அத்தியாயம்…7
“நான் இந்த விவாகரத்துக்கு சம்மதித்து விட்டால்.” என்று ஜெய் கேட்டதும், இது வரை தன் முன் இருக்கும் டேபுளின் மீது கைய் ஊன்றி பேசிக் கொண்டு இருந்த குருமூர்த்தி, அந்த கையை மேல் நோக்கி சென்று தன் தலையின் பின் இரு பக்கமும் கோர்த்த வாறு…
“இப்போ நீ என்னவோ கேட்டியே… அது என்ன திரும்ப சொல்…” என்று குருமூர்த்தி கேட்ட விதத்திலேயே/…. அவனின் கோபம் தெரிந்தது.
“இ..ல்...லே …” என்று அடுத்து பேச முடியாது ஜெய் தயங்கி தன் பேச்சை நிறுத்தினான்.
“சொல். அட சும்மா சொல்லுப்பா… உனக்கு பேச்சு எல்லாம் ஒரு விசயமா…? பெரிய விசயத்தையே சும்மா அசால்ட்டா செய்யிற உனக்கு பேச்சு எல்லாம் ஒரு மேட்டர இல்ல...சொல்லு திரும்பவும் சொல்.” என்று குருமூர்த்தி சொல்லவும்..
நாம் இதை திரும்பவும் சொல்லாது இவன் விடப் போவது இல்லை என்பதை ஜெய் அறிந்தவனாய்… “இல்ல நீங்க முதல்ல விவாகரத்துக்கு தானே எனக்கு நோட்டிஸ் அனுப்பினிங்க… அதுக்கு நான் ஒத்துக்கலாம்.” என்று ஜெய்யை அடுத்து பேச விடாது குருமூர்த்தி…
“என்னது..என்னது…?ஒத்துக்கலாம்.. என்ன என்ன ஒரு தாராள மனப்பான்மை.” என்று கை தட்டி பாராட்டி பேசுவது போல் பேசிய குருமூர்த்தி…
“ஆமா..ஆமா..உன் தாராள மனசு தான் எனக்கு தெரியுமே...சொந்த அண்ணிக்கே வாழ்க்கை கொடுத்த தாராள பிரபு தானே நீங்க… அதோட விட்டிங்களா…? வாழ்க்கை கொடுக்க நினச்சாச்சி அதில் என்ன கஞ்சத்தனம் என்பது போல..அடுத்த பெண்ணுக்கும் வாழ்க்கை கொடுத்து..அது பத்தாதுன்னு அவள் தங்கை கிட்டேயும் தப்பா பேசி இருக்க……
ஒரே சமயத்தில் இரட்டை குதிரை சவாரி செஞ்சு இருக்க…என்ன ஜென்மம்டா நீ..இதில் அதை வீடியோ வேறு… பெண்டாட்டிக்கு மட்டும் தான் அந்த விசேஷ வீடியோவா இல்ல…இவங்களதும் இருக்கா…?” என்ற குருமூர்த்தியின் பேச்சில்..
ஜெய் பதறி போய்… “அய்யோ…” என்று சொன்னவனை பார்த்து குருமூர்த்திக்கு இன்னும் கோபம் தான் கூடியது.
சொந்த பெண்டாட்டியிடம் படுக்கையை பகிர்ந்துக் கொண்டதை..அதாவது புனிதமான தாம்பத்தியத்தை..இவனுக்கு எப்படியோ../? கீதாவுக்கு அது ஒரு புனிதமான தாம்பத்தியம் தானே… அதை வீடியோ எடுப்பானாம்…
அண்ணிக்கூட இருந்ததை வீடியோ எடுத்தியா…? என்று கேட்டதற்க்கு இப்படி பதறி போய் துடி துடித்து போகிறான்.. வைக்கிறேன்டா..எல்லாத்துக்கு சேர்த்து. உன் மொத்த குடும்பத்துக்கும் வைக்கிறேன்டா என்று மனதில் நினைத்தவனாய்…
“தப்பு செஞ்சிட்ட...இப்போ நாளைக்கு அந்த குழந்தை உனக்கு தான் பிறந்தது என்று நான் நிருபிச்சிட்டா...நிருபிப்பது என்ன..கண்டிப்பா அது செய்வேன்.. அப்போ இந்த பொம்பளை… என்னை வலுக்கட்டாயமாக தான் அவன் கெடுத்தான். என்று சொல்ல கூடும்..ஏன்னோ இவள் உன் பொண்டாட்டி இல்லலே…” என்று பேச பேச ஜெய்யுக்கு வேர்த்து தான் கொட்டியது.
“இல்ல சார் நான் தெரியாம செஞ்சிட்டேன்...தப்பு தான்… நீங்க என் குழந்தை பத்தி யோசிச்சி பார்க்கனும்…?” என்று பத்ம ப்ரியா தனக்காக பேசினால், வேலைக்கு ஆகாது என்று நினைத்து தன் குழந்தையை சொன்னால் மனம் இறங்க கூடும் என்று நினைத்து பேச.. அதுவே அவளுக்கு வினையாகி போனது…
“ம் அதுவும் இருக்குல அவன் அதான் உன் புருஷன் உனக்கே குழந்தை கொடுக்க முடியாம தம்பி கிட்ட அனுப்பி வெச்சவன்… தம்பி பெண்டாட்டி கிட்ட...உனக்கு கூட குழந்தை கொடுக்க சொல்றேன்.. என்ன இவன் ஊருக்கே குழந்தை கொடுக்கும் அளவுக்கு அவ்வளவு பெரிய ஆளா…? உனக்கு அதுல தான்டா வைக்கனும் ஆப்பு…” என்று பத்ம ப்ரியாவிடம் ஆரம்பித்த தன் பேச்சை ஜெய்யிடம் முடித்த குருமூர்த்தி…
கடைசியாக இருவரையும் பார்த்து…“உங்க நேரம் அவ்வளவு தான்.. “ என்று வாசலை காட்டினான்.
குருமூர்த்தி நேரம் அவ்வளவு தான் என்று சொன்னது, அவர்களுக்கு அவன் கொடுத்த நேரம் முடிந்து விட்டதை சொன்னதா….? இல்லை அவர்கள் நேரம் நல்ல நேரம் முடிந்து விட்டதை சொன்னதா…?பார்க்கலாம்.
“அந்த வீடியோவை எல்லோரும் பார்த்து இருப்பாங்களா…? என்ற இந்த கேள்வியை கீதா பத்மினியிடம் எத்தனை முறை கேட்டு இருப்பாள் என்று அவளுக்கே தெரியாது.
அதே போல் பத்மினி அதற்க்கு… “அக்கா நான் குரு சார் கிட்ட தான் இருக்கு..நாம தானே போலீஸ் ஸ்டேஷனுக்கு போனோம்.. நீ கூட தானே பார்த்த அந்த போலீஸ் காரர் கூட அதை பார்க்கல. விசயம் இது தான் என்றதும் அதை அப்படியே குரு சார் கிட்ட தான் கொடுத்துட்டார். குரு சார் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா…?” என்று இதே பதிலைய் கீதா ஒவ்வொரு முறையும் அந்த வீடியோ பத்தி கேட்கும் போது சொன்னாலும், திரும்ப திரும்ப கீதா அந்த வீடியோவிலேயே நின்று விட…
பத்மினி ஏதோ முடிவு செய்தவராய் குருமூர்த்திக்கே அழைத்து விட்டாள்… அப்போது குருமூர்த்தி வீட்டில் தான் இருந்தான்.. வீடு என்பதும் அவன் தனிப்பட்ட அலுவலக அறை என்பதும் ஒரே இடம் தானே…
“சொல்லு பத்து…” என்று குருமூர்த்தி எடுத்த உடனே கேட்டான்.
முதலில் தான் பத்மினி தன்னை குருமூர்த்தி ஒருமையில் அழைப்பதும், இது போல் பெயர் சுருக்கத்தையும் பார்த்து என்ன இவன் இப்படி பேசுறான்..இப்படி அழைக்கிறான் என்று நினைத்தது…
ஆனால் அவனை எதிர்த்து பேசவில்லை..அவனை பார்த்தாலே அவளுக்கு எதிர்த்து பேச முடியவில்லை என்பது வேறு விசயம்..பின் தான் தெரிந்தது தான் மட்டும் இல்லை அவனிடம் யார் எதிர்த்து பேசினாலும், அவன் கதி அவ்வளவு தான் என்று…
பின் அவனை பற்றி அறிந்ததில், தெரிந்ததில், பார்க்க முரட்டு தோற்றத்தில் இருந்தாலும், அவனின் மனம் நியாயம் பக்கம் தான் நிற்க்கும். அதே போல் அவன் பேச்சு அப்படி இப்படி என்றாலும், அவன் நடத்தையில் ஒரு குறை சொல்லும் படி இல்லாததால் அவனின் இந்த பேச்சை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளாது விட்டு விட்டாள்.
குருமூர்த்தி சொன்ன… “ சொல்லு பத்து…” என்றதற்க்கு பத்மினி எந்த பதிலும் அளிக்காது அமைதியாக இருக்கவும்…
“பத்து ஏதாவது பிரச்சனையா…? அவன் போன் செய்யலயே…. அப்போ வீட்டுக்கே ஏதாவது வந்துட்டானா…?” என்று குருமூர்த்தி பட பட என்று கேட்ட அந்த விதத்தில் பத்மினியின் மனம் லேசாய் மிக மிக லேசாய் அவன் பக்கம் சாய தான் செய்தது..
ஆனால் இருக்கும் நிலையும், நடக்கும் விசயமும்...அவனை பற்றி பர்சனலா என்ன தெரியும்…? ஏற்கனவே நம்ம குடும்பம் ஒருத்தன் கிட்ட மாட்டி அதில் இருந்தே வெளியில் வர திண்டாடிட்டு இருக்கோம்.. இப்போ நம் கவனம் அதில் மட்டும் தான் இருக்கனும்.. என்று பத்மினி தன் மனதுக்கு தானே சொல்லிக் கொன்டு இருக்கும் வேளயில்..
குருமூர்த்தியின்… “பத்து பத்து…” என்று குறைந்தது பத்து முறை அழைத்து இருப்பான் போல…
கடைசியில் அவனோட பாஷையில்… “இப்போ சொல்றியா இல்ல நான் வரட்டுமா…?” என்று அவன் அதிகாரமாய் கேட்டதில், தன் நினைவில் இருந்து மீண்டவள்…
“நீங்க வர வேண்டாம்..நானே வர்றேன்…” என்று பத்மினி சொன்னதற்க்கு, குருமூர்த்தி திரும்பவும்.. “பத்து ஏதாவது பிரச்சனையா…?” என்ற அந்த அக்கறையான பேச்சில்..
திரும்ப திரும்ப என்னிடம் இது போல் அக்கறையில் பேசாதே… அனைத்திற்க்கும் நானே யோசனை செய்து அதை செயல் படுத்துவதில் இருந்து சிறு வயது முதலே பாராம் சுமந்த என் மனது, இது போல் இந்த அக்கறையான பேச்சில், என் மனம் உன் பக்கம் சாய பார்க்கிறது.என் மனம் முழுவதும் உன் வசம் ஆகாமல் இருக்க..இது போலான உன் பேச்சை நிறுத்தி விடேன்… என்று அவள் மனம் அவளுக்குள் போராடியது.
அவளின் மனம் போராடினாலும், அவனுக்கு பதிலாய்… “பிரச்சனை எல்லாம் இல்ல சார். அக்காவுக்கு ஒரு சந்தேகம் அது தான்…” என்று பத்மினி தன் பேச்சை இழுத்தி நிறுத்தினாள்.
“அந்த வீடியோ பத்தியா….?” பெண்களின் மனதை துள்ளியமாக அறிந்து வைத்திருப்பவன் போல் அவன் கேட்டான். அதற்க்கு என்ன என்று பதில் சொல்வது என்று அழைப்பில் இந்த பக்கம் இருந்த பத்மினி தயங்கினாள்..
குருமூர்த்தி என்ன நினைத்தானோ… “நான் வீட்டில் தான் இருக்கேன். நீ கீதாவை கூட்டிட்டு வா… என் வீடு தெரியும் தானே… அன்னைக்கு என் ஆபிசுக்கு வந்திங்கல. அது பின் தான் என் வீடு.” என்று சொன்ன குருமூர்த்தி கூடவே…
“துணைக்கு கிரிதரனை அழச்சிட்டு வரது இருந்தா வாங்க.” என்று சொல்லவும்..
“எனக்கு உங்க வீடும் தெரியும். உங்களையும் தெரியும்.” என்ற பத்மினியின் பேச்சில், குருமூர்த்தி அடுத்து பேசாது சிறிது நேரம் அமைதி காத்தான்.
பின்… “ என்னை பார்த்தும், என் பேச்சை கேட்ட பின்னும் நீ இப்படி சொல்றேன்னா… என்ன வெயில்ல ரொம்ப சுத்திட்டு இருக்கியா…?” என்று கேட்டவன் பின் அவனே…
“என் மேல இவ்வளவு நம்பிக்கை வெச்சி இருப்பத்துக்கு நன்றி..ஆனா நான் அப்படி எல்லாம் ரொம்ப நல்லவன் எல்லாம் கிடையாது நம்பி ஏமாந்துடாதே…” என்று அவன் எதற்க்கு சொன்னான் என்று அவனுக்கே புரியவில்லை..ஏன் சொன்னான் என்று கேட்ட பத்மினிக்கும் புரியவில்லை.
ஆனால் இருவருக்கும் இடையே ஆன அந்த பேச்சு என்பது மிக சாதாரணமாக நடந்தது… அவனுக்கு பேச்சு என்பது தான் தொழில்..பெண்களிடம் பேசுவதும் அவனுக்கு புதியது இல்லை. இன்னும் கேட்டால் பெண்களிடம் தான் அவன் பேச்சு எல்லாம் அதிகமாய் இருக்கும்..
ஆனால் இது போல் சுய பேச்சு..அதாவது தன்னை பற்றி சொல்வது… இது போல் வழக்கு அல்லாது பேசுவது என்பது அவனிடம் கிடையாது… நெருங்கியவர்களிடம் பேசுவான்.. ஆனால் பார்த்த இந்த ஒர் சில தினங்களிலேயே. இது போல் பேசு எல்லாம் அவனுக்கு புதியது தான்..
பத்மினிக்கோ… வயதான ஆரோக்கியம் பாதிக்கப்பட்ட தந்தையின் துணையுடன் மார்கெட் ரோடில் ஒரு கடையை வைத்து நடத்துவது என்பது அவ்வளவு சுலபம் எல்லாம் கிடையாது..
அதுவும் பார்க்க அழகான இளம் பெண் எனும் போது… கடைக்கு சும்மா வேணும் வந்து…
“இதில் இரண்டு ஜெராக்ஸ் எடும்மா…” என்று சொல்லி விட்டு அவள் அதை பிரதி எடுப்பதற்க்குள் அவளிடம் பேச்சை வளர்க்க பார்க்கும் ஆண்களிடம் அவளின் பேச்சு எல்லாம் இத்தனை காபிக்கு இந்த காசு அவ்வளவு தான் என்பது போல் தான் இருக்கும். பத்மினிக்கும் இவனிடமான இந்த பேச்சு புதியது தான்…
குருமூர்த்தி பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த அவன் அக்கா பூஜா… “யார்…?” என்பது போல் சைகையில் கேட்டாள்.
பதிலுக்கு சொல்றேன் என்பது போய் வாய் அசைவில் சொன்ன குருமூர்த்தி… “சரி பத்து வா.” என்றதோடு கூடுதலாய்..
“பத்திரம்.” என்ற வார்த்தையும் சேர்த்து சொன்னான்.
குருமூர்த்தி பேசியை அனைத்த பின் பூஜா… “யாருடா…? பார்த்து பத்திரம் எல்லாம் பலமா இருக்கு.” என்று கேட்டதற்க்கு…
“கேசு விசயமா வந்தவங்க…” என்று சொன்ன குருமூர்த்தியை யோசனையுடன் பார்த்துக் கொண்டே…
“கேசு விசயமாவா…?” என்று பூஜா சந்தேகத்துடன் கேட்டாள்.
“ஆமா அக்கா கேசு விசயமா தான். விவாகரத்து கேசு…” என்று குருமூர்த்தி சொன்னதும் பூஜாவுக்கு சப்பென்று ஆகி போனது.
“விவாகரத்து கேசா….?” என்று வழக்கில் இழுத்து அடிப்பது போல் பூஜா தன் பேச்சில் இழுக்க..
“அக்கா இப்போ பேசின பொண்ணுக்கு விவாகரத்து இல்ல...இவள் அக்காவுக்கு… ஏதோ சந்தேகம் வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கேன்.” என்று குருமூர்த்தி சொன்னதும்..
பூஜா… “ஆ கூப்பிடு கூப்பிடு நல்லா கூப்பிடு…” என்று மகிழ்ந்து போய் சொன்னவள்..
“அவங்க சாப்பிட பஜ்ஜி செய்யட்டுமா…?” என்று ஏதோ விருந்தாளி வந்தால் அவர்களை உபசரிப்பது போல் கேட்ட அக்காவை கிண்டலுடன் பார்த்த குருமூர்த்தி…
“கூடவே கேசரியும் கிண்டேன்.” என்று கிண்டல் செய்தான்.
ஆனால் பூஜா நான் உனக்கு அக்காடா என்று நிருபிக்கும் வகையாக… “அது நாம அவங்க வீட்டுக்கு போனா கிண்டி கொடுப்பாங்கடா… இப்போ நான் பஜ்ஜி மட்டும் போடுறேன்.” என்று சொல்லி குருமூர்த்தியின் பதிலைய் எதிர் பாராது சமையல் கட்டுக்கு சென்று விட்டாள்.
“அக்கா அந்த பெண் கிட்ட ஏதாவது பேசி வெச்சிட போற…” என்று ஹாலில் இருந்தே குருமூர்த்தி பூஜா கேட்கும் படி கத்தி சொல்ல..
அதற்க்கு பதிலாய் அப்போது தான் குருமூர்த்தியை தேடி வந்த நான்கு பெண்கள்…
“என் ராசாவை பத்தி உன் அக்கா சொல்லி தான் எங்களுக்கு தெரியுமா…?” என்று சொன்னது வந்தவர்களிலேயே கொஞ்சம் வயது கூடிய பெண்மணி.
அதற்க்கு குருமூர்த்தி பதில் அளிக்கும் முன் சமையல்கட்டில் இருந்து வெளி வந்த பூஜா… “ ஆமா இப்படி சொல்லி சொல்லி பேசி பேசி..உங்க பிரச்சனைக்கு அவன் வந்து வந்து… மொத்தத்தில் அவன் உங்க கூட இருப்பதால் அவனுக்கு யாரும் பெண் தர மாட்டாங்குறாங்க…” என்று பூஜா கத்திக் கொண்டு இருக்கும் போதே அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தாள் பத்மினி தன் அக்காவுடன்…
அங்கு இருந்த பெண்களின் தோற்றத்திலும், அவர்களின் அலங்கரிப்பிலும் ஏதோ புரிந்தவளாய் பத்மினி குருமூர்த்தியை பார்த்தாள். குருமூர்த்தியும் அப்போது பத்மினியையே தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.
மற்றவர்கள் போல பத்மினியும் அவர்களோடு அதாவது அந்த பெண்களோடு குருமூர்த்தியை பார்த்து தவறாக நினைப்பாளா…? இல்லை சரியாக கணிப்பாளா…?பார்க்கலாம்.