Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Paniyum Pathikume....12

  • Thread Author
அத்தியாயம்…12

ஜெயேந்திரன் மனைவியிடம் சொன்னது போலவே அந்த வாரம் சனி ஞாயிறு வேறு எந்த வேலையும் வைத்து கொள்ளவில்லை… மனைவியுடன் தான் நேரம் செலவிட்டான்..

அன்று நேரம் ஆகுது என்றதில் வெளியில் அழைத்து செல்கிறானோ.. சினிமாவுக்கோ என்று நினைத்து ஏமாந்த பெண்ணை… ஜெயேந்திரன் தன் விடுமுறை நாளில் அதை இரண்டையும் நிறை வேற்றினான்..

பெண்ணவள் சொல்லாமலேயே அவள் மனது அறிந்து முதலில் கோயிலுக்கு அழைத்து சென்று பின் சினிமாவுக்கு மாலுக்கு என்று இரண்டு நாளையும் தன் மனைவியுடன் தான் கழித்தான்..

இந்த முறை பெண்ணவள் முன் எச்சரிக்கையாக மாலுக்கு போது… எதுவும் வாங்கவில்லை.. கணவனோடு இரு சக்கர வண்டியில் செல்வது அவனின் கை பற்றி நடப்பதுவோ அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்தது.. மாலில் ஜெயேந்திரன் “ என்ன எதுவும் வாங்கல… ?” என்று கேட்டவனிடம் பெண்ணவள்..

“ இப்போ மேரஜிக்கு தான் அத்தனை வாங்கியது… அதனால வேண்டாம்…” என்று சொல்ல..

“ அப்போ எதுக்கு நாம இங்கு வந்தோம்…?” அந்த காம்ப்ளக்ஸ் மால் காட்டி கேட்டவனிடம் பெண்ணவள் ஒன்றும் சொல்லவில்லை.. ஆனால் ஒரு பார்வை பார்த்தாள்..

அந்த பார்வையில் அவன் என்ன உணர்ந்தானோ… பற்றி இருந்த பெண்ணவளின் கையை இன்னும் கெட்டியாக பிடித்து கொண்டவன்.. அதற்க்கு அடுத்து எதுவும் பேசவில்லை.. அவளுமே. .. அங்கு மெளனம் மட்டும் தான் நிலவியது..

ஆனால் அந்த மெளனமே இருவருக்கும் அத்தனை மகிழ்ச்சியையும், சுகத்தையும் கொடுத்தது… பின் இரவு தழுவ தான் வீடு வந்தனர்…

ஜெயேந்திரன் பெண்ணவளிடம்… “ ஓட்டலில் சாப்பிட்டு விட்டே போகலாம்…” என்று தான் சொன்னான்..

ஆனால் பெண்ணவள்.. “ இல்ல விருந்து நேத்து முழுவதும் ஓட்டலில் சாப்பிட்டது என்று வயிறு ஒரு மாதிரி இருக்கு.. ரசம் சாதம் சாப்பிட்டா போதும் என்று இருக்கு..” என்று சொன்னவள்..

பின்… “ நீங்க வேணா சாப்பிடுங்க…” என்றும் சேர்த்து சொல்ல.

அதற்க்கு ஜெயேந்திரன்.. “ எனக்கு சாதாரணமாவே வீட்டு சாப்பாடு தான் பிடிக்கும்.. நான் ஓட்டலில் சாப்பிடலாம் என்று கேட்டது கூட உனக்காக தான்.. நாம இரண்டு பேரும் வீட்டிலேயே சாப்பிட்டுக்கலாம்…” என்று சொல்லி விட்டு இவர்கள் வீடு வந்த போது மணி பத்து தொட இருந்தது…

அனைவரும் படுத்து விட்டனர் போல்.. கூடத்து விளக்கும்… வராண்டா விளக்கு மட்டும் தான் எரிந்து கொண்டு இருந்தது..

அப்போது தான் பெண்ணவளுக்கு நினைவு வந்தது.. அது மாமியார் இவர்கள் வெளியில் கிளம்பும் போது இவளிடம் சொன்னது…

“வீட்ல சாப்பிட வரிங்கன்னா.. ஒரு போன் போட்டு சொல்லிடு வசீ…” என்றது… அதை அவள் சுத்தமாக மறந்து விட்டாள்…

ஜெயேந்திரன் தன் இரு வச்சர வாகனத்தை அதற்க்கு உரிய இடத்தில் வைத்த பின் தான் தன் மனைவியை பார்த்தது.. அவளின் முகத்தில் தெரிந்த பதட்டத்தை பார்த்து..

“என்ன சீரா…?” என்று கேட்டவனிடம்.. அவள் என்ன என்று சொல்லுவாள்..

இரவு முழுவதும்.. மனைவியோடு கூடல், அன்பு அனுசரணை என்று இருப்பான் தான்.. ஆனால் அவன் ஒவ்வொரு செயல், பேச்சு.. அனைத்திலும் அவன் அவளுக்கு உணர்த்தியது இதை தான்..

“ எந்த காரணம் தொட்டும் நம்ம குடும்பம் பிரிய கூடாது சீரா. அதுவும் உன்னால இருக்கவே கூடாது… “ என்பதை தான்..

கூடவே இதையும் சேர்த்து சொல்லி இருந்தான்… “ என் அம்மா ரொம்பவும் கண்டிப்பு தான்… ஆனால் அதை நியாயம் இல்லாது பேச மாட்டாங்க.. நடந்துக்கவும் மாட்டாங்க.. அவங்க அது போல கண்டிப்பா இருப்பது கூட ஒருத்தருக்கு ஆதரவா இருந்தா அது மத்தவங்க பார்வைக்கு அது என்ன அவங்க மட்டும் ஸ்பெஷல் என்று நினைக்க தோனும்.. அதுவே நாளை பின்னே குடும்பம் பிரிய காரணமா ஆகிட கூடாது என்பதினால் தான்…” என்று சொன்னவன் கடைசியாக..

“அதுவும் உன் கிட்ட இன்னுமே கண்டிப்பு காட்ட கூடும்… “ என்று சொல்லவும்…

முதல் பேச்சு அனைத்திற்க்கும் அமைதியாக கேட்டு கொண்ட பெண்ணவள் கடைசியாக சொன்னதிற்க்கு மட்டும்..

“ஏன்…” என்று கேட்டாள்..

“ஏன்னா நீ எங்க அண்ணிங்க விட கொஞ்சம் வசதியான வீட்டில் இருந்து வந்ததால் உனக்கு ஏதாவது ஆதரவா பேச போய் அண்ணிங்க.. நீ கொஞ்சம் வசதியான வீட்டில் இருந்து வந்த அதனால தான் என்று அவங்க இரண்டு பேரும் நினச்சிட கூடாது லே… அதனால தான்… அதனால அது போல் ஒரு சூழ் நிலையை நீ வராது பார்த்துக்கோ அவ்வளவு தான்… ” என்று சொன்னது எல்லாம் இப்போது பெண்ணவளுக்கு நியாபகத்தில் வந்தது..

தான் என்ன என்று கேட்டும் மனைவி ஒன்றும் சொல்லாது இருப்பவளிடம். “ என்ன..?” என்று மீண்டும் கேட்கும் சமயம் தான் கெளசல்யா கதவை திறந்தது.. அதில் ஜெயேந்திரன் ஒன்றும் பேசாது அமைதியாக வீட்டிற்க்குள் மனைவியோடு தன் அன்னை பின் தொடந்து வந்தாலுமே, மனைவியின் பதட்டமான முகத்தை கவனித்தான் தான்.. ஆனால் பாவம் என்ன என்று தான் அவனுக்கு தெரியவில்லை…

ஆனால் அவனின் அன்னை அதை அவனுக்கு தெரியப்படுத்தி விட்டார்.. அடுத்து சொன்ன பேச்சின் மூலம்..

“பால் குடிக்கிறிங்கலா…?” என்று இருவரையும் பார்த்து பொதுவாக கெளசல்யா கேட்க..

அதற்க்கு ஜெயேந்திரனோ.. “ ம்மா என்னம்மா. நாங்க இன்னும் சாப்பிடவே இல்ல.. நீங்க என்ன என்றால் பால் குடிக்கிறிங்கலா என்று கேட்கிறிங்க..?” என்று ஜெயேந்திரன் கேட்கவும்..

கெளசல்யாவின் பார்வை மருமகள் மீது தொட்டு தழுவியதை, அப்போது தான் ஆணவன் பார்த்தான்… என்ன என்று அவன் யோசிக்கும் போதே…

கெளசல்யா.. “ சாயங்கலாம் பணியாரம் அதுக்கு தொட்டுக்க புதினா சட்னி செய்தேன்.. அது இருக்கு எடுத்துட்டு வரவா..?” என்று கேட்கவும் தான்.

ஜெயேந்திரன் சட்டென்று தன் மனைவியை பார்த்தது.. அத்தையின் அந்த பார்வையும், கணவனின் இந்த பார்வையும் சேர்த்து பெண்ணவளுக்கு இன்னும் பதட்டத்தை கொடுக்க. அதில் அவளின் முகம் முழுவதும் வேர்த்து போய் தன்னை பாவம் போல் பார்த்த அந்த பாவனையில் அவன் அவளிடம் ஒன்றும் கேட்காது,.

மீண்டும் தன் அன்னையிடமே… “ சீரா கிட்ட ஏதாவது சொன்னிங்கலாமா….?” என்று கேட்ட கேள்விக்கு கெளசல்யா…

“அது எல்லாம் விடு.. நேரம் ஆகுது பாரு… பணியாரம் இருக்கு அதை எடுத்து வரவா….?” என்று கேட்ட அன்னையிடம் ..

“எனக்கு அது ஓகேம்மா ஆனா சீராக்கு கொஞ்சம் ரசம் சாதம் இருந்தா நல்லா இருக்கும்..” என்று சொன்ன கணவனின் ..

“ஏங்க வேண்டாம்…” என்று மெல்ல முனு முனுத்தவளின் பேச்சை அவன் சட்டை செய்யவில்லை…

காரணம் இன்று பிள்ளைகளுக்கு விடுமுறை… அதனால் மாலை இது போல் ஏதாவது வீட்டில் சிற்றுண்டி செய்வது வாடிக்கை தான்…

அது போல் தான் இன்று பணியாரம் செய்து இருக்காங்க.. ஆனால் அந்த பணியாரம் தேங்காய் எண்ணைய் கொண்டு செய்வதால், ஏற்கனவே வயிறு சரியில்லாத மனைவிக்கு அது ஒத்து கொள்ளுமா என்ற கவலை.. அதன் தொட்டு தான் ரசம் சாதம் கேட்டது.

கெளசல்யாவுக்கு நொடியில் விசயம் புரிந்து விட்டது.. அதனால் மகனுக்கு ஹாட் பேக்கில் இருக்கும் பணியாரத்தையும் புதினா சட்னியையும் வைத்து விட்டு குளிர் சாதன பெட்டியில் இருந்து சாதம் எடுத்து அவர் சூடு செய்யும் போதே….

இன்னும் கூடத்து விளக்கு அணையாது இருக்கே என்று நினைத்து தங்கள் அறையில் இருந்து வந்த அந்த வீட்டின் மூத்த மருமகள்…ஜெயந்தி வெளியில் வந்து பார்த்தவளுக்கு, தன் மாமியார் ரசத்திற்க்கு தேவையான புளியை ஊற வைத்து இருப்பதை பார்த்து.

“என்ன அத்தை…?” என்று கேட்டவளிடம் கெளசல்யா…

“வசீக்கு வயிறு சரியில்லை .. அதான் ரசம் வைக்கிறேன்… நீ போய் படுக்க போ….” என்று தன் பெரிய மருமகளை அவர் போக தான் சொன்னார்.

ஆனால் ஜெயந்தி போகாது… “ நீங்க போய் ஹாலுல உட்காருங்க.. நான் நாளைக்கும் சேர்த்து ரசம் செய்துடுறேன்…” என்று சொல்லி பத்து நிமிடத்தில் சுட சுட சாதம் சுட சுட ரசம்.. புதினா துவையல் என்று வசீகராவின் உணவு முடிவடைந்து விட்டது தான்…

வசீகராவுக்கு வயிறு மந்தமான இந்த நிலையில் உண்மையில் அந்த ரச சாதமும் புதினா துவையலும் அவளுக்கு தேவாமிர்த்தமாக தான் இருந்தது.. இருந்தும் மனதில் ஒரு குற்ற உணர்வு.. மத்தவங்களை பத்தி நாம யோசிக்கவே இல்லையே என்று..

அதுவும் ஜெயந்தி…. கெளசல்யாவிடம்… “ மாத்திரை போட்டு எவ்வளவு நேரம் முழிச்சிட்டு இருப்பிங்க அத்த.. போய் நேரத்துல படுங்க. . காலையில் மெதுவா எழுந்துக்கோங்க என்று சொன்னாலும் கேட்பது இல்ல. வருஷம் போக போக வயிசு ஏறுது அது உங்களுக்கு நியாபகத்தில் இருக்கு தானே….” என்று சொன்னதோடு மட்டும் அல்லாது..

கெளசல்யா அவர் படுக்கை அறைக்கு போகும் போது மீண்டும் ஜெயந்தி…

“ நாளைக்கு மெல்லவே எழுந்துக்கோங்க… சமையலை நாங்க பார்த்துக்குறோம்…” என்று சொல்லியும் அனுப்பி வைத்ததில்.

இவங்க எல்லோரும் எப்படி எல்லாம் யோசித்து செய்யிறாங்க. நடந்துக்குறாங்க.. ஆனா நான்.. சொன்னதை கூட செய்யாது.. அதில் அவளுக்கு இன்னுமே ஒரு மாதிரியாகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்…

அதுவும் மாமியாரும் சரி ஜெயந்தி அக்காவும் சரி ஒன்றும் சொல்லாது சென்றதில், முகம் ஒரு மாதிரியான நிலையில் தான் கணவனோடு தங்கள் அறைக்கு வந்தது..

கணவனும் ஒன்றும் சொல்லாது.. அதை விட தன் மீது தவறு இருந்தும் கணவன் தன் உடல் நிலை கொண்டு தன் அம்மாவிடம் ரசம் சாதம் கேட்டது…

தன் வீட்டில் சொல்வது போல் தான் மக்கோ என்று தான் அவளுக்கு நினைக்க தோன்றியது.. அவள் வீட்டில் அதை சொல்லி கொண்டே இருப்பார்கள்.. ஆனால் அவளுக்கு தெரியும் தான் மக்கு இல்லை என்பது. அதனால் அந்த வார்த்தைகள் எல்லாம் அவளை பலவீனம் ஆக்கவில்லை..

அதனால் தன் அம்மா வீட்டில் பெண்ணவள் தன்னம்பிக்கையோடு தான் பெண்ணவள் அங்கு இருந்தாள்..

ஆனால் இங்கு அதை போல் அவளை ஒன்றும் பேசவில்லை.. இருந்துமே நான் ஏன் இவர்களை போல் இல்லை. அப்போ நான் அப்போ நான் எதற்க்கும் லாயிக்கு இல்லாதவள் தானா….என்று குழம்பி போய் இருந்தவள்.. கணவன் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தாள்.. அவன் ஏதாவது சொல்லுவான் என்று…

ஆனால் அவனோ குளியல் அறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வீட்டில் அணியும் இலகுவான ஆடையை அணிந்து கொண்டவன்.. ஒன்றும் செய்யாது தன்னையே பார்த்து கொண்டு இருந்த மனைவியை பார்த்து..

“என்ன சீரா.. நீயும் போய் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்து படு.. நாளையில் இருந்து ஒன் வீக் மீண்டும் ரொட்டின் லைப்….” என்று சொன்னவன் பின் எதோ நியாபகம் வந்தவனாக…

“நெக்ஸ்ட் வீக் நான் ப்ரீ தான் சீரா… ஹனீ முன் நாம எங்கே போகலாம்.. நீயே இடத்தை டிசைட் செய்…” என்று வேறு சொல்ல.

வேறு எப்போதாவது கணவன் இதை சொல்லி இருந்தால், பெண்ணவள் கண்டிப்பாக சந்தோஷப்பட்டு இருந்து இருப்பாள் தான்.. ஆனால் இப்போது அதுவும் எதுவும் நடவாதது போல் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் நடந்து கொள்வதில் பெண்ணவளுக்கு கண்ணீர் வந்து விட்டது..

அதை பார்த்த ஜெயேந்திரன்.. படுக்க சென்றவன். மனைவியிடம் வந்து அவளை தன் மீது சாய்த்து கொண்டவன்..

“சீரா சீரா என்ன இது..” என்றவனின் பேச்சில்..

“இல்ல அத்த நாம கிளம்பும் போது என் கிட்ட வீட்டுக்கு சாப்பிட வருவதா இருந்தா போன் செய் என்று சொன்னாங்க….”

மனைவி சொல்லாமலேயே அது அவனுக்கு புரிந்து விட்டது தான்… ஏன் என்றால் அந்த வீட்டில் இது நடப்பது தான்..

இரண்டு அண்ணன்களும் அண்ணியோடும் குடும்பத்துடன் எங்காவது வெளியில் சென்றால், இது தான் பழக்கம்.. ஏன் அண்ணன் அவனின் மாமியார் வீடு செல்லும் போது கூட..

“நீ அங்கு சாப்பிடுவதா இருந்தா போன் பண்ணி சொல்லிடு …” என்று தான் கெளசல்யா சொல்வார்…

அண்ணங்களும் தங்கள் வீட்டில் உணவு செய்யும் நேரத்திற்க்கு முன்பு அழைத்து சொல்லி விடுவர்.. அவனுக்கு இட்து வரை அது போலான நிலை வந்தது கிடையாது.

அன்னை சொல்லாமலேயே.. இந்த வீட்டு பழக்கத்தில் அதை நான் செய்து இருந்து இருக்க வேண்டும்.. ஆனால் அன்னை சொல்லியும்… அவனுக்குமே ஒரு மாதிரியாக தான் இருந்தது..

அதுவும் இந்த வீட்டிற்க்கு வாழ வந்த பெண் தன் அண்ணி தன் அன்னையின் உடல் நலத்தில் அத்தனை அக்கறை காட்ட..

தான் நேரம் பார்க்காது வெளியில் சுற்றி விட்டு வந்து.. வயதானவர்களின் தூக்கம் கெடுத்து விட்டோமோ.. என்று அவனுக்குமே கொஞ்சம் குற்றவுணர்ச்சியாக தான் இருந்தது…

அதனால்.. “ நீ இந்த வீட்டுக்கு புதுசு சீரா.. இந்த வீட்டு பழக்கம் உனக்கு தெரியாது… என் அம்மா ஒரு பிடி சாதம் கூட வீண் செய்ய கூடாது என்று நினைப்பவங்க.. அதனால வெளியில் போனா.. சாப்பிட்டு வருவதா இருந்தா வீட்டில் சொல்லிடனும்…

அதோட இந்த நேரம் வீட்டுக்கு வந்தா பாவம் அவங்க தான் முழித்து இருந்து கதவை திறக்கனும்.. இது எதையும் பத்தி யோசிக்காதது என் தப்பும் தானே….” என்று சொன்னவன்..

அதனால்… “ சரி விடு… ட்ரஸ் மாத்திட்டு தூங்கு எனக்குமே ரொம்ப டையாடா…” என்று சொல்லி விட்டு படுத்து விட..

பெண்ணவளும் கணவன் சொன்னதை செய்து விட்டு கணவனின் அருகில் படுத்தவளுக்கு தூக்கம் வரவில்லை.. காரணம் திருமணம் ஆன தினத்தில் இருந்து கணவனின் அணைப்பில் படுத்து உறங்கியவளுக்கு.. இன்று அந்த அணைப்பு கிட்டாது.. கணவனை போலவே தூக்கம் தூரம் விலகி நின்று கொண்டது….




 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
258
நைஸ் அப்டேட் ❣️
ஆரம்பத்துல கொஞ்சம் தடுமாற்றம் இருக்க தான் செய்யும் அப்புறம் இங்க நடைமுறை பழக்கத்துக்கு வந்துடும் வசீ.....
 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
266
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடக்கடவுளே 😱 😱 😱 இதென்ன நம்மாளை மக்கு ன்னு அவளே மனசுல நெனைக்கிறளவுக்கு கொண்டு வந்து நிறுத்திருச்சே சுச்சுவேசன்😔😔😔😔😔😔😔😔
 
New member
Joined
Oct 5, 2025
Messages
6
Next episode eppo varum sister? Looking forward to all your 3 ongoing stories, each one is excitin. I keep checking multiple times a day
 
Top