அத்தியாயம்…10
“ நான் இப்போது கூட நினைத்து கொள்வேன் ஈஷ் அத்தான்..” என்ற மதுவின் அந்த அழைப்பில் அந்த பெண்ணுக்கு என்ன ஆனதோ என்று மனதில் உழண்டு கொண்டு இருந்த லிங்காவின் மனது..
மதுவின் அந்த அழைப்பில் சட்டென்று தன் நினைவில் இருந்து வெளி வந்து தன் பக்கத்தில் நெருக்கமாக அமர்ந்து கொண்டு இருந்த மதுவின் முகத்தை பார்த்தான்..
இரவில் இருண்டு இருந்த நீச்சல் குளத்தின் தளம் நீச்சல் குளத்தின் ஒரம் எரிய விட்டு கொண்டு இருந்த அந்த சின்ன விளக்கின் ஒளி மட்டுமே அந்த தளத்தில் நிறைந்து இருந்தது…
அதனால் வெளிச்சம் என்பது அந்த அளவுக்கு இல்லை தான்.. ஆனாலுமே அந்த சிறு விளக்கின் ஒளி ஒன்று மது அமர்ந்து இருந்த இடத்திற்க்கு வந்து விழுந்ததால், அந்த சிறிய வெளிச்சம் அவள் முகத்தில் பட்டு மதுவின் முகம் லிங்காவால் நன்றாகவே பார்க்க முடிந்தது..
மது பழைய நினைவுகளில் அழுது கொண்டு இருந்ததால், அவளின் முகம் சிவந்தும்.. அழுகையின் காரணமாக கண்ணீர் தடம் கன்னத்தில் விழுந்து அதை சரியாக துடைக்காததால் அது அப்பட்டமாக லிங்காவின் கண்ணுக்கு தெரிந்தாலுமே, எப்போதும் லிங்காவின் கண்ணுக்கு அழகியாக தெரியும் மது.. அன்று பேரழகியாக தெரிந்தாள்.
அதுவும் சின்ன வயதில் மது அவனை அழைக்கும் அந்த பிரத்தியோகமான அழைப்பான.. அந்த ஈஷ் அத்தான்.. ஆம் சிறு வயதில் மது லிங்கேஷ்வரனை ஈஷ் அத்தான் என்று தான் அழைப்பாள்..
லிங்கேஷ்வரனுக்கு சிறு வயதில் இந்த வீட்டில் ஒரு பிடிப்பை கொடுத்தது இந்த மது தான்… சின்ன அத்தை இந்த வீட்டிற்க்கு மதுவை மூன்று மாத குழந்தையாக கையில் கொண்டு வந்த போது, அவனின் அம்மா தான் சின்ன அத்தைக்கும் குழந்தைக்கும். ஆலம் சுற்றி வர வேற்றது..
அதற்க்கும் வேதவல்லி பாட்டி. “ நீ ஏன் ஊருக்கு முன்ன என் மகளுக்கு ஆலம் சுத்தின. அவளுக்கே இருந்து இருந்து இப்போது தான் குழந்தை பிறந்து அம்மா வீடு வந்து இருக்கா.. அதுவும் பெண் குழந்தை.
நீ சுத்தினா உன்னை போல வந்துட மாட்டா… சுந்தரியை ஆலம் சுத்த சொல்ல வேண்டியது தானே..” என்று அப்போது அவர் பெரிய மகள் வீட்டில் இல்லாத காரணத்தினால், வேலையாள் ஆன சுந்தரியை ஆலம் சுத்த சொன்னதும் லிங்காவுக்கு நன்கு நியாபகம் இருக்கிறது..
அதற்க்கு காயத்ரி.. “அம்மா என்னையும் குழந்தையும் வீட்டு ஆள் தானேம்மா வர வேற்கனும்..” என்றவர் எப்போதும் போல் அம்மா அருகில் அவர் முந்தியை பிடித்து நின்று கொண்டு இருந்த என்னை பார்த்து.
“இன்னும் நீ உங்க அம்மா முந்தியை விட்டு வெளியில் வரவில்லையா..” என்று சிரித்து கொண்டே கேட்டது.
இப்போதும் லிங்காவின் மனதில் அந்த காட்சி பசுமரத்தாணி போல் பதிந்து தான் போயின…
ஏன் அது மட்டும் அல்லாது சின்ன அத்தை சின்ன மாமா குறிப்பாக இந்த மது.. என்ற விசயங்கள் அவனுக்கு நியாபகத்தில் எப்போதும் இருக்கும் தான்..
காரணம் இந்த வீட்டில் தன்னையும் தன் அம்மாவையும் தவறாக பேசாதவர்கள் தாத்தாவோடு சின்ன அத்தை குடும்பத்தினரும் தான்.
அதுவும் மது வளர வளர.. சின்ன அத்தை.. “ லிங்காவின் அருகில் குழந்தையை படுக்க வைத்து விட்டு.. “ கொஞ்சம் பார்த்துக்க லிங்கா. நான் போய் குளித்து விட்டு வர்றேன்..” என்பார்.
பின் எங்காவது வெளியில் செல்லும் போது “ வெளியில் வந்தாளே அழுது ஆர்ப்பாட்டம் செய்து விடுறா லிங்கா.. உன்ன போல சின்ன பசங்க கூட வந்தா சமத்தா இருக்கா.” என்று சொல்லி தன்னையும் அவர்களோடு அழைத்து செல்வார்..
அப்படி மதுவோடு அதிக நேரம் லிங்கா செலவழித்ததால் மது அந்த வீட்டில் மற்றவர்களை காட்டிலும் தன்னிடம் நெருக்கம் காட்டுவாள்..
அத்தான் என்று உறவு முறையோடு பெயரையும் சேர்த்து தான் அவனை மது அழைப்பது.. அதுவும் தன் அம்மாவின் பிரத்தியோக அழைப்பான ஈஸ்வரன்..
பல் விழுந்து அந்த சமயம் அவள் தன்னை அழைத்த ஈஸ்வரன்.. ஈஷ் என்ற உச்சரிப்பு தான் வரும்.. பின் அதே பழக்கத்தில் எப்போதும் மது லிங்காவை ஈஷ் அத்தான் என்று தான் அழைப்பாள்..
தன் அன்னையின் மறைவுக்கு பின்னும் லிங்கா அந்த வீட்டில் இருந்தான் என்றால், அதற்க்கு காரணம் மது மட்டுமே.
அதற்க்கும் முடிவு கட்டும் படியாக மேகா விவகாரத்தில் தன் பெரிய மாமா சிவ பிரகாஷ்.. சொன்ன.. “மது இருக்கும் வீட்டில் உன்னை எப்படி வைத்து இருப்பது.” என்ற வார்த்தையோடு அதற்க்கு எந்த எதிர்ப்பும் சொல்லாது இருந்த தன் சின்ன அத்தையின் அந்த அமைதி தான் அவனை பலமாக தாக்கியது.
அவன் இந்தியா விட்டு நிரந்தரமாக போக இதுவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். அதே போல் இதோ இந்தியாவில் அவன் இருப்பதற்க்கும் ஒரு வகையில் மதுவும் காரணம் தான்..
மேலுக்கு தன் அம்மா இடம் என்று ஏகப்பட்டது தன் மனதை அவனே சமாதானம் படுத்தி கொண்டாலுமே, இன்னொரு காரணம் அது அவன் மனது அறிந்த ரகசியம் அன்றோ..
அன்று மதுவை வைத்து தானே நான் இவளை தப்பாக பார்ப்பேன் என்று அந்த எண்ணத்தில் தான் லிங்கா மதுவை தவறாக பார்க்க முயற்ச்சி செய்தான்.
ஆம் முயற்ச்சி மட்டுமே அவனால் செய்ய முடிந்தது.. பார்த்தான் தான் தவறான இடத்தில் அவன் பார்வை சென்றது தான். ஆனால் தவறான எண்ணத்தில் அவனால் பார்க்க முடியவில்லை.. என்பதை அவன் உணர்ந்த தருணத்தில் தான்.. மதுவை நான் எந்த இடத்தில் வைத்து இருக்கிறேன் என்பதை அவன் மனம் உணர்ந்த தருணமும் அதே..
அதுவும் இப்போது தனிமையில் யோசித்தவனுக்கு , இந்தியா வந்ததில் இருந்து தன் பார்வை அதிகம் படும் நபர் யார் என்று சொன்னால் அது மது தான்..
ஆனால் மது. அதுவும் முன் அழைத்த அந்த அழைப்பு அவளிடம் சுத்தமாக இல்லை எனும் போது, இதை அடுத்து தான் எப்படி அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது.
அதுவும் இந்த வீட்டில் இருப்பவர்கள் தன்னை பற்றியும், தன் அன்னையை பற்றியும் தவறான பேச்சுக்கள் தான் பேசிக் கொண்டு இருப்பார்கள்.. அதை கேட்டு வளர்ந்த மது தன்னை எப்படி.?
என எப்படி .? எப்படி. என்று அத்தனை எப்படிக்கும் பதிலாக யாரோடும் சொல்லாது ரகசியத்தை தன்னிடம் சொன்னதிலேயே அவன் மனதில் சாரல் வர ஆரம்பித்து விட்டது எனில், அவள் வாயில் இருந்து ஈஷ் அத்தான் என்ற அந்த அழைப்பில் பூ சாரல் தூவானம் பெய்ய ஆரம்பித்து விட்டது..
அவள் முகம் மட்டுமே வெளிச்சம் படும் படி இருந்தது.. அவள் பக்க வாட்டில் அமர்ந்து இருந்த லிங்காவின் முகத்தில் வெளிச்சம் வராத காரணத்தால் மதுவுக்கு லிங்காவின் பார்வை தெரியவில்லை..
அதனால் தன் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாது அந்த இருள் சூழ்ந்த இடத்தில் அவன் தன்னை பார்க்கிறான் என்பது மட்டுமே நிழலாக தெரிந்த காரணத்தால் திரும்பவும் மது..
“ ஈஷ் அத்தான் நான் சொன்னதை கேட்டுட்டு தானே இருக்கிங்க..” என்ற அவள் பேசும் போது கூட அவளின் அந்த அழைப்பில் இருந்து அவனால் வெளி வர முடியவில்லை..
ஆனால் அவன் தொடை மீது மது கை வைத்த அந்த அவளின் ஈரமான தொடுகையில் தன்னிலைக்கு வந்ததோடு மட்டும் அல்லாது சட்டென்று எழுந்து நின்று விட்டான்.
சிறிது நேரம் அவள் தொடுகையில் தான் இருந்தாலும், அவன் தன் நிலையில் இல்லாது போய் விடுவான்.. இரவு நேரம்.. தனிமை, இளமை கூடவே அருகில் மனதிற்க்கு பிடித்த பெண்.. தவறு செய்யும் அனைத்து சாத்திய கூறுகளும் சேர்ந்தார் போல் இருக்கின்றன..
இளமைக்கு தீணி போடும் படியாக அணைப்பதிலும். முத்தம் இடுவதிலும் இந்த காலத்தில் தவறு இல்லை தான்.. அதுவும் அவன் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த நாட்டில் அதற்க்கு மேலும் எது செய்தாலும் தவறாகாது தான்..
ஆனால் இது அனைத்தும் செய்ய மதுவுக்கும் விருப்பம் இருக்க வேண்டும் அல்லவா.. அதுவும் மனது உடைந்து தன்னிடம் பேசிக் கொண்டு இருப்பவளிடம் தான் தவறாக ஏதாவது செய்து விடுவோமோ என்ற பயத்தில் தான் எழுந்து விட்டான்..
ஆனால் மது லிங்கா அப்படி எழவும் சிறிது நேரம் தன்னை விட்டு சிறிது விலகி நின்று இருந்ததால், லிங்காவை இப்போது அவளாள் நன்றாகவே பார்க்க முடிந்தது..
அவன் தன் தலை கோதுவதும், பின் கழுத்து பின் பகுதியை தேய்த்து விடுவதுமாக ரெஸ்ட்லஸ்ஸாக இருப்பதை பார்த்தவள் தன் பேச்சு.. அதுவும் தான் அவனின் சொந்த அத்தை மகள் என்று நினைத்து தன்னிடம் பழகியவன்.. அது இல்லை எனும் போது..
இனி மேல் என்ன தன்னிடம் பேச்சு என்று எழுந்து விட்டானோ.. அதை எப்படி தன்னிடம் சொல்வது என்று தான் சங்கடப்பட்டு கொண்டு இருக்கிறானோ என்று தவறாக நினைத்து அவளும் எழுந்தவள்.. அந்த இடத்தை விட்டு போக பார்த்தாள்.
அவளை திரும்பி பாராமலேயே அவள் அங்கு இருந்து செல்கிறாள் என்பது அவளின் கொலுசொலி சொல்ல.. “என்ன மது.. ஏன் போற.?” என்று பதட்டத்துடன் இப்போது அவள் முகம் பார்த்து தான் லிங்கா மதுவிடம் கேட்டான்..
இந்த இடைப்பட்ட நேரத்தில் தன்னை சமாளித்து விட்டவன்.. தன்னிடம் எந்த மாதிரி முக்கியமான விசயம் சொல்லி கொண்டு இருந்தாள்.. அதுவும் அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள்.
ஆனால் நான் இது போல் உணர்ச்சிக்கு அடிமையாகி போவது தவறு… அவள் பிரச்சனை என்ன என்று கேட்டு தீர்க்க பார்க்க வேண்டிய சமயத்தில் என்ன இது என்று தன்னையே கடிந்து கொண்டு இருந்த சமயம் தான் மது செல்வதை கொலுசு ஒலியின் மூலம் கவனித்து மதுவை தடுத்து நிறுத்தியது..
இப்போது மது.. “இல்ல நான் ரொம்ப தடவை பேசியும் நீங்க என் பேச்சை கவனிக்கல.. அது தான் நான் உங்க அத்தை மகள் இல்லை என்பதால் என் கிட்ட பேச உங்களுக்கு விருப்பம் இல்லையோ என்று நினைத்து.” என்று மது பேச தொடங்கிய போது மட மட என்று தான் நினைத்ததை சொல்ல ஆரம்பித்த மது லிங்காவின் பார்வையில் அவள் பேச்சின் முடிவில் தேய்ந்து போனது..
இப்போது லிங்கா.. நீச்சல் குளத்தின் அருகில் இருந்த இரு இருக்கையில் ஒன்றை காட்டி அமரும் மாறு மதுவிடம் சைகை செய்தவன் இன்னொரு இருக்கையில் அமர்ந்து..
“ அப்போ இப்போது என் கிட்ட நீ பேசுவதற்க்கு காரணம். நான் உன் மாமா மகன் இந்த காரணம் மட்டும் தானா.” என்று மதுவின் கண்ணை பார்த்து லிங்கா கேட்டான்.
அதற்க்கு மது உடனே.. “இல்லை..” என்று வேகமாக அவள் தலையாட்டி மறுத்ததில் லிங்காவின் மனது சந்தோஷப்பட்டது தான்..
ஆனால் அடுத்து மது பேசிய. “ என் மாமா மகன் என்பதால் மட்டும் கிடையாது. இப்போ இந்த ஸ்கூல் காலேஜ் உங்களுடையது தானே… இனி அதை பார்த்து கொள்வதும் நீங்க தானே..
இதோ இன்று நடந்த அந்த கொலை மட்டும் அல்லாது முன் நடந்ததையும் விசாரிக்க நீங்க மனது வைத்தால் நடத்தலாம்.. அதனால் தான் சொல்ல வந்தேன்..” என்று சொல்லி கொண்டு வந்த மது லிங்காவின் முகம் மாற்றத்தில்.
“ அது காரணம் என்றாலுமே.. இது வரை காலேஜை கவனித்து கொண்டது பெரியப்பா தானே. அதோட தாத்தாவுக்கும் அந்த காலேஜில் எல்லா அதிகாரமும் இருந்தாலுமே, நான் அவங்க கிட்ட இது வரை சொன்னது கிடையாது தானே..
அதோடு இதே உங்களை தவிர. வேறு யாரிடம் புது நபர்களிடம் இந்த கல்லூரி நிர்வாகம் சென்று இருந்தாலுமே, நான் என் ரகசியத்தை அவங்க கிட்ட நம்பிக்கையோடு சொல்லி இருக்க மாட்டேன் ஈஷ் அத்தான்..” என்று சொல்லிய மது ஒரு வித எதிர்ப்பார்ப்போடு லிங்காவை பார்த்தது கொண்டு இருந்தாள்.
லிங்கா முதலில் அவளின் பெரியப்பா தாத்தாவிடம் சொல்லவில்லை எனும் போது… இவளின் சந்தேகம்.. அதாவது தான் நினைத்தப்படி முன் ஹாஸ்ட்டலில் இறந்த பெண்.. சஜனா என்றால், இவளின் சந்தேக வட்டத்தில் கண்டிப்பாக இந்த காலேஜூக்கு தொடர்பு இருந்த அனைவரின் பேரிலும் தான் இருக்கும் அதனால் தான் சொல்லாமல் இருந்து இருப்பாள்..
அதோடு சஜனா பற்றி சொன்னால், அவள் ரகசியமான தத்து பிள்ளை உடையும், அது அவள் தத்து எடுத்த அப்பா அம்மாவுக்கு பிரச்சனை ஆக கூடும் என்றும் மறைத்து இருக்கலாம்.
இது எல்லாம் மது சொன்ன போதே லிங்காவின் மனதில் ஒடியது.. ஆனால் அடுத்து அவள் சொன்ன .. இதே காலேஜ் நிர்வாகம் வேறு ஒருவரிடம் சென்று இருந்தால் நான் சொல்லி இருக்க மாட்டேன் என்றதோடு கடைசியாக அவள் தன்னை அழைத்த ஈஷ் அத்தானில்..
“இந்த ஈஷ் அத்தான்.. “ என்று இவள் தன்னை அழைத்தாலே போதும் போலவே.. நான் இவள் சொல் படி ஆட ஆரம்பித்து விடுவேன் போலவே.. பின் நான் நினைத்தது எப்படி நடத்தி முடிப்பது என்று எண்ணம் வந்தாலுமே லிங்கா சிரித்து கொண்டு..
“ நான் உன் பேச்சை கவனிக்கவில்லை என்று இல்ல. மது.. நான் சொல்ல சொல்ல.. கொஞ்சம் பழைய நியாபகமும் வந்து விட்டது அது தான்.. நான் நீ அத்தைக்கு பிறந்த குழந்தை இல்லை என்று எல்லாம் அப்படி அமைதியாக ஆகி விடல.
நீ எப்படியோ.. ஆனால் நான்.. உன்னை மூன்று மாதம் குழந்தையா இருக்கும் போதே பிடிக்கும்.. அந்த பிடித்தம் அத்தை மகள் என்பதால் இல்லை. இன்னும் கேட்டால் இந்த வீட்டில் உறவை புதுப்பித்து கொள்ள எனக்கு ஒரு போதும் விருப்பம் இருந்தது கிடையாது.” என்று முதலில் மென்மையாக ஆரம்பித்த அவன் பேச்சு முடிவில் அவன் குரல் அப்படி கடினப்பட்டு போனது..
மதுவுக்கும் லிங்காவை பற்றி சிறிது தெரியும்.. தன் அம்மாவின் மூலம்.. அதனால் லிங்காவின் பேச்சால் அந்த நொடி கடிணப்பட்டு போக.
பின் அவனே. “ இது எல்லாம் விடு மது. பின் சஜனாவுக்கு என்ன ஆனது என் கணக்குப்படி..” என்று மீண்டும் சஜனா பேச்சை லிங்கா தொடங்கவும். மீண்டும் மதுவுக்கு சஜனா அதன் பின் நடந்த விசயங்களே மனது ஆக்கிரமித்து கொள்ள. அதை லிங்காவிடம் பகிர்ந்தாள்..
“சஜனா ரொம்ப தைரியமானவள்.. புத்திசாலி, திறமையான பெண்.. அதனால தான் அப்பா அம்மா பேசியதை வைத்து என்னை அவள் கண்டு பிடித்தாள்..” என்று மது சொல்ல..
லிங்காவுமே சஜனா தன்னை தொடர்பு கொண்டதை பற்றி மது சொல்லும் போது இதை தான் நினைத்தான்.. அதனால் மதுவின் பேச்சுக்கு ஆமோதிப்பாக தலையாட்டியவனிடம்.
“இப்போ நினைக்கிறேன் .. அவள் என்னை தொடர்பு கொள்ளாமல் இருந்து இருக்கலாம் என்று.. அதனால தானே நாங்க பேசிக் கொண்டோம்.. அதன் பின் பத்தாவது ரிசல்ட்.. அதுல அவள் அந்த ஸ்டேட் பஸ்ட்.
அதற்க்கு அவள் எவ்வளவு பெருமை பட்டாளோ நான் பட்டேன் ஈஷ் அத்தான்.. என் கூட பிறந்தவள் என்று சொல்ல எனக்கு அவ்வளவு ஆசையா இருந்தது.
ஆனால் இது வரை அவங்க பேச்சு செயல் இதுல எதிலுமே, வேத்துமை இல்லாம சொந்த மகள் போல பாசம் காட்டும் அப்பா அம்மாவை நினைக்கும் போது..
அதுவும் யார் கிட்டேயும்.. அம்மாவும் சரி.. அப்பாவும் சரி.. அவங்க பெத்தவங்க கிட்டயே மறைத்த விசயம் என் மூலமா வெளி வருவதில் எனக்கு விருப்பம் இல்ல ஈஷ் அத்தான்..
ஆனாலும் என் கூட பிறந்தவளை என் கிட்ட வைத்து கொள்ள ஆசைப்பட்டேன்.. சென்னையில் நம்ம ஸ்கூல் படிப்பதில் எல்லோரும் விரும்புவாங்க.
நானும் அங்கு தான் படிச்சிட்டு இருந்தேன்.. எனக்கு ஒரு ஆசை அவளுமே நம்ம ஸ்கூல்ல படிச்சா.. கூடவே இருக்கலாம்..
நான் தான் இந்த ஐடியாவை சஜனா கிட்ட சொன்னது. அவள் ரொம்ப தயங்கினா தான்.. நான் தான் நாம ஒன்னா இருக்கலாம் என்று அப்படி இப்படி பேசி.. சஜனாவை அப்பா கிட்ட பேச வைத்து.. அவர் அனுமதி வாங்கிய பின்..
நான் நம்ம ஸ்கூல் சஜனாவை சேர்க்க ஷிவ் அண்ணா கிட்ட..என் பிரண்டோட ரிலேடீவ் நம்ம ஸ்கூல்ல சேர்க்கனும் என்று சொன்ன போது முதல்ல அவர் ஒத்து கொள்ளவில்லை.
நம்ம ஸ்கூல்ல்ல அட்மிஷன் வாங்க. எத்தனை வி.ஐ.பி காத்துட்டு இருக்காங்க நீ என்னவோ என் பிரண்ட் என்று கதை எடுத்துட்டு வர ஒத்து கொள்ள தான் இல்ல..
அப்புறம் மும்பையில் ஸ்டேட் பஸ்ட் என்று சொன்னதுமே தான் அண்ணா ஒத்து கொண்டாங்க. சஜனாவை ட்ரைனப் செய்தா ப்ளஸ் டூவில் பஸ்ட் எடுக்க வைக்கலாம்.. அது நம்ம ஸ்கூல்லுக்கு பெருமை.. என்று..”
இவ்வளவும் தங்கு தடையின்றி சொல்லி கொண்டு வந்த மது.. பின்.. “ நான் சென்னைக்கு அவளை கூப்பிட்டு இருக்க கூடாது ஈஷ் அத்தான். கூப்பிட்டே இருக்க கூடாது.” என்று இதையே சொல்லி கொண்டு வந்தவளை அவள் அமர்ந்து இருந்த இருக்கையிலே அமர்ந்த லிங்கா மதுவை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டு ஆறுதல் படுத்தியவன்..
“ நீ எதுவும் தெரிஞ்சி செய்யலையே மது… பின் நடப்பதை முன்னவே தெரிந்து கொள்ள நம்ம கடவுள் இல்லையே..” என்றவனின் பேச்சு மதுவுக்கு சிறிது ஆறுதல் படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த ஆறுதலில் தான் அடுத்து சஜனாவை பற்றிய அனைத்துமே சொல்லி முடித்தாள்..
“ வந்தாள் நம்ம ஸ்கூல் ஹாஸ்ட்டலில் தான் தங்கினாள்.. இரண்டு பேரும் ஒரே சப்ஜெக்ட் பஸ்ட் க்ரூப் ஒரே க்ளாஸ்.. அந்த இரண்டு வருடமும் எப்படி போச்சின்னு தெரியல ஈஷ் அத்தான்..
சொல்வாங்கலே கஷ்டமான காலத்தில் நேரம் போகவே போகாது.. ஆனால் நாம சந்தோஷமா இருக்கும் போது நேரம் பஞ்சா பறக்கும் என்று.. அதை நான் அனுபவத்தில் உணர்ந்தேன் ஈஷ் அத்தான்..
ஷிவ் அண்ணா நினைத்தது போல தான் அவள் ஸ்டேட் பஸ்ட் வந்தாள்.. ஆனால் கவர்மெண்ட் அதை வெளிப்படைய சொல்ல கூடாது என்று சட்டம் வந்தாலுமே, ஏதோ ஒரு வகையில் தெரிந்து விடும்.. அதே போல் தான் தெரிந்தது.. அவளாள் நம்ம ஸ்கூலுக்கு எவ்வளவு பெருமை தெரியுமா ஈஷ் அத்தான்.
அதை வைத்து அடுத்து காலேஜ் பீஸ் ஏத்தி டோனேஷன் ஏத்தி என்று நிறைய பணம் பார்த்துட்டாங்கா… அதற்க்காவது அவளை கொல்லாது விட்டு இருக்கலாம் இவங்க.’” என்று சொல்லி கொண்டு இருந்தவளின் கை கீழ் தளத்தை காட்டி சொன்னதில்..
லிங்கா. “ யார் கொன்னாங்க மது…” என்று அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்து விட்ட வாரே கேட்டான்..
“ தெரியலையே ஈஷ் அத்தான். தெரியலையே..” என்று தன் உதட்டை பிதிக்கி சொன்னவளை பார்க்க பார்க்க லிங்காவுக்கு பாவமாக போய் விட்டது.
அதில். “கண்டு பிடித்து விடலாம் மது.. கவலை படாதே கண்டு பிடித்து விடலாம்..” என்ற லிங்காவின் பேச்சில் , சோர்ந்து இருந்த மதுவின் முகத்தில் சட்டென்று ஒரு வெளிச்சம்..
“கண்டு பிடித்து விடுவீங்களா ஈஷ் அத்தான். கண்டு பிடித்து விடுவீங்களா. ? உங்களாள் முடியுமா.?” என்று ஒரு வித எதிர் பார்ப்போடு தன்னை பார்த்து கேட்ட மதுவிடம்.
“முடியாது..” என்று அவனால் சொல்ல முடியவில்லை..
“ கண்டிப்பா கண்டு பிடித்து விடலாம் மது..” என்று அவளின் கை பற்றி வாக்குறுதி கொடுப்பது போல் சொன்னவனின் கையை கெட்டியாக பிடித்து கொண்ட மது..
“கண்டு பிடித்த குற்றவாளி நம்ம வீட்டு ஆளுங்களா இருந்தாலுமே.. இதனால் நம்ம ஸ்கூல் காலேஜ் மூடும் படி ஆனாலுமே குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுப்பிங்களா ஈஷ் அத்தான்..” என்ற அவளின் பேச்சில்.
லிங்கா.. “ சஜனா என்ன சொன்னா மது..?”
மது கேட்டதற்க்கு லிங்கா பதில் சொல்ல வில்லை என்றாலுமே, பிடித்த கையை விடாது ஒரு வித தீர்மானம் மனதில் எடுத்த பின் தான் லிங்கா அந்த கேள்வியை மதுவிடம் கேட்டது..
ஆனால் மது அவன் கையில் இருந்து தன் கையை உறுவிக் கொண்டவள்.. “ அது தானே. உங்களுக்கும் பணம் தான் மோட்டீவ் இல்லையா..” என்று கேட்டவள் அங்கு இருந்து செல்ல பார்த்தவளின் கை பிடித்து லிங்கா இழுக்க. நீச்சல் குளம் அருகில் இருந்த இருக்கையில் இவர்கள் அமர்ந்து இருந்ததால் அங்கு தண்ணீர் துளிகள் கொஞ்சம் சிதறி இருந்ததாலும், மதுவின் கால் வழுக்கி விட்டதில் லிங்கா கை பிடித்த இழுப்புக்கு பேலன்ஸ் செய்ய முடியாது மொத்தமாக அவன் மீது விழுந்தாள் மது..
சரியாக அந்த சமயம்.. சிவ பிரகாஷ் அங்கு வர. அந்த காட்சியும் அவர் கண்ணில் பட்டது…