Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Paniyum Pathikume....7 teesar

  • Thread Author
அத்தியாயம்….7

ஜெயேந்திரன் தன் முகத்திற்க்கு நேராக இப்படி பேசுவான் என்பதை சுபத்ரா எதிர் பார்க்கவில்லை.. அதிலும் ஜெயேந்திரனின் இந்த பேச்சில் பார்த்திபன் தன் மனைவியை முறைத்தும் வைக்க…. சுபத்ராவுக்கு அமைதியாக இருப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை..

இருந்துமே தன் பெரிய மகளை பார்த்தார்.. அவள் ஏதாவது தனக்கு ஆதரவாக பேசுவாளா என்று நினைத்து… ஆனால் அவளின் பேச்சுக்கள் கிண்டல் கேலி எல்லாம் இந்த கடையின் உள் நுழைந்ததுமே நின்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..

ஆம் நின்று விட்டது தான். சுபத்ராவுமே அனைத்திற்க்கும் கீர்த்தனாவின் திருமணத்திற்க்கு எடுத்தது செய்தது என்று தொடர்பு படுத்தி இதோ சற்று நேரத்திற்க்கு முன் கூட பேசினார் தான்..

அதே போல் தான் கீர்த்தனாவுமே இதோ இப்போது கூட தன் திருமணத்திற்க்கு புடவை எடுக்க வந்த நாள் அவள் கண் முன் வந்து நின்றது..

ஆனால் வேறு மாதிரியாக… இது போல் சின்ன கடை இல்லாது பெரிய கடை தான்.. அதே போல் கிஷோர் எடுத்த உடனே…

“ ஒரு லட்சத்திற்க்கு மேல காட்டுங்க….” என்று விட்டான்… உடனே அந்த கடைக்கார் தங்களை பார்த்த மரியாதையான பார்வை நடத்திய விதம் என்று அனைத்துமே நல்ல மாதிரியாக தான் இருந்தது..

ஆனால் ஆனால் கிஷோர் விலை சொன்னதோடு சரி… அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு தன் கை பேசியில் மூழ்கி விட்டான்..

பார்த்து பார்த்து இவளே சிறிது நேரம் கழித்து கிஷோரிடம் சென்று…. “கிஷோர் நீங்க கொஞ்சம் எல்ப் செய்யேன்…” என்று கேட்டும் கூட.

கை பேசியில் இருந்து நிமிர்ந்து இவளை பார்த்தவன்… “ எனக்கு சேரி பத்தி எல்லாம் என்ன தெரியும் கீத்து…?” என்று கேட்டவன் பின்…

“வந்து ஒன் அவர் ஆச்சு இன்னுமா செலக்ட் செய்யல… சீக்கிரம் எடு கீர்த்து… அம்மா இன்னைக்மே நகையும் எடுத்துடனும் என்று சொல்றாங்க… இதுக்கு எல்லாம் நான் எதுக்கு என்று சொன்னாலும் கேட்கல….” என்று பட பட என்று பேசியவனின் கை பேசிக்கி அழைப்பு வர..

பின் அதை ஏற்றுக் கொண்டே… தன்னை பார்த்து… சீக்கிரம் எடு என்று ஜாடையில் சொல்லி விட்டு பேசியின் அழைப்பை தொடர்ந்தவனை ஒரு நிமிடம் பார்த்தவள்..

பின் அவன் சொன்னது போலவே விரைந்து எடுத்து விட்டாள் ஒன்னரை லட்சத்திற்க்கு புடவை எடுத்து அவனை பழ தீர்த்து கொள்வதாக நினைத்து கொண்டு எடுக்க.

அவனோ… இந்த பணம் எல்லாம் எனக்கு ஒரு பெரிய விசயமே இல்லை என்பது போல் பணம் கட்டும் போது…

“இன்னும் சேரி எடுக்கனும் என்றால் எடுத்துக்கோ கீர்த்து…. என்னால திரும்ப திரும்ப எல்லாம் வர முடியாது….” என்று விட்டவனின் இந்த பேச்சில்,

கீர்த்தனா நகை கடையில் அவனை எதிர் பார்க்கவும் இல்லை.. அதே போல் அவனை பழி தீர்க்க பணத்தை விரையம் ஆக்கலாம் என்றும் எந்த முனைப்பும் செய்யவில்லை… காரணம் கிஷோர் நகை கடையிலுமே…

எடுத்த உடன்.. “ஹான்டிக் ஜூவல்லரி எடு…” என்று விட்டான். அதனால் தனக்கு பிடித்த மாதிரி முப்பது சதவீதம் சேதாரள் உள்ள நகைகளை தான் கீர்த்தனா தேர்வு செய்தது…

இது போலான தன் நாளையும் இன்று தன் தங்கை அவளின் திருமணத்திற்க்கு உண்டான புடவை எடுக்கும் போது ஜெயேந்திரனும் தன் தங்கையும் சேர்ந்து எடுத்த விதத்தையும் பார்த்து…. ஏதோ ஒன்று அவளுக்கு தன் வாழ்க்கையில் குறைவதாக அவள் உணர்ந்தாள்…

கிஷோர் ஆடம்பரத்திற்க்கு முக்கியத்தும் கொடுக்கும் அளவிற்க்கு காதலுக்கு முக்கியத்தும் கொடுக்காதவன்… பாவம் கீர்த்தனாவுக்கு இப்போதும் அது என்ன குறை என்பது தெரியாது தான்… வாய் வழியாக அதிகம் பேசா விட்டாலும், அவ்வப்போது ஒருவர் ஒருவரை பார்த்து கொண்டு இருக்கும் ஜெயேந்திரனையும் வசீகராவையும் பார்த்து கொண்டு இருந்ததால், தன் அன்னையின் பார்வையை கவனிக்க மறந்தாள்…

ஆனால் ஜெயேந்திரனின் சொன்ன.. இன்னொரு நாள் நகை எடுத்து கொள்ளலாம் என்ற பேச்சை கெளசல்யா ஒத்து கொள்ளவில்லை…

“ஜெய்… மாப்பிள்ளைங்க அண்ணனுங்க… லீவ் போட்டு வந்து இருக்காங்க.. ஒரே முட்டா இன்னைக்கே முடிச்சிக்கலாம்… இன்னொரு நாள் என்றால் நல்ல நாள் பார்க்கனும்.. இவங்க லீவும் போடனும்.. திரும்ப வேன்.. என்று அது வேறு ஒரு செலவு….” என்று விட்டார்…

இது தான் கெளசல்யா. அனைத்தும் பார்த்து தான் செய்வார்…

சுபத்ராவுக்கு ஜெயேந்திரனின் பேச்சு பிடிக்காதது போல் தான் கெளசல்யாவின் இந்த பேச்சும் பிடிக்கவில்லை… இருந்தும் கணவனின் பார்வையில் அமைதியாகி விட்டார்..

பின் போகும் வழியில் இவர்களின் வேனை கார் பின் தொடர ஒரு ஓட்டலில் நிறுத்தினர்.. அந்த ஓட்டலும் பார்க்க ஆடம்பரமாக இல்லா விட்டாலும், தூய்மையாக இருந்தது… அதே போல் சுவையாகவுமே இருந்தது.. சுபத்ரா தான் வாயை திறக்க போவதே சாப்பிட மட்டும் தான் என்று இருந்தார்..

கீர்த்தனாவின் பார்வை இங்குமே வசீகரா ஜெயெந்திரனை தான் தொடர்ந்தது…
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
258
கீர்த்தனா பார்வை அவ வாழ்க்கையை நல்லவிதமா மாத்தினா சரி தான்.... கல்யாணம் முடியுற வரை அமைதியா இப்படியே பார்த்துக்கிட்டே இரு 🤭🤭🤭
 
Top