Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Nayaganin Nayagi...14

  • Thread Author
அத்தியாயம்….14

குருமூர்த்தி தான் சொல்லாமலேயே தன்னை பற்றி புரிந்துக் கொள்வான் என்று நினைத்துக் கொண்டு அவனோடு வந்த பத்மினிக்கு, சாவகாசமாய், அவன் படுத்துக் கொண்டு கேட்ட விதத்தில் அவளுக்கு ஏமாற்றமும் கோபமும் கலந்த வந்தது..

அதன் விளைவு… “படுக்கை மட்டும் தானா… இல்ல..சாப்பிட ஏதாவது எடுத்து வந்து இருக்கிங்களா…?” என்று சுள் என்று கேட்டாள்.

அதற்க்கு குருமூர்த்தி சிரித்துக் கொண்டே… “அதை நான் எடுத்துட்டு வர தேவையில்லை.. நான் இங்கு வந்த உடனே அது தன்னால் வந்து விடும்.” என்று அவன் சொல்லி வாய் மூடுவதற்க்குள் …

அங்கு சிற்றுண்டி வைத்திருப்பவர் இரண்டு தட்டி ஏதேதோ வைத்து எடுத்துக் கொண்டு வந்தார். அவர் வந்ததும் படுத்துக் கொண்டு இருந்த குருமூர்த்தி எழுந்து அமர்ந்தவனாய்…

“என்ன ஏழுமலை இன்னைக்கு வியாபாரம் எப்படி போச்சி…? “ என்று கேட்டுக் கொண்டே அவர் கையில் இருக்கும் இரு தட்டையும் வாங்கிய குருமூர்த்தி ஒன்றை அவள் முறைப்பை சட்டை செய்யாதவனாய் பத்மினியிடம் கொடுத்து விட்டு..

இன்னொரு தட்டில் இருக்கும் உணவை வாயில் போட்ட வாறே…

“அப்புறம் ஏழுமலை… “ என்று தன்னிடம் கேட்ட அதே ரீதியில் அவனிடமும் பேசி வைதத்தில், பத்மினிக்கு இன்னும் தான் கடுப்பு கூடியது..

அந்த கடுப்பின் எதிரொலியாய் அவளின் கோபப்பார்வையும் இன்னும் கூட குருமூர்த்தையை இன்னும் முறைத்து பார்த்து வைத்தாள்.

குருமூர்த்தியின் கேள்விக்கு… “ நல்லா இருக்கேன் குரு சார்…” என்று சொன்ன அந்த ஏழுமலை..பின்.. “என்ன சார் ஒரு வாரமா ஆளே காணும்…” என்று கேட்டதில், குருமூர்த்தி ஏழுமலையின் கேள்விக்கு பதில் அளிக்கும் முன்…

பத்மினியிடம்.. “நான் கேசு சம்மந்தமா தனியா ஏதாவது யோசிக்கனும்..இல்ல அதை பத்தி படிக்கனும்.. இல்ல ஒரு சிலர் என் கிட்ட தனிமையில் பேச நினைப்பாங்க.. வீட்டில் அலுவலகத்தில் அதுக்கு சாத்தியம் இல்ல..

அதனால் அவங்ல இங்கே வர வழிச்சிடுவேன்.. என் பர்சனலுக்கு என்று வந்தது இன்னைக்கு தான். அதான் இங்கு எனக்கு ரொம்ப பழக்கம்.” என்று பத்மினியிடம் விளகியவன்..

ஏழுமலையின் பக்கம் திரும்பி…. “கொஞ்சம் பர்சனல் ஒர்க் ஏழுமலை. அதான் வரல…” என்று அவருக்கும் பதில் அளித்தான்..

ஏழுமலைக்கு குருமூர்த்தி பத்மினியிடம் அவசர அவசரமாய் விளக்கி சொன்னதிலேயே, பத்மினி குருமூர்த்திக்கு யார் என்று புரிந்து விட்டது… குருமூர்த்தி ஏழுமலைக்கு ஐந்து வருடம் பழக்கம் ஆயிற்றே..

குருமூர்த்தி யாரையும் மதித்து இது போல் தன்னை பற்றிய சுய விளக்கம் சொல்ல மாட்டான் என்று தெரிந்தவராய்..

பத்மினியை பார்த்து… “சார் ரொம்ப ரொம்ப நல்லவர்ம்மா… நீங்க ரொம்ப அதிர்ஷ்ட்டசாலி..” என்று சொன்ன ஏழுமலை பின் என்ன நினைத்தாரோ…

“அவர அன்பா பாத்துக்கோம்மா..அவர் பேச்சு தான் அப்படி இப்படி இருக்கும்..ஆனா மனசு சொக்க தங்கம்மா…” என்று குருமூர்த்திக்கு நற் சான்றிதழ் வழங்கிய ஏழுமலை… இன்னும் இங்கு இருப்பது அநாகரிகம் என்று நினைத்தவராய்…அங்கிருந்து சென்று விட்டார்.

எழுமலை சென்றதும்…

“நீங்க சொக்க தங்கமுன்னு சொல்றார்..என்ன இருபத்தி நாளு கேரைட் தங்கம்மா…?” என்று கேட்டாள்.

அதற்க்கு குருமூர்த்தி….

“அதை நான் சொல்வதை விட, நீயே உரசி பார்த்து தெரிஞ்சிக்க..அப்போ தான் சரியா இருக்கும்..” என்று சொல்லிக் கொண்டே அமர்ந்த வாக்கிலேயே அவள் பக்கம் சாய்ந்தான்..

அவனை விலக்கி விட்டவள்…

”நீங்க என்னை பேச தான் கூப்பிடிங்க…அதனால பேச்சு மட்டும் தான்…” என்று தன் ஒரு விரலை அவன் முன் நீட்டி பேசியவளின் செய்கை… ஏதோ ஒரு கண்டிப்பு ஆசிரியை தன் மாணவனை பார்த்து மிரட்டுவது போல் இருந்தது.

நீட்டிய விரலை பற்றிக் கொண்ட குருமூர்த்தி… “அப்படியா நான் பேசலாம் என்று மட்டுமா சொன்னேன்… நல்லா யோசி…” என்று பத்மினியை யோசிக்க வைத்து விட்ட குருமூர்த்தி, பற்றி இருந்த பத்மினியின் கை விரலை மட்டும் அல்லாது, அவளின் அடுத்து அடுத்த விரல்களையும் மெல்ல நீவி விட்டுக் கொண்டு இருந்தான்.

பத்மினியோ அவன் என்ன சொன்னான்…? என்ற யோசனையில் தன் கைய் அவன் கை பிடியில் இருப்பதையோ… அவனின் நீவலையும் உணராது.. என்ன சொன்னான்…? என்று அவள் எவ்வளவு யோசித்தும் அவள் நியாபகத்தில் வராததால்,

“நீங்களே சொல்லுங்க…” என்று சொன்னாள்.

இப்போதும் தன் கை பிடி அவன் கைய் வளையத்தில் தான் இருக்கிறது என்று அவள் உணராது தன் கையை அவள் இழுத்துக் கொள்ள வில்லையா…? இல்லை கை தானே...இருக்கட்டும் என்று விட்டு விட்டாளா…? தெரியவில்லை..

ஆனால் அவள் கையை உருவிக் கொள்ள எந்த முயற்ச்சியையும் செய்ய வில்லை என்பது மட்டும் நிச்சயம்.

குருமூர்த்தி அவளை உணர்ந்தவனாய் சிரித்துக் கொண்டே…

“ பழகியும் பார்க்கனும் என்று தானே சொன்னேன்.” என்று அவன் சொன்ன வார்த்தையை காதில் வாங்காது அவன் சிந்திய அந்த சின்ன புன்னகையில் எப்போதும் போல் அவள் மயங்கி தான் போனாள்…

இப்போது குருமூர்த்திக்கு சிரிப்பு இன்னும் பெரிதாக..பத்மினியின் மயக்கமும் அவனின் மூழ்க… குருமூர்த்தி பற்றி இருந்த கையை பிடித்து ஒரு இழு இழுக்கவும்...மொத்தமாய் அவன் பக்கம் சாய்த்தும் தான் தன் நிலை உணர்ந்தவளாய்…

“விடுங்க ..விடுங்க..என்ன பண்றிங்க…? பப்ளிக் ப்ளேஸ்ல என்ன பண்றிங்க?…” என்று அவனை விட்டு தள்ள அமர முயற்ச்சி செய்தாளே ஒழிய...அவனை விட்டு இம்மியும் அவளாள் அவளை விட்டு நகர்த்த முடியவில்லை..

பின்…

“ப்ளீஸ்…” என்ற அவளின் கெஞ்சலில் கொஞ்சம் மதிப்பு இருந்தது போல்..லேசாக மிக மிக லேசாக தான் தன்னை விட்டு விளக்கி வைத்தானே தவிர..முழுவதுமாய் விளக்காது அவள் தோள் மீது கை போட்டுக் கொண்டவ…

“நீ என்னை பார்க்கும் போது எல்லாம் இது போல் பார்வை பார்த்து வைக்கிற… அது பார்த்தும் நான் சும்மா இருக்க முடியுமா..? நீயே சொல்..

அதுவும் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன், உன் அக்கா எதிர்க்க அந்த பார்வை பார்க்குற..கிட்ட வந்தா…சீ நீங்க ரொம்ப மோசம் என்பது போல சொல்றது.. இது என்ன நியாயம்…?” என்று குருமூர்த்தி நியாயம் கேட்ட விதத்தில் அவளாள் தலை நிமிர்ந்து அவனை பார்க்க முடியாதும் போய் விட்டது.

“பத்து..பத்தும்மா…” குனிந்து இருந்த அவளின் தலையை நிமிர்த்திய குருமூர்த்தி…

“என்னை நீ பார்க்குறதும்..நான் உன்னை இது போல் அணைக்கிறதும்..தப்பு இல்ல பத்தும்மா..இன்னும் கேட்டா இது போல் நாம செய்யலேன்னா தான் தப்பு…” என்று குருமூர்த்தி சொல்லிய தினுசில் பத்மினி அவன் கண்ணை பார்த்தாள்..

அவள் பார்வையில் கண்ணை சிமிட்டி விட்டு…

“பார்க்கலேன்னா தான் நமக்குள்ள கெமிஸ்ட்டி சரியில்லேன்னு அர்த்தம்… என்று சொன்னவன் மேலும் அவன் கேட்ட கேள்வியான…

“இந்த பார்வை வேறு யாரையாவது உனக்கு பார்க்க தோனுமா…? அவன் எவ்வளவு அழகானவனாய் இருந்தாலும்… “ என்ற குருமூர்த்தியின் கேள்வியில் பத்மினி அவசரமாய்…

“இல்லை…” என்று தலையாட்டினாள்..

“அது தான் எனக்கும்.. நானும் நிறைய பெண்கள் கூட பழகி இருக்கேன்..அவங்க என்னை விரும்புறதா கூட சொல்லி இருக்காங்க.. ஆனா அவங்க கிட்ட உன் கிட்ட இதோ உன் தோள் மீது கை போட்டதற்க்கே..” என்று சொல்லிக் கொண்டு வந்தவன்..

தன் இன்னொரு கையை அவள் பக்கம் நீட்டி…

“ இதோ என் ரோமோம் எல்லாம் மேலேழுந்து நிற்குதே..இது போல் மற்ற பெண்கள் என் மீது மேல வந்து விழுந்தாலும் வராது.

அதே போல் தான் இதோ நான் உன் தோள் மீது கை போட்டதில் இருந்து..இதோ உன் சிறு முடி எல்லாம் கூச்சத்தில் நிற்க்கிறதே…” என்று சொல்லிக் கொண்டே அவள் கழுத்துப் பகுதியில் தன் உதட்டை பதித்தான்.

இப்போது பத்மினிக்கு நிஜமாகவே கோபம் வந்து விட்டது. அவன் மார்பின் மீது கை வைத்து தள்ளி விட்டு கொஞ்சம் தன்னை விட்டு தூர விலக செய்தவள்..

“வேண்டாம் நாம பேசலாம்..பேச மட்டும் செய்யலாம்..இது போல் பப்ளிக்கில் மத்தங்க இது போல் நடந்தாலா நான் அவங்களை கண்ட மேனிக்கு திட்டுவேன்..இப்போ நானே எனக்கு பிடிக்கல.” என்று சொல்லி பத்மினி குருமூர்த்தியை கண்டித்தாள்.

பத்மினியின் இந்த பேச்சில் குருமூர்த்திக்கு கோபம் வருவதற்க்கு பதில் ஒரு நிம்மதி தான் மனதில் எழுந்தது… இதோ இப்போது பத்மினியிடம் தான் நடந்துக் கொண்டது அவனையும் மீறிய செயல் தான்..

வந்ததும் அவன் சொன்ன பழகலாம் என்பது எல்லாம் சும்மா ஒரு பேச்சுக்கு தான்..அவனுக்குமே பொது வெளியில் இப்படி மற்றவர்கள் நடந்துக் கொண்டால் பிடிக்காது தான்..

இதோ இப்போது தங்களை சுற்றி யாரும் இல்லை தான்.. அவன் அமர்ந்த இடம் எப்போதும் அவன் வரும் இடம் தான்..அங்கு பெரும் பாலோர் யாரும் வர மாட்டார்கள்.. அதனால் தான் தனிமை வேண்டும் என்றால், அவன் இங்கு வந்து விடுவான்..

இப்போதும் பத்மினியிடம் மனம் விட்டு பேச மட்டும் தான் இங்கு வந்தது… ஆனால் அது என்னவோ பத்மினியின் அந்த பார்வை குருமூர்த்தியை வெகுவாக ஆட்டி படைத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

என்ன தான் இது தனிமையான இடம் என்றாலும், இது பொது வெளி தானே..இங்கு நான் இப்படி நடந்து கொண்டது தவறு தான் என்று நினைத்து தான் பத்மினி தன்னை தள்ளியதுமே அவனே தூரம் விலகிக் கொண்டான்.

இல்லை என்றால் பத்மினியால் அவனை தள்ளுவது என்பது நடவாத காரியமே… தன்னை தள்ளியதோடு மட்டும் அல்லாது தன்னை பார்த்து பேசிய பேச்சில்..

“நாம் இவளை பற்றி கணித்தது சரியே…” என்று தன்னையே மெச்சியவனாய்..

குருமூர்த்தி பத்மினியிடம் .. “சாரி பத்து..சாரி நான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன் சாரி… “ என்று சொல்லி மனதார மன்னிப்பு கேட்டான்..

பத்மினியும் குருமூர்த்தியிடம் இதற்க்கு மேல் கோபத்தை இழுத்து பிடிக்க முடியாதவளாய் போனாள்..

இருவருக்கும் இடையே சிறிது நேரம் அமைதி நிலவியது.. பின் குருமூர்த்தியே தன் பேச்சை ஆரம்பித்தான்…

“உங்க அக்காவுக்கு என்னை பற்றி என்ன தயக்கம் பத்து…? ”

நேற்று குருமூர்த்தி தன் விருப்பத்தை பத்மினியிடம் சொன்ன போதே, கீதா தன்னை பார்க்கும் போது தான் பேசிய பேச்சில், முதலில் அதிர்ச்சியாகி பின் அங்கு குழப்பம் குடிக் கொண்டதை குருமூர்த்தி கவனித்தே இருந்தான்..

அவனுக்கு ஒரு யூகம் அது சரி தானா…? என்று தெரிந்துக் கொள்ள தான் குருமூர்த்தி பத்மினியிடம் உன் அக்காவுக்கு என்ன குழப்பம் என்று கேட்டது.

ஆனால் அதற்க்கு பத்மினி என்ன என்று சொல்லாது அமைதியாக அவளையே பார்த்திருந்தாள் பத்மினி…

இப்போது பத்மியின் பார்வையில் ஈர்ப்போ...மயக்கமோ..ஏன் கோபம் கூட அவள் கண்ணில் தெரியவில்லை… அதற்க்கு என்று அந்த பார்வையில் வெறுமையும் இல்லை..

ஆனால் பத்மினியின் பார்வை குருமூர்த்தி முகத்தில் மட்டுமே படிந்து இருந்தது…

பத்மினியின் அந்த பார்வையில் குருமூர்த்தி முதலில் குழம்பி போய் பின் எதோ நினைத்துக் கொண்டவனாய்…

“கீ.. என்று ஆரம்பித்தவன் உங்க அக்கா…” என்று குருமூர்த்தி தன் பேச்சை தொடங்கும் முன் பத்மினி கை நீட்டி அதை தடுத்தவனாய்…

“எங்க அக்கா உங்களோட சின்ன வயசு தான்.. அதனால் உங்களுக்கு இயல்பா வர்ற அவள் பெயரை வெச்சே பேசுங்க….”

குருமூர்த்திக்கு தன் மனம் பத்மினியின் பக்கம் சாய்கிறது என்று அவன் எப்போது உணர்ந்தானோ அன்றில் இருந்தே..கீதாவை அழைப்பதில் அவனுக்கு குழப்பம் ஏற்ப்பட்டது..

குருமூர்த்தி தன்னோடு பேசும் பெண்கள் தன்னை விட வயதில் சிறியவர்களாய் இருந்தால் எந்த தயக்கமும் இல்லாது பெயர் வைத்து தான் கூப்பிடுவான்..

எப்போதும் பெண்களுக்கு உண்டான மரியாதை நம் மனதில் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் அவன்.. நேரில் மரியாதையாக … மேடம் என்று அழைத்து விட்டு,

அந்த பெண்மனி அந்த இடத்தை விட்டு அகன்றதும்.. தன் கூட இருப்பவர்களிடன்..

“சரியான நாட்டு கட்டை என்று சொல்வதும்.. பார்த்தாலே பத்திக்கும் போல சம ஹாட் மச்சி என்று அந்த பெண்ணின் பின் பேசும் பேச்சை அவன் கேட்டு இருக்கிறான்..

ஆனால் குருமூர்த்தி அப்படி கிடையாது… அவர்கள் தன்னோடு வயதில் சிறியவர்கள் என்று தெரிந்தால் பெயர் வைத்து தான் அழைப்பான்..

பெரியவர்கள் இருந்தால் அந்த நபரை பொறுத்து மேடமோ அக்கா என்றோ கூப்பிடுவான்.. ஆனால் கீதாவை முதலில் கீதா என்று அழைத்து விட்டு இப்போது பத்மினியின் அக்கா என்பதில் அவன் அழைப்பில் தடுமாற்றம் ஏற்ப்பட்டது]

அவனின் அந்த தயக்கத்தை உணர்ந்த பத்மினி குருமூர்த்தியிடம் சொல்லும் போதே அவள் மனது இதை தான் நினைத்தது….

நான் உன்னை நீ சொல்லாமலேயே உன்னை அறிகிறேனே.. அப்படி தான் என் பிரச்சனை என்ன…? எனக்கு உன்னை திருமணம் செய்தால் என்ன பிரச்சனை வரக்கூடும் என்று நான் சொல்லாமலே அதற்க்கு உண்டான ஏற்பாட்டை நீ செய்ய வேண்டும் என்று நான் நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லையே… என்று பத்மினி நினைத்து முடிக்கும் வேளயில்…

“கீதாவுக்கு அந்த பெண்கள் நாம கல்யாணம் ஆன பின்னும் வந்தால், உன்னையும் அது போல் பார்ப்பாங்க…அது தானே கீதா கவலை…? “ என்று குருமூர்த்தி கேட்டதில், இங்கு வந்த்தில் இருந்து பத்மினியின் முகத்தில் முதலில் கோபம்..பின் மயக்கம்..பின் அதில் ஒரு ஆதங்கம் என்று மாறி மாறி வந்து போனது..

ஆனால் குருமூர்த்தியின் இந்த பேச்சில் பத்மினியின் முகத்தில் அப்படி ஒரு நிம்மதி வந்து அவள் முகத்தில் தங்கி விட்டது.. அவளின் இந்த நிம்மதிக்கு காரணம் நான் இவனை பத்தி சரியாக தான் கணித்து இருக்கிறேன் என்பதே காரணம் ஆகும்.

பத்மினியின் முகத்தையே பார்த்திருந்த குருமூர்த்திக்கு அவள் முகத்தில் தங்கிய நிம்மதியில்…

“என்ன பத்து எனக்கு இது தோனாதா…? என்னை பத்தி யார் என்ன நினைத்தாலும் எனக்கு கவலை இல்லை..ஆனால் உன்னை பத்தி யாராவது தவறாய் நினைப்பது என்ன..? பார்த்த கூட அவ்வளவு தான்..

உன்னை யாரும் தவறாய் நினைக்காதே வேலையை நான் ஆராம்பித்து விட்டு தான் இங்கு வந்தேன்.” என்ற அவன் பேச்சில் நெகிழ்ந்து போய் அவனை பார்த்தாள்.

“பத்தும்மா இனி நீ என் பொறுப்பு. என் கடமை இதுக்கு எல்லாம் இந்த பார்வை தேவையில்லை..அதே போல் தான் என்னுடைய அனைத்திற்க்கும் உன் பொறுப்பு இருக்கு புரியுதா…? பத்து.

நான் இது போல் பெண்களின் சார்பாய் வாதாடுவதால என்னை பத்தி பல செய்திகள் வெளியில் உலாவுவது எனக்கு தெரியும்.. அதை பத்தி எனக்கு பெரியதாய் பாதிப்பும் இல்லை..எனக்கு கவலையும் இல்லை..

நாளைக்கு நம் திருமணத்திற்க்கு பின் இது போல் பேச்சு உன் காதில் விழலாம். விழலாம் என்ன விழும். கண்டிப்பா விழும்.. அப்போ இந்த பேச்சால் நமக்குள்ள நாளை பின்ன எந்த பிரச்சனையும் வரக்கூடாது.

அதனால் தான் என்னை பத்தின அத்தனையும் ஒன்னு விடாம சொன்னேன்.. அதாவது நம்ம கல்யாணம் பின்னும் நான் அவங்களுக்கு செய்யும் உதவியை செய்வேன்.” என்று சொல்லி விட்டு குருமூர்த்தி பத்மினியை பார்த்தான்.

பத்மினி ஏதாவது சொல்வாள் என்று..ஆனால் பத்மினி எதுவும் பேசாது அமைதியாக குருமூர்த்தியின் முகத்தையே பார்த்திருந்தாள்.. அதாவது நீங்க பேசுங்க நான் கேட்கிறேன் என்ற பாவனையே அவள் பார்வையில்..மீண்டும் குருமூர்த்தி தான் தன் பேச்சை தொடர வேண்டியதாகி விட்டது..

பின் அவனே… “ஆனால் உனக்கான பெயருக்கும் நான் தான் பொறுப்பு அதனால நீ கல்யாணம் ஆன பின்..நாம முன் இருந்த வீட்டில் இருக்க வேண்டாம்… வேறு வீடு பார்க்க சொல்லி இருக்கேன்.

ஆனால் பூஜா அக்கா எப்போவும் நம்ம கூட தான் இருப்பாங்க.. அவங்களே விருப்ப பட்டு திருமணம் செய்ய நினைத்தால் தான் நான் செய்து வைப்பேன்..

அப்படி இல்லாத பட்சத்தில் அக்கா எப்போதும் நம்ம கூட தான் இருப்பா..நாளைக்கு இதை வைத்தும் ஒரு பிரச்சனையும் வரக்கூடாது. ஆ முக்கியமானதை மறந்துட்டேன்..

நம்ம கல்யாணத்துக்கு முன் கீதாவுக்கு ஒரு நல்ல வழி..அதாவது அவளுக்கு ஒரு கல்யாணம் செய்த பின் தான் நம் திருமணம்.” என்று கிரிதரனை மனத்தில் வைத்து குருமூர்த்தி இதை பேசினான்.

பத்மினிக்கு அவன் சொன்ன பேச்சில் மற்றதை விட இந்த பேச்சு அவளுக்கு மிக மிக பிடித்தது..என்று சொல்லலாம்…

கீதா வாழ்ந்த வாழ்க்கை ஒரு அர்த்தம் இல்லாதது..அது ஒரு திருமணத்தில் சேர்த்தி என்று எந்த விதத்திலும் சொல்ல முடியாது. அப்படி இருக்க இதோடு அவள் வாழ்க்கை முடிந்தது என்று பத்மினி நினைக்கவில்லை..

அதற்க்கு முன் தன் திருமணம் கூடாது என்று அவளும் தான் நினைத்தாள். ஆனால் அதை எப்படி சொல்வது என்று தயங்கியவளை குருமூர்த்தி தன் பேச்சால் ஆச்சரியப்பட வைத்து விட்டான்..

அவனின் இந்த பேச்சில் மகிழ்ந்து போய் அவனின் கைய் பற்றிக் கொண்டு… முதன் முறை இது வரை பார்வையிலும் பின் இதோ கொஞ்சம் தொடுதல் கூட நடந்து விட்டது.. ஆனால் அவள் தன் விருப்பத்தை அவனிடம் நேரிடையாக சொல்லவில்லை..

அப்போது அவள் சொல்லி இருந்தால் எப்படி இருந்து இருக்குமோ ஆனால் இப்போது குருமூர்த்தியை இன்னும் இன்னும் பிடித்து போய்… “லவ்யூ குரு லவ் யூ..ஐம் … “ என்று அதற்க்கு அடுத்து பேச முடியாது அவள் தொண்டையில் ஏதோ அடைப்பது போல் இருக்க..

அதற்க்கு அடுத்து பேசாது தான் பிடித்திருந்த அவன் கைய் மீதே தன் முகத்தை புதைத்துக் கொண்டாள்..

பத்மினி சொன்ன அந்த ஐ லவ் யூவில் குருமூர்த்தி மகிழ்ந்து போனாலும், அவளின் இந்த நெகிழ்வில் இருந்து அவள் சாதரணமாக மாற்ற..

“இப்போ கொஞ்ச நேரம் முன்ன நான் நெருக்கத்தில் இருந்தால் மட்டும் இது பொது இடம் என்று சொன்னாங்க… இப்போ அவங்க மட்டும் என் கை பிடிக்கலாமா…” என்று கேட்டு அவளை சகஜமாக்க முயன்றான்.

அவனின் அந்த முயற்ச்சிக்கு நல்ல பலனும் கிடைத்தது.. “கை பிடிக்கலாம். அது எல்லாம் தப்புல சேராது.” என்று பத்மினி சொன்னதும்..

“அப்படியா.. அப்போ சரி… இந்த பேச்சு எப்போவும் மாறக் கூடாது. என்று சொன்னவன் அதற்க்கு பின் அவளின் கையை விடவே இல்லை…

பேச்சு எங்கு எங்கே சென்று கடைசியில்.. பத்மினி… “கீதாவுக்கு நல்ல இடமா கிடைக்குமா…? முதல்லயே…” என்று சொல்லிக் கொண்டு வந்தவள் அடுத்து பேசாது கொஞ்சம் தயங்கி தன் பேச்சை நிறுத்தி விட்டாள்.

தன் காதலனே ஆனாலும் தன் அக்காவை பற்றியதை வெளிப்படையாக சொல்ல தயங்கினாள்..

குருமூர்த்தி அவள் சொல்லாத்தை சரியாக கனித்தவனாய்… “முதல்ல வரன் பார்க்கும் போதே..உன் கண்னை கொஞ்சம் திறந்து பார்த்து இருந்தா கீதாவுக்கு முதல் வாழ்க்கையே நல்ல வாழ்க்கையா அமஞ்சி இருக்கும்.” என்று சொன்னவனின் பேச்சில் குழம்பி போய் என்ன என்பது போல் பத்மினி குருமூர்த்தியை பார்த்தாள்.

குருமூர்த்தி கிரிதரனை பற்றி இப்போது தான் சொல்வது சரி இல்லை.. முதலில் கிரிதரனிடம் இதை பற்றி நேரிடையாக பேசி தெளிந்த பின் தான் இதை பற்றி பத்துவிடமே பேச வேண்டும்..

கிரிதரனின் பார்வையை வைத்து இவன் ஒரு ஊகத்தில் பேசி கலாட்டா செய்தாலுமே… இந்த பார்வை இந்த பேச்சில் மட்டுமே இது முடிவு செய்யும் விசயம் கிடையாது.

அதுவும் கீதாவின் முதல் வாழ்க்கை இப்படி ஆனதில், அடுத்த வாழ்க்கை எந்த வித்த்திலும் சின்ன பிரச்சனை கூட வந்திட கூடாது..அதில் அவன் கவனமாக இருந்தான்..முதலில் கிரிதரனிடம் பேசி விட வேண்டும் என்று அவன் நினைத்துக் கொண்டான்..

பத்மினியோ அவன் முகத்தை பார்த்தும் அவன் பதில் அளிகாதி வேறு யோசனையில் இருப்பதை பார்த்து தவராஅய் புரிந்துக் கொண்டு..

“என்ன குரு விவாகரத்தில் ஏதாவது பிரச்சனை வருமா…?” என்று பயந்து போய் கேட்டாள்.

“ஏய் லூசு… நான் மத்த பெண்கள் இது போல் கேசு வந்தாலே அவனை வெளுத்து ஒரு வழி பண்ணி விட்டுடுவேன்.. இப்போ கீதா கேசு என் மனைவியோட அக்கா..எனக்கு தங்கை போல..அவனை விட்டு விடுவேனா.. இருக்கு அவனுக்கு.. ஏற்கனவே அவன் மேல எனக்கு கொல வெறி தான்..

ஆனா அவன் இது போல திட்டம் போடாது இருந்து இருந்தா..எவ்வளவு நல்லா இருந்து இருக்கும்…” என்று இப்போதும் அவன் கீதாவை பற்றி பேசும் போது கிரிதரன் தான் மனதில் தோன்றினான்..

கூட்டி கழித்து பார்த்தில் கீதா திருமணம் முடிவு செய்யும் போது தான் கிரிதரன் அந்த நிலம் விசயத்தில் மாட்டிக் கொண்டு இருந்த நேரம்..இவன் தான் அந்த கேசை எடுத்ததால் அந்த சமயம் நன்றாக நினைவு இருக்கிறது..

இந்த ஜெய் குரங்கு உள்ளே நுழையாது இருந்து இருந்தால், கண்டிப்பாக கிரிதரன் தன் விருப்பத்தை கீதாவிடம் சொல்லி இருப்பான்.. இப்படி அவன் நினைவு ஓடும் போதே..

“நான் இங்கு இருக்கும் போது என்ன உங்க கவனம் அப்போ அப்போ எங்கேயோ பறந்து போயிடுது…” என்று சொல்லிக் கொண்டே அவன் கை பிடியில் இருக்கும் தன் கையை உருவிக் கொள்ள பார்த்தாள்..

“பத்தும்மா கை பிடித்தால் தப்பு இல்லேன்னு நீ தான் சொன்ன.. அதனால் விட மாட்டேன்.” என்று சொன்னவன்.

பின் “என் கவனம் எங்கு சென்றாலும் அதில் நீயும் தான் இருப்படி…” என்று இவர்கள் பேசிக் கொண்டு இருக்க..

அங்கு ஜெய்...கெளதம்..பத்ம ப்ரியா… மூன்று பேரும் குழந்தையோடு அங்கு வர..இவர்களின் அசிங்கமான பேச்சுக்கு தனியாக இருக்கும் இடம் தான் சிறந்தது என்று நினைத்து சரியாக குருமூர்த்தி இருக்கும் இடத்தை நோக்கி வந்தவர்களின் கண்ணில் குருமூர்த்தி, பத்மினியின் நெருக்கம் கண்ணில் பட அதிர்ச்சியாகி மூன்று பேரும் நின்று விட்டனர்…


















 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Sutham…. Avanga kannulaya mattanum ivanga rendu perum
 
Top