Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Nayaganin Nayagi...20

  • Thread Author
அத்தியாயம்…20

குருமூர்த்தி வாதத்தில் முக்கியமானத்தை குறித்து வைத்துக் கொண்ட நீதிபதி… ஜெய்யை பார்த்து…

“நீங்க ஏதாவது சொல்ல விரும்புறிங்களா…?” என்ற கேள்விக்கு, அவனால் ..

“இல்லை…” என்று மட்டும் தான் தலையாட்ட முடிந்தது…

ஜெய் வேலையாட்களில், குருமூர்த்தி சாந்தியை தனக்கு எதிராக சாட்சி சொல்ல அழைப்பான் என்று அவன் எதிர் பார்த்தது தான்..

அவன் தான் அதை ஒத்துக் கொள்ள போகிறானே… முதலில் செயற்க்கை மூலம் தான் ப்ரியா கருத்தரித்தால், நான் என் விந்தணுக்களை மட்டும் தான் தானமாக கொடுத்தேன் என்று சொல்ல தான் நினைத்தான்.

ஆனால் அது போன்ற பிரசவத்திற்க்கு முறையே வேறு அல்லவா…? ப்ரியா பிரசவம் பார்த்த மருத்துவமனைக்கு போனால் தெரிந்து விடும்.. அதனால் இதற்க்கு வேறு வழி தான் கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைத்தவனின் மனதில் கீதாவை பற்றிய வன்மை கூடிக் கொண்டே போனது…

அவளுக்கு நான் கிடைத்ததே பெரியது..இது தான் அவன் எண்ணமாக இதோ இப்போது கூட அவன் நினைப்பது… அப்படி இருக்க தங்களை பற்றி தெரிந்ததும், அமைதியாக இருந்தால் அவளும் வசதியாக தானே இருக்க போகிறாள்.

என்ன தான் நான் ப்ரியாவுடன் குடும்பம் நடத்தினாலும், உலகத்திற்க்கு இவள் தானே என் மனைவி..இவளுக்கு பிறக்கும் குழந்தையை தானே நாளை என் பிள்ளை என்று வெளியில் சொல்லும்…

இன்னும் கேட்டால் ப்ரியா தான் கோபப்பட வேண்டும்… நான் ஊருக்கு இல்லாது வீட்டில் தானே என்று.. அதே போல் சொத்தும் நாளை இவளுக்கு பிறக்கும் குழந்தைக்கு தானே வரும்..

கெளதம் சொத்தும் என் குழந்தை அதாவது ப்ரியாவுக்கு பிறந்த குழந்தை..இப்படி இருக்க அவனுக்கு இது தான் என்ன தோன்றியது..

அனுசரித்து சென்று இருக்கலாம். இது போல் தங்கள் குடும்பத்தை சந்தி சிரிக்க வைத்திருக்க தேவையில்லை என்பதே அவன் எண்ணம்…

எங்கள் குடும்பத்தை அவமானப் படுத்தியவளை தான் அனைவரின் முன்னும் தலை குனிய வைக்க வேண்டும்… என்ற வன்மமும்.. அவன் மனதில் சேர ..உதிர்த்த திட்டம் தான்..

அவளுக்கு முன்பே தெரியும். அனைத்தும் நான் சொல்லி விட்டேன். என் பணத்துக்கும் சொத்துக்கும் ஆசைப்பட்டு தான் என்னை மணந்தாள் என்று நிருபித்து விட்டால், அடுத்து குருமூர்த்தி சொன்ன உன் சொத்தை அவளுக்கு வாங்கி கொடுத்து விடுவேன் என்பது நடக்காது போய் விடும்..

ஆம் நான் இது போல் ஒரு பழியை கீதா மீது போட்டால், குருமூர்த்தி சொத்து கேட்டாலே நான் சொன்னது தான் உண்மை என்பது போல் அனைவருக்கும் தெரியும் படி ஆகி விடுமே..

ஒன்று குருமூர்த்தி கேட்க மாட்டான். கேட்டாலும் அது செல்லாது என்று அவன் மனதில் ஆயிரம் கணக்கிடலோடு ஜெய் இங்கு வந்தான் என்றால்,

குருமூர்த்தி ஒரு லட்சம் திட்டங்களோடு… அவன் எந்த வழி சென்றாலும், அனைத்து வழியையும் மூடு விழா செய்வது போல் சாட்சியங்களை கொண்டு வந்து நிறுத்துவான் என்பது அவன் எதிர் பாராதது.

எதிர் பார்த்து இருக்க வேண்டுமோ.. தன் நண்பனின் விசயத்தில் இவன் வாத திறமையை பார்த்தும், மற்றவர்கள் உனக்கு எதிராக குருமூர்த்தியா… அவ்வளவு தான் என்று சொன்ன போதும், தான் கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்து விட்டோமோ… என்று நினைத்த மனது கூடவே..

நீ எவ்வளவு தான் ஜாக்கிரதையாக இருந்து இருந்தாலும் கூட, அவன் உன்னை கிழித்து தோரணம் கட்டாது விட்டு இருக்க மாட்டான் என்று எடுத்துரைத்தது...

அதுவும் செல்வி சாட்சி மிக ஸ்டாங்கனா சாட்சி… ஒரு வக்கீலாய் இல்லை என்றாலும், இது அவனுக்கு தெரிந்தே இருந்தது…

குழந்தை அவனுக்கு பெத்துக்க விருப்பம் தான்… என்ன தான் ப்ரியாவின் குழந்தை தன்னுடையதாக இருந்தாலும், வெளி உலகுக்கு நான் தந்தையாகி விட்டேன் என்று பெருமையாக சொல்ல முடியாது அல்லவா..?

அது மட்டும் இல்லாது திருமணம் முடிந்து அடுத்து கேட்கும் கேள்வி என்ன விசேஷம்..? என்பதே ஆகும்… குழந்தை பேறு தள்ளினால் தன்னையும் ஒரு மாதிரியாக தான் அனைவரும் பார்ப்பர்..

அதனால் அந்த கருத்தடை மாத்திரை விசயத்தில் ஜெய்யும் அவ்வளவாக விருப்பம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..

ஜெய் பத்ம ப்ரியாவிடம்… “ப்ரியா எதுக்கு இப்போ இது போல் மாத்திரை கொடுக்கனும் என்று சொல்ற… அவளுக்கு என்று ஒரு குழந்தை பிறந்து விட்டால், அவள் கவனம் அதில் போய் விடும்..

நம்மை அவள் அவ்வளவு கண்டுக்க மாட்டா… அதுவும் இல்லாம குழந்தை பிறப்பதற்க்கு அவள் தாய் வீடு போய் விடுவாள்..இது போல் தூக்க மாத்திரை கொடுக்க தேவையில்லை… என்று சொன்னவன்..

கூடுதலாய்…

“நம்ம விசயம் தெரிந்தாலும், இந்த பந்தத்தை விட்டு அவளாள் விலக முடியாது…” என்று ஜெய் சொன்னதை அனைத்தும் பொறுமையாக கேட்ட ப்ரியா..

ஜெய் சொன்ன… “ இந்த பந்தத்தை விட்டு விலக முடியாது…” என்ற வார்த்தையை பிடித்துக் கொண்ட ப்ரியா…

“ஓ உன் பொண்டாட்டிய தக்க வெச்சிக்க உடனே குழந்தை கொடுக்கனும் என்று நினைக்கிற.. பரவாயில்ல பார்க்க அழகுலேயும், கலரிலேயும் சுமாரா இருந்தாலும், புருஷனை பிடித்து வைத்து இருப்பதில் மட்டும் சாமார்த்தியமா தான் இருக்க போல்..

ஆம் ப்ரியா சொல்வது ஒருவகையில் உண்மை என்று கீதாவுக்கு தெரியவில்லை என்றாலும் ஜெய்யுக்கு தெரியுமே…

பார்க்க சுமார் வசதி இல்ல..கலர் குறைவு என்று ஏகப்பட்ட குறை கீதாவிடம் இருந்தாலும், அவளின் உடல் வடிவு… இடை மெலிவு… அவளின் ஏற்ற இறக்கங்களில் ஜெய் வீழ்ந்து தான் போனான் எனலாம்..

அப்போது ப்ரியாவிடம் ஜெய் பேசும் போது அவன் நினைத்தது இது தான். தனக்கு இருவருமே வேண்டும் என்பதே… ப்ரியாவை ருசிக்கண்ட பூனை.. போல் அவனால் அவளையும் விட முடியாது..

அதே போல் கீதாவை அணைத்தாளே தன் உடம்பில் தணலை கொட்டி விட்டது போல, உடல் முழுவதும் சூடேறுகிறதே..அதை அவளால் மட்டுமே அணைக்க முடியும்…

அது என்னவோ கீதாவுக்கு குழந்தை பிறந்தால், தன் குழந்தை மீது இருக்கும் பாசம் குறைந்து விடுமோ என்று அஞ்சினாளோ… அல்லது தன் குடும்பம் என்று பாசம் வந்து நான் மொத்தமும் கீதாவிடமே சென்று விடுவேன் என்று பயந்தாளோ…

“ஜெய்.. எனக்கு என்னவோ நீ என்னை விட்டு தூரம் போறியோன்னு இப்போ எல்லாம் பயம் வருது.. அதுவும் பார்க்க ரொம்ப ரொம்ப சுமாரா இருக்க அவளை அழைத்துக் கொண்டு கொடைக்கானல் போனதில் இருந்து.. எனக்கு ஏதோ சரியில்லாதது போல இருக்கு ஜெய்..

ப்ளீஸ் ப்ள்ஸ் எனக்கு இந்த பயம் போற வரை கீதா கன்சீவ் ஆகாம இருப்பது தான் நல்லது ஜெய்…” என்று அவள் கெஞ்சலிலும்.. கொஞ்சலிலும் .. மனம் இறங்கி சரி என்று அவளுக்கே தெரியாது அந்த கருத்தடை மாத்திரையை..

“ பார் நீ ரொம்ப வீக்கா இருக்க ..? இப்படி இருந்தா நம்ம குழந்தையை எப்படி நீ தாங்குவே…” என்று குழந்தை பெயர் சொல்லி அந்த குழந்தையே பிறக்க கூடாது என்று மாத்திரை கொடுக்க ஆரம்பித்தான்..

இதோ செல்வி சாட்சி சொல்லி விட்டு செல்கிறாளே.. அன்று கூட அனைத்து மாத்திரைகளிலும் கருத்தடை மாத்திரையின் துகள்களை அடைத்த பின் ..

ப்ரியாவை அணைத்த வாறு..

“இதோட விட்டு விடலாம் ப்ரியா… மாட்டினா பிரச்சனை…” என்று சொன்னான்..

காரணம் தொடர்ந்து கருத்தடை மாத்திரை உபயோகித்தால் , பின் நாளில் கற்பம் தரிப்பதில் பிரச்சனை ஏற்படும் என்று தெரிந்ததில் இருந்து..ஏனோ வேண்டாம் கீதாவுக்கு பிறக்கும் குழந்தை தான் தம் ஆண்மையை வெளி உலகுக்கு கொண்டு வருபவை..அதனால் அதில் பிரச்சனை ஏற்பட கூடாது என்று காரணம் ஒன்று என்றால்,

மற்றொரு காரணம் ப்ரியா நினைத்தது போல் கீதாவுக்கு குழந்தை என்று ஒன்று ஆகி விட்டால், தங்களை பற்றி தெரிந்தாலும், தன்னை விட்டு விலக முடியாது என்பது மற்றொரு காரணம் ஆகும்..

ப்ரியாவின் பயம் உண்மை என்பது போல் தான் ஜெய்யும் இருந்தான்.. அவன் கீதாவை அழைத்துக் கொண்டு ஹனிமூன் என்று கொடைக்கானல் அழைத்துக் கொண்டு போக காரணம்.

பகலில் கதவு அடைத்தால், ப்ரியாவை சமாளிக்க வேண்டி இருக்கும். ஆனால் கீதாவிடம் இரவு பகல் பாராது கூட வேண்டும் என்ற ஆசையில் தான் ..

ஜெய் ப்ரியாவிடம்..

“ பிரண்சுங்க என்னை கேக்காம புக் பண்ணிட்டாங்க.. மறுத்தால் என்ன காரணம் என்று சொல்வது…” என்று ப்ரியாவை சமாளித்து விட்டு கீதாவை கொடைக்கானலுக்கு அழைத்து சென்றவனின் மோகம் கொடைக்கானலை விட்டு சென்னை வந்த பின்னும் அடங்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும்..

கீதாவிடம் பிடிப்பட்ட அன்று கீதாவுக்கு ப்ரீயட்ஸ்… அது என்னவோ இப்போது எல்லாம் கீதாவை விட்டு ப்ரியாவிடம் நாட்டம் அவனுக்கு குறைந்து விட்டது என்று தான் சொல்ல முடியும்..

அதனால் தான் தூக்க மாத்திரையில் விளைவால் கீதா நன்றாக உறங்கிய பின்னும், அவளை அணைத்துக் கொண்டும்.. அவளின் அங்கங்களை தொட்டுக் கொண்டு இருக்க தோன்றுகிறதே தவிர.. ப்ரியாவின் அறைக்கு செல்ல தோனாது ஒரு வாரம் ப்ரியாவிடம் செல்லாததிற்க்கு…

அன்று காலை கீதா குளிக்கும் போது…

“என்ன ஜெய்…” என்று கோபித்துக் கொண்டவளிடம்..

“இன்னைக்கு கண்டிப்பா வர்றேன்..” என்று ப்ரியாவிடன் வாக்கு கொடுத்தான்..

காரணம் கீதா இன்று வீட்டுக்கு தூரம் என்று தெரிந்ததால் வருகிறேன் என்று சொன்னான்.. சொன்னது போல் போனான் தான்.. அவனின் கெட்ட நேரமா கீதாவின் நல்ல நேரமா மாட்டிக் கொண்டான்…

பின் கீதாவை சமாளித்து விடலாம் என்று நினைத்து பின் அவள் சண்டை போட்டு சென்ற போது கூட எங்கு போய் விடுவா…? என்று ஜெய் கொஞ்சம் மெத்தனமாக தான் இருந்து விட்டான் என்று சொல்ல வேண்டும்..

விளைவு இதோ இப்போது இங்கு நின்றுக் கொண்டு இருக்கிறேன்.. என்று பழைய நினைவுகளில் மூழ்கிக் கொண்டு இருந்தவனின் சேவியில்..

“நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டுமா..?” என்ற கேள்விக்கு பதில் அளிக்க முடியாது தலை குனிந்து நின்றான்..

நீதிபதி கீதாவை பார்த்து…

“நீங்கம்மா..” என்ற கேள்விக்கு..

கீதா உடனே…

“பேசனும். கண்டிப்பா பேசனும்.” என்று சொன்னவள் தொடர்ந்து…

“ நான் இங்கு அதாவது விவாகரத்துக்கு கோர்ட்டில் வர காரணம் எனக்கு இவரிடம் இருந்து விவாகரத்தோடு உங்களிடம் கேட்பது..இவரின் சொத்து..ஆம் சொத்து தான்.. அது அவரிடம் இருந்ததால் தானே..

அந்த திமிரில் இப்படி ஒரு ஈன காரியம் செய்ய தோனுச்சி.. அவர் சொத்து அவருக்கு இருக்க கூடாது..அதே சமயம் அது எனக்கும் வேண்டாம்.” என்று சொன்னகீதாவை நீதிபதி புரியாது பார்த்தார்..

“அவனே எனக்கு சொந்தம் இல்லாத போது அவனுடையது எனக்கு சொந்த கிடையாது..சொந்தம் இல்லாத்தை பார்ப்பது கூட பாவம் என்று நினைப்பவள் நான்..” என்று அந்த வார்த்தையை கீதா சொல்லும் போது அவளின் கண் பத்ம ப்ரியாவின் மீது அருவெருப்புடன் சென்று மீண்டது..

கீதாவின் பேச்சில்.. நீதிபதி..

“அப்போ எதுக்கும்மா சொத்து கேட்குற..விவாகரத்தில் ஜீவான்சம் என்ற பெயரில் கணவனிடம் இருக்கும் சொத்து வருமானத்தை வைத்தும், அந்த்ஜ மனைவி இழந்ததை வைத்தும் தான் ஜீவான்ம்சம் தொகை நிர்ணயிக்க படுகிறது.” என்று சொன்ன நீதிபதி..

ஜெய்யை காண்பித்து…

“இவர் உங்களுக்கு செய்த அநீதியை வைத்தும், அவர் சொத்தை வைத்தும் கன்டிப்பாக அவருக்கு இருப்பதில் பாதிக்கு கொடுக்கலாம் கொடுக்கனும். ஆனால் நீங்க எனக்கு வேண்டாம் என்று சொல்றிங்க…

அதே சமயம் அவரிட்ம் இருந்து எனக்கு வேண்டும் என்று சொல்றிங்க… எனக்கு புரியல..அனைவருக்கும் புரியும் படி சொன்னா நல்லா இருக்கும்.” என்ற நீதிபதியின் பேச்சில்..

“எனக்கு தெரிஞ்சி பாதிக்கப்பட்ட பெண்களின் காப்பகம் நிறைய இருக்கு..அதோட லிஸ்ட் என் லாயர் கிட்ட இருக்கு..”

ஜெய்யை காண்பித்து,…

“அவருடையது பாதி இல்ல எவ்வளவு முடியுமோ அவ்வளவு எனக்கு ஜீவனம்சமா வேண்டும்.. ஆனால் அதை அவர் எனக்கு கொடுக்க தேவையில்லை..நான் சொல்லும் காப்பகத்தின் பெயருக்கு எழுதி வைத்தால் போதும்..” என்று சொன்ன கீதா

கூடுதல் தகவலாய்…

“ அவங்களுக்கு டி.நகரில் ஒரு வீடு இருக்கு… அதில் நிறைய போஷன் இருக்கு..அது கொடுத்தா காப்பகத்தில் இருப்பவங்க தங்குறதுக்கு வசதியா இருக்கும்..

பெரியவங்க செஞ்ச தப்புக்கு அந்த சின்ன குழந்தை பாவத்தில் இருந்து தப்ப குறைந்த பட்சம் அவங்க சொத்து இது போல் உதவினால் நல்லா இருக்கும்…” என்று சொன்ன கீதா கூடிதலாய்..

“ இன்னொன்னும்… “ ஜெய்யை காண்பித்து…

“இவங்க தனியார் ஐடி கம்பெனில ஒர்க் பண்றாங்க..அதனால நீங்கச் கொடுக்கும் தீர்ப்பை அவங்க ஏத்துப்பாங்களா.. இது பத்தி எல்லாம் எனக்கு விவரமா தெரியாது..

அதனால இதோ இப்போ இதை பத்திரைக்கை யாராவது இங்கு இந்த வழக்கை பார்த்தும் , கேட்டுக் கொண்டும் இருந்தா… “ என்று சொல்லிக் கொண்டே பார்வையாளர்கள் பக்கன் பார்வையை திருப்பிய கீதா…

இது வரை நீதிமன்றம் என்று ஜெய்யை அவர் இவர் எறு மரியாதையாக பேசிக் கொண்டு இருந்த கீதா அதை கை விட்டவளாய்…

“ இவன் போட்டோவை முதல் பக்கத்தில் பெருசா போட்டு...இவன் செய்த காரியத்தை போட வேண்டும்.. அதில் என் போட்டோ போட்டா கூட பரவாயில்ல எனக்கு ஒன்னும் இல்ல..

ஆனா இவன் முகத்திரை அனைவரும் பார்க்கனும். இதோ அழகு..நான் அறிவு.. என் பணம்.. இது எல்லாம் ஒன்னும் இல்ல என்பது போல பார்க்கிறவங்க எல்லாம் இவன் மூஞ்சில காறி உமிழனும்…

அப்போவாவது இவனுக்கு புரியும்.. அனைத்தையும் விட ஒழுக்கம் நல்ல சிந்தனை.. நன்னடத்தை இது தன் பெருசுன்னு .

அதே போல் இவன் அண்ணன்..திட்டம் போட்டு.. வெளியில் விளக்கு பிடிச்சிட்டு இருந்தவனுக்கு பார்க்கும் உத்தியோகம் கவர்மென்ட் பேங்க. அதை அவனிடமிருந்து பறிக்க உங்களுக்கு அதிகாரம் இருந்தா..பறிக்கனும்… கூடவே .. அந்தம்மா போட்டோவையும் போடனும் .”

அவ்வளவு தான் என்பது போல் நான் சொல்ல வேண்டியதை அனைத்தையும் சொல்லி விட்டேன்.. இனி ஒன்றும் இல்லை என்பது போல் இது வரை தைரியமாக கம்பீர குரலோடு பேசியவள்..

தான் நின்ற இடத்திலேயே மடிந்து அமர்ந்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்…

சிறுவயதில் தன் கண் முன் தன் அன்னையின் மரணம்.. அதன் பின் வாழ்க்கை ஓட்டத்தில் மனதில் ஆயிரம் கனவுகள் இருந்தாலும், அதை வெளிக்காட்டாது தங்கள் வீட்டின் நிலை பொருட்டு..எதையும் வெளிக் காட்டாது அமைதியாக இருந்தவளுக்கு..

தனக்கு என்று ஒரு வாழ்க்கை தனக்கு என்று ஒரு குடும்பம். இனி என் கனவு, கனவோடு முடியாது நினைவாக போகிறது என்று பல எதிர்ப்பார்ப்போடு அடி எடுத்து வைத்த தன் திருமண வாழ்க்கை..

தன் கைய்யாலேயே இதோ இன்று ஒரு முடிவுக்கு வரப்போகிறது… என்று நினைத்தும், கடவுளிடம் நான் என்ன பெருசா ஆசைப்பட்டேன்.. குடும்ப வாழ்க்கை இது தப்பா..

நான் இது சாதிக்கனும்… அதை ஆதிக்கனும்… என்று பெருசா கூட ஆசைப்படவில்லையே.. என் ஆசை எல்லாம் மிக மிக சின்ன அளவில் தானே இருந்தது..அதை கூட உன்னால் நிறைவேற்ற முடியவில்லையா….?

நினைவு தெரிந்த நாளில் இருந்து கடவுளுக்கு தீபம் ஏற்றி வந்த அந்த கடவுளிடம் முறையிட்டுக் கொண்டு கீதா கதறிய கதறலை அந்த நீதிமன்றமே பார்த்து கண்ணீர் வடிக்கும் போது..

அவள் வணங்கிய தெய்வம் அவளை விட்டு விடுமா என்ன…? உனக்கான வாழ்க்கை இது அல்ல… நீ சாதரண வாழ்க்கை வாழ பிறந்தவள் கிடையாது..

நீ கேட்டாயே..? நான் என்ன பெரிதாக ஆசைப்பட்டேன்.. சிறிய ஆசை தானே என்று..

ஆனால் நான் உனக்கு பெரியதாக கொடுக்க நினைத்தேன்… பெரியது ஒன்று பெற இது போல் சிறு இன்னல்கள் தாங்கி வந்தால் தான்.. உனக்கு கிடைத்த அந்த பெரிய கனவை கெட்ட வழியில் பயன்படுத்த மாட்டாய்… என்று அவள் வணங்கிய அந்த தெய்வம் நினைத்ததோ என்னவோ..

கீதா ஆசைப்பட்ட சின்ன கனவையும், கடவுள் அவளுக்கு கொடுக்க நினைக்கும் பெரிய கனவையும் தரப்போகும் கிரிதரன் அவள் கதறலை பார்த்து..

“நான் இருக்கேன் கீது..நான் இருக்கேன்… நீஅழ வேண்டியது எல்லாம் இன்றோடு அழுது விடு… உனக்கு எல்லாமாக நான் இருப்பேன்.” என்று நினைத்தவனாய் கண் கலங்க அவளை பார்த்திருந்தான்.

நீதிபதியும் தன் உணர்ச்சியை வெளியில் காட்டவில்லை என்றாலும், அவரும் ஒரு பெண்ணின் தகப்பனாய் மனதில் அவளின் வாதத்தை ஏற்று..

கீதாவுக்கு விவாகரத்து கொடுத்தோடு கீதா கேட்ட அனைத்தையும் செய்து கொடுக்க உத்தரவு கொடுத்தார்…

அனைத்தும் முடிந்து வெளியில் வந்த போது குருமூர்த்தி கீதாவின் தோள் மீது கை போட்டு..

“நீ ஏன்மா அழனும்… நீ என்ன தப்பு செஞ்ச அழ.. நீ அழக்கூடாது… என்ன தைரியமா பேசுன… நிஜமா நான் உன் கிட்ட இருந்த இந்த அளவுக்கு ஒரு போல்டா இருப்பேன்னு நானே எதிர் பார்க்கல..

நிஜமா நீ சாதிக்க பிறந்தவம்மா ..இதை எல்லாம் நீ கடந்து வருவ…” என்று கீதாவுக்கு குருமூர்த்தி தைரியம் வழங்கினான்…

கிரிதரன் இதை அனைத்தையும் பார்க்க மட்டும் தான் அவனால் முடிந்தது..குறைந்த பட்சம் குருமூர்த்தி போல் தோள் அணைத்து கொடுத்த தைரியத்தையும் கூட… அவளுக்கு கொடுக்க முடியவில்லையே என்ற மனக்குறையோடு பார்த்துக் கொண்டு இருந்தாலுமே…

பரவாயில்லை.. அவளுக்கு யார் ஆறுதல் சொன்னால் என்ன…? எனக்கு தேவை அவளுடைய அன ஆறுதலும், தைரியம் மட்டுமே… என்று நினைத்தவனாய் இவை அனைத்தும் பார்த்திருந்தானே தவிர அவன் வாய் திறந்து எதுவும் பேசவில்லை.

பத்மினி தான் கிரிதரன் அருகில் சென்று..

“ரொம்ப ரொம்ப தேங்ஸ் அண்ணா.. நீங்க மட்டும் எங்களுக்கு குருவை அறிமுகம் படுத்த வில்லை என்றால், இது எதுவுமே எங்களுக்கு சாத்தியம் இல்லை.” என்று பத்மினி கிரிதரனிடம் சொல்ல..

அதற்க்கு கிரிதரன்..

“ இது எதுவும் சாத்தியம் இல்லை என்று சொன்னியே பத்து இந்த எதிலும் குரு உன்னோட விசயமும் அடங்குமா…? “ என்று கேட்டான்..

இது வரை அழுகை தைரியம்.. தன்னம்பிக்கை என்று பேசிக் கொடு இருந்த அந்த இடத்தில் கிரிதரனின் இந்த பேச்சு சிறிது மாற்றத்தை கொண்டு வந்த்து என்று தான் சொல்ல வேண்டும்.

அது என்னவோ இது வரை கிரிதரன் பக்கம் பார்வையை செலுத்தாத கீதா கூட இந்த பேச்சில் அவன் முகத்தை பார்த்து லேசாக மிக மிக லேசாக அவனை பார்த்து புன்னகை செய்தாள்..

கீதாவின் அந்த புன்னகைக்கு காரணம்..

“அது என்னவோ இனி இந்த பேச்சு தேவையில்லை.. இனி தன் காதில் நடந்து முடிந்த அவளின் அந்த திருமணமோ.. இதோ இப்போது நடந்த இந்த விவாகரத்தான பேச்சோ தன் காதில் விழ கூடாது என்று எண்ணினாள்..

இனி குருமூர்த்தியிடம் சொல்லி விட வேண்டும்… சட்டத்தின் படி ஜெய்யின் விசயத்தை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.. இனி என் காதில் எதுவும் விழ கூடாது.. ஜெய்யின் சம்மந்தமாய் இனி பேச கூட நான் விரும்பவில்லை..

குருமூர்த்தியை கூட இனி வக்கீலாய் பார்க்காது, தன் தங்கையின் வருங்காக கணவனாய் பார்க்க மட்டுமே விரும்பினாள்.. அதை குருமூர்த்தியிடம் சொல்லவும் நினைத்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.

இதோ அந்த நீதிமன்றத்தில் வளாகத்தை விட்டு வந்த பின்னும் குருவே ஆனாலும், அதை பற்றி பேச பிடிக்கவில்லை..

அதற்க்கு என்று குருவிடம் மூஞ்சியில் அடித்தது போல் ..

“ இனி அந்த பேச்சு பேசாதிங்க சொல்லவும் மனது இல்லை.. குரு தங்கையின் வருங்கால கணவன் என்ற முறையில் இல்லாது. குருமூர்த்தி ஒரு தனி மனிதனின் மன இயல்பை தெரிந்தவளாள். அது போல் அவனை பேச அவளுக்கு மனது வரவில்லை என்று சொல்லலாம்…

அது மட்டும் இல்லாது அவள் இது போல் தைரியமாய் இந்த பிரச்சனையில் இருந்து கடந்து வந்தாள் என்றால், அதற்க்கு முக்கிய காரணம் குரு..

அவன் இல்லை என்றால் இந்த வெற்றி என்ன..இதில் இருந்து வெளி வந்து இருப்பாளா…? என்பதே சந்தேகம் தானே..

முதலில் அந்த வீடியோ..அதிலேயே அவள் பெரியதாக பயந்து விட்டாள் தான்.

ஆனால் அதை இந்த நீதிமன்றத்தில் கொண்டு வராது.. அவன் தன் மீது போட்ட பழியை சாமர்த்தியமாய் முறியடித்து இதை அனைஉவரின் முன்னும் தன்னை கெளரவமாய் நிற்க இவன் தானே காரணம்.. அதனால் கீதாவுக்கு குருவின் மீது ஏகாத்துக்கும் மரியாதை இருந்தது..

அத்னால் தனிமையில் சொல்ல்லாம் என்று நினைத்தவளுக்கு.. அய்யோ இந்த பேச்சை விட்டு வேறு பேசுங்களே என்று அவள் எண்ணும் போது தான் கிரிதரனின் இந்த பேச்சால் பேச்சு திசை மாறி அனைவரும் பத்மினி குருமூர்த்தையை கிண்டல் செய்துக் கொண்டு இருக்க..

அந்த கிண்டலை முகத்தில் மென்னகை புரிய கீதா பார்த்துக்கொண்டு இருக்க..அதை கிரிதரன் ரசித்துக் கொண்டு இருந்தான்..

கீதா சொல்லாமலேயே அவளின் மனநிலைக்கு ஏற்ப பேசிய கிரிதரன் அவளின் புன்னகையை சிறிதே ஆனாலும் மீட்ட அவனால் முழுவதுமாய் இந்த சூழ்நிலையில் இருந்து வெளி கொணர்ந்து.. ஒரு மகிச்சியான குடும்ப வாழ்க்கையை கொடுக்க முடியுமா…? பார்க்கலாம்…






























 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Geetha 🔥🔥🔥
 
Top