அத்தியாயம்…21
வீட்டுக்குள் நுழையும் போதே பத்மினியின் அப்பா கீதாவை அணைத்துக் கொண்டு…
“ ஒரு நோயாளிக்கு மகளா பிறந்ததால தானேம்மா உனக்கு இந்த நிலை…” என்று கட்டி பிடித்து கண்ணீர் வடிக்கும் போது அவருக்கு பின் இருந்து கேட்ட…
“ நீங்க நோயாளியா இருந்தாலுமே.. உங்க இரண்டு மகள்களை ரொம்ப ரொம்ப ஸ்டாங்கா தான் வளர்த்து இருக்கிங்க..” என்ற குருமூர்த்தியின் குரலில் பத்மினியின் அப்பா அவனை திரும்பி பார்த்தார்.
குருமூர்த்தி தன்னை அறிமுகம் படுத்தும் முன்…
“ நீங்க வக்கீல் சார் தானுங்களே… ரொம்ப ரொம்ப சந்தோஷம் தம்பி உங்களை பார்த்ததில்..” என்று மிகவும் உணர்ச்சி பொங்க பேசியவரின் கையை பற்றிய குருமூர்த்தி..
“ உங்களை பார்ப்பதில் தான் எனக்கு ரொம்ப சந்தோஷம் மா… அங்கிள்.” மாமா என்று சொல்ல வந்தவன் அதை திருத்தி அங்கிள் என்று மாற்றி அழைத்தான்.
பின் குருமூர்த்தி… “ என்னை உங்களுக்கு தெரியுமா…?”
தன்னை அறிமுகம் படுத்தும் முன்னவே சரியாக வக்கீல் என்று பேசியவரின் பேச்சில் குருமூர்த்தி இவ்வாறு கேட்டான்.. ஏன் என்றால் இப்போது அவன் வக்கீல் உடையில் இல்லை. அவனின் காரில் ஒரு ட்ரஸ் டிக்கியில் ரெடியாக இருக்கும்..
நீதிமன்றத்துக்கு எப்போதும் அவன் உடை ஒயிட்டன் ஒயிட் தான்.. அதனால் அங்கு இருந்து எங்கு போவது என்றாலும் காரிலேயே அவன் உடையை மாற்றிக் கொள்வான்..
அவனுக்கு இந்த கூச்சம் நாச்சம் என்பது கொஞ்சம் குறைவு தான்.. . யாராவது…
“ என்ன காரிலேயே மாத்துறிங்க…? அதுவும் கண்ணாடியை கூட ஏத்தாம…” என்று கேட்டால்..
அவனின் பதில்..
“ என் கார். நான் உடை மாத்துறேன்..அதுவும் அம்மணமாவா இருக்கேன்.. உள்ள போட வேண்டியது எல்லாம் போட்டுட்டு தானே இருக்கேன்.. அதையும் தான்டி உன் பார்வை கீழே போனால் தப்பு என் மேல இல்ல பார்க்கிற உன் மேல தான்..” என்று குருமூர்த்தி பேசிக் கொண்டே தன் பேன்டின் ஜீப்பை ஏற்றும் போது தான் இப்படி சொல்வான்..
ஏன் என்றால் கேட்பவனின் பார்வை அங்கு தான் நிலைப்பெற்று இருக்கும். அதனால் தான் அவனின் பதிலும் இவ்வாறு இருக்க…
கேட்டவன் தான் அவசர அவசரமாக தன் பார்வையை மாற்றிக் கொண்டு அங்கு இருந்து செல்ல வேண்டியதாகி விடும்..
அதே போல் தான் இன்றும் தன் காரில் இருக்கும் தன் உடையை மாட்டிக் கொண்டான்.. ஆனால் இம்முறை தன் காரில் இல்லாது கிரிதரன் வீட்டுக்கு தான் அனைவரும் முதலில் சென்றது..
காரணம் மாமனாரை பார்க்க முதன் முதலில் போகிறேன்.. இப்படியேவா..? என்று கேட்க.. எப்போதும் அவன் துடுப்பாய் அவன் பின் இருக்கும் அவனின் ஜூனியர்களில் ஒருவன்..
“அது தான் உங்க காரில் எப்போதும் ட்ரஸ் இருக்குமே சார்..எப்போதும் போல காரில் மாத்திட்டு போங்க..” என்று சொல்ல.. அவனின் தலையில் ஒரு போடு போட்டு விட்டு..
“ போ… பஸ் ஸ்டாண்டில் ஒரு பெண் மீது ஆசிட் ஊத்துனவனை வெளியில் வர முடியாத அளவுக்கு பாயிண்ட் எடுத்து வைக்க சொன்னனே எடுத்து வெச்சியா…?” என்ற குருமூர்த்தியின் கேள்விக்கு..
அவன்.. “ இல்லை..” என்று பதில் அளித்தான்…
“ போ போ முதல்ல அந்த வேலைய பாரு.” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தவன் பின் கிரிதரனை பார்த்து..
“உங்க வீடு இங்கு இருந்து பக்கம் தானே.. முதல்ல நாம எல்லோரும் அங்கு போயிட்டு அப்புறம் கீதா வீட்டுக்கு போகலாமா…?” என்று குருமூர்த்தி கேட்டான். அதற்க்கு கிரிதரன் அவசர அவசரமாக தலையை ஆட்டினான்..
குருமூர்த்திக்கு தான் யாரை எது சொன்னால் கவிழ்வார்கள் என்று தெரியுமே.. அதனால் தான் அனைவரும் என்று முதலில் சொன்னான்.. இங்கு இருப்பவர்களில் அனைவரும் என்றால் கீதாவும் அடக்கம் தானே..
அதனால் அப்படி சொன்னவன் பின்..
பத்மினி வீட்டுக்கு என்று சொல்லாது கீதா வீட்டுக்கு என்று சொன்னதில் கிரிதரன் மொத்தமாய் அவன் பேச்சில் கவிழ்ந்து விட்டான்.
அடுத்து அவன் கேட்கும் கேள்வியும் அனுமானித்தவனாய் குருமூர்த்தி கிரிதரனிடம்..
“ என் கிட்ட ஏதாவது சொல்லனுமா கிரி..” என்று பத்மினி தன்னை முறைத்து பார்ப்பதை பார்த்துக் கொண்டே கேட்டான்.
“ஆமாம்… ஆமாம்…” என்று உடனே சொன்ன கிரிதரன் பின் கொஞ்சம் தயங்கிய வாறு..
“இல்ல நானும் வரட்டுமா சார்…” என்று கேட்க..
“ஆ வாங்க வாங்க..என்னோட நீங்க தான் அங்கு வரனும்.. ஏன்னா என்னுடையதுக்கு நான் பர்மிட் வாங்கிட்டேன்.. கொஞ்சம் மேல் இடத்தில் ஒரு ஓகே அவ்வளவு தான்..
ஆனால் உன்னுடையது முதலில் மேலிடம் பர்மிட் கொடுத்தா தான் மத்தது எல்லாம் புரியுதா கிரி..அதனால என்னோட நீ தான் ரொம்ப நீட்டா ட்ரஸ் பண்ணிட்டு வரனும்.” என்று அவனுடைய கசங்கிய உடையை பார்த்த வாறே சொன்னான்..
ஆம் கிரிதரனின் உடை அப்படி கசங்கி போய் தான் இருந்தது.. காலையில் இருந்து சாப்பிட்டானா…? தெரியாது முகம் மிக சோர்ந்து போய் பார்க்கவே அப்படி ஒடுங்கி போய் காணப்பட்டான். கீதாவின் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்ததில் முகம் இப்போது கொஞ்சம் தெளிந்து தான் காணப்பட்டது…
ஆனாலும் உடை முக்கியம் தானே..அதுவும் வருங்கால மாமனார் வீட்டுக்கு போகும் போது…
கிரிதரன் உடனே மகிழ்ந்து போல் குருமூர்த்தியின் கையை பற்றிக் கொண்டவனாய் அவனை அணைத்துக் கொண்டான்..
“ உன் மச்சினிச்சி என்னை முறைக்கிற நீ என்னை கட்டி பிடிக்கிற..விடுப்பா விடு.” என்று கிரிதரன் அருகில் இருந்தவன் மெல்ல மெல்ல பத்மினியின் அருகில் வந்து அவளை உரசும் படி நின்றுக் கொண்டான்.
இதை வரை கீதாவின் கேஸ்..அதில் வெற்றி பெற வேண்டும். பின் தான் பத்மினியை பார்ப்பது என்று ஒரு வைராக்கியத்தோடு தான் குருமூர்த்தி இது வரை இருந்து வந்தான்.
பத்மினியே ஒரு முறை போனில் அழைத்த போது கூட…..
“தோ பாரு பத்து இந்த கேஸ் முடியும் வரை நீ என்னிடம் பேசாதே… “ என்று சொன்னவனின் பேச்சில் பத்மினியே..
“ என்னமோ இப்போ தான் புதுசா இது போல கேசு எடுப்பது போல பேசுறிங்க…?” என்று பத்மினி கேட்டதற்க்கு..
“ இது போல் கேசு எனக்கு புதுசு இல்ல.. ஆனால் இந்த காதல் எனக்கு புதுசு..அதில் வரும் உணர்வுகள் எனக்கு புதுசா இருக்கு. உன்னை பார்க்க தேவையில்லை.. உன் குரல் கேட்டா கூட என் கவனம் சிதறுது..புரியுதா…?” என்று குருமூர்த்தி கேட்டான்..
அப்போது தான் பத்மினியும் அவனின் நிலையை சரியாக புரிந்துக் கொண்டாள்.. ஏன் என்றால் அது என்னவோ அவனை பார்க்க வேண்டும் போல தோன தான் சரி குரலையாவது கேட்போம் என்று நினைத்து தான் பத்மினி குருமூர்த்தியை பேசியில் அழைத்தது..
அதனால் அவனின் உணர்வை புரிந்துக் கொண்டவளாய்..
“ சாரி குரு இனி உன்னை டிஸ்ட்டப் பண்ண மாட்டேன்.” என்று சொன்ன காதலியை நினைத்து குருமூர்த்தி பூரித்து தான் போனான்..
இது போல் சொன்னதும் புரிந்துக் கொள்பவள் கிடைப்பதும் ஒரு வரம் தானே.. எத்தனை பேர்…
“ நான் கூப்பிடால் வரனும்.. என்னோட உனக்கு வேறு எது முக்கியம்…? அப்போ நான் உனக்கு முக்கியம் இல்லையா…?“ என்று புரிந்துக் கொள்ளாது காதலிக்கும் போது என்ன திருமணம் முடிந்த பின்னும் இது போல் பேசும் பெண்களை அவன் பார்த்து இருக்கிறானே..
இதுவும் ஒரு காரணம் என்று அவனிடம் விவாகரத்து கேட்கும் பெண்களையும் அவனுக்கு தெரியும் தானே..
பத்மினியின் இந்த புரிதலான பேச்சில்..
“சாரிடா குட்டிம்மா.. உன்னை நினைத்தாலே என் கவனம் போகுது டா.. அது தான் கீதா கேசு ஒரு நிலைக்கு வரட்டும்.. அப்புறம் நாம் நம்மது பார்த்துக்கலாம் என்னடா…” என்று கேட்டவனுக்கு..
“ சரி குரு… உங்க நிலை எனக்கு புரியுது.. ஏன்னா இப்போ என் நிலையும் அதே தான்.” என்று சொல்லி பேசியை அணைத்தவளை, அப்போது தானும் அவளை அணைத்துக் கொள்ள ஆசை வந்தாலுமே, தன்னை அடக்கியவனாய்…
கீதாவுக்கு முதல்ல ஒரு நல்லது நடக்கட்டும். அதை வரை பொறு மனமே பொறு.. என்று தன்னையே அடக்கிக் கொண்டவனாய் இதோ இது வரை இருந்து விட்டான்..
ஆனால் இப்போது அனைத்தும் ஒர் அளவுக்கு சுமுகமாய் முடிந்த நிலையில், பத்மினியின் இந்த பார்வையில் குருமூர்த்தி அவளின் அருகில் சென்று..
“என்ன பார்க்குற பத்தும்மா…?” அவள் எதற்க்கு தன்னை முறைத்தாள் என்று தெரிந்தே அந்த கேள்வியை கேட்டான்..
“ம் வெட்கமே இல்லாம எப்போவும் காரில் தானே ட்ரஸ் மாத்துவிங்க.. இப்போ மட்டும் என்ன புதுசா மானம் வந்து கிரிதரன் அண்ணா வீட்டுக்கு போய் மாத்தனும் என்று சொல்றிங்க…?
அவன் இதற்க்கு ஏடா கூடமாய் பதில் அளிப்பான் என்று தெரிந்தே தான் பத்மினி குருமூர்த்தியிடம் இந்த கேள்வியை கேட்டது… அது என்னவோ இப்போது எல்லாம் அவள் வெட்க கெட்ட மனசு அவனின் இது போல் பேச்சை ரசிக்க ஆரம்பித்து விட்டது…
அவள் எதிர் பார்த்ததுக்கு ஏதுவாய் தான்..
“ காரிலேயே மாத்தி இருந்து இருப்பேன்.. தான் ஆனா. கீதா முன் ட்ரஸ் மாத்த எனக்கும் ஒரு மாதிரி இருக்கும்லே..” என்று கீதாவை பார்த்த வாறே குருமூர்த்தி சொல்ல..
“ ஏன் நான் இருக்குறது உங்களுக்கு ஒரு மாதிரியா இல்லையா…?” என்று கேட்டவளின் கண்ணில் விஷமம் இருந்தது…
குருமூர்த்தியின் கண்ணிலோ அதோடு விஷமம் தெரிய….
அவள் காதுக்கருகில் அவனின் மூச்சு காற்று பத்மினியின் கன்னத்தில் வெப்பத்தை ஏற்றும் அளவுக்கு மிக மிக நெருக்கமாய் அவளின் காதில் அவன் உதடு படும் அளவுக்கு..
“ என்னை நீ இன்னும் கொஞ்ச நாளில் முற்றும் துறந்தவனாவே பாக்க போற.. உன் கிட்ட எனக்கு என்னடி கூச்சம்…” என்று சொன்னவனின் பேச்சில்..
“ சீ என்ன இது இப்படி வெட்கம் இல்லாம பேசுறிங்க…” என்று அவனின் பேச்சை ரசித்தவளாய் பத்மினி கேட்டாள்.
“ தோ பார் சும்மா இந்த டகால்ட்டி வேலை எல்லாம் என் கிட்ட காட்டாதே… இதோ..” அவளின் கன்னத்தை தன் விரலில் கோலம் இட்டு…
“ சீன்னு சொல்றவ கன்னம் இப்படி தான் சிவக்குமா…? நான் இப்படி தான் பேசுவேன்னு தெரிஞ்சே கேள்வி கேட்ட உன்னை பத்தி எனக்கு தெரியாதாடி.. நீ என் பேச்சை எந்த அளவுக்கு ரசிப்பேன் என்று…
இன்னும் மாமா கிட்ட இது போல் நிறைய இருக்கு..ஒன்னு ஒன்னா சொல்றேன்.. ஆனா பாரு அது சொல்லும் போது சில சமயம் செயல் முறை விளக்கமும் கொடுக்க வேண்டி இருக்கும்.. அதான் அதுக்கு உண்டான பர்மிஷன் உங்க அப்பா கிட்ட வாங்கிட்டேனா… பின் எல்லாத்துக்கும் வசதியா இருக்கும்..”
அவன் எல்லாத்துக்கும் வசதியா இருக்கும் என்று சொல்லும் போது அவன் பார்வையில் விஷமம் மித மிஞ்சி காணப்பட்டது.
அதற்க்கு பத்மினி…
“முதல்ல அதுக்கு நீங்க என் வீட்டுக்கு வந்து என் அப்பா கிட்ட பேசனும்.. கோர்ட்டில் வாயால் வடை சுடுவது போல் இல்ல..திருமண பேச்சு…” என்று அவனோடு மிக நக்கலாய் பத்மினி பேசினாள்..
“வர வர கூடி போயிட்டு தான் இருக்கு டீ…” என்று சொன்னவனின் பார்வை போன இடத்தை பார்த்து சட்டென்று தன் ஷாலை சரியாக போட்டு விட்டு அவளை முறைத்து பார்த்தாள்..
அவளின் செயலை பார்த்து அவள் தலை மேலேயே கொட்டியவன்.. “ புத்தி பாரு புத்தி..” என்று சொல்லி அவளின் ஷாலின் நுனியில் இருந்த சாம்பார் கரையை சுட்டி காட்டி …
“ துடை ஒயிட் கலரில் இது அசிங்கமா தெரியுது…” என்று குருமூர்த்தி சொன்னதும் தன் நாக்கை கடித்துக் கொண்டு..
“ சாரிங்க…” என்று அவனிடம் மன்னிப்பு கேட்டாள்.
“ தோ பார்.. எனக்கு வேண்டும் என்றால் நான் ஸ்டைட்டா கேட்டுடுவேன்.. இந்த ஓரப்பார்வை பார்க்குறது எல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது.. ஆசை இருந்தா மொத்தமா பார்த்திடனும்..” என்ற அவனின் பேச்சியில் பத்மினி வாய் அடைத்துக் கொண்டு தன் சகோதரி பக்கத்தில் நின்றுக் கொண்டாள்..
“யாரு கிட்ட… ? “ என்று சொல்லிக் கொன்டு தன் காலரை தூக்கி விட்டவனாய் அனைவரையும் அழைத்துக் கொண்டு கிரிதரன் வீட்டுக்கு சென்று பின் இதோ இப்போது தான் பத்மினி வீட்டுக்கே வருகிறான்.
அப்படி இருக்க தன்னை சரியாக அடையாளம் கண்டவரின் பேச்சில் அதிசயத்து கேட்டான் குருமூர்த்தி..
“இப்போ தான் டிவியில் உங்கள பத்தி சொல்லிட்டு இருந்தாங்க தம்பி…” என்று சொன்னவரின் பார்வை டிவி பக்கம் திரும்பியது..
அது தான் எந்த ஒரு சேனலாய் இருந்தாலும் ஒரு செய்தி கிடைத்தால் திரும்ப திரும்ப போட்டு காண்பிப்பது போல் இப்போது திரும்பவும் குருமூர்த்தியை பற்றி தான் போட்டுக் கொண்டு இருந்தார்கள்..
இளம் வழக்கறிஞ்சர் எடுக்கும் வழக்குகள் என்ற தலைப்பில் அவன் பெண்களுக்கு என்று ஆரம்பித்து அவன் எடுத்த கேசில் ஆரம்பித்து தற்போது இதோ இன்று எடுத்து முடித்த கீதாவின் கேசை சொன்னவர்கள்..
கீதா சொன்னதற்க்கு ஏற்ப ஜெய் குடும்பத்தை பற்றி அனைத்தையும் புட்டு புட்டி விளக்கி விட்டு கூடவே அவர்களின் புகைப்படத்தையும் போட்டு விட்டு…
பெண்ணை பெற்றவர்களே உஷார்… உங்கள் பெண்ணை கொடுக்கும் போது விசாரித்து கொடுங்கள்… ஏன் என்றால் அப்போது எல்லாம் வரதட்சணை கொடுமை..மாமியார் மருமகள் சண்டை இது போல் ஒரு எல்லையில் தான் நின்று விடும்..
ஆனால் இன்றோ… என்று பெண்களுக்கு நடக்கும் அட்டுழியங்களை அனைத்தும் விளக்கியவர்கள்… கூடவே..
பெண்களே உங்களுக்கு சட்டத்தின் உட்பட்டு ஏதாவது பிரச்சனை இருந்தால் இவரை அனுகினால் போதும் என்று சொல்லி குருமூர்த்தியின் புகைப்படத்தை போட்டனர்..
பின்னர் கூடவே அடுத்த பெண்களின் மன உணர்வுக்கே இப்படி மதிப்பு கொடுக்கும் இவர் ஒரு எலிஜிபல் பேச்சிலர்.. இவரை திருமணம் செய்யும் அந்த கொடுத்து வைத்த பெண் யாரோ…? என்ற கேள்வியோடு அந்த ஒலிப்பரப்பு முடிய..
பத்மினியின் தந்தை குருமூர்த்தியை பார்த்து…
“ அவங்க சொல்வது போல உங்களை கல்யாணம் செய்ய போற பெண் கொடுத்து வைத்தவள் தான் தம்பி…” என்று சொல்லி முடித்ததும்…
சட்டென்று குருமூர்த்தி..
“ அந்த கொடுத்து வைத்த பெண் உங்க சின்ன பெண் பத்மினி என்று நான் சொன்னால், உங்கள் பதில் என்னவாக இருக்கும்.” என்று கேட்டு விட்டான்.