Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Nayaganin Nayagi....17

  • Thread Author
அத்தியாயம்….17

“என்ன பாக்குறிங்க…? நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்ல.. அப்போ நீங்க என்னை அப்படி கேட்பிங்க… அப்படி தான் போலவே …” என்று பத்மினி குருமூர்த்தியிடம் இப்படி வாய் பேசிக் கொண்டு இருந்தாலுமே..

குருமூர்த்தியின் பார்வை தன்னை ஒரு மார்க்கமாய் இல்லாது. பல மார்க்கமாய் தன்னை பார்ப்பதை பார்த்து, இவன் ஏதோ ஏடா கூடாமாக தான் சொல்ல போகிறான் என்று அவள் நினைப்பதற்க்கு ஏற்ப தான் குருமூர்த்தியின் பதில் இருந்தது.

“நான் ஏன் அப்படி சொல்ல போறேன்.. இன்னும் கேட்டா சதை பிடித்தா. இதோ ஒட்டிக் கொண்டு இருக்கும் உன் வயிற்று பகுதியை பிடிக்க முடியாது நான் திணற தேவையில்லை..” என்று சொல்லிக் கொண்டு அவளின் இடுப்பு பகுதியில் தன் கையை வைத்தவன்..

தன் பார்வையை அவளை மேல் நோக்கி பார்த்த வாறு ஏதோ சொல்ல ஆரம்பித்தவனின் வாயை மூடிய பத்மினி..

“வேண்டாம். ஒண்ணும் சொல்ல தேவையில்ல… போதும் போதும்..எது என்றாலும், நான் அப்புறம் கல்யாணத்துக்கு பின்னே கேட்டுக்குறேன்.” என்று சொல்ல..

“அப்படி வா வழிக்கு யாரு கிட்ட.. நீ எல்லாம் வண்ணமயமான பேச்சில் இப்போ தான் பேபி க்ளாஸில் இருக்க..நான் எல்லாம் அதில் பி,எச்.டி முடித்தவன் தெரிஞ்சிக்கோ…” என்று சொல்லியவனிடம் தன் இரு கை கூப்பி வணங்கி விட்டு, பத்மினி அவனை வழி அனுப்பி வைத்தாள்.

இரு நாள் கடந்த நிலையில் குருமூர்த்தியிடம் இருந்து பத்மினிக்கு பேசியில் அழைப்பு வந்தது.

“வண்டி அனுப்பட்டுமா…? பத்து..” என்ற கேள்விக்கு,

பத்மினி…

“வேண்டாம் நாங்களே வர்றோம்…” என்று சுருக்கமாக பதில் அளித்தாள்.

பத்மினி சொன்ன நாங்களே என்ரா பதிலில்… “அப்பாவும் வர்றாங்களா…?” என்று குருமூர்த்தி கேட்ட கேள்விக்கு, பத்மினி பதில் அளிக்காது..

“அவங்களும் வரனுமா…?” என்று அவனிடமே இவள் கேள்வி கேட்டாள்.

“வேண்டாம் என்று தான் நினைக்கிறேன்.. நான் பேசும் பேச்சை கேட்ட பின் என் மீது அவருக்கு நல்ல அபிப்பிராயம் வராது.. இது போல் கேசுக்கு எல்லாம் என் பேச்சு எல்லாம் ஒரு மாதிரி என்ன, எப்போதும் பல மாதிரியாக தான் வரும்..

உன் அப்பாவுக்காக எல்லாம் என்னை நான் மாத்திக்க முடியாது..அதே சமயம் உன் அப்பா என்னை தப்பா நினைப்பதும் எனக்கு பிடிக்க வில்லை.” என்று தன் நீண்ட விளக்கத்தை குருமூர்த்தி பத்மினியிடம் சொன்னான்.

“அது தான் அவரை நான் அழச்சிட்டு வரல…” என்று சொன்ன பத்மினியின் வார்த்தைகள் இப்போதும் மிக சுருக்காவே வந்து விழுந்தது..

“என்ன பத்து கீதா டென்ஷனா இருக்காளா…?” என்று தனக்கு தெரிந்த பதிலுக்கு கேள்வி கேட்டான்..

“ என்ன கேள்வி இது…? அவன் என்ன பேசுவான்…? என்ன செய்வான்..? என்று தெரியாது, நானே பயப்படும் போது அக்கா பயப்பட மாட்டாளா…?” என்று பத்மினி ஒரு சலிப்புடன் கேட்டாள்.

அவளின் அந்த சலிப்புக்கு காரணம் இவ்வளவு நேரமும் தன் சகோதரியிடம் பேசி பேசி கலைத்து போனதே காரணம் ஆகும்.

“நான் இருக்கேன். அப்புறம் என்ன பயம்…?” என்று குருமூர்த்தி கேட்க..

அதற்க்கு பத்மினி… “நீங்க இந்த கேசை ஜெயிக்க வெச்சிடுவிங்க..அதில் எனக்கும் சரி என் அக்காவுக்கும் சரி சந்தேகம் இல்ல… ஆனால் அந்த ஜெயிப்பதற்க்குள் அக்கா என்ன என்ன கேட்க வேண்டியது இருக்கோ..

அதை நினைச்சா எனக்கே கொஞ்சம் பயமா தான் இருக்கு.. அப்போ அக்காவை நினைத்து பாருங்க…” என்று பத்மினி கேட்பதும் நியாயமான கேள்வி தான்..

ஆனாலும் நெருப்பை பிடித்தவர்களுக்கு அந்த தகிப்பையும், அதனால் உண்டான காயத்தையும் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.. அனைவரும் அந்த காயத்துக்கு மருந்திடலாம்.

ஆனால் யாரும் அவர்களின் காயத்தை தான் வாங்கிக் கொள்ள முடியாது. அதே போல் தான் இப்போது கீதாவின் நிலமையும்.. கீதாவின் சார்பாக என்ன என்ன பாயிண்ட் எப்படி மடக்கினால் ஜெய் எப்படி மாட்டுவான்.

எப்படி பேசினால், கீதாவை அதிகப்படியான காயம் ஏற்படாது வெற்றி பெறலாம். இவ்வளவு தான் குருமூர்த்தியால் செய்ய முடியும்.

அதாவது காயத்தை குறைக்கலாமே தவிர. .ஒன்றும் இல்லாது அதாவது கேட்க வேண்டிய பேச்சை கீதா கேட்டு தான் ஆக வேண்டும். இதில் இருந்து அவளாள் தப்ப முடியாது.

அன்று வீடியோ எடுத்தது ஜெய் அண்ணன் கெளதம் என்று அவனை உள்ளே தள்ளிய போது ஜெய் வந்து தானே விவாகரத்து கொடுத்து விடுகிறேன்.

அதாவது இருவரும் விருப்பத்தோடு பிரிந்துக் கொள்கிறோம் என்று சொன்னான் தான்.. ஆனால் இது போல் ஆட்களை அப்படி விட்டால், கீதாவுக்கு அடுத்து இன்னொரு பெண்ணை இது போல் ஏமாற்ற மாட்டான் என்று என்ன நிச்சயம்…?

இவனே நிறைய இது போல் விவாகரத்து வழக்கை வழக்கு ஆடாமலேயே முடித்து இருக்கிறான் தான்.. அதுவும் ஒரு சிலர் பெண் என்று இவன் வாதாட..

அந்த பெண்களே…

“ எனக்கு இவர் அம்மாவை பிடிக்கல.. இவர் தனிக்குடித்தனம் வருவது என்றால் இவரோடு வாழ்கிறேன். இல்லை என்றால் டைவஸ் தான்.” என்று திட்ட வட்டமாக சொல்ல…

அந்த ஆணோ… “சார் என் அப்பா என் சின்ன வயசுலேயே இறந்துட்டார் ..அம்மா தான் என்னை கஷ்டப்பட்டு வளர்த்தாங்க.. அதுவும் இல்லாம நான் அம்மாவுக்கு ஒரே மகன்.. அவங்களை எப்படி சார் என்னால விட முடியும்.” என்று அவன் பேச்சில் இருந்த நியாயத்தை கேட்டு…

“அம்மாவை விட்டா தான் இந்த பெண்ணோடு நீ வாழனும் என்றால்.. வேண்டாம் இவங்களை விவாகரத்து செய்து விடு.. உனக்கு நல்ல பெண்..நல்லா கேளு நல்ல பெண் உனக்கு கிடைப்பா…” என்று சொல்லி அவனே அவர்களுக்கு விவாகரத்து வாங்கி கொடுத்து இருக்கிறான்.

இன்னும் கேட்டால் முதலில் இவனிடம் கேசை எடுத்துக் கொண்டு வந்தது அந்த பெண்ணாய் தான் இருப்பாள். அதாவது இவன் பெண்ணுக்காக வாதடும் வக்கீல் என்று வெளியில் பேசிய பேச்சில் இவனிடம் வந்து இருப்பாள்.

பெண்ணுக்கு வாதடுபவன் தான். ஆனால் நியாயம் இருக்கிறது அல்லவா…? மகன் வேண்டும் . மகனை பெற்ற தாய் வேண்டாம்.. என்று சொல்லும் பெண்களை என்ன செய்தால் தகும்…

ஒரு பெண்ணாக இருந்தால் திருத்தலாம். இப்படி எத்தனை பெண் இருக்கிறார்கள்.. அனைவரையுமா இவனால் திருத்த முடியும்.

இவர்களுக்கு எல்லாம் பட்டால் தான் புத்தி வரும்.. நல்லவனை ஏதாவது இது போல் சின்ன விசயத்துக்கு விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்த பெண்களில் ஒரு சிலர்..

“அய்யோ முதல் கணவன் மீது நாம் போட்ட அபாண்ட பழி தான் இப்போது வினையாக முடிந்து இருக்கிறது.” என்று நினைப்பவர்கள் பலரை இவன் பார்த்தது உண்டு..

அதனால் பட்டு திருந்தட்டும் என்று அவர்களுக்கு விவாகரத்து வாங்கி கொடுத்து விடுவான்..அந்த ஆண் ஆவாது சந்தோஷமாக இருக்கட்டும் என்று நினைத்து…

ஆனால் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை.. அவர்களின் உடல் மீது தாக்குதல். அவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும் செயல் இது போல் கேசு அவனிடம் வந்தால், அதில் சம்மந்தப்பட்ட அந்த ஆண் செத்தான் என்று நினைத்துக் கொள்ளலாம்.. அவன் பேசி பேசியே அவன் வாயில் இருந்தே உண்மை வர வழைத்து விடுவான்.

அப்படி பட்டவனிடம் இந்த கேஸ் வந்தால் அவன் சும்மா விடுவானா..? அது மட்டும் அல்லாது இப்போது இது தன் வழக்கு போல் விட்டு விடுவானா என்ன…?

குருமூர்த்தி எப்போதையும் விட இந்த கேசில் அவன் காட்டும் அக்கறை..அதாவது இது போல் கேசுக்கு எல்லாம் பாயிண்ட் எழுதி வைப்பது அவன் அசிஸ்டட்ண்டாக தான் இருக்கும். ஆனால் இதில் அனைத்தும் இவனே செய்தான்/

அதே போல் இயரிங் அன்று வேறு யாராவது அந்த கேசில் வரும் பாயிண்டுக்களை சொல்ல..இவன் கேட்பான்.. அதில் கூடுதலாய் பேசுவதும் இல்லை குறைப்பது மட்டுமே இவன் வேலை.

ஆனால் இந்த கேசில் இவனே பாய்ண்ட் எடுத்து பின் இவனே காலையில் நீதிவளாகத்தில் வந்ததில் இருந்து..

“படிக்கட்டுமா சார்…” என்று அவனின் உதவியாளன் கேட்க…

“வேண்டாம் கொடு.” என்று சொல்லி கேசு கட்டுக்காக அவன் பக்கம் கை நீட்ட..

“என்ன…?” இது என்ன அவ்வளவு பெரிய கேசா என்பது போல் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே குருமூர்த்தியிடம் அந்த கேஸ் கட்டை நீட்டினான்.

குருமூர்த்தியை பொறுத்த வரை, இந்த கேஸ் எல்லாம் அவனுக்கு ஒன்றுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.. பெண்களுக்கு நீதி வேண்டும் என்று நினைத்து தான் இது போல் கேஸ் எடுப்பது.

அவன் ஒரு கேசில் முழு ஈடுபாடு காட்டுக்கிறான் என்றால்… அது எல்லாம் வேறு லெவல் என்று சொல்வார்களே..அது போல் கேசில் தான் இவனின் மொத்த கவனத்தையும் காட்டுவான்.

அதற்க்கு என்று இது போல் கேசை நட்டாத்தில் அதாவது தோத்தாலும் பரவாயில்லை அப்படி எல்லாம் விட மாட்டான். அதிலும் வெற்றி பெற்று விடுவான்.

ஆனால் இதில் இவனே முழு ஈடு பாட்டோடு செயல் பட்டதை பார்த்து..

“அண்ணே தெரிஞ்சவங்க கேசா…?” என்று ஒரு உதவி வழக்கறிஞ்சர் கேட்க..

“ஆமாம் எனக்கு மனைவியா வரப்போறவங்களோட அக்கா…” என்று சொன்னவனின் பேச்சில், அனைவரும் மகிழ்ந்து அவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது அங்கு கிரிதரன் வந்து சேர…..

“ வா கிரி வா…” என்று அழைத்து தன் முன் இருக்கும் இருக்கையில் அமர வைத்த குருமூர்த்தி அவனின் சோர்ந்து போன முகத்தை பார்த்து..

“என்ன கிரி காலையில் சாப்பிட்டியா..?” என்ற கேள்விக்கு,

கிரிதரனிடம் இருந்து.. “இல்லை…” என்ற தலையாட்டலே அவனுக்கு பதிலாய் கிடைத்தது.

அங்கு இருப்பவரிடம் .” டிபன் வாங்கி வா …” என்று சொல்லி பணம் கொடுத்து அனுப்பியவன்..

கிரிதரனை பார்த்து… “என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா…?” என்று கேட்டான்.

“நான் தான் அவங்கல உங்களிடம் கூட்டிட்டு வந்தேன்.. உங்கள் மீது நம்பிக்கை இல்லாம எப்படி கூட்டிட்டு வருவேன். உங்க மேல எல்லாம் நம்பிக்கை இருக்கு தான்.

ஆனா அவன் அந்த ஜெய் புரம்போக்கு என்ன என்ன பேசுவான். அதை கீதா தாங்குவாளா…? அது தான் நேத்துல இருந்து கவலையா இருக்கு.” என்று சொல்ல..

அவனின் அந்த கவலை நியாயமானது தான். தன் மீது தவறு வைத்துக் கொண்டு தன்னை உத்தமனாய் காட்ட மற்றவர்கள் மீது சேற்றை வாறி இறைப்பதை நாம் எத்தனை இடத்தில் பார்த்து இருக்கிறோம்.

ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு என்று வந்து விட்டால், அனைத்தையும் பார்த்து தானே ஆக வேண்டியதாக இருக்கிறது..

“ஒரு சிலதை நாம் தவிர்க்க முடியாது கிரி..சந்தித்து தான் ஆக வேண்டும். ஆனால் உண்மை வெளியில் கொண்டு வந்து விடுவேன். அதுவும் அவன் வாயின் மூலமாகவே..

என்ன ஒன்று அதை கொண்டு வர கீதா ஒரு சில வார்த்தைகள் கேட்டு தான் ஆக வேண்டும்… வேறு வழி இல்லை.” என்று சொல்லி கிரிதரனை சாப்பிட வைத்தான்.

அபோது பத்மினி கீதாவோடு அங்கு வந்து சேர… கீதாவுக்கு கிரிதரனை அங்கு பார்த்து ஒரு மெல்லிய சிரிப்பை கொடுத்தவள் பின் தன் பார்வையை குருமூர்த்தி பக்கம் திருப்பி விட்டாள்.’

பத்மினிக்கு கிரிதரனை அங்கு பார்த்ததும் தான் அய்யோ இவரை எப்படி மறந்தேன் என்று நினைத்து..

“சாரி அண்ணா இன்று நம்ம கேசு வருவது சொல்லலே சாரி சாரி..” என்று பத்மினி கிரிதரனிடம் மன்னிப்பு வேண்டினாள்.

“பரவாயில்லேம்மா … அது பத்தி ஒன்னும் இல்ல… நீ தான் எல்லோருக்கும் தைரியம் கொடுத்து இருக்க.. இதில் என் கிட்ட சொல்லனும் என்று உன் நியாபகத்தில் கூட வந்து இருக்காது.” என்று சொல்லி ஒரு வழியாக இவர்களின் பெயரை அழைக்க..

இது வரை இவர்களின் பேச்சுக்களை மெளனமாக கேட்டுக் கொண்டு இருந்த கீதா..

அடுத்து தான் என்னும் போது அவளின் கை வெளிப்படையாகவே நடுங்க ஆரம்பித்து விட்டது..

“அக்கா பயப்படாதே..நாங்க இருக்கோம் தானே.. அப்புறம் என்ன பயம்…?”

வீட்டில் அவ்வளவு தைரியம் கொடுத்தும், இப்போது என்ன இப்படி பயப்படுகிறாள் என்று பத்மினிக்கு மிக கவலையாக போய் விட்டது.

அங்கு அனைவரின் முன்நிலையிலும் ஏதாவது கேட்டால் இவள் தாங்குவாளா…? என்ற பயத்தில் பத்மினி குருமூர்த்தி முகம் பார்த்தாள்.

“நான் இருக்கேன்.” என்று சொல்லி பத்மினியை தான்டி கீதாவின் அருகில் சென்று அவள் கை பிடித்து..

“என் மீது உனக்கு நம்பிக்கை இருக்கு தானே…?” என்ற குருமூர்த்தியின் கேள்விக்கு பதிலாய் உடனே கீதா..பலமாக தலையாட்டி..

“இருக்கு.. உங்க மேல ரொம்ப ரொம்ப நம்பிக்கை இருக்கு..ஆனா அந்த வீடியோ…” என்று அந்த வார்த்தை கொல்லும் போதே கீதாவின் கண்னில் இருந்து கண்ணீர் கட கட என்று சுரந்தது.

“அது இந்த சீனில் வராது பார்த்துக் கொள்கிறேன் போதுமா…?” என்ற கேள்விக்கு..

கீதா நம்ப முடியாது அவனை ஒரு பார்வை பார்த்து.. “முடியுமா…? அதை வைத்து தானே அவன்..” என்று சொல்ல ஆரம்பித்த கீதா தான் சொல்ல வந்ததை முழுவதும் சொல்லாது பாதியிலேயே தன் பேச்சை நிறுத்தினாள்.

“அவன் எடுக்க மாட்டான். அது உன்னை மிரட்ட தான் சொன்னது..அதை அவன் சொன்னா அவன் மட்டும் இல்லாம அவன் அண்ணாவையும் இதில் கோர்த்து விடுவேன் என்று அவனுக்கு தெரியும்.

என்ன ஒன்னு அது இருந்தா இன்னும் அவனை வசமா மாட்டி விட்டு அவங்க மொத்த சொத்தையும் ஜீவனம்சமா கேட்கலாம்.” என்று குருமூர்த்தி சொன்னான்.

“ வேண்டாம். அவன் சொத்து எல்லாம் எனக்கு வேண்டாம். அவன் என்னை நிம்மதியா இருக்க விட்டாளே போதும்… எனக்கு அவனிடம் இருந்து விடுதலை இது தான் வேண்டும். அவன் சொத்து வேண்டாம்.” என்று கீதா சொன்ன்தற்க்கு,

“ உனக்கு வேண்டாம். அவன் திரும்பவும் அவன் கிட்ட இருக்கும் பணத்திமிரில் இன்னொரு பெண்ணை உன்னை போல் ஏமாத்தி கட்டிப்பான்.” என்று குருமூர்த்தி சொல்லவும்..

“ திரும்பவும் ஏமாறுவாங்களா..?” என்று கீதா குருமூர்த்தியிடம் சந்தேகத்துடன் கேட்டாள்..

“ஏமாற.. தான் நம் நாட்டில் நிறைய பேர் இருக்காங்களே… ஏமாறுவாங்க ஏமாறுவாங்க.. சொல் அவன் கிட்ட இருக்கும் சொத்தை விட்டு விடலாமா…?” என்று கேட்க..

“கூடாது…” என்று தலையாட்டியவள்…

“ஆனாலும் அந்த சொத்து எனக்கு வேண்டாம்.. என்று திரும்பவும் அவள் அதே பாட்டு படித்தாள்.

“ சரி உனக்கு வேண்டாம் என்றால் பரவாயில்ல.. உனக்காவது உன்னை தாங்க உன் குடும்பம் இருக்கு.. உன்னை போல் இருக்கும் பெண்களுக்கு தாங்க கூட இடம் இல்லாது நிறைய பேர் இருக்காங்க..அவங்களுக்கு அந்த பணம் உதவட்டும்.” என்று குருமூர்த்தி சொன்னதும்..

கீதா உடனே பலமாக தலையாட்டி தன் சம்மதத்தை சொன்னாள்.

கீதாவின் பெயரை சொன்னதும் கீதா அந்த கூண்டில் ஏறி நிற்க எதிர் தரப்பில் ஜெய் நிற்க..

ஏதோ தீர்மானத்தோடு ஜெய் நிற்பதை கீதா கவனிக்கவில்லை என்றாலும் குருமூர்த்தி கவனித்து தான் இருந்தான்.

குருமூர்த்தி ஜெய் எந்த வகையில் நுழைந்தாலும், அவனை பிடிப்பது அவனுக்கு ஒரு விசயமே இல்லை.. ஆனால் அவன் நுழையும் புள்ளி கீதாவின் நடத்தையாக இருக்கும் பட்சத்தில் அதையும் குருமூர்த்தி தவிடு பொடியாக்கி தகர்த்து எரிந்து விடுவான் தான்.

.ஆனாலும்




















































 
Member
Joined
Jun 2, 2024
Messages
77
Super...intha kadhayoda climax enaku light ah yaabagam iruku...elarukume thakka thandanai kedaikum....ongoing la thirupi padikum podhu nalla thrilling ah iruku...seekiram next ud podunga maam...
 
Top