Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Paniyum Pathikume....9 teesar

  • Thread Author
அத்தியாயம்….9

வசீகராவுக்கு ஜெயேந்திரனின் உண்மையான பொருளாதார நிலை தெரியாது அல்லவா….? சம்பளம் ஐம்பது ஆயிரம்.. இதில் கூட்டு குடும்பமாக பெரிய குடும்பம்.. மற்றவர்கள் என்ன வேலை எத்தனை சம்பளம் என்ற எந்த விவரங்கள் கூட பெண்ணவளுக்கு தெரியாது…

அதுவும் தன் வருங்கால மாமியார் அனைத்திற்க்கும் பார்த்து பார்த்து செலவு செய்வதை பார்த்தால், கண்டிப்பாக கை இருப்பு அந்த அளவுக்கு அதிகமாக இருக்காது போல…

இதில் மூத்த அக்காவின் பெண்… மூன்று மாதம் முன் தான் பெரிய மனுஷி ஆனாள்… விழா நம்ம திருமணம் தொட்டு மூன்று மாதம் தள்ளி வைத்து இருக்காங்க…. இன்று பேசும் போது பேச்சு வாக்கில் ஜெயேந்திரன் பேச்சு வேறு பெண்ணவளுக்கு நியாயபகத்தில் வந்தது.. விழா வைக்கும் போது இவர்கள் வரிசையில் நகை வைக்கனும்… தாய் மாம என்று இவரும் செய்யனும்.… அதற்க்கு செலவு ஆகும் .. பணம் வேண்டும்… இப்போது தங்களின் திருமணம் செலவு என்று இருக்கும் சமயம் வேறு.. ஆசை என்று சொல்லி அவர்களுக்கு அதிக செலவு வைத்து விட்டோமோ… என்று நினைத்த நொடி பெண்ணவள் சட்டென்று எதை பற்றியும் யோசிக்காது ஜெயேந்திரனை கை பேசியில் அழைத்து விட்டாள்…

ஜெயேந்திரன் அப்போது தான் தன் வீடு வந்து அன்னை கொடுத்த டீயை குடித்து கொண்டே தன் அண்ணிகள் செய்யும் கிண்டலுக்கு அவனும் சலிக்காது பதில் பேசிக் கொண்டு இருந்த சமயம் தான் பெண்ணவள் அவனை அழைத்தது…

அதை பார்த்த அவனின் பெரிய அண்ணி.. இன்னும் கிண்டல் செய்ய.. அவனும் சிரித்து கொண்டே தன்னவளின் அழைப்பை ஏற்றதும்…

வசீகரா… கட கட என்று தான் நினைத்ததை எல்லாம் சொல்லி விட்டு.

“சாரிங்க சாரிங்க… எனக்கு இந்த யோசனையே இல்ல… வித்யா அண்ணி பொண்ணு பங்ஷனுக்கு தாய் மாமனா நாம ஏதாவது செய்யனுமே….” என்று சொன்னவளின் குரலில் அத்தனை பரிதவிப்பு…

தன்னவள் பேச பேச… ஜெயேந்திரனின் முகத்தில் இன்னுமே மென்னகையின் சாயல்…. பின்… “ நீ இது எல்லாம் யோசிக்காதே சீரா… நான் பார்த்துக்குறேன்…” என்று சொன்னவனிடம்..

மீண்டுமே … “ கடன் வாங்கினிங்கலா….?” என்று திக்கி திக்கி மெல்ல கேட்டாள்…

“கடன் வாங்கல.. இனி வாங்கவும் மாட்டேன் புரியுதா…?” என்று சொல்லி அவளை பணத்தை பற்றி யோசித்து பயப்படாதே என்று ஒரு வழியாக அவளை அமைதி படுத்தி விட்டு தான் ஜெயேந்திரன் கை பேசியை வைத்தது..

ஜெயேந்திரன் பெண்ணவளை பயப்படாதே என்று சொன்னாலும் வசீகரா ஒரு முடிவு செய்து கொண்டாள்.. இனி ஆசைப்பட்டதை சட்டென்று கேட்டு விட கூடாது… என்று..

இங்கு ஜெயேந்திரனின் பேச்சின் மூலம் அங்கு இருந்தவர்களுக்கு என்ன என்று புரிந்து விட்டது…

அதில் கெளசல்யா.. “ என்ன ஜெய்.. இது…? முதல்ல தான் வரவ என் பணத்தை பார்த்துட்டு வர கூடாது என்று சொன்னே… அது மாதிரி தான் இந்த இடம் முடிந்தது… இப்போ இவள் தான் உன் மனைவி என்று முடிவும் ஆகிடுச்சி… இப்போவும் உன் உண்மையான நிலை சொல்லாம இருப்பது தப்பு ஜெய்.. இப்போ பார்.. அவள் ஆசைப்பட்டது கையில் கிடைத்தும் அவள் ஏதேதோ யோசித்து நிம்மதி இல்லாம இருப்பது…” என்றவரின் பேச்சில்

ஜெயேந்திரன்… “ சொல்றேன் ம்மா. அவள் கிட்ட இனி சொல்ல கூடாது என்று எல்லாம் இல்ல… ஏதோ கேள்விக்கு பதில் போல் என் மாத சம்பளம் வங்கி சேமிப்பு… இந்த இந்த இடத்தில் இடம் வாங்கி போட்டு இருக்கேன்.. இது போல சொல்லாம அவள் வந்த பின் ஒவ்வொன்னா பார்த்து புரிஞ்சிக்கட்டும் ம்மா….” என்று சொல்ல..

கெளசல்யா தான்.. “ ஏதோ சொல்ற… நாளை பின்ன எந்த பிரச்சனையும் வராது பார்த்துக்கோங்க அவ்வளவு தான் சொல்வேன்…” என்று சொல்லி தன் பேச்சை முடித்து கொண்டார்…

இங்கு வசீகரா ஜெயேந்திரனின் பேசி விட்டு…. கூடத்திற்க்கு வர… அப்போது தான் கிஷோர் தன் இரண்டு குழந்தைகளை மியுசில் க்ளாஸ்சில் இருந்து அழைத்து கொண்டு மாமியார் வீட்டிற்க்கு வந்து இருந்தான் மனைவியை அழைத்து செல்ல வேண்டி…

சமையல் செய்யும் செய்து கொடுத்த ஆனியன் ஊத்தப்பத்தை சாப்பிட்டு கொண்டே வசீயிடம்..

“என்ன வசீ உன் ஜெய் வீட்டிற்க்கு வந்து இருந்தார் போல. வெளியிலும் கூட்டிட்டு போனதா கீத்து சொன்னா… என்ன கிப்ட் வாங்கி கொடுத்தாரு….” என்று கேட்டான்..

அவனுக்கு ஜெயேந்திரன் என்ன பெரியதாக வாங்கி கொடுத்து விட போகிறான்.. மிஞ்சு மிஞ்சு போனால் ஒரு சுடிதார் வாங்கி கொடுத்து இருப்பான். இல்லை என்றால் ஒரு புடவை வாங்கி கொடுத்து இருக்க போகிறான் என்று நினைத்து தான் கேட்டது..

மாமனின் கேள்விக்கு… “ நகை வாங்கும் போது முத்து செட் ஆசைப்பட்டேன் மாமா….” என்று அவள் சொல்லி கொண்டு இருக்கும் போதே கிஷோர்..

“ஆமாம் ஆமாம் உன் அக்கா சொன்னா…. அதை வாங்கி கொடுக்கலேன்னும்…” என்றவனிடம்..

வசீகரா… “ இன்னைக்கு வாங்கி கொடுத்தார் மாமா… அதோடு கம்பல் வளையல் என்று செட்டா வாங்கி கொடுத்தார்…” என்று சொன்னதுமே கீர்த்தனா…

“எங்கே கொண்டா… இதை எல்லாம் எங்க கிட்ட காட்ட மாட்டியா…. நேரா உன் ரூமுக்கு கொண்டுட்டு போயிட்டே….” என்று சொன்னவளிடம்..

“இல்லேக்கா உங்களுக்கும் சரி அம்மாவுக்கும் சரி முத்து வைத்தது எல்லாம் பிடிக்காது தானே… காட்டினா இதா வாங்கினே என்றறு சொல்ல போறாங்கன்னு தான்.. “ என்று சொன்னவள்..

இப்போது தன் அறைக்கு சென்று அந்த முத்து செட் நகையை எடுத்து கொண்டு வந்து அனைவரின் முன்னும் வைத்து விட… அதை முதல் ஆளாக சுபத்ரா தான் எடுத்து பார்த்தது.

அப்படியே ஒரு செட்டாக இருந்தது… அழகாகவும் இருந்தது… அழகு என்பது வைரம் மட்டும் தான் கொடுக்கும் என்பது கிடையாது.. முத்துவும் கிடைக்கும் என்பதை..

தன் மகளின் திருமணத்தின் போது.. மாப்பிள்ளை வீட்டு முறைப்படி கூரை புடவை… அடர் சிவப்பு நிறத்திற்க்கு தோதாக வசீகரா முத்து கம்பல் ஆரம். மோதிரம்.. அடர் சிவப்பு நிறத்தின் கண்ணாடி வளையலுக்கு பார்டராக ஜெயேந்திரன் வாங்கி கொடுத்த அந்த முத்து வளையலும்… வசீகராவின் மாநிறத்திற்க்கு அவள் மூக்கில் வந்து அமர்ந்து கொண்ட அந்த முத்து மூக்குத்தியும்.. அப்படி பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது..

சுபத்ரா முதன் முதலாக தன் பெண் இத்தனை அழகா என்று வியந்து பார்த்து கொண்டு இருந்தாள்.. அதுவும் சத்திரம் நவீனமாக இல்லை என்றாலும் பாரம்பரியமான அந்த பெரிய கல்யாண மண்டபத்தில் தான் மாப்பிள்ளை வீட்டவர்கள் திருமணம் செய்தனர்..

உணவு வகைகள் அத்தனை.. அதுவும் சுவை உண்மையில் அத்தனை அருமையாக இருந்தது.. கீர்த்தனாவுக்கு இவர்கள் அனைத்தும் கேட்டரிங்கில் தான் விட்டனர்..

ஆனல் ஜெயேந்திரன் வீட்டவர்கள் சமையல் செய்யும் தெவசபிள்ளையை வைத்து இவர்கலே மளிகை காய் கறி வாங்கி போட்டு என்று இவர்கள் ஆட்கள் சமையல் செய்யும் இடத்தில் நின்று என்று அனைத்துமே இவர்களின் நேரிடையாக செய்தனர்…

அதோடு கீர்த்தனாவுக்கு அனைத்துமே அதற்க்கு அதற்க்கு என்று இருக்கும் ஆட்களை வைத்து செய்து முடித்ததில் வர வேற்க சந்தனம் தெளிக்க என்று ஒரே போல் உடை அணிந்து யூனி பாம் போல் நின்று கொண்டு செயற்கையாக ஒரு புன்னகை புரிந்து என்று தான் திருமனத்திற்க்கு என்று வந்த சொந்தங்களையும் பந்தங்களையும் வர வேற்றனர்..

ஆனால் ஜெயேந்திரன் குடும்பத்தினர்.. பெரிய அக்கா சின்ன அக்கா இரண்டு அண்ணன்கள் அனைவரும் பெண்பிள்ளைகள் தானே… அதுவும் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு வயதில் அதற்க்கு ஏற்றது போல் ஆடை அணிந்து அணிகலன் பூட்டி கொண்டு…

தன் மாமன் தன் சித்தப்பன் என்ற அந்த உரிமையில் வர வேற்க நின்று கொண்டு வந்தவர்களை முறை கொண்டு அழைத்து என்று பார்க்கவே அவ்வளவு கவிதையாக இருந்தது…


 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
259
வசீ மெதுவாவே ஜெய் வரவு செலவுகளை தெரிஞ்சுக்கட்டும்.... இல்லனா அம்மா அக்காவுக்கு தெரிஞ்சு அலெர்ட் ஆகிடுவாங்க....🤣
ஆடுற வர ஆடிட்டு அப்புறம் நல்லா நோஸ் கட் வாங்கட்டும் 😆

சுபத்ரா எப்போவும் பெரிய பொண்ணை புகழறதுக்கே நேரம் சரியா இருந்தா எப்படி சின்ன பொண்ணு அழகு கண்ணுக்கு தெரியும்.... 😒
 
Top