அத்தியாயம்…18
மது சொன்ன இடமான அவர்கள் கல்லூரியின் அருகில் இருந்த பூங்காவிற்க்கு லிங்கா வந்த போது மதுவின் அருகில் ஒரு இளம் பெண் அழுத முகத்துடன் அமர்ந்து கொண்டு இருந்ததை கவனித்தான்.
அவள் கழுத்தில் தொங்கி கொண்டு இருந்த அந்த அடையாள அட்டை சொன்னது அவள் தங்கள் கல்லூரி மாணவி என்பதனை.. மது லிங்காவை பார்த்ததும் அந்த பெண் பக்கத்தில் அமர்ந்து அவள் கை பிடித்து கொண்டு இருந்தவள் சட்டென்று எழுந்தவள் தன்னை நோக்கி வர பார்த்தவளை போக விடாது எதற்க்கோ பயந்தது போல் முகத்தினை வைத்து கொண்டு இருந்தவளை கவனித்த லிங்கா மதுவிடம்
“அங்கயே இரு..” என்று சைகையில் சொன்னவன் அவர்கள் அருகில் சென்று நின்றான்..
லிங்காவின் நிழல் அந்த பெண் மீது விழவும் பதறி போனவளாக அதிர்ந்து தன்னை நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் முதலில் தெரிந்தது ஒரு ஆசுவாசம்.. அடுத்து பயம்… ஒரு பரிவிப்பு ….என்று அவள் முக பாவனை நொடிக்கு நொடி மாறி கொண்டு இருந்ததை கவனித்த லிங்கா எதுவோ சரி இல்லை என்பது தெரிந்தது… எது என்றாலும், அவர்களே சொல்லட்டும் என்று எதுவும் கேட்காது.. மதுவின் பக்கம் அமர்ந்தான்..
சிறிது நேரம் அங்கு எந்த சத்தமும் இல்லாது அமைதியில் கழிய. பின் மது அந்த பெண்ணிடம்.. “நீ சொல் ஷைலஜா..” என்று சொல்ல..
அவள்.. “ இ..ல்ல மது நீயே சொ..ல்.. என்னா..ல முடி…யாது..” என்று சொன்னவளின் குரலும் அவள் அழுததில் எதிரொலியாக கர கர என்று இருந்தது..
பின் மதுவே லிங்காவின் பக்கம் திரும்பி.. “ “இவள் முதல்ல இப்போ இறந்தாளே. அந்த பெண் அறையில் தான் தங்கி இருந்தாள்.” என்று கூறியதும்..
பிரச்சனையின் நுனி என்ன என்பது லிங்காவுக்கு புரிந்து விட்டது.. இருந்தும் எது என்றாலும் அவர்களே சொல்லட்டும் என்று இருக்க..
மது.. “ இன்னைக்கு காலையில் அவள் பேசிக்கு ஒரு வீடியோ வந்து இருக்கு.. அதுல அவள் குளிக்கும் போது எடுத்த வீடியோ லிங்க் அனுப்பி இருக்காங்கா.. அதாவது இப்போ இறந்த பெண் இருந்த அறையில் இருந்த போது குளித்த போது எடுத்த வீடியோ..” என்று மது சொல்லவும்..
லிங்கா..” என்ன என்று மிரட்டுறாங்க..?” என்று கேட்டவனுக்கு..
மது சங்கடத்துடன்.. “ அவங்க காண்பிக்கும் ஆணை திருமணம் செய்து கொள்ள வேண்டுமாம்…” என்று மது சொல்ல.
“என்ன கல்யாணமா..? இது என்ன புதுசா இருக்கு..? என்ற யோசனை தான் லிங்காவுக்கு..
அதை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டி ..
“ என்ன கல்யாணமா.. ? யூ மீன் மேரஜ்…?” என்று மீண்டும் தன் காதில் விழுந்த வார்த்தைகள் சரி தானா என்று உறுதி படுத்தி கொள்ள வேண்டி கேட்டான்..
மது முறைத்து கொண்டே. திருமணம் என்றாலும் மேரஜ் என்றாலும் ஒரே அர்த்தம் என்று தான் எனக்கு சொல்லி கொடுத்து இருக்காங்க.. அங்கே கனடாவில் எப்படியோ…? என்று கேட்டவளுக்கு பதில் சொல்லாது அடுத்து சொல் என்பது போல் தான் லிங்கா அந்த பெண் ஷைலஜாவை பார்த்து கொண்டே மதுவிடம் சொன்னது….
மது ஒன்றும் பேசாது மீண்டும் அழுது கொண்டு இருந்த அந்த பெண் ஷைலஜாவை தைரியப்படுத்தி கொண்டு இருந்த மதுவிடம் லிங்கா…
“ நம்பர் இல்லாது வந்ததா.. என்று அது தான் இருக்கும் என்று உறுதியாக தெரிந்தும் கேட்டான்.. அவன் நினத்தது போல் தான்.. மது.. “ ஆமாம்..” என்றதும்.
முன் இறந்தவங்க போன் இல்ல என்று சொன்னாங்க.. இதோ நேத்து இறந்த பெண்ணோட போன் கூட கிடைக்காத படி தான் சொல்வாங்க. ஏன் ஈஷ் அத்தான்.. இறந்த பெண் நம்பரை வைத்தே ஈசியா அந்த பெண் தொடர்பு கண்டு பிடித்து விடலாமே. .. அப்படி கண்டு பிடிக்கும் போது அந்த நம்பருக்கு அனுப்பிய வீடியோ வெளி வந்து விடும் தானே.. அப்போ உண்மை தெரிந்து இருக்குமே.” என்று மது ஆதங்கத்துடன் கேட்டாள்..
அதற்க்கு லிங்கா. “ அது எல்லாம் உண்மையான குற்றவாளி கண்டு பிடிக்க என்று நினைத்தால் செய்வது. அதுவும் இவங்க செலக்ட் செய்யும் பெண்கள் எந்த பேக்கிரவுண்டும் இல்லாது. எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவங்களுடையாதாவும்.. ப்ளஸ் அழகான பெண்களுடையதாகவும் தான் இருக்கு.. ஆ இன்னொன்னு அந்த பெண்கள் எல்லாம் ஸ்காலர்ஷிப்பில் படிக்கிறவங்க” என்று மதுவிடம் லிங்கா சொல்ல.
பக்கத்தில் இருந்து கேட்டு கொண்டு இருந்த ஷைலஜா.. “ ஆமா நான் ஸ்காலர்ஷிப்பில் தான் படிக்கிறேன்.. என் அப்பா ஊரில் விவசாயம் பார்க்கிறாங்க. என் அம்மா நான் ப்ளஸ் டூ முடித்ததுமே என் அத்தை மகனுக்கு தான் என்னை கட்டி கொடுத்து விடனும் என்று நினைத்தாங்க..”
“ஆனா என் அத்தை மகன் தான்.. இவ்வளவு மார்க் எடுத்து இருக்கா .. எதுக்கு இப்போதே கல்யாணம்.. படித்து முடித்து வரட்டும்.. அவள் மார்க்குக்கு நல்ல காலேஜில் ஸ்காலர்ஷிப்பில் கிடைக்கும்.. “
“நாம பணம் கூட அதிகம் செலவு செய்ய தேவை இல்ல. அவள் படித்து முடித்து நாங்க கல்யாணம் செய்துக்குறோம்.. ஏன் அவசரப்படனும்.. நான் எங்கு போயிட போறேன்.. அவள் எங்கு போயிட போறா.. என்று சொன்னார்.” என்று சொன்ன அந்த பெண் ஷைலஜா பின் அழுதுக் கொண்டே.
“எனக்கு என் அத்தான்னா ரொம்ப பிடிக்கும் சர். நான் அவர் கிட்ட கூட ரொம்ப கிட்ட நின்னு கூட பேசினது இல்ல.. அதே போல் தான் அத்தானுக்கும் என்ன ரொம்ப பிடிக்கும்.. ஆனா ஒரு வயசுக்கு மேல தூரம் நின்னு தான் பார்ப்பார்.”
“ஆனா என்னைய என்னைய எவன் எவனோ..” என்று தன் கையில் இருந்த பேசியை லிங்காவிடம் காட்டி..
“அசிங்கமா இருக்கு சர். இது உங்க காலேஜ் தானே சர். உங்கள நம்பி தானே சர்.. அவ்வளவு தூரத்தில் இருந்து படிக்க வர்றோம்.. உங்க ஹாஸ்ட்டல் சாப்பாடு தானே சர். சாப்பிடுறோம்.. காலையில் இது வந்ததில் இருந்து சொட்டு பச்ச தண்ணி கூட குடிக்கல சர்.”
“பயமா இருக்கு.. அதுல ஏதாவது கலந்து கொடுத்து ஏதாவது செய்து அத வீடியோ. எடுத்துட்டா.. எங்க தப்பு என்ன சர்.. படிக்கிற பசங்க படிக்க நினைத்தது அவ்வளவு பெரிய தப்பா சர்.. ஒசியில் படிப்பு கிடைத்து விடுமா. ? என்று கேட்கிறாங்க சர்.. அதுக்கு முதல்லயே நீங்க சொல்லி இருக்கலாமே சர்.. பணம் இருக்கிறவங்க கிட்ட பணத்தை கரப்போம் இல்லாதவங்க கிட்ட இப்படி செய்து கழிச்சிப்போம் என்று.”
“நான் என் அத்தானை கட்டிட்டு மானத்தோட இருந்து இருப்பேனே. சர்.. பிச்சை எடுத்தாலும் படிக்கலாம் என்று சொன்னவங்க கூட இப்படி கல்யாணம் செய்து அவன் கூட படுத்து கூட படிப்பை முடிக்கனும் என்று சொல்லலையே சர்..” என்று அந்த பெண் ஷைலஜா லிங்காவை பார்த்து கேட்ட கேள்வியில் லிங்காவை செருப்பால் அடித்தது போல் உணர்ந்தான்..
நிஜம் தானே இந்த பெண் சொல்வது அனைத்தும் உண்மை தானே.. தான் இதற்க்கு காரணம் கிடையாது.. ஆனால் இந்த கல்லூரி தனக்கும் சம்ம்ந்தப்பட்டது தானே..
அதனால் தானே எந்த முனைப்பும் எடுக்காது இது தன்னிடம் வந்து சேர்ந்தது.. தன்னுடைய அவமானம்.. தன் மனது என்று நான் என்று சுயநலமாக நினைத்து சென்றது தவறோ… என்று மனது குற்றவுணர்ச்சியில் லிங்கா தவித்து கொண்டு இருந்த போது மது இவன் முகத்தில் இருந்து என்ன கண்டாளோ..
“ ஷைலஜா ஈஷ் அத்தான் இப்போது தான் இந்த கல்லூரியின் பொறுப்பை ஏற்று இருக்கிறார். இங்கு நடந்ததிற்க்கும் இவருக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது..” என்று மது சொல்ல.
அதற்க்கு ஷைலஜா. “ இந்த காலேஜூக்கும் இவருக்கும் சம்மந்தம் இருக்கு தானே.. “ என்ற கேள்விக்கு மதுவால் பதில் அளிக்க முடியவில்லை..ஆனால் லிங்கா . “ நீ சொன்னது சரி தான்மா. நான் என் பொறுப்பை விட்டு ஒடி இருக்க கூடாது..” என்று வருந்தி கொன்னவனின் கை பிடித்த மது..
“ ஈஷ் அத்தான்..’” என்று அவனை அழைத்ததில் தன்னிலையில் இருந்து வெள் வந்தவன்..
“ ஆனால் இனி என் பொறுப்பில் இருக்கும் வரை இனி இது போல தவறு நடவாது ஷைலஜா..
“அவள் கையில் இருந்த பேசியை காட்டி.. “ என்னிடம் தருவாயா..? நான் அதை பார்க்க மாட்டேன் என்னை நம்பு.. ஆனா எனக்கு இந்த போன் வேண்டும்.. இதை வைத்து தான் ஏதாவது செய்ய முடியும்..” என்றதும் ஷைலஜா தயங்கி கொண்டு மதுவை பார்த்தாள்..
மதுவோ. “ நான் சொன்னேன் தானே ஷைலு.. இறந்த பெண்களில் என் ட்வீன்சும் ஒருவள் என்று.. நம்பு ஈஷ் அத்தான் இதை தவறா உபயோகப்படுத்த மாட்டார்..” என்று நம்பிக்கை தந்த பின் தன் பேசியை லிங்காவிடம் தந்தாள்..
பின்.. “இனி நீ ஹாஸ்ட்டலில் இருக்க தேவை இல்லை..” என்று சொன்னவன்..
தன் அம்மா வீடு.. அதாவது அவள் அம்மாவின் தாய் வீட்டை இரண்டு நாள் முன் தான் குடி இருந்தவர்கள் காலி செய்து விட்டனர்.. அதை போய் பார்த்து.. வெள்ளை அடித்தல் ஏதாவது சீர் செய்வது என்றால் செய் என்று அவனின் மாமா சொன்னார்..
இந்த பிரச்சனையில் நான் அந்த வேலையை ஆரம்பிக்கவில்லை. அதனால் அங்கு இரு… என்று மதுவோடு அங்கு ஷைலஜாவை தங்க வைத்து செய்து விட்டு தேவையானதை வாங்கி கொடுத்த பின் ..
இங்கு தொலை பேசி இருக்கு.. அது உபயோகித்தில் தான் இருக்கு ஏதாவது எமெர்ஜென்ஸி என்றால் எனக்கு கால் பண்ணு.. யார் பேசுவது என்று கேட்டுட்டு பேசு என்று சொல்லி தன் கைய் பேசி எண்ணை கொடுத்தவன்..
“ மதுவுடையது தெரியும் தானே..? என்று லிங்கா கேட்டதற்க்கு தெரியும் என்பது போல் ஷைலஜா தலையசைக்க.
“ சரி ஜாக்கிரதை.” என்று பல பத்திரம் சொல்லி மதுவோடு வீடு வந்தவன கூடத்தில் இருந்தவர்கள் அனைவரும் அவனின் வருக்கைக்காக காத்து கொண்டு இருந்தனர்..
“என்ன என்பது போல் ..” பார்த்தவனிடம் அவனின் தாத்தா சோமசுந்தரம்..
“ காலேஜ் அந்த பெண் இறப்பு போஸ்ட் மார்ட் ரிப்போர்ட் வந்து விட்டதா லிங்கா…” என்று கேட்டதற்க்கு லிங்கா..
“ நான் எதிர் பார்த்தது போல் தான்.. தற்கொலை அதாவது மேல் மாடியில் இருந்து அந்த பெண் விழுந்து தான் இறந்தாள் என்று வந்து இருக்கு..” என்று சொல்லவும்..
சோமசுந்தரம்..” நீ ஏன்பா அது கொலை என்றே முடிவு செய்யிற. போஸ்ட் மார்ட் ரிப்போர்ட் படி அது தற்கொலையாவே இருக்கலாம் தானே…?” என்று கேட்கவும்..
“ அது எப்படி ஒரே ரூம்ல் இருக்கும் அந்த பெண்களுக்கு மட்டும் தற்கொலை பண்ணிக்கனும் என்ற எண்ணம் தோனும்.. அந்த ரூமில் ஏதாவது ஆவி இருக்கா என்ன..?” என்று சீரியஸாக பேச ஆரம்பித்து கிண்டலுடன் கேட்க..
லிங்காவின் பேச்சில் சிவ பிரகாஷ் கொஞ்சம் பதறி தான் போய் விட்டார். ஏன் என்றால் லிங்கா சொன்னது போல் அந்த அறையில் ஆவி ஏதாவது இருக்கும் இந்த ரூமரை பரவி விடுவது தான் அடுத்து அவரின் திட்டமாக இருந்தன..
மறு நாளும் எப்போதும் போல் லிங்கா உடற் பயிற்ச்சி நீச்சல் பின் அடுத்து கல்லூரிக்கு கிளம்பிய பின் உணவு உண்ண கிழே வரும் போது இன்று அனைவரும் இவனுக்கு முன் உணவு உண்ணும் மேடையில் அமர்ந்து இருந்தனர்..
அது எல்லாம் அதிசயம் கிடையாது.. இவனை பார்த்ததும் சிவ பிரகாஷ்…. “ உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம் லிங்கா..” என்ற அவர் பேச்சு தான் லிங்காவுக்கு அதிசயமாக இருந்தன.
அடுத்து அதிசயமாக அவனின் பெரிய அத்தை உணவு பரிமாறுபவரிடம்.. “ லிங்கா வந்துட்டான் பார்.. அவன் கேட்டதை செய்த தானே.. எடுத்து வை..” என்று சொன்னவர் அவன் முன் அவரே தட்டை ஒன்றை வைக்க..
அடுத்து என்னவோ ஒன்று காத்து இருக்கிறது என்று தெரிந்தும் எதுவும் கேட்காது சாப்பிட்டு முடித்தான்.. இவன் கூடவே அனைவரும் சாப்பிட்டததால் ஒன்றாகவே உணவு உண்டு முடிந்த பின்..
சிவ பிரகாஷ் தன் மாமனார். சோமசுந்தரத்திடம்.. “ நம்ம லிங்காவுக்கு வயசு முப்பது ஆகுது.. கல்யாணம் செய்ய இதுவே அதிக வயது கடந்தது தான்.. இவன் இங்கு இருந்து இருந்தால் இந்த நேரம் கல்யாணம் முடிந்து குழந்தை கூட வந்து இருக்கும். என் மகனுக்கு இவன் வயதில் குழந்தையே இருந்தது..” என்று அவர் பேசி கொண்டே போக..
லிங்கா.. “ இப்போ எனக்கு கல்யாணம் ஆகல என்று சொல்றிங்களா.. இல்ல குழந்தை இல்ல என்று சொல்றிங்களா..” என்று இடக்காக கேள்வி கேட்டான்..
அவன் கேள்வியில் சிவ பிரகாஷ் கோபத்தில் பல்லை கடித்தார் தான்.. ஆனாலுமே அதை வெளியில் காட்டாது சிரித்து கொண்டே..
“ லிங்கா ஜோக்கு எல்லாம் அடிக்கிற..” என்று சொல்லி சமாளித்தவர்..
பின் லிங்காவிடம்.. “ நான் உனக்கு ஒரு வரன் கொண்டு வந்து இருக்கேன் லிங்கா.. உன் தாத்தாவுக்கு ரொம்ப பிடிச்சி விட்டது.. உனக்கும் ரொம்ப பிடிக்கும்..” என்று அவ்வளவு நம்பிக்கையோடு சொன்ன சிவ பிரகாஷ் பேச்சில் மது சட்டென்று நிமிர்ந்து லிங்காவின் முகத்தை பார்த்தாள்.. அவள் பார்க்கும் போது லிங்காவும் அவளை தான் பார்த்து கொண்டு இருக்க.
அவன் கவனத்தை கலைக்கும் விதமாக பெண்ணின் புகைப்படத்தை லிங்காவிடம் காட்ட. லிங்காவின் பார்வை இப்போது அந்த புகைப்படத்திலேயே இருக்க.
இப்போது சிவ பிரகாஷ்.. “ நான் சொன்னேன் தானே. மாமா லிங்காவுக்கு இந்த பெண்ணை பிடித்து விடும் என்று “ சோமசுந்தரத்திடம் சொன்னவர்.
லிங்காவிடம்.. “ பெண்ணின் பெயர் மேகா என்று நான் உனக்கு சொல்ல தேவை இல்லை. மற்ற விவரம் இந்த பையடேட்டாவில் இருக்கு..” என்று சொல்லி அவன் முன் ஒரு காகிதத்தை வைத்தார்.