Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Paniyum Pathikume....6

  • Thread Author
அத்தியாயம்….6

வசீகரா தன் கை பேசியில் அவள் பதிவு செய்து வைத்து இருந்த ஜெயெந்திரன் கைய் பேசி எண்ணை பார்த்ததுமே உடனே எல்லாம் எடுத்து விடவில்லை… உடனே எடுக்க கூடாது என்று எல்லாம் கிடையாது.. அவளாள் அதை உடனே ஏற்க முடியவில்லை என்பது தான் உண்மை..

காரணம்…. அவள் தன் கை பேசியில் தன் அக்கா தன்னிடம் கொடுத்த…. “ இது மாப்பிள்ளை செல் நம்பர் சேவ் பண்ணிக்க.. அவர் போன் செய்தா நீ முழிக்க கூடாது லே… அதுக்கு தான் சேவ் பண்ணிக்க சொல்றேன்… நீ பாட்டுக்கு எப்போவும் போல.. பேச தெரியாது பேசி வெச்சிட போற…. வசதி இல்லை என்றாலும் மாப்பிள்ளை நல்லா ஹன்சம்மா தான் இருக்கார்…. அவர் உனக்கு ஓகே சொன்னது கூட அவங்க நம்ம அளவுக்கு வசதி இல்லாததும்.. உனக்கு போடும் நகைக்காவும் கூட இருக்கலாம்….” என்று சொன்ன உடனே….

எப்போதும் அழுத்தமாக அனைத்தையும் கடந்து விடும் நம் வசீகரா… கீர்த்தனாவின் இந்த பேச்சுக்கு…

“அவங்க நகையை பத்தி ஒன்னுமே கேட்கல… அதோடு நம்ம அப்பா அம்மா அதை பத்தி பேச ஆரம்பிக்கும் போது கூட உங்க விருப்பம் தான் என்று சொல்லிட்டாங்க…..” என்றவளின் பேச்சில்… கீர்த்தனா மட்டும் அல்லாது அவளின் கணவன் கிஷோர் கூட தன் மச்சினிச்சியை அதிசயமாக தான் பார்த்தான்..

பார்த்தவன் சும்மா எல்லாம் விடவில்லை…. “அவங்க அதை பத்தி பேசாததுக்கு காரணம்.. அவங்களுக்கு தெரியும்… இந்த வீட்டின் மூத்த பெண்ணுக்கு போட்டதை தான் அடுத்த பெண்ணுக்கும் போடுவாங்க என்று…” என்று சொன்னவன்… அதோடு கூட விடாது…

“சொல்ல முடியாது… அந்த நகைக்காக கூட உன்னை ஓகே சொல்லி இருக்கலாம்… உன் அக்கா சொல்வது போல் மாப்பிள்ளை ஹன்சம்மா தான் இருக்கான்.. வசதி மட்டும் இருந்தால் கண்டிப்பா ஜெய்க்கு அழகான பெண் கிடைத்து இருக்கும்… அதனால உன் அக்கா சொன்னது போல் அவர் போன் செய்தா கொஞ்சம் பார்த்து பேசு… அப்புறம் நீ பேசும் விதத்தை பார்த்து… இந்த நகைக்காக கூட இந்த பெண் வேண்டாம் என்று சொல்லிட போறார்….” என்று விட்டான்..

அவனுக்கு தன்னோடு அந்த வீட்டில் அடுத்து வரும் மாப்பிள்ளையை உயர்த்தி பேசுவது பிடிக்கவில்லை.. அதற்க்கு காரணம் இவன் வீட்டவர்கள் நகையை கணக்கு போட்டு வாங்கியதோடு மட்டும் இல்லாது வரிசைக்கும் இத்தனை சவரன் வரிசையில் வைக்க வேண்டும் என்று திருமணத்திற்க்கு முன்பே பேசி தான் கீர்த்தனாவை கட்டியது.

ஜெயேந்திரன் வீட்டவர்கள்.. நகையை பற்றியே பேசாது இருந்ததில். அதுவும் இப்போது வசீகராவின் பேச்சை அவனின் மாமியார் மாமனாரும் கேட்டு கொண்டு இருப்பதை பார்த்தவன்..

எங்கு இந்த வீட்டில் தன்னை விட சின்ன மாப்பிள்ளைக்கு மரியாதை கொடுத்து விட போகிறார்கள் என்று நினைத்து தான் இப்படி பேசியது..

அவன் நினைத்தது போல் தான் உடனே அவனின் மாமியார் சுபத்ரா…

“கீத்தும் மாப்பிள்ளையும் சொன்னது போல அவர் போன் செய்தா பார்த்து பேசு வசீ.. எப்போவும் போல பேச தெரியாம பேசாதே….” என்று சொன்னவர்களின் இந்த பேச்சில் ஜெயேந்திரன் வீட்டவர்கள் தன் தலையில் பூ வைத்து விட்டு சென்ற இந்த ஒரு மாதமாக இருந்த அந்த இதமான மனநிலையில் கொஞ்சம் மாற்றம் உண்டானது…

அவர்கள் சொன்னதில் எது உண்மையோ இல்லையோ… ஒன்று போல் அனைவரும் பார்த்து பேசு பார்த்து பேசு என்று சொன்னார்களே… அது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயம் தான்…

காரணம் நம் வசீகராவுக்கு போனில் பேசினால் சொதப்பி விடுவாள்… அது என்னவோ முகம் பார்க்காது பேசுவதில் அவளுக்கு கொஞ்சம் தடுமாற்றம்… ஒன்று பேசினால் தடுமாற்றமாக பேசி விடுவாள்… தடுமாற்றம் என்றால் திக்கு வாய் எல்லாம் கிடையாது… பதட்டத்தில் அப்படி அவளுக்கு வந்து விடும்.. .

இல்லை என்றால் அதற்க்கு எதிர் பதமாக மிகவும் கடினமாக அவள் குரல் வெளி வந்து விடும்… யார் வேண்டும்…?” என்று கேட்பதே… ஏதோ விரோதியிடம் பேசுவது போல் தான் மற்றவர்களுக்கு தெரியும்…

அதன் தொட்டு அக்கா சொன்னதுமே முழு பெயராக தான் தன் வருங்கால கணவனின் பெயரை பெண்ணவள் பதிவு செய்து வைத்து இருந்தது…

பதிவு செய்த நாள் முதலாக ஒன்று தன்னால் நல்ல மாதிரியாக அவரிடம் பேச முடியுமா….? என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும்.. இன்னொரு பக்கம் அக்கா அம்மா மாமா சொன்னது போல் தனக்கு போடும் நகைக்காக மட்டும் தான் எனக்கு ஓகே சொன்னாரா என்று நினைத்த நொடி பெண் பார்க்க வந்த அன்று தன்னை அவன் பார்த்த அந்த பார்வை பெண்ணவளுக்கு நியாபகத்தில் வந்த நொடி…

இல்லை அப்படி எல்லாம் கிடையாது… அவர் நகைக்காக எல்லாம் என்னை கல்யாணம் செய்ய சம்மத்திக்கவில்லை…

உண்மையில் என்னை பிடித்து தான் கல்யாணம் செய்ய போறார் என்ற அவளின் இந்த நினைப்பை…. கீர்த்தனா ஒவ்வொரு முறை அம்மா வீட்டிற்க்கு போன் செய்யும் போது எல்லாம் இவளிடமும் பேசுவாள்..

அப்போ “ என்ன ஜெய் பேசினாரா…” என்று கேட்கும் போது எல்லாம்..

இவள் இல்லை இல்லை என்று பதில் சொல்லும் போது எல்லாம் உண்மையில் அவர் பிடித்து என்னை மணக்கவில்லையா…? என்ற சந்தேகம் வரும் போது எல்லாம் பெண்ணவள் ஆணவனின் அந்த பார்வையை மனதில் கொண்டு வந்து நிறுத்தி கொள்வாள்…

இத்தனை நாள் எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்த பெண்ணவளுக்கு இன்று அழைத்து விடவும்… அவள் மனதில் ஒரு பதட்டம்.. அதில் தான் பேசி சொதப்பி விட போகிறோம் என்ற பயமும் வந்து விட. முதல் அழைப்பை அவளாள் ஏற்க முடியவில்லை…

அழைப்பின் ஓசை நின்றதும்… முதல் முதலாக அழைத்த அழைப்பு ஏற்காது விட்டது அவள் மனதுக்கு கஷ்டமாக இருந்தது… அடுத்து அழைப்பானா….? அழைக்கவில்லை என்றால் தான் அழைக்க வேண்டுமா….? என்று அவள் யோசிக்கும் போதே ஜெயேந்திரன் மீண்டும் அழைத்து விட்டான்.

இந்த முறை பெண்ணவள் வந்த அழைப்பை உடனே ஏற்றவள்…

எடுத்த உடனே..” சொல்லுங்க…” என்று தான் சொன்னது..

அழைப்பின் தொடர்பில் இருந்த ஜெயேந்திரனுக்கு நான் தான் அழைக்கிறேன் என்று தெரிகிறது… என் எண்ணை பதிவு செய்து இருக்கிறாள்.. பின் ஏன் இப்படியான ஒரு குரல் என்று அவன் யோசிக்கும் போதே…

இப்போது பெண்ணவள் மிக பதட்டமான குரலாக…. “ கோ….ச்சிக்குட்டி…ங்கலா… த…ப்பா தப்..பா …” என்று இங்கு அவள் என்ன சொல்வது என்று திணறும் போதே..

ஜெயேந்திரனுக்கு பெண்ணவளின் நிலை புரிந்து விட்டதோ என்னவோ…. அதனால்.. முதலில் அவன் பேச்சாக பெண்ணவளின் செவிகளில் தீண்டியது…

“ரிலாக்ஸ்…” என்பதே… வாழ்க்கை முழுவதுமே… நான் உன்னை ரிலாக்ஸ்ஸாக வைத்து இருப்பேன் என்பதை ஜெயேந்திரன் பெண்ணவளுக்கு அப்போதே உணர்த்தி விட்டானோ என்னவோ….

மீண்டுமே… “ ரிலாக்ஸ்ம்மா…” என்று சொன்னவன்..

அடுத்து… “நான் தான்… பயம் வேண்டாம்…” என்று சொன்னவனின் அந்த பேச்சில் பெண்ணவள் உண்மையாகவே ரிலாக்ஸ்ஸாக தான் உணர்ந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்..

அது கொடுத்த தைரியத்தினாலோ என்னவோ…. “ இல்ல எனக்கு போனில் சரியா பேச தெரியாது….” என்று உண்மையை சொல்லி விட்டாள்…

அழைப்பில் இதை கேட்டு கொண்டு இருந்த ஜெயேந்திரன் பெண்ணவளை பற்றிய யோசனையுடன்..

“ஓ…” என்று மட்டும் சொல்ல…

இப்போது மீண்டுமே பெண்ணவளுக்கு மனதில் பயம் வந்து விட்டது போல்….

அதன் தொட்டு… “ இல்.ல நா…ன்…” என்று பேசி கொண்டு இருந்தவளிடம் ஜெயேந்திரன்….

“சீரா எனக்கு போன்ல சரியா பேச தெரியாது என்று என் கிட்ட சொன்னது சரியா தானே சொன்ன… முதல்ல என் கிட்ட பேசின அந்த ரப் வாய்ஸ்சும் இல்ல… அடுத்து பேசின அந்த தடுமாற்றமும் இல்லாம சரியா தானே பேசின… “ என்றதும்..

பெண்ணவள் ஜெயேந்திரன் அழைத்த அந்த சீரா என்ற அழைப்பிலேயே முகம் முழுவதும்… புன்னகையில் மின்னவளின் முகம் ஆனது… அடுத்து அடுத்து அவன் பேசிய பேச்சில் பெண்ணவளின் முகமானது அவளின் பெயருக்கு ஏற்றது போலவே வசீகரமாகவே மின்னியது..

அதில்.. “ ஆமாம்… நான் அதை சரியா தான் சொன்னேன்…” என்று சொன்னதுமே பெண்ணவள் சரியாக சொல்லி விட…

ஜெயேந்திரன்… “ தோ அவ்வளவு தான்….” என்று விட்டதும்..

பெண்ணவள்…. “தேங்கஸ்….” என்ற அந்த நன்றியை ஆணவன்..

“வேண்டாம்… எதுக்கு….? நமக்குள்…” என்று எல்லாம் சொல்லாது… அதை ஏற்றுக் கொண்டவன்..

பின்... “ எதுக்கு என் கிட்ட உனக்கு டென்ஷன்….” என்று கேட்டவனிடம்..

“ இல்ல அக்கா உங்க போன் நம்பர் கொடுத்துட்டு பேசினா பார்த்து பேசு என்று சொன்னாங்க… அது தான் நீங்க கூப்பிட்டா எப்படி பேசனும் என்று நான் பிராக்ட்டிஸ் பண்ணிட்டு இருந்தேனா…. அப்போ எல்லாம் செய்யாம இப்போ போன் செய்ததும் எனக்கு கொஞ்சம் பதட்டம் ஆகிடுச்சி… அது தான்….” என்று பெண்ணவள் அக்கா சொன்ன நகையை எல்லாம் விடுத்து இதை மட்டும் சொல்ல..

அங்கு அழைப்பில் இருந்த ஜெயேந்திரனுக்கோ பெண்ணவளின் இந்த பேச்சில் அமைதியாகி விட்டான்..

பின் ஒரு மாதிரி தன்னை நிலைப்படுத்தி கொண்ட பின்… “ நான் கூப்பிடுவேன் என்று ரொம்ப எதிர் பார்த்துட்டு இருந்தியா சீரா…..” என்று கேட்டவனுக்கு பதில் இல்லை..

பெண்ணவளின் அந்த மெளனமே… அவனுக்கு விடையாக ஆக…

இப்போது ஆணவன் தன் நிலையை உணர்த்தினான்…. “உன் கிட்ட என்னால பார்முலா பேச முடியாதுன்னு தான் உனக்கு போன் பண்ணல சீரா….” என்றவனின் பேச்சு பெண்ணவளுக்கு சீராக புரியவில்லை என்றாலும் ஒரளவுக்கு புரிவது போல் இருந்ததினால் ஏன் என்று கேட்கவில்லை…

இவள் கேட்கவில்லை என்றாலும்… சொன்னான்…. “ நான் மனசுல உன்னை பத்தி அந்தரங்கம்மா நினைப்பதை எல்லாம் உன் கிட்ட பேசிடுவோனோ எனக்கு பயமா இருக்கு சீரா….” என்று சொல்லி விட்ட பின்னும்… ஆணவன் விடும் மூச்சு பெண்ணவளின் செவிகளில் தீண்டியதில், இது வரை மனதில் மட்டுமே பெண்ணவளுக்கு வந்த மாற்றம் உடல் அளவிலும் ரசாயன மாற்றம் ஆக… அதில் ஒன்றும் பேசாது போக..

இப்போது ஜெயேந்திரன் கொஞ்சம் தெளிந்து விட்டான் போல… “ பயந்திட்டியா… சாரி சீரா…” என்ற அவனின் மன்னிப்பில்..

பெண்ணவள்… “ பரவாயில்லை…” என்றாலுமே… சிறிது நேரம் இருவரும் ஒன்றும் பேசாது அங்கு அமைதி மட்டுமே ஆட்சி புரிந்து கொண்டு இருந்த சமயம்…

இங்கு ஜெயேந்திரனின் அம்மா குரலில் கேட்ட… “ என்ன கேட்டிட்டியா ஜெய்… அண்ணன் வேனுக்கு சொல்லனும் என்று கேட்கிறான்….” என்ற பேச்சும்….

அதற்க்கு ஜெய்… “ தோம்மா பேசிட்டு சொல்றேன்… அதுக்கு ஏன் மாடி ஏறி வந்திங்க…?” என்ற பதிலும் பெண்ணவளுக்கு கேட்டது..

பின் சிறிது நேரம் கழித்து.. அதாவது ஜெய் அம்மா கீழே போகும் நேரம் கடந்த பின்… “ இல்ல எங்க வீட்டுல உங்க வீட்டவங்க கிட்ட புடவை நகை வாங்க நாள் பாருங்க என்று கேட்டு இருந்தாங்கலாம்…. ஆனா உங்க வீட்டில் நாள் மட்டும் இல்லாம நகை கடை, புடவை கடையையும் சேர்த்து சொல்லி இருக்காங்க… அங்கு தான் உங்க அக்காவுக்கு எடுத்ததாம்… அங்கு தான் நல்லா இருக்கும்.. பிராண்டா இருக்குமுன்னு…. “என்று சொல்லி கொண்டு கொண்டு வந்த ஜெயேந்திரன்..

பின்.. “ உனக்குமே அங்கு தான் எடுக்க ஆசையா…?” எனும் போதே….

வசீகரா… “ இல்ல இல்ல அப்படி எல்லாம் இல்ல…” என்று விட்டாள்…

பெண்ணவளின் இந்த பதில் ஜெயேந்திரனுக்கு உண்மையில் ஒரு பெரிய ஆசுவாசத்தை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்..

அதில் தன்னால் அவனுக்கு ஒரு நிம்மதி பெரும் மூச்சு வந்தது.. பின் அவனே….

“உனக்குமே அங்கு தான் எடுக்க விருப்பமோ என்று நினச்சிட்டேன் சீரா…. அப்படி இருந்தா என்ன செய்யிறது என்று ஒரு குழப்பம்….”

ஜெயேந்திரனின் இந்த பேச்சுக்கு வசீகரா ஏன் என்று கேட்கவில்லை… ஆனால் பெண்ணவள் கேட்காமலேயே ஜெயேந்திரன்…

“எங்க இரண்டு அண்ணிங்களுக்கும்… புடவை காஞ்சிப்புரத்தில் எங்களுக்கு தெரிஞ்ச பட்டு புடவை கடை இருக்கு சீரா அங்கு தான் எடுத்தது.. நகையுமே…. டி. நகரில் ஒரு நகை கடை பெயர் சொன்னவன் அங்கு தான் எடுத்தது…

உனக்கு மட்டும் வேறு ஒன்றில் அதுவும் இவ்வளவு காஸ்லியான கடையில் எடுத்தால், அண்ணிங்க நல்லவங்க தான் சீரா… ஆனா எங்க வீட்டுக்கு வந்த நல்லவங்களை எப்போதும் நல்லவங்களாவே வெச்சிக்கிறது நம்ம கையிலுமே இருக்குலே…. என் அம்மா இதுல எல்லாம் ரொம்ப ஸ்டிட் சீரா… எல்லோரையும் ஒரே போல தான் பார்க்கனும்… அதுல ரொம்ப தெளிவா இருப்பாங்க…” என்றவனின் பேச்சில் பெண்ணவள்… சொன்ன.

“ஆமாம் எல்லோரையும் ஒரே போல் தான் நடத்தனும்.. இரண்டு அண்ணிங்களுக்கு எடுத்த கடையிலேயே எனக்கும் எடுத்துடலாம்… அதே போல் விலையும் அதே தான்…” என்று விட்டாள்…

இதோ அதன் படி இன்று ஜெயேந்திரன் வீட்டவர்கள் சொன்ன கடையான காஞ்சிபுரத்திற்க்கு புடவை எடுத்து கொண்டு எப்படியே வரும் வழியில் அவர்கள் சொன்ன நகை கடையில் நகை எடுத்து கொண்டு வருவதற்க்கு ஒரு நிறைவான மனதுடன் கிளம்பி கொண்டு இருக்கின்றாள்..

அவள் மனது எந்த அளவுக்கு நிறைந்த மனதாக இருக்கிறது என்றால், அவளின் அக்கா சொன்ன..

“ம்மா இப்படியா கஞ்ச தனம் பண்ணுவாங்க…. பார்த்தும்மா எங்க இரண்டு மருமகளுக்கும் பட்டு எடுக்கல காட்டன் தான் எடுத்தோம் என்று சொல்லிட போறாங்க… அதனால நீங்களுமே உங்க கார்டை கொண்டு வாங்க… அவங்க காட்டன் புடவை வாங்கினால் நாமாவது நம் மரியாதையை தக்க வைக்க பட்டு புடவை எடுக்கலாம்…” என்ற வார்த்தைகள் எல்லாம் அவள் மனதில் துளி கூட பாதிக்கவில்லை…

இரண்டு காரில் ஜெயேந்திரன் வீட்டவர்கள் சொன்ன பட்டுக்கடைக்கு வசீகரா வீட்டவர்கள் வந்து விட்டனர்… வசீயின் அப்பா பார்த்திபன்.. தன் கைய் பேசியில் மாப்பிள்ளை வீட்டவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முனையும் முன்பே ஒரு வேன் அவர்கள் முன் வந்து நின்றது..

யாரோ என்று நினைத்து பார்த்திபன் கோதண்ட ராமனுக்கு அழைக்க… அந்த அழைப்பில் இருந்து இறங்கிய கோதண்ட ராமன் சட்டை பையில் இருந்த போன் இசைக்க… அப்போது தான் சம்மந்தி வீட்டவர்கள் வாடகைக்கு அமர்த்தி வந்த வேன் என்பது பார்த்திபனுக்கு புரிந்தது..

என்ன இது .. சொந்தமாக கார் கூட இல்லையா….? அட்லீஸ்ட் வாடகை எடுத்தது காராவது எடுத்து இருக்கலாமே என்று மனதில் நினைத்தாலும், அதை முகத்தில் கூட காட்டாது சம்மந்தி வீட்டவர்களை இன்முகமாக தான் வர வேற்றது..

ஆனால் கீர்த்தனா அந்த வேனை பார்த்ததுமே… முகம் அப்படியே நொடியில் மாறி விட்டது… பக்கத்தில் நின்று கொண்டு இருந்த சுபத்ராவிடம்..

“நல்ல வேலை உங்க மாப்பிள்ளை வரல.. பசங்களையும் என் கூட அனுப்பி விடல… அவங்க பார்க்கும் சிக்கனத்திற்க்கு சாப்பாடு ரோடு கடையில் கூட வாங்கி கொடுத்து உங்களை அனுப்பி விடுவாங்க… அந்த சாப்பாடு எல்லாம் நம்ம குழந்தைக்கு ஒத்துக்காது என்று அவர் வெச்சிட்டது கூட ஒரு வகையில் நல்லதுக்கு தான்…” என்று சொன்ன பெரிய மகளின் பேச்சை சுபத்ரா எதிர்த்து பேசவில்லை..

அவருக்குமே தன் சின்ன மகளின் கல்யாண விசயத்தில் அவசரப்பட்டு விட்டோமோ… என்று தான் நினைக்க தோன்றியது…

அன்னையின் எண்ணத்திற்க்கு எதிர் பதமான நிலையில் சீரா… ஜெயேந்திரன் அந்த வேனில் இருந்து இறங்கிய அழகில் மெய் மறந்து நின்று விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்..

அதுவும் வேன் படிக்கட்டில் கால் வைக்கும் போது வசதியாக அவன் அணிந்திருந்த அந்த வேட்டியின் நுனியை இரு விரல் கொண்டு பிடித்து இறங்கிய அந்த அழகில் மெய் மறந்து நின்றாலுமே, பெண்ணவள் மனதில் இவனுக்கு தான் சரியான இணையா என்று எண்ண தோன்றியது..

அந்த எண்ணம் எல்லாம் அவன் வேனை விட்டு இறங்கியதும் அவன் கண்கள் அலைபாய்ந்த விதமும்.. தன்னை பார்த்தும்.. பெண் பார்க்க வந்த அன்று பார்த்த பார்வை போலவே இன்றும் அவளை பார்த்த அந்த பார்வையில் மறைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..

அதுவும் அவள் உடுத்தி வந்த புடவையின் நிறமாகவே டார்க் ப்ளூ நிறத்திலான சட்டையில் ஆணவனை பார்த்ததும்.. நான் தான் இவனுக்கு இணை… என்று நினைத்து கொண்டாள்..



பெண் வீட்டார்களின் அந்த எண்ணம் எல்லாம் கூட அந்த கடைக்குள் போகும் வரை தான். போன பின்.. அத்தனை ரகவாரியான புடவைகள்.. அதுவும் புதிய வகையான நிறத்தில்.. பார்டரும் உடலில் இருக்கும் நிறத்தின் தோதாக இருந்த அந்த பட்டு புடவைகளின் நிறம். அதில் இருந்த டிசைன்… மிகவும் நுட்பமான வேலைப்பாடுகளின் அழகில்… சுபத்ரா கீர்த்தனா கூட இரண்டு புடவைகளை எடுத்து கொண்டனர்…

இருந்தும்… தொட்டில் பழக்கம் விடாது போல் சுபத்ரா தான்… வசீக்கு வாங்கி கொடுத்த புடவையில் விலையை பார்த்து..

“ என்ன இது இருபத்தி ஐந்தாயிரத்தில் எடுக்குறிங்க… நான் என் பெரிய பொண்ணுக்கு தீபாவளிக்கே இந்த விலையில் தான் எடுத்து கொடுப்பேன்…” என்றவரின் இந்த பேச்சில்..

ஜெயேந்திரனுக்கு இத்தனை நேரம் பெண்ணவளின் அருகில் நின்று கொண்டு ஒவ்வொரு புடவையாக அவள் மீது போட்டு பார்த்து அவளுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்று பார்க்கும் சாக்கில் தன்னவளை முழுமையாக எந்த வித இடையூறும் இல்லாது ரசித்து கொண்டும்.. இருவருக்கும் பிடித்தது போலவே மூன்று புடவைகள்… இருபத்தி ஐந்தாயிரத்தில் ஒன்று பதினைந்து ஆயிரத்தில் ஒன்று பத்தாயிரத்தில் ஒன்று என்று அனைத்துமே எடுத்து முடித்து இருந்த அந்த மனநிறைவு துணி போல் துடைத்தது போலான நிலைக்கு வந்தவனின் வார்த்தைகள்…

“இப்போ நடக்க இருப்பது எங்க கல்யாணம் அத்தை நீங்க இதை அப்போ அப்போ மற்ந்து விடுறிங்க….” என்று சூடாக பதில் அளித்தவன்..

பின் தன் வீட்டவர்களை பார்த்து.. “ ம்மா நகை அப்புறம் வாங்கி கொள்ளலாம்…” என்று விட்டான்…


 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
227
ஏம்மா சுப்பு நீ என்ன கீர்த்திக்கு இரண்டாம் கல்யாணமா செய்யுற ☹️ ☹️ ☹️ அவ முதல் புருஷன் இது எல்லாம் செஞ்சான் அதனால் நீயும் இதெல்லாம் செய்யுங்கிறதுக்கு 😵😵😵😵😵😱

வசீகரா 😀😀😀 சீக்கிரம் இந்த கும்பல் கிட்ட இருந்து இவளை காப்பாத்தி ஜெய் வீட்டில் செட்டில் பண்ணிடுங்க😑😑😑
 
Last edited:
Active member
Joined
May 12, 2025
Messages
30
பொண்ணுக்கு கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு விரும்புதா இல்லையா சுபத்ரா. கூடவே கீர்த்தனாவும். இவங்க வாயை மூடினால் சந்தோஷமா இருக்கும்
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
258
கீர்த்தனா தான் பொறாமையில பண்றானா சுபத்ரா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ஜெய் டென்ஷன் ஆகாத..... கல்யாணம் முடியற வரை இந்த இம்சைகளை சமாளிச்சு தான் ஆகணும்..... 😬😬😬😬

கீர்த்தனா அவ புருஷன் அம்மா எல்லாம் பல்பு வாங்குற மொமெண்ட்க்காக தான் வெயிட்டிங்....
 
Well-known member
Joined
May 11, 2024
Messages
205
ஜெய் மன சங்கடங்களை தவிர்க்க நினைத்து இருப்பான் போல நகை பிறகு எடுக்கலாம் சொல்லி 🌺🌺🌺🌺
 
Top