Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Nayaganin Nayagi...12

  • Thread Author
அத்தியாயம்…12

குருமூர்த்தி பேச்சில் பத்மினி அமைதியாகி போனாள். பத்மினியின் இந்த அமைதிக்கு காரணம் குருமூர்த்தி பேசினதை செயல் படுத்தும் எண்ணமா…?இல்லை மெளனம் சம்மதம் என்பது போல் அவனின் விருப்பத்தை தன் மெளனம் மூலம் அவனுக்கு அவள் சம்மதம் கொடுத்து இருக்கிறாளா…?

சம்மந்தப்பட்ட அந்த இருவருக்குமே தெரியாத போது பாவம் பக்கத்தில் இவர்களின் பேச்சையும், இவர்களின் பார்வை பரிமாற்றத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த கீதா மட்டும் எப்படி அறிவாள்…?

அதுவும் பத்மினி தலை குனிந்த வாறு தன் கை விரல்களை பார்ப்பதும், பின் முன் மிரரை பார்ப்பதுமாய் இருக்க… குருமூர்த்தியும் அதே போல் உதட்டின் ஓரம் புன்னகை மின்ன. சாலையை பார்த்து கொஞ்சமும், மிரரை அதிகமாகவும் பார்த்துக் கொண்டு அந்த கார் பயணம் தொடர்ந்தது.

கீதா முன் என்றால், குருமூர்த்தி இப்போது பேசின பேச்சுக்கு பயந்து போய் இருந்தாலும் இருந்து இருக்கலாம்.. அனால் குருமூர்த்தி பற்றி அனைத்தும் தெரிந்தவளாய் குருமூர்த்தியின் இந்த விருப்பத்தில் பயம் எல்லாம் இல்லை…

மனிதனை பார்த்து ஒருவரை எடை போட முடியாது..அது தான் தன் வாழ்க்கையிலேயே பார்த்து விட்டாளே..அதே போல் தான் ஒருவரின் பேச்சை வைத்தும் அவர்களின் நடத்தையை கணிக்க முடியாது..அதுவும் அவள் அனுபவத்தில் உணர்ந்து விட்டாளே… அதனால் குருமூர்த்தியின் ஒழுக்கம்.. நடத்தையி…ல் கீதாவுக்கு பயம் என்பது இல்லை..

அவனின் வாழ்க்கை முறை..இந்த முறை தன் தங்கை ஏற்றுக் கொள்ள முடியுமா…?இதோ இப்போது தான் போகும் போது அங்கு இருந்த பெண்கள்.அவர்கள் பாவப்பட்டவர்கள் தான்..

அதில் எந்த வித சந்தேகமும் இல்லை..வெளியில் அவர்கள் இருந்தால், அது போல் இருக்கும் ஹோமுக்கு ஏதாவது நன் கொடை கூட தந்து விடலாம்..

ஆனால் இது போல் வீட்டில் வைத்து விருந்து கொடுக்க முடியுமா…? இது படிப்பதற்க்கும், கேட்பதற்க்கும் நன்றாக இருக்கலாம்..ஆனால் வாழ்க்கைக்கு இது ஒத்து வருமா…?

அந்த மாதிரி இருப்பவர்கள் வந்து போனால், தன் தங்கையின் ஒழுக்கம் கேள்வி குறியாகாதா…? தன் வாழ்க்கை அதாவது தன் திருமணத்தின் போது யோசிக்காததை எல்லாம் சேர்த்து வைத்து தன் தங்கைக்காக கீதா யோசித்தாள்.

சூடு பட்ட பூனை இல்லையா…? யோசிக்க தான் செய்யும்..அதனால் கீதா ஏதேதோ நினைவில் இருந்தாள் என்றால், குருமூர்த்தியும், பத்மினியும் வேறு ஒரு நினைவில் ஒருவர் பார்க்காத போது மற்றவர் பார்த்து. அவர்கள் பார்த்து விட்டால், சட்டென்று குனிந்துக் கொண்டு இருவரும் கண்ணா மூச்சி ஆடிக் கொண்டு இருந்தார்கள்..

குருமூர்த்தி என்ன தான் மெதுவாக வாகனத்தை ஓட்டினாலும், இவர்கள் வர வேண்டிய இடம் வந்து தானே தீரும்… அதே போல் இவர்கள் வீடு வந்து விட்டது.

கீதா பத்மினி இருவரும் ஒரு சேர இறங்கினர்..கூடவே குருமூர்த்தியும் காரை விட்டு இறங்கி விட்டு கீதாவை பார்த்தான்..அவனின் பார்வைக்கு அர்த்தம் கீதாவுக்கு தெரிந்தும் அங்கு இருந்து போகாது சட்டமாய் அங்கேயே நின்றிருந்தாள்.

குருமூர்த்தி கீதாவை பார்த்து ஏதோ பேச தொடங்கும் முன்… “மன்னிக்கனும் குரு சார். முதல்ல உங்க திறமை மேல நம்பிக்கை வெச்சி தான் நான் உங்க கிட்ட வந்தது..தனிப்பட்டு உங்க மேல எனக்கு எந்த அபிப்பிராயமும் கிடையாது..

ஆனால் இன்று உங்களை பற்றி தெரிந்ததில் இருந்து… நிஜமா சொல்றேன்..உங்க மேல எனக்கு ஏகப்பட்ட மரியாதை வந்துடுச்சி..” என்று சொல்லிக் கொண்டு வந்த கீதாவின் பேச்சை தடை செய்து…

“அந்த மரியாதை உங்க தங்கை கிட்ட என் விருப்பதை சொன்னதுமே போயிடுச்சா…?” என்று நேரிடையாக கேட்டு விட்டான்..

“ம்ம்.” என்று தலையாட்டி மறுத்த கீதா… “இன்னும் கூடி இருக்கு.” என்று சொன்னவளை நம்ப முடியாது குருமூர்த்தி கீதாவை பார்த்தான்.

“நிஜமா குரு சார்...நீங்க என் எதிரில் உங்க விருப்பத்தை என் தங்கை கிட்ட சொன்னிங்க பாருங்க..அதில் இன்னும் இன்னும் உங்க மேல எனக்கு மரியாதை கூடிட்டே தான் போச்சி…”

“அப்போ…” அடுத்து பேசாது குருமூர்த்தி கீதாவை பார்த்தான்..

குருமூர்த்தின் அந்த பார்வையின் அர்த்தம்… “அப்போ ஏன் நான் தனியா உங்க தங்கையிடம் பேச விரும்புகிறேன் என்று தெரிந்தும் இங்கேயே இருக்கிங்க…?” என்பதே..அதையும் கீதா சரியாக புரிந்துக் கொண்டாள். அதை கேட்டும் விட்டாள்.

“அப்போ ஏன் போகாம இங்கேயே நிற்க்கிறேன் என்று கேட்கிறுங்களா…?” என்று கேட்ட கீதா குருமூர்த்தியின் பதில் எதிர் பாராது அவளே தொடர்ந்து…

“ஒரு சிலது பத்து கிட்ட எனக்கு தெளிவு படுத்திக்க வேண்டி இருக்கு… என் வாழ்க்கை தான் இப்படி ஆயிடுச்சி...அவ வாழ்க்கையில் எந்த வித பிரச்சனையும் வந்துட கூடாது. அவளுக்கு ஏதாவது ஒன்றுன்னா என் அப்பா அவ்வளவு தான்.” என்று கீதா சொல்லி முடிக்கவும்..

பத்மினி… “அவனோடு.. இவரை இணை கூட்டாதே அக்கா…” என்று தங்கை பேச்சிலேயே அவளின் மனநிலை கீதாவுக்கு தெளிவாக புரிந்து விட்டது… கீதாவுக்கு மட்டும் அல்லாது குருமூர்த்திக்கும் தான்.

குருமூர்த்தியும் பத்மினி சொன்னதை தான் சொல்ல நினைத்தான்.. பத்து என் விருப்பதை ஏற்றால் இவள் வாழ்க்கை போல் வீணாகி விடுமா…? அப்போ அந்த கேடு கெட்டவனோடு என்னை இணை சேர்க்கிறாளா…? என்பதே குருமூர்த்தி மனதில் எழுந்த கேள்வி..

கோபத்தோடு கீதாவை பார்த்து அவன் பேச நினைக்கையில், அவனுக்கு முன் தன் அக்காவிடம் பத்மினி பேசிய பேச்சில்..கோபம் மறைந்து அந்த இடத்தில் குளுமை குடிக் கொண்டு விட்டது.

அதே மனநிலையில் பத்மினியிடம்… “அப்போ நாளைக்கு மீட் பண்ணுவோம். எங்கு…? எப்போது…? என்பது போன் பண்ணி சொல்.” என்று சொன்னவன்..

கீதாவை பார்த்து… “உங்க பயம் நியாயமனது தான். ஒரு தங்கையின் வாழ்க்கை நல்லா இருக்கனும் ஒரு அக்காவா நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது..ஆனா நீங்க அந்த கேடு கெட்டவனோடு என்னை ..அது எனக்கு பிடிக்கல…”

என்ன தான் பத்மினியின் பேச்சில் குருமூர்த்தி மகிழ்ந்து போனாலுமே… குருமூர்த்திக்கு ஒரு பழக்கம் இருக்கிறது.. யாரின் மீது கோபமோ..ஆதாங்கமோ இருக்கிறதோ..சம்மந்த பட்டவர்களிடம் அதை பற்றி கேட்டு விட்டால் தான், அவன் மனது நிம்மதி அடையும்.

அந்த பழக்கத்தில் தன் மனதில் இருப்பதை கீதாவிடம் குருமூர்த்தி கேட்டு விட்டான்.

“நான் சொன்னதை நீங்க இரண்டு பேருமே சரியா கவனிக்கலேன்னு நினைக்கிறேன்.. என் போல் பிரச்சனை இவளுக்கும் வருமோன்னு நான் பயப்பட்டல… அவள் வாழ்க்கையிலும் ஏதாவது பிரச்சனை வந்தா…? பிரச்சனை என்பது எல்லோருக்கும் ஒன்று போல் இருக்காது தானே.?

.நான் அதை தான் சொன்னேன்.” என்று கீதா பொறுமையாக பத்மினிக்கும், குருமூர்த்திக்கும் விளக்கி சொன்னாள்.

குருமூர்த்தி அப்போதும்.. “அது தான் கீதா நாளை அவளை வர சொல்றேன். எனக்கு அவள் மேல் விருப்பம்..அவளுக்கும் என் மீது….” அடுத்து குருமூர்த்தி பேசாது கீதா பத்மினி இருவரையும் பார்த்து புன்னகை புரிந்து விட்டு..

தொடர்ந்து… “அது தான் கல்யாணத்துக்கு முன் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசி.புரிஞ்சிக்கலாம் என்று தான் வரசொல்றேன்.” என்று சொன்னவன்..

காரில் ஏறி அமர்ந்தவன்.. பதிமினியிடம் … “போய் வருகிறேன்.” என்பது போல் சைகையில் விடை பெற்று விட்டு..

கீதாவின் பக்கம் பார்வையை திருப்பியவன்… “நாளைக்கு உங்க தங்கையை அனுப்பி வைங்க… “ என்று கீதாவிடமே சொல்லி விட்டு கிளம்பினான்.

பாவம் கீதா எல்லாம் இது , போல் அதிரடி நடவடிக்கையில் எல்லாம் பார்த்தது கிடையாது… படிக்கும் போது யாராவது பின் வந்தாலே..ஒரு வாரம் அந்த வழி செல்லாது சுற்று எத்தனை சுற்று என்றாலும் சுற்றி தான் அவள் செல்வாள்.

அப்படி பட்டவளிடம் போய் இப்படி பேசினால் அவள் பயந்து தானே போவாள். குருமூர்த்தி நல்லவன் தான். அதில் கீதாவுக்கு எந்த வித சந்தேகமும் கிடையாது.

ஆனால் அவனின் இந்த வாழ்க்கை முறை..பேசும் முறை..இதோ இது போல் அடாவடித்தனமான பேச்சுக்கள்..இதனால் பத்மினிக்கு சங்கடங்கள் வந்தால்..

அதுவும் வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தும் தானே..அந்த கவலை தான் கீதாவுக்கு.. மனதில் இதை நினைத்து குழம்பி போனவளாய் வீட்டுக்குள் சென்றாள்.

இந்த குழப்பத்தில் கீதா கிரிதரன் சொன்ன போன உடனே போன் பண்ணு...என்பதை மறந்து விட்டாள் என்றால்,

பத்மினியோ மனதில் புகுந்த புது விதமான இதமான மனநிலையில் கிரிதரனையே மறந்து விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் குருமூர்த்தியோடு அனுப்பி வைத்த கிரிதரன் தன் வீட்டுக்கு சென்றும் இவர்கள் இருவரையும் பற்றிய நினைப்பு மட்டுமே..

அதனால் தன் போனை எடுப்பதும், பார்ப்பதும், பின் திரும்பவும் வைப்பதுமாய் இருக்க.. தன் அண்ணனின் நடவடிக்கையை பார்த்துக் கொண்டு இருந்த கிரிஜா…

“என்ன அண்ணா திரும்பவும் ஏதாவது பிரச்சனையா…?” என்று கிரிஜா கேட்டாள்.

ஏதோ நியாபகத்தில் இருந்த கிரிதரன் தன் தங்கை கேட்டது சரியாக கவனிக்காத காரணத்தால்…

“என்னம்மா என்ன கேட்ட…?” என்று கிரிதரன் கேட்டான்.

கிரிஜா திரும்பவும்… “ஏதாவது பிரச்சனையா அண்ணா…?ஒரு மாதிரி நெர்வஸா இருக்கிங்க…? எப்போவும் இந்நேரத்துக்கு வீட்டுக்கு வர மாட்டிங்க..அதான்.” என்று கேட்டாள்.

“அதெல்லாம் பிசினஸில் எந்த பிரச்சனையும் இல்லேம்மா…” என்று கிரிதரன் தன் தங்கையிடம் சொன்னதற்க்கு..

உடனே கிரிஜா… “அப்போ பர்சனல்ல ஏதாவது பிரச்சனையா அண்ணா… ”என்று சரியாக கணித்து கேட்டாள்.

“அதெல்லாம்… ஒன்னும் இல்ல…” ந்ன்று சொல்லும் போதே கிரிதரனின் பேச்சில் ஒரு பிசிறு இருப்பது போல் கிரிஜாவுக்கு தோன்றியது…

“அண்ணா உண்மைய சொல்லுங்க..ஏதாவது பிரச்சனையா…?” என்று கிரிஜா தன் அண்ணனிடம் கேட்கும் போதே கிரிதரன் திரும்பவும் தன் பேசியை எடுத்து தன் போன் சைலன் மோடில் இல்லையே என்பதை சரி பார்த்தான்.

“அண்ணா…” என்று அழுத்தமாகவும், குரலை கொஞ்சம் கூட்டியும் அழைத்து கிரிஜா கிரிதின் கவனத்தை தன் பக்கம் திருப்பினாள்.

கிரிதரனுக்கு அப்போதும்… இதை தங்கையிடம் எப்படி சொல்வது என்று யோசித்தவன் பின் ஏதோ முடிவு செய்தவனாய்…

“பத்து பத்தி தான் நினைத்தேன். குரு சார் வீட்டில் இருந்து அவரோடு காரில் போனாள். போன் பண்ணுன்னு சொன்னேன்..ஆனா இன்னும் பண்ணல..

இநேரம் அவங்க வீடு போய் சேர்ந்து இருந்தா ஒரு மணி நேரம் கடந்து இருக்கும்..வீட்டுக்கு போய் சாவுகாசமாய் போன் செய்து இருந்தாலும் இந்நேரத்துக்கு எனக்கு போன் வந்து இருக்கனுமே..?அதான் கொஞ்சம் டென்ஷனா இருக்கு…” என்று சொன்னதும்..

கிரிதரனின் பேச்சில் கிரிஜா குழம்பி போனவளாய்… “அண்ணா அவ உங்களை அண்ணாவா தான் நினைக்கிறாள்..உங்களை அவள் அண்ணா அண்ணா தானே கூப்பிடுவாள்.” என்று சொன்ன கிரிஜாவையே குழம்பி போய் பார்த்திருந்த கிரிதரன் புரிந்த பின்…

“நீ கதையையே மாத்த பார்க்கிற...பத்மினி மட்டும் இல்ல..நானு அவளை தங்கையா தான் நினைக்கிறேன்..புரியுதா…?

பத்து கிட்ட இது போல் ஏடாகூடாம பேசி காரியத்தை கெடுத்து விட்டுடாதே… முதல்ல ஒரு முறை தான் விட்டுட்டேன்..இந்த முறை…” என்று கிரிதரன் தங்கையிடம் பேசிக் கொண்டு இருந்தாலும்,

தன் கை பேசியை எடுத்து அவங்க கூப்பிட விட்டா என்ன…? நான் கூப்பிடுறேன். எனக்கு அவங்க பாதுகாப்பு தான் முக்கியம்.. என்று நினைத்த கிரிதரன் கூடவே..

கூப்பிடுறது தான் கூப்பிடுறேன்….அது என்ன பத்துக்கு கூப்பிடுறது..நேரா கீதாவுக்கு அழைக்கலாம் என்று முடிவு செய்தவனாய் கை பேசியின் மூலம் கீதாவை அழைத்தான்.

கீதா அப்போது தான் குழம்பி போனவளாய் வீடுக்குள் வந்த்து..பேசியின் அழைப்பில் அது யார்…? என்று கூட பாராது அதை ஏற்றவள்..

“அலோ…” என்று கீதா பேசிய அந்த ஒற்ற வார்த்தையிலேயே அவளின் குழம்பிய மனதை புரிந்துக் கொண்டவனாய்…

“கீதா ஏதாவது பிரச்சனையா…?” என்று அந்த பக்கம் பேசிய ஆண் குரலில் யார் அழைத்த்து என்று அப்போது தான் கீதா அழைப்பின் பெயரை பார்த்தாள்.

அதுஇல் கிரிதரன் என்று இருக்கவும்… நாம் என்ன பேசினோம்...வெறும் அலோ அதிலேயே நான் குழப்பமாய் இருக்கிறேன் என்று இவருக்கு எப்படி தெரிந்தது…? என்று நினைத்தவள்..

கூடவே எனக்கு இவர் குரல் கூட தெரியல..என்ற குற்றவுணர்ச்சியும் கீதாவின் மனதுக்குள் தன்னால் எழுந்தது…

அதன் விளைவாய் எப்போதும் தேவைக்கு அதிகமாய் பேசாத கீதா இம்முறை…

“குழப்பம் தான்..ஆனால் இந்த குழப்பம் பத்துவை பற்றியது.” என்று தன் மனதின் குழப்பம் மறைக்காது கிரிதரனிடம் கீதா சொன்னாள்.

கீதா முதலில் என்னை பற்றியது இல்லை என்பதில் அப்பாடா என்று உணர்ந்த கிரிதரன் தொடர்ந்து அவள் சொன்ன…பத்துவை பற்றியதில் என்று சொன்னதுமே..

கிரிதரனின் வாய் தன்னால்… “பத்துக்கு என்ன பிரச்சனை…?” என்று கொஞ்சம் பதறி போய் தான் கேட்டான்.

அந்த பக்கத்தில் இருந்து பதில் வராது அமைதியாகி விடவும்..அப்போது தான் கிரிதரனுக்கு தன் தவறு புரிந்தது…ஒரு பெண் பிள்ளைக்கு எவ்வளவோ பிரச்சனை இருக்கும்..

ஒரு ஆணாய் நான் பத்துவை கிரிஜா போல் தன் நினைத்தாலும், கீதாவின் மூது எனக்கு விருப்பம் இருந்தாலுமே, நான் பிரச்சனை என்ன என்று கேட்டால் சொல்லி விடுவார்களா…?

அதுவும் என் விருப்பமும் கீதாவுக்கு தெரியாத்யு..நான் பத்துவை எப்படி நினைக்கிறேன் என்று இவளுக்கும் தெரியாத போது...நான் எதிர் பார்த்து கேட்ட்து என் மட்த்தனம் தானே...என்று புரிந்தவனாய்..

“சாரி..சாரி… நான் அப்படி கேட்டு இருக்க கூடாது.” என்று கிரிதரன் வருந்தி கீதாவிடம் மன்னிப்பு கேட்டான்.

அழைப்பின் இந்த பக்கம் இருந்த கீதாவோ பதறி போய்… “அய்யோ அப்படி எல்லாம் நான் நினைக்கல…” என்று உடனே பதில் சொன்னவள்..

தொடர்ந்து… “ இது குரு சார் சம்மந்தப்பட்ட விசயமும் கூட...பத்து பத்தி மட்டும்னா நான் சொல்லிடுவேன்..ஆனா குரு சாரை பத்தி அவருடைய அனுமதி இல்லாம சொல்ல கூடாது தானே..அது தான் நான் யோசிச்சேன்.” என்று கீதா தன் மனதில் தோன்றியதை மறைக்காது சொன்னாள்.

இம்முறை கிரிதரன் பக்கத்தில் இருந்து எந்த பேச்சும் இல்லாது அமைதி காக்கா… இப்போது கீதா பதறி போனவளாய்… “அலோ அலோ..” என்று கீதா அழைத்ததும்…

கிரிதரன்… “ குருமூர்த்தியை பற்றி நான் விசாரிக்கிறேன்.” என்று சொல்ல…

கீதாவோ… “ அவர் கேரைக்ட் எல்லாம் தப்பு சொல்றது போல இல்ல..நல்ல மாதிரி தான்… அதுவும் இல்லாம பத்துக்கும் அவரை பிடிச்சி போய் இருக்கு… எனக்கு என்ன என்றால், அவர் வாழ்க்கை முறைக்கு இவ செட்டாவாளா..? என்பது தான்.” என்று கீதா கிரிதரன் கேட்டதற்க்கு பதில் அளிக்காது கேட்காத விசயத்தை விளக்கி சொன்னாள்.

அதற்க்கு கிரிதரன்.. “ பிடித்து இருந்தால் பெரிய விசயம் கூட ஒன்னும் இல்லாது போகும்.” என்று சொன்னவன்…

பின்… “ பிடித்து இருந்தாலும், அந்த பிடித்தம் எந்த வரை என்று தெரிய அவங்க பழகி பார்க்கனும்.” என்று சொன்னதற்க்கு..

கீதா… “ குரு சார் நாளை பத்துவை தனியா மீட் பண்ணலாம் என்று அழைச்சி இருக்கார்.” என்று சொன்னதும்..

கிரிதரன்.. “ அனுப்பு கீதா...நாளை மாலை அனுப்பு..அதுக்குள்ள என்னால் முடிஞ்ச வரை அவரை பத்தி விசயத்தை சேகரிக்கிறேன்.” என்று சொன்னான்.






































 
Top