அத்தியாயம்…8
பத்மினியை பார்த்த உடன் பூஜாவுக்கு மிக மிக பிடித்து விட்டது..அந்த பிடித்ததிற்க்கு காரணம் பத்மினியின் அழகா..?இல்லை எப்போதும் கேசு வியசத்தை தவிர வேறு எதுவும் பேசாது இருக்கும் தன் தம்பி இன்று சொன்ன… அந்த… “பத்திரம்..” என்ற வார்த்தையை கேட்டதாலோ என்னவோ..பூஜாவுக்கு பத்மினியை பிடித்து போய் விட்டது…
இவர்கள் இருவருக்கும் பிடிக்க வேண்டுமே என்று பூஜா நினைக்கும் போதே… “அய்யோ…” இந்த நேரத்தில் தான் இவங்க இங்கு வரனுமா…? எப்போதும் இவர்கள் வந்தால் சாப்பிட வைத்து விட்டு தான் அனுப்பும் பூஜா. இன்று இப்படி நினைத்ததிற்க்கு காரணம்… தன் தம்பிக்காவது ஒரு நல்லது நடக்காதா..? என்ற ஆசையில் தான்.
குருமூர்த்தியோடு இவர்களை பார்த்து விட்டு பத்மினி என்ன நினைப்பாளோ என்று ஒரு வித பயத்துடன் தான் பூஜா பத்மினியை .. “வா…” என்று அழைத்தது.
பத்மினிக்கோ அந்த சங்கடம் சிறிதும் இல்லை போல்.. சிரித்துக் கொண்டே வந்தவள். குருமூர்த்தியை பார்த்து மட்டும் அல்லாது அவனோடு இருக்கும் பெண்களையும் பார்த்தும் சிரித்தாள்.
கீதாவின் முகத்தில் மகிழ்ச்சியோ சங்கடமோ இல்லை..முதலில் அவள் அங்கு இருந்த பெண்களை கவனித்தாளா…? இல்லையா…? என்பதே தெரியாது..தன் விசயத்தை தெளிவு படுத்தினாள் போதும் என்று நினைத்ததினால் ஒரு மைய்யமான புன்னகை புரிந்தவள் பூஜா காட்டிய இருக்கையில் பத்மினி கீதா இருவரும் அமர்ந்தனர்.
குருமூர்த்திக்கு இந்த கவலை எல்லாம் இல்லை போல… பத்மினியையும் கீதாவையும் பார்த்து… “இவங்களும் இப்போ தான் வந்தாங்க..அவங்களை அனுப்பிட்டு உங்களை பார்க்கிறேன்.” என்று சொல்லி அந்த பெண்கள் பக்கம் பார்வையை திருப்பிய குருமூர்த்தி…
வந்தவர்களிலேயே மூத்த பெண்மணியை பார்த்து… ““என்ன ஏதாவது பிரச்சனையா…?” என்று கேட்டான்.
குருமூர்த்தி … “ என்ன பிரச்சனையா…?” என்று அவன் தன் பேச்சை ஆரம்பிக்கும் போதே பூஜாவுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் என்று தோன்றி விட்டது.
ஏன் என்றால் வந்தவர்கள் என்ன பிரச்சனையை கொண்டு வருவார்கள்… என்று தான் பூஜாவுக்கு தெரியுமே… அதற்க்கு இவன் என்ன என்ன , மாதிரியும் கேட்பான் என்பதை தெரிந்தவளாய்…
கீதாவையும் பத்மினியையும் பார்த்து … “காபி குடிப்பிங்களா…? டீ குடிப்பிங்களா…?” என்று பூஜா இவர்களை கேட்கும் போதே வந்த பெண்களில் ஒருவள்..
“நாங்க எல்லாம் அந்த காபி தண்ணியையும் டீ தண்ணியையும் குடிக்க மாட்டோமா…?” என்று கிண்டலாக கேட்டாள்.
அதற்க்கு பூஜா “நீங்க இங்கு வந்தா காபி தண்ணி டீ தண்ணியோட தான் போவது போல்…” என்று கேட்கும் போதே வந்தவர்களில் இன்னொரு பெண்…
“யக்கா பஜ்ஜு சுட்ட வாசம் வாசல் வரை வீசுது..முதல்ல அதை சாப்பிட்டு பொரவு காப்பி தண்ணிய குடிப்போம்.” என்று சொன்னாள்.
குருமூர்த்தியோ சிரித்துக் கொண்டே… . “எடுத்துட்டு வந்து கொடுக்கா…” என்று சொன்னதும் அவனை முறைத்துக் கொண்டே மனதில் நான் அதை எதை நினச்சி சுட்டேன்..இவன் யாருக்கு கொடுக்க சொல்றான்…” என்று மனதில் திட்டினாலும், .அங்கு வந்த அனைவருக்குமே பூஜா பஜ்ஜீயை வைத்து தான் கொடுத்தாள்.
பத்மினி… “வேண்டாம்கா இப்போ தான் சாப்பிட்டு வந்தோம்.” என்று மறுத்தும்.. “இல்ல இல்ல நீ சாப்பிட்டு தான் ஆகவேண்டும்.” என்று கட்டளை போல் சொல்லி விட்டு வைத்து கொடுத்தாள். அனைவரும் சாப்பிடும் வரை அங்கு அமைதி நிலவியது.. அதில் மிகவும் சிரமப்பட்டு விழுங்கியது நம் கீதா தான்…
பின் அடுத்து காபி கலக்க பூஜா சமையலறைக்குள் நுழைந்து விட்டாள். வந்த பெண்களை சாப்பிடட்டும் என்று அடுத்து பேசாது இருந்த குருமூர்த்தி…
அனைவரும் சாப்பிட்ட்தும்.. “ம் என்ன விசயம் சொல்லுங்க…” என்று கேட்டான்.
வந்தவர்களில் வயது முதிர்ந்து இருந்த ஒரு பெண்மணி… தன் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு சின்ன பெண்ணின் மாராப்பை விலக்கி விட்டு ஜாக்கட்டையும் கொஞ்சம் கீழ் இறக்கியவள்…
“பாருங்க பாருங்க..அந்த மிருகம் என்ன மாதிரி செஞ்சி வெச்சி இருக்குன்னு பாருங்க…” என்று கத்தினாள்.
அந்த பெண்மணி இது செய்தது எல்லாம் ஒரு சில நொடி தான் என்று சொல்ல வேண்டும். அதுவும் பத்மினி அனைவரும் சாப்பிட்ட தட்டு அங்கேயே இருக்கவும், பூஜா காபி கலக்க சமையல் அறைக்கு போய் விட்டதால்.. இதை நாமே கொண்டு போய் வெச்சிடலாமா…?
இது தான் செய்தா அதிகப்படி ஆகாதா..?என்னவோ உரிமை எடுத்துக் கொள்வது போல என்று யோசித்த பத்மினி பின் பூஜா தன்னிடம் பேசிய அந்த உரிமையான பேச்சில், எடுக்கலாம் என்று முடிவு எடுத்து கீதாவும் தானும் சாப்பிட்ட தட்டை ஒன்றன் கீழ் ஒன்றாய் எடுத்துக் கொண்டவள்..
பின் டையினிங் டேபுளின் அருகில் அவர்கள் ஐவரும் அமர்ந்து இருந்ததால் அங்கு இருக்கும் தட்டை எடுக்க வந்த போது தான் அந்த மூத்த பெண்மணி இப்படி செய்தது..
அனைத்தும் இப்படி சுடக்கு போட்டு முடிக்கும் முன் முடிந்து விட்டது. ஆனால் அந்த கயாத்தை பார்த்த பத்மினி தன் கையில் பிடித்திருந்த தட்டை கீழே தவிர விட்டவளாய் தன் வாய் அடைத்துக் கொண்டு..
“அய்யோ…” என்பது போல் தரையிலேயே ஒடுங்கி அமர்ந்து விட்டாள்.
தட்டு விழுந்த சத்தித்தில் கீதா தன் நினைவில் இருந்தும், பூஜா சமையலறையில் இருந்தும் வெளிவந்தனர்..
குருமூர்த்தி தான் பூஜாவை பார்த்து… தரையில் அமர்ந்து இருந்த பத்மினியையை கண்ணால் காட்டி… “கூட்டிட்டு போ…” என்று சொன்னாள்.
கீதா யாரும் சொல்லாமலேயே தன் தங்கையின் அருகில் சென்று தோள் பற்றினாள்… பூஜா தன் தம்பியின் சொல் படி பத்மினியின் மற்றொரு தோள் பற்றி எழுப்பி விட்டனர்…
தன் அறைக்கு பூஜா பத்மினியை அழைத்து செல்ல பார்த்தவளை பத்மினி … “வேண்டாம் இப்போ பரவாயில்ல.” என்று மறுத்து விட்டவளின் பார்வை அந்த காயம் பட்ட பெண்ணின் மீது தான் இருந்தது.. இடை இடையே குருமூர்த்தியையும் தான் பார்த்தாள்.
குருமூர்த்தியோ தன் அக்காவிடம் பத்மினியை பார்க்கும் படி சொன்னதோடு தன் வேலை முடிந்து விட்டது என்று அந்த பெண்ணின் காயத்தை ஆராந்துக் கொண்டு இருந்தான்.
அந்த காயத்தை அவன் கைய் தொட்டு தான் ஆராய்ந்தான்..காயம்பட்ட இடம் கழுத்தின் மிக கீழ். அதாவது கைக்குழந்தையின் பசியை தீர்த்து வைக்க உதவும் பகுதியின் கொஞ்சம் கொஞ்சமே மேல் என்ற பகுதியில் தான் காயம் பட்டு இருந்தது.
குருமூர்த்தி அந்த காயத்தை தொட்டு ஆராயும் போது அவன் முகத்தில் ஒரு பரிதவிப்பு மட்டுமே தான் இருந்தது.
“எந்த டாக்டர் கிட்ட காமிச்சிங்க…” என்று அந்த மூத்த பெண்மணியிடம் கேட்டுக் கொண்டே அவனே அவளின் சேலையை சரி செய்து கொண்டே கேட்டான்.
“நம்ம இடத்துக்கு வந்து போகும் டாக்டர் கிட்ட தான்பா…” என்று அந்த மூத்த பெண்மணி சொன்னதும்..
“அவன் எல்லாம் ஒரு டாக்டருன்னு.. வேறு நல்ல டாக்டர் கிட்ட காமி.” என்று அந்த பெண்மணியிடம் கத்தியவன்..
பின்… “யார்…?” என்று கேட்டான்.
அதற்க்கு அந்த பெண்மணி.. “அந்த போலீஸ் தான்..கட்டையில போறவன் எப்போ வந்தாலும் இவ தான் வேணும்..இவ தான் வேணும் என்று அடம் பிடிப்பது… போன வாரம் வந்தப்ப கூட இப்படி தான் பண்ணிட்டு போனான்..இரண்டு நாள் இவள் எழுந்துக்க முடியாம பண்ணி வெச்சிட்டு போயிட்டான்.
முந்தா நேத்து வந்துட்டும் இவ தான் வேணும் என்று வந்து நிக்கிறான்...நான் அவளுக்கு உடம்பு முடியலேன்னு சொல்லி கூட கேக்காம நேரா இவ இருக்கும் ரூமுக்கு போயிட்டான்… இவனை எல்லாம் ஒன்னும் பண்ண முடியாதாப்பா…?” என்று கேட்டார் அந்த பெண்மணி…
“இந்த விசயத்தை எல்லாம் லீகலா ஹான்டில் பண்ண முடியாது… நாளைக்கு நானே வந்து ஒரு கேமிரா கொண்டு வர்றேன்…” என்று சொல்லிக் கொண்டு வந்த குருமூர்த்தி..
அந்த பெண்மணியை பார்த்து… “அவன் எப்போவும் இந்த பெண்ணை தானே கேட்பான்…?” என்ற கேள்விக்கு, அப்பெண்மணி…
“ஆமாம்.” என்று சொன்னதும்..
குருமூர்த்தி… “நல்லது…” என்று சொல்லி விட்டு… தொடர்ந்து… “அப்போ இந்த பெண் எங்கு இருக்காளோ அந்த அறையில் நான் கேமிராவை செட் செய்துடுறேன்.” என்று குருமூர்த்தி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அந்த மூத்த பெண்மணி….
“சார் அந்த சண்டாளன் அந்த கேமிராவை பார்த்துட்டா அவ்வளவு தான் சார்.” என்று பயப்பட்டு சொன்னதும்..
“இல்ல அது எல்லாம் கண்டு பிடிக்க முடியாத சின்ன சைசில் தான் இருக்கும். நானே வெச்சிட்டும் வர்றேன்… அப்புறம் அவன் வந்ததும் நீங்களே போ போன்னு வழி அனுப்பி வைக்காதிங்க… நீங்க கேட்கும் பெண் பயப்படுது வேண்டாம்.. வேறு பெண் இருக்குன்னு சொல்லுங்க…” என்று குருமூர்த்தி அந்த போலீஸ் உயர் அதிகாரியை பிடிக்க அனைத்து ஏற்பாட்டையும் பக்காவாக ப்ளான் செய்து கொடுத்தான்..
போகும் போது அந்த பெண்கள்… “மவராசன் நீ நல்லா இருக்கனும்.” என்று வாழ்த்த..
அப்போது இது வரை அங்கு வந்ததில் இருந்து வாய திறக்காத ஒரு பெண்… “நம்ம மாதிரி பெண்களுக்கு உதவி எல்லாம் நல்லா தான் செய்யிறார்..ஆனா நம்ம மாதிரியா இருக்கும் ஒரு பெண்ணை இவர் கல்யாணம் செய்துக் கொள்வாரா…?” என்று கேட்டதற்க்கு..
குருமூர்த்தி சிறிதும் யோசிக்காது.. “இப்போ எனக்கு முப்பது வயதாகுது.. ஒரளவுக்கு நான் வளர்ந்த பின் முதல் என் அக்காவுக்கு கல்யாணம் செய்துக் கொடுக்க நினச்சேன்.
ஆனா அவ எனக்கு கல்யாண வாழ்க்கையே வேணாம் என்று திட்ட வட்டமா மறுத்துட்ட பின் சரி நாம கல்யாணம் செய்யலாம் என்று நினைத்த உடன் என் மனதில் தோன்றியது இது தான்..உன் போல் இருக்கும் பெண்ணை கல்யாணம் செய்ய நினச்சி..இதோ இவங்க இடத்துக்கு மட்டும் இல்லாம இது போல இருக்கும் இடத்துக்கு எல்லாம் போய் பார்த்தேன்.” என்று குருமூர்த்தி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே..
குருமூர்த்தி அந்த பெண்ணின் காயத்தை பார்த்ததில் இருந்து அவன் பார்வை அதில் வந்து போன பாவனை...அவன் பேசிய பேச்சுக்கள் என்று அனைத்தும் அமைதியாக கேட்டும் பார்த்தும் கொண்டு இருந்த பத்மினி குருமூர்த்தியின் இந்த பேச்சில் ஆர்வம் தாளாது..
“உங்களுக்கு எந்த பெண்ணையும் பிடிக்கலயா…?” என்று கேட்டாள்.
அதற்க்கு குருமூர்த்தி சொன்ன… “அங்கு இருக்கும் எந்த பெண்களை பார்த்தாலும், என் கண்ணுக்கு என் அக்காவா என் அம்மாவா தான் தெரியிறாங்க…” என்ற அவன் பதிலில் பத்மினி வாய் அடைத்து நின்று விட்டாள்.
இது என்ன மாதிரியான பதில்..இவர்கள் போல் இருக்கும் பெண்களில் என் அக்காவை அம்மாவை பார்க்கிறேன் என்றால்….
பத்மினியின் அதிர்ச்சியை மேலும் கூட்டும் வகையாக தான் குருமூர்த்தியின் அடுத்து அடுத்தான பேச்சுகள் இருந்தன…