Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Pirithariya Pithana Podhum - 15

  • Thread Author
அத்தியாயம்.15

இளம் கன்று பயம் அறியாதது போல் அக்க்ஷயா இப்போது வீட்டின் நிலையும் புரியாது, தன் அன்னை பேச்சின் மூலம் இனி தானும் தன் தங்கை மட்டுமே தான் அந்த வீட்டின் வாரிசு என்ற மிதப்பிலும், அன்னை அப்பாவின் முதல் மனைவியை பற்றி சொன்ன விசயத்தை வைத்தும் மிக தைரியமாகவே..
செல்வ சங்கரியின் புகைப்படத்தை காட்டி.. “ அதை தான் வீச சொல்றேன்.. முன் இருந்த இடம் தான் அவங்களுக்கு ஏத்த இடம்..” என்று சத்தமாக பேசிய டீன் ஏஜில் இருக்கும் பெண்ணவள்.. பின் முடிவில்..
“மேரஜிக்கு முன் பிரக்னெட் ஆனவங்களுக்கு ஏத்த இடம் தான்..” என்று இதை சொல்லும் போது முன் போல் சத்தமாக சொல்லவில்லை என்றாலுமே, பக்கத்தில் நின்று கொண்டு இருந்தவர்களின் காதில் மிக நன்றாகவே விழுந்தது..
அkக்ஷயா அந்த வார்த்தை சொன்ன அடுத்த நொடி லிங்கா எதை பற்றியும் யோசிக்காது அவள் கன்னத்தில் தன் கையின் ஐந்து விரலையும் பதித்ததோடு விடாது இன்னும் இன்னும் அடித்தவனை சுகந்தி. கை பிடித்து தடுத்து.

“அய்யோ அய்யோ என் பெண்ணை அடித்து சாவடிக்கிறானே…” என்று கத்தி கதறியும் யாரும் சுகந்தியின் துணைக்கு வராது தூரமே நின்று விட்டனர்..
அவர் அவர்களுக்கே இப்போது பிரச்சனை இருக்க, இதில் மாட்டிக் கொள்ள ஒரு சிலர் விரும்பவில்லை என்றால், ஒரு சிலர் அக்க்ஷாயாவின் பேச்சில் இவளுக்கு இந்த அடி பத்தாது என்பது போல் நின்று விட்டனர்..
அப்போது தான் சாப்பிட கீழே வந்த மதுவின் காதிலும் அக்க்ஷயா பேச்சு விழுந்தன தான்.. அவளுக்கு அக்ஷாயாவை விட. அவளுக்கு ஏற்ற பட்ட துர்போதனையின் விளைவு தான்.. அவளின் இந்த பேச்சு என்று நினைத்தாள்..
லிங்காவும் அதையே தான் கூறினான்.. தன் கை பிடித்து தடுத்து கொண்டு இருந்த சுகந்தியிடம்..
“எடு.” என்று அவள் பிடித்து இருந்த கையை காட்டி சொல்லவும் சுகந்தியின் கை தன்னால் அவன் கை பிடித்ததை விட்டவளிடம்..
விரல் நீட்டி.. “இது எல்லாம் உனக்கு விழ வேண்டிய அடிகள்.. புரியுதா.. உனக்கு விழ வேண்டிய அடி.. ஆனா அதுக்கு கூட உன்னை தொட எனக்கு விருப்பம் இல்ல..” என்று சொன்னவன் தன் அன்னயின் புகைப்படத்தை காட்டி..
“இவங்க அதை விரும்ப மாட்டாங்க…” என்றவன் கீழே விழுந்து கிடந்த அக்க்ஷாயாவை கை கொடுத்து தூக்கி அங்கு இருந்த இருக்கையில் அமர வைத்த பின் வேலையாளை தண்ணீரை கொண்டு வர சொல்லி அதை அவள் குடித்த பின்..
“உனக்கு என்ன வயது ஆகுது..?” என்று அக்ஷாயவிடம் கேட்டான்..
“பதினைந்து..” என்று சொல்ல.
“ ம் பதினைந்து பதினைந்து வயதுல் கன்சீவ் பத்தி எல்லாம் பேசுற என்றால் உன் கிட்ட இதை சொல்வது தப்பே கிடையாது..” என்று கூறியவன்..
பின்.. புகைப்படத்தை காட்டி “ எங்க அம்மா இந்த வீட்டு பெரியவங்க பார்த்து நிச்சயம் செய்த பெண் எங்க அம்மா தான்.. நான் இவரோட மகன் தான்..” என்று ஜெய பிரகாஷை காட்டி சொன்னவன்..
“ இப்போ உனக்கு இன்னொன்னும் சொல்றேன்.. கல்யாணத்திற்க்கு முன் எங்க அம்மா இந்த வீட்டிற்க்கு வரல.. ஜெய பிரகாஷை காட்டி அவர் தான் என் அம்மா வீட்டிற்க்கு போனார்..” என்று சொன்னவன்.

“இன்னும் நான் விளக்கமா சொல்லனுமா.” என்றதில் ஜெய பிரகாஷ் பதறி போய் .
“ லிங்கா வேண்டாம்.” என்று சொல்ல… லிங்கா அவர் முகத்தை கூட பார்க்கவில்லை.. ஆனாலும் அடுத்து அதை பற்றி அதாவது தன் அன்னையை பற்றியதான பேச்சை தான் பேசவில்லயே தவிர.. தன் பேச்சை தொடர்ந்தான்..
அக்ஷயாவின் அம்மா பக்கம் கை காட்டியவன்.. “ உங்க அம்மா என் அம்மாவுக்கு பின் தாலி கட்டிட்டு வந்தாங்க. தாலி மட்டும் தான் அம்மா இறந்த பின்..
ஆனா உன் அப்பாவின் வாழ்க்கைக்குள் என் அம்மா இருக்கும் போதே வந்து விட்டவங்க..” என்றதில் அனைவரும் அதிர்ந்து தான் போய் விட்டனர்.
அந்த செய்தி வீட்டில் இருந்த அனைவருக்கும் புதிய செய்தி. சுகந்தி ஜெய பிரகாஷிடம் வேலை பார்த்த பெண் என்று தெரியும் தான்..
ஆனால் இது போல. என்பது தெரியாது.. அந்த பேச்சில் அனைவரும் அதிர்ச்சியாகி சுகந்தியை பார்த்தனர்..
அடுத்து லிங்கா சொன்ன. “ முறையா பார்த்த பெண் என்றாலும், நீ சொன்னியே மேரஜூக்கு முன் கன்சீவ் ஆனவங்க என்று.. அது ஆகிட்டதினால, அவங்க இங்கு இருக்கிறவங்க கண்ணுக்கு குப்பையா போயிட்டாங்க.
என் அம்மா இருக்கும் போதே உன் அப்பா வாழ்வில் வந்த உன் அம்மா கன்வீவ் ஆகாததால் கோபுரம் ஆகி விட முடியாது.” என்று விட்டான்..
அந்த பேச்சில் அக்க்ஷயா மட்டும் அல்லாது அனன்யா. ஏன் சுகந்தி கூட கூனி குறுகி நின்று விட்டார்கள்..
இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த சோமசுந்தரமே.. “ லிங்கா வேண்டாப்பா விட்டு விடுப்பா.. சின்ன பெண்கள் ” என்று தன் பேத்திகளை கருத்தில் கொண்டு கூறினார்..
அவரை பார்த்து நக்கலாக சிரித்த லிங்கா.. “ என் அம்மாவை பத்தி என் எதிரில் என் அம்மா பக்கம் இருக்கும் போதே இதோட அசிங்கமா எல்லாம் இந்த வீட்டில் பேசி இருக்காங்க தாத்தா. அப்போ என் வயது..”
அக்க்ஷயாவையும் அனன்யாவையும் காட்டி.. “ இவங்களோட சின்ன வயசு தாத்தா… அந்த பேச்சு என் எதிரில் என் அம்மா கேட்கும் போது அவங்க முகம் அப்படியே கூன் குறுகி நின்று இருக்காங்க தாத்தா..
ஆனா அப்போ எல்லாம் நீங்க என் கிட்ட சொன்னது போல போதும் என்று சொன்னது இல்லையே தாத்தா.. ஒ அப்போ உங்க மனைவி இருந்தாங்களே அந்த பேச்சை அவங்க ஆரம்பித்து வைக்கும் போது, உங்களால் தடுக்க முடியாது தான்..” என்று விட்டான்..
இத்தனை ஆண்டுகள் மனதில் இருந்ததில் அவனால் ஐந்து சதவீதம் தான் வார்த்தைகளால் கொட்டி இருக்கிறான்.. அதையே அந்த வீட்டில் இருந்தவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை..
அதுவும் மது. “ நான் இன்னும் சாப்பிடவில்லை.” என்று சொன்னது போது.
“இப்போவே டைம் ஆகி விட்டது. காலேஜ் போகும் போது போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிட்டு போகனும்.. இப்போவே போலீஸ் ஸ்டேஷன் விட்டு வரும் போது சாப்பிட ஏதாவது பார்த்து கொள்ளலாம்..” என்று விட்டு அனைவரும் முன்னும் மதுவின் கை பிடித்து அழைத்து சென்றவன்..
போகும் முன் அனைவரையும் பார்த்து.. “ காலேஜ் ஹாஸ்ட்டலில் நடந்தது தற்கொலை கிடையாது கொலை.. திட்டம் இட்டு செய்தது.. இதை வைத்து பார்த்தா இதுக்கு முன் செத்த அந்த இரண்டு பெண்கள் கூட, கொலை தான் செய்யப்பட்டு இருப்பாங்க..” என்று பொதுவாக கூறியவன்..
பின் தன் தாத்தாவிடம்..
இதுல சம்மந்தப்பட்டு இருப்பது நம்ம வீட்டு ஆண்களில் ஒருவர் தான் தாத்தா. அது நிரூபனம் ஆனால் அது யார் என்றாலும் தண்டனை கிடைக்கும் படி செய்து விடுவேன்.. “ என்று சொல்லி கொண்டு வந்தவன்..
பின்.. “ அது நீங்களா இருந்தாலுமே..” என்று விட்டான்..
பின் லிங்கா மதுவோடு காவல் நிலையத்திற்க்கு சென்ற போது இவனுக்காக காத்து கொண்டு இருந்த காவல் அதிகாரி..
பிரத பரிசோதனை இன்னும் வரல. ஆனால் இது தற்கொலை இல்லை கொலை தான் என்பதற்க்கு எங்களுக்கு ஒரு ஆதாரம் கிடைத்து இருக்கிறது ..” என்று கூறியதும்.
லிங்காவோடு மது தான் அவசரமாக. “அது என்ன ஆதாரம் .? ” என்று கேட்டதற்க்கு அந்த காவல் துரை அதிகாரி.. மது யார்…? என்பது போல் பார்த்ததிற்க்கு.

“ என் கசின் தான் சர்.. அந்த ஹாஸ்ட்டலில் இறந்த சஜனாவோடு பிரண்ட் தான்.. மதுவும் என் கிட்ட இது தான் சொல்லிட்டு இருந்தா சஜனாவுடையது தற்கொலை கிடையாது கொலை என்று சொன்னவள்.. அதற்க்கு உண்டான காரணத்தயும் சொல்லி விட்டான்..
சஜனா மதுவின் சகோதரி என்பதை தவிர.. கூட படித்தவள்.. பின்னும் மது அமெரிக்கா சென்ற பின்னும் பேச்சுக்கள் இருந்தன..
அந்த விடுதியில் ஏதோ சந்தேகம் படும் படி இருப்பதாக சஜனா சொன்னதையும் சேர்த்தும் சொன்னான்..
லிங்கா பேச்சை எந்த இடையூறும் இல்லாது கேட்டுக் கொண்டு இருந்த அந்த காவல் அதிகாரி… பின்.. “ உண்மை வெளி வந்தால் உங்க கல்லூரி மீதும் ஆக்க்ஷன் எடுக்கப்படும் மிஸ்டர் லிங்கேஷ்வரன்.. அதோட அப்போ அந்த கல்லூரி நிர்வாகியையும் தான்..” என்றதற்க்கு லிங்கா.
“உண்மை கசக்க தான் செய்யும்.. “ என்று விட்டான்..
திரும்பவும் மது. “ அந்த பெண் இறந்ததில் அது தற்கொலை இல்ல கொலை தான் என்று சொன்னிங்க.” அவள் அந்த பேச்சிலேயே நிற்க..

“மேலே இருந்து குதித்து இருந்தால், குதித்த இடத்தில் ரத்தம் இருக்கும்.. ஆனால் இந்த பெண் பக்கத்தில் எந்த ரத்த கரையும் இல்ல. அதோட உங்க ஹாஸ்ட்டலில் இருந்து போன் வந்த உடனே நான் ஸ்பார்ட்டுக்கு போயிட்டேன்..
“ பாடியை தொட்டு பார்த்ததில் பாடி ஜில் என்று இருந்தது.. இறந்த உடன் எல்லாம் பாடி அப்படி ஜில் என்று ஆகாது.. கொஞ்ச மணி நேரம் கழித்து தான் அப்படி ஆகும்..
பாடியின் ஜில்னஸ் பார்த்த உடனே. “ ரொம்ப நேரம் ஆகி விட்டதா..? என்று உடனே கேட்டேன்..
அதற்க்கு அந்த பெண் மாடியில் இருந்து விழுந்ததை பார்த்த பெண் .. “ நான் தான் இந்த பெண் மாடியில் இருந்து விழுந்ததை பார்த்தேன்.. பார்த்த உடனே போலீஸ்க்கு போன் செய்து விட்டேன் என்று தான் சொன்னா.
இது இரண்டையும் வைத்து பார்த்ததில் அந்த பெண் இறந்து சில மணி நேரம் கழித்து தான் மாடியில் இருந்து வீசி தற்கொலை கேசா மாத்த ப்ளான் பண்ணி இருக்காங்க…
அதனால தான் பாடி அந்த அளவுக்கு ஜில்னஸா இருக்கு… பாடி பக்கத்தில் ரத்த கரையும் இல்லை..” என்று அந்த காவல் அதிகாரி தன் சந்தேகத்தை சொன்னதுமே, சிறிது நேரம் மது லிங்கா இருவரும் பேச வில்லை..
பின் லிங்கா தான்.. “ நீங்க சொன்ன இரண்டு காரணமும் பார்த்த உடனே கண்டு பிடித்து விடலாம்.. அது எப்படி கொலை செய்தவங்க அவ்வளவு அஜாக்கிறதையா செய்து இருக்காங்க…” என்று தன் சந்தேகத்தை கேட்டான்..
அதற்க்கு அந்த காவல் துரை அதிகாரி.. “ நீங்க சொல்வது வாஸ்தவம் தான். ஆனால் முன் இரண்டு முறை செய்து தப்பித்து கொண்டவர்களுக்கு ஒரு அஜாக்கிரதை இருக்கும்.. அதோட என்ன செய்தாலும் மாட்ட மாட்டோம்.. எல்லாம் என்னுடையது தானே.. நான் சொல்வது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.. “
லிங்கா அதற்க்கு புரிகிறது என்பது போல் தலையாட்டியவன்.. “எல்லாம் கொலையாளியோடையதா இருக்கலாம் ஆனால் இறந்த பெண்களோட உயிர்..
அந்த உயிரை பரிகொடுத்து விட்டு பரிதவித்து கொண்டு இருக்கும் உறவுகளின் வேதனை.. இது எல்லாம் சும்மா இல்ல தானே ..” என்று லிங்காவின் பேச்சுக்கு,.

“கண்டிப்பா கண்டிப்பா.. நீங்க சொல்வது உண்மை தான்.. ஆனா இரண்டு போல மூன்றாவதா தப்பித்து விடலாம் என்று நினைத்த அந்த கொலையாளிக்கு தெரியாதுலேயே.. அந்த கல்லூரி நிர்வாகம் வேறு கையில் போகும் என்றும்..
கல்லூரி மூடும் படி ஆனாலுமே உண்மை வெளி வர வேண்டும் என்ற சேர்மன் அந்த கல்லூரிக்கு வருவான் என்பதும்.” என்று லிங்காவை பாராட்டி பேசிய பின் தான் அந்த காவல் அதிகாரி இருவருக்கும் விடை கொடுத்தார்..
லிங்கா போகும் முன்.. “ முன் நடந்த அந்த இரண்டு கொலை. இனியும் அது தற்கொலை என்று பேச வேண்டாம் என்று நினைக்கிறேன்.. அதை விசாரித்த போலீஸ் அதிகாரியிடம் இருந்து அதை பற்றிய தகவல் வேண்டும்.” என்று சொல்ல.
அந்த போலீஸ் அதிகாரியும்.. “ அது எல்லாம் பெரிய பிரச்சனை இல்ல லிங்கா சார்.. இது இறப்பு தற்கொலை இல்லைகொலை என்று விசாரணையில் தெரிய வந்தாலே போதும்.. அது இரண்டு கேஸையும் எடுத்து விடலாம்..” என்று விட்டார்..
பார்க்கலாம்.. யார் குற்றவாளி என்று.. சஜனா மரணம். ஏன்…? எதற்க்கு…? நடந்தது என்பதை இந்த விசாரணை நமக்கு தெரியப்படுத்தி விடும்..
 
Well-known member
Joined
Jun 2, 2024
Messages
135
Super update maam..interesting ah poguthu story...inikum night innoru ud kedaikuma??
Aanalum intha suganthi, jeyaprakash and antha ponnungaluku ithu pathathu innum nalla koduthu vitu irkanum...Kanchana and sivaprakash ku kooda vitu vaika koodathu Linga...
 
Last edited:
  • Like
Reactions: grg
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
270
Super.... ❣️❣️❣️❣️❣️
அட்சயா தேவை தான் உன் வயசுக்கு இப்படி எல்லாம் பேசுற எல்லாம் சுகந்தி ட்ரெயினிங்...... வீட்ல உள்ளவங்களையும் ஏமாத்தி இருக்கான் ஜெயப் பிரகாஷ் அவங்க உறவை மறைச்சு.....
தாத்தாவுக்கும் சரியான கேள்வி....

சஜனா மரணத்தோட மர்மம் சீக்கிரம் தெரிஞ்சுடும்....
 
  • Like
Reactions: grg
Well-known member
Joined
May 24, 2024
Messages
258
Nalla kudutha linga
Un appanu oru nathari irukane avana vaangi irukanum
Ellathukum serthu vai apo tan trium
 
  • Like
Reactions: grg
Well-known member
Joined
May 11, 2024
Messages
207
லிங்கா தன் அம்மா பட்ட கஷ்ட்டம் அவமாணம் எல்லர்குக்கு தெரியும் படி வாங்க வாங்குன்னு வாங்கிட்டான் யாராலும் பதில் பேச முடியல இனி கல்லுரியில் நடந்த கொலையை வெளிசத்துக்கு கொண்டுவர போறான் குற்ற செய்தவர்கள் யார் என்பதை 🤔🤔🤔🌺🌺🌺
 
  • Like
Reactions: grg
Member
Joined
May 11, 2024
Messages
83
சிவகுமார் உனக்கு இதில் ஏதாவது பங்கு இருக்கா பங்கு
 
  • Like
Reactions: grg
Top