அத்தியாயம்…15
ஆண்களை விட எப்போதும் பெண்களுக்கு உள் உணர்வு கொஞ்சம் அதிகம்..இப்போது பத்மினிக்கு அது சரியாக வேலை செய்தது என்று சொல்லலாம்.
குருமூர்த்தி தன் கை பற்றி முதலில் ஆக்க பூர்வமாக தன் மனதை திறந்து பேசியவனின் பின் போச்சு மொத்தமும்… ஏதேதோ தன் கனவுகள்… ஆசைகள் ..பின் அவளுக்கு அவனுக்குமான வாழ்க்கை என்று அவன் சொல்லிக் கொண்டே போனான்.
பத்மினி முகத்தில் சிரிப்புடன் அதை கேட்டுக் கொண்டு இருந்தாள்.. சிறிது நேரத்திற்க்கு எல்லாம் என்ன தோன்றியதோ..அவளின் கவனம் அவன் பேச்சில் இல்லை..
யாரோ தங்களை பார்ப்பது போல்.. எப்போதும் யாராவது தன்னை பார்ப்பது போல் இருந்தால், நாம் முதலில் பின் நோக்கி தான் பார்ப்போம்.. ஏன் என்றால், கண் காணிப்பவர்கள் எப்போதும் நேர்க் கொண்டு கண்காணிக்க மாட்டார்கள என்ற எண்ணம் பெரும்பாலோருக்கு இருக்கிறது..
அந்த எண்ணத்தில் அவள் பின் பக்கம் திரும்பி பார்த்தாள்.. அங்கு யாரும் இல்லாமல் போக, நம் மனபிரம்மை என்று நினைத்துக் கொண்டு மீண்டும் குருமூர்த்தியின் பேச்சை கேட்க அவன் முகத்தை பார்த்தாள்.
இப்போது குருமூர்த்தி தன் பேச்சை நிறுத்தியவனாய், பத்மினியின் முகத்தை பார்த்துக் கொண்டு இருக்க.. பத்மினி… “என்ன…? என்று கேட்டாள்.
குருமூர்த்தியோ… “அது தான் என்ன…?” என்று கேட்க...
“இல்ல யாரோ நம்மை பார்ப்பது போல இருந்தது..அது தான்..” என்று சொன்னவள்..
பின்.. “நீங்க பேசுங்க…” என்று சொன்னாள்.
அவளுக்கு என்ன என்றால், அவன் ஆசையாக தன் கனவுகள், பின் தன் வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்ற ஆசைகள் இடை இடையே தன் அன்னையை பற்றியும் கொஞ்சம் பேசிக் கொண்டு இருந்தவனின் பேச்சை தடை செய்து விட்டோமே என்று நினைத்து தான் பேச சொன்னாள்.
குருமூர்த்தி சிரித்துக் கொண்டே… “யாரோ பார்க்கிறாங்கன்னு சொன்ன அது சரி தான்.. ஆனா பின் பக்கம் திரும்பி பார்த்த நீ முன் பக்கம் நிமிர்து பார்த்தியா…/ பார்த்தா தெரிந்து இருக்கும்.” என்று குருமூர்த்தி சொன்னதும்.
சட்டென்று தன் முன் பார்க்க… அங்கு இருந்த மூன்று பேர்களையும் பார்த்தவளுக்கு, ஏனோ கையில் நடுக்கம். .அதை பிடித்துக் கொண்டு இருந்த குருமூர்த்தியால் அதை நன்றாக உணர முடிந்தது…
“இப்போ எதுக்கு உன் கை டெய்லி கட்டிங் போட்டவன் ஒரு நாள் போடலேன்னா அந்த நேரத்துக்கு கை நடுங்கும் அப்படி நடுங்கது…” என்று அவன் சொன்ன உதாரணத்தில், பத்மினியால் குருமூர்த்தையை பார்த்து எவ்வளவு முறைக்க முடியுமோ அந்த அளவுக்கு முறைத்தவள்..
“உதாரணம் கூட இப்படியான பேச்சு தான் வருமா…?” என்று கேட்டாள்.
“ம்..நீ என்றதால இவ்வளவு நாகரிகமான உதாரணத்தை சொல்றேன்.. இதே வேறு யாராவது இருந்தா…” என்று அவன் மேலும் ஏதோ சொல்ல வந்தவனின் பேச்சை..
“போதும்..இந்த உதாரணமே என் காதுக்கு ரொம்ப இனிமையா இருக்கு.” என்று சொன்னவள்..
இப்போது மீண்டும் அவர்கள் மூவரையும் பார்த்து விட்டு பதட்டத்துடன் குனிந்துக் கொண்டவள்.. “அவங்க நம்மல பார்த்துட்டாங்க.. இப்போ என்ன செய்யிறது…? “ என்று குரல் நடுங்க கேட்டு வைத்தாள்.
அவள் கை நடுங்களிலேயே இவள் ஏன் அவங்களை பார்த்து பயப்பட வேண்டும்.. என்று கோபத்துடன் இருந்தவனுக்கு, பத்மினியின் இந்த குரல் நடுக்கம் இன்னும் கோபத்தை தான் கூட்டியது.
அதன் விளைவு… “ இப்போ நாம கள்ள காதல் செய்யல..நீ யார் மனைவியும் இல்ல… “ என்று கேட்டு வைத்தான். இவனின் பேச்சில் பத்மினியின் முறைப்பு இன்னும் கூடி தான் போனது.
“நாம கல்யாணம் செய்துக்க போறவங்க தானே… அதில் எந்த வித சந்தேகமும் உனக்கு இல்லையே…?” என்று அவன் பேச்சில் பத்மினியின் முறைப்பு இன்னும் இன்னும் கூட….
“ஏய் சும்மா அந்த முண்டக்கண்ண வெச்சிட்டு முறச்சி முறச்சி என்னை பார்க்குறத விட்டுட்டு, அவனை பாரு… இப்போ ஏன் அவனுங்களை பார்த்து பயப்படுற… அவனுங்க தான் நம்மை பார்த்து பயப்படனும்…
உறவு முறை இல்லாம கூத்தடிக்கிறவங்களை பார்த்து நீ பயப்படுவது எனக்கு சுத்தமா பிடிக்கல.. என் மனைவி எப்போவும் தைரியமா இருக்கனும்..எது என்றாலும் துணிஞ்சி பேசனும்..செயல் படுத்தவும் செய்யனும்.” என்று அவன் பேச்சில் இருந்த உண்மையில் ..
கொஞ்சம் பணிந்து போனவளாய்… “இல்ல நான் எல்லாத்துக்கும் தைரியமா தான் இருப்பேன்.. ஆனா இவங்க ஒன்னு என்றால், நடத்தையை பேசுறாங்க… “ என்று தயங்கி தயங்கி சொன்னவளின் பேச்சை போதும் நிறுத்து என்பது போல சொன்னான்..
பின்.. “இவனுங்க போல ஆளுங்க எல்லாம் அப்படி தான்..அதுவும் எதிரி பெண் என்றால், முதலில் தாக்குவது அவங்க நடத்தையா தான் இருக்கும்.
ஏன்னா பெண்களை ஒழுக்கத்தை கேள்வி குறியா ஆக்கின்னா தான்.. மேலும் பேசாது பயந்து போயிடுவாங்க என்று இது போல் புரம்போக்குங்க சரியா கணித்து அதை வெச்சி அமிக்கிடுவானுங்க..
அன்னைக்கு அந்த கமுனாட்டி போனில் வீடியோ பத்தி பேசுனப்ப.. எல்லோருக்கும் இருக்கிறது தான் என் அக்காவுக்கும் இருக்கு… போடுடா அப்படி இப்படி பேசுன.. என்ன உன் செயல் எல்லாம் வெறும் பேச்சோடு மட்டும் தானா…?” என்ற அவன் பேச்சில் கோபம் கிளர்ந்தெழ..
“பாருங்க நான் பேச்சு மட்டும் தானே..என்று இப்போது பாருங்க..” தங்களை நோக்கி வந்துக் கொண்டு இருக்கும் அந்த மூவரையும் பார்த்து அவள் சொல்லி முடிக்கவும், அவர்கள் மூவரும் இவர்கள் முன் வரவும் சரியாக இருந்தது..
வந்தவர்கள் சும்மா இல்லாது அவன் விரித்து வைத்திருந்த பெட்சீட்டில் மூவரும் அமர்ந்துக் கொண்டவர்கள் குழந்தையை ஜெய் தன் மடியில் மீது அமர்த்திக் கொண்டான்…
அது என்னவோ பத்மினிக்கு, அவர்கள் தொலைவில் இருக்கும் போது உண்டான அந்த பயம்..அதனால் வந்த நடுக்கம் இப்போதும் அவர்கள் அருகில் வந்து, அதுவும் ஏதோ ஒரு முடிவோடு தான் இவ்வளவு தைரியமாய் அவர்கள் அமர்கிறார்கள் என்று தெரிந்தும்,
அந்த பயமும் நடுக்கமும் இல்லாது தைரியமாகவே அவர்களை எதிர் கொண்டு அமர்ந்திருந்தாள் பத்மினி... குருமூர்த்தியோ அவர்களின் வந்து அமர்ந்ததை கண்கள் கூர்மையோடு ஏதோ யோசித்தவனாய் அவர்களை பார்த்திருந்தான்..
பத்மினியின் கையை பற்றியிருந்த குருமூர்த்தியும் சரி அவர்கள் வந்து அமர்ந்த பின்னும் இணைந்திருந்த அவர்கள் கை விலகாது கோர்த்து தான் இருந்தது…
இணைந்திருந்த அந்த கையை ஒரு எள்ளலோடு பார்த்த கெளதம்.. “ஓ வக்கீல் சார் பீஸை இப்படி வசூலிக்கிறிங்க போல..” என்ற அவன் பேச்சு ஒரு மாதிரி என்ன பல மாதிரியாக இருந்தது.
பத்மினி இதை எதிர் பார்க்கவில்லை..அவர்கள் வந்து அமர்ந்ததும் பத்மினியின் கவனம் மொத்தமும் ஜெய்யிடம் மட்டும் தான் இருந்தது.. அவன் கண்டிப்பாக ஏதாவது கேட்பான்..
ஏதாவது என்ன இதோ இப்போது நாங்கள் இப்படி இருப்பதை தான் அசிங்கமாக பேசுவான்.. ஆனால் சும்மா இருக்க கூடாது..நல்லா நாக்கை பிடுங்கிட்டு சாகுறது போல கேள்வி கேட்க வேண்டும் என்று அவள் நினைத்திருந்தாள்.’
ஆனால் அதற்க்கு எதிர் பதமாய் தாக்குதல் கெளதமிடம் இருந்து வரவும் பத்மினி அதிந்து தான் போனாள்…
கெளதம் இப்படி பேசவும் காரணம் இருக்கிறது.. அவன் நல்ல பதவியில் கவுரமாய் போய் வந்துக் கொண்டு இருந்த அவன் பேங்க உத்தியோகத்தில் இந்த குரு செய்த வேலையில்..
அங்கு தன்னோடு உடன் வேலை செய்யும் சக ஊழியர்கள் தன்னை பார்த்து ஏதோ பேசுவது, தனக்கு பின் நகைப்பதையும் கேட்டு பார்த்து அவனின் மொத்த கோபமும் குருமூர்த்தியிடம் தான் சென்றது..
பெண்கள் விசயத்தில் அவனை பற்றிய தவறான பேச்சு ஒன்று கூட வந்தது இல்லை.. இன்னும் கேட்டால் அங்கு வேலை பார்க்கு பெண்கள் தங்களுக்குள் ..
“கெளதன் சார் ஜென்டில்மேன்..அவரோடு பேசும் போது நமக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு தான் தோனுது.. தவறான பார்வை கிடையாது. தவறான பேச்சு கிடையாது..” என்று அவர்கள் பேசுவதை இவனே சில சமயம் கேட்டு இருக்கிறான்..
ஒரு சில ஆண்கள் வந்து அவனிடம் இதை பற்றி சொல்லியும் இருக்கிறார்கள்… அப்போது எல்லாம் அவன் மனதில் ஓடுவது என்னால் சொந்த பொண்டாட்டிய பாக்க முடியல..இதுல.. என்று நினைத்து கொண்டாலும், வெளியில் தா ரொம்ப நல்லவன் போல்….
“என் மனைவியும் வேலைக்கு போறா..அவளை யாராவது தப்பா பார்த்தா நமக்கு எப்படி இருக்கும்…?” என்று சொல்லி பேசியவனின் மனதிலும் உயர்ந்து..இப்படி இருந்தவனை…
ஒரே நாள்.. ஒரே கேசில் அவனின் உயர்ந்த இடத்தை விட்டு அதாள பாதாளத்தில் தள்ளியவனை பார்த்ததும் அவனால் இவனை ஏதாவது செய்ய வேண்டும்.. என்று நினைத்தான்..
அதுவும் தான் வேலை பார்த்த பேங்கின் கஸ்ட்டமர் தன்னை வெளியில் தன் சொந்த ஜாமினில் வெளியில் கொண்டு வந்ததும்..அவனின் தைரியம் கொஞ்சம் கூடி போனது என்று தான் சொல்ல வேண்டும்..
என்னவோ இவன் பெரிய இவன் என்று சொன்னாங்க…? பார் நான் வெளியில் வந்துட்டேன்.. எனக்கும் ஆள் இருக்கு… என்று அது ஒரு தைரியம் அவனுக்கு..
ஆனால் அவனை வெளியில் கொண்டு வந்தவனோ அவனிடம் பேசிய பேரம்… “ வேறு ஏதாவது வீடியோ வெச்சி இருக்கியா…? இது போல் வீடியோ எல்லாம் இன்னும் ஒரு காப்பி எடுத்து சீக்ரெட் லாக்கரில் வைக்க வேண்டாமா…” என்று அவன் வீட்டில் சட்டமாக உட்கார்ந்துக் கொண்டு கெளதமிடம் ரகசியம் பேசியவனின் கண்கள் முழுவதும், அங்கு அப்படி இப்படி என்று போய் கொண்டு இருந்த பத்ம ப்ரியாவின் மீதே இருந்தது…
அந்த நபரின் செல்வாக்கிலும், அவர் கொடுத்த தைரியத்திலும் ஏதோ ஒரு தைரியம் கெளதமுக்கு.. இதோ பார் நீ உள்ள அனுப்பியவன் உன் முன்னே.. அதோடு குருமூர்த்தி பற்றி விசாரித்த்தில் அவன் அது போல் இடத்துக்கும், அந்த பெண்களுடனான அவன் பழக்கம் கேள்வி பட்டது..
இப்போது பத்மினியோடு குருமூர்த்தியை பார்த்ததும் ஒன்று ஒன்று இரண்டு என்று கணக்கு போட்டவனாய்… ஏதோ ஒரு முடிவு எடுத்து விட்டு தான் அங்கு வந்து அமர்ந்தது…
பத்மினி முதலில் தான் கெளதமனின் பேச்சை கேட்டு அதிர்ந்தது… பின் அதிர்ச்சியோடு குருமூர்த்தியை பார்த்தது… குருமூர்த்தியோ ஒரு சிரிப்போடு கெளதமனையே பார்த்திருந்தான்..
அவனுக்கு பத்மினி போல் அதிர்ச்சி எல்லாம் கிடையாது. அவன் தான் அவர்கள் நடந்து வரும் போதே அவர்கள் உடல் மொழியில் இருந்து உள்ளத்து மொழியை அறிந்துக் கொண்டவனாய் ஒரு தெளிவோடு இருந்தானே..
அதனால் ஒரு புன்னகையோடு தான் குருமூர்த்தி அவனை எதிர் கொண்டான்..
“ஓ வக்கீல் என்ன வேணா செய்யலாம்.. நாங்க ஏதாவது செய்தா தான் போலீஸ் கேசுலே…”
தன்னை பார்த்தும் பயப்படாது… தங்களை பார்த்தும் பிடித்திருந்த கையை விடாது இருந்த அந்த இனைந்த கைகளை கோபத்துடன் பார்த்துக் கொண்டே பேசியவனின் பேச்சை கேட்டாவது இவர்கள் முகத்தில் பயம் இல்லை கோபம் வரும் என்று அவன் எதிர் பார்த்தான்..
குருமூர்த்தியிடம் இல்லை என்றாலும், இந்த பெண்...மத்தியவர்க்கத்துக்கும் கீழ் உள்ளவர்கள்.. இது போல் பேச்சு வந்தால் பயப்படுவார்கள் ஒதுங்கி விடுவார்கள்..
அதனால் தான் தன் குறையில் வீட்டில் நடந்த உடன்படிக்கையில் தன் தம்பிக்கு கீதாவை மணம் முடித்து வைத்தது… அந்த எண்ண்ணத்தில் தான் இவர்கள் குடும்பம் தீ வைத்தது.
அது கூட பரவாயில்லை வீக்னெஸ் நம்மிடம் இருக்கிறது… அந்த தைரியமாக கூட இருக்கலாம்.. ஆனால் இந்த சின்ன பெண்..கல்யாணம் ஆகாதவள் இவனோடு கூத்தடிச்சிட்டு இருக்கு..
அதை நாங்க பார்த்துட்டோம் … அதை நினச்சி பயம் வேண்டாம்..பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சி, பின் இவள் அவனை பார்த்தாள். அவன் கண் மூடி என்னவோ தைரியம் சொன்னான்..
அதில் இருந்து இவளும் தெனவெட்டாக தான் பார்த்துக் கொண்டு இருக்கிறாள். என்று கோபத்தோடு தூரத்தில் இருக்கும் போதே இவர்களை படம் பிடித்து இருப்பதை காட்டி..
“இப்போ…?” என்று கேட்டு கெளதம் தன் பேசியை காட்டினான்.
குருமூர்த்தி கெளதமனின் போனை வாங்க கை நீட்ட…
“என்ன வக்கீலு உன் கிரிமினல் லாயர் புத்திய என் கிட்டயேவா…
“இந்தா…” என்று சொல்லி அதை குருமூர்த்தியிடம் கொடுத்து விட்டு..
“இதை நீ அழிச்சா கூட பரவாயில்ல..ஏன்னா பிடித்த உடன் என்னை ஜாமினில் எடுத்த என் நண்பனுக்கு அனுப்பிட்டேன்… நீ தான் பெரிய பருப்புன்னு நினச்சிட்டு இருக்காதே…” என்று குருமூர்த்தியை பார்த்த எள்ளலுடன் பேசிய கெளதம்..
பத்மினியை பார்த்து…
“என்னம்மா வக்கீலுக்கு கொடுக்க பணமில்லாததால் இப்படி கொடுத்து கழிக்கிறியோ…” என்று எப்படி எப்படி எல்லாம் பேசினால், ஒருவர் கோபம் கொள்வார்களோ அந்த வழி அனைத்தையும் கடை பிடித்து பேசியும் அவர்கள் இருவரும் கோபம் கொள்ளாது..
குருமூர்த்தி பார்த்த போனை பத்மினியிடம் நீட்டியவன்.. “நான் கூட உன் முன்னே நான் ரொம்ப கம்மியா தெரிவேன்னு நினச்சேன். பரவாயில்லலே..” என்று தங்கள் ஜோடி பொருத்தம் பற்றி பத்மினியிடம் பேசியவன்..
பின் கெளதமனை பார்த்து… “நான் பத்து கிட்ட லாயர் பீஸை எப்படி வேணா வாங்கிக்கிறேன்.. அது உனக்கு என்ன…?” என்று குருமூர்த்தி கேள்வி கேட்க..
அதற்க்கு பத்மினியோ…
“குழைந்த சாதத்தையே முழுங்க முடியாதவன் முன், எலும்மையே ஒரே கடியில் கடிச்சி திண்பவனை பார்த்தால், வயிற்று எரிச்சலில் இது போல் பேச தான் தோனும்..அது விடு குரு..” என்று குருமூர்த்தியிடம் பேசிய பத்மினி..
கெளதமை பார்த்து… “இந்த போஸோடு இன்னும் இப்படி இருந்தா உனக்கு இன்னும் நல்லா இருக்கும் என்று எனக்கு தோனுது என்று சொல்லிக் கொண்டே குருமூர்த்தியின் தோளில் சாந்துக் கொண்டு..
“ஆ இப்போ பிடிங்க…” என்று சொன்னாள்.