வித கட்டாயத்தில் தான் சுப்ரியா இப்போது கணவன் வீட்டிற்க்கு வந்து உள்ளாள்..

அதுவும் சரஸ்வதிக்கு தட்சணா மூர்த்தியும்.. ஸ்வேதாவுக்கு மகேந்திரனும் அனுப்பிய விவாகரத்து நோட்டிஸ் ஒரே நாளில் வந்ததில், அவர்களோடு இவளுமே ஆடி தான் போய் விட்டாள்..

கோபத்தில் சென்ற வீட்டு ஆண்கள் வீடு வந்து விடுவார்கள் என்று தான் சுப்ரியா நினைத்தது.. அதுவும் ஷன்மதியின் பெற்றோர்கள் இறந்து ராஜேஷ் அவளின் மாமியார் மாமனார் ஷன்மது காவல் நிலையத்திற்க்கு சென்று வந்த விசயம் தெரிந்து.. கடவுள் இருக்கிறார் என்று தான் நினைத்து கொண்டாள்..

ஆம் உண்மையில் கடவுள் இருக்கிறார் தான்.. என்ன தான் சுப்ரியா சோம்பேறி என்று இருந்தாலுமே ஒரு தோழிக்கு ஷன்மதி செய்தது அப்பட்டமான துரோகம் தான்.. அதே தான் ராஜேஷுக்குமே..

ஆனால் இவள் இவள் அண்ணனுக்கு செய்ததிற்க்கு பெயர் என்ன..? அதுவுமே துரோகத்தில் சேர்த்தி தானே.. அப்போ இவளுக்குமே தண்டனை அந்த கடவுள் தருவார் தானே..

இதோ இது என் தாய் வீடு என் அண்ணங்கள் அப்பா இருக்கிறார். கோபத்தில் சென்றவர்கள் வீடு வந்து விடுவார்கள் என்று நம்பி இருந்தவளுகு பேரடியாக அம்மாவுக்கும் அண்ணிக்கு வந்த விவாகரத்து நோட்டிஸ்.. அதிர்ச்சியடைய வைத்தது.

இந்த வயதில் விவாகரத்தா..? சரஸ்வதிக்கு நியாயம் கேட்க வேண்டிய சரஸ்வதியின் அண்ணனே சரஸ்வதியின் மகளுக்கு அநியாயம் செய்ய. அவர் எந்த மூஞ்சியை வைத்து கொண்டு தங்கைக்காக நியாயம் கேட்பார்..

பாவம் அவரே மகனால் போலீச் ஸ்டேஷன் ஏறி இறங்கி வந்து நட்பு உறவில் என்று அவமானப்பட்டு நின்று இருக்கிறார்.. அவர் யாருக்கு போய் நிற்பார்..

சரஸ்வதியின் அண்ணன் அப்படி என்றால், தங்கை சாந்தா.. பாவம் எந்த உறவுகள் இல்லை என்ரு வர்ஷினியை அவர் மறுத்தாரோ அதே உறவுகளின் பெயரை சொல்லி ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பஞ்சாயித்து வேறு விட்டில் நடக்க.. எங்கு இருந்து அவர் அக்காவின் பஞ்சாயித்தை பார்த்து தீர்த்து வைப்பது…

அவர் பாடு அப்ப்படி என்றால் ஸ்வேதாவின் பாடு…. அவள் இந்த கதியில் நிற்பதற்க்கே அவளின் அம்மா வீடு தானே காரணமே..

இவர்கள் பக்கம் பேச மாமியார் மருமகள் ஒரு பெண் வக்கீலை போய் பேசி விட்டு தான் வந்தனர்..

பெண்ணுக்கு போராடும் அந்த பெண்ணியவாதி வக்கிலுமே.. மாமியார் மருமகளுக்கு ஒரே சமயத்தில் விவாகரத்து நோட்டிஸ் அனுப்புவதா..? என்று சட்டத்தின் செக்ஷன் அத்தனை பேசி..

“உங்களுக்கு எப்படி அவங்க விவாகரத்து கொடுக்க முடியும்.. அது எல்லாம் அவ்வளவு ஈசி கிடையாது. தைரியமா போங்க.” என்று தான் பெண்ணுக்கு குரல் கொடுக்கும் அந்த பெண் வக்கீல் பேசி அனுப்பியது.

ஆனால் அடுத்த வாரம் வர சொன்னதில் இவர்கள் சென்ற போது.. அந்த பெண் இவர்களை அவர்கள் ஆபிசில் கூட நுழைய விடாது வெளியிலேயே கழுத்தை பிடித்து தள்ளாக குறையாக வெளியில் அனுப்பி விட்டார். இவர்கள் செய்த செயல்களை கேள்வி பட்டு.. அம்மாவே இப்படி இருக்க.. சுப்ரியா வேறு வழி இல்லாது தான் மீண்டும் கணவன் வீடு சென்றது.. காதலுக்காக வாழ்ந்து வந்தவள் கடமைக்காக அங்கு இருப்பது கொடுமையிலும் கொடுமை தானே… அந்த தண்டனை தான் அவளுக்கு… ஆனாலுமே கணவனை நெருங்க விடவில்லை..

இங்கு இப்படி இருக்க.. தீக்க்ஷயன் வீட்டில் அனைவரும் மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்…

ஸ்ருதியை மனதத்துவரிடம் காட்டிய அன்றே வர்ஷினியுமே தான் கருவுற்று இருப்பதையும் உறுதிப்படுத்தி கொண்டு விட்டாள்..

வர்ஷினிக்கு குழந்தையே இருக்க கூடாது… தனக்கு என்று ஒரு குழந்தை வந்தால், வசி தீராவை சரியாக பார்த்து கொள்ள மாட்டாள் என்று சரஸ்வதி வர்ஷிக்கு குழந்தையே இருக்க கூடாது என்று அவ்வளவு வேலைகளை பார்க்க.

கடவுள் வர்ஷினிக்கு குழந்தை செல்வங்களை வாரி வழங்கிவிட்டார்.. ஆம் பரிசோதனையில் வர்ஷினிக்கு இரட்டை குழந்தை என்று முடிவு வந்தது..

ஸ்ருதி தீரா. வயிற்ரில் இருக்கும் இரட்டை குழந்தை என்று வர்ஷினி நாங்கு குழந்தைக்கு தாயாக இருந்தவள்…

முதலில் தன் வேலையை விட அத்தனை யோசித்தவள்.. சடுதியில் முடிவு எடுத்து விட்டாள்.. பேப்பரை போட்டு விட்டு தான் தன் தீனாவிடமே சொன்னாள்.. நான் பேப்பரை போட்டு விட்டேன் என்று..

தீக்ஷயனோ அதிர்ந்தவன்.. பின் ஏதோ பேச ஆரம்பிக்கும் முன்..

“ சும்மா சும்மா குற்றவுணர்ச்சியா இருக்கு வசி.. அது மட்டும் சொல்லாதிங்க தீனா. ப்ளீஸ்… நான் எந்த கட்டாயத்தின்ழாலுமே வேலையை விடல.. அதோடு இந்த வேலை போவாது தற்காலிகம் தான்.. அதுவுமே பெண்கள் தன் காலில் நிற்க ஐடி வேலைக்கு தான் போய் ஆக வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது தீனா..”

“ஸ்ருதியை நாம பழைய நிலைக்கு திரும்ப எத்தனை போராடுறோம்.. இந்த சமயம் அவளுக்கு என் அருகாமை கண்டிப்பா வேணும் தீனா.”

“அதோடு அது என்னவோ தீராவை இப்போ தனியா விட்டு போகவும் பயம்.. நான் ஒரு இரண்டு வருடம் கேப் எடுத்துக்குறேன்..” என்று சொல்லி விட்டாள்..

தீக்ஷயனுக்கு தான் அப்போதுமே மனது ஆரவில்லை.. அவளின் எதிர் கால கனவு திட்டங்கள் எம்று அனைத்துமே அவனுக்கு தெரியுமே.. அதை சொன்னவன் பின் அவனே..

“என்ன தான் பெண்கள் படித்து வேலைக்கு போய் என்று இருந்தாலுமெ குடும்பம் என்று வரும் போது பெண்கள் தான் தங்கள் கேரியரை இழக்க வேண்டி இருக்கு லே வசி..” என்று இதை மிக வருந்தி தான் சொன்னான்..

தீனாவின் பேச்சில் வசி சிரித்து கொண்டாள்..

“நீயா நானா எல்லாம் பெண்ணியம் இல்லேங்க.. இப்பொ நமக்கு ட்வீன்ஸ். இந்த குழந்தையை நான் தானே சுமந்து பெத்துக்கனும்.. நான் படித்து இருக்கேன்.. இத்தனை சம்பாதிக்கிறேன்.. நான் ஐந்து மாதம் நீ ஐந்து மாதம் எல்லாம் பங்கு போட்டுக்க முடியாது லே தீனா.. அதே போல தான் ஒரு சிலது..

இப்போ ஸ்ருதிக்கு என் சப்போர்ட் தான் ரொம்ப தேவை.. அதே போல தீராவுக்குமே.. இப்போ நான் இம்பார்ட்டனா நினைப்பது ..” தன் வயிற்றில் இருக்கும் குழந்தைகளை காண்பித்து நல்ல மாதிரியாக பெத்துக்கனும்.. அதுக்கு என்று குழந்தைகளை மட்டுமே பார்த்துட்டு இருந்து விட மாட்டேன்.. கண்டிப்பா நான் ஏதாவது செய்வேன்..” என்று வசி சொல்ல.. இப்போது தீனாவுமே வசியின் பேச்சை ஏற்று கொண்டான்..

ஸ்ருதியும் மெல்ல மெல்ல தன் பழைய நிலையை அடைந்து கொண்டு இருந்தாள்..

வர்ஷினியுமே இரவில் தீரா ஸ்ருதியோடு தான் உறக்கம்.. முன் தீரா இருக்கையில் ஒன்று சேர்ந்தவர்கள் இப்போது நடியிரவு.. மொட்டை மாடி தான் இவர்களின் அந்தரங்கம் இடமாக மாறி இருந்தது.

ஸ்ருதியும் பழைய நிலைக்கு திரும்பி விட்டாள்.. அவளின் இந்த முன்னேற்றத்திற்க்கு மருத்துவர் ஒரு காரணம் என்றால் மர்றோரு காரணம் வர்ஷினி தான்..

“அப்பா தாத்தா சித்தப்பா” என்ற உறவுகள் சொல்லி. எப்படி செய்தால் தவறானது என்று புரிய வைத்து.. அனைத்து ஆண்களுமே கெட்டவர்கள் கிடையாது என்று புரியவைத்தவள்..

இதையும் புரிய வைத்தால், எந்த எந்த விதத்தில் ஆண்கள் தன்னை அனுகினால் தவறு என்பதை.. இப்போது இரவில் சில சமயம் தன் அப்பா தாத்தாவோடு உறங்கும் அளவுக்கு நல்ல முன்னேற்றம் தான்..

ஆனாலுமே இப்போது தீராவை போல ஸ்ருதியுமே வசியம்மா வசியம்மா என்று வர்ஷினி பின் தான் சென்றது..

தீனா கூட நீ வசியக்காரி தான்டி என்று நேரம் கிடைக்கும் போது எல்லாம் கொஞ்சி தீர்த்து விடுவான்..

வர்ஷினியும் அவள் மூன்றாம் மாதம் முடிவில் இருந்த போது தான் தன் உடன் பிறப்புக்கு அழைத்து விசயம் சொன்னது… அது வரை அவ்வப்போது ஸ்ரீவச்சன் பேசிய போது கூட இதை சொல்லவில்லை.. சொல்லும் அளவுக்கு அவர்கள் தனக்கு என்ன செய்தார்கள் என்பது தான் அவளின் எண்ணமும்..

அந்த சமயம் தான் ஒரு நாள் கீர்த்தனாவிடம் இருந்து வர்ஷினிக்கு நடியிரவு அழைப்பு ஒன்று வந்தது..








 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
வர்ஷினி இரட்டை குழந்தைகள் 🤩🤩🤩அப்பா அம்மா இரண்டு பேரையும் ஒன்னா பறி கொடுத்தவளுக்கு பிள்ளை செல்வத்தை இரண்டா கொடுத்துட்டாரு😘😘😘😘😘😘

தீஷன் வர்ஷினி மனசு போல வாழ்க்கை 🤗🤗🤗🤗

சரஸ்வதி நீங்கள் மகனை மட்டும் தான் இழப்பீங்க என்று நினைத்தேன் ஆனால் மொத்த வாழ்க்கையும் இழப்பீங்க என்று எதிர் பார்க்கல 😔 😠 😔 😠 😠

ஸ்வேதா 🥶 🥶 🥶 🥶

ஷண்மதி சரியான தண்டனை தான் உனக்கு 😈😈😈 பெத்தவங்க முன்னாடியே கேவலமா நடந்துக்கிற 🤧🤧🤧🤧

ராஜேஷ் பொண்டாட்டியும் போய் வைப்பாட்டியும் போய் 🤗🤗🤗🤗🤗🤗

சுப்ரியா இனி உன் குழந்தைக்காச்சும் நல்ல அம்மாவா நடந்துக்க பாரு 🥺 🥺 🥺 🥺


கீர்த்தனாவுக்கு என்ன பிரச்சினை 🧐 🧐 🧐 🧐 🧐
 
Last edited:
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
தப்பு பண்ணின எல்லாருக்கும் சரியான தண்டனை கிடைச்சது.... 👍👍👍

வர்ஷினி ட்வின்ஸ்... 🤩🤩🤩🤩 வசி தீனா நல்லபடியா அவங்க வாழ்க்கையை கொண்டு போறாங்க..... 🥰

அடுத்து வர்ஷினி கூடப் பிறந்தவங்களுக்கா... அருமை... 🤭🤭🤭
 
Top