அத்தியாயம்….8
நகை கடையின் முதலிலேயே தான் அந்த முத்து செட்… பகுதி இருந்தது… அதனால் பெண்ணவள் அதை தான்டி அவளின் கால்கள் செல்ல இயலாது தங்கி நின்று விட்டவளை பார்த்த ஜெயேந்திரன் …
“என்ன சீரா…” என்று கேட்ட போது பெண்ணவள் எந்த வித தயக்கமும் இல்லாது… “ எனக்கு முத்து செட் போடனும் என்று ரொம்ப நாளா ஆசை.. அதுவே வாங்கிடலாமா….” என்று கேட்ட பெண்ணவளுக்கு துளியும் சந்தேகம் கிடையாது… ஜெயேந்திரனும் அவனின் வீட்டவர்களும் மறுக்க மாட்டார்கள் என்று… காரணம் புடவை கடையில் மாப்பிள்ளை வீட்டவர்கள் விலை சொன்னதோடு சரி… விருப்பம் தன்னுடையதும் ஜெயேந்திரனின் விருப்பமாக தானே விட்டு விட்டார்கள்.. அதோடு முத்து செட்…. அத்தனை விலையும் இருக்காது.. அம்மா சொல்வது போல பார்வையாகவும் இருக்கும்… அந்த நம்பிக்கையில் கேட்டவளின் பாதமானது… அந்த முத்து நகைகள் இருக்கும் இடத்திற்க்கே நகர தொடங்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..
ஆனால் ஜெயேந்திரன் பக்கம் நின்று கொண்டு இருந்த கெளசல்யா…. “ கல்யாணத்திற்க்கு ஈடு கட்ட எல்லாம் அது வாங்க முட்டியாதும்மா… அதோடு கல்யாணம் செலவு எல்லாம் ஜெய்யோடது கிடையாது… இவன் அப்பா தான் செலவு செய்யிறது… அதனால மத்த மருமகள்களுக்கு செய்தது போலவே வாங்கி கொடுத்து விடுகிறோம்…” என்று சொன்னதில் வசீகராவின் முகம் இத்தனை நேரம் இருந்த அந்த ஒளி சிறிது குறைந்ததோடு தங்களின் பேச்சை கேட்டு கொண்டு இருந்த தன் அம்மா அக்கா ஏதாவது பேசி விடுவார்களோ என்ற பயம் வேறு வந்ததில் தன் முகம் மாறாது.
ஒரு வழியாக. “ சரிங்க அத்தை …” என்று கடினப்பட்டு சிரித்தவள்… ஜெயெந்திரனின் அண்ணிகள் அக்காக்கள் இருக்கும் பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டாள்..
ஜெயேதிரனும் வசீகரா கஷ்டப்பட்டு சாதாரணம் போல் காட்டி கொண்டு செல்வதை கவனித்தான் தான்.. ஆனாலும் இங்கு எதுவும் செய்ய முடியாது.. அவனுக்கு அவன் அன்னையை பற்றி நங்கு தெரியும்… அதோடு கூட்டு குடும்பத்தில் இது போல ஒரு சிலது விட்டு சென்று தான் ஆக வேண்டும்.. என்று நினைத்தவனின் மனம் ஆனது… காலையில் இருந்து பிரகாசித்து கொண்டு இருந்த தன் சீராவின் முகம் இப்படி வாட விட்டதில் அவனுக்கு ஒரு மாதிரியாக தான் இருந்தது.. இருந்தும் அமைதியாகி விட்டான்..
சுபத்ராவுக்கு அந்த முத்து செட்.. ஒரு நாளு சவரன் இருக்குமா…? ஏன் மத்த மருமகளுக்கு வாங்கி கொடுத்தது போல் தான் வாங்கி கொடுக்கனுமா..? அவங்க போல் தான் நம்ம பொண்ணும் நகை போட்டுட்டு போக போறாளா….?அதையும் வாங்கி கொடுத்து இதுவும் வாங்கி கொடுக்கலாம் தானே… என்று மனதிற்க்குள் நினைத்தாலுமே எதையும் வாய் திறந்து சொல்லவில்லை..
சுபத்ராவுக்கு கணவன் சொன்னது போல்.. ஒன்று தான் ஏதாவது பேசினால் திருமணம் நின்று போய் விடுமோ என்ற பயம்… அதற்க்கும் காரண.. சொந்தத்தில் சொல்லியாகி விட்டது… தன் சின்ன பொண்ணுக்கும் இடம் முடிந்து விட்டது என்று… கூடவே இப்போது அமைதியாகி இருந்து நாளை பின்னே… இதை வைத்து வசீயை பேசுவார்களோ என்று.. என்ன தான் இருந்தாலுமே, தன் பெண் அல்லவா… திருமணம் முடிந்து பெண் கஷ்டப்படுவதை எந்த தாய் தான் விரும்புவாள்..,.
அதன் தொட்டு சுபத்ரா அமைதி காத்தார் என்றால், நம் கீர்த்தனா… கெளசல்யா.. அது எல்லாம் வேண்டாம் என்றதும் வசீயின் முகம் சோம்பி விட்டதில்.. இது தான் உனக்கான மாப்பிள்ளை… இதே என் கணவனோ என் கணவன் வீட்டவர்கள் இருந்தால், கண்டிப்பாக.. நான் கேட்டால் முத்து செட் என்ன வைர செட்டே வாங்கி கொடுத்து இருப்பார் என்று நினைத்தவளின் மனது இப்போது தான் அமைதி கொண்டது..
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க… கெளசல்யா மத்த மருமகளுக்கு வாங்கி கொடுத்தது போல் தான் பத்து சவரனின் கேரள செட் ஆரம் நெக்லஸ்… கம்பல் என்று செட்டாக வாங்கி கொடுத்தார்… ஆனால் டிசைன் நம் வசீகராவுக்கு விருப்பத்திற்க்கே விட்டு விட்டார்…
வசீகராவுமே தன் வருங்கால ஓரவத்தி, நாத்தனார்கள் ஆலோசனையான..
“இது நல்லா இருக்கு.. பார்.. இது எடுப்பா இருக்கு. இது புது டிசைனா இருக்கு.. நாம வாங்கும் போது இது இல்லையே…” என்று மற்ற ஓரவத்தியிடம் பேசிக் கொண்டு இருந்ததும்.. பெண்ணவளின் முகம் தெளிந்து விட்டது தான். ஆனால் முன் இருந்த அந்த பூரிப்பு தான் இல்லை..
ஒரு வழியாக வாங்கி கொண்டு அவர் அவர் சென்று விட்டனர்… ஜெயெந்திரனும்..
“பார்த்து போ போயிட்டு மெசேஜ் செய்..” என்று சொன்னானே ஓழிய.. அந்த முத்து செட் பற்றி வாய் திறக்கவில்லை… அது பெண்ணவளுக்கு குறையாகவே தான் இருந்தது..
வசீகராவுக்கு இந்த நகை மீது எல்லாம் ஆசை எல்லாம் கிடையாது. இன்னும் கேட்டால் இதை வைத்து கூட இவளின் அன்னை திட்டுவார்..
“உனக்கு வாங்கினதே அத்தனை நகை இருக்கு நீ இப்படி ஒன்னும் இல்லாத வீட்டு பொண்ணு போல தான் பங்கஷனுக்கு வருவியா….? உன் அத்தை எல்லாம் என்ன நினைப்பாங்க. ஏற்கனவே… எனக்கு என்னவோ உன்னை விட கீர்த்தனாவை தான் நாங்க நல்லா பார்த்துக்குறோம் என்று ஊரேல்லாம் சொல்லிட்டு இருக்காங்க…. நாங்க என்னவோ உன்னை கவர்மெண்ட் ஸ்கூல்ல சேர்த்தது போல்….” என்று திட்டும் அளவுக்கு தான் வசீகரா நகையின் மீது விருப்பம் அவளுக்கு..
ஆனால் அந்த முத்து செட் பிடிக்கும்… தன் அன்னை பற்றி தெரியும்… ஆடம்பரம் மதிப்பு இதற்க்கு கொடுக்கும் முக்கியத்துவ்த்தை பெண்ணின் விருப்பத்திற்க்கு கொடுக்க மாட்டார் என்று…
அதனால் தான் ஜெயேந்திரன் வீட்டவர்களிடம் கேட்டது…அவர்கள் வாங்கி கொடுக்காதது கூட அவளுக்கு பிரச்சனை கிடையாது..
ஆனால் அதை பற்றி ஒன்றும் சொல்லாது சென்றவனை நினைத்து கொண்டு தான் வீடு வந்ததும்… தன் அறைக்கு சென்றது..
இங்கு ஜெயேந்திரன் வீடு வந்ததும் வேனிற்க்கு உண்டான பணத்தை கணக்கு பார்த்து கொடுத்த பின்.. தன் அறைக்கு செல்ல பார்த்தவனிடம் கெளசல்யா…
“ஜெய் உனக்கு அம்மா மீது கோபமா…?” என்ற கேள்வியில் நின்று அவரை திரும்பி பார்த்தவன்..
“நீங்க என்ன செய்திங்க்ம்மா.. நான் உங்க மீது கோபப்பட….?” என்று கேட்டவன் பின்..
“ம்மா எனக்கு உங்களை பத்தி தெரியும்மா…. இதுவும் தெரியும்.. நம்ம நகை ஈடு கட்டுவதை அந்த முத்து செட்டா நீங்க வாங்கி கொடுத்தா… அந்த வீட்டில் இருப்பவங்க ஏதாவது சொல்லுவாங்க தான்.. ஏன்னா இத்தனை வாங்கி பொண்ணுக்கு வைத்து இருப்பவங்க முத்து செட் வாங்காததுக்கு காரணமும் என்ன என்று எனக்கு புரியுதும்மா..” என்ற மகனின் பேச்சில் அந்த தாய்க்கு அத்தனை பெருமை..
இருந்தும்மே…. “ மருமகள் முகம் ஒரு மாதிரி ஆகிடுச்சி டா…” என்று சொல்ல..
இவர்களின் இந்த பேச்சை கேட்டு கொண்டு இருந்த மற்ற இரண்டு மருமகள்களும்.. “ ஏன் அத்தை நீங்க வசீக்கு வாங்கி கொடுத்த சண்டை போடுவோம்மா.. ஏன் இப்படி செய்யிறிங்க….” என்று கேட்ட மருமகள்களிடம் கெளசல்யா.
“நான் இப்படி இருக்க தொட்டு தான் நம்ம குடும்பம் இப்படி இருக்கு…” என்று சொன்னவர் .
மேலும்… “ இது ஒன்னு தானே.. இவங்க தப்பா நினைக்க மாட்டாங்க என்று தான் முதல்ல ஆரம்பிக்கும்.. அப்புறம் ஒவ்வொன்னா வந்து சேரும்.. வேண்டாம்.. அந்த பெண் இப்போது இருந்தே புரிஞ்சிக்கிறது நல்லது தான்…” என்று விட்டவர்..
பின் தன் உடையை மாற்ற தன் அறைக்கு செல்லும் முன் ஜெய்யேந்திரனை பார்த்து… “அடுத்த வாரம் வசீயோட பிறந்த நாள் வருது ஜெய்….” என்று சொல்ல..
“ம் தெரியும் ம்மா…” என்று சிரித்து கொண்டே சொன்னான்…
கெளசல்யா சொன்ன வசீகராவின் பிறந்த நாளும் வந்தது.. அன்று ஜெயேந்திரன் வேலைக்கு விடுப்பு எடுத்து விட்டான்.. இந்து ட்யுஷன் மட்டும் காலையில் இரண்டு குழுவுக்கு முடித்த பின் மாலை வரும் மூன்று குழு பிள்ளைகள் இருக்கும் வாட் சாப் க்ரூப்பில்… இன்று விடுமுறை என்று சொல்லி விட்டான்..
இந்தி ட்யூஷன் பிள்ளைகள் சென்ற பின்.. எப்போதும் ஜெயேந்திரன் உடையின் தேர்வுகள் நன்றாக தான் இருக்கும்.. விலை அதிகம் பிராண்டாட் இல்லை என்றாலும் உடை தரமானதாகவும்.. உடுத்தும் நிறத்தின் காமினேஷன் பொருந்துவது போலவும்….தான் அவனின் தேர்வு இருக்கும்..
இன்று அவன் சாண்டல் நிறத்தில் ஜூன்சும்.. மெரூன் கலரில் டீ ஷர்ட்டும் அணிந்து கொண்டு சாப்பிட அமர்ந்தவனை அவனின் இரண்டு அண்ணிகளும் அண்ணங்களும்…
“ முத்து மணி மாலை உன்னை தொட்டு தொட்டு தாலாட்டா…” என்று கோராசாக பாட…
அதில் ஜெயேந்திரனுக்கு வெட்கமாக போய் விட்டது.. அதில் தன் சின்ன அண்ணனை பார்த்து…
“நான் எல்லாம் பட்ட பகலில் தான் கிப்ட் கொடுக்க போறேன்.. நீங்க அண்ணியின் பிறந்த நாளுக்கு நடு ராத்திரி அண்ணி வீட்டுக்கு போய்… பிரேஸ்லேட் கொடுத்து வந்தது எல்லாம் உலக சரித்திரம் தானே….” என்று தன் வெட்கத்தை மறைக்க தன் அண்ணனை கிண்டல் செய்ய ஆரம்பித்தான்..
இதை எல்லாம் பார்த்த கெளசல்யா கோதண்ட ராமனுக்கு அத்தனை மனது நிம்மதியாக இருந்தது.. கூடவே இந்த குடும்பம் இன்று போல் என்றுமே இது போலவே இரிக்க வேண்டும் என்றும் ஒரு வேண்டுதலும் வைத்த கெளசல்யா.
கூடவே தன் வண்டியின் சாவீயை எடுத்து கொண்டு… தன்னிடம்..
“ம்மா..” என்று சொல்ல ஆரம்பிக்கும் போதே.
“ ம் போயிட்டு வா ஜெய்… ஆனா வசீயை எங்கு கூட்டிட்டு போனாலும் சீக்கிரம் அவங்க வீட்டில் சேர்த்துடு…” என்று மகனை உணர்ந்தவராக கூறினாள்..
இங்கு வசீகராவோ… என்ன வேலை செய்து கொண்டு இருந்தாலும், அவள் அவ்வப்ப்போது இடை இடையே தன் கை பேசியையும் எடுத்து எடுத்து பார்த்து கொண்டு இருந்தாள்.. இன்று அவளின் பிறந்த நாள்…
சென்ற வாரம் அந்த நிகவ்ழு நடந்த பின்னும் கூட காலை இரவு மெசேஜ் அவனிடம் இருந்து குட் மார்னிங்கும் குட் நையிட்டும் வந்து கொண்டு தான் இருந்தது.. இன்றும் வந்தது தான்.. குட் மார்னிங்க என்று.. ஆனால் இன்று அந்த வாழ்த்து மட்டும் போதுமா….?
இன்று அவளின் பிறந்த நாள்… அவளாக சொல்லவில்லை தான்.. ஆனால் தெரிந்து வைத்து இருக்க வேண்டும் தானே… எனக்கு தெரியுமே…தெரிந்து.. அய்யோ சென்ற மாதம் தான் அவனின் பிறந்த நாள் சென்று இருக்கு.. இன்னும் அவனின் பிறந்த நாளில் தான் அவன் அருகில் இருக்க… நீண்ட நாள் காத்து கொண்டு இருக்க வேண்டுமா.. என்று எல்லாம் நான் நினைத்தனே…..
அது போல் தன் பிறந்த நாளை அவன் தெரிந்து வைத்து இருப்பான் என்று பெண்ணவள் நினைத்தாள்.. அந்த நம்பிக்கையில் தான் நடுயிரவு அவனின் பிறந்த நாள் வாழ்த்துக்காக காத்து கொண்டு இருந்தாள்..
ஆனால் அவளின் நம்பிக்கையானது பன்னிரெண்டில் இருந்து ஒன்று இரண்டு மூன்று என்று கடக்க கடக்க அந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக தகர்த்து இதோ இன்று குட் மார்னிங்க என்று அவனிடம் இருந்து வாழ்த்து வந்ததும்.. .
தன்னை போல் அவனுக்கு தன்னுடைய பிறந்த நாளை தெரிந்து கொள்வதில் ஆர்வம் கிடையாதா…? மனது கொஞ்சம் சோர்ந்து விட்டது..
இதில் காலையிலேயே தன் பிறந்த நாள் என்று காலையிலேயே கீர்த்தனா வந்து விட்டாள்… அவளி
ன் மாமா தான் அழைத்து வந்து விட்டது…
எப்போதும் போல் பிறந்த நாள் பரிசாக காஸ்லியான ஒரு உடை கொடுத்து விட்டு தான் கிஷோர் அவளுக்கு வாழ்த்து சொல்லி விட்டு…
பின்… “ என்ன கிப்ட் கொடுத்தாரு ஜெய்…” என்று வேறு கேட்டு வைக்க.. பெண்ணவள் என்ன என்ற் சொல்லுவாள்.. இங்கு ஒரு வாழ்த்துக்கே வழியை காணும். இதில் பரிசா என்று தான் நினைத்தாள்..
ஆனால் எப்போதும் போல் எதுவும் சொல்லாது சிரித்து தான் சமாளித்தாள்…கீர்த்தனா தான் சரியாக யூகித்து..
“என்ன டி விஷ்ஷாவது பண்ணாறா …?” என்று கேட்டது..
உண்மையை சொல்லி விட்டாள்.. “ இல்லை…” என்று ஆனால்… “ லவ் மேராஜா அக்கா பர்த்டே தெரிய.. இனி கல்யாணத்துக்கு அப்புறம் தான் தெரியும்..” என்று சொன்னவளிடம்..
“ஜெய் பர்த்டே எப்போது….?” என்று கேட்டவளிடம்..
வசீகரா.. ஜெயேந்திரனின் பிறந்த நாளை சொல்ல…. “ இது தான்… உனக்கு எப்படி தெரியும்…? எங்களுடையது கூட தான் லவ் மேரஜ் கிடையாது.. உனக்கு வந்தது போல் தான் மேரஜ் பிக்ஸ் ஆன பின் தான் எனக்கு பர்த்டே வந்தது… உங்க மாமா வீட்டிற்க்கே வந்து என்னை வெளியில் கூட்டிட்டு போய் கிப்ட்டா வைர மோதிரம் வாங்கி கொடுக்கல..?” என்று கேட்ட கீர்த்தனாவின் பேச்சு ஏற்றுக் கொள்ளும் படி தான் இருந்தது..
அதனால் பெண்ணவள் அமைதியாகி விட்டாள்.. இருந்தும்.. ஏதாவது அவனிடம் இருந்து அழைப்போ மெசேஜோ வருமா என்ற ஒரு எதிர் பார்ப்பும் அவள் மனதில் இருந்தது.. அதனால் தான் கை பேசியை எடுத்து எடுத்து பார்த்து கொண்டு இருந்தது..
ஆனால் அவள் கை பேசியில் அவள் பார்வை பதித்து கொண்டு இருந்த போது தங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்பான் என்று அவள் துளியும் எதிர் பார்க்கவில்லை…
அதுவும் முதலில் கீர்த்தனா தான் ஜெயேந்திரனை பார்த்தது…
“வாங்க வாங்க ….” என்று அழைக்கவும் தான் பெண்ணவள் யார் என்று தன் கை பேசியில் இருந்த பார்வையை நிமிர்த்தியது…
தன் முன் தன்னவன்.. அதுவும் தான் பார்த்ததும் ஒரு மலர்ந்த சிரிப்பை சிரித்தவனின் அந்த சிரிப்பே அவளுக்கு போதுமானதாக இருந்தது.. இப்போதும் அவன் அவளை வாழ்த்தவில்லை தான்..
ஆனால் தன் பிறந்த நாளை அவன் தெரிந்து வைத்து கொண்டு இருக்கிறான்.. அவளுக்கு இதுவே போதுமானதாக இருந்தது.. பெண்ணவளுக்கு இதை தவிர வேறு என்ன வேண்டும்..
ஆனால் இன்னும் இருக்கிறது என்பது போல்… சுபத்ராவிடம்… “ சீராவை வெளியில் அழச்சிட்டு போய் வரேன்….” என்று கேட்டான்… இன்னும் அவனுக்கு முழுமையாக உரிமையாக வில்லையல்லவா.. இப்போது வசீகரா இந்த வீட்டு பெண்ணாக தானே இருக்கிறாள்.. அதனால் அனுமதி கேட்டான்..
சுபத்ராவுமே… உடனே… “ சரிப்பா” என்றவன். பின் நேரத்தோடு… என்று அவர் ஆரம்பிக்கும் போதே.,
“ஈவினிங்குள்ளே விட்டு விடுவேன்…” என்று அவன் முடித்து வைத்தான்….
வழி அனுப்ப சுபத்ராவும் கீர்த்தனாவும் வெளியில் வந்து நின்றனர்… அங்கு நின்று கொண்டு இருந்த இரு சக்கர வாகனத்தை பார்த்த சுபத்ரா…. “ டூ வீலரா….” என்று இழுத்து நிறுத்தினார்…
வசீகராவின் கண்களோ ஆசையுடன் அந்த இரு சக்கர வாகனத்தை தான் பார்த்திருந்தது.. வசீகராவின் கண்கள் மட்டும் அல்லாது கீர்த்தவாவுமே அந்த இரு சக்கர வாகனத்தை ஆசையுடன் பார்த்திருந்தாள்..
தற்கால நவீனமான மாடல் கொண்ட வாகனமாக அது இருந்தது.. கூடவே… வசீகராவுக்கு மட்டும் அல்லாது கீர்த்தனாவுக்குமே இரு சக்கர வாகனம் என்றால் பிடிக்கும்.. அக்காவுக்கும் தங்கைக்கும் எதில் ஒற்றுமையோ இதில் மட்டும் விருப்பம் ஒன்றாக தான் இருந்தது..
காரணம்… இல்லாத ஒன்றுக்கு தானே மனது விரும்பும்.. ஆம் அவர்கள் வீட்டில் இரு சக்கர வாகனம் கிடையாது… பெண்கள் சின்ன வயதாக இருந்த போது இருந்தது தான்.
ஆனால் வசதி வந்த பின்.. கார் மட்டுமே அவர்களின் பிராயணத்தின் வாகனமாக ஆகின….
அதுவும் கீர்த்தனா திருமணத்திற்க்கு பின் கிஷோருடன் டூ வீலரில் செல்லலாம் என்று நினைத்து கொண்டு இருக்க. இங்கோடு கிஷோர் இன்னுமே ஸ்டேட்டஸ் பார்ப்பவனாக போனதால், கீர்த்தனாவின் அந்த ஆசை இன்று வரை நிறை வேறாது தான் இருக்கின்றது..
அதனால் தான் கீர்த்தனா டூ வீலரா என்று கேட்காது அந்த வாகனத்தையே பார்த்து கொண்டு நின்று கொண்டு இருந்தாள்..
இப்போது ஜெயேந்திரன்.. “ ஆமாம் டூ வீலர் தான்…” என்று மட்டும் சொல்லி வசீகராவை கண்ணை காட்ட… காலையில் இருந்து பொலிவு இழந்தவளின் முகம்… தன்னவன் எங்கும் அழைத்து செல்லாமலேயே…. எதுவும் வாங்கி கொடுக்காமலேயே சுச் போட்டது போல் பளிச் என்று மின்னியது…
இதற்க்கே இப்படி என்றால் அவளின் நீண்ட நாள் ஆசையான முத்து செட் வாங்கி தந்ததால், ஆம் இன்று அதை வாங்க தான் ஜெயேந்திரன் தன்னவளை அதே நகை கடைக்கு அழைத்து சென்றான்..
அன்று ஆசைப்பட்ட அதே முத்து ஆரத்தோடு அதற்க்கு தோதான கம்பல் மோதிரம் வளையல் என்று அனைத்தும் வாங்கி அவள் கையில் கொடுத்தவனிடம் இருந்து அதை தயக்கத்தோடு தான் வாங்கியது..
பின்… “ இல்ல அன்னைக்கு அத்தை சொன்னாங்கலே எல்லோருக்கும் ஒன்னு போல தான் செய்யனும் என்று.. இதனால பிரச்சனை வந்தா…..” என்று தன் பேச்சை இழுத்து நிறுத்தினாள்..
அவளுக்கு தன் ஆசையினால் தான் புகுந்த வீட்டிற்க்கு போகும் முன்பே அங்கு ஏதாவது பிரச்சனையை ஆக்கி விட போகிறோம் என்ற பயம். கூடவே ஒன்றாக இருக்கும் குடும்பம் தன்னால் பிரிய கூடாது என்ற எண்ணமும்…
பெண்ணவளின் பேச்சுக்கு ஜெயேந்திரன். தயங்கி பிடித்து கொண்டு இருந்த அந்த நகை பெட்டியின் மீது கை வைத்து கொண்டு இருந்த பெண்ணவளின் கை மீது தன் கை கொண்டு அழுத்தமாக பிடித்து கொண்டவன்..
“எங்க அம்மா மத்தவங்களுக்கு வாங்காது உனக்கு மட்டும் ஸ்பெஷலா வாங்கினா தான் பிரச்சனை ஆகும்.. ஆனா நான் .. உனக்கு மட்டுமே ஸ்பெஷல் ஆனவன்.. உனக்கு ஸ்பெஷலா வாங்கி தந்தா தப்பாகாது.. புரியுதா.. “ என்று சொன்னவன்..
பின்… “ விஷ் யூ ஹாப்பி பர்த்டே….” என்றும் வாழ்த்தியவன்.. மேலும்…. “ இப்போ என்னால வாயால் மட்டும் தாம் வாழ்த்து சொல்ல முடியுது…” என்றவ… மீண்டுமே…
“மேரஜிக்கு பின் வரும் உன் பிறந்த நாளுக்கும் நான் வாயால் தான் வாழ்த்து சொல்லுவேன்.. ஆனால் வேறு விதமாக….” என்று சொன்னவனின் பேச்சு பெண்ணவளுக்கு ஒரு வித கூச்சத்தை கொடுத்தாலும். அவளுக்குமே அது பிடித்து தான் இருந்தது.
பின் கோயில் சென்று சாமீ கும்பிட்ட பின்… ஓட்டலுக்கு அழைத்து சென்ற சாப்பிட்ட பின்… சுபத்ராவிடம் சொன்னது போலவும்.. தன் அன்னை சொன்னது போலவும்.. மாலை ஆறு மணிக்குள் அவனின் சீராவை அவள் வீட்டில் விட்டு விட்டான்..
நகைப்பெட்டியோடு தன் அறைக்கு வந்தவளுக்கு புதியதாக ஒரு குழப்பம்,… எட்டு லட்சம் ஆகி இருக்கே… இந்த பணத்திற்க்கு என்ன செய்து இருப்பார்.. கடவ் வாங்கி இருப்பாரா.. என்று…