அத்தியாயம்….15
வசீகரா ஜெயேந்திரன் தம்பதியர்களுக்கு அன்றைய வருடம் தலை தீபாவளி என்பதினால், முறையாக தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே வசீகராவின் வீட்டில் இருந்து சுபத்ராவும் பார்த்திபனும் வரிசை வைக்க வந்து விட்டனர்…
அவர்களுக்கு சாப்பிட இவளின் மாமியார் வீட்டவர்களும் ஒரு சிறிய விருந்தே தயார் செய்து விட்டனர்… அதுவும் இவளிடம் அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு தான் செய்தனர்… சுவையும் பார்க்க சொன்னர்… சுவைத்தும் பார்த்தாள் தான்…
இங்கு சாதாரணமாகவே அனைவரும் நன்றாக தான் சமைப்பார்கள்.. அதனால் சுவை மிக அருமையாகவே இருந்தது தான்..
ஆனால் தன் வீட்டவர்கள் வீட்டில் சமைத்து போட்டால், அது என்னவோ கீழாக தானே நினைப்பார்கள்… காசு மிச்சம் செய்ய வீட்டில் செய்துட்டாங்க என்று கூட தான் அம்மா சொல்ல கூடும்..
அதை தன்னிடம் சொன்னால் கூட பரவாயில்லை.. .. அதுவே அவளுக்கு பிடிக்காது தான்.. அதுவும் தன் மாமியார் வீட்டவர்களின் பெருந்தன்மையை பார்த்த பின்.. அவளுக்கு அது போல் தன் மாமியார் வீட்டவர்களை பற்றி பேசுவதை எப்படி அவள் பொருத்து கொள்ள முடியும்…
தன் வீட்டவர்கள் ஆடம்பரத்துக்கும், பெருமைக்கும் செலவு செய்வார்களே தவிர.. பாவம் புன்னியம் என்று எல்லாம் எதுவும் பார்க்க மாட்டார்கள்..
ஆனால் இங்கு… அதுவும் பணத்திற்க்கு அத்தனை பார்த்து பார்த்து செலவு செய்யும் தன் மாமியார் அன்று ஒரு நாள்.
மிலிட்டிரி கேண்டினுக்கு பொருட்கள் வாங்கி கொண்டு அவளின் மாமியாரும் மாமனாரும் சென்று இருந்த சமயத்தில் , மேல் வேலை செய்யும் பணிப்பெண் வந்த போது அன்று இவள் தான் அவர்களுக்கு காலை உணவை கொடுத்து காபியும் போட்டு கொடுத்தது..
இந்த வேலையை எப்போதும் கெளசல்யா தான் செய்வார்.. அதுவும் இதையும் கெளசல்யா இவளிடம் சொன்னது உண்டு…
“வேலை செய்யும் பெண் வந்தால் முதல்ல சாப்பிட வைத்து அப்புறம் வேலை செய்ய வை… “ என்று…
அதுவும் சாப்பிட கொடுப்பது பழைய பொருட்கள் எல்லாம் கிடையாது இவர்கள் சாப்பிடும் காலை உணவை தான் சாப்பிட கொடுப்பார்கள்… அதிலேயே வேலைக்காரர்களை தன் அம்மா வீட்டிலும் தன் மாமியார் வீட்டிலும் நடத்தும் வித்தியாசத்தை உணர்ந்து… தன் மாமியாரின் மீது அவளுக்கு மரியாதை வந்தது தான்..
ஆனால் அன்று தன் மாமனாரும் மாமியாரும் மிலிற்றி கேண்டினுக்கு பொருட்கள் வாங்க சென்று இருந்த போது இவள் டிபன் வைக்க…
இவளிடம்… “ என்னம்மா பெரியம்மா வீட்டில் இல்லையா…?” என்று பணிப்பெண் கேட்ட போது இவள்..
“கேண்டின் போய் இருக்காங்க…” என்று சொன்ன போது தான்..
அந்த பணிப்பெண் சொன்ன விசயமான “ இவங்க பிழைக்க தெரியாதவங்கம்மா… கேண்டினில் சரக்கு கூட விற்பாங்க. அதுவும் கம்மி விலைக்கு… ஆனா அதை இவங்க வாங்கிட்டு வர மாட்டாங்க… ” என்று அவள் சொன்ன போது வசீகரி..
“ அந்த பழக்கம் இல்லாத போது ஏன் வாங்கனும்.. அதுவும் இல்லாம இதுல என்ன பிழைக்க தெரியாதவங்க என்று சொல்வது.. அந்த பொருள் வாங்காத அளவுக்கு அத்தை பிள்ளைங்களை வளர்த்து இருக்காங்க என்பது பெருமை தர கூடிய விசயம் தானே….” என்று இவள் தன் மாமியாருக்கு சப்போர்ட்டாக பேசினாள்..
அதற்க்கு அந்த பணிப்பெண்… “ ஆமா ஆமா பெரியம்மா பசங்க எல்லாம் தங்கம் தான்… அதே போல் தான் மருமகள்களும் அமஞ்சி இருக்கு.. தோ சும்மா ஒரு வார்த்தை கூட நீ உங்க மாமியார் பத்தி குறையா கூட இல்ல சும்மா கூட பேச விடல பாரு….” என்று சொன்னவள்..
பின்… “ அங்கு விற்க்கும் ரம் விஸ்க்கி எல்லாம் ஒரிஜனலாம்.. ஆனா கம்மி விலைக்கு தருவாங்கலாம்.. இது எல்லாம் எனக்கு இந்த தெரு கடைசி வீட்டவங்க தான் சொன்னது.. அவங்க மாமனார் கூட இராணுவத்தில் தான் வேலை பார்த்தவரு… அவங்களுமே இவங்க வாங்கிட்டு வரும் அதே கேண்டினில் தான் வாங்க போவாங்க… அவங்களுக்கும் இந்த குடிக்கிற பழக்கம் கிடையாது தான்.. ஆனாலும் அதை வாங்குவாங்க..” என்றதும் வசீகரா..
“ஏன்… என்று கேட்டால்..
“அங்கு கம்மி விலைக்கு அந்த சரக்கை வாங்கிட்டு வந்து அவங்க வீட்டிற்க்கு பால் ஊத்துவாங்க. அது தான்மா நம்ம வீட்டிற்க்கு கூட பசும் பால் கொடுப்பாரே அவர் தான்… அவருக்கு குடிக்கிற பழக்கம் இருக்கு .. அவர் கிட்ட தான் அவங்க அதை கொடுப்பாங்க.. அதுவுல் கம்மி விலைக்கு வாங்கிட்டு வெளியில் விற்க்கும் விலைக்கு கொடுப்பாங்க…அந்த பாலுக்கு கொடுக்கும் பணத்தை கழிட்டிட்டா.. அந்த பால் காரன் இவங்களுக்கு பணம் கொடுக்கும் படி தான் இருக்கும்…” என்று அவள் சொல்லும் போதே..
வசீகராவுக்கு சீ என்ன இது என்பது போல் தான் ஆனாது.. பின் அவளே,….
“உங்க மாமியார் கிட்ட கூட அந்த பால்காரர் நீங்களுமே மிலிட்ரி கேண்டினில் வாங்கி எனக்கு கொடுத்தா அதை பால் கணக்கில் கழித்து கொள்ளலாமே…” என்று சொன்னதற்க்கு.உங்க மாமியார் முடியவே முடியாது என்று சொல்லிட்டாங்க… நீங்க எங்க குடும்ப உடம்பு ஆரோக்கியத்திற்க்கு ஒரு பொருள் கொடுக்குறிங்க. அதுக்கு ஈடா நான் உங்க உடம்பு கொடுப்பது போல் ஒரு பொருள் தரனுமா….” என்று சொல்லிட்டாங்க….
உண்மையில் வசீகராவுக்கு தன் மாமியார் மீது இருக்கும் அந்த மதிப்பு அதிகரித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்…
அது போலான தன் புகுந்த வீட்டவர்களை பற்றி அது தன் அன்னையே ஆனாலும் தவறாக பேசுவது அவளுக்கு பிடிக்காது தானே.. அப்படி இருக்கு
மாமியார் வீட்டவர்களின் மனது நோக அனைவரின் முன்னும் சொன்னால், தன்னை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளும் தன் மாமியார் வீட்டு உறவுகளை தான் விட்டு கொடுப்பது போல தானே ஆகி விடும் என்று..
தன் அம்மா வீட்டவர்கள் வருகிறார்கள் என்ற சந்தோஷம் கூட இல்லாது தான் பெண்ணவள் இருந்தது.. அவளின் மாமியார் ஒரவத்திங்க..
“என்ன இது எப்போதும் போடுவது போலவே ட்ரஸ் போட்டுட்டு இருக்க.. நல்லதா புடவை கட்டிக்கோ… கொஞ்சம் நகையும் போட்டுக்கோ…” என்று சொன்னதை வசீகரா கேட்டு கொண்டாள்..
காரணம் இதை வைத்து கூட தன் அம்மா ஏதாவது பேச கூடும் என்று… இவள் தயார் ஆகி வரவும்.. கட்டி வைத்த மல்லிகை பூவை இவள் தலையில் கெளசல்யா சூடினார்..
பின் ஏதோ ஒரு வேலையாக தங்களின் அறைக்குள் வந்தவளை ஜெயேந்திரன்.. ஆசையாக அணைத்து கொண்டவன்..
“ புது புடவை.. புது நகையோட இப்படி இருந்தால் இந்த புது மாப்பிள்ளை எப்படி ஆபிசுக்கு போவதாம்…?” என்று கேட்டுக் கொண்டே முதலில் பூவை முகர்ந்தவன் பின் அவள் கழுத்தை முகர்ந்து கொண்டே… அவளின் இதழ் பகுதிக்கு வர… அவளை திருப்பியவளின் பதட்டமான முகத்தை பார்த்த ஜெயேந்திரன்..
“என்ன சீரா… என்ன பிரச்சனை…?” என்று கேட்டான்..
இவர்களுக்கு இது போல பகல் நேரத்தில் தனிமை கிடைப்பது என்பது மிகவும் அரிது.. அப்படி அறிதாக சிறிது நேரம் கிடைத்தாலும். அந்த புதுமண தம்பதியர்கள் அதை சரியாக அவர்களுக்கு பிடித்தது போல் பயன் படுத்திக் கொண்டு விடுவார்கள்..
அதுவும் இது போல் சின்ன சின்ன இடை வெளியில் கிடைக்கும் அந்த தனிமையை தன்னை விட தன் மனைவி மிகவும் விரும்புகிறாள் என்பதை அவளின் முகமும்.. அவள் கொடுக்கும் அந்த அதிகப்படியான நெருக்கமும் அவனுக்கு உணர்த்தி விடும்…
அதுவும் ஒரு முறை வசீகரியே…. “இரவில் கிடைக்கும் அதிகப்படியான நெருக்கத்தை விட இது போல சின்ன சின்ன சீண்டல் தான் இந்தர் எனக்கு பிடிச்சி இருக்கு…” என்று சொன்னவளிடம்..
ஜெயேந்திரன்… “ இது போல மட்டுமே இருந்தா குழந்தை வராது.. அது உனக்கு தெரியும் தானே….?” என்று இவன் கேட்டும் இருக்கிறான்..
அப்படி விரும்பும் இந்த சின்ன சீண்டலில் கூட மயங்காது இருப்பவளிடம் கேட்டவனிடம்.
பெண்ணவள் முதலில்… “ ஒன்றும் இல்லை…” என்று தான் சொன்னாள்..
ஆனால் ஆணவன் அதன் பின் ஒன்றும் கேட்காது அவன் பார்த்த பார்வையிலேயே தன் மனதின் பயத்தை பெண்ணவள் சொல்லி விட்டாள்….
அதற்க்கு ஜெயேந்திர.. “ தோ பார் வசீ நம்ம மனது படி நாம நடந்து கொள்வோம்.. என் மாமியார் வீட்டவங்களுக்கு கண்டிப்பாக இந்த வீட்டவங்க சம்மந்திக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுப்பாங்க…” என்று கணவன் சொல்லும் போதே…
வசீகரா… “ அய்யோ நான் அத்தையோ மாமாவோ எங்க அப்பா அம்மாவை மரியாதை குறைவா நடத்துவாங்க என்று நினைக்கல…. என் அப்பா அம்மா ஏதாவது பேசிடுவாங்கலோ.. எனக்கு அது தான் பயமே….” என்று சொன்னவளிடம் ..
ஜெயேந்திரன்… “அந்த மரியாதையை அவங்க காப்பாத்திக்கனும் அவ்வளவு தான். நீ இதை எல்லாம் நினைத்து மனசை போட்டு குழப்பி கொள்ளாதே…. நமக்கு இது தலை தீபாவளி… புரியுதா… அதை நினைத்து நீ ஹாப்பியா இரு.. என்னையும் ஹாப்பியா வெச்சிக்கோ.. அவ்வளவு தான்…” என்றதும்..
கணவனின் பேச்சில் ஆமாம் தானே என்று நினைத்தவள்.. அதன் பின் கல கலப்பாகவே இருந்தாள்.. அவள் பயந்தது போல் அவளின் அம்மா அப்பா வந்த போது எதுவும் தப்பாக நடக்கவில்லை…
இன்னும் கேட்டால் ஆச்சரியம் படும் வகையாக வரிசை தட்டு வைத்த பின் அவளின் அம்மா தன் அக்கா வீட்டில் வைத்த வரிசையை பத்தி பேச்சு எடுக்காதது ஒரு ஆச்சரியம் என்றால், அன்று அவளின் அம்மா அதிகம் பேசாது இருந்ததே அவளுக்கு பெரிய ஆச்சரியம் என்று தான் சொல்ல வேண்டும்…
அதுவும் உணவின் போது எதுவும் சொல்லாது சாப்பிட்ட பின்.. அவர்கள் முறையாக வசீகரியையும் ஜெயெந்திரனையும் அழைத்து விடை பெறும் போது தலை தீபாவளி தொட்டு கெளசல்யா சம்மந்தியான சுபத்ராவுக்கு பட்டு புடவையும், பார்த்திபனுக்கு வேட்டி சட்டையையும் ஒரு தட்டில் வைத்து கொடுக்கும் போது வசீகரிக்கு மீண்டும் அய்யோ என்று ஆனது..
தன் அன்னை என்ன இது புடவை என்று சொல்லி விடுவார்களோ என்று.. ஆனால் அவள் பயந்தது போல் எதுவும் நடக்காது சுபத்ரா அதை வாங்கி கொண்டதோடு மட்டும் அல்லாது கெளசல்யாவிடம்..
“ நான் உங்களுக்கு வாங்கிட்டு வரலையே…” என்று சொல்ல போது இவளின் மாமியார்.
“இது எங்க வீட்டு பழக்கம் சம்மந்தி.. ஒவ்வொரு வீட்டு முறை வேறு படும் தானே…. என்று சொன்ன போது..
“நீங்க தப்பா நினைக்கலேன்னா.. தீபாவளிக்கு அங்கு வடும் போது வசீ கிட்ட கொடுத்து விடுறேன்… என்று வேறு சொல்ல..
வசீகரி தான் அம்மாவுக்கு உடம்பு ஏதாவது சரியில்லையா….? என்று நினைத்து அதை அவரிடமும் கேட்டாள்..
“உடம்புக்கு எல்லாம் ஒன்னும் இல்ல வசீ…” என்று சொன்னவர்.
பின்.. “ நீ நல்லா இருக்க தானே….?” என்று வேறு இவளிடம் கேட்க..
வசீகரா… “ நான் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன்ம்மா…” என்றவள் பின் என்ன நினைத்தாளோ..
அன்னையின் கை பற்றி கொண்டு…. “ ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ம்மா எனக்கு இந்த வாழ்க்கையை அமைத்து கொடுத்ததுக்கு….” என்று வேறு சொல்ல.
அதற்க்கு சுபத்ரா ஒன்றும் பேசாது மகளின் தலை கோதி விட்டார்..
ஒரு வழியாக வசீகராவின் தாய் வீட்டவர்கள் சென்ற பின் வசீகரியும் ஜெயேந்திரனும் தங்கள் அறைக்கு வந்தனர்..
ஜெயேந்திரன் தான்… “ என்ன இப்போ சந்தோஷம் தானே…?” என்று கேட்டவன் பின்..
“நான் என்ன சொன்னேன்.. நீயும் ஹாப்பியா இரு… என்னையும் ஹாப்பியா வெச்சிக்கோ என்று சொன்னேன் தானே… நீ ஹாப்பியா இருக்கே. ஆனா நான் ஹாப்பியா இல்லையே…. மாமியார் வீட்டவங்க வராங்க என்று இன்னைக்கு ஆபிசுக்கு போகாது லீவ் சொல்லிட்டேன்… அரை நாள் மாமியார் மாமனாரை கவனிக்கிறதுலேயே போயிடுச்சி… அதுக்கு ஈடா நீ என்னை இப்போ கவனிச்சா நான் ஆபிசுக்கு லீவ் எடுத்ததுக்கு யூஸா இருக்கும்…” என்று சொன்னவனுக்கு மனைவி எந்த பதிலும் சொல்லாது இருப்பதை கவனித்து விட்டு தான் மனைவியின் முகம் பார்க்க..
இப்போது முன்பை விட அதாவது காலையில் தன் வீட்டவர்கள் வரும் முன்பு இருந்ததை விட இன்னுமே சோர்ந்து போய் இருக்க..
“ என்ன சீரா..? என்ன ஆச்சு… எல்லாம் சரியா தானே போச்சு….” என்று கேட்டவனிடம்..
வசீகரி.. “ இல்ல இந்தர் ஏதோ சரியில்ல… போல இருக்கு… அம்மாவுக்கு என்னவோ பிரச்சனை… ஆனா என் கிட்ட சொல்ல விருப்பம் இல்ல போல…” என்றும் சொல்ல.
இப்போது ஜெயேந்திரன் அமைதியாகி விட்டான்.. மகளை பற்றி ஒரு அன்னைக்கு தெரிவது போல் தான் மகளுக்கும் அன்னையை பற்றி தெரியும் தானே…
இருந்தும்.. ..” பார்க்கலாம் வசீ. என்ன பிரச்சனை என்றாலும் தெரிய தான் போகுது.. நீயா ஏதோ நினைத்து மனதை குழப்பி கொள்ளாதே…” என்று விட வசீகராவும் அதன் பின் எதுவும் பேசவில்லை.
கணவன் சொன்னது போல் அவனுக்கு இது போல் வீட்டில் இருப்பதே அறிது… அதில் தான் இதுவா அதுவா என்று. எதுவும் தனக்கே தெரியாத போது கணவனை போட்டு ஏன் குழப்பிக் கொள்ள வேண்டும் என்று… கணவனின் அருகாமையில் தன் மன சஞ்சலங்களை போக்க நினைத்தாள்..
தலை தீபாவளிக்கு முன் நாளே புது மண தம்பதியர்கள் வசீகராவின் தாய் வீடு வந்து விட்டனர்.. சுபத்ரா சமையல் செய்யும் பணிப்பெண்ணின் துணைக் கொண்டு ஜெயேந்திரனுக்கு ஒரு சின்ன விருந்தே வைத்து அசத்தி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
ஜெயேந்திரனே தன் முன் இலையில் இருந்த உணவுகளின் எண்ணிகையை பார்த்து விட்டு…
“நாளைக்கு தானே எங்க தல தீபாவளி…” என்று சொன்னவனிடம்..
சுபத்ரா… “ நாளைக்கு யென்வீ மாப்பிள்ளை…” என்று சொன்னவர்.
கூடவே.. “ நான் சமையல் செய்யும் பெண்ணை வைத்து தான் இது எல்லாம் செய்தேன்…உங்க வீடு போல நானே எல்லாத்தையும் செய்யலையே…” என்று வேறு சொல்ல..
ஜெயேந்திரன் கூட என்ன டா இது என்பது போல் தான் தன் மாமியாரை பார்த்தான்…பின் இரவு உணவு முடிந்த பின் ஜெயேந்திரன் அம்மாவும் பொண்ணும் பேசிக் கொள்ளட்டும் என்று.
மனைவியிடம்… “ நீ பேசிட்டு பொறுமையாவே வா.. இல்லேன்னா அம்மா கூட படுக்குறது என்றாலும் படு.. என்று விட்டு தான் இங்கு வசீகராவின் அறைக்கு வந்தது..
அவனுக்கே இப்போது சந்தேகம் வந்து விட்டது ஏதோ பிரச்சனையோ என்று… மகளிடம் தனிமையில் ஏதாவது சொல்ல கூடும் என்று தனித்து விட்டு வர.
இங்கு வசீகரியோ முதலில். “ என்னம்மா அண்ணனை காணும்…” என்று கேட்டாள்..
ஸ்ரீ காந்த் குடும்பத்துடன் ஓட்டுதல் இல்லாது இருப்பானே தவிர.. வீடு தங்காது எல்லாம் இருந்தது கிடையாது.. மணி பத்து கடந்த பின்னும் ஸ்ரீ காந்த் வீடு வராததை பார்த்து கேட்டவளிடம் சுபத்ரா…
“பிரன்ஸ் கூட டூர் போறேன் என்று சொன்னான் வசீ….” என்றதும் வசீகரி..
“ஓ…” என்றவள் பின்..
“என்னம்மா அக்கா நாளைக்கு வராளா….?” என்று கேட்டாள்…
கீர்த்தனா எப்போதும் இங்கு தான் தீபாவளி கொண்டாடுவாள்… காலையில் அவள் வீட்டில் ஒரு பாயசத்தை வைத்து சாமீக்கு விளக்கு மட்டும் ஏற்றி அந்த பாயசத்தை அம்மா வீட்டிற்க்கு கொண்டு வந்து விடுவாள்..
தாய் வீட்டில் தீபாவளிக்கு அசைவம் செய்வர்.. மாமியார் வீட்டில் அந்த பழக்கம் இல்லாததினால் இங்கு வந்து விடுவாள்… அதன் தொட்டு தான் கேட்டது..
ஆனால் அதற்க்கு சுபத்ரா… “ இல்ல வரலே என்று சொல்லிட்டா….” என்றதும் வசீகரிக்கு ஆச்சரியம்…
தனக்கு என்ன என்ன கொடுப்பார்கள்.. என்ன என்ன சமைத்து போட்டார்கள்.. வீட்டு மாப்பிள்ளையாக தான் என்ன என்ன வாங்கி கொண்டு வந்தேன் என்று பார்க்காவாவது இந்த நேரத்திற்க்கு வந்து இருப்பாளே… என்று நினைத்தவள்..
உடனே… “ ம்மா அக்காவுக்கு ஏதாவது பிரச்சனையா….?” என்று தான் வசீகரி கேட்டது..
வசீகரியின் இந்த கேள்வியில் சுபத்ரா அதிர்ந்தார் போல் மகளை பார்க்க மகள் புரிந்து கொண்டு விட்டாள்.. கீர்த்தனாவுக்கு ஏதோ பிரச்சனை என்று..
பிரச்சனை என்றால் உடல் ரீதியாக இருக்குமோ. இல்லை அவளின் மாமியார் மாமனார் இது போல் தான் இருக்கும் என்று தான் பெண்ணவள் நினைத்து கொண்டது…
சொல்ல வேண்டும் என்று நினைத்தாள்.. அம்மா சொல்வார்கள்… அவளுக்கு தெரியும் தன் அன்னைக்கு தன்னை விட தன் அக்காவை தான் மிகவும் பிடிக்கும் என்பது..
அதை விட தங்களை பெருமை பட வைத்தவள் தங்களின் பெரிய மகள் மகனே… என்பது தான் அவர்களின் எண்னம்.. அந்த பெருமையை சின்ன மகள் அவர்களுக்கு கொடுக்கவில்லை என்பதினால் தான் வசீகரியின் மீது வருத்தமும்.. அதன் தொட்டு அப்படி நடத்தியது…
இன்று தான் நல்ல மாதிரியாக பேசுகிறார்கள்.. அதை என்ன ஏது என்று கேட்டு ஏன் கெடுத்து கொள்வானேன்… பெரிய பிரச்சனையாக இருந்தால் சொல்லி இருப்பார்கள் என்று நினைத்து விட்டாள் பெண்ணவள்..
பின் கணவன் சொன்னது போல்.. “ உங்களுடன் படுக்கட்டும்மா..?” என்றும் கேட்டாள்..
ஆனால் சுபத்ரா.. “ இல்ல இல்ல நீ உன் ரூமிலேயே போய் தூங்கு மாப்பிள்ளை போய் எத்தனை நேரன் ஆகுது… போ…” என்று சொல்ல..
வசீகரிக்கும்.. கணவனோடு படுக்க தான் பிடித்தது.. கணவன் சொன்னது.. பின் அம்மாவுக்கு ஏதோ பிரச்சனையோ என்று நினைத்து தான் அம்மாவோடு படுக்கலாம் என்று நினைத்தாள்..
இப்போது அம்மாவுக்கு பிரச்சனை கிடையாது.. அதோடு அக்காவுக்கு பெரிய பிரச்சனை எல்லாம் இருக்காது என்று அவளே நினைத்து கொண்டவள்..
கணவன் இருந்த தன் அறைக்கு சென்றாள்…