Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam - 7

  • Thread Author
அத்தியாயம்…7

குழந்தைகள் கொண்டாடும் இடத்தில் தான் என்பது போல தீரா வர்ஷினியிடம் ஒட்டி கொண்டு விட்டாள்..
வர்ஷினி ஜார்டனுக்கு சென்ற அன்றே தான் அவனையும் தீராவையும் பார்த்தது.. பின் தன் அறைக்கு வந்ததும்.. செய்து வைத்த உணவை சாப்பிட தட்டில் வைத்த போது தான் எதிர் அறையில் இருந்து தீரா..
“நோப்பா ஆனாம்.. யெனக்கு ஆனாம்.. உஸ் உஸ்..” என்ற மழலையின் குரலும்..
அதற்க்கு தீக்க்ஷயன்.. “பேபி… நெய் நிறைய போட்டு இருக்கேன்.. சாப்பிடு காரம் இருக்காது..” என்று தந்தையின் கண்டிப்பான குரலோடு கொஞ்சம் சலிப்பும் அதில் சேர்ந்து கேட்க…
அவ்வளவு பசியில் தான் வேக வைத்த பருப்பு சாதத்தோடு நான்கு அப்பளமும் பொறித்து சாப்பிட தட்டில் போட்டு கொண்டு வந்தவளுக்கு, இந்த பேச்சு வார்த்தையில் சாப்பிட மனதே வரவில்லை..
இவர் சமைத்தாரா..? காரம் அதிகம் போட்டு விட்டாரா…? அவளே சமையலில் இப்போது தான் ப்ரிகேஜியில் இருக்கிறாள்.. யூட்யூப் புன்னியத்தில் தான் அவள் வயிறு வாடாது போகும் என்ற நம்பிக்கையில் அனைத்து சமையல் பொருட்களோடு ஜார்டனில் வந்து இறங்கி விட்டாள்..
அவள் சமையல் ருசி இல்லையோ…? இருக்கோ…? ஆனால் காரம் இல்லை.. ஒரு வாய் சாப்பிட்டு ருசி பார்த்தவள்.. அடுத்த வாய் சாப்பிடாது ஒரு சின்ன கிண்ணத்தில் பருப்பு சாதத்தையும் அப்பளத்தையும் எடுத்து கொண்டவள் எதிர் அறையின் காலிங் பெல்லை அழுத்தினாள்..
உள் இருந்து.. தீக்க்ஷயனிடம் இருந்து . “வாடா..” என்ற அழைப்பு வர. வர்ஷினி தயங்கி கொண்டே தான் அவன் அறைக்கு சென்றது.. செல்வது சரியா..? தவறா…? என்பது அவளுக்கு தெரியவில்லை..
ஆனால் குழந்தை சாப்பிடாது அவளாள் சாப்பிட முடியவில்லை.. அதன் தொட்டு தான் எதையும் யோசிக்காது இதோ தீக்க்ஷ்யன் முன் வந்து நின்று விட்டாள்..
கெளதம் என்று நினைத்து தான் தீக்க்ஷயன் வா என்று அழைத்து விட்டான். ஆனால் சத்தியமாக வர்ஷினியை தன் அறையில் எதிர் பார்க்கவில்லை..
தன் அதிர்ச்சியை மறைத்து கொண்டு. .. “வா…” என்றழைக்க..
“ம்..” என்று மட்டும் சொன்னவளின் குரலில் சட்டென்று தீரா..
“ம்மா..” என்று அழைத்தவள் சடுதியில் அப்பாவின் பிடியில் இருந்து தப்பித்து வர்ஷினியின் காலை கெட்டியாக பிடித்து கொண்ட குழந்தை..
“ம்மா பூவா ஊ ஊ..” என்று.. சொன்னவள்..
“எனக்கு வேண்டாம் ம்மா..” என்று சொல்ல..
அதற்க்கு வர்ஷினி.. “சரி அது வேண்டாம்.. இது சாப்பிடுறியா…?” தன் கையில் இருந்த கிண்ணத்தை குழந்தையிடம் காட்டி கேட்டாள்..
உடனே குழதையின் கண்கள் மின்ன.. “ம் ம்..” என்று மகிழ்ச்சியோடு தலையாட்டினாள்..
வர்ஷினியிடம் சம்பிரதாயத்திற்க்கு கூட தீக்க்ஷயனால்.. நீங்க ஏன் சாப்பாடு கொடுக்கிறிங்க என்று சொல்ல முடியவில்லை..காரணம் இந்த ஆறு மாத காலத்தில் குழந்தையின் எடை மூன்று கிலோ குறைந்து விட்டது..காரணம் உணவு என்பது அவனுக்கு தெரியும்..
கெளதம் மனைவி இந்த உணவு குழந்தைக்கு கொடுப்பதே பெரிய விசயம்.. இதில் காரம் போட வேண்டாம் என்று எப்படி சொல்லுவான்..
அதோடு ஒரு நாள் கெளதம் பேச்சு வாக்கில்.. “என் மனைவிக்கு சென்னையில் இருக்கும் ஒட்டலில் சாப்பிடவே பிடிக்கவில்லை..சென்னையில் இருக்கிறவங்க எல்லாம் நாக்கு செத்தவங்கலா இருக்காங்க.. உப்பும் இல்ல.. காரமும் இல்லாது என்ன சாப்பாடு என்று தான் குறை சொல்லுவா.” என்று சொன்னது தீக்க்ஷயனுக்கு நியாபகத்தில் இருந்தது.. அவர்கள் தோது பட தானே சமைப்பார்கள் என்று..
அவர்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவில் இவன் எவ்வளவு நெய்யை ஊற்றினாலுமே, காரம் குறைய காணும்.. இவன் வாயிக்கே அந்த உணவு காரமாக தான் தெரிந்தது.
அப்படி இருக்க.. குழந்தைக்கு எப்படி இருக்கும்.. இவனுக்கு சமையலில் ஏ.. பி சி டி கூட தெரியாது..
இங்கு வந்து தான் பால் காபி கலக்கவே கற்றுக் கொண்டது… நம் பிரச்சனையில் குழந்தையை கஷ்டப்படுத்துகிறோமோ.. என்ற எண்ணம் தான் சமீபகாலமாக..
அதில் மீண்டும் இந்தியாவுக்கே சென்று விடலாமா..? என்று யோசிக்கும் போதே அங்கு நடந்த.. இனி நடக்கும் பிரச்சனை தான் நியாபகத்தில் வந்தது…
இங்கும் இருக்க முடியாது.. அங்கும் செல்ல முடியாது இருந்த சமயம் தான் அவனுக்கு வரம் கொடுக்கும் தேவதையாக வர்ஷினி அங்கு வந்தது.
ஆம் தீக்க்ஷயனை பொறுத்த வரை வர்ஷினி குழந்தைக்கு மட்டும் அல்லாது, அவனுக்குமே வரம் தந்த ஒரு தேவதை தான்..
ஆறு மாதம் முன் இந்தியா சென்று விடலாமா..? என்று யோசித்தவனுக்கு இந்தியா போக தான் வேண்டுமா.. என்று தீக்க்ஷயனை நினைக்க வைத்து விட்டாள் அவனின் தேவதை வர்ஷினி.
முதல் நாள்… அப்படி சமத்தாக தன் குழந்தை வர்ஷினியிடம் சாதத்தை வாயை திறந்து வாங்கும் ஒவ்வொரு கவலத்திற்க்கும் ஒரு தந்தையாக தீக்க்ஷயனின் மனது நொந்து போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..
எத்தனை சம்பாத்தியம்.. இவனுக்கே மாதம் அத்தனை லட்சங்கள் அவன் வங்கி கணக்கில் சம்பளமாக வந்து விழுகின்றது..
இதில் தனக்கு என்று தந்தையின் பங்காக வந்த ஜவுளிக்கடையை இப்போது இவன் தந்தையே கவனித்து கொள்ள. அதில் வரும் லாபத்தை இவனின் தந்தை மிக சரியாக இவன் வங்கியில் போட்டு விடுவார்.
இதில் இவன் வாங்கி போட்ட இரண்டு லக்ஸரி ப்ளாட்டில் குடியிருப்போர். மாதம் மாதம் இவன் கணக்கில் போட்டு விடும் வாடகை . பணம் என்று எல்லாம் சேர்ந்து அதற்க்கு வட்டி வட்டிக்கு குட்டி என்று வங்கி கணக்கில் இருக்க தன் குழந்தைக்கு சரியாக ஒரு உணவை கொடுக்க முடியாது.. அத்தனை பணம் இருந்து என்ன பிரயோசனம்..
அந்த பணத்தால் இவனுக்கு ஒரு பிரயோசனமும் கிடையாது தான்…இன்னும் கேட்டால் அந்த பணத்தால் தான் இவனுக்கு பிரச்சனையே… இவனின் பேச்சை இவன் தந்தையும் கேட்பது இல்லை..
யாரும் கேட்காத போது.. யாருமே வேண்டாம் என்று குடும்பத்தில் வரும் பேச்சை தவிர்க்க குறிப்பாக இவன் அண்ணியின் பேச்சு காதில் விழாத தூரம் வந்தால் போதும் என்று தான் குழந்தையோடு இங்கு வந்து விட்டது. பின் சென்றால் திரும்ப பழைய பிரச்சனை தான் வரும்.. இதற்க்கு ஒரு தீர்வு கிட்டாது எப்படி செல்வது..
இந்தியாவிற்க்கு சென்று தனி வீட்டிற்க்கு சென்று சமையலுக்கு ஆளை வைத்து பார்த்து கொள்ளலாமா… என்று திட்டம் கூட போட்டு விட்டான்..
அதை ஒரு நாள் பேசியில் சொல்லியும் விட… அவ்வளவு தான்… அவனின் அம்மா “உன் குழந்தைக்கு தான் அம்மா இல்ல உனக்கும் இல்ல என்று நீ முடிவு செய்து விட்டியா..? என்று அத்தனை பேச்சு..
அவர் பேச்சோடு நிறுத்தி இருந்தால் கூட கண்டு இருந்து மாட்டான்.. ஆனால் அழுகை.. தாய் அழுகை ஒரு நல்ல ஆண்மகனுக்கு எத்தனை வயதானாலும் பார்க்க முடியாது.. இவனாலுமே அன்னையின் அழுகை மீறி தனித்து ஒரு முடிவை எடுக்க முடியாத சமயம் தான்..
ஜார்டன் அனைத்துமே சரி.. கெளதமுக்கு குழந்தை இல்லை. அதனல் அவன் மனைவி குழந்தையை பகலில் பார்த்து கொள்வாள்..
இவர்கள் வேலை செய்யும் இடம் இங்கு இருந்து நடக்கும் தூரம் தான். அதனால் தீக்க்ஷயனும் குழந்தையை அவ்வப்போது வந்து பார்த்து கொள்வதால் பிரச்சனை இல்லை..சாப்பாடு மட்டும் குழந்தைக்கு பிடித்த மாதிரி இருந்து விட்டால், போதும் என்ற சமயம் அந்த குறைய தீர்த்து விட்டாள் வர்ஷினி..
அதன் அடுத்து குழந்தைக்கு மட்டும் அல்லாது தீக்ஷயனுக்குமே சேர்த்து தான் வர்ஷினி சமைத்தது..முதலில் வேண்டாம் என்று மறுத்தவன் பின் ஏற்று கொண்டான்..
உணவு தன் அம்மா சமையலை போல் அவ்வளவு சுவை இல்லை தான்.. அவளின் அந்த சமையலில் தீக்க்ஷயன் புரிந்து கொண்டது.. அவளுமே யூட்யூப் மூலம் தான் சமைக்கிறாள் என்று.
ஆரம்பம் தான் வர்ஷினியின் சமையல் சுமார் ரகமாக இருந்தது .. போக போக. தீக்க்ஷயன் டிபன் பாக்ஸையோ வர்ஷினி டிபன் பாக்ஸ் திறந்தாலோ..
வர்ஷினியிடம் மற்ற பெண்கள்.. ஸ்மெல்லே சூப்பரா இருக்கு…?” என்று சொல்லி சமையல் குறிப்பை கேட்டு கொண்டனர்… அந்த அளவுக்கு முன்னேறி விட்டாள்.. இந்த ஆறு மாதத்தில்..
ஆம் வர்ஷினி ஜார்டன் வந்து ஆறு மாதம் கடந்து விட்டது.. வந்த போது இருந்த பயம் இப்போது அவளுக்கு இல்லை..
அவ்வப்போது அன்னை தந்தை இவர்களின் நியாபகம் வந்து விட்டால், மட்டும் கொஞ்சம் மனது ஒரு மாதிரியாக இருக்கும்.. அந்த சமயத்தை தீராவின் துணைக் கொண்டு தீர்த்து கொண்டாள்..
அதோடு தன் வங்கி கணக்கில் ஏறும் பணம்.. இந்தியாவில் வீடு விற்றது அப்பாவின் செட்டில்மெண்ட் பணம் அனைத்துமே டெப்பாசிட் செய்தது.. அதன் இன்ரஸ்ட். இங்கு சம்பாதித்ததையும் சேர்த்து இந்தியாவில் எதில் இன்வெஸ்ட் செய்யலாம்.. என்று வரை யோசித்து வைத்து இருந்தாள்..
அதன் படி அதாவது பொருளாதரம் படி வர்ஷினி இப்போது ஒரு முடிவுக்கு வந்து தெளிவாக திட்டம் இட ஆரம்பித்து விட்டாள்.. அது எல்லாம் சரி தான்..
ஆனால் ஆனால் சமீபகாலமாக தன் மனம் ஆறுதலுக்கு தீராவோடு மனது தீக்க்ஷயனையுமே தேடுதோ என்ற பயம் பெண்ணவளுக்கு புதியதாக வர தொடங்கி விட்டது..
என்ன இது புது பிரச்சனை…? இது எப்படி சாத்தியம் ஆகும் என்பதை விட.. இது எப்படி நடக்கும்.. அதோடு அம்மா அப்பா இல்லாத இந்த என் தனிமை மனது தறிகெட்டு அலைக்கிறதோ.. என்று நினைத்த நொடி..
இல்ல இல்ல அப்படி இல்ல.. அப்படி என் மனது அலைபாயுது என்றால், தன் மனது சுகனை தான் தேடி இருக்க வேண்டும்.. நான் மோசமாக பெண் எல்லாம் கிடையாது..
தன்னையே குற்றவாளி கூண்டில் நிற்க வைத்தவள்.. அவளுக்கு அவளே வாதாடியும் கொண்டாள்…
சுகன்.. அவனுமே இந்தியாவில் இருந்து இவர்கள் ஐடி நிறுவனம் இங்கு அனுப்பி வைத்தவன்.. தான் என்ன ஒன்று பூனேவில் இருந்து வந்து இருக்கும் தமிழ் பையன்..
ஆனால் வேலையில் தன் கிரேட் இல்லாது தீக்ஷயன் கிரேடில் இருப்பவன் தான்.. கெளதம் தீக்ஷயன் சுகன்.. நட்பாக தான் இருக்கிறார்கள்.. ஆனால் ஒரு மாதமாக அந்த சுகனின் பார்வை தன் மீது ஆவளாக படுகிறதோ என்ற யோசனை இவளுக்கு..
ஆம் உன்னை அவன் பார்க்கிறான் தான்.. என்று அதை உறுதியும் செய்து விட்டாள் வித்யா..இப்போது தான் என்ன செய்வது என்ற புதிய குழப்பம்..
இது போல பார்வை எல்லாம் அவளுக்கு புதியது கிடையாது.. அழகான பெண்ணவள்.. படிக்கும் காலத்தில் இருந்து இந்த ஆர்வ பார்வையை கடந்து வந்து இருக்கிறாள் தான்..
ஒரு சிலர் பார்வையோடு நிறுத்திக் கொள்வர்.. ஒரு சிலர் அவளிடம் தன் விருப்பத்தை தெரிவித்தும் உள்ளனர்..
வர்ஷினி ஒரே வார்த்தையி… “நோ இன்ரெஸ்ட்..” என்று அதை எல்லாம் கடந்து விடுவாள்..இதை எல்லாம் நினைத்து தன் மனதை குழப்பிக் கொள்ள மாட்டாள்..
ஆனால் இப்போது அது போல சுகனின் பார்வையை சாதாரணமா எடுத்து கொள்ள முடியவில்லை..
காரணம்.. அப்போது அவள் பெற்றோர் அரவணைப்பில் பாதுகாப்பாக இருந்த பெண்.. எது என்றாலும் அவர்கள் பார்த்து கொள்வார்கள் என்ற தைரியம் இருந்தது.
ஆனால் இப்போது தனித்து இருக்கும் இப்போது. இதனால் தனக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்று பலதும் யோசிக்கும் படி உள்ளது..
அவளின் அடுத்த பிரச்சனை தீக்க்ஷயன்.. தீக்க்ஷயன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு தான் தன்னை பார்க்கிறான். சில சமயம் தன்னை பார்த்து கொண்டு ஏதோ தீக்க்ஷயனிடம் பேசுகிறான்.. அந்த பேச்சு தன்னை பற்றியதோ என்ற சந்தேகம் அவளுக்கு.
அதோடு இதனால் தீக்க்ஷயன் தன்னை தவறாக நினைத்து கொண்டாள்.. அந்த பயம் தான் அவள் அவளாக இல்லாது பரிதவித்து போய் விடுகிறாள்.. எங்கு தீக்க்ஷயன் தன்னை தப்பாக நினைத்து கொள்வானோ என்று..
இவள் நினைத்தது போல் தான் இந்த விசயத்தை தான் தீக்ஷ்யனிடம் கெளதம் பேசிக் கொண்டு இருந்தான்.. ஆனால் தவறாக எல்லாம் கிடையாது..
இது போலவே இருந்தா நீ அவளை தவற விட்டு விடுவே என்று..
ஆம் தீக்க்ஷயனின் மனதிலும் வர்ஷினி வந்து வெகு நாட்கள் ஆகி விட்டது.. முதலில் தன் குழந்தையோடு அவளை கவனிக்க ஆரம்பித்தவன் பின் அவளுக்காகவே கவனிக்க ஆரம்பித்தான்..
முதலில் அவளிடம் அவன் கவனித்த விசயம். வீக் என்டில் அனைவரும் வெளியில் போக. இவள் மட்டும் ஏதாவது காரணம் சொல்லி வருவதை தவிர்த்து விடுவது தான்.
முதலில் பெற்றோர்கள் இழப்பு அதனால் என்று தான் அவனும் நினைத்தது.. அதன் பின் தான் அனைத்திற்க்குமே பார்த்து பார்த்து செலவு செய்யும் அவள் செய்கையில், ஏன் இவள் இப்படி இருக்கிறாள் என்று யோசித்தவனுக்கு.
அவன் அன்னை சொன்ன.. “ ஒரு அண்ணன் அக்கா இருந்து என்னடா பிரயோசனம். என் தங்கை நகை வேண்டாம் எதுவும் வேண்டாம்.. நீங்க முன் நிற்பிங்கலா என்று மட்டும் தான் டா கேட்டா.. ஆனா அதுக்கும் இவங்க நிற்க மாட்டாங்களா.. இதுங்க எல்லாம் என்ன கூட பிறந்ததவங்கலோ… ” என்று அவன் அன்னை சொன்ன போது அப்போது தன் விசயம் தான் அவனுக்கு நியாபகம் வந்தது..
அது கொடுத்த தாக்கத்தில்.. ‘உங்க பொண்ணும் மட்டும் என்னவாம் ..?” என்று கேட்க தொண்டை வரை வார்த்தை வந்து விட்டது தான்.. ஆனால் கேட்கவில்லை..
ஒன்று கேட்டால், அது எங்கு போய் முடியும் என்று தெரிந்ததினால் இவன் தான் பேச்சை மாற்றி விட்டான்..
ஆனால் இப்போது வர்ஷினியின் செயல்களின் மூலம் பெரியதாக பெண் மனம் அடி வாங்கி இருக்கிறது என்பதை அதே போன்று அடிவாங்கிய உள்ளம் கண்டு கொண்டு விட்டது..
அதில் இவனுமே மற்றவர்களோடு வெளியில் போவதை தவிர்த்தான்.. காரணமாக தன் குழந்தையை முன் நிறுத்தினான்.
அதுவும் ஒரு காரணம் தான்.. “நாளை அவுட்டிங்..” என்று சொன்னாலே தீராவின் முதல் கேள்வி.
“ம்மாவும் வராங்கலா.?” என்பது தான்..
“இல்லேடா ம்மா வரல. நாம மட்டும் தான் போறோம்..” என்று சொல்லும் போது தான்.. தீக்க்ஷயன் முதன் முதலாக தன் மனதையே அவன் புரிந்துக் கொண்டது.
புரிந்து கொண்டதில் தம்பிக்கு நிச்சயம் செய்த பெண் திருமணம் வரை வந்தவள்.. என்ற எண்ணம் எல்லாம் அவனுக்கு கிடையாது.
அவன் எண்ணமே. வர்ஷினிக்கு என்ன குறை..? ‘ரெடிமேடாக ஒரு குழந்தை இருக்கும் என்னை திருமணம் செய்து கொள்ள…?’ இதை தான் நினைத்து தன் மனதை வர்ஷினியிடம் காட்டாது இருக்க காரணம்..
அதோடு தான் ஏதாவது சொல்ல போய் இப்போது பேசிக் கொண்டு இருப்பதும் பேசாது விட்டு விட்டால்.. இப்படி பலதும் யோசித்தாலும்.. அடுத்து அவளை இன்னுமே தன் பாதுகாப்பு வளையத்திற்க்குள் நிற்க வைத்து கொண்டான்..
அதாவது பனி பெய்யும் பொழுதில் அவள் கடைக்கு செல்ல விடாது அனைத்துமே அவன் வாங்கி கொண்டு வந்து விடுவான்..
அதோடு அதில் முக்கால் வாசி செலவு என்னுடையது தான் என்று பணத்தையும் வாங்கி கொள்ள மாட்டான்.. காரணம் எங்களுக்கும் சேர்த்து தானே நீ சமைப்பது என்று சொல்லி விடுவான்..
வர்ஷினி.. “குழந்தை சாப்பாட்டிற்க்கு எல்லாம் நீங்க கணக்கு பார்ப்பிங்கலா..?” என்று கேட்டாலுமே.
“நானும் உனக்கு குழந்தையா என்ன.?” என்று தீக்க்ஷயன் இந்த வார்த்தை கேட்கும் போது மட்டும் அவன் குரல் அப்படியே மாறி போய் விடும்.. அவன் மனது ஏங்கியது தன் குழந்தையை போல அவள் தன்னை கொஞ்ச மாட்டாளா..? என்று.
அவன் மனது ஒரு நல்ல நண்பனாக கண்டு கொண்ட கெளதம் தான்.. கடந்த இரண்டு வாரங்களாக…
“வர்ஷினி கிட்ட சொல்லிடு தீக்க்ஷயா..அப்புறம் மிஸ் செய்து விட்டோம் என்று நீ தான் கஷ்டப்படுவ. அந்த சுகன் வேறு சும்மா சும்மா அந்த பொண்ணை லுக் விட்டுட்டு இருக்கான்.. இதுல நீ உன் சொந்தக்கார பெண் என்று அவனுக்கு நீ எல்ப் பண்ணனும் என்று உன் கிட்ட வந்து நிற்கிறான்.. நீயுமே பார்க்கலாம் பார்க்கலாம் என்று சொல்லுற என்ன நினச்சிட்டு இருக்க தீக்க்ஷா…?”
ஒரு நல்ல நண்பனாக தீக்க்ஷயனின் எதிர்கால வாழ்க்கை வர்ஷினியோடு அமைந்து விடாதா..? வர்ஷினியோடாவது நண்பனின் வாழ்க்கை சுக படாதா.?” என்ற ஆசையில்.. தன் நண்பனிடம் சண்டை பிடித்து கொண்டு இருந்தான்..
 
Active member
Joined
May 11, 2024
Messages
123
அருமை 👌👌👌வர்ஷினியிடம் தன் நேசத்தை வெளிப்படுத்திவானா 🤔🤔🤔🌺🌺🌺
 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
🤩🤩 இரண்டு பேரும் பூவா தலையா போட்டு பார்த்துக்கிட்டு இருங்க 🤭 🤭 🤭 அந்த சுகன் நடுவில் புகுந்து குழப்பம் பண்ணட்டும்😣😣😣

அடுத்தவர்களுக்கு டிப்ஸ் கொடுக்கிற அளவுக்கு சமையல் சக்கரவர்த்தினி ஆகிட்டா🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

கௌதம் நீதான் ஏதாவது செஞ்சு இரண்டு பேரையும் பேச வைக்கணும் 🤔🤔🤔🤔
 
Last edited:
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் விரும்ப ஆரம்பிச்சுட்டாங்க...... 💓💓💓💓💓💓
தீக்ஷயன் சீக்கிரம் காதலை சொல்லிடு...... 🤗🤗🤗
ரெண்டு பேர் குடும்பத்துக்கு முன்னாடி ஜோடியா போய் நிக்கணும்......... 😍😍😍
 
Active member
Joined
May 11, 2024
Messages
167
வர்ஷினியை யார் பார்த்தா என்ன அவ யாரை பார்க்கறா என்பது தான் முக்கியம்
 
Top