Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Nayaganin Nayagi...22

  • Thread Author
அத்தியாயம்…22

குருமூர்த்தி சொன்ன… “அந்த கொடுத்து வைத்த பெண் உங்கள் சின்ன மகள் பத்மினியாக இருந்தால் உங்கள் பதில்…” என்ற அவனின் பேச்சில் பத்மினியின் தந்தை …

சட்டென்று…

“ ரொம்ப சந்தோஷம் தம்பி…” என்று பதில் அளித்த பின் தான் குருமூர்த்தி பேசிய பேச்சின் அர்த்தம் புரிந்தவராய்…

“தம்..பி த..ம்பி இப்போ நீங்க என்ன கேட்டிங்க…” என்று பத்மினியின் தந்தை திக்கி திணறி தன் காதில் விழுந்தது சரி தானா…? இல்லை நாம் தவறாக புரிந்துக் கொண்டோமா என்று குழம்பி போனவராய் பர பரப்புடன் கேட்டார்..

குருமூர்த்தி சிரித்துக் கொண்டே சுற்றி வளைக்காது..

“ பொண்ணு கேட்டேன்..” என்று நேரிடையாக கேட்டு விட்டான்..

இப்போது பத்மினியின் அப்பா எதுவும் சொல்லாது, அமைதியாக தன் பெரிய பெண் கீதாவை தான் பார்த்தார்..

அந்த பார்வையின் அர்த்தம் அங்கு இருந்த அனைவருக்கும் புரிந்து தான் இருந்தது.. கீதா உட்பட…ஆனால் யாரும் எதுவும் பேசவில்லை.

கொஞ்ச நேரம் நீடித்த அந்த அமைதியை கீதா… “அப்பா பத்துக்கு நல்ல வாழ்க்கை வருது... நீங்க எதுக்காகவும் அதை தடுக்காதிங்க..” என்று சொன்னவளின் பேச்சு தைரியமாக தான் இருந்தது..

ஆனால் ஒரு தந்தையாய் திருமணம் முடிந்து ஆறுமாதமே வாழ்ந்த மூத்த பெண்.. வாழ்க்கை தொலைத்து விட்டு வீட்டில் இருக்க.. இளைய மகளுக்கு திருமணம் செய்ய ஒரு தந்தையாய் அவர் மனம் முரண்டியது.

ஆனாலும் இதோ காலையில் இருந்து குருமூர்த்தி பற்றி கேட்ட அனைத்துமே நல்ல விதமாய் இருக்க..இதோ பார்க்க முரட்டு தோற்றத்துடன் இருந்தாலும், மனது இலகியதாய்.. பெண்களின் பக்கம் இருக்கும் வலி புரிந்தவனாய் இருப்பவன்..

தன் மகளுக்கு மாப்பிள்ளையாய் அமைய தான் கொடுத்து தான் வைத்து இருக்க வேண்டும்.. அதுவும் அவரே விரும்பி வந்து கேட்கும் போது மறுப்பது என்பது முட்டாள் தனமான செயல் தான்..

அது அவரே நன்கு உணர்ந்தார் தான்.. ஆனாலும்.. என்று திரும்பவும் அந்த ஆனால் என்று மனது நினைக்கும் போதே அவரின் பார்வை மீண்டும் மீண்டும் கீதாவிடமே சென்றது.

இது வரை இவர்களின் பேச்சை எந்த வித இடையூறும் செய்யாது கேட்டுக் கொண்டு இருந்த கிரிதரன்… கீதா எதாவது நினைத்தாலும் பரவாயில்லை என்று ..

முதலில் தான் தயங்கி மனதில் இருப்பதை சொல்லாது விட்டு விட்டோம்.. இதோ இன்று தான் விவாகரத்து கிடைத்து இருக்கிறது.. இப்போது தன் விருப்பம் சொன்னால், அது கீதாவை எந்த வகையில் பாதிக்கும் என்று தெரியாது..

இருந்தும் ..

“நீங்க கீதாவை மனதில் வைத்து தான் குரு சாரோட விருப்பத்தை யோசிக்கிறிங்கன்னா… நான் கீதாவை கல்யாணம் பண்ண விரும்புறேன் சார்…

இந்த விருப்பம் இப்போது வந்தது கிடையது.. உங்க மகளை முதல்ல பார்த்த உடன் பிடித்து விட்டது.. ஆனால் அப்போ எனக்கு தொழில்ல ஒரு பிரச்சனை..

அந்த பிரச்சையை சால்வ் செய்து கொடுத்தது கூட நம்ம குரு சார் தான். அந்த பிரச்சனையை முடிச்சிட்டு நான் கீதாவை பத்தி யோசிப்பதற்க்குள் பத்து கீதா கல்யாண பத்திரிக்கையை வந்து நீட்டிட்டா…

இப்போ தோனுது கல்யாணம் நிச்சயம் ஆன கூட பரவாயில்ல.. நான் உங்க கிட்ட வந்து பேசி இருக்கனுமோ என்று.. இதோ இப்போது கீதா மனசு எந்த அளவுக்கு ரணமா இருக்கும் என்று எனக்கு தெரியும்..

அந்த ரணத்தை இன்னும் கிளறுவது போல தான் இதோ இப்போது நான் சொல்லும் இந்த விருப்பம் கூட இருக்கும்..

ஆனா நான் இப்போ கூட இதை சொல்லலேன்னா, இதை நான் எப்போவும் சொல்ல முடியாம போயிடுமோன்னு இருக்கு…

நான் இப்போ என் விருப்பத்தை தான் சொன்னேன்.. இப்போவே கல்யாணம் என்று என்று நான் கேட்கல.. எனக்கு ஒரு தங்கை இருக்கு.. உங்களுக்கு தெரியும்.. பத்துவோட பிரண்ட்..

அவளுக்கு கல்யாணம் முடிச்சிட்டு தான் நான் பண்ணிக்கலாம் என்று நினச்சிட்டு இருந்தேன்… இப்போவும் எனக்கு அந்த எண்ணம் தான்.. என்னோட விருப்பம் உங்க பெரிய மகள் கீதாவுக்கு கல்யாணம் என்று நினைக்கும் போது உங்களுக்கு என் நினைவு தான் வரனும்..அது தான் இப்போ நான் இதை பத்தி பேசினேன்…” என்று கிரிதரன் தன் மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்லி விட்டான்..

அதற்க்கு கீதா ஏதோ பேச வரும் முன் அவளின் பேச்சை தடுத்து நிறுத்திய கிரிதரன்..

“என்ன சொல்ல போற கீதா..? நான் இப்படியே இருந்துடுறேன் என்றா…? ” என்று கேட்டவன்..

பின் அவனே..

“இருக்கலாம் அது தப்பு இல்ல..” என்று சொன்னவன்..மீண்டும்…

“எப்போன்னா… ரொம்ப ரொம்ப நல்லவனை திருமணம் செய்து இருந்தால்.. அவனோடு வாழ உனக்கு கொடுத்து வைக்காது.. அவன் போய் சேர்ந்து இருந்தா… இருக்கலாம் அவனோடு ஆறுமாதம் என்ன ஆறு வாரம் வாழ்ந்த வாழ்க்கை கூட போதும் என்று..

ஆனால் அவனை பத்தி இப்போ பேச தேவையில்லை.. அவனுக்காக நீ உன் வாழ்க்கையை பாழாக்குவது என்னை பொறுத்த வரை வடி கட்டின முட்டாள் தனம் என்று தான் சொல்லுவேன்…

இதோ இப்போ நீ நினைக்கும் அந்த முட்டாள் தனத்தால், இவங்க வாழ்க்கையும் சேர்ந்து தான் பாழாகும்.. இனி உன் முடிவு தான்.. உன் முடிவை தான் நான் இப்போ கேட்கிறேன்.. திருமணத்தை இல்லை..

அதுக்கு இன்னும் காலம் இருக்கு..” என்ற கிரிதரனி பேச்சில் கீதா அரண்டு விட்டாளோ இல்லையோ… நன் குருமூர்த்தி அலறி விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்..

“அவசரப்பட்டு கீதா திருமணம் பின் தான் நம்மது என்று பெரிய இவனாட்டம் பேசுனது தப்போ.. ஏன்டா ஏன் இப்படி பேசுன.. இந்த பைய்யன் தான் மாப்பிள்ளை கைய் வசம் கிரி இருக்கானே என்று நினைத்து சொல்லி எனக்கு நானே ஆப்பு வெச்சி கிட்டேன்.” என்று புலம்பினான். மனதோடு தான்..

திரும்பவும் கீதா..

“இல்ல எனக்கு ஒரு தடவை சூடு பட்டதே போது.. ஜென்மத்துக்கும் அந்த ரணம் ஆறுமான்னு தெரியல…” என்று சொன்ன கீதா பத்மினியை பார்த்து..

“பத்து நீ என்னை பாத்து உனக்கு கிடைக்கும் நல்ல வாழ்க்கையை தவற விட்டுடாதே.. சீக்கிரம் குரு சாரை கல்யாணம் செய்துக்கோ.. அப்பாவுக்கு இப்போ இருக்கும் மனநிலையில் உன்னோட திருமணம் தான் அவருக்கு நிம்மதியை கொடுக்கும்…” என்று கீதா சொன்னதும்..

பத்மினி…

“ கண்டிப்பா இப்போ என்னோட திருமணம் அப்பாவுக்கு நிம்மதியை கொடுக்கும் தான்..” என்று பேசிய பத்மினியின் பேச்சில் குருமூர்த்தி அப்பாடா என்று ஒரு நிம்மது பெரும் மூச்சி விட்டான்..

பரவாயில்லை நான் சொன்னதை மறந்துட்டா போல.. அது கூட நல்லதுக்கு தான்.. முதல்ல நாம பண்ணிக்கலாம். பின் அவங்களுக்கு செய்து வெச்சிடலாம்..

அது என்னவோ குருமூர்த்திக்கு இன்று பத்துவை சீக்கிரம் திருமணம் செய்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான்..

குருமூர்த்தி மற்றவர்களின் நலனை நாடுவான் தான். ஆனால் அதில் சிறிதளவும் தன்னை பாதிக்காத அளவுக்கு பார்த்துக் கொள்வான்..

இப்போதும் கீதாவின் நலனை நினைக்கிறான். நினைப்பான்.. அதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.. ஆனால் இப்போது கீதாவின் மனநிலையில் விரைவில் திருமணம் என்பது சாத்தியம் கிடையாது..

ஜெய் என்ன தான் கெட்டவன் என்றாலும், அதில் இருந்து வெளி வர அவளுக்கும் அவகாசம் கொடுக்க வேண்டும்.. ஆனால் அந்த அவகாசத்தை அவனுக்கு கொடுக்க அவன் விரும்பவில்லை..

ஒன்று இல்லை என்பது வேறு.. அவனுக்கு என்று இருக்கிறது.. ஆனால் இப்போது இல்லை என்பது அவனுக்கு பிடித்தமாய் இல்லை… அதனால் முதலில் தாங்கள் திருமணம் செய்யலாம் என்று குருமூர்த்தி நினைக்க..பத்மினியும் அதே பேச..

குருமூர்த்தி பத்மினியை தன் செல்லக்குட்டி என்று மனதுக்குள் கொஞ்சி தீர்த்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்…

ஆனால் அவனின் அந்த கொஞ்சல் எல்லாம் சிறிது நேரம் தான்.. அதன் பின் பத்து பேசிய பேச்சில்..

“அட பாதகி..” என்று தான் குருமூர்த்தி பத்மினியை சொல்ல வேண்டி இருந்தது…

“ என் கல்யாணத்தால் அப்பாவுக்கு நிம்மதி என்றால், உன் கல்யாணம் தான் அப்பாவுக்கு மகிழ்ச்சி அக்கா… முதல் பெண் இருக்க இரண்டாம் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க எந்த நல்ல அப்பாவும் நினைக்க மாட்டார்..”

இடையில் ஏதோ பேச வந்த கீதாவின் பேச்சை தடுத்து நிறுத்திய பத்மினி…

“ இப்போ உனக்கு நடந்தது எல்லாம் திருமணத்தில் சேர்த்துக்காதே…” என்று தன் அக்காவை மிரட்டிய பத்மினி..

பின் அவளே..

“ அதை நீ திருமணத்தில் சேர்த்துப்ப… ?” என்று அவளையே கேள்வி கேட்டாள்.

அதற்க்கு கீதா… மறுப்பாய்.. “ இல்லை…” என்று தலையாட்ட..

“ஆ அப்புறம் என்ன…? நீயே அதை ஒரு திருமணம் இல்லேன்னு சொல்ற… அப்புறன் கிரிதரன் அண்ணாவை கல்யாணம் செய்துக்க என்ன தயக்கம்…?” என்று பேசிய பத்மினியை கீதா பாவம் போல் பார்த்தாள்.

கீதாவின் பார்வையில், பத்மினி தன் பேச்சின் வேகத்தை கொஞ்சம் குறைத்தாளே தவிர முழுவதும் நிறுத்தி விடவில்லை..

“சரிக்கா உடனே எல்லாம் வேண்டாம். உங்களுக்கு எவ்வளவு டைம் வேண்டுமோ அவ்வளவு டைம் எடுத்துக்கோ அக்கா.. கிரிதரன் அண்ணாவுக்கும் கிரிஜாவை கல்யாணம் செய்து கொடுக்க நேரம் வேண்டும்..

அதனால நேரம் எடுத்துக்கோ.. ஆனால் முடிவு நல்ல முடிவா எடுக்கா… உன் முடிவில் தான் எங்கள் வாழ்க்கையின் ஆரம்பமும் இருக்கு… அதை மட்டும் நியாபகத்தில் வெச்சிக்கோ..

நான் உன்னை ப்ளாக் மெயில் பண்றேன்னு நினச்சா கூட பரவாயில்ல..ஆமாம் ப்ளாக் மெயில் தான் பண்றேன்.. இரண்டு திருமணமும் ஒரே நாளில் நடந்தால் நடக்கட்டும்.. அப்படி இல்லேன்னா நாங்களும் இப்படியே இருந்துடுறோம்..

குரு கூட சொன்னார்.. உன் அக்கா வாழ்க்கை அமையாம நம்ம வாழ்க்கை இல்லை என்று… நானே உன் பேச்சை கேட்டுட்டு முதல்ல எங்க கல்யாணம் நடக்கட்டும் என்று நான் ஒத்துக் கொண்டாலும், அவர் ஒத்துக்க மாட்டார்…” என்று சொன்ன பத்மினி ..

குருமூர்த்தியை பார்த்து..

“ என்ன குரு நான் சொன்னது சரி தானே…” என்று அவனிடமே கேட்டு வைக்க.. பாவம் அவன் என்ன சொல்லுவான்…? ஆமாம் என்பதை தவிர..

“ பத்து சரியா தான் சொன்னா கீதா… பெரியவ நீ இருக்க அவள் என்னை திருமணம் செய்தாலும், அவள் மனது ஒப்பாது தான் என்னோடு இருப்பா…” என்று சொன்னவன் கடைசியாக..

“இத்தனை ஆண்டு என் திருமணம் எது என்று தெரியாது நடக்காது தள்ளி போனது.. இப்போ அதற்க்கு இது தான் காரணம் என்று சொல்லி தள்ளி போகுது..

பரவாயில்லை.. முன்னோடதுக்கு பின்னோடது காரணமாவது தெரியுதே.. பரவாயில்ல…”

ஆம் இப்போ குருவுக்கு இது தான் நினைத்தான்.. நாம் நடைமுறையை பற்றி யோசித்து முன் நம் திருமணம் நடக்கட்டும் என்று பேசி.. நடத்திக் கொண்டாலுமே, பத்மினி அங்கு தன்னோடு சந்தோஷமாக இருப்பாளா…? என்பது சந்தேகம் எல்லாம் இல்லை.. இருக்க மாட்டாள்.. அது அவனுக்கு நிச்சயமே..

அதனால் முதலில் கீதாவை கிரிதரனை ஏற்றுக் கொள்ளும் படி செய்வோம்… பின் பத்மினி சொன்னது போல் ஒரே நாளில் கூட திருமணம் செய்துக் கொள்ளலாம் என்ற முடிவோடு..

கீதாவை இன்றே இது பற்றி இதற்க்கு மேல் பேசுவது சரியில்லை.. பிடிக்கலாம் என்பது கூட பிடிக்காது போய் விடும். அதனால் கொஞ்சம் விட்டு தான் பிடிக்க வேண்டும் என்று நினைத்தவனாய்..

பத்மினியின் தந்தையிடம்..

“கவலை படாதுங்க அங்கிள்.. இனி நீங்க உங்க இரண்டு பெண்களை பத்தி யோசித்து உங்க உடம்பை கெடுத்துக்காதிங்க..மாப்பிள்ளை நாங்க இருக்கோம்.” என்று கிரிதரனையும் தன்னோடு இணை சேர்த்துக் கொண்டவன்..

கீதாவின் அருகில் சென்று..…

“நான் உனக்கு நல்லது செய்வேன் என்று என் மீது நம்பிக்கை இருக்கு தானே…?” என்ற குருமூர்த்தியின் கேள்விக்கு கீதா உடனே..

“ இருக்கு…” என்று தலையாட்டினாள்..

“ குட்..” என்று சொன்ன குருமூர்த்தி..

“ இப்போதைக்கு இந்த திருமண பேச்சு.. என்னை பத்தி பத்துவை பத்தி. கிரிதரனை பற்றி எதையும் யோசிக்காதே.. முதலில் நீ இது போல வீட்டிலேயே அடஞ்சி இருக்காதே..

வெளியில் வா… உனக்கு கிடைத்த அந்த ப்ராப்பர்ட்டியில் ஏதாவது ஒரு காப்பகத்துக்கு போவதோடு, நீயே பாதிக்கபட்ட பெண்களுக்கு என்று ஒரு காப்பகம் ஆரம்பி…

அப்போ தெரியும்.. உலகத்துல என்ன என்ன நடக்குதுன்னு…. கொஞ்ச நாள் போகட்டும் நல்லா கவனி கீதா கொஞ்ச நாள் போகட்டும்.. கிரிதரன் எப்படியோ எனக்கு தெரியாது..

என்னால் அதிக நாள் எல்லாம் காத்துட்டு இருக்க முடியாது… அதனால் இதுல இருந்து வெளியே வா.. அதுக்கு நீ ஆரம்பிக்கும் அந்த காப்பகமும் உனக்கு உதவும்.. உனக்கு நாங்களும் உதவுவோம்… முக்கியமா கிரிதரன் உதவுவான்…” என்று கீதாவிடம் சொன்ன குருமூர்த்தி..

கிரிதரனை பார்த்து..

“ என்ன கிரி உதவுவே தானே…?” என்று குருமூர்த்தி கேட்கவும், கிரிதரன் உடனே..

“ம்…” என்று தலையாட்டினான்.

பார்க்கலாம் கீதாவின் அருகில் கிரிதரனை பழக விட குருமூர்த்தியின் இந்த திட்டத்தில் கிரிதரன் கீதாவின் மனதில் இடம் பிடிப்பானா…? என்று..














 
Top