Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam-9

  • Thread Author
அத்தியாயம்….9

தன் அறையில் அமர்ந்திருந்த தீக்க்ஷயனால் நம்பவே முடியவில்லை.. வர்ஷினி தன்னை விரும்புகிறாளா…? விரும்புகிறாளா..? இதையே தான் மீண்டும் மீண்டும் அவன் மனது நினைத்து பார்த்தது..

இது கனவா..? தன் அதிகப்படியான ஆசையினால், அவன் நினைத்து கொண்டானா.. சுகன் தன் எதிரிலேயே.. வர்ஷினியிடம்.. “ நான் உன்னை லவ் பண்றேன் வர்ஷி..” என்று சொன்ன போது அப்போதுமே வர்ஷினியின் பார்வை தன்னை பார்த்ததும்..

அவள் பார்வையை கூட உணர முடியாது எந்த ஒரு காதலனுக்கும் என் நிலை வர கூடாது.. என் எதிரில் என்னை சாட்சியாக வைத்து கொண்டு நான் விரும்பும் பெண்ணிடம் தன் காதலை சொல்கிறான்..

நான் அதை வேடிக்கை பார்த்து நின்று கொண்டு இருக்கிறேன். தன்னை பார்த்த அவளின் அந்த பார்வையில் அவன் தொண்டைக்குழி வரை..

“நான் வர்ஷினியை விரும்புகிறேன்..” என்று சொல்ல வாய் எடுக்கும் வேளயில், தூங்கி கொண்டு இருந்த தீரா கொஞ்சம் சிணுங்க..

குழந்தையை பார்த்தவன் தன் நிலை அப்பட்டமாக தன் கண் முன் வந்து நிற்க ஒரு கைய்யாலாகத தனத்துடன் நான் பார்த்து கொண்டு நிற்க..

வர்ஷினி தன்னையே அதே பார்வை பார்த்து கொண்டு.. சுகனிடம் தூங்கும் குழந்தையை கை காட்டி.. “என்னை அம்மா என்று கூப்பிடும் தீராவுக்கு நான் என் வாழ் நாள் முழுவதுமே அம்மாவா இருக்க விரும்புகிறேன்.. என்ன புரியலையா… நான் தீனாவை தான் விரும்புகிறேன்..” என்று சொன்னது கனவா நினைவா..?

கனவு இல்லை நினைவு தான் என்று தன் முன் அமர்ந்திருந்த கெளதமனின் ஆர்ப்பட்டானமான சிரிப்பும் பேச்சும் அவனுக்கு தெரிவித்தது..

“யப்பா இப்போ தான்டா நான் நிம்மதியா இருக்கேன்.. ஆனாலுமே ஒரு பெண் உன்னை விரும்புகிறேன் என்று அப்படி தைரியமா சொல்றா.. அப்போ கூட நீ ஒன்னும் சொல்லலே பாரு.. “ என்று கோபமாக பேசியவன்..

பின் கிண்டலாக. “இனி அடுத்த ஸ்டெப் எல்லாம் நீ தான்டா எடுத்து வைக்கனும்.. அதுவுமே அந்த பெண் என்றால், ஆம்பிளை இனத்துக்கே கேவலம் டா.” என்று மன மகிழ்ச்சியில் என்ன பேசுகிறோம் என்று தெரியாது ஆர்ப்பட்டமாக சிரித்தும் சத்தமாகவும் பேசிக் கொண்டு இருந்தான்..

இதே குழந்தை இந்த அறையில் உறங்கி இருந்தால், கெளதம் இப்படி சத்தம் போட்டு பேசி இருப்பானோ என்னவோ… தீக்க்ஷயனை விரும்புவதை அவனிடம் சொல்லாது சுகனிடம் தீக்க்ஷயனை பார்த்தே சொன்னவள்..

ஒரு வித கோபத்துடன் விறு விறு என்று தீக்க்ஷயன் அருகில் வந்தவள் அவன் அருகில் உறங்கி கொண்டு இருந்த இருந்த தீராவை தூக்கி கொண்டாள்..

நான்கு வயது ஆக போகும் குழந்தை அந்த குழந்தைக்கு உண்டான எடையில், அதுவும் வர்ஷினியின் உணவில் முதல் இருந்த அந்த மெலிவு கூட இல்லாது இப்போது நன்றாகவே எடை கூடி இருந்த குழந்தையை தூக்க முடியாது தான் தூக்கிக் கொண்டது..

அதில் அவள் நிலை தடுமாறும் போது பிடிக்க வந்த தீக்க்ஷயனை தீ பார்வை பார்த்தவள் குழந்தையை தூக்கி கொண்டு அவள் அறைக்குள் சென்று விட்டாள்..

அதன் பின் தான் தீக்ஷயனும் கெளதமும் இவன் அறைக்கு வந்தது..

நம்ப முடியாது இருந்தவனை கெளதம் கிண்டல் செய்த பின்.. “பேசுடா தீக்க்ஷா அந்த பெண் கிட்ட பேசு..” என்று கெளதம் சொன்ன போது தீக்க்ஷயன் தன் கை கடிகாரத்தில் நேரத்தை பார்க்க முயன்றான்.

அதை பார்க்க விடாது தன் கை கொண்டு மறைத்த கெளதம். “தீக்க்ஷா வர்ஷினி இன்னும் தூங்கி இருக்க மாட்டா. போய் பேசு..” என்று சொல்லியும் மறுப்பாக தான் தீக்க்ஷயன் தலையாட்டியது..

இப்போது கெளதமுக்கு கோபம் வந்து விட்டது.. “இப்போ உன் பிரச்சனை தான் என்ன டா சொல்லி தொல…” முன் இருந்த கேலி கிண்டல் கெளதமிடம் இப்போது இல்லை..

கெளதமனின் கோபத்தில் சொல்ல தொடங்கினனா..? இல்லை தீக்க்ஷா தன்னை திருமணம் செய்து கொண்டாள். இந்த பிரச்சனைகளை எல்லாம் எதிர் கொள்ள வேண்டி இருக்கும் என்று தனக்கு தானே சொல்லி கொண்டானோ.. தெரியவில்லை..

“எனக்கு வர்ஷியை பிடித்து இருக்கு அவளுக்கும் என்னை பிடித்து இருக்கு…” என்று சொன்னவனை புதுசா ஏதாவது சொல்லேன்டா என்பது போன்ற பார்வையை தான் கெளதம் தீக்க்ஷயனை பார்த்தது..

“எங்க இரண்டு பேருக்கு பிடிச்சா மட்டும் போதுமா.. அவள் சந்தோஷமா இருக்க வேண்டாமா…?” என்று கேட்க.

கெளதம் குழப்பமான முக பாவனையோடு தீக்ஷயனை பார்த்திருந்தான்..

“தீராவோட அம்மா என் தாய் மாமன் மகள் தான்..” என்றதுமே கெளதமிடம் மீண்டும் என்ன டா இது எனக்கு தெரிந்ததையே சொல்லிட்டு இருக்கான்.

“ஏன்டா நானும் தானேடா உன் அந்த கல்யாணத்திற்க்கு வந்தேன்.. பெண் என்ன டா இவ்வளவு ஒல்லியா இருக்கா என்று கூட கேட்டேனடா..?” என்று சலிப்பது போல் தான் சொன்னது.

“ம் நியாபகம் இருக்கு.” என்று சொன்ன தீக்க்ஷயம் தொடர்ந்து.

“இப்போ நான் வசியை கல்யாணம் செய்து கொண்டா.. அந்த வீட்டில் அவளை நிம்மதியா இருக்க விடுவாங்க என்று நீ நினைக்கிறியா டா…?” என்று தன் மனதில் இருக்கும் பயத்தை வெளியிட்டான் தீக்க்ஷயன்..

கெளதமுக்கோ.. இது தான் உன் பிரச்சனையா என்ன டா இது சின்ன பிள்ளை போல யோசிக்கிற.. முப்பத்தி மூன்று வயசு ஆகுதுடா உனக்கு இத்தனை பேருக்கு மேல் அதிகாரியா வேலை வாங்கிட்டு இருக்க.. இது எல்லாம் ஒரு விசயமா.. தனிக்குடித்தனம் போயிடு.. அவ்வளவு தான் பிரப்லம் சால்வ்ட்..” என்று விட்டான்..

ஆனால் தீக்ஷயன் அதற்க்கு வீட்டில் விட மாட்டார்கள்.. என்று சொல்ல..

கெளதமோ.. “ஏன்டா சின்ன குழந்தையை இப்படி வெளி நாட்டில் உன்னோட அனுப்பி இருக்காங்க உங்க வீட்டில்.. தனியா இங்கு நீ என்ன செய்வ என்று யோசிக்கல.. ஆனா தனி குடித்தினத்துக்கு விட மாட்டாங்கலா. இது என்ன டா நியாயம்..?”

கெளதம் கேட்டது நியாயமான கேள்வி தான். ஆனால் இந்த நியாயம் அநியாயம் எல்லாம் ஆளுக்கு ஆள் மாறுப்படும் என்பதும்.. சூழலுக்கு ஏற்றது போல எடுத்துக் கொள்ளப்படும் என்பதும் பாவம் கெளதமுக்கு புரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் வாழ்க்கையில் அடிப்பட்ட தீக்க்ஷயனுக்கு புரிந்ததினால் தான் அவனுக்கு பயமே..

“உனக்கே தெரியும்.. என் தங்கை என் மாமா பையன் ராஜேஷை விரும்பியது.. அவள் லவ் சக்ஸஸ் ஆக என்னை அதுக்கு பலியா அக்கினது..”

ஆம் தீக்க்ஷயன் கெளதமிடம் சொன்னது உண்மை தான்.. தீக்க்ஷயனுக்கு ஒரு அண்ணன் ஒரு தங்கை.. அவனின் அப்பா தட்சணா மூர்த்தி இரண்டு டெக்ஸ்டைல்ஸ் வைத்து நடத்திக் கொண்டு இருந்தார்..அம்மா இல்லத்தரசி…

எந்த பிரச்சனையும் சொல்ல முடியாத அளவுக்கு வசதியான குடும்பம் தான்.. மூத்த மகன் மகேந்திரனுக்கு அத்தை மகள் ஸ்வேதாவை தான் திருமணம் செய்து வைத்தது.

இதுவுமே ஒரு காதல் திருமணம் தான் ஸ்வேதாவுக்கு வெளியில் மாப்பிள்ளை தேடும் போது ஸ்வேதா தான்..

“நான் நம்ம அத்தை மகன் மகி அத்தானை கல்யாணம் செய்து கொள்கிறேன்.” என்று ஸ்வேதா அவள் வீட்டில் பேச..

மகேந்திரன் இங்கு தன் அன்னையின் மூலம் காய் நகர்ந்தி திருமணம் செய்து கொண்டனர்.. மகேந்திரன் வெளியில் எல்லாம் வேலை செய்யவில்லை.

அவன் திருமணத்தின் போது தங்கள் டெக்ஸ்டைசில் ஒன்றை பார்த்து கொண்டு இருந்தான்.

ஸ்வேதா வீட்டில் அது தான் பிரச்சனையே.. படிப்பு அவ்வளவு இல்லை.. குடும்ப சொத்தை மட்டுமே நம்பி இருக்கான் என்று.ஆனால் ஸ்வேதாவுக்கு திருமணத்திற்க்கு முன் இந்த குறை எல்லாம் பெரியதாக தெரியவில்லை.. அதனால் திருமணம் முடிந்தது.. அடுத்த வருடத்தில் ஒரு பெண் குழந்தை ஸ்ருதி பிறந்தாள்..

இவன் வீட்டில் அடுத்த காதலாக இவனின் தங்கை சுப்ரியா மாமா மகன் ராஜேஷை கை காட்டினாள்..

ராஜேஷுக்கு நல்ல வேலை.. நல்ல பையன்.. சொந்தம்.. அதனால் எந்த வித பிரச்சனையும் இல்லை என்று திருமணம் செய்ய ஒத்து கொண்டு விட்டனர்..

ஆனால் ராஜேஷ் வீட்டில் சுப்ரியாவை மருமகளாக ஏற்றுக் கொள்ள ஒரு கன்டிஷன் போட்டார்கள்.. அது தான் ராஜேஷின் தங்கை பவித்ராவை தீக்க்ஷயனுக்கு திருமணம் செய்ய ஒத்து கொண்டால், இரண்டு திருமணமும் ஒன்றாக முடித்து விடலாம் என்று.

இந்த கன்டிஷனில் ஆரம்பத்தில் தீக்க்ஷயன் வீட்டில் அதிர்ச்சியாகினர் தான்.. “அந்த பெண்ணுக்கு உடம்பு ஒன்னும் அவ்வளவு சுகம் இல்லையே சரசு..” தட்சணா மூர்த்தி மனைவியிடம் சொல்ல..

சரஸ்வதிக்கே தன் அண்ணன் பிள்ளைகளை பற்றி தெரியாதா.? தன் மகனின் உயரம்.. உடல் வலிமை..தேகக்கட்டு என்று இருக்க.. தன் மகன் பக்கத்தில் பவித்ராவை நிற்க வைத்து பார்க்க கூட ஒரு தாயாக அவரால் முடியவில்லை..

தீக்க்ஷயன் காதிலும் இந்த விசயம் எட்டியது தான்.. ஆனால் அதை அவன் பெரியதாக எடுத்து கொள்ளவில்லை… வீட்டில் ஒத்து கொள்ள மாட்டார்கள் என்று நம்பினான்..

ஆனால் அந்த நம்பிக்கையை சுப்ரியா தன் கையை அறுத்து கொண்டு தற்கொலை முயற்சி செய்ததில் ஆட்டம் கண்டு விட்டது..

நான் அவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லாது செயலில் காட்டி விட்டாள்.. அவள் காதலுக்கு அவள் போராடினாள்.. அது தப்பு கிடையாது.. ஆனால் தன் காதலுக்கு தன் அண்ணனின் வாழ்க்கையை பலியாக்கி பெரும் தவறினை செய்து விட்டாள் தீக்ஷயனின் தங்கை சுப்ரியா…

மீண்டும் திருமண பேச்சு பேசப்பட்டது… இந்த முறை தீக்க்ஷயன் பலமாக எதிர்த்தான்.. மற்றவர்கள் எதிர்க்காத காரணத்தினால்,

சரஸ்வதி.. “பவித்ராவுக்கு உடம்பு சரியில்லாது அது எல்லாம் சின்ன வயசுலடா.. இப்போ எல்லாம் சரியாகிடுச்சி என் அண்ணி அண்ணன்.. ஏன் உன் தங்கை கூட சொல்றா.. நீயே கேட்டு பாரு.. ஒல்லியா இருக்கா என்று நினைக்கிறியா..? நம்ம வீட்டுக்கு வந்த பின்னே.. என் சமையலில் எப்படி என் மருமக உடம்பை தேத்தி விடுறேன் என்று நீயே பாரேன்..”

மகளின் தற்கொலை முயற்சியை பார்த்தும். தன் அண்ணன் அண்ணி பவித்ரா உடலுக்கு இப்போது ஒன்றும் இல்லை.. உங்களுக்கு சந்தேகம் என்றால் நீங்களே டாக்டர் கிட்ட விசாரித்து கொள்ளுங்களேன்..” என்று சரஸ்வதி அண்ணியின் பேச்சில் சரஸ்வதி முழுவதுமாக விழுந்து விட்டாள்..

தீக்க்ஷயன் தந்தையுமே மகளின் தற்கொலையில் பயந்து விட்டார்..

அதில் தீக்க்ஷயனிடம்.. “நீ யாரையாவது விரும்புறியா..?” என்று கேட்ட தந்தைக்கு தீக்க்ஷயன் இல்லை என்று தான் சொன்னது..

உண்மையில் இல்லை தான்.. அந்த வீட்டில் பிறந்த இருவருக்கும் சுட்டு போட்டாலுமே படிப்பு வரவில்லை.. ஆனால் அவர்கள் இருவரையும் சேர்த்தோ என்னவோ தீக்ஷயனுக்கு அப்படி ஒரு படிப்பு..

அனைத்துமே காலர்ஷீப்பில் படிக்கும் அளவுக்கு நல்ல மதிப்பெண்கள் பெற்று தான் அடுத்த அடுத்த படிப்புக்கு சென்றது..

அவனின் கல்வி தகுதி.. B.E .. MBA… PHD.. படித்து முடித்த உடனே ஒரு புகழ்பெற்ற ஐடி கம்பெனி தேடி வந்து வேலை கொடுக்கும் அளவுக்கு தகுதி இருந்தது அவனிடம்..

இதன் இடையில் காதல் என்பது அப்போது அவன் வாழ்க்கையில் நுழையாத சமயம் அது. அதுவும் இருபத்தி ஏழு அப்போது தான் முடிந்து இருந்த சமயமும் அது.

மகனுக்கு காதல் இல்லை என்று தெரிந்ததும்.. தட்சணா மூர்த்தி மகனின் கையை பிடித்து கொண்டவராக..

.”அது தான் அம்மா சொல்றாங்கலே தீக்க்ஷா… இப்போ அந்த பெண்ணுக்கு உடம்புக்கு ஒன்னும் இல்லேன்னு.. அந்த ஒல்லி கூட ஒரு சில பெண்களுக்கு கல்யாணம் ஆன உடன் சதை போட்டு விடும்..” என்று அவன் மிகவும் மதிக்கும் தந்தை கேட்டதுமே அவனால் மறுக்க முடியவில்லை..

ஒத்து கொண்டு விட்டான்.. இதற்க்கு தான் காத்திருந்தது போல் தான் அவனின் தாய் மாமன் வீட்டில் உடனே கல்யாண வேலையில் இறங்கி விட்டனர்..

கல்யாணமும் முடிந்தது.. அன்றோடு அவன் வாழ்க்கையும் முடிந்தது போல் தான் அவன் திருமண வாழ்க்கை போனது..

அதுவும் குறிப்பாக அவனின் தாம்பத்தியம்.. திருமணம் முடிந்து ஒரு வருடம் தான் அவன் மனைவி உயிரோடு இருந்தது.. முதல் திருமண நாள் இரண்டு நாள் முன் தான் அவனின் மனைவி தீராவை பிரசவித்த சமயம் இறந்து போனது.

அன்று அவன் அப்படி ஒரு பேச்சை அந்த மருத்துவரிடம் இருந்து வாங்கி கொண்டது.. இப்போது நினைத்தாலுமே மனது எல்லாம் கூசி போகும்..

கையில் பச்சிளம் குழந்தை… மனைவி இறந்து விட்டாள் என்று செய்தி.. இருபத்தியெட்டே வயதான இளைஞன்.. கேட்க கூடாத வார்த்தைகள் அனைத்துமே கேட்டு கொண்ட நாளும் அது தான்..

“ஏன் சார் நீங்க படிச்சவங்க தானே.. உடம்பு சரியில்லாத பெண்ணுக்கு குழந்தை கொடுத்து இருக்கிங்க.. அந்த உடம்பு ஒரு பிரசவத்த தாங்குமா என்று கூட நீங்க யோசிக்க மாட்டிங்கலா…? ஒரு சேலை கட்டி இருந்தா போதும் பாய்ந்துட வேண்டியது.

தன் முன் இருந்த ரிப்போர்ட்டை காட்டி. “ இதுல தெளிவா போட்டு இருக்கு தாம்பத்தியம் ஒகே தான். ஆனால் குழந்தை என்று வந்தால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று..” அந்த மருத்துவர் பேச பேச.

அவர் முன் இருந்த அந்த மருத்துவ அறிக்கையை கையில் எடுத்தவன் முதல் பக்கத்தை பார்க்க.

அது அவன் மனைவி பவித்ராவின் மருத்துவ அறிக்கை என்று சொன்னது.. ஒவ்வொரு பக்கமாக படித்து கொண்டு கடைசி பக்கத்தை படித்து முடித்தவனுக்கு தெரிந்த விசயம் இது தான்..

பவித்ராவின் இதயம் சிறு வயதில் இருந்தே மிகவும் பலவீனமாக இருந்து வந்ததும்.. அதற்க்கு என்ன தான் வைத்தியம் செய்தாலும் முழுமையாக குணமாகாது இருந்ததுமே..

கல்யாணம் ஒகே தான்.. ஆனால் எந்த அளவுக்கு தாம்பத்திய வாழ்க்கை வாழ்வால் என்பது இப்போதைக்கு சொல்ல முடியாது என்பதும்.. ஆனால் குழந்தை உண்டாகவே கூடாது என்பதும்.. அவ்வளவு தெளிவாக அதில் எழுதி இருந்தது..

அதுவும் கடைசியில் அந்த திருமணம் தாம்பத்தியம் குழந்தை என்ற விசயம் எல்லாம் இவர்கள் திருமணம் ஆன ஆறு மாதம் முன் தான் அந்த அறிக்கையை அந்த மருத்துவர் கொடுத்து இருக்கிறார்..

படிக்க படிக்க மனைவி இழந்த துக்கத்தையும் மீறி அனைவரின் மீதும் அவ்வளவு கோபம் ஆவேசம்.. தான் அவனுக்கு வந்தது..

அதுவும் குழந்தை பாலுக்காக அழ.. என்னோடு இனி என் குழந்தையும் கஷ்டப்பட வேண்டுமே என்ற ஆதங்கமும் கூட எழ..

மனைவியின் பிணம் எடுத்த உடனே தன் மாமன் மாமியிடம் .. அந்த மருத்துவ அறிக்கையை அவர்கள் முன் வீசி.

“இது என்ன ..?” என்று ஆவேசமாக கேட்க..

அதற்க்கு அவன் மாமியின் பதில்.. “ஏன் உங்களுக்கு தெரியல.. நல்லா படித்தவர் தானே… அதுல தான் கல்யாணம் செய்யலாம் என்று இருக்க.. நீங்க தான் என்ன டா மனைவி வீக்கா இருக்காளே என்று கொஞ்சம் லேசு பாசா நடந்து கொள்ளாது அடுத்த வருஷமே ஒரு குழந்தையை கொடுத்துட்டு என் மகளை கொன்னுட்டிங்க…”

அவன் மாமியாரின் இந்த பேச்சில் அவன் அன்னை தந்தை ஏன் அவனின் அண்ணன் மகேந்திரன் கூட.

“என்ன பேசுறிங்க.. ஏமாத்தினவங்களுக்கு பேசவே தகுதி இல்லை என்பது போல்.. இவன் வீட்டவர்கள் பேச.

அதற்க்கு அதே தான் நாங்களும் சொல்றோம்..”உங்க வீட்டு பெண் எங்க வீட்டில் வாழுது அதை மனசுல வைத்து கொண்டு பேசுங்க…ஆ இன்னொன்னும்.. பவித்ரா உடல் நிலை நிலவரம் உன் தொங்கைக்கு தெரியும்..” என்ற வார்த்தையில் தீக்க்ஷயன் வீட்டவர்கள் மொத்த பேருமே அதிர்ந்து தான் விட்டனர்..

அதிர மட்டும் தான் முடிந்தது மற்றப்படி வேறு எதையும் அவளை செய்ய முடியவில்லை.. காரணம் அவள் நிறை மாத கர்பிணியாக இருந்தாள்..

அதனால் கொஞ்சம் திட்டு அவ்வளவு தான் சுப்ரியாவுக்கு கிடைத்தது.. ஆனால் இதனால் தீக்க்ஷயன் தன் வாழ்க்கையை இழந்ததோடு மட்டும் அல்லாது மருத்துவரிடம் அசிங்கப்பட்டது.. அதை விட தன் குழந்தைக்கு தாய் இல்லாது போனதில் மனதளவில் உடைந்து விட்டான்..

அதில் தன் தங்கையிடம் இன்று வரை அவன் பேசுவது இல்லை என்பது வேறு விசயம்.. இதில் என்ன கொடுமை என்றால், மனைவியை இழந்தது அவனுக்கு ஒரு சோதனை என்றால், தன் படிப்பு. தன் வேலை.. தன் சம்பளம்.. தான் வாங்கி போட்ட லக்செரி அப்பார்ட்மெண்ட் வீடு சில பல ஷேர்.. இதில் அவனின் அண்ணி ஸ்வேதாவுக்கு பிரச்சனையாகி போய் விட்டது..

இதை எல்லாவற்றையும் விட ஸ்வேதாவுக்கு மிக முக்கியமான.. பிரச்சனையாகி போனது டெக்ஸ்டைல்ஸ் வருமானம்..

அதாவது இரு கடையில் ஒரு கடையை தன் பெரிய மகன் மகேந்திரன் பெயரில் எழுதி விட்ட தட்சணா மூர்த்தி இன்னொரு கடையை சின்ன மகன் தீக்க்ஷயன் பெயரில் எழுதி வைத்து விட்டார்…

தீக்க்ஷயன் வேலைக்கு செல்வதால், சின்ன மகன் கடையை அவர் பார்த்து கொண்டார்.. அதில் வரும் லாபத்தை சின்ன மகன் வங்கி கணக்கில் போட்டு கொண்டு வருவார்.

இதில் தான் ஸ்வேதா.. “அது எப்படி அவர் வேலைக்கும் போவார்.. அந்த வருமானம் வருது,.. அவர் அப்பார்ட்மெண்ட் வாடகை வருது.. இதுல நீங்க வேற அந்த கடை லாபத்தை எல்லாம் அவருக்கே கொடுக்கிறிங்க..” என்று குடும்பமாக அனைவரும் இருந்த போது கேட்க.

தட்சணா மூர்த்தியோ.. “இது அவன் கடை தானேம்மா.. அப்போ அது லாபம் அவனுக்கு தானே போய் சேரனும்..” என்று கேட்டார்..

ஸ்வேதாவோ.. “அது தான் அந்த கடையை ஏன் அவருக்கு கொடுத்திங்க..?” என்று கடையே தீக்க்ஷயனுக்கு ஏன் என்பது போல் பெரிய மருமகள் கேட்க.

இது என்ன கேள்வி.. என்று நினைத்து தன் பெரிய மகனை தான் அவர் பார்த்தது.. பெரிய மகனோ தலை குனிந்து கொண்டான்..

தினம் தினம் இரவில் இவர்கள் படுக்கை அறையில் இந்த பஞ்சாயித்து தானே போய் கொண்டு இருக்கிறது..

மகேந்திரன் அவன் அப்பா சொன்னதை தான் இவனும் தன் மனைவியிடம் சொன்னது ஆனால் அவள் கேட்டால் தானே.. நீங்க கேட்க மாட்டிங்க நானே கேட்கிறேன்.. இதோ கேட்டு விட்டாள்..

பெரிய மகனை பார்த்த தட்சணா மூர்த்தி.. மீண்டும் மருமகளை பார்த்து.. “அந்த இரண்டு கடையும் என் சொந்த உழைப்பில் வந்தது.. அதை நான் என் இரண்டு மகனுக்கும் பிரித்து கொடுத்து விட்டேன்.. அதை ஏன் கொடுத்த எதுக்கு கொடுத்த என்று கேள்வி கேட்கும் உரிமை என் மனைவிக்கே இல்ல.. நீ யார் கேட்க.” என்று கேட்டு விட்டார்.

இந்த சம்பவம் நடந்த சமயம்.. தீக்க்ஷயனின் மனைவி உயிரோடு தான் இருந்தாள்.. திருமணம் முடிந்து மூன்று மாதத்தில் தான் ஸ்வேதா இந்த பஞ்சாயத்தை கூட்டியது..

ஸ்வேதாவுக்கோ.. வீட்டு வேலை எல்லாம் நான் செய்யிறேன்.. சின்ன மருமகள் உடம்பு முடியல முடியல என்று வீட்டில் இருந்தா கூட ஒரு வேலையையும் செய்யிறது இல்ல.

இதுல அப்போ அப்போ அம்மா வீட்டிற்க்கு போய் உட்கார்ந்து கொள்வது.. இதை யாரும் கேட்க மாட்டாங்க.

அதே போல சின்ன மகன் அவர் வேலைக்கு போவாரு.. அதுல அத்தனை லட்சம் சம்பாதிக்கிறார்… இதுல வாடகை .. இந்த கடை லாபம்.. இன்னும் கொஞ்ச வருஷத்தில் அவங்க எங்கோயோ பொயிடுவாங்க நாங்க இப்படியே இருக்கனுமா..? நானும் என் புருஷனும் இவங்களுக்கு என்ன தக்காளி தொக்கா…இந்த நினைப்பில் வீட்டவர்களிடம் சண்டை இட்டாள் பெரிய மருமகள்..

முன் இருந்து இருந்தால் தட்சணா மூர்த்தி என்ன முடிவு எடுத்து இருப்பாரோ..

ஆனால் தன் வார்த்தையே கேட்டு பவித்ராவை கட்டிய தன் சின்ன மகனின் வாழ்க்கை அவ்வளவு சுகமாக இல்லை என்பதை ஒரு ஆண்மகனாக அவருக்கு புரிந்து விட்ட சமயம் தான் அது..

அதனால் இதிலாவது அவனுக்கு நியாயம் செய்து விட வேண்டும் என்று நினைத்து விட்டாரோ என்னவோ.. அதனால் முழு மூச்சாக என்னுடையது என் விருப்பம் என்று நின்று கொண்டார்..

அவர் விருப்பப்படி தான் நடந்ததும்.. அதில் ஸ்வேதாவுக்கு இன்னுமே கோபம்..

அந்த சமயம் தான் பவித்ரா இறந்து விட.. பவித்ராவின் அம்மா வீடு குழந்தையை பெறுப்பெற்றுக் கொள்ளாது அனைத்துமே இவர்கள் செய்வது போல் ஆகி விட..

இதையே வைத்து ஸ்வேதா தினம் தினம் சண்டை இட ஆடம்பித்து விட்டாள்..

அவள் குழந்தைக்கும் தீக்க்ஷயன் குழந்தைக்கு அப்படி ஒரு பாகுப்பாடு காட்டுவாள் ஸ்வேதா.. சரஸ்வதிக்குமே வயது ஆகுவதால், குழந்தைக்கு என்று தனித்து செய்யவோ குழந்தை பின் ஒடவோ அவரால் முடியாது போய் விட்டது..

இதில் சரஸ்வதி அந்த குழந்தையின் வேலை ஏதாவது சொன்னால் ஏதாவது கேட்டால். உடனே..

“என் குழந்தையை பார்த்துக்கவே என்னால முடியல.” என்பதோடு..

“நான் என்ன இந்த வீட்டு வேலைக்காரியா..? குழந்தைக்கு அம்மா தானே இல்ல. அப்பா இருக்காரு தானே…அப்படி குழந்தை மீது அவ்வளவு அக்கறை இருந்தால், வேலையை விட்டுட்டு குழந்தையை பார்த்துக்க சொல்லுங்க அத்த. அவர் பணம் சம்பாதிக்க நான் அவர் குழந்தைக்கு ஆயா வேலை பார்க்க முடியாது.” என்று விட்டாள்..

இந்த பேச்சு நடக்கும் போது அதை கேட்டு கொண்டே தான் தீக்க்ஷயன் வீட்டிற்க்குள் நுழைந்தது..

தெரியும். இப்போது எல்லாம் அண்ணி எங்கு தொட்டாலுமே தான் வேலைக்கு போவதை நிற்ப்பது தான் குறியாகவே இருக்கிறார்கள் என்று..

அவனின் மனைவி பவித்ரா இருந்த போது கூட… “பவிக்கு உடம்பு முடியலையே.. நீ கொஞ்சம் வீட்டில் இருந்து பார்த்துக்க கூடாதா..?”

உண்மையில் அப்போது மனைவியின் உடல் நிலையை பற்றி விவரம் தீக்ஷயனுக்கே தெரியாது என்பதினால், அதை காதில் வாங்கவில்லை..

பின் இதோ குழந்தை அழுதாள்.. குழந்தை சாப்பிடவில்லை என்றால், குழந்தை தூங்கவில்லை என்றால், அனைத்திற்க்குமே தன் வேலை தான் அண்ணியின் கண்ணை உறுத்துக்கிறது என்பதை அவன் புரிந்து கொண்டான்.. அதன் காரணமும் அவனுக்கு தெரியும்..

இந்தியாவிலேயே அவன் வாங்கும் மாதம் வருமானம் இரண்டரை லட்சம்.. வாடகை அவர் தந்தை பார்த்து கொள்ளும் தொழில் மூலம் வருமானம்.. என்று அண்ணனோடு தன்னுடையது வருமானம் பல மடங்கு அதிகம்..அதனால் தான்..

சிறிது சிறிதாக பேசிய அண்ணியின் பேச்சு.. உச்சக்கட்டம் அடைந்த தினம்.. வர்ஷினியை சித்தி பையனுக்கு பெண் பார்த்து விட்டு மாலை அவனுக்கு பெண் பார்த்த போது அந்த பெண் போட்ட கன்டிஷனில்.. பெண் வீட்டவர்களிடம் ஒன்றும் சொல்லாது குழந்தையை தூக்கி கொண்டு வீடு வந்து விட்டான்..

பின் தான் அனைவரும் வந்தனர்… இதற்க்கு தீர்வு தான் என்ன. என் மகன் இப்படியே தான் இருக்க வேண்டுமா..? என் மகன் அவன் மனைவியுடன் எந்த லட்சணத்தில் வாழ்ந்தான் என்று தான் அந்த வீட்டவர்கள் பார்த்தனரே..

தனக்கு அந்த பெண் வேண்டாம் என்று சொன்னவனை வம்படியாக கட்டி வைத்து இந்த வயதிலேயே இப்படி ஒத்தையில் நின்று விட்டானே.. என்ற ஆதங்ககத்தில்.

சரஸ்வதியும் தட்சணா மூர்த்தியும் பெரியவர்களாக.. அனைவரும் இருக்கும் சமயம்..

“இனி பெண் வீட்டவர்களிடம் தீராவை நாம வளர்த்து கொள்ளலாம்.. தீக்ஷயனுக்கு கல்யாணம் முடிந்து அவன் வீடு தான் இரண்டு இருக்கே அதில் ஒன்றில் குடி வைத்து விடலாம்..” என்று சரஸ்வதி தன் கணவனிடம் சொன்னார்..

தீக்க்ஷயன் அதை உடனே மறுக்க ஆரம்பிக்கும் போது அவன் அண்ணி..

“ஓ புதுப்பெண்ணுக்கு பிரச்சனை இருக்க கூடாது என்று காலம் முழுவதும் என் தலையில் சுமையை ஏத்தி வைக்க பார்க்கிறிங்கலா.. சின்ன மகன் தான் எப்போதுமே உங்க கண்ணுக்கு தெரிவாரா.. ஏன் என் புருஷனும் உங்களுக்கு மகன் தானே.

இன்னும் கேட்டால் இந்த வீட்டின் மூத்த மகன் என் புருஷன் தான்.. நியாயமா பார்த்தா என் புருஷனுக்கு தான் இந்த வீட்டில் முதல்ல மத்தவங்க மரியாதை கொடுக்கனும்.. ஆனா நீங்க… படிக்கிறதுல இருந்து எல்லாத்திலுமே என் புருஷன் கிட்ட ஒரவஞ்சணை காட்டி இருக்கிங்க. என் புருஷனை பி.ஏ மட்டும் படிக்க வெச்சிங்க.. ஆனா உங்க இரண்டாம் மகனை பிஎச் டி...” என்று தன் பேச்சை இன்னுமே இழுத்து இருப்பாள் போல.

தட்சணா மூர்த்தி தான் தன் தங்கை மகளும் தன் வீட்டின் மூத்த மருமகளுமான ஸ்வேதாவிடம்..

“நீ புதுசா ஒன்னும் தெரியாது இந்த வீட்டிற்க்கு என் மவனை கட்டிட்டு வரல… உனக்கே தெரியும் உன் புருஷனுக்கு படிப்பு வரலேன்னு… நான் படிப்புக்கு சின்னவனுக்கு செலவு செய்ததை விட பெரியவனுக்கு தான் அவ்வளவு செலவு செய்தேன்.. ஒவ்வொரு சப்ஜெக்ட்டுக்கும் ஒரு ஒரு இடத்தில் ட்யூஷன் வைத்து அப்போதுமே நீ சொன்னியே.. அந்த பி,.ஏ படிப்பையே இன்னுமே அவன் முழுசா முடிக்கல..” என்று சொல்ல..

இன்னும் இன்னும் வார்த்தை தடிக்கவும் தான் தீக்க்ஷயன் இனி என்னாலும் என் குழந்தையினாலும் இந்த வீட்டில் பிரச்சணை வேண்டாம் என்று முடிவு எடுத்தவனாக இதோ ஜார்டன் வந்து சேர்ந்தது.

தனித்து வந்தவனுக்கு வரமாக அவன் வாழ்க்கையை வளம் சேர்க்க ஒரு தேவதை.. தன் முன் கை நீட்டிக் கொண்டு நிற்கிறாள்.. கரம் கோர்க்க சொல்லி.. ஆனால் பயம் இது போலான வீட்டில் வர்ஷினி வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நினைத்து..

அதையே தான் தீக்க்ஷயன் தன் நண்பன் கெளதமிடமும் சொன்னது.

“ஏற்கனவே வசி வாழ்க்கையில் ரொம்ப பட்டுட்டா.. முதல் முதல்ல அவளை நான் பார்த்த போது இருந்த அந்த மகிழ்ச்சி அவள் முகத்தில் இல்ல டா.. கவலை இல்லாது இருந்தாள்.”

“ஆனா இப்போ அவள் முகத்தில் நான் பார்ப்பது ஒரு முன் ஜாக்கிரதை எச்சரிக்கை.. கவலை இது தான்.. இதில் என்னோடான வாழ்க்கை இன்னுமே அவளுக்கு ரணத்தை கூட்ட கூடாது” என்று தன் மனதில் வர்ஷினி மேல் அத்தனை காதல் இருந்தாலுமே.. அவளை திருமணம் செய்து கொள்ள பயந்தான் தான்..

அதுவும் தன் முதல் காதல்.. தோல்வியடைந்தாலுமே பரவாயில்லை என்று நினைத்து.

ஆம் தீக்ஷயன் ஒரு பெண்ணோடு திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு தந்தையான போதும் கூட.. காதல் என்ற இந்த உணர்வு அவனுக்கு புதியது தான்..

இதை வெளியில் சொன்னால் கண்டிப்பாக கேட்பவர்கள் சிரிப்பார்கள் என்பது நிச்சயமே.. ஆனால் அவன் மனது அறியுமே அனைத்தையுமே..

இருந்துமே வர்ஷினி தன் காதலை சொல்லியும் அவளை கை பிடிக்க அத்தனை தயக்கம் தீக்ஷயனுக்கு…

ஆனால் கெளதமோ. இது எல்லாம் ஒரு பிரச்சனையா. டா” என்று தன் நண்பனின் வாழ்க்கைக்காக அவனிடமே பேசி ஒரு வழியாக அவனை ஒத்து கொள்ள வைத்து.

“போ போய் பேசு..” என்று தீக்க்ஷயனை எதிர் அறையான வர்ஷினி இருந்த அறைக்கு அனுப்பி வைத்தான்..


 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
😉😉😉 வர்ஷினி அவளே தன்னோட காதலை சொல்லிட்டா 🤩 🤩 🤩 🤩

தீஷன் குடும்பம் ரொம்ப பிரச்சினையாக தான் இருக்கு 😓 😓 😓 😓 🥺

ஸ்வேதா எல்லாம் தெரிஞ்சு தானே மகேந்திரனை கல்யாணம் செஞ்ச 😏😏😏 இப்போ எதுக்கு தீஷன் கூட கம்பெர் பண்ணி கிட்டு இருக்க 🥶🥶🥶🥶🥶🥶


வர்ஷினி இந்த குடும்ப அரசியலை சமாளிச்சிடுவாளா 🧐 🧐 🧐 🧐 🧐
 
Last edited:
Active member
Joined
May 11, 2024
Messages
182
Supriya suyanalam😏 varshini love sollita😍😍😍 deeksha varshini parthu pesa yevvalavu thayakam😏😏😏 nice interesting ud sis ❤️
 
Active member
Joined
May 11, 2024
Messages
123
தீக்க்ஷன் தன் குடும்ப சூழ்நிலை நினைத்து வர்ஷினியை ஏற்க தயங்குவதும் அவள் கஷ்டபடக்கூடாது என்று நினைத்து அவள் மேல் நேசம் இருந்தாலும் ஆனால் கெளதம் அவனுக்கு நண்பனாக எடுத்து கூறுவதும் அருமை 👌👌👌இனி 🤔🤔🤔🌺🌺🌺
 
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
சுப்ரியா சுயநலமா அவ வாழ்க்கையை மட்டும் யோசிச்சு அண்ணனோட வாழ்க்கையை அழிச்சிட்டா.... 😡

ஸ்வேதா காதலிக்கும் போது படிப்பு வேலை எல்லாம் தெரியல இப்போ பொறாமையில வேகுறா.... 😤

தீக்க்ஷன் வர்ஷா இவங்க கூட இருந்தா கண்டிப்பா நிம்மதியா இருக்க முடியாது தான்...
பேசாம தனியா போயிடு கல்யாணம் பண்ணிக்கிட்டு....
 
Top