Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam - 6

  • Thread Author
அத்தியாயம்…6
தீராவின் குரலை சட்டென்று வர்ஷினியால் அடையாளம் காண முடிந்து விட்டது தான்.. ஆனால் இங்கு எப்படி என்று அவள் யோசித்து கொண்டே குரல் வந்த திசையை பார்த்தாள்..
பார்த்தவள் கண்ணுக்கு எப்போதுமே தீராவை அவள் தனித்து பார்த்தது இல்லை தானே.. அதே போல் தான் இன்றுமே தீக்க்ஷயனின் கை பற்றி கொண்டு தான் தீரா இவளை நோக்கி நடந்து வந்தது…
பார்த்தவள் கண்ணுக்கு குழந்தை கொஞ்சம் வளர்ந்து விட்டாள் என்பது தெரிந்தது.. கூடவே இவர்கள் இருவரையும் பார்த்த நாளுமே.. அன்று தானே அவள் வாழ்க்கையையும் புரட்டி போட்ட நாளுமே.. அந்த நாளை அவள் மறக்க முடியுமா என்ன…?
அந்த நாள் நினைவில் முகம் லேசாக கசங்கி போனாலுமே, அந்த ஆறு மாதம் காலத்தில் அவள் பயின்ற கலைகளில் ஒன்றான முகத்தை சட்டென்று சாதாரணமாக மாற்றிக் கொண்டவளாக..
தன்னை நோக்கி நடந்து வந்த தந்தை மகள் இருவரையுமே புன்னகையோடு தான் எதிர் கொண்டாள்..
வர்ஷினியின் பார்வை தான் குழந்தை பின் தன் பழைய நினைவு என்று போனது.. ஆனால் அவளை நோக்கி வந்து கொண்டு இருந்த தீக்க்ஷயனின் பார்வை முழுவதுமே வர்ஷினியிடம் மட்டும் தான் நிலைப்பெற்று இருந்தது..
அவனுக்கும் அனைத்தும் தெரியும் தான்.. ஆனால் தெரிந்த நாள் இவர்களுக்கு திருமண நாளான அன்று இங்கு இருந்து தான். அதாவது ஜார்டனில் இருந்து தான் தன் சித்தி மகனுக்கு வாழ்த்து சொல்ல அழைத்த போது தான் தெரிந்தது..அன்று திருமணம் நடைப்பெறவில்லை என்பது..
பின் அழைக்கிறேன் என்று சித்தி மகன் வைத்து விட.. தீக்க்ஷயனுக்கு தான் ஏன் திருமணம் நடக்கவில்லை என்று குழம்பி போய் விட்டான்..
மறு நாள் எப்போதும் போல அவன் அன்னை அழைத்த போது… எப்போதும் இரண்டு வார்த்தை பேசி விட்டு.. குழந்தையிடம் பேசியை கொடுத்து விட்டு சென்று விடுபவன்..
அன்று..”ஏன் மேரஜ் நின்னுடுச்சி.?” என்று கேட்டவனிடம்.
அவன் அன்னை சரஸ்வதி.. “ உனக்கு எப்படி தெரியும்..” என்று கேட்க..
“நேத்து அவனுக்கு விஷ் பண்ண கூப்பிட்டேன்.. மேரஜ் நடக்கல என்று மட்டும் தான் சொன்னான்.. என்ன விசயம்..?” மீண்டுமே தீக்க்ஷயன் கேட்ட போது..
சரஸ்வதி.. அனைத்துமே சொன்னதோடு நேற்று மாலை இந்த திருமணம் நடைபெறாது என்று பேசி முடிவு செய்ததையும். அந்த முடிவு எடுத்த காரணத்தையும் அவன் அன்னை சொன்ன போது..
கேட்ட விசயத்தை ஜீரணிக்க முடியாது தீக்க்ஷயன் அமைதியாகி விட்டான்.. சரஸ்வதி
தான்.”தீக்ஷா தீக்ஷா..” என்று அழைத்ததில்..
“சொந்த மகனுக்கு கூட செய்ய… அப்படி யோசிக்கிறிங்கலே. அக்காவும் தங்கையும்..” என்று சொன்னவன்..
எப்போதும் மகளிடம் கொடுக்கும் பேசியை கொடுக்காது வைத்து விட்டவனனின் மனது ஆறவில்லை..
சீ என்ன மனிதர்கள் இவர்கள் எல்லாம்.. சீ என்று சொன்னது வர்ஷினியின் உடன் பிறப்புக்களையும் சேர்த்து தான் நினைத்தது..
அன்றில் இருந்து வர்ஷினியை பற்றி அவ்வப்போது நினைத்து கொள்வான்.. ஒரு சேர பெற்றோர்களை இழந்தது விதி என்றால், பின் நடந்தது அனைத்துமே மனிதர்களின் சதி தானே என்று..
ஆனால் இன்று ஜார்டனில் வர்ஷினியை பார்ப்பான் . என்று அவன் நினைத்தும் பார்க்கவில்லை.
இங்கு என்றதில் வேலை மூலமாக தான் வந்து இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான். பெண் பார்க்கும் போது வர்ஷினி வேலை செய்யும் இடத்தை சொல்லும் போது..
இவன் அன்னை சரஸ்வதியும், அவன் சித்தியுமே தீக்ஷயன் அங்கு தான் வேலை பார்க்கிறான் என்று சொல்ல வந்தார்கள். ஆனால் இவன் தான் அவர்களை சொல்ல விடாது தடுத்து விட்டான்..
சாதாரணமாக இருந்து இருந்தால், சொல்லி இருந்ததோடு.. அவளின் வேலை டீம் லீடர் என்று கேட்டு இருப்பான் தான்..
ஆனால் வர்ஷினியை பார்த்த உடன் தன் மகள் தீரா. “ம்மா..” என்ற அந்த அழைப்பு அவனுக்கு ஒரு வித சங்கடத்தை கொடுத்தது.. அதனால் தனிப்பட்டு எதுவும் பேச அவனை தடுத்து நிறுத்தியது..
ஆனால் இப்போது வெளிநாடு.. சின்ன பெண்… முன் இரு முறை பார்த்து இருக்கும் பெண்.. அந்த திருமணம் மட்டும் நடந்து இருந்தால், உறவுப்பெண்ணாக ஆகி இருக்கும் பெண்.. இது போல அந்நிய தேசத்தில் பார்த்த உடன் பேசாது அவளை கடக்க அவனால் முடியவில்லை. அதுவும் இனி இங்கு இருக்கும் வரை தினம் தினம் பார்த்து ஒன்றாக வேலைகள் செய்ய வேண்டும் என்ற நிலையில்,
அதனால் தான் அவளை நோக்கி வந்தான். வந்தவன் பெண்ணவளின் முக பாவனையையும் கண்டு கொண்டவனாக..
அந்த நின்ற திருமணத்தை பற்றி பேசாது அவளின் தந்தை தாய் இறப்புக்கு வருத்தம் தெரிவித்ததோடு அந்த பேச்சை விட்டு விட்டவன்.. பின் வேலையை பற்றிய பேச்சை பேச..
ஆனால் அதற்க்கு அவன் மகள் தீரா விட வேண்டுமே.
“ம்மா ம்மா.” என்று இப்போது நன்றாக பேசவும்.. கொஞ்சம் வளர்ந்து விட்டவள்.. இவளை அழைத்ததோடு…
“ம்மா நீங்களுமே.. வேலைக்கு வந்திங்கலாம்மா..?” என்று தன் மழலை குரலில் கேட்டாள்..
தீராவை பார்த்த யாருக்குமே அவளை சட்டென்று பிடித்து விடும்.. காரணம் சப்பியாக கொழு கொழு கன்னமாக உருண்ட கண்ணை வைத்து கொண்டு அந்த பார்வையே பார்ப்பவர்கள் அந்த குழந்தையை கொஞ்சாது இருக்க மாட்டார்கள்..
அதே போல் தான் தீராவை முதல் முறை பார்த்த வர்ஷினியுமே குழந்தையின் அழகில் அவளை பார்த்து சிரித்த போது தான் அவளின் அம்மா என்ற அழைப்பு.. அவளை கொஞ்ச விடாதும்.. தூக்க விடாதும் செய்தது..
ஆனால் இன்று அந்த அழைப்பை எல்லாம் அவள் உணரும் நிலையில் இல்லை.. அவள் நிலையில் இருந்தது எல்லாம்..
இத்தனை வயதில் தாயை இழந்த எனக்கே அவரின் இழப்பு இத்தனை வேதனைகள் கொடுக்கிறது என்றால், இன்னுமே தனக்கு அம்மா இல்லை என்பது கூட சரியாக புரிந்து கொள்ளாத இந்த குழந்தை நாளை தனக்கும் பிற குழந்தைக்கும் இருக்கும் வித்தியாசத்தை புரியும் போது எத்தனை வேதனை அடையும்..
அதுவும் தீக்க்ஷயனின் இரண்டாம் திருமணம் தடைப்படும் காரணமாக பெண் வீட்டவர்கள் சொன்ன காரணமாக இந்த குழந்தையின் பொறுப்பை ஏற்க முடியாது என்று சொன்னது..
தன்னுடைய நிச்சயம் முறிந்த காரணமும் ஒன்றாக போக… குழந்தை வளர்ந்தவளாக போனாலுமே தூக்கி கொண்டாள்..
எப்போதுமே அந்த குழந்தையிடம் சங்கடத்துடன் பேசும் வர்ஷினி அன்று..
“ஆமா டா பட்டூ… வேலைக்கு தான் வந்து இருக்கேன்.. டூ இயர்ஸ் இங்கு தான் இருப்பேன்.. நீங்க எங்கே இங்கே பட்டூ நீங்களும் ஆபிஸ் போக போறிங்கலா..” என்று வார்த்தைக்கு வார்த்தை பட்டூ என்ற அந்த செல்ல அழைப்பிலும்
பேசியவள் குழந்தையின் வயிற்றில் சிக்குலக்கா மூட்டுவது போலான செயலிலும் குழந்தை தீரா கிளுக்கி சிரித்தவள்.. வர்ஷினியின் கழுத்தையும் கெட்டியாக கட்டி கொண்டாள்..
காரணம் இது போல அவளை யாரும் இது வரை செல்லம் கொஞ்சியது கிடையாது.. பட்டூ என்ற இது போலான செல்ல அழைப்பையும் அந்த குழந்தை கேட்டது கிடையாது..
முதல் முறை.. அதுவும் தனக்கு அம்மா என்று குழந்தையின் மனதில் பதித்து கொண்ட அந்த குழந்தை… தன் அம்மா தன்னை கொஞ்சியதிலும் அந்த செல்லம் அழைப்பிலும் வர்ஷினி ஒன்றும் செய்யாத போதே அம்மா என்ற அந்த எண்ணமே அந்த குழந்தைக்கு வர்ஷினியின் மீது ஒரு பிடிப்பை கொடுத்தது என்றால்,
இந்த கொஞ்சலிலும் செல்ல அழைப்பிலும்.. குழந்தை மனதளவில் முழுவதுமாக வர்ஷினியின் பக்கம் சென்று விட்டாள்..
ஆனால் இதை உணராது தான் வர்ஷ்னி குழந்தையின் அந்த கொழு கொழு கன்னத்தை கிள்ளிக் கொண்டு இருக்க..
ஒரு நிமிடம் ஒரே நிமிடம்.. அந்த இருவரையும் இப்படியான காட்சியில் பார்த்ததில், தீக்ஷயனின் மனதிலும் சரி, கண்ணிலும் சரி ஒரு ஆசை மின்னி மறைந்தது..
ஆனால் அதை உடனே அகற்றி கொண்டவனாக.. மீண்டும்.. ‘நீ எந்த பிராஜெக்ட்டுக்கு இங்கு வந்து இருக்க..” வர்ஷினியிடன் கேட்டான்..
அவன் கேள்வியில் தான் வர்ஷினிக்கு மீண்டுமே தீக்க்ஷன் இங்கு எப்படி..? அப்போ இவருமே நாம வேலை பார்த்த ஐடி கம்பெனியில் தான் வேலை பார்த்தாரா.. அன்னைக்கு சொல்லவே இல்ல.. என்று நினைத்து கொண்டாலுமே.
சொன்னாள் தான் வேலை செய்யும் இருக்கும் பிராஜெக்ட்டான பேங்கிங் பத்தி சொல்ல. அவனுமே அந்த டீமுக்கு தான் மேனஜராக ஆறு மாதங்கள் முன் இங்கு வந்தது..
தீக்க்ஷயனுக்கு வர்ஷினி தன் வேலையை பற்றி சொன்னாலுமே, சொல்லும் போதே தன்னை குழப்பமாக பார்த்து கொண்டே சொன்னதில்,
தீக்க்ஷயன் வர்ஷினியிடம் தெளிவுப்படுத்தினான்..
“தான் வேலை பார்ப்பது அதே ஐடி கம்பெனியில் தான் என்றும்.. தான் வேறு பிரான்ச் என்பதும் சொன்னவன் கூடவே..
“நீ இங்கு வேலைக்கு வந்த அந்த பிராஜெக்ட்டுக்கு நான் தான் மேனஜர்..” என்றதில்
வர்ஷினி. “என்னது மேனஜரா..?” இதை கேட்கும் போது வர்ஷினியின் குரல் கொஞ்சம் அதிர்வது போல் தான் வெளி வந்தது..
அவளின் அந்த அதிர்ந்த குரலில் தீக்ஷயனுக்கு சிரிப்பு வந்து விட்டது தான்.. இருந்தும் அதை காட்டாது..
“ஏன் பயப்படுவது போல கேட்கிற.. ஏன் வேலை கொடுத்த நேரத்துக்கு நீ முடிச்சு கொடுக்க மாட்டியா…?” என்று கேட்டதுமே..
வர்ஷினியின் முக பாவனை சடுதியில் மாற்றம் அடைந்தது.. “அது எல்லாம் நான் நல்லா வேலை பார்ப்பேன்..” என்று தீக்க்ஷயனிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது தான் இந்த பிராஜெட்க்கு என்று சென்னையில் இரு வேறு பிரான்சில் இருந்து ஜார்டனுக்கு வந்தவர்கள் வேலையில் இருந்து ஒன்றாக வந்தது.
வந்தவர்கள் இருவரும் பேசி கொண்டு இருப்பதை பார்த்த வாறே வந்தவர்களில் வித்யா..
வர்ஷினியிடம்.. “வர்ஷூ இவர்..” என்று தீக்க்ஷயனை அறிமுகம் படுத்தும் போதே…
வர்ஷினி தெரியும் வித்யாவிடம் சொல்லி விட்டாள்..
அதே போல் தான் தீக்க்ஷயனின் நண்பனும்.. அவனின் சம பதவியில் இருக்கும் கெளதமனும்..
தீக்க்ஷயனிடம்.. “இன்னைக்கு புதுசா ஒருத்தவங்க அந்த பிராஞ்சில் இருந்த நம்ம பிராஜெக்ட்காக வருவாங்க என்று சொன்னேன் லே.. அவங்க தான் இவங்க..” என்று சொன்ன கெளதம்..
இவங்க என்றதோடு அடுத்து பெயர் நியாபகத்தில் வராது போக.. கெளதம்… இவங்க இவங்க மிஸ் மிஸ்” என்று இழுக்க.
தீக்ஷயன் . “வர்ஷினி…” என்றதும் எப்படி தெரியும் என்ற பார்வை கெளதமிடம் இருந்து மட்டும் அல்லாது அங்கு வந்த அனைவரிடமும் வந்த போது தான்..
தீரா.. “ம்மா உச்சா உச்சா…” என்று வர்ஷினியிடம் சொன்னது,.
இதில் அதிர்ந்து அனைவரும் தீக்க்ஷயனையும், வர்ஷினியையும் மாறி மாறி பார்த்தனர்..
இப்போது மீண்டுமே இது வரை இல்லாது சங்கடம் இருவருக்குள்ளும் வந்தது.. அந்த சங்கடம்.. எதனாலோ.. ஒரு வேளை… தீக்ஷாயாவை எப்படி தெரியும் என்றும்.. தீரா எதற்க்கு வர்ஷினியை அம்மா என்று அழைக்கிறாள் என்று சொல்வது இருவருக்குமே பிடிக்கவில்லையோ என்னவோ.. ஆமாம் இருவருக்குமே பிடிக்கவில்லை தான்..
தீக்க்ஷயனுக்கு வர்ஷினியை இங்கு பார்த்தது முதல் அதிர்ச்சி என்றால், அடுத்த அதிர்ச்சி ஆறு மாதம் முன் வர்ஷினியை அவள் பார்க்கும் போது அவள் பேசும் முன்.. அவள் முக பாவனை மட்டும் அல்லாது அவள் கண்ணும் பேசி விடும்..
அப்படி அவள் மனதில் இருப்பதை உள்ளதை உள்ளப்படி காட்டும் கண்ணாடியாக தான் அவள் முகம் இருக்கும்.. அதனால் தான் தன் மகள் வர்ஷினியை அன்னை என்று அழைத்த போது வர்ஷினி முகத்தில் வந்து போன தர்ம சங்கடத்தை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது..
அதோடு அன்று மாலுக்கு சென்ற போது அவள் தோழியோடு தீக்க்ஷயன் தன் மகளோடு பார்த்த போது.. மகளின் மீண்டும் அம்மா என்ற அந்த அழைப்பில் வர்ஷினியின் சங்கடத்தை அவள் முகத்தில் பார்த்ததினால் தான் உடனே.. அவளிடம் விடைப்பெற்று சென்றது..
ஆனால் இப்போது பார்த்த போது முகத்தில் ஒரு இறுக்கம். கூடவே தன் முகத்தில் எதுவும் காட்ட கூடாது என்ற வைராக்கியத்தை கவனித்தவன்..
விதி இவளையுமே விட்டு வைக்கவில்லை போலவே… அவனுமே அன்னையின் மூலம் வர்ஷினியை பற்றிய விசயங்கள் அனைத்துமே அறிந்து கொண்டவன் ஆயிற்றே… சின்ன பெண்.. கூடவே தன்னை போலவே உறவுகளால் தண்டிக்கப்பட்டவள் என்றதில்.. ஒரு அன்பு பெண்ணவள் மீது தீக்க்ஷயனுக்கு உண்டானது..
இதில் தன் குழந்தையின் மூலம் வர்ஷினி முகத்தில் மீண்டுமே ஒரு சின்ன சிரிப்பு இலகிய தோற்றம் பார்த்ததில் சிறிது நிம்மதி..
இப்போது இவர்கள் கேட்ட எப்படி தெரியும் என்ற கேள்விக்கு உண்மையை சொல்ல தீக்க்ஷனுக்கு பிடிக்கவில்லை..
பழையது சொன்னால் வர்ஷினிக்கு அதை நியாபகம் படுத்துவது போல் ஆகும் மட்டும் என்று இல்லாது… இவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு விசயத்தில் இவளுக்கு மீண்டும் மீண்டும் அதை வர்ஷினிக்கு நினைவு படுத்த கூடும் என்பதினால்..
“உறவு பெண்.. “ என்று மட்டும் சொல்ல. வர்ஷினி தீக்க்ஷயனை பார்த்தவள் அவன் பார்வையில் பெண்ணவள் என்ன உணர்ந்தாளோ.. அவளுமே அதையே ஆமோதிக்க. .
இதில் தீரா அம்மா என்று அழைப்பதை யாருமே பெரியதாக எடுத்து கொள்ளவில்லை.. அன்று மட்டும் இல்லாது அடுத்து வந்த நாட்கள் வாரங்கள் மாதங்கள் என்று கடந்து.. தீராவின் இந்த அழைப்பையும்.
கூடவே… வர்ஷினிக்கு கொடுக்கப்பட்ட அறைக்கு எதிர் அறையில் தான் தீக்க்ஷயனின் அறையும்.. அதுவும் இது வரை கெளதம் மனைவி தான் தீக்க்ஷயனுக்கும் தீராவுக்கும் உணவு கொடுப்பது..
கெளதம் தெலுங்கான மாநிலத்தில் இருந்து சென்னைக்கு படிக்க வந்து சென்னையிலேயே வேலை கிடைத்து சென்னையிலேயே செட்டில் ஆன போதுமே..
திருமணம் என்று வரும் போது தெலுங்கு பெண்ணான தன் அத்தை மகளை தான் திருமணம் செய்து கொண்டது..
கடந்த மூன்று ஆண்டாக சென்னையில் தான் கெளதம் தன் மனைவி லட்சுமியோடு வாசம். இருந்தும் லட்சுமியின் கை பக்குவத்தில் தெலுங்கு வாடை தான் அதிகமாக அடித்தது.
அது தானுங்க காரம் அதிகமாக தான் இருக்கும்..
தீக்க்ஷயனுக்கு வேலையில் வெளிநாடு செல்ல அத்தனை வாய்ப்பு வந்து போதும் குழந்தைக்காக தான் அவன் அந்த வாய்ப்பை மறுத்து கொண்டு வந்தது.
ஆனால் ஒரு நிலையில் குழந்தையை கொண்டே தன் வீட்டில் அவனால் இருக்க முடியாத சூழ்நிலையில், கெளதமிடம் பேச.
“உடனே நீ குழந்தையோடு இங்கு வந்து விடு..” என்ற போது தீக்க்ஷயன் குழந்தையின் உணவுக்காக தயங்கினான்..
குழந்தைக்கு வெளி சாப்பாட்டு ஒத்துக் கொள்ளாது… இரண்டு வேலை வெளியில் சாப்பிட்டால் உடல் நிலை சரியில்லாது போய் விடும்..
வீம்புக்காக இங்கு வந்து விட்டு குழந்தையை கஷ்டப்படுத்த கூடாது என்று தயங்க..
கெளதம் அதற்க்கும் வழி சொல்லி விட்டான்.. “என் மனைவி அவுஸ் ஒய்ப்.. எனக்கு சமைத்து கொடுக்கிறாள்.. கூட உங்க இரண்டு பேருக்கும் சமைக்க போறா…” என்றதில்..
“குழந்தைக்கு மட்டும் போதும். நான் பார்த்து கொள்கிறேன்..’ என்று தான் இங்கு வந்தது..
ஆனால் தீராவுக்கு லட்சுமி செய்யும் சமையல் காரத்தில் சாதத்தை பிசைந்து தந்தை அவள் வாயின் அருகில் கொண்டு சென்றாளே போதும்.. காத தூரம் ஓடி விடுவாள்..
அப்படிப்பட்டவள் வர்ஷினி ஒரு கிண்ணத்தில் பருப்பும் சாதமும்.. சாதம் கொஞ்சம் இலகுவாக இருக்க அதில் ரசம் கொஞ்சம் நெய் ஊற்றி பிசைந்து ஊட்டினாள்.. சமத்து பிள்ளையாக அடம் பிடிக்காது சாப்பிடும் மகளையே தந்தை அதிசயமாக தான் பார்த்திருந்தான்…
 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
தீரா வர்ஷு நல்லா நெருக்கம் ஆகிட்டாங்க 🤗 🤗 🤗 🤗 அம்மா சாப்பாடு கொடுத்தால் தான் சாப்பிடுவா போல 😉 😉 😉

தீஷனையும் அவன் உறவுகள் கைவிட்டுடாங்களா🤨🤨🤨🤨

தீராவை கொண்டு இரண்டு பேரும் நெருங்கிடுவாங்க 🤩🤩🤩தீஷனுக்கு கொஞ்சம் விருப்பம் இருக்க தான் செய்யுது 😉 😉 😉


தீஷன் குடும்பம் ஏத்துப்பாங்களா 🤔🤔🤔🤔🤔
 
Last edited:
Active member
Joined
May 24, 2024
Messages
194
Lovely update dear
Nalla bonding varapothu
Varusukum kuttikum
 
Member
Joined
Jun 2, 2024
Messages
77
Nice...rendu perum seruvathatkaana kaalam tholaivil illai...Dheera baby eh serthu vachu viduwa...
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Wow… Theera Varshu bonding ❣️❣️❣️
Ithuve Theekshanyan avalai kalyanam panna reason ah poidum pola… inime Theera ku saappdu kooda Amma than koduppa 😍😍😍
Jordan la irunthu pogum podhe married ah ponal nallam. Illa… Theekshanyan amma ve vida mattanga
 
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
வர்ஷினி தீரா பாசப் பிணைப்பு அழகு.... 💕💕💕

தீக்ஷயன் ஏன் உறவுகள்கிட்ட இருந்து தள்ளி இருக்கிறான் தீரா குட்டியை பாரமா நினைக்குறாங்களா......🤔🤔🤔🤔
 
Top