அத்தியாயம்…11
வசீகரா இத்தனையும் நினைத்து மாடிக்கு வந்து பார்த்தவள் என்ன இது இத்தனை பிள்ளைகள் என்று நினைத்து அதிர்ந்து தான் போய் விட்டாள்… பெண்ணவள் இதை சுத்தமாக எதிர் பார்க்கவில்லை….
இருபதிற்க்கும் மேல் பிள்ளைகள் இருக்கிறார்களே… என்று நினைத்தவள் ஒன்றும் கேட்கவில்லை.. காரணம் அப்போது ஸ்டூடண்டிடம் ஏதோ பேசிக் கொண்டு இருந்தான்..
கூடவே தன் கையில் இருக்கும் காபியை பார்த்ததும், அங்கு இருந்த டேபுலை காட்டி வை என்பது போல் சைகை செய்தானே ஒழிய வாய் திறந்து ஒன்றும் பேசவில்லை..
இரவு முழுவதும் தன்னிடம் அத்தனை அப்படி பேசியவனே இவன் என்பது போல் தான் அந்த பார்வை இருந்தது.. கூடவே தான் காபியை வைத்து விட்டு போகாது படிக்கும் பிள்ளைகளை பார்த்து கொண்டு இருப்பதை பார்த்து விட்டு தன்னை முறை முறைக்க.. அதில் என்ன என்று புரியாது.. பின் தான்.. தான் வந்ததில் இருந்து படிக்க வந்தவர்கள் ஜெயெந்திரனின் பேச்சில் கவனம் இல்லாது தன்னை அவ்வப்போது பார்த்து அவர்களின் கவன் சிதறுகிறது என்பதையே கவனித்தாள்.. அதோடு ஸ்டூடண்ட் என்றால் சின்ன பிள்ளைகள் கிடையாது.. கொஞ்சம் வளர்ந்தவர்கள். அதோடு ஆண் பெண் என்று கலந்தும் இருந்தனர்..
அதனால் அதற்க்கு மேல் அங்கு இல்லாது கீழே இறங்கி வந்து விட்டவளின் கையில் கெளசல்யா காபியை கொடுத்தவர்..
“எங்களை போலவே உன்னையும் நினச்சிட்டேன் வசீ… நாங்க தான் மறந்துட்டோம்.. நீயாவது கேட்டு வாங்க கூடாதா….?” என்று கேட்டவரிடம்…
வசீகரா காபியை குடித்து கொண்டே… “ எங்களை போலன்னா என்ன அத்தை….?” என்று கேட்டாள்..
“அது தான் இப்போ உணவு பழக்கம் முறை ஒன்னு புதுசா ஆரம்பிச்சி இருக்காமே… நையிட்டுக்கும் பகலுக்கும் நாம சாப்பிடுவதில் குறைந்தது பன்னிரெண்டு மணியாவது இடை வெளி இருக்கனும் என்று.. இதில் பதினாங்கு மணி நேரம் என்றால் இன்னுமே நல்லதாமே… அதை இவங்க செய்யிறதும் இல்லாம என்னையும் செய்ய வைத்து விட்டாங்க….” என்று சொன்னவரின் பேச்சில் வசீகரா சிரித்து விட்டாள்..
பின்… “ அப்போ நானுமே இருக்கேன் அத்தை….” என்று சொன்னதில்.. கோமதி… “நையிட் கண் முழிச்சா சீக்கிரம் பசிக்கும் வசீ….” என்றதில் பெண்ணவள் அமைதியாகி விட்.. கெளசல்யாவோ அந்த பேச்சு காதில் விழுந்தாலுமே, கேட்காது போல சென்று விட்டார்..
பின் அவளுக்கு ஒரு வேலையும் இல்லாது அமர்ந்து கொண்டு இருக்க மாமியார் தான்…
“ உன் ட்ரஸ் பெட்டி பெட்டியே இருக்கே… அது ரூமையே அடச்சிட்டு இருக்கும் பாரு… அதை எல்லாம் உனக்கு கொடுத்த பீரோவில் அடுக்கி வைத்தா ஜெய் ஆபிஸ் போறதுக்குள்ள சூட்கேசை பரணையின் ஏத்திட்டு போயிடுவான்….” என்று சொன்னதில் பெண்ணவள் சரி என்று தலையாட்டினாலும்,
மனதில் அவர் ஒன்று ஆபிசுக்கு போகனும் என்று சொன்னார்.. அவர் போன பின் அடுக்கலாம் என்று தான் பெண்ணவள் நினைத்தாள்..
கணவன் வீட்டில் இருக்கும் போது அவனுடன் நேரம் கழிக்க பெண்ணவளின் மனது விரும்பியது… இருந்தும் மாமியார் பேச்சுக்கு ஒரு சூட் கேஸை திறக்கும் போதே… ட்யூஷனுக்கு வந்தவர்கள் மாடி மடிக்கட்டில் இருந்து கீழே இறங்கும் சத்தம் கேட்க.
பெண்ணவளுக்கு ஒரு எதிர் பார்ப்பு… “ இப்போ கீழே இறங்கி வருவான்… ரூமுக்கு வருவான்.. காலையில் இருந்து அவர் முகத்தை நான் சரியா கூட பார்க்கல.. அவரும் தான் பார்க்கல.. இதுல கோபமா வேறு பார்த்தாரு…” என்று ஒரு வித எதிர் பார்ப்போடு காத்து கொண்டு இருந்த பெண்ணவளுக்கு சுத்தமாக தன் துணிகளை அடிக்கி வைக்கும் மூடே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..
இப்படியே கால் மணி நேரம் கழிந்த பின் கூட கணவன் வராது போக … “ ஏன் இன்னும் கீழே வர வில்லை…?” என்று நினைத்து கொண்டே பெண்ணவள் கூடத்திற்க்கு வந்தாள்..
அப்போது ஜெயந்தி தன் கணவன் தீபக் ராஜூக்கு டிபன் வைத்து கொண்டு இருந்தாள்.. கூடத்திற்க்கு வந்த நம் வசீகராவோ மாடி படிக்கட்டின் பக்கம் பார்வையை செலுத்த.
அங்கு அவள் பார்த்ததோ தன் கணவன் மாடி விட்டு கீழே இறங்குவதை கிடையாது… ஒவ்வொருவராக பிள்ளைகள் மேலே ஏறி செல்வதை தான்..
வசீகரா வந்ததில் இருந்து அவளின் செயலை கவனித்த ஜெயந்தி.. தன் கணவன் தட்டில் சட்னியை வைத்து கொண்டே…
“காலையில் ஆரரையில் இருந்து ஏழரை வரை ஒரு பேச்.. ஏழே முக்காலில் இருந்து எட்டே முக்கால் வரை ஒரு பேச்…ஒன்பது மணிக்கு தான் ஜெய் தம்பி கீழே வருவார்…” என்று சொல்லவும்..
பாவம் பெண்ணவள்.. “ அப்போ ஆபிஸ்..” என்று கேட்டாள்..
அதற்க்கு .. ஜெயந்தி மீண்டும்.. “ ஜெய் தம்பி ஆபிஸ் பக்கம் தான்.. அதுவும் பத்து மணியில் இருந்து ஐந்து மணி வரை தான்… அதனால தான் தம்பி எக்ஸ்பிரியன்ஸ்சுக்கு மத்த கம்பெனிக்கு வேலைக்கு போனா இதை விட டபுளா கிடைக்கும்… ஆனாலும் வேறு எங்கும் போகாது இங்கு போவது….” என்று சொன்னவள்..
மீண்டும்.. “ ஈவினிங்க…” என்று ஆரம்பித்தவளின் பேச்சை தீபக் தடுத்து நிறுத்தினான்…
“ நீயே எல்லாம் சொன்னா எப்படி மீதியை ஜெய் சொல்லட்டும்….” என்று…
வசீகரா ஜெயந்தி சொல்ல சொல்லவே… ஒரு மாதிரியாகி விட்டது.. இன்னும் முழுவதும் சொல்ல வேண்டாம் என்று நினைத்து..
ஆனால் ஜெயந்தியே சொல்லி இருந்து இருக்கலாம் போல்.. இன்னும் என்ன என்று யோசித்து கொண்டு இருந்தவளிடம் ஒன்பது மணிக்கு மேல் கீழே வந்து…
அலுவலகம் செல்ல தயாராக தங்கள் அறைக்கு சென்ற கணவன் பின் வந்த வசீகரா…
“எனக்கு நீங்க இந்தி ட்யூஷன் எடுப்பது தெரியவே தெரியாது…” என்று சொன்னவளிடம்..
“இப்போ தானே வந்து இருக்க மெல்ல மெல்ல தெரிந்துக்கோ என்றவன்.. “ பின் என்ன நினைத்தானோ…
“சொல்லலே என்று கோபமா….?” காலையில் இருந்து கொஞ்சாத மனைவியின் கன்னம் தொட்டு கேட்டவனிடம்..
“அப்படின்னு சொல்ல முடியாது….” என்று வசீகரா தன் பேச்சை எழுத்து நிறுத்த.
“இதுக்கு அர்த்தம் அப்படி தான் லே…..” என்று கேட்டவன்.. பின் என்ன நினைத்தானோ… நேரத்தை பார்த்து …
“ஆபிசுக்கு டைம் ஆகுது சீரா.. ஒன் வீக் பொறுத்துக்கம்மா… ஆபிசுல எவி ஒர்க்… ஒன் வீக் தான் மேரஜிக்கு லீவ் கொடுத்தாங்க.. மேரஜிக்கு வீட்டில் வேலை இருந்தது.. அது தான் நம்ம மேரஜிக்கு முன்னவே மூன்று நாள் லீவ் போடும் படி இருந்தது..
இந்த வேலை பிரஷர் எல்லாம் இன்னும் ஒன் வீக் தான்… அப்புறம் கொஞ்சம் ப்ரீயா ஆயிடுவேன்… அப்புறம் நாம ஹனீ மூனுக்கு ப்ளான் பண்ணிப்போம்.. என்ன இப்போ நான் கிளம்பனும்.. இந்த ட்யூஷன் பத்திய விவரம் நாம் ஈவினிங்க வந்து விளக்கமா சொல்றேன்… “ என்று சொன்னவன் தயாராகி டிபன் சாப்பிட்டு விட்டு அன்னை கட்டி தந்தைதை எடுத்து கொண்டு அலுவலத்திற்க்கும் கிளம்பி விட்டான்..
ஆனால் நம் வசீகராவுக்கு தான்… அவன் பேச்சில் இருந்து வெளி வரவில்லை.. இதில் அவளுக்கு இந்த ஹனீ மூன் எல்லாம் கூட இரண்டாம் பட்சமாக தான் ஆனாது.. முதல் விசயம். காலையில் கொஞ்ச நேரம் கூட அவரோடு பேச முடியவில்லை. இதில் தீபக் மாமா இன்னும் அவனே சொல்லுவான் என்று சொல்றார்.. இன்னும் என்ன இருக்கு என்ற குழப்பமான மனநிலையில் இருந்தாள்..
மாலை ஜெயேந்திரன் அனைவருக்கும் முன் ஐந்து மணிக்கே வீடு வந்து சேர்ந்து விட்டான்..
அவன் வந்ததுமே.. வசீகரா…. “ எப்போவும் இந்த டைமுக்கே வீட்டிற்க்கு வந்துடுவீங்கலா….?” என்று ஆர்வமுடன் கேட்டவளின் அந்த பாவம் ஜெயேந்திரனுக்கு புரியவில்லை.
இருந்தும் கேட்டதற்க்கு… “ ஆமாம்…” என்று சொல்ல. அதில் பெண்ணவலின் முகம் சட்டென்று மலர்ந்து விட்டது.. பரவாயில்லை காலையில் தான் அவரோடு பேச முடியாது.. மாலையில் பேசலாம் என்று அவள் நினைக்கும் போதே..
ஜெயேந்திரன்… “ காபி எடுத்துட்டு ரூமுக்கு வா சீரா.. உன் கிட்ட பேசனும் என்று சொன்னனே… நேரம் ஆகுது….” என்று சொன்னதுமே வசீகரா கட கட என்று அவன் சொன்னது போல் காபி கலந்து கொண்டு அறைக்கு சென்றாள்..
இதில் அவள் காபி தயாரிக்கும் போது பெண்ணவளுக்கு யோசனை வேறு.. நேரம் ஆகுது என்று சொன்னாரே.. வெளியில் எங்காவது கூட்டிட்டு போக போறாரா.. முதல்ல இங்கு இருக்கும் ஏதாவது ஒரு கோயிலுக்கு போயிட்டு தான் வேறு எங்காவது போகனும்.. என்று ஒரு நிமிடத்தில் ஓராயிரம் மனது நினைத்து விடுமாம். அது போல் நினைத்து கொண்டவள்..
காபியை கொடுக்க.. அதை வாங்கிய ஜெயேந்திரன்… தன் காபியை குடிக்கும் முன்.. “ நீ குடிச்சிட்டியா..?” என்று கேட்டவனிடம்.
“ம் அது எல்லாம் ஆயிடுச்சி…நீங்க குடிங்க..”
பெண்ணவளுக்கு கணவன் அலுவலகத்தை விட்டு சீக்கிரம் வந்து விடுவான்… அதுவே சந்தோஷம் என்றால், இன்று வெளியில் போக போகிறோம்.. ஒன்றாக. அதை நினைத்து இன்னுமே மகிழ்ந்து கொண்டு இருந்ததினால், பெண்ணவளின் பேச்சு துள்ளலாகவே வந்தது.. பாவம் அடுத்து கணவன் பேசும் பேச்சில் இந்த மகிழ்வும் துள்ளலும் மறைந்து விடும் என்று தெரியாது…
காபி குடித்து முடித்த ஜெயேந்திரனோ.. மனைவியின் கை எடுத்து அதை தன் கைப்பிடிக்குள் வைத்து கொண்டவன்..
“ எனக்கு உன்னை போட்டோவில் பார்த்த உடனே பிடித்து விட்டது சீரா….” என்றவனின் பேச்சில், பெண்ணவளுக்கு மகிழ்ச்சியோடு நாணமும் அவளின் முகத்தில் வந்து ஒட்டிக் கொண்டது.. கூடவே ஒரு நிறைவும்..
“ ஆனா எங்களுக்கு பிடித்து இருக்கு என்று சொல்லி கூட உங்க கிட்ட இருந்து ஒரு வாரம் கடந்து கூட எந்த பேச்சும் வராது அதுவும் யோசித்து சொல்லனும் என்று சொன்னாங்க…” என்று ஜெயேந்திரனின் பேச்சில் வசீகரா அமைதியாகி விட்டாள்..
அவளுக்கும் அது தெரியுமே. அது ஏன் என்பதும் தெரியுமே அவளுக்கு.. அதை தான் கணவனும் கூறினான்…
“என் சேலரி உங்க ஸ்ட்டேட்டஸ்க்கு நாங்க…” என்று கணவன் சொல்லும் போதே.. பெண்ணவள் தன்னை தவறாக நினைக்கிறானா என்று நினைத்து பதறி போனவளாக..
“நான் அப்படி நினைக்கலங்க…” என்று சொன்னவளிடம் ஜெய்..
“தெரியும் சீரா.. தெரியும்.. ஆனா உங்க வீட்டில் அப்படி நினைத்தாங்க தானே….” என்ற கணவனின் கேள்விக்கு பெண்ணிடம் இருந்து பதில் இல்லை.. அவளின் அந்த மெளமே அவனுக்கு விடை கிடைத்து விட்டது..
“இதுக்கா தான் என் மத்த வருமானம் பத்தி உங்க வீட்டில் இருக்கிறவங்க கிட்ட சொல்லலே சீரா… என் அம்மா கூட என் விருப்ப தெரிந்து… உங்க வீட்டில் இருந்து பதில் வராது போகவும்… நீ ட்யூஷன் எடுப்பது.. மத்த வருமானத்தை சொல்லலாம்.. அந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளை பையன் ஏன் அவங்க இரண்டு பேர் கூட நல்லா சம்பாதிக்கிறாங்க.. அதனால அது போல சம்பாதிக்கிறவங்களுக்கு பெண்ணை கொடுக்கனும் என்று நினச்சி தான் பதில் சொல்லலே போல என்று சொன்னாங்க தான்.
“ஆனா நான் தான் வேண்டாம் என்றேன்… எனக்கு வர மனைவி எனக்காக வர வேண்டும் என்று நினைத்தேன்..” என்று சொன்னவன்…
பின் அவனே… “ நான் நினைத்தது தப்பா….?” என்று கேட்டான்..
பெண்ணவள் இல்லை என்று தான் சொன்னாள்.. இது வரை சரி தான்..
ஆனால் அடுத்து அவன் சொன்ன .. “ நேரம் ஆகுது.. சீரா.” என்றதும் பாவம் பெண்ணவள் மீண்டும்… “ சினிமாவுக்கு புக் செய்து இருக்கார் போல..” என்று தவறாக நினைத்து விட்டாள்..
ஆனால் அடுத்து அவன் சொன்ன… “ ஈவினிங்க மூன்று பேட்ச்சா ட்யூஷன் எடுக்கிறேன்… ஒன்பது வரை போகும் சீரா.. சனி ஞாயிறு ஏசி ரிப்பேர் பண்ணே போவேன்… இனி அதை முக்கியமானவங்களுக்கும் என் ரெகுலர் கஸ்ட்டமருக்கும் மட்டும் போறேன்… மத்த புதுசா போகலே… “ என்றவனின் பேச்சில் பெண்ணவள் சிலையாகி விட்டாள்…