அத்தியாயம்….9
பத்மினி குருமூர்த்தி அது போலான பெண்களிடம் பேசியது பழகியது...அவர்களுக்கு உதவி செய்தது..அதை பார்த்து எல்லாம் அவனை தவறாய் நினைக்கவில்லை..மாறாய் அவர்களையும் சக மனுஷியாக நினைத்து பேசுவதை பார்த்து அவளுக்கு வியப்பு தான் ஏற்ப்பட்டது.
ஆனால் அவன் இப்போது சொன்ன அது போல் இருக்கும் பெண்களை பார்த்தால்.. “எனக்கு அக்கா அம்மா மாதிரி தான் தோனுது.” என்ற அவனின் பதிலில் பத்மினி அதிர்ச்சியாகி நின்று விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.
யாராவது… ஒருவனை… “தே...யா..” என்று திட்டினாலே மீசை முளைக்காத சின்ன பைய்யனே சொன்னவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவனை அடிக்க கை ஓங்கி விடுவான்.
ஆனால் இவன் என்ன…?இப்படி சொல்கிறான்…? என்று நினைத்துக் கொண்டே சமையல் அறை வாசல் அருகில் நின்றுக் கொண்டு இருந்த பூஜாவை யோசனையுடன் பார்த்தாள்.
வந்த பெண்கள் குருமூர்த்தியிடம் கேட்ட கேள்வியும், அதற்க்கு குருமூர்த்தி அளித்த பதிலையும் கேட்டுக் கொண்டு இருந்த பூஜா குருமூர்த்தி சொன்ன பதிலில் எந்த வித பாதிப்பும் அடையாது ஒரு சிறு புன்னகையுடன் அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்தாள்.
பின் ஏதோ நினைவில் பூஜாவின் பார்வை பத்மினியின் பக்கம் திரும்பியது. அங்கு பத்மினி யோசனையுடன் தன்னையே பார்த்திருந்த பத்மினியின் பார்வையில் பூஜா ஏதோ ஒரு முடிவு எடுத்தவளாய்…
“குரு முதல்ல அவங்களை வழி அனுப்பிட்டு வா….” என்று வந்தவர்களை அனுப்பி விட்டு குருமூர்த்தி வீட்டில் நுழையும் போது பூஜா பத்மினியிடம்…
“என்ன பத்மினி குரு சொன்னதை கேட்டா உனக்கு அதிர்ச்சியா இருக்கா…?” என்று கேட்ட்ற்க்கு..
பத்மினி… “அவர் பதிலில் நான் என்ன யாரா இருந்தாலும், அதிர்ச்சியாகி தான் போவாங்க..அதுவும் உங்க முன்னவே அவங்களை பார்த்தா எனக்கு என் அம்மா அக்காவா தான் தோனுதுன்னா..?” என்று அடுத்து பேச முடியாது தன் தோள்களை குலுக்கிக் கொண்டு புரியவில்லை என்பது போல் பாவனையுடன் பத்மினி சொன்னாள்.
அதை கேட்டுக் கொண்டே வந்த குருமூர்த்தி… “ஏன் உனக்கு அவங்களை எல்லாம் பார்த்தா மனித ஜென்மங்களா தெரியலையா…?” என்று குருமூர்த்தி இந்த கேள்வியை பத்மினியை பார்த்து கேட்கும் போதே… குருமூர்த்தியின் மனது..
“இவளும் சராசரி மனிஷியா தான் இருப்பா போல..நான் இரண்டு மூன்று முறை பார்த்து பேசியதில்..இவள் தைரியமானவள்… தான் பேசும் பேச்சையும்..தன்னை அது போல் பெண்களுடன் பார்த்த பின்னும் என்னை பார்த்து அருவெறுப்பு படாது..சாதாரணமாக பேசியதில், ஏதோ ஒரு இதம் அவன் மனதில் பரவ தான் செய்தது…
அவன் பார்க்க முரட்டு தோற்றத்தில் இருந்தாலும், அவனிடம் கேசுக்காக வந்த பெரிய இடத்து பெண்கள்..இவன் மீது ஆசையோ விருப்பமோ கொண்டு தங்கள் எண்ணத்தை அவனிடம் சொல்லி இருக்கிறார்கள்.
அப்போது அவனின் பதில்… “எனக்கு உங்களை பார்த்தால் அது போல் தோன்றவில்லை.” என்பது தான்.
தன் விருப்பத்தை சொன்னவர்களில் பெரும்பாலோர் தான் வாதாடிய பெரிய மனிதர்களின் மகளாவோ..மருமகளாவோ..ஏன் இன்னும் சொல்ல போனால் மனைவியாகவோ கூட இருப்பார்கள். கிடைத்த இடத்தில் வாயை வைக்கும் ரகம் இல்லை குருமூர்த்தி…
தான் பிறந்த இடம் தவறாய் இருக்கலாம்..தான் பிறந்த முறை தவறாய் இருக்கலாம். தான் முறை தவறி பிறந்து இருக்கலாம்.. ஆனால் நான் முறை தவறியவன் கிடையாது…
அவனுக்கும் என்று எண்ணிலடங்கா ஆசைகளை மனதில் பூட்டி தான் வைத்திருக்கிறான்.. அதனால் தான் அவன் ஒரு நிலைக்கு வந்த்தும் முதலில் பூஜாவிடம்…
“உனக்கு என்று ஒரு வாழ்க்கை வேண்டும்..நாம் எதையும் மறைத்து வரம் பார்க்க தேவையில்லை..அனைத்தும் சொல்லியே பார்க்கலாம்.” என்று சொன்ன போது..
பூஜா சிறிது யோசிக்காது சொன்ன பதில்… “என்னால் ஒருவனின் வாழ்வு வீணாக கூடாது… என் மனதிலும், உடலிலும் பட்ட ரணங்களின் சொச்சம் இன்னும் என்னுள் இருக்கிறது. என்னால் ஒரு சாதாரண குடும்ப வாழ்க்கை வாழ முடியாது.” என்று திட்ட வட்டமாய் பூஜா சொல்லியதும்..
குருமூர்த்தி உடனே… “அப்போ நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்.” என்று சொன்னதும் பூஜா மகிழ்ந்து போய்..
“நான் நல்ல பெண்ணே பார்க்கிறேன்டா…” என்று சொன்ன பூஜாவிடம்…
“நானே பார்த்துக்கிறேன்.” என்று சொல்லி விட்டு போனது இரவு விடுதிகளுக்கு தான். அங்கு போன பின் தான் அவன் உணர்ந்தது..இது போல் பெண்களிடம் தன் ஆசைகளை கொட்ட முடியாது..
பாசத்தையும், அன்பையும், சகோதரத்துவத்தை மட்டும் தான் அவர்களின் மீது காட்ட முடியும் என்று முடிவு செய்தவனாய், அன்றில் இருந்து தான் அது போல் பெண்களுக்காக வாதாட ஆரம்பித்தது.
ஏனோ அது போல் போன்ற பெண்களிடம் மட்டும் அல்லாது, வேறு எந்த பெண்ணிடமும் அவனுக்கு அது போல் தோன்றவில்லை என்பது தான் உண்மை..
சில சமயம் அவன் நினைத்தது உண்டு..சிறு வயதிலேயே பார்க்க கூடாததை பார்த்ததாலும், அது போல் சம்மந்தப்பட்ட கேட்க கூடாத வார்த்தைகள் கேட்டதாலும், தனக்கு அது சம்மந்தமான உனணர்வுகள் செத்து விட்டதோ என்று நினைக்கு போது தான் கீதாவின் கேஸ் அவனிடம் வந்தது.
குருமூர்த்தி பத்மினியை பார்த்த உடன் அவளிடம் வீழ்ந்தான் என்று சொல்ல முடியாது..ஆனால் அப்போது இதை நினைத்தான். ஜெய் பற்றி தெரிந்ததும் இவ்வளவு அழகான பெண்ணிடம் தன் சுயரூபத்தை அவன் காட்டாது விட்டு இருக்க மாட்டனே என்று..
ஆனால் நினைத்ததை பத்மினியிடம் கேட்க ஏனோ அவன் மனம் ஒப்பவில்லை..தனக்கு தோன்றுவதை அவன் எப்போதும் எந்த வித கூச்சமும் இல்லாது கேட்டு விடுவான்..அவன் பேச்சில் எப்போதும் இந்த நாசுக்கு எல்லாம் பார்க்க மாட்டான்… அது பெண்ணாய் இருந்தாலுமே…
ஆனால் முதன் முதலில் அவன் பத்மினியிடம் அவன் அதை பார்த்தான்.. தான் இது போல் கேட்டால் அவள் மனது புண்படாதா என்று யோசித்து அதை விடுத்து அனைத்தும் பேசினான்.
பின் பத்மினியின் அந்த நிமிர்வு...அவன் அனைத்து பெண்களுக்கும் அந்த நிமிர்வு இருக்க வேண்டும் என்று நினைப்பான்.. பெண்கள் என்றால் சாதாரணமா… ஆண்களுக்கு தேவையான உடல் வாகை இறைவன் அவர்களுக்கு கொடுத்தான்.
அதே போல் தான் பெண்களுக்கு என்ன தேவையோ அது போலான ஒரு உடல் வாகை இறைவன் படைத்தான்.. அதை வைத்து ஆண்கள் கேலி பேசினால் நீ கூசி போக வேண்டுமோ… என்று அவன் நினைப்பதை அன்று ஜெய் பத்மினியின் போனில் பேசும் போது அவன் வீடியோவை அனுப்பி விட்டு…
திரும்பவும் பத்மினியை அவன் போனில் அழைத்து பேசிய பேச்சில் பத்மினி முதலில் அதிர்ந்து தன் பேசியை தவர விட்டாலும், பின் தெளிந்தவளாய் அடுத்து ஜெய்யே அழைப்பு விடுத்த போது பத்மினி சொன்ன…
“சரி இப்போ நீ வீடியோ எடுத்த இப்போ அதுக்கு என்ன என்கிற…?” என்று பத்மினி மிக தெனவெட்டாக ஜெய்யிடம் கேட்ட போது அந்த உரையாடலை கேட்டுக் கொண்டு இருந்த குருமூர்த்தியும் அவளின் பேச்சில் அதிசயத்து தான் போனான்.
பரவாயில்ல பெண் என்று நினைத்தவனுக்கு அடுத்து அடுத்து பத்மினி பேசிய பேச்சான… “இப்போ எங்க அக்காவுக்கு என்ன புதுசா இருக்கு..அதை எலோரும் பார்க்க.. உன் அம்மாவுக்கு என்ன இருக்கோ… இப்போ நீ குடும்பம் நடத்திட்டு இருக்கியே அவளுக்கு என்ன இருக்கோ… நாளைக்கு உனக்கு என்று உன் வீட்டில் குடும்பம் நடத்தும் பொம்பளைக்கு பெண் குழந்தை பிறந்தால், அதுக்கு என்ன இருக்கோ அது தான் என் அக்காவுக்கும் இருக்கு… “ என்று அன்று அவள் பேசிய பேச்சில், முதலில் அவளின் பேச்சை ரசித்தவன் பின் அவளை ரசிக்க ஆரம்பித்தான். அந்த ரசனையின் விளைவு தான் பத்மினி பத்து ஆகி பத்திரமாய் வரச் சொன்னது..
குருமூர்த்தி பத்மினியிடம் ஏதோ ஒரு சொந்தம்..ஏதோ ஒரு உரிமையை உணர தொடங்கியதுமே தன் நிலை.. தான் வந்த வழி..இதை நினைத்து அவளிடம் இதை பற்றி பேச வேண்டும். அதற்க்கு முன் கீதாவின் வழக்கை முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற முடிவோடு தான் பத்மினியை தன் வீட்டுக்கு அழைத்தது..
ஆனால் இப்போது பத்மினி பேசிய பேச்சில் ஏதோ அடி வாங்கியவனாய் இவளும் சாதாரணமானவள் தானோ...பெண்களை உடலின் கலங்கம் வைத்து பார்ப்பவள் தானோ …என்று அவன் நினைத்து தான் குருமூர்த்தி …
“ஏன் அவங்களை பார்த்தா அப்படி தோன கூடாதா…?என்று கேட்டது..
அதற்க்கு பத்மினி சொன்ன… “அவங்களும் பெண்கள் தான்..அவங்க மூலமாக வரும் குழந்தைக்கு அவங்க தானே அம்மா...அதே போல் ஏதோ ஒரு சூழ்நிலையில் ஒருவனின் சகோதரி தெரிந்தோ தெரியாமலேயே பாதை மாறி போய் இருந்தாலுமே அவனுக்கு அவள் தானே சகோதரி.
அதனால நான் அதை அர்த்தம் பண்ணி சொல்லலே… நான் சொன்னதுக்கு அர்த்தம் ஒரு சிலர் அது போல பெண்களை பார்த்தால் ஒன்று காமத்தில் பார்ப்பாங்க..இல்ல கழிசடையா பார்ப்பாங்க..ஆனா நீங்க தான் அவங்கல பெண்களா பார்த்திங்க...ஆனா இப்போ அதையும் மீறி உங்க அம்மா சகோதரி என்று சொல்லவும் தான் கேட்டேன்.” எப்று பத்மினி பேச பேச குருமூர்த்தியின் மனது லேசானது போல் உணர்ந்தான்.
எப்போதும் குருமூர்த்தி மனிதர்களை பார்த்த உடன் இவன் இப்படி பட்டவன் என்று கணித்து விடுவான்..அந்த அவனின் கணிப்பு அவன் பிறந்த வளர்ந்த இடத்தில் பலதரப்பட்ட மனிதர்கள் வந்து போன இடமானதால், அப்போதே அவர்களை பார்த்ததாலோ என்னவோ...குருமூர்த்திக்கு அந்த தெளிவு சிறுவயது முதலே இருந்தது..
கேசு என்று அவன் முன் வந்தால், அவர்களை பார்த்த உடன் பாதி கணித்து விடுவான் என்றால், மீதி அவர்கள் பேச விட்டு கணித்து விடுவான். உண்மை யார் பக்கம் இருக்கிறது என்று தெரிந்து கேசு எடுப்பான்.
ஒரு சிலது பெரிய மனிதர்களின் கேசை அவர்கள் பக்கம் பொய் என்று தெரிந்தே அவர்கள் சார்பாக வாதாடி இருக்கிறான்.. பாவப்பட்ட பெண்களுக்காகவே வாதாடிக் கொண்டு இருந்தால், அவனின் வயிற்று பாட்டை யார் கவனிப்பது என்று இது போல கேசுக்களையும் எடுப்பது தான்.
ஆனால் அவர்கள் பொய் பேச ஆரம்பத்தாலே அவர்களின் பேச்சை தடுத்து நிறுத்தி விட்டு..
“எனக்கு உண்மை மட்டும் தான் வேண்டும்.” என்று சொல்லி விடுவான்.
வந்தவர்களும் அவனை பற்றியும், அவனின் திறமை பற்றியும் தெரிந்துக் கொண்டு வந்ததால், அனைத்து உண்மைகளையும் சொல்லி சராணகதி அடைந்து விட்டால், அவர்களால் பெண் பாதிக்காத பட்சத்தில் அந்த கேசை எடுத்து வெற்றியும் பெற்று தருவான்.அந்த அளவுக்கு அவனின் கணிப்பு எப்போதும் சரியாகவே இருக்கும்.
முதல் முறை தன் கணிப்பு தவறி விட்டதே என்று நினைக்கும் போது அவள் பேச பேச கிடையாது எப்போதையும் விட இந்த கணிப்பு தான் சரி…இது வரை தன் கணிப்பு அவனின் வாழ்க்கைக்கு மகிழ்ச்சியையும், நன்மையையும், கொடுத்தது கிடையாது…
ஆனால் அவனின் இந்த கணிப்பு அவனின் வாழ்க்கைக்கு அடித்தளமாய் அமையலாம் என்று யோசித்த வாறே..பத்மினி சொன்ன…
“அவங்களுக்கு பிறந்த குழந்தைக்கு அவங்க தானா அம்மாவாக முடியும்.” என்ற வார்த்தையை வைத்தே …
குருமூர்த்தி.. “நீ சொன்னது சரி தான்...நானும் அவங்கள போல இருக்கவங்க பெத்த குழந்தை தான்.” என்று சொன்னதும்..
பத்மினி இவன் என்ன விளையாடுகிறானா…? என்று நினைத்து அவன் முகத்தை பார்த்தாள். அவளின் எண்ணத்தை பொய்யாக்கும் வகையாக குருமூர்த்தியின் முகத்தில் உண்மை சொன்ன பாவனை தான் தெரிந்ததே ஒழிய..அதில் விளையாட்டு தனம் இல்லை…
“அப்போ அக்கா…” என்று கேட்டுக் கொண்டே பத்மினி பூஜாவை பார்த்தாள்.
இப்போது பூஜா… “நான் அவங்க பெண் மட்டும் இல்லை..நானும் அவங்களா தான் இருந்தேன்.” என்று சொன்னதும்.. கீதாவும், பத்மினியும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டனர்..
கீதாவுக்கு இங்கு வரும் முன் தன் கவலை தான் பெரும் கவலை என்று எண்ணி இருக்க..உன்னது எல்லாம் ஒன்றும் இல்லை என்பது போல் குருமூர்த்தி பூஜா சொன்ன விசயங்கள் இருந்தன…
பூஜா சொன்ன…”நீங்க இந்த இடம் கேள்வி பட்டு இருப்பிங்கன்னு நினைக்கிறேன்.. கொல்கத்தாவின் சோனாகச்சி என்ற இடம்..நீங்க படத்திலோ..…செய்தியிலோ படிச்ச பார்த்த அந்த சோனாகச்சி என்ற இடத்தில் தான் நானும் குருவும் பிறந்தோம்.” என்று பூஜா பேச்சில் இப்போது அக்காவுக்கும் தங்கைக்கும் அதிர்ச்சி என்பது இல்லை..
ஒரு நாளைக்கு எத்தனை முறை அதிர்ச்சியாவது என்று நினைத்தோ… பூஜா சொல்வதை கீதாவும் சரி, பத்மினியும் சரி அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தனர்..
ஆனால் இவர்களின் இந்த அமைதியை குலைக்கும் வகையாக பூஜா சொன்ன அடுத்து அடுத்த விசயம் இருந்தது…
“எங்க அம்மாவும் சரி குரு அம்மாவும் சரி அங்கு தான் இருந்தாங்க… அவங்க எப்படி அங்கு வந்தாங்க,யார் கொண்டு வந்து அங்கு சேர்த்தா எங்க இருவருக்கும் தெரியாது..அங்கு இருப்பவர்களுக்கு பின் ஒவ்வொரு கதை இருக்கும்..அதை கேட்டா ...எதுக்கு அதை கேட்பது…?
நான் அங்கு தான் பிறந்தேன்… பத்து வயது முதல் எதுவும் தெரியாது..சந்தோஷமா தான் இருந்தேன்..இன்னும் சொல்லனும் என்றால் மத்த குழந்தையோடு நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.
அலங்காரம்..அவங்க பண்ணும் போது எல்லாம் எனக்கும் பண்ணி விடுவாங்க..தினம் புது உடை..தினம் புது அலங்காரம்.. அங்கு நடக்கும் ஆட்டாம், பாட்டாம் , என்று ரொம்ப சந்தோஷமா தான் இருந்தேன்..
நான் தின்ன தீணிக்கோ இல்ல என் உடல் வாகுக்கோ நான் பத்து வயது முடிந்து பதினொன்னு ஆரம்ப வயதிலேயே பெரிய மனிஷி ஆனேன்..அங்கு எல்லாம் அப்படி ஆனா. அங்கு இருக்கும் பெரிய மனுஷங்கல வர வெச்சி ஒரு விழா மாதிரி கொண்டாடுவாங்க..
அப்படி கொண்டாடிய வாரம் முதல் என் அறைக்கு ஒருவன் வந்தான். அவன் என்ன என்னவோ செய்தான்.அது என்ன என்று அப்போது தெரியக்கூட இல்ல.ஆனா ரொம்ப ரொம்ப வலிச்சது.
நான் வேண்டாம் வேண்டாம் கத்தினேன்.அப்போ அம்மாவோட குரல் அறையின் வெளியில் இருந்து கேட்டது.. முதல்ல அப்படி தான் இருக்கும். போக போக சரியாயிடும் என்ற வார்த்தை தான்.
அதுவே தினம் தினம் தொடர்ந்தது… வேறு வேறு ஒருவன் வந்தான். ஒவ்வொருவனும் ஒவ்வொரு மாதிரி…எங்க அம்மா சொன்னது போல என் உடம்பு மறுத்தும் போனதால் எனக்கு அது பழகியும் போனது. ஆனால் மனது பழகல போல..
அதான் எவனாவது ஒருவன் என் கிட்ட அன்பா பேசினா… இவனுக்கு என்னை பிடித்து இருக்கு போல என்று நினைத்து இவன் என்னை கல்யாணம் செய்துப்பானா…? என்று நினைத்து மறுநாளும் அவன் வருவானா என்று நான் காத்திருக்க…
வேறு ஒருவன் தான் வருவான்.. அவனும் வருவான் வேறு பெண்ணை தேர்ந்தெடுத்து அவள் அறைக்கு செல்ல..போக போக அதுவும் எனக்கு மறுத்து விட்டது.
நான் அப்படி தான் நினச்சிட்டு இருந்தேன்.. அந்த நாள் வரும் வரை…