Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam.. Pre Final...2

  • Thread Author
Pre final…2

வர்ஷினி வீட்டிற்க்கு கீர்த்தனா ஸ்ரீவச்சன் வந்த போது வர்ஷினி வீட்டில் அனைவரும் தான் இருந்தது.. இரவு ஒன்பது மணிக்கு மேல் கடந்து தான் அவர்கள் வர்ஷினி வீட்டிற்க்கு வந்தது..

எப்போதுமே பத்து மணிக்கு மேல் வரும் தட்சணா மூர்த்தியும், மகேந்திரனும் கூட நாளை கடை கணக்கை பார்த்து கொள்ளலாம் என்று நேரத்திலேயே தான் வீடு வந்து விடுவது.. காரணம் இரண்டு குழந்தைகள் வீட்டில் இருக்க என்ன தான் மீனாட்சி பாட்டி வீட்டில் இருந்தாலுமே, வயதான அவர்களாள் குழந்தையை சமாளிக்க முடியாது…

அதோடு வர்ஷினி இரட்டை குழந்தையை சுமந்து கொண்டு இருக்கிறாள் நேரத்திற்க்கு வீடு சேருவது நல்லது என்று ஒன்பது மணிக்குள் தான் வீடு வந்து விடுவது..

வந்த உடனே சாப்பிட்டும் முடித்து விடுவர்.. அதற்க்கும் காரணம் அனைவரும் சாப்பிட்டு முடித்தால் தான் மீனாட்சி பாட்டி பாத்திரத்தை ஒழித்து போட்டு நேரத்தில் படுக்கட்டுமே என்று அனைவரும் சாப்பிட்டு முடித்த பின் தான் கீர்த்தனாவும், ஸ்ரீவச்சனும் ,வந்தது..

என்ன இந்த நேரத்திற்க்கு என்று நினைத்தாலுமே வீட்டிற்க்கு வந்தவர்களை முறையாக வர வேற்றார்கள் தான்..

ஆனாலுமே வந்தவர்கள் முகத்தில் ஒரு வித சங்கடத்தை கவனித்த மகேந்திரனும் தட்சணா மூர்த்தியும்.. வந்தவர்களிடம்…

“நீங்க பேசுங்க. நேரத்துக்கு தூங்கினா தான் நாளை கடைக்கு போக சரியாக இருக்கும்..” என்று சொன்னவர்கள் சொன்னது போல படுக்க சென்றும் விட்டனர்.

அவர்களை தொடர்ந்து தீக்ஷயனுமே.. இரண்டு குழந்தைகளை கையில் பிடித்து கொண்டவன்..

“நீ பேசிட்டு இரு வசி.. நான் குழந்தைகளை தூங்க வைக்கிறேன்..” என்று சொன்னவனிடம் வர்ஷினி..

“குழந்தைகளை மாமா ரூமில் விட்டுட்டு நீங்க வாங்க. அவங்க தூங்க வைப்பாங்க..” என்றதுமே மனைவியின் முகத்தை பார்த்த தீக்க்ஷயன் ஒன்றும் பேசாது மனைவி சொன்னது போல செய்து விட்டு மீண்டுமே ஆளுக்கு வர..

அப்போது தான் ஸ்ரீவச்சன் வர்ஷினியிடம் அந்த செக்கை நீட்டிக் கொண்டு இருந்தான்..

அதை வாங்கி பார்த்தவள் என்ன இது என்பது போல அதை டீப்பாவின் மீது வைத்து விட்டாள்..

ஆனால் தன் பெரிய கை பையில் இருந்து கீர்த்தனா நகை பெட்டிகளை எடுக்க.. பார்த்த வர்ஷினிக்கு அது நகைப்பெட்டி என்பது மட்டும் தான் தெரிந்தது..

அப்போது அது தன்னுடையது அம்மாவுடையது என்பது எல்லாம் தெரியவில்லை.. காரணம் அப்போது எல்லாம் விற்க்கும் கவரிங் நகைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை வர்ஷினி தங்கத்திற்க்கு கொடுக்காததே காரணம்.. பெரியதாக கவனித்து எல்லாம் பார்த்தது கிடையாததால் தெரியவில்லை..

ஆனால் அவளே டீப்பாவின் மீது வைத்து அதை திறந்த போது தான் வர்ஷினியின் கண்கள் விரிந்து கொண்டது… அதுவும் தன் அம்மாவுடைய அந்த கெம்பு கல்லு நெக்லஸ் அதற்க்கு தோதான கம்மல் ஜிம்மிக்கியை பார்த்தவளுக்கு என்ன கட்டுப்படுத்தியும் முடியாது கண்ணீர்…

தீக்ஷயனுமே.. ‘வசி..” என்று தன் தோளை பற்ற வந்தவனின் கையை தட்டி விட்டவள் தன் அக்காவை என்ன இது.? என்பது போல ஒரு பார்வை பார்த்தாளே தவிர வாய் திறக்கவில்லை..

தங்கையின் அந்த பார்வையில் வர்ஷினியின் கையை பற்ற முயன்றவளை விட்டு கொஞ்சம் தள்ளி நின்று கொண்டவள் மீண்டும் சொல்லு என்பது போல் தான் பார்த்தாள்.. அப்போதுமே வாய் திறந்த பேசவில்லை..

கண்டிப்பாக வாய் திறந்தால் அழுது விடுவது நிச்சயம்… இத்தனை நாள் தான் மிக தைரியமான பெண்… என்று, தினம் தினம் தான் மனதில் நினைத்து கொண்டு இருக்கும் அந்த பிம்பம் கண்டிப்பாக தான் வாய் திறந்தால் உடைந்து விடுவது நிச்சயம் என்பதினால், கீர்த்தனாவை பார்த்தாள்..

அந்த கெம்புகல்லு நெக்லஸ் கம்பல் ஜிமிக்கியை தான் நிச்சயம் அன்று.. போட வேண்டும் என்று தன் அம்மாவிடம் கேட்டது..

காரணம் அவளுக்கு அது அத்தனை பிடிக்கும்.. அம்மா முகத்தில் மஞ்சள் பூசாது அவள் பார்த்ததே கிடையாது.. விசேஷ நாட்களில் தான் இந்த நகையை சுமித்ரா அணிவது..

அப்போது பட்டுப்புடவையும் கட்டிக் கொண்டு முத்துச்சரம் பெரிய ஆரமாக தொங்க. கழுத்து ஒட்டியது போல இந்த கெம்பு கல்லு நெக்லஸ் அந்த கம்பல் சின்ன அளவில் தான் பூ வைத்து கொள்வார் தன் அம்மா.. அதை பார்க்கும் போது கண்ணுக்கு அப்படி இருக்கும்..

இதோ ஹாலில் மாட்டி இருக்கும் தன் அன்னையின் கோலமும்.. அதே தான். அனைத்து நகையும் உருகி விட்டது பணம் எரிந்து விட்டது என்றதில் ஒரு நிமிடம் அந்த கெம்பு கல்லு நெக்லஸ்… என்று நினைத்தாள் தான். ஆனால் தன் அம்மாவே சென்ற பின்.. என்று அதோடு மறந்து விட்டாள்..

ஆனால் கண்ணை மூடி தன் அன்னையை தன் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினாலே.. இந்த நகை பட்டுப்புடவை மஞ்சள் பூசிய முகம் தான் வந்து நிற்க்கும்..

இப்போது உருக்கியதாக நினைத்த அந்த நகை.. அந்த நகையை பார்த்தவள் மீண்டும் கீர்த்தனாவை பார்க்க.

இந்த முறை வர்ஷினியின் பார்வைக்கு வாயை திறந்து விட்டாள் கீர்த்தனா..

“ஏதாவது விசேஷம் என்றால் நான் அம்மாது உன்னுடையது வாங்கி போட்டுட்டு போவேன் தானே…” என்று சொல்லும் போதே விசயம் வர்ஷினிக்கு புரிந்து விட்டது..

அதில் தவறும் கிடையாது.. ஆனால் அன்று அமைதியாக இருந்து விட்டு இப்போ ஏன் அதுவும் ஸ்ரீவச்சன் பத்தாயிரத்திற்க்கு கணக்கு பார்த்தவன் பதினைந்து லட்சத்தை செக்காக கொடுக்கிறான் என்றால் இப்போது இருவரையும் மாறி மாறி பார்த்தவளிடம் அவர்கள் இருவருமே சொன்ன விசயம் இது தான்.

அதாவது அவள் தோப்பு வீட்டை வாங்க கொஞ்சம் பணம் தேவைப்பட்டது.. என் நகையும் வைத்து விட்டேன்… அப்போ கடைசியா பத்திர பதிவுக்கு ஒரு ஏழு லட்சம் தேவைப்பட்டது..

அப்போ தான் அம்மா நகையும் உன் நகையும் என் கிட்ட இருந்தது நியாபகத்தில் வந்தது.. அது தான் அவசர தேவைக்கு அதை வைத்து தான் பணம் வாங்கி விட்டேன்..” என்று சொன்னவளின் பேச்சை இடையிட்டு. வர்ஷினி.

“அம்மா கிட்ட சொல்லி வைச்சியா..” என்று கேட்ட தங்கையை நிமிர்ந்து பார்க்க முடியாது இல்லை என்று தலையாட்டியவளையே தான் பார்த்து இருந்தாள் வர்ஷினி..

அப்பா அம்மாவிடம் அடிக்கடி சொல்வதை இவள் கேட்டு இருக்கிறாள்..

“கீர்த்தனாவுக்கே அத்தனை நகை போட்டோம் தானே… அப்போ ஏன் உன் நகையும் வர்ஷி நகையும் வாங்கி போட்டுட்டு போறா…?” என்றதற்க்கு

அம்மா.. “ விடுங்க. ஒரு வீட்டுல பொம்பளைங்க நகையை மாத்தி போட்டுக்குறது தான்..” என்று சொன்னதற்க்கு.

“ஆனா அவள் நகையை நீயோ வர்ஷியோ போட்டு நான் பார்த்தது இல்லையே..” என்று சொன்னவர்.. இதையுமே தான் சொன்னார்.

“வர்ஷி நகையை இவள் போட்டு போட்டு பழசா ஆகிட்டா.. இவள் கல்யாணத்து அப்போ மாத்தவா செய்வது என்று..”

ஆனால் அது போல தான் இவள் நகை பழையதாகி விட.. புதுசு மாத்த தான் லாக்கரில் இருந்து நகைகளை கொண்டு வந்தது…

ஆனால் இந்த நகைகள் என்னிடம் இருக்கு என்று ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் என்று நினைக்கும் போது தான் அடுத்து கீர்த்தனா சொன்ன.

“ஆனா அப்புறம் சொல்லிட்டேன்.. நீ உன் நிச்சயத்துக்கு அம்மாவுடைய கெம்பு கல்லு செட் போடனும் என்று கேட்டா நீ தானே கொண்டு போன. நிச்சயத்துக்கு கொண்டு வா.” என்று அம்மா கேட்ட போது சொல்லிட்டேன்..” என்று சொன்ன போது வர்ஷினி அதிர்ச்சி எல்லாம் ஆகவில்லை சொல் என்பது போல் தான் ரொம்ப நேரம் நிற்க முடியாது என்று அமர்ந்தவளிடம்..

கீர்த்தனா.. “ அப்புறம் கூட கேட்டுட்டே தான் இருந்தாங்க வர்ஷி ஆனா என்னால உடனே எல்லாம் மூட்ட முடியல. அம்மா தான் அப்பாவுக்கு தெரிந்தா திட்டுவாரு … கல்யாணத்துக்கு வர்ஷி நகை மாத்தனும்.. அப்பா கேட்பாரு.. சீக்கிரம் மூட்டி கொடு என்று சொன்னாங்க..” என்ற போது..

“அப்போ கடைசி வரை அப்பாவுக்கு தெரியாதா..?” என்று கேட்டவளிடம் பதில் சொல்ல கீர்த்தனாவுக்கு மீண்டும் தயக்கம் ஏற்பட்டது.

பின் ஒரு வராக.. “ அன்னைக்கு என்னை கூப்பிட்டு. திட்டிட்டாரு… “ எனும் போதே வர்ஷினியின் மனது பட பட என்று அடித்து கொண்டது..

மனைவியின் பதட்டத்தை பார்த்தவன்.. இது வரை கூட பிறந்தவர்கள் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்று கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்த தீக்ஷயன் சட்டென்று மனைவியின் அருகில் அமர்ந்து கொண்டவன்.. மனைவியின் கையையும் பற்றிக் கொண்டான்..

“வசி ரிலாக்ஸ். ரிலாக்ஸ். இப்படி நீ எமோஷனல் ஆகுறது உனக்கும் நல்லது இல்ல நம்ம பேபிங்களுக்கும் நல்லது இல்ல வசி..” என்று கணவனையே கண்கலங்க பார்த்த வர்ஷினி.

“முடியலேங்க/. முடியல சத்தியமா என்னால முடியல.” தன் நெஞ்சின் மீது கை வைத்து பேசியவளின் குரலில் தீக்க்ஷயனுமே இடம் அனைத்து மறந்தவனாக எழுந்து மனைவியின் முகத்தை தன் வயிற்றில் புதைத்து கொண்டவன்.. மனைவியின் முதுகையுமே இதமாக தட்டி கொடுக்க.. வர்ஷினியுமே சிறிது நேரம் கணவனின் அந்த தடவளுக்கு ஒப்புக் கொடுத்தவள் பின்.. சிறிது நிலை பெற்ற பின் மீண்டும் நிமர்ந்தவள் தன் கண்களை துடைத்து கொண்டவள்..

“இப்போ ஓகே தான் வசி..” என்று இது வரை தங்களையே ஒரு வித ஆச்சரியத்துடன் பார்த்து கொண்ட இருவரையுமே பொதுவாக பார்த்த வர்ஷினி..

“என்னைக்கு…?” சுற்றி வளைக்காது கேட்டவளிடம்..

“அப்பா அம்மா இறந்த அன்னைக்கு.? கீர்த்தனா குற்றவுணர்ச்சியுடன் சொல்லி தலை குனிந்து கொண்டாள்..

வர்ஷினிக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிவது போல. அவளின் தந்தைக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளது.. வீட்டிலும் பிடிப்பார் தான்.. ஆனால் வீட்டுக்குள் அவர் எப்போதுமே பிடித்து இவள் பார்த்தது கிடையாது..

கூடிய மட்டும் வெளியில் சென்று தான் பிடித்து விட்டு வருவார். சில சமயம் அவர் வேலை செய்த பேங்கில் இருந்து போன் வந்தால் அவர்கள் ஏதாவது தவறு செய்தால், மேனஜரான இவர் தானே பதில் சொல்ல வேண்டும்..

அதில் டென்ஷன் ஆகி பிடிப்பார்.. அப்போது கூட மொட்டை மாடிக்கு சென்று தான் பிடிப்பார்..

அன்று இவர்களுடன் பேசியில் சண்டை போட்டு உள்ளார்.. அந்த டென்ஷனில் மூடி இருந்த அறையிலேயே சிகரெட் பிடித்து இருந்து இருக்க வேண்டும் என்று நினைத்தவள்..

சட்டென்று ஸ்ரீவச்சனையும் டீப்பாவின் மீது இருந்த அந்த செக்கையுமே மாறி மாறி பார்த்தவளின் பார்வையில் இப்போது அண்ணன்காரன் சொல்ல ஆரம்பித்தான்..

அதாவது பரந்தாமன் தன் பெயரில் பாதி பணம் டெப்பாசிட்டும் தன் மனைவியின் மீதும் போட்டு வைத்து இருந்து இருக்கிறார்… மகன் அவசர தேவைக்கு என்று பணம் கேட்க..

தாய் உள்ளம் தாங்குமா.. உடனே தன் பெயரில் இருக்கும் பணத்தை எடுத்து கொடுத்து விட்டார்…

ஆனால் வர்ஷினி திருமணத்திற்க்கு முன் கொடுத்து விடுடா என்று சொல்லி தான் சுமித்ரா கொடுத்தது..

பரந்தாமன்.. பேங்கில் இருந்து இப்போ எடுத்த பணம் சமையல்காரனுக்கு கல்யாண மண்டபத்திற்க்கு எல்லாம் கொடுத்து விடுகிறேன். உன் பெயரில் இருக்கும் பணத்தில் வர்ஷினிக்கு கொஞ்சம் நகை வாங்கனும் என்று சொன்னியே.. அதில் வாங்கிடு.. அப்புறம் இன்னுமே கல்யாண தேவைக்கு பணம் தேவைப்படும்.. அதுக்கு உன் பெயரில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று மனைவியிடம் சொல்ல..

சுமித்ரா அவர் இறக்கும் முன் ஒரு மாத காலமாக மகனிடம்..

“ஸ்ரீ அப்பாவுக்கு சொல்லாம கொடுத்து விட்டேன்.. கல்யாண செலவுக்கு பணம் கேட்டால் அவ்வளவு தான்டா அவ்வளவு தான்.. அதுக்குள்ள கொடுத்து விடுடா..” என்று சொன்ன அன்னையிடம் ஸ்ரீவச்சம்

“அம்மா கொடுத்து விடுவேன் மா..” என்று தான் சொல்லிக் கொண்டு இருந்தான்.. மகன் இன்னுமே பணம் தராது போக. தன் பெயரில் இருக்கும் பணத்திற்க்குமே தேவை எனும் போது கணவனிடம் சொல்லி விட்டார்.. பாவம் மனைவியை திட்டியவர் மகன் மகளுக்கும் அழைத்து திட்டி விட்டதோடு..

‘ஒரு வாரம் தான் டைம்.. “ என்று வைத்து விட்டார் இதில் என்ன ஒரு விசயம் என்றால் ஸ்ரீவச்சன் அம்மாவிடம் பணம் வாங்கியது கீர்த்தனாவுக்கு தெரியாது.. கீர்த்தனா அம்மாவின் நகைகளில் இருந்து கொஞ்சம் வர்ஷினியுடைய நகைகளில் கொஞ்சம் கீர்த்தனாவிடம் இருந்ததும், அதை அவள் அடகு வைத்து விட்டதுமே ஸ்ரீவச்சனுக்கு தெரியாது..

அண்ணன் அக்கா ஒப்புதல் வாக்கு மூலம் சொல்லி முடித்த போது முன் இருந்த அந்த பதட்டம் இப்போது வர்ஷினியிடம் இல்லை… ஒரு நிதானத்தோடு தான் இருவரையும் பார்த்து பொதுவா.. “ திடிர் என்று எப்படி இந்த ஞானோதம் வந்தது..?” தன் முன் இருந்த நகைகள் செக்கை காட்டி கேட்டவளிடம்.

முதலில் கீர்த்தனா தான். “என் வீட்டுக்காரருக்கு நாங்க வாங்கின தோப்பு வீட்டில் பாம்பு கடிச்ச அன்னைக்கு..” பாம்பு அவர்கள் வாங்கிய அந்த தோப்பு வீட்டில் தான் கடித்தது.. வாரம் வாரம் இரண்டு நாட்கள் குழந்தைகளோடு அங்கு சென்று விடுவாள் கீர்த்தனா…

அன்னைக்கு முன் பக்கம் பசங்க விளையாடிட்டு இருந்த போது ஒரு குறி சொல்லும் பொம்பளை போனாங்க.. உன் மாமாவுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை.. அதான் கூப்பிட்டு வைத்து பசங்க அவர் என்று பார்த்தார்.. கடைசியா நான் கை நீட்டிய போது.. நான் பார்க்க மாட்டேன்.. இது பாவப்பட்ட முகம்.. என்று என்ன என்னவோ சொன்னவ. கடைசியா உன்னை பெத்தவங்க ஆத்மா அலஞ்சிட்டு இருக்கு… அவங்க செய்ய வேண்டிய கடமை செய்யாம போனதுல.. அலஞ்சிட்டு இருக்கு… நிம்மதி இல்லாம இருக்கு அந்த ஆத்மா… நீ அந்த ஆத்மாவுக்கு நிம்மதி கொடுத்து இருக்கலாம் ஆனா விட்டுட்ட. இதுக்கு மேல உன்னை பத்தி என்னால சொல்ல முடியாது என்று சொல்லிட்டு போயிட்டாங்க. உங்க மாமா கூட நாம செய்தது தப்பு உன் தங்கை கிட்ட அந்த நகையை பத்தி சொல்லி இருக்கனும். உன் தங்கையை நாம தனியா விட்டு இருக்க கூடாது என்று சொன்னார்.. ஆனா நான் பெருசா அதை எடுத்துக்கல.

ஆனா அன்னைக்கு தூங்கும் போது யாரோ என்னை தட்டுறது போல நம்ம அம்மா குரல் வர்ஷி அம்மா குரல் வர்ஷி வர்ஷி. கூப்பிடுறது என் காதுல கேட்டுச்சி…அப்போ தான் கண்ணை திறந்தேன்.. அப்போ தான் கட்டில் ஜன்னல் ஒரமா இருக்கும் மாமா அந்த ஒரமா தான் படுத்துட்டு இருந்தார் நல்ல பாம்பு வர்ஷி நல்ல பாம்பு என் கண் எதிரில் தான் மாமாவை கொட்டியது..” என்று சொன்ன கீர்த்தனா அதன் பிறகு அதை பற்றி பேச கூட பயந்தவளாக கண்ணை மூடிக் கொண்டவளையே பார்த்திருந்த வர்ஷினி..

உன் விசயம் என்ன என்பது போல தன் அண்ணனை பார்த்தாள்…
 
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாம நகை பணம் ன்னு பெத்தவங்களை ஏமாத்தி வாங்கிட்டு அவங்க இறந்ததும் அதை மறைச்சதும் இல்லாம ஆதரவு இல்லாம இருந்த தங்கச்சியையும் கண்டுக்காம சுயநலமாய் இருந்துருக்காங்க..... என்ன ஜென்மங்களோ... 😡
இப்போவும் அவங்களுக்கு பாதிப்பு வந்துடுமோன்னு பயந்து ஓடி வந்துருக்காங்க....😈
 
Top