Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Paniyum Pathikume....7

  • Thread Author
அத்தியாயம்….7

ஜெயேந்திரன் தன் முகத்திற்க்கு நேராக இப்படி பேசுவான் என்பதை சுபத்ரா எதிர் பார்க்கவில்லை.. அதிலும் ஜெயேந்திரனின் இந்த பேச்சில் பார்த்திபன் தன் மனைவியை முறைத்தும் வைக்க…. சுபத்ராவுக்கு அமைதியாக இருப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை..

இருந்துமே தன் பெரிய மகளை பார்த்தார்.. அவள் ஏதாவது தனக்கு ஆதரவாக பேசுவாளா என்று நினைத்து… ஆனால் அவளின் பேச்சுக்கள் கிண்டல் கேலி எல்லாம் இந்த கடையின் உள் நுழைந்ததுமே நின்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..

ஆம் நின்று விட்டது தான். சுபத்ராவுமே அனைத்திற்க்கும் கீர்த்தனாவின் திருமணத்திற்க்கு எடுத்தது செய்தது என்று தொடர்பு படுத்தி இதோ சற்று நேரத்திற்க்கு முன் கூட பேசினார் தான்..

அதே போல் தான் கீர்த்தனாவுமே இதோ இப்போது கூட தன் திருமணத்திற்க்கு புடவை எடுக்க வந்த நாள் அவள் கண் முன் வந்து நின்றது..

ஆனால் வேறு மாதிரியாக… இது போல் சின்ன கடை இல்லாது பெரிய கடை தான்.. அதே போல் கிஷோர் எடுத்த உடனே…

“ஒரு லட்சத்திற்க்கு மேல காட்டுங்க….” என்று விட்டான்… உடனே அந்த கடைக்காரர் தங்களை பார்த்த மரியாதையான பார்வை நடத்திய விதம் என்று அனைத்துமே நல்ல மாதிரியாக தான் இருந்தது..

ஆனால் ஆனால் கிஷோர் விலை சொன்னதோடு சரி… அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு தன் கை பேசியில் மூழ்கி விட்டான்..

பார்த்து பார்த்து இவளே சிறிது நேரம் கழித்து கிஷோரிடம் சென்று…. “கிஷோர் நீங்க கொஞ்சம் எல்ப் செய்யேன்…” என்று கேட்டும் கூட.

கை பேசியில் இருந்து நிமிர்ந்து இவளை பார்த்தவன்… “ எனக்கு சேரி பத்தி எல்லாம் என்ன தெரியும் கீத்து…?” என்று கேட்டவன் பின்…

“வந்து ஒன் அவர் ஆச்சு இன்னுமா செலக்ட் செய்யல… சீக்கிரம் எடு கீர்த்து… அம்மா இன்னைக்கே நகையும் எடுத்துடனும் என்று சொல்றாங்க… இதுக்கு எல்லாம் நான் எதுக்கு என்று சொன்னாலும் கேட்கல….” என்று பட பட என்று பேசியவனின் கை பேசிக்கி அழைப்பு வர..

பின் அதை ஏற்றுக் கொண்டே… தன்னை பார்த்து… சீக்கிரம் எடு என்று ஜாடையில் சொல்லி விட்டு பேசியின் அழைப்பை தொடர்ந்தவனை ஒரு நிமிடம் பார்த்தவள்..

பின் அவன் சொன்னது போலவே விரைந்து எடுத்து விட்டாள் ஒன்னரை லட்சத்திற்க்கு புடவை எடுத்து அவனை பழ தீர்த்து கொள்வதாக நினைத்து கொண்டு எடுக்க.

அவனோ… இந்த பணம் எல்லாம் எனக்கு ஒரு பெரிய விசயமே இல்லை என்பது போல் பணம் கட்டும் போது…

“இன்னும் சேரி எடுக்கனும் என்றால் எடுத்துக்கோ கீர்த்து…. என்னால திரும்ப திரும்ப எல்லாம் வர முடியாது….” என்று விட்டவனின் இந்த பேச்சில்,

கீர்த்தனா நகை கடையில் அவனை எதிர் பார்க்கவும் இல்லை.. அதே போல் அவனை பழி தீர்க்க பணத்தை விரையம் ஆக்கலாம் என்றும் எந்த முனைப்பும் செய்யவில்லை… காரணம் கிஷோர் நகை கடையிலுமே…

எடுத்த உடன்.. “ஹான்டிக் ஜூவல்லரி எடு…” என்று விட்டான். அதனால் தனக்கு பிடித்த மாதிரி முப்பது சதவீதம் சேதாரம் உள்ள நகைகளை தான் கீர்த்தனா தேர்வு செய்தது…

இது போலான தன் நாளையும் இன்று தன் தங்கை அவளின் திருமணத்திற்க்கு உண்டான புடவை எடுக்கும் போது ஜெயேந்திரனும் தன் தங்கையும் சேர்ந்து எடுத்த விதத்தையும் பார்த்து…. ஏதோ ஒன்று அவளுக்கு தன் வாழ்க்கையில் குறைவதாக அவள் உணர்ந்தாள்…

கிஷோர் ஆடம்பரத்திற்க்கு முக்கியத்தும் கொடுக்கும் அளவிற்க்கு காதலுக்கு முக்கியத்தும் கொடுக்காதவன்… பாவம் கீர்த்தனாவுக்கு இப்போதும் அது என்ன குறை என்பது தெரியாது தான்… வாய் வழியாக அதிகம் பேசா விட்டாலும், அவ்வப்போது ஒருவர் ஒருவரை பார்த்து கொண்டு இருக்கும் ஜெயேந்திரனையும் வசீகராவையும் பார்த்து கொண்டு இருந்ததாள்… அதனால் தன் அன்னையின் பார்வையையும் கவனிக்க மறந்தாள்…

ஆனால் ஜெயேந்திரனின் சொன்ன.. இன்னொரு நாள் நகை எடுத்து கொள்ளலாம் என்ற பேச்சை கெளசல்யா ஒத்து கொள்ளவில்லை…

“ஜெய்… மாப்பிள்ளைங்க அண்ணனுங்க… லீவ் போட்டு வந்து இருக்காங்க.. ஒரே முட்டா இன்னைக்கே முடிச்சிக்கலாம்… இன்னொரு நாள் என்றால் நல்ல நாள் பார்க்கனும்.. இவங்க லீவும் போடனும்.. திரும்ப வேன்.. என்று அது வேறு ஒரு செலவு….” என்று விட்டார்…

இது தான் கெளசல்யா. அனைத்தும் பார்த்து தான் செய்வார்…

சுபத்ராவுக்கு ஜெயேந்திரனின் பேச்சு பிடிக்காதது போல் தான் கெளசல்யாவின் இந்த பேச்சும் பிடிக்கவில்லை… இருந்தும் கணவனின் பார்வையில் அமைதியாகி விட்டார்..

பின் போகும் வழியில் இவர்களின் வேனை கார் பின் தொடர ஒரு ஓட்டலில் நிறுத்தினர்.. அந்த ஓட்டலும் பார்க்க ஆடம்பரமாக இல்லா விட்டாலும், தூய்மையாக இருந்தது… அதே போல் சுவையாகவுமே இருந்தது.. சுபத்ரா தான் வாயை திறக்க போவதே சாப்பிட மட்டும் தான் என்று இருந்தார்..

கீர்த்தனாவின் பார்வை இங்குமே வசீகரா ஜெயெந்திரனை தான் தொடர்ந்தது… இங்குமே இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை.. ஆனால் ஒருவரின் விருப்பம் அறிந்து கொள்வதில் இருவருமே முனைப்புடன் இருப்பதும்…

மற்றவர்களின் இலையில் காலியான ஐட்டத்தை கவனித்து… சர்வரை அழைத்து வைக்க சொல்வதையுமே பார்த்தவளுக்கு மீண்டுமே தன் திருமணத்திற்க்கு இது போல் இல்லாது ஸ்டார் அந்தஸ்த்து கொண்ட ஓட்டலில் உணவு உண்டது..இது போல் அல்லாது விலைக்கு முக்கியத்துவம் கொடுத்து.,…

“இது இங்கு காஸ்லி சாப்பிடு…” தனக்கு பிடிக்காத உணவை தன் தட்டில் வைத்த கிஷோரையுமே அவள் மனது எடைப்போட்டு கொண்டு இருந்தது…

ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து விட்டதும்.. கோதண்ட ராமன் பார்த்திபனிடம்..நகை கடை சொல்லி..

“அங்கு வந்துடுங்க… தொடர்ந்தார் போல வருவது எல்லாம் ட்ரைவருக்கு பிரச்சனையா இருக்கும்… “ என்று சொல்லி விட்டு வேனில் ஜெயேந்திரன் குடும்பம் எறிக் கொண்டது..

தங்கள் காரில் கணவனின் பக்கத்தில் அமர்ந்த சுபத்ரா … “ ஆமா போவது ஆடி கார்.. அது ஆடாம தான் போகனும்… வருவது வேன்…எனக்கு அசிங்கம்மா இருக்கு….” என்று மூத்த சம்மந்திற்க்கு துளி கூட இணையாக இல்லாத இந்த சம்மந்தம்.. சுபத்ராவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை..

இப்போது தந்தை அன்னையை அடக்கும் முன்பு வசீகரா வாயை திறந்தாள்…

“ம்மா இத்தனை பேருக்கு எல்லாம் எந்த காரும் வைத்தாலும் பத்தாது…” என்றதும் சுபத்ரா..

“மூன்று நாளு கார் வைக்கனும்.. அப்படி வைத்தால் பணம் அதிகம் ஆகும்லே… அது தான் இந்த வேனுக்கே அந்த அம்மா சொன்னாங்கலே…. இன்னைக்கே நகையை வாங்கிடலாம்.. மாப்பிள்ளைங்க பையனுங்க வேலை லீவ் போடனும்… அப்புறம் திரும்ப வர போற அந்த வேன் செலவு என்று… அந்த மாப்பிள்ளைங்க எல்லாம் கூலி வேலை பார்ப்பாங்க போல.. போகலேன்னா சம்பளம் கட் ஆகிடும்லே …” என்று இன்னுமே சுபத்ரா ஜெயேந்திரனின் குடும்பத்தை கீழே இறக்கி தான் பேசினார்.

வசீகரா.. “ம்மா குடும்பமா ஒன்னா வர நினச்சி இருக்காலம் தானேம்மா… அதோடு பணத்தை பார்த்து செலவு பண்றது ஒன்னும் அவ்வளவு தப்பான விசயம் இல்லை தானே…” என்று கேட்டாள்..

இப்போது சுபத்ராவுக்கு சின்ன சம்மந்தி வீட்டவர்கள் மீது இருந்த கோபம் தன் சின்ன மகள் மீது திரும்பியது..

“என்ன டி இப்போதே மாமியார் வீட்டு பக்கம் பேசுற…. இன்னும் அவங்களை பத்தி ஒன்னும் தெரியாது… பார்த்து நடந்துக்க…” என்று வசீகராவை அடக்கினார்..

வசீகராவுக்கு ஜவுளி கடையிலும் சரி உணவகத்திலும் சரி ஜெயேந்திரன் வீட்டவர்கள் தன்னிடம் அன்பாக பேசியது பிடித்து இருந்தது.. அனைவரும் நல்ல மாதிரியாக தான் அவளுக்கு தோன்றியது…

அன்னையாக இருந்தாலுமே இது போல் அவர்களை பற்றி பேசுவது சுத்தமாக அவளுக்கு பிடிக்கவில்லை… அதனால்… “ பணம் மட்டுமே வைத்து எல்லாம் பார்த்தால் உங்க கண்ணுக்கு அவங்க கெட்டவாங்கலா தான் தெரிவாங்க…” என்று விட்டாள்..

உடனே சுபத்ரா… தன் கணவனிடம்.. “ பார்த்திங்கலாங்க பார்த்திங்கலா…. உங்க சின்ன பொண்ணு என்ன பேசுறா என்று…” சொல்லவும்.

பார்த்திபன்.. “தோ பார் சுபத்ரா.. நீ ரொம்ப பண்ற… என்ன தான் இருந்தாலும், அவங்க மாப்பிள்ளை வீட்டவங்க…. நாளைக்கு நீ பேசுனதை வைத்து அங்கு நம்ம பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனை வரலாம் என்று உனக்கு அந்த பயம் கூட இல்லையா…” என்று கேட்டவர்..

பின் .. “ கல்யாணம் வரை நீ வாயை திறக்க கூடாது…” என்று சொன்னவர். கல்யாணம் பின்னும் கூட நீ வாயை திறக்க கூடாது என்று சொல்லி இருக்கலாம்..

சுபத்ராவுக்குமே கணவனின் இந்த பேச்சு யோசிக்க வைத்தது. கூடவே எப்போதும் தன் பேச்சுக்கு இணைந்து பேசும் பெரிய மகளின் அமைதியுமே சுபத்ராவுக்கு வாய் அடைக்க வைத்தது..

பார்த்திபனின் கார் கோதண்ட ராமன் சொன்ன நகை கடை முன் வந்து நிற்க.. இந்த முறை இவர்களுக்கு முன் வேன் நின்று விட்டது..

அதனால் ஜெயேந்திரனின் குடும்பம் இவர்களுக்காக அந்த நகை கடை வாசலில் காத்து கொண்டு இருந்தனர்.. ஜெயேந்திரன் தான் கார் வந்து நின்றதும் காரின் அருகில் வந்து வசீகரா அமர்ந்திருந்த பக்கம் காரை திறந்து விட்டு… அவள் இறங்க வசதியாக அவள் கையில் இருந்த கை பையை வாங்கி கொண்டவனை பார்த்து லேசாக புன்னகை சிந்தியப்படி இறங்கிய வசீகராவின் முகத்தில் அத்தனை ஒரு பொலிவு…

அதுவும் அவள் ஒரு காலை கீழே வைக்கும் போது புடவையும் நுனி பாதத்தில் மாட்டி விட இன்னொரு கால் எடுத்து வைக்க வசீகரா தடுமாறும் போது தன் இன்னொரு கை கொண்டு அவள் கை பிடித்து கொண்டவன்..

“பார்த்து சீரா…” என்று சொல்ல.

அதை கேட்ட ஜெயந்திரன் குடும்பத்தில் இருக்கும் அவனின் அண்ணா அண்ணி அக்கா மாமாக்கள்..

“பார்த்தும்மா பார்த்து..” என்று கிண்டலும் கோரசாக இசைப்பாட… அவனின் பெரிய மாமா..

தன் கை பேசியில் இந்த காட்சியை படம் பிடிக்க என்று பார்க்க அத்தனை ரம்மியமாக இருந்தது. இந்த முறை கீர்த்தனாவின் முகத்தில் லேசாக பொறாமையின் சாயல்..இது வரை அவளுக்கு மட்டுமே அனைத்திலும் பெஸ்ட்டாக கிடைத்து வந்தது… அது கொடுத்த நிறைவில் அவள் முகத்தில் எப்போதுமே ஒரு புன்னகை நிறைந்து இருக்கும்..

ஆனால் வசீகராவின் முகத்தில் எப்போதுமே ஒரு அழுத்தம் மட்டுமே இருக்கும்.. அதை வைத்து அவளின் அம்மா கூட.

“ஏன்டி இப்படி முகத்தை உம் என்று வைத்து இருக்க…” என்று கூட கேட்பார்.. வசீகராவின் அந்த அழுத்தத்தை கீர்த்தனா அவளுக்கு தன் மீது பொறாமை என்று தான் நினைத்து கொள்வாள்.. அதை அவ்வப்போது அனைவரின் முன்பும் சொல்லவும் செய்வாள்…

அதாவது,.. அவள் பள்ளியில் முதல் வந்தால், கேம்பஸில் செலக்ட் ஆகி வேலை கிடைக்கும் போது… அவளுக்கு திருமணம் நிச்சயம் ஆன போது என்று இவள் சிரித்துக் கொண்டே..

“வசீ ஏன் இப்படி நீ என் எந்த ஹாப்பி மூமெண்டிலும் இப்படி உம் என்று இருக்க…நீயுமே நாங்க எடுத்த படிப்பை எடுத்து படிச்சி இருந்தா… உனக்குமே என்னை போல வேலை கிடைத்து இருக்கும்…” என்று சொல்லி தன் மீது இருக்கும் பொறாமையினால் தான் அவள் இப்படி இருப்பது போல் சொல்லி விடுவாள்..

அவளின் அந்த அழுத்த முகத்திற்க்கு காரணம். பெரிய மகள் மார்க் வாங்கினாலே… சின்ன மகளிடம்.

“பாரு. அத்தனை பெரிய காலேஜில் அவள் பஸ்ட் வந்து இருக்கா. ஆனா நீ கவர்மெண்ட் ஸ்கூல்ல தமிழ் மீடியம் படிச்சிட்டு இருக்க… இது எங்களுக்கு எத்தனை அசிங்கம் தெரியுமா…?” என்று சொல்லி..

இது போல் தான் கீர்த்தனா செய்யும் ஒவ்வொன்றுக்குமே வசீகராவை இழுத்து விடுவார் சுபத்ரா… அப்போது எங்கு இருந்து வசீகராவின் முகத்தில் புன்னகை வரும்.. அழுத்தம் மட்டும் தான் இருக்கும்…

ஆனால் இன்று அதற்க்கு எதிர் பதமாக வசீகராவின் முகத்தில் புன்னகை மிளிர்ந்து கொண்டு இருக்க…. கீர்த்தனா தங்கையை பற்றி மற்றவர்களிடம் பிரதிபலிக்க வைக்க நினைத்த அந்த பொறாமை உணர்வு கீர்த்தனாவின் முகத்தில் இன்று முதன் முதலாக காணப்பட்டது..
ஆம் முதன் முதலாக தான்.. இது வரை தங்கையை பார்த்து எந்த ஒரு விசயத்திலும் அவள் பொறாமை பட்டது கிடையாது..

தான் அவளை பார்த்து பொறாமை படும் அளவுக்கு அவளிடம் ஒன்றும் இல்லை என்பது தான் அவளின் எண்ணம்.. ஆனால் இன்று…

கீர்த்தனா விடாது வசீகராவையும் ஜெயேந்திரனையுமே பார்த்து கொண்டு இருக்க… இதை கவனித்த சுபத்ரா கீர்த்தனாவின் தோள் பற்றி…

“என்ன கீத்து….” என்று கேட்டார்..

“ஒன்னும் இல்லேம்மா….?” என்று சொன்ன மகளை பார்த்து..

“அப்போ ஏன் உன் முகம் ஒரு மாதிரியா இருக்கு….? வசீயையும் அவரையும் ஏன் அப்படி பார்த்த….?” என்று கேட்ட சுபத்ராவுக்கு ஜெயேந்திரனை மாப்பிள்ளையாக அழைக்கவும் முடியவில்லை.. அதே போல் தன் பெரிய பெண் தன் சின்ன பெண்ணை பொறாமையாக பார்க்கிறாள் என்றும் தோன்றவில்லை… காரணம்.. தன் பெரிய பெண் தன் சின்ன பெண்ணை காட்டிலும் அனைத்திலும் மேல் என்பது தான் அவரின் நினைப்பு.

கீர்த்தனாவுக்கோ அன்னையின் இந்த கேள்வியில் தான்.. நான் ஏன் அப்படி அவளை பார்க்கிறேன்…ஏதோ ஜெய் அவளை கவனித்து கொள்கிறான்..இந்த கவனிப்பு கூட ஒன்றும் கிடைக்கும் வரை தான் என்பது போல் கல்யாணம் ஆகி மூன்று மாசம் போனால் எல்லாம் போய் விடும்…

மற்றப்படி ஜெய்யிட என்ன இருக்கிறது.. பார்க்க நல்லா இருக்கிறான் என்பதை தவிர. மீண்டுமே பழைய கீர்த்தனாவாகா யோசிக்க ஆரம்பித்து விட்டாள்..

உன்னுயை நினைப்புக்கு எல்லாம் நான் ஆள் இல்லை என்பது போல் தான் வசீகரா ஜெய்யின் கை பற்றலில் கன்னம் சிவந்து பின்… தன் அத்தை மாமா இருப்பத்தை பார்த்து கையை வெடுக் என்று விடுவித்து கொண்டு.. பின் அவர்கள் அருகில் சென்று அவர்களோடு அந்த நகை கடைக்குள் நுழைந்தாள்..

நுழைந்தவளின் பார்வையில் முதலில் பட்டது.. முத்து செட் தான்.. வசீகராவுக்கு முத்து வைத்த நகை என்றாலே மிகவும் பிடிக்கும்..

ஆனால் அவளிடம் இருக்கும் நூறு சவரனில் ஒரு முத்து மோதிரம் கூட இல்லை என்பது தான் உண்மை…

“ம்மா முத்து செட்… வேண்டும் ..” என்று கூட ஒரு முறை இவளுக்கு என்று நகை வாங்கும் போது கேட்டாள் தான்..

ஆனால் அதற்க்கு அவளின் அன்னை சொன்னது இது தான்..

“முத்து செட்டில் நகையில் தங்கம் பெரியதாக இருக்காது.. முத்து தான் இருக்கும்… வசதி இல்லாதவங்க. பார்க்கவும் பெருசா தெரியனும்.. அதே போல் விலையும் கம்மியா இருக்கனும் என்று நினைப்பவங்க தான் முத்து நகை வாங்குவாங்க.. உனக்கு ஏன்… “ என்று விளக்கம் கொடுத்தவர் பின்..

“ஏன் தான் நீ இந்த வீட்டு பெண் போல் யோசிக்க மாட்டேங்குறியா….?” என்று கேட்டதில் அடுத்து அந்த முத்து செட்டை கேட்கவில்லை.

ஆனால் இப்போது இவர்கள் தான் ஆசைப்பட்டதை தானே வாங்கி தருகிறார்கள்.. நாம இந்த முத்து செட்டையே வாங்கிக்கலாம் என்று நினைத்தவள்..

தன் ஆசையை ஜெயேந்திரனிடம் சொல்லவும் செய்தாள்..

ஆனால் ஜெயேந்திரனின் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த கெளசல்யா அவளின் ஆசைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்…
 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
227
கீர்த்தனா சுபத்ரா கடைசி வரை திருந்தாத ஜென்மங்கள் 😑😑😑😑

வசீ ஆசைப்பட்ட முத்து நகை கல்யாண பரிசா ஜெய் தருவான் 🤗🤗🤗🤗🤗
 
Last edited:
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
258
வசீ மாமியார் வீட்டை புரிஞ்சுகிட்டு இப்போவே சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சுட்டா 🤩🤩🤩🤩

கௌசல்யா ஏதாவது நியாயமான காரணம் வச்சிருப்பாங்க ஒருவேளை மத்த மருமகளுங்களுக்கு செஞ்ச மாதிரி செய்ய நினைக்கலாம்......

இப்போ என்ன கல்யாணத்துக்கு அப்புறம் ஜெய் உனக்கு கிப்ட்டா வாங்கி குடுக்கலாம்... 🤗
 
Top