Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Nayaganin Nayagi...13

  • Thread Author
அத்தியாயம்…13

கீதா கிரிதரனிடம் பேசிய பின், தன் தங்கை பத்மினியை பார்த்தாள். பத்மினியும் இப்போது குருமூர்த்தியின் மயக்கத்தில் இருந்து கொஞ்சம் தெளிந்தவளாய் தன் அக்காவையே பார்த்திருந்தவள் சகோதரி தன்னை பார்த்ததும் சட்டென்று…

“அவர் ரொம்ப நல்லவர் அக்கா….” என்று பத்மினி தன் சகோதரியிடம் குருமூர்த்திக்கு நற்சான்றிதழ வழங்கினாள்.

“அது எனக்கும் தெரியும்.” என்று சொன்ன கீதாவின் முகத்தில் தெரிந்த குழப்பத்தில் ..

“அக்கா இது தப்புன்னு உங்களுக்கு தோனுதா….?” என்று பத்மினி தன் சகோரியிடம் கேட்டாள்.

“தப்புன்னா… நீ எதை சொல்ற…? இந்த காதலையா…? இல்ல காதலிக்கும் நபரையா…?” என்று கீதாவின் தெளிவான பேச்சில், பத்மினி ஆச்சரியத்துடன் தன் சகோதரியை பார்த்தாள்.

பத்மினியின் எண்ண போக்கை புரிந்துக் கொண்ட கீதா…. “என்ன அக்கா இப்படி பேசுறான்னு பார்க்குறியா…? எனக்கு தான் கண் கெட்ட பிறகு தான் நான் சூரிய உதயத்தையே உணர்க்கிறேன்.

உனக்காவது கண் தெரியும் போதே சூரிய நமஸ்க்காரம் செய்யனும் என்று பார்க்கிறேன்… எனக்கு இந்த இடம் வந்த உடனே நீ சொன்ன..

எனக்கு ஏனோ இந்த இடம் சரியா படலேன்னு… ஆனா அப்போ உன் பேச்சை நான் கேட்டு இருந்தால், குறைந்த பட்சம் ஏன் எதற்க்கு என்று ஆராய்ந்தாவது பார்த்து இருந்தால்…” என்று சொல்லிக் கொண்டு வந்த பத்மினி …

அடுத்து அவள் ஏமாந்த அந்த குப்பை கதையை சொல்ல கூட கூசியவளாய் அதை விடுத்து… “அப்போ இருபத்தி ஏழு எட்டிய நிலையில், கல்யாணம் ஆகாத ஒரு பெண்ணாய்...கோயிலில் விளக்கு ஏற்றும் போது..வரும் பெண்கள்..எனக்கு ஆறுதல் கொடுக்கிறேன் என்ற பெயரிலும்,

எனக்கு தைரியம் தருகிறேன் என்ற பெயரிலும், …

“என்னம்மா இன்னுமா உனக்கு இடம் முடியல..” என்று கேட்டு விட்டு பின் அவங்களே…

கவலை படாதே..இந்த அம்மன் சக்தி உள்ள தெய்வம்..நிச்சயம் உனக்கு நல்ல இடமா கொண்டு வருவா…” என்று ஒரு பெண் மணி சொன்னாங்கன்னா..

பக்கத்தில் இருந்த இன்னொரு பெண் மணியோ….

“கொஞ்சம் சுமாரானா பைய்யனா இருந்தா கூட பண்ணிக்கோ… ஏன்னா இப்போ அவங்களே அழகான பெண்களாய் தான் கேட்கிறாங்க…” என்று சொன்னால்…

மற்றொரு பெண்ணே… “பார்க்க தான் சுமாரா இருக்க..கொஞ்சம் வசதியா இருந்திருந்தால் கூட சவரனோ டவுரியோ கொடுத்து இந்நேரம் கல்யாணம் செய்து முடிஞ்சி உன் புகுந்த வீட்டுக்கு போய் இருப்ப.. உன் தங்கை போல் கொஞ்சம் அழகாவது அந்த ஆண்டவன் கொடுத்து இருக்கலாம். என்று சொன்னதோடு கூடுதலாய்…

“மனச தளர விடாதேடியம்மா...இந்த அம்பாள் ரொம்ப சக்தி உள்ளவ… உனக்கானவனை காட்டுவான்.. என்ன அந்த காட்டுவது இரண்டாம் தாரமா இருந்தாலும் பண்ணிகோடியம்மா…

உனக்காக அடுத்தவளும் காத்து இருக்கப்படாதுலே..அது தான் சொல்றேன்..இருந்தாலும் கவலை படாதே நல்லா வேண்டிக்கோ…” என்ற பேச்சில் மனது ஆறுதலுக்கு கோயில் சென்று வந்துக் கொண்டு இருந்த கீதா...பின் அதையும் தவிர்க்க ஆரம்பித்து விட்டாள்.

இந்த இடம் அதாவது ஜெய் இவளை கல்யாணம் செய்ய சம்மதித்ததும்… கீதாவின் மனதில் தோன்றியது இது தான்..

“என்னையா சொன்னிங்க..சுமாரா இருந்தாலும் பண்ணிக்கோ...டவுரி கொடுத்தா தான் எனக்கு கல்யாணம் ஆனது போல் சொன்னது..

அதோடு இரண்டாம் தாரமா இருந்தாலும், பண்ணிக்கோ என்று சொன்னவர்கள் முன்…

“பாருங்க என் ஆம்புடையானை…” என்று காட்டும் வெறி தான் கீதாவுக்கு உருவானது.

அதில் முக்கியமானதை நினைக்க தவறி விட்டாள் என்று சொல்வதா..இல்லை ஏதாவது இருக்க போய் இந்த இடமும் தவறி விடுமோ என்று நினைத்தாளோ..

.ஆனால் அப்போது கீதாவின் மனநிலை இதுவாக தான் இருந்தது..எந்த காரணத்துக்காகவும் இந்த இடத்தை விட்டு விட கூடாது என்று..

அதனால் தான் தன் தங்கையின் மறுப்பை அவள் கேட்கவில்லை என்பதை விட.. அவளின் பேச்சை கவனித்திலேயே எடுத்துக் கொள்ள வில்லை என்று சொன்னால் சரியாக இருக்கும்.

அப்போது, தான் செய்த அந்த முட்டாள் தனத்தால், இப்போது தான் இழந்தது… தன்னை போல் தன் தங்கை அவசரப்பட கூடாது என்ற எண்ணம் தான் கீதாவுக்கு…

தன் எண்ணத்தை மறைக்காது பத்மினியிடம் அனைத்தையும் கொட்டி தீர்த்த கீதா.. தன் சகோதரியின் கை பற்றியவளாய்…

“குரு சார் நல்லவர்..ரொம்ப ரொம்ப நல்லவர் பத்து..இந்த காலத்தில் ரொம்ப ரொம்ப நல்லவரா இருந்தாலும் பிரச்சனை வரும் டீ…” என்று சொன்ன கீதா..

பின் தான் கவலை படும் விசயமான… “அது போல அவங்க நீ இருக்கும் வீட்டில் வந்து போனா நாளைக்கு நீ தனியா எங்காவது போனா..யாராவது உன் கிட்ட தப்பா நடந்துக்க முயன்றாளோ… இல்லை முயற்ச்சி செய்தாளோ…

அது கேவலம் தானே பத்து.. இதோ இப்போது என் தப்பு எதுவும் இல்ல..அந்த கட்டையில போறவன் செஞ்ச தப்புக்கு நான் தானே தினம் தினம் தவிச்சி போய் இருக்கேன்..

இதோ பூஜா அக்காவின் கதையை கேட்டுட்டு நம்மோடது ஒன்னும் இல்லேன்னு சொன்னாலும், நம்ம கூடவே பிறந்த அந்த குணம்.. அந்த வீடியோ யார் யார் பார்த்து இருப்பா..

போலீஸ் காரனுங்க யாராவது பார்த்து இருப்பாங்களா… ?பார்த்து இருந்தா அவங்க என்னை பார்க்கும் போது என்ன என்ன நினைப்பாங்க..? இதோ இப்போ உன் விசயம் உன் கவலை இருந்துக் கொண்டு இருந்தாலும், என் மனதின் ஓரத்தில் இதுவும் கூடவே ஓடிக் கொண்டு தான் இருக்கு…

அது தான் கொஞ்சம் நிதானமா யோசின்னு நான் சொல்றேன் பூஜா…” என்று பத்மினியின் கை பிடித்துக் கொண்டு… தன் சகோதரியின் நல்வாழ்க்கைக்காக அவளிடமே கெஞ்சிக் கொண்டு இருந்தாள் கீதா.. …

பின்… “உனக்கு புரியுதா பத்து…? ” என்று தன் வாழ்க்கைக்காக தன்னிடம் மன்றாடியவளின் கை பிடித்துக் கொண்ட பத்மினி…

“அக்கா எனக்கு உங்களை பற்றி தெரியாதாக்கா…? நீங்க இவ்வளவு தூரம் பேசுறது எனக்காக தான்னு ..நான் ஒன்னு சொல்லட்டுமா அக்கா…” என்று கேட்ட பத்மினி..

பின் சிரித்துக் கொண்டே… “நான் அவரை பத்தி சரியா புரிந்திருந்தேன் என்றால், நாளைக்கு அவர் இதை பத்தி..அதாவது நீங்க பயப்படும் விசயத்தை பத்தி, அந்த பெண்கள் பத்தி கண்டிப்பா என் கிட்ட பேசுவார் அக்கா..

அதுக்காக அவங்களுக்கு எதுவும் செய்ய மாட்டேன் என்று சொல்ல மாட்டார். அது நிச்சயம்..ஆனால் அந்த செய்வது என்னை எந்த அளவுக்கும் பாதிக்காது பார்த்துக் கொள்வார் அது நிச்சயம் அக்கா….” என்று நம்புக்கையுடன் பேசும் பத்மினியை பார்த்துக் கொண்டு இருந்த கீதாவின் மனதில் இது தான் தோன்றியது…

கணக்கு பார்த்து திருமணம் செய்ததால் தான் என் திருமண வாழ்க்கையில், அவனுடைய உண்மையான முகம் தெரிவதற்க்கு முன்னவே..அவனின் செயல்கள் அனைத்தும் என்னை உறுத்திக் கொண்டு இருந்ததோ…

பத்துவும், குருமூர்த்தியும் கணக்கை பார்க்காது, காதலை மட்டும் பார்த்ததால் தான், இதோ இவர்கள் மூன்று இல்லை நான்கு முறை பார்த்து இருப்பார்களா… ? பார்த்த அத்தனை சமயத்திலும், கூடவே நானும் இருந்தேன்..

எனக்கு உண்டாகாத அந்த நம்பிக்கை தன் தங்கைக்கு உருவாக..இல்லை இல்லை குருமூர்த்தி உருவாக்கிக் கொண்ட அந்த நம்பிக்கை காதலிம் மட்டும் தானோ…

காதல் இனி என் வாழ்க்கையில் கதையிலும், படத்தில் மட்டும் தான் பார்க்க முடியும் என்று நினைத்து ஒரு பெரும் மூச்சு விடும் அதே சமயத்தில்..

காதல் காதல் மட்டுமே..அதில் பணம் பார்க்காது அழகு பார்க்காது… வேறு எதுவும் பார்க்காது. காதலுக்காக மட்டுமே ஒருத்தன் குருமூர்த்தியை பற்றிய விசாரணையை தொடங்கி இருந்தான்.

மறு நாள் மாலை குருமூர்த்தி போன் எதுவும் செய்ய வில்லை..மாலை ஐந்து மணிக்கு பத்மினி வீட்டுக்கே வந்து விட்டான்… வீட்டுக்கு வெளியில் தான் பத்மினியின் ஜெராக்ஸ் கடை இருப்பதால்… அப்போது தான் பிரதி எடுத்து முடித்து கஸ்ட்டமர்கள் வசம் அதை கொடுத்து விட்டு..

பிரதிக்கு கணக்கு பார்த்து காசை வாங்கிய சமயத்தின் தன் வீட்டு முன் கார் வந்து நிற்கவும்..காரை பார்த்தே வந்தது யார் என்பதை அறிந்துக் கொண்டவள் முகம் முழுவதும் புன்னகையே..

வீட்டில் இருந்த கீதாவின் கவனம் மொத்தமும் வாசல் பக்கமே இருந்ததால், அவளுமே காரின் சத்தத்தில் தான் பார்த்துக் கொண்டு இருந்த வேலையை விட்டு விட்டு தன் ஈர கையை முந்தியில் துடைத்த வாறே ஓடி வந்து குருமூர்த்தியை பார்த்து..

“வாங்க.. சார் வாங்க…” என்று அழைக்க.. பத்மினியும் தன் கடையில் இருந்து வெளி வந்து அவனை பார்த்து புன்னகை புரிந்தாள்.

இருவரையும் பார்த்து சிரித்த குருமூர்த்தி பத்மினியை பார்த்து… “என்ன ரெடியா இருக்கியா…?” என்று அவளின் எளிமையான அலங்காரத்தை ரசித்த வாறே பத்மினியிடம் கேட்டாள்.

பத்மினியோ… “ரெடியாவா…? எங்கே…? என் கிட்ட சொன்னிங்களா என்ன…?” என்று கேட்டாள்.. பத்மினி அவ்வாறு கேட்டதில் கோபத்தை விட ஒரு உரிமையே அவள் குரலில் மேலோங்கி காணப்பட்டது…

குருமூர்த்தி அவளின் அந்த உரிமையை ரசித்தவனாய்… “என்ன பத்து இன்னைக்கு பழக கூப்பிட்டேனே மறந்துட்டியா…?” என்று ஒரு கள்ளப் புன்னகை புரிந்தவனாய் பத்மினியை பார்த்து கேட்டான்.

முதல் நாள்..குருமூர்த்தியுடனான அந்த முதல் சந்திப்பில், அவன் முகத்தை பார்க்கும் முன்னவே, அவன் பேசிய அந்த பேச்சை கேட்ட பின்னும், தன் சகோதரியின் பிரச்சனை கண் முன் பூதகரமாய் இருந்த போதிலுமே…

முதல் முறை இவர்களை பார்த்து லேசாக மிக மிக லேசாக அவன் சிந்திய அந்த புன்னகையை அப்போதே பார்த்து நசித்தவள் ஆயிற்றே நம் பத்மினி..

அப்படி பட்ட பத்மினி இன்று அவனை பற்றி அனைத்தும் அறிந்தவளாய்.. தனக்காக சிந்திய இந்த கள்ளப்புன்னகையை பார்த்து ரசிக்காமல் இருப்பாளா…? அது ரசிப்போடு நின்று விடுமா…?

ஆம் ரசிப்பையும் தான்டி இம்முறை அவனிடம் அந்த சிரிப்பில் பத்மினி மயங்கி அவன் முகத்தையே கோபம் என்று சும்மா பேசி இருந்த அந்த பேச்சை கூட மறந்தவளாய் பார்த்துக் கொண்டு நின்று விட்டாள்.

பத்மினியின் அந்த மயங்கிய தன்மையை குருமூர்த்தி கண்டு கொண்டாலுமே, அதை பற்றி மேலும் பேசாது இதை பற்றி இவள் சகோதரி முன் பேசுவது முறை அல்ல..

அதுவும் இப்போது அவள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் அடிவாங்கி இருக்க… என்று ஏதோ நினைத்து வேண்டாம் என்று முடிவு செய்தவனாய்..

இப்போது தன் வேடிக்கை பேச்சை கை விட்டு விட்டு … “நேத்து சொன்னேன்...நாளைக்கு போன் செய்து எந்த இடம் சொல்றேன் என்று..ஆனால் நான் என் வீட்டுக்கு போகும் முன் என்னை பத்திய விசாரணை என் அலுவலகத்தில் தொடங்கி விட்டதா..தெரிந்து..

சரி அனைத்தும் விசாரித்து முடிக்கட்டும்..என்று காத்திருந்து,,இதோ ஒரு மணி நேரம் முன் என்னை பற்றிய விசாரணை அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்து விட்டது என்று அறிந்த பின் இதோ நேராக இங்கு வந்து நிற்க்கிறேன்.” என்று சொன்னவன் கீதாவின் முன் தலை வணங்கி…

“ஏதோ பார்த்து என்னை பத்தி முன்ன பின்ன ஏதாவது இருந்தாலும், கொஞ்சம் கருணை காட்டி, என் வாழ்க்கையில் விளக்கு ஏத்தி வெச்சிடு தாயே…” என்று சொன்ன அவன் உடல் மொழி பாவனையிலும், அவன் பேசிய பேச்சிலும் இரு பெண்களுமே சிரித்து விட்டனர்..

அதுவும் கீதாவுக்கு கண்ணில் நீர் வழியும் அளவுக்கு சிரித்து விட்டு… “குரு சார் கவலை படாதிங்க… உங்களை பத்து முன்னவும் சரி பின்னவும் சரி எந்த தப்பான பேச்சும் வரல.. அதனால தாரளமா என் தங்கை உங்களுக்கு வாழ்க்கை கொடுப்பா கவலை படாதிங்க…” என்று சொன்ன கீதா..

அவன் செய்த பாவனை போல்.. தன் கை கொண்டு அவனை ஆசிர்வாதம் செய்வது போல் செய்ய….

இம்முறை பத்மினி தன் சகோதரியை பார்த்து புன்னகையோடு, அவள் கண்களில் இருந்து கண்ணீரும் வந்தது.. இவள் இது போல் இனி சிரிப்பாளா…? என்று பயந்து தானே இருந்தாள்.

குருமூர்த்தி எப்படியாவது தன் சகோதரிக்கு விவாகரத்து வாங்கி கொடுத்து விடுவான்.. அவளுக்கு அந்த நம்பிக்கை அந்த வீடியோ வந்த உடன் குருமூர்த்தி கேசையே திசை திருப்பிய அவன் சாமர்த்தியத்தை பார்த்ததுமே தெரிந்து விட்டது..

ஆனால் அதற்க்கு அடுத்து தன் சகோதரி என்ன செய்வாள்..? முன் கூட அவள் கல கலப்பாக மற்றவர்களிடம் பழக மாட்டாள் தான்..ஆனால் சோகம் என்பது இல்லை..

அவ்வப்போது தந்தைக்கு ஏதாவது உடல் நிலை சரியில்லை என்றால் அவள் முகத்தில் சோகம் தட்டும்..தந்தைக்கு உடல் நிலை சரியான பின் அவள் சதாரணமாக ஆகி விடுவாள். ஆனால் இப்போது இந்த பிரச்சனை அது போல் இல்லையே…

அவளை எப்படி தேத்துவது என்று பயந்துக் கொண்டு இருந்தவளுக்கு, கீதாவின் இந்த புன்னகை முகம் அவளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது… அதற்க்கு காரணமானவை அவள் காதலோடு பார்க்க..அதை அவனும் பார்க்க..

இவளின் இந்த பார்வை தொடர்ந்தால், அவள் சகோதரி இருக்கிறாள் என்று கூட பார்க்காது நான் ஏதாவது செய்து விடுவேன்…எவ்வளவு நேரம் தான் நல்லவானாகவே இருப்பது…? என்று நினைத்தவனாய் கீதாவை பார்த்து…

“சரி கீதா நாங்க கிளம்புறோம்…” என்று கீதாவிடம் விடைப்பெற்றவன் பத்மினியை பார்த்து காரில் ஏறும்மாறு சைகை செய்தான்.

கீதா… “வீட்டுக்கு வாங்க…” என்ற அழைப்பில் பத்மினி காரில் அமரலாமா…? வேண்டாமா…? என்று தயங்கி நிற்க..

திரும்பவும் அவளை பார்த்து … “ஏறு.. “ என் சொன்னவன்..

கீதாவிடம்… “இப்போ நான் வீட்டுக்கு வந்தா உங்க அப்பா கிட்ட என்ன என்று என்னை அறிமுகம் செய்து வைப்பிங்க…?” என்று கேட்டான்.

அதற்க்கு கீதா கொஞ்சம் தயங்கிய வாறு… “லாயர் என்று தான்.” என்று கீதா சொல்லும் போதே அவள் பேச்சில் அவ்வளவு தயக்கம்…

“நான் உங்க வீட்டுக்குள் நுழைவது, லாயாரா மட்டும் இருக்க கூடாது...மாப்பிள்ளையாகவும் இருக்கனும்.. அதான் இப்போ வேண்டாம்.. அதுக்கு நேரம் வரும். எல்லாம் நல்ல படிய முடிஞ்ச பின் வர்றேன்.” என்று சொல்லி கீதாவிடம் விடைப்பெற்றான்.

குருமூர்த்தி காரை எடுக்கவும் எங்காவது பீச் பார்க்க..இல்லை ஓட்டல் கூட்டிக் கொண்டு போவான் என்று பத்மினி நினைத்திருக்க…அவனோ அவளை அழைத்துக் கொண்டு சென்ற இடம் வண்டலூர் பூங்கா..

“இங்கேயா…? என்று கேட்டுக் கொண்டே பத்மினி தயக்கத்துடன் காரை விட்டு இறங்கினாள்.

“இந்த இடத்துக்கு என்னம்மா குறச்சல்..? இங்கு நமக்கு எந்த வித டிஸ்டப்பும் இருக்காது தெரியுமா…? என்று சொன்னவன் அவன் காரில் இருந்து எடுத்து வந்த ஒரு பெட்சீட்டை மரத்தின் அடியில் போட்டு விட்டு அதில் படுத்தவனாய்…

இரு கையையும் தலைக்கு கீழ் வைத்துக் கொண்டு… “ ம் சொல்...உனக்கு என்னை பத்தி ஓரளவுக்கு தெரியும்.. இந்த தெரிந்ததில் உன் மனசுக்கு என்ன விசயத்தில் இடறுது…?” என்று எடுத்த உடன் நேரிடையாக பேச்சை ஆரம்பித்து விட்டு தான் ஒரு நல்ல வக்கீல் என்பதை நிரூபித்து விட்டான்..

நல்ல வக்கீல் நல்ல காதலனாக இருப்பானா…? அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.











,














 
Active member
Joined
May 12, 2024
Messages
199
I like the approach of Vakkeel sir 😍😍😍
 
Top