Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Paniyum Pathikume....5 டீசர்...

  • Thread Author
அத்தியாயம்…5

ஜெயேந்திரன் தன் வீட்டில் இருந்து கிளம்பும் போது மிக ஆவலாக தான் பெண்ணவள் வீட்டிற்க்கு வந்தான்.. ஆனால் வந்த இடத்தில் பெண்ணின் அன்னையும் அக்காவும் கூட்டிய அலப்பறையிலும், அந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளை கிஷோர்… என்னவோ அவனிடம் ஒரு சமாஸ்தானேமே தன் கீழ் உள்ளது போல அவன் பார்க்கும் அந்த பார்வையும்… கூட பெண்ணின் அண்ணன் அந்த வீட்டின் ஒரே மகன் ஸ்ரீ காந்த்… தனக்கும் இந்த வீட்டிற்க்கும் சம்மந்தமே இல்லாதது போல்…

மாப்பிள்ளை வீட்டவர்களிடம் பேசவே… இல்லை குறைந்த பட்சம் தன் தங்கையை இவனுக்கு கொடுக்கலாமா.. நல்லவனா கெட்டவனா… என்று தன்னை பார்க்காது தன்னிடம் தன்னை பற்றியோ… தன் வேலையை பற்றியோ எதுவும் விசாரிக்காது தன் கை பேசியில் மூழ்கி இருப்பதை பார்த்தவனுக்கு என்ன டா என்று தான் நினைக்க தோன்றியது.

தான் எல்லாம். இன்னும் கேட்டால் தன் இரண்டு அக்காக்களில் மூத்த அக்காவுக்கு திருமணம் பேசும் போது நான் பன்னிரெண்டாம் வகுப்பு தான் படித்து கொண்டு இருந்தேன்… அப்போதே மாப்பிள்ளை பற்றி விசாரிக்க வேண்டும்.. தெரிந்து கொள்ள வேண்டும் எப்படி எல்லாம் அன்று மாப்பிள்ளையை தான் நோட்டம் விட்டது. பேசியது.

அது எல்லாம் இன்றுமே அவனின் மாமா தன்னிடம். “அன்னைக்கு உன் அக்காவை விட நீ தான் டா என்னை அதிகம் சைட் அடிச்சே…” என்று கிண்டலாக பேசுவார். ஆனால் இங்கு என்ன….? என்று யோசித்தவன்… கூடவே இது சரியாக வருமா….. ? பெண்ணை பிடித்து இருக்கு என்று தன் தன்மானத்தை விட்டு விட முடியாது தானே… கூட தன் குடும்பத்தையும் அது போலான ஒரு சூழ் நிலையில் தள்ளி விட முடியாது தானே..?

ஜெயேந்திரனுக்கு இந்த யோசனை எல்லாம் வந்தது தான்.. ஆனால் அவனின் அந்த யோசனை அனைத்துமே அவனின் வசீகரா அவள் அறையில் இருந்து வரும் வரை தான்…

வந்த பின்.. வந்து தன் எதிரில் நின்று அனைவரையும் பார்த்து பொதுவாக கை , கூப்பியவளின் அந்த கையை இப்போதே பிடித்து கொண்டு தன் வீட்டிற்க்கு அழைத்து சென்று விடலாம் என்பது போலான நினைப்பு தான் அவன் மனது முழுவதும் ஆக்கிரமித்து கொண்டது….

அதுவும் தான் பார்த்த தன் பார்வையை பார்த்த பெண்ணவள் ஒரு நிமிடம் அதிசயமாக ஒரு பார்வை தன்னை பார்த்து விட்டு பின் தலை குனிந்த விதத்தை பார்த்தவன் முடிவு செய்து விட்டான்..

தனக்காவள் இவள் தான்… இவள் மட்டும் தான்… இவள் தானே நம்ம வீட்டிற்க்கு வர போகிறாள்… இவளின் அம்மா அக்காவா வர போகிறார்கள்… எப்போதாவது விசேஷம் என்றால் வர போகிறார்கள்…. இன்று போல் சமாளித்து கொள்ளலாம் என்று நினைத்து விட்டான்..

பாவம் நினைத்தவனுக்கு தெரியாது… இந்த தன் கல்யாணம் முடியும் வரையும் கூட ஒவ்வொன்றுக்கும் பெண் வீட்டவர்கள் எத்தனை அலப்பறையை கூட்ட போகிறார்கள் என்று….

இதோ அதன் முதன் கட்டமாகவே இப்போதே…. ஜெயேந்திரன் நேரிடையாகவே வந்ததில் இருந்து கொஞ்சம் பரவாயில்லையாக தங்களிடம் பேசிக் கொண்டு இருக்கும் பெண்ணின் தந்தையான பார்த்திபனிடம் தான்.

“ எனக்கு உங்க பெண்ணை பிடித்து இருக்கு அங்கிள். உங்க பெண் கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க பிடிச்சி இருக்குன்னா… அடுத்த முகூர்த்ததிலேயே கல்யாணத்தை வைத்து கொள்ளலாம் …” என்று தன் விருப்பதை அனைவரின் முன் நிலையிலும் வெளிப்படையாக சொல்லி விட்டான்..

அவனின் இந்த பேச்சில் பெண்ணவளின் முகம்… வெடுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தது… காரணம்.. இன்னுமே சவரன் வேறு எதை பத்தியும் பேசவில்லையே… என்று நினைத்து தான் பெண்ணவள் மாப்பிள்ளையை அப்படி பார்த்தது..

ஆனால் பெண்ணவளின் அந்த பார்வைக்கு பதிலாக ஜெயேந்திரன் தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி என்ன என்று தன்னை பார்த்து அந்த கேட்ட பாங்கில்… வசீகராவை ஆணவன் வசீயம் செய்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்….
 
Top