Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Pirithariyaa Pithana Podhum -16

  • Thread Author
அத்தியாயம்.16

லிங்கா சொன்னது போலவே மதுவை கல்லூரிக்கு அழைத்து போகும் முன் ஒரு நல்ல உணவகத்திற்க்கு அழைத்து சென்றான்..

மதுவிடம். “என்ன சாப்பிடுற..?” என்று கேட்டதற்க்கு..

“ஒன்னும் வேண்டாம்..” என்று மறுத்தவளின் பேச்சை சட்டை செய்யாது, லிங்கா பொதுவாக பிடித்த உணவை, ஏற்கனவே சாப்பிட்டு இருந்தாலுமே, மதுவுக்கு கம்பெனி தர வேண்டி இருவருக்கும் சேர்த்தே சொல்லி விட்டு..

மதுவிடம்.. “நேத்து பேச்சுக்கு பேச்சு ஈஷ் அத்தான்.. ஈஷ் அத்தான்.. என்று கூப்பிட்ட இப்போ என்ன மொட்டையா பேசுற..?” என்று கேட்டவனை மது. என்ன என்பது போல் பார்த்தாள்..

மதுவின் கவனம் இங்கு இல்லவே இல்லை… போலீஸ் அதிகாரி பேச்சிலேயே நிலைத்து இருந்தது.. எவ்வளவு சின்ன விசயம் இது.. அதை கண்டு பிடிக்காது என்ன இது..? இது எல்லாம் மறைக்கும் அளவுக்கு நம் வீட்டு ஆண்கள் அவ்வளவு மோசமானவர்களா.. அது யார்.? .” இதே தான் அவள் மனதில் ஒடி கொண்டு இருந்தது.



அதனால் லிங்காவின் பேச்சை கவனிக்கவில்லை.. லிங்காவும் மதுவின் முக பாவனையில் புரிந்து கொண்டு.. அதை விடுத்து..

“என்ன மது..?” என்ற கேள்விக்கு..

“ ம்.. ம்..” என்று தலையாட்ட..திரும்பவும்.

“இப்போ உனக்கு என்ன பிரச்சனை..? என்று கேட்டான்..

“தெரியாதா..?” என்று இப்போது மது லிங்காவை முறைத்து கொண்டு கேட்க..

“ம் இது ஒகே..அதை விட்டு எப்போதும் அது என்ன சோக கீதம் வாசிச்சிட்டு இருக்கே..” என்று லிங்கா பேசிக் கொண்டு இருக்கும் போதே அவர்கள் சொல்லிய உணவு வந்து விட.

லிங்கா மதுவுக்கு உண்டான உணவை அவள் பக்கம் நகர்த்தி விட்டு.. இப்போது மீண்டும் லிங்கா மதுவை பார்த்தான்..

“ பிரச்சனை தனக்கு என்று வந்தால் தான் தெரியும் ஈஷ் அத்தான்..” என்று கேட்டவளின் வாயில் மீண்டும் அந்த ஈஷ் அத்தான் அழைப்பு ஒட்டி கொண்டது.

அந்த அழைப்பை மனதில் ரசித்துக் கொண்டே… “உனக்கு மட்டும் தான் பிரச்சனையா என்ன..? நான் என்ன ஜாலியா இருக்கேன்னா.. சொல்.. பார்த்தல காலையில..

நேத்து நையிட் பார்த்தலே.. ஏதோ குற்றவாளியை ரவுண்ட் கட்டி பிடிப்பது போல் கிழே நின்று கொண்டு இருந்ததை..

உனக்காவது உன் அப்பா அம்மா உன்னை புரிந்து நடந்து கொள்றாங்க.. அதனால நேத்து எந்த பிரச்சனையும் இல்லாம போயிடுச்சி. அது வரை நீ கொடுத்து வைத்த பெண் தான்..” என்ற லிங்காவின் பேச்சில் இருந்த உண்மையில் மது அமைதியாகி விட்டாள்.

பின் சிறிது நேரம் கழித்து காலையில் நடந்த பேச்சு.. அதுவும் லிங்காவின் அம்மாவை பற்றியது .. அதை லிங்காவிடம் கேட்கலாமா..? ? வேண்டாமா..? என்ற யோசனையில் ஒரு வாய் உணவை உண்பது..பின் லிங்காவை பார்ப்பது என்று இருந்த மதுவை பார்த்த லிங்கா சிரித்து கொண்டே..

“என்ன கேட்கனும் கேள் மது… “ என்று சொன்னவன்.. பின் குறும்பு சிரிப்புடன்..

“ நான் ரொம்ப நாள் வெளி நாட்டில் இருந்தவன் தான்.. ஆனாலும் கல்யாணத்திற்க்கு முன் தப்பு செய்யும் எண்ணம் எல்லாம் எனக்கு கிடையாது மது.



அதுவும் கல்யாணத்திற்க்கு முன் தப்பு செய்து அதன் பலன் நமக்கு கிடைத்து விட்டால், அது என்ன என்ன பிரச்சனையை உண்டாக்க கூடும் என்று அனுபவம் உன் முன் நான் இருக்கும் போது..

ம். அது மட்டும் இல்லாது வேறு எது என்றாலும் பரவாயில்லை.. கேள் கொடுக்கிறேன் ..” என்றவனின் பேச்சில், மது என்ன மாதிரி பாவனை காட்டுவது என்று தெரியாது கையில் எடுத்த உணவை வாயில் போடாது லிங்காவின் முகத்தையே என்ன என்று சொல்ல முடியாத பாவனையின் அவனை பார்த்திருந்தாள்..

அவள் பாவனையில் லிங்கா சட்டென்று சிரித்தவன் எக்கி அவள் முன் முடியை லேசாக கலைத்து விட்டவனின் முகபாவனை அவ்வளவு அழகாக இருந்தது.. இப்போது என் மனமும் அழகாக ஆகி கொண்டு இருக்கிறது என்பது போல்..

“நிஜமா மது.. நான் இந்தியா வர.. அவ்வளவு கஷ்டப்பட்டேன்.. மாமாவுக்கும் எனக்கும் அவ்வளவு லடாய்.. நரகத்திற்க்கு கூட அனுப்பி விடு.. ஆனா இந்தியா வேண்டாம். என்று.

ஏன் இங்கு வரும் போது கூட நான் திரும்ப வருவேன் என்று என் மாமா கிட்ட சொல்லிட்டு தான் இங்கு வந்தேன்.. ஆனா நரகத்தில் எனக்காக ஒரு தேவதை இருப்பாள் என்று நான் நினைத்து பார்க்கவில்லை..” என்ற லிங்காவின் பேச்சில் கூட மதுவின் அந்த அதிர்ந்த முகம் மாறவில்லை..

லிங்கா பின் தான் அவள் முகத்தை கவனித்து. “ ஏய் மது ஏன் இப்படி பார்க்கிற.. நான் இப்படி பேசுவது உனக்கு பிடிக்கலையா..” என்று பதட்டத்துடன் கேட்டான்..

அவனின் பதட்டமான குரலில் நிகழ்வுக்கு வந்த மது.. “ அப்போ ஏன் அப்படி பேசினிங்க ஈஷ் அத்தான்..” என்ற மதுவின் அந்த அழைப்பில்..

நான் பேசினது பிடிக்காது எல்லாம் இல்ல.. என்று நிம்மதியான லிங்கா அடுத்து அவள் கேட்ட முன் பேசியது என்ன என்று யோசித்தவன்.. அதை அவளிடமே கேட்டு விட்டான்..

அதற்க்கு மது ..” அது தான் கல்யாணம் முன் தப்பு..” என்ற பேச்சில், அது என்ன என்று புரிந்து கொண்டவனின் முகத்தில் இத்தனை நேரம் இருந்த அந்த சிரிப்பு மறைந்து அங்கு ஒரு வித இறுக்கம் வந்து அமர்ந்து கொண்டது..

அவனையே பார்த்து கொண்டு இருந்த மது.. அவன் முகபாவனையில்.. “சொல்ல பிடிக்கலேன்னா வேண்டாம் ஈஷ் அத்தான்..” என்று சொல்லிய மது..

தன் முன் டேபுல் மீது இருந்த அவனின் ஒற்ற கையில் அவள் கை பதித்தாள்.. தன் கை மீது வைத்த அவள் கையையே பார்த்திருந்த லிங்கா தன் மற்றோரு கையை அவளின் கைய் மீது பதித்தவன்..

“ எப்படி நான் உன் கிட்ட இது எல்லாம் இவ்வளவு ஈசியா பேசினேன் என்று எனக்கே புரியல மது.. நீ கேட்ட போது தான் எப்படி.? எனக்கே ஆச்சரியமா இருக்கு.. எப்படி உன் கிட்ட என்னால சொல்ல முடிந்தது என்று..

நான் இதை எனக்கு ரொம்ப க்ளோஸ் என்று நினச்சிட்டு இருந்த என் மாமா கிட்ட கூட இவ்வளவு ஈசியா பேசி இருப்பேனா தெரியல.” என்று அவன் சொல்வதிலேயே அந்த விசயம் சொல்ல லிங்க் எவ்வளவு தயங்குக்கிறான் என்பதை மது புரிந்து கொண்டாள்..

புரிந்து கொண்டவள்.. “ சொல்ல முடியலேன்னா வேண்டாம் ஈஷ் அத்தான்.. எனக்கு புரிந்த வரை போதும்..” என்றவளை விரக்தியாக பார்த்தவன்..

“புரிந்த வரையா..?” என்று சொன்னவனின் அந்த விரக்தி சிரிப்பு.. கசந்த சிரிப்பாக மாறியது..

“என்ன புரிந்து கொண்டு இருப்ப.. என்ன என்று புரிந்து கொண்டு இருப்ப மது… என் அம்மா கெட்டவங்க. ஒழுக்கம் அற்றவங்க. இது போல் தானே.. ஏன்னா உனக்கு அந்த வீட்டில் சொல்லப்படும் விசயத்தை வைத்து தானே என் அம்மாவை பத்தி ஒரு ஜட்ஜ் பண்ணி இருப்ப..” என்று முதலில் தயங்கிய குரலா இது என்று யோசிக்கும் படியாக இப்போது பேச்சில் ஒரு குத்தல்.. நக்கல்… நைய்யாண்டி.. கலந்து கட கட என்று பேசியவனின் பேச்சை தடுக்க முடியாது அவன் பேசிய பின் மது..

“ எனக்கு என்று அறிவு சுத்தமா இல்லையா ஈஷ் அத்தான். மத்தவங்க பேச்சை வைத்து ஒருத்தவங்களை நான் ஜட்ஜ் செய்தா. அப்போ என் மூளை துரும்பிடித்து போய் விடாதா.? “என்று கேட்டவள்.

பின் தயங்கி. “ நீங்க சொன்னது போல தான் வீட்டில் பேச்சு இருக்கும்.. ஆனா உங்களுக்கு என் அப்பா அம்மாவை பத்தி தெரியும் தானே ஈஷ் அத்தான். அவங்க சொல்லி இருக்காங்க.. எனக்கு அதை வைத்து ஒரளவுக்கு புரிஞ்சது தான்..

அதுவும் காலையில் வீட்டில் சொன்னிங்களே.. உங்க அப்பா வீட்டுக்கு அம்மா வரல. அம்மா வீட்டுக்கு தான் அப்பா போனார் என்று.. என் அம்மா சொன்ன போது நானும் அதையே தான் நினைத்தேன்..” என்று மது சொல்வது தன் அம்மாவை நல்லவராக காட்ட தான் மது பேசியது..



அதுவும் மது பட பட, என்று சொன்ன விதம்.. உன் அம்மாவை நான் தவறாக புரிந்து கொள்ளவில்லை என்பதை தனக்கு தெளிவுப்படுத்தும் வேகம் மட்டுமே மதுவிடம் இருந்தது.. அது லிங்காவுக்கு புரியவும் செய்தது தான்..

இருந்தும்.. இருந்தும்.. தன் அன்னையை பற்றி அலசப்படுவது.. தான் சொன்னது போல் என்று தன்னை ஒட்டி தான் மது சொன்னாள்.. ஆனாலுமே அப்பா அம்மாவை பற்றிய இது போலான பேச்சுக்கள் கேட்கப்படுவது எந்த மகனுக்கு தான் பிடிக்கும்..

அதில் லிங்காவின் முகம் வேதனையை கூட்ட. மதுவும் அப்போது தான் லிங்காவின் முக மாற்றத்தை கவனத்து தன் பேச்சில் இருந்த தவறு புரிந்து..

“ ஈஷ் அத்தான்.. சாரி.. சாரி..” என்று மன்னிப்பு கேட்டவளுக்கு தன் கை பிடியில் இருந்த அவள் கையில் அழுத்தத்தை கொடுத்து சமாளித்து கொண்டான்.

“இல்ல மது… உன் மேல தப்பு இல்ல.. ஆனா அம்மாவை பத்தி இப்படி.. அதுவும் அவங்க மேல தப்பே இல்லாத போது. “ என்று தன்னிடம் மாமா சொன்ன அனைத்தையும் மதுவிடம் சொன்னவன்..

“ நீ சொல் மது.. இதுல என் அம்மா மேல தப்பு இருக்கா..? கல்யாணம் நின்று விட போகிறது. தானே அவங்க பயந்து இருப்பாங்க..” என்று சொன்னவன்..

பின் தயங்கி தயங்கி.. “ இது உன் கிட்ட சொல்லலாமா கூடாதா.. என்று கூட தெரியல மது.. ஆனா சொன்னா என் மனசு லேசா ஆகும் என்று நினைக்கிறேன்.

என் மாமா என் கிட்ட சொன்னது. எனக்கே இதை பத்தி பேச அவ்வளவு யோசிக்கிறேன்.. ஆனா அம்மா மாமா கிட்ட சாகும் முன் சொன்னது.” என்றதில் மது அதிர்ந்து என்ன அவங்க சாகும் முன் உங்க மாமா கிட்ட பேசினாங்கலா..?” என்று அதிர்ந்து போய் கேட்டாள்..

“ ஆமாம்..” என்றவன்..

“ அன்னைக்கு என் ஸ்கூல் மீட்டிங்க அப்பாவை அழைக்க அந்த கல்யாண மண்டபம் போகும் போது அங்கு. இதோ இப்போ இருக்க இவங்களயும் ஒன்னா.. உனக்கு புரியுதா மது.



அதுவே வேதனையான விசயம் தான் மது.. எனக்காக அதை கூட தாங்கிட்டு என் அம்மா உயிரோட இருந்து இருப்பாங்க.. ஆனா அவர்.. அந்த பொம்பளை முன்னவே..

என் அம்மா அந்த பொம்பளையை திட்டும் போது. அவள் எதிர்க்கவே நீ மட்டும் என்னடீ யோக்கியம்.. நான் கூப்பிட்ட உடனே நீயும் தானே கல்யாணம் முன்னவே என் கூட படுத்த.. அதே போல. அதோட விடாது.. அன்னைக்கு மட்டும் தான் உன்னோட என் உறவு. அதுக்கு பின் இல்ல. ஆம்பிளை நான் என்ன பண்ணுவேன்.. நீயாவது உன் மகன் மீது கால் போட்டு தூங்குற. அதுல.”

அடுத்து அவனை பேச விடாது அவன் கை பிடியில் இருந்த தன் கையை விடு வித்து கொண்டு அவன் வாயை எக்கி பொத்திய மது.

“வேண்டாம் ஈஷ் அத்தான்.. வேண்டாம்.. இதுக்கு மேல சொல்லாதிங்க.. வேண்டாம்..’

மதுவுக்கு லிங்காவின் வாய் மூலம் பேசியதையே அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை.. லிங்காவின் அம்மா.

அவளே யோசித்து இருக்கிறாள். என்ன பிரச்சனை இருந்தாலும் என்ன மகனுக்காக வாழ்ந்து இருக்கலாமே என்று. ஆனால் இந்த பேச்சை கேட்டு..



அதுவும் இவ்வளவு நேரம் அவர் இருக்கும் வீட்டில் தான் இருந்து கொண்டு.. அவர் கேட்டால் பதில் சொல்லி கொண்டு இருந்ததை நினைத்து அவளுக்குமே அவமானமாக போய் விட்டது..

பின் கல்லூரியில் இருந்து அழைப்பு வர. லிங்கா மதுவை அழைத்து கொண்டு தன்னை சரிப்படுத்திக் கொண்டவனாக சென்றான்..

இவன் கல்லூரிக்குள் நுழையும் போதே.. காவல் அதிகாரி ஒருவர் நின்று கொண்டு இருப்பதை யோசனையுடன் பார்த்து கொண்டே காரை நிறுத்தியவன்.. மதுவை பார்த்து.

“உன் க்ளாசுக்கு போ...” என்று அவளிடம் சொன்னவன் பின் அந்த காவல் அதிகாரியின் அருகில் சென்றான்..

தன்னை முறையாக லிங்கா அறிமுகம் படுத்தி கொண்டவனிடம். அந்த காவல் துரை அதிகாரியும்.. தன் அறிமுகமாக..

“ஏற்கனவே உங்க காலேஜ் ஹாஸ்ட்டலில் நடந்த அந்த இறப்பை விசாரணை செய்தவன் நான்.. “ என்று கூறியவர் பின் அவர் சொன்ன..

“ இப்போ எதுக்கு அதை பத்தின டீடைய்ல்ஸ் தேவை என்று கேட்கிறிங்க. எனக்கு புரியல.. அதை நோண்டினா உங்க காலேஜை மொத்தமா இழுத்து மூடி விடுவாங்க.. அது உங்களுக்கு தெரியும் தானே..” என்றவரின் பேச்சை லிங்கா உள்வாங்கி கொண்டு இருந்த வேளை. அந்த இடத்திற்க்கு பரப்பாக ஒடி வந்த சிவ பிரகாஷ். “ என்ன இன்ஸ் எப்படி இருக்கிங்க..?” என்று நெடு நாள் பழகியவரின் குரலில் விசாரித்து கொண்டு இருக்கும் போதே சிவ பிரகாஷ் அந்த காவல் அதிகாரியிடம் ஏதோ சாடை செய்வதை லிங்கா கவனித்தான்..
































 
Well-known member
Joined
May 11, 2024
Messages
207
மதுவிடம் லிங்கா தன் அம்மாவுக்கு அப்பாவின் பேச்சால் ஏற்பட்ட மன வேதனை அவமானம் தன் மாமாவிடம் தன் அன்னை தற்கொலை செய்வதற்கு முன் பேசியதை சொல்லிவிட்டான்
கல்லூரி தாற்கொலையில் சிவபிரகாசம் அவர்கூட வேற யார்யிருக்கா 🤔🤔🤔🌺🌺🌺
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
270
ஜெயப் பிரகாஷ் 😈😈😈😈😈😈😈 எவ்வளவு கேவலமா நடந்துகிட்டு இப்போ அமைதியா இருந்து சிம்பதி create பண்ண பார்க்குறான்... 🤬🤬🤬🤬

இந்த ins தான் சிவத்தோட கூட்டா..... மொத்தமா எல்லாரும் மாட்டுவாங்க
 
Top