Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Pirithariyaa Pithana Podhum-2

  • Thread Author
அத்தியாயம்…2

எப்போதும் போல் இதையும் அந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளை சிவ பிரகாஷ் தான்.. சோமசுந்தரத்திடம்…

“ என்ன மாமா இந்த உயிலில் இந்த வீட்டையும் காலேஜ், ஸ்கூல் குறிப்பிட வில்லையே..?” என்று கேட்டார்..

அதற்க்கு சோமசுந்தரம் அவர் கேட்டதற்க்கு பதில் அளிக்காது “ மாப்பிள்ளை இந்த சொத்து எல்லாம் மூதையார் சம்பாதித்தது கிடையாது,… அது உங்களுக்கு நல்லாவே தெரியும்..” என்று அவர் பேசும் போதே..

“ என்ன மாமா புதுசா தெரியாதவங்க கிட்ட சொல்வது போல சொல்றிங்க.. நான் உங்க மகளை கட்டும் போது கூட உங்களுக்கு இந்த அளவு வசதி இல்லையே..?” என்று சொன்ன சிவ பிரகாஷ் பேச்சில் என்ன இருக்கிறது என்று பிரித்து அறியாத விதத்தில் பேசினார்..

வயது மூத்த சோமசுந்தரத்திற்க்கு சிவ பிரகாஷ் பேசும் பேச்சும் புரியாது போகுமா என்ன.. அவர் வழியிலேயே..
“ ஆமா மாப்பிள்ளை நீங்க சொன்னது ரொம்ப சரி தான்.. அப்போ பள்ளி மட்டுமே தான் இருந்தது.. என் பெரிய மகளுக்கு கல்யாணம் செய்த பின் தானே அந்த கல்லூரியை கட்டியது.. “ என்று முடித்தவர்..

பின் அவரே.. “ உங்களுக்கு எல்லாம் நான் சொல்லாமலேயே தெரியும் போது இதுவும் தெரியும் .. அதாவது என் சொந்த சம்பாத்தியத்தை யார் பேரிலும் நான் எழுதி வைக்கலாம் எனும் போது என் மகன் வழி பேரனுக்கு நான் கொடுப்பதில் எந்த வித சட்ட சிக்கலும் இல்லை என்பதும்..” என்று அவர் சொல்லி முடித்த உடனே.. அனைவரின் முகத்திலுமே அப்படி ஒர் அதிர்ச்சி..
இதை யாருமே எதிர் பார்க்கவில்லை…

ஆள் ஆளுக்கு அது எப்படி என்பது போலான பேச்சுக்கள்… இத்தனை வருடங்கள் கழித்து அவன் வருவானா..? என்பதே சந்தேகமாக இருந்த போது, வந்ததோடு இங்கு உள்ளவர்களின் உரிமைகளை ஒட்டு மொத்தமாக பிடிங்கி கொண்டது போலான இந்த உயில். அது எப்படி..? என்பது தான் அவர்கள் அனைவரின் கேள்வியாக இருந்தன..

சோமசுந்தரத்திற்க்கு லிங்கா மீது இவ்வளவு பாசம் இருந்து இருக்கிறதா..? என்பதே.. வேதவல்லி படுக்கையில் விழுந்த போது தான் தெரிந்தது..
அனைவரின் ஒரு மொத்த எண்ணம்.. “ஏன் அவனை கூப்பிறிங்க ..?” என்பதே..
பெரியவரோ.. “இன்னும் இந்த வீடு என் கட்டுப்பாட்டில் தான் இருக்கு.. இந்த வீட்டுக்கு யார் வர வேண்டும்..? வர கூடாது..?” என்று முடிவு செய்யும் உரிமை எனக்கு இருக்கிறது என்று விட்டார்..

அதன் பின் யாரும் இதை பற்றி அவர் முன் பேச வில்லை என்றாலுமே, பின் பேசினார்கள் எதற்க்கு அவன் என்று.. பின் அவர்களே வந்தால் போக போகிறான் என்ற மெத்தனம் அவர்களுக்குள்..

பதிமூன்று வருடங்கள் முன் பார்த்த லிங்கேஷ்வரனை நினைத்து அவனை மிக ஈசியாக நினைத்து விட்டார்கள்..
பதிமூன்று வருடங்கள் முன்.. இவர்கள் அனைவரும் அவனையும், அவன் தாயையும் பற்றிய பேசிய பேச்சில், அழுது தன் தாய் மாமனை கனடாவில் இருந்து வர வழைத்து..

“ என்னை உங்களோடு கூட்டி கொண்டு போகவில்லை என்றால், நான் என் அம்மாவை போல தற்கொலை செய்து கொள்வேன்.. “ என்று ஒரே பிடியாக நின்று… அவன் மாமனோடு சென்றவன் தானே இவன் என்று..

ஆனால் இப்போது நிலை இப்படியாக சோமசுந்தரத்தின் இந்த பேச்சில் எப்போதும் போல பின் பேசினார்கள்..
சிவ பிரகாஷோ ஏதோ யோசித்தவராக மறு நாள் காலை உணவின் போது…

லிங்கேஷ்வரனிடம்.. “ லிங்கா முதல் போல தான் இப்போதும் உன் நடவடிக்கை இருக்கா..? ஏன்னா பாரு.. அப்போ மது சின்ன பெண்.. இப்போ வயது பெண்ணா இருக்கா… ஒரே வீட்டில் இருப்பது .. நாளை வேறு வீட்டிற்க்கு போக வேண்டிய பெண் பாரு..” என்று வாழை பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் தன் பேச்சின் மூலம் ஏற்றினார்..

பாவம் சிவ பிரகாஷுக்கு தெரியாத ஒரு விசயம்.. நேற்று இரவு தாத்தாவின் அறைக்கு சென்ற லிங்கா.. “ யாரை கேட்டு இது போலான உயிலை எழுதினிங்க… எந்த நம்பிக்கையில் நான் இந்த வீட்டில் இருப்பேன் என்று நம்புறிங்க..
இந்த வீட்டை பார்த்தாலே என் அம்மாவை அவமதித்ததும்.. அதோ அந்த ரூம் என் கண்ணில் படும் போது எல்லாம் என் அம்மா தூக்கில் தொங்கிய காட்சியும் .. கடைசியா நான் இந்த வீட்டை விட்டு போகும் போது நான் பட்ட அவமானங்கள்.. அசிங்கம்.. இது தான் நியாபகத்தில் வருது.. அதுவும் அந்த ஸ்கூல் நினைத்தாலே… …” என்றவனின் பேச்சை எந்த வித இடையூறும் செய்யாது கேட்டுக் கொண்டு இருந்த சோமசுந்தரம்..

லிங்கா பேசி முடித்த உடன்.. “ அதே தான் நானும் சொல்றேன் லிங்கா.. உன் அம்மா இந்த வீட்டில் அவமானப்பட்ட போது நீ சின்ன குழந்தை… உன் அம்மா தற்கொலை செய்து கொண்ட போது.. சின்ன பையன்.. நீ அசிங்கப்பட்டு.. அவமானப்பட்டு இந்த வீட்டை விட்டும், அந்த ஸ்கூலை விட்டும் நீ போகும் போதும் டீன் ஏஜில் இருந்தவன்…

ஆனால் இப்போது உன் வயது முப்பது முடிவடைந்து விட்டது… எல்லாவற்றையும் எதிர் நோக்கும் சமாளிக்கும் வயதில் இருப்பவன் நீ.. நான் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்த போது… இங்கு எனக்கு ஒன்னுமே இல்ல.. ஊரில் இருக்கும் நிலபுலனை வித்து கொஞ்சம் காசு கையில் வைத்து கொண்டு…
சென்னையில் பிழைப்பை தேடி வந்த நான் சொந்தங்கள் உதவுவாங்க என்று அவங்க வீட்டிற்க்கு போன போது தான் தெரிந்தது சொந்தங்கள் எல்லாமே காசு பணத்தை வைத்து தான் வர வேற்ப்பு இருக்கும் என்று..

அன்னைக்கு முடிவு செய்தேன் டா.. இந்த சொந்தங்கள் எல்லோரையும் என்னை தேடி வர வழைக்கிறேன் என்று.. இதோ வர வழைத்து விட்டேன்.. எல்லா பயளுங்களுமே.. “ இந்த காலேஜ் இந்த ஸ்கூல் என் சொந்தக்காரருடையது என்று மார் தட்டி அவர்கள் சொல்லும் அளவுக்கு சாதித்து காட்டிட்டு விட்டேன் ..
இன்னைக்கு..உன் அம்மாவோட உரிமை இங்கு மறைக்கப்பட்டு இருப்பது நீ பார்த்து இருப்ப.. உனக்கு தோனலையா…? உங்க அம்மா வாழ்ந்த வாழ்க்கைக்கு எந்த விதமான அர்த்தமும் இல்லாது போவது உனக்கு பரவாயில்லையா....

நீ என்ன அவ்வளவு பலவீனமானவனா..? இந்த பேச்சு கேட்ட உடனே உன் மனசு உடைந்து போக… அன்னைக்கு சாவுக்கு வந்தவங்க எல்லாரும் ஒன்னு போல சொன்னது இது தான்..நீ என்னை போல இருக்க என்பது தான்.. அது தோற்றதில் மட்டும் தான் போல..” என்று விட்டு இனி முடிவு உன் கையில் என்பது போல் சொல்லி விட்டார்..
தாத்தாவின் பேச்சில், முன்னவே தன் அன்னையின் வாழ்க்கைக்கு அர்த்தத்தை தேடிக் கொண்டு இருந்தவன் அவர் பேச்சில், இந்தியாவில் இருக்கலாமா..? என்று அது வழியே யோசித்து கொண்டு இருந்தவனை சிவ பிரகாஷின் இந்த பேச்சு..
இனி இந்தியா தான் தன் இருப்பிடம் என்ற முடிவை எடுக்க வைத்தது…

லிங்கா அந்த முடிவை எடுத்த உடனேயே இது வரை, அதாவது பதினைனந்து நாள் வரை, எதுவுமே வாய் திறக்காது அமைதியாக இருந்தவன் சிவ பிரகாஷை பார்த்து…

“ நீங்க சொல்வது யோசிக்க வேண்டிய விசயமா தான் இருக்கு… அதனால என்ன செய்யிறிங்க… நான் இருக்கும் வீட்டில் யாருக்கு எல்லாம் கற்புக்கு ஆபத்து வரும் என்று நினைக்கிறிங்களோ.. கற்பை காப்பத்திக்க இங்கு இருந்து சென்று விடலாம்.. .” என்று விட்டான்..

அதை கேட்ட உடனே ஆள் ஆளுக்கு.. “ அதை சொல்ல நீ யாரு..?” என்ற சத்தம்.. இத்தனை நேரம்.. என்பதை விட… இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்த அந்த உணவு உண்ணும் மேடை மீன் மார்க்கெட் போல கூச்சலும், குழப்பமுமாக மாறியது…

லிங்கா இவர்களை போல் எல்லாம் சத்தம் போட்டோ.. அதிகமாக எல்லாம் பேசவில்லை.. பேசியது அதிகம் இல்லாத போதும், தான் சொல்ல வேண்டியதை அழுத்தம் திருத்தமாக பேசினான்..

“ நான் சொல்லாது யார் சொல்வா…?” என்று அனைவரையும் பார்த்து பொதுவாக பார்த்து கூறியவன்..

பின் தன் தாத்தாவின் பக்கம் பார்வையை திருப்பி… “ என் வீட்டில் என் பேச்சு தான் இறுதி பேச்சாக இருக்க வேண்டும் தாத்தா..” என்று சொன்னவன்.. கூடவே..

“ ஸ்கூல் காலேஜ் மேனஜ் மெண்ட் கை மாறுவதை ஒரு நிகழ்ச்சியா வைத்து நாளை மறுநாள் தெரிவித்து விடுங்க.. அதோடு இது வரை அங்கு என்ன என்ன நடை முறை போன்ற முழுவிவரமும்.. முன் நிர்வாகம் என் கையில் ஒப்படைக்க வேண்டும்..” என்று விட்டு சென்றவன் பின் என்ன நினைத்தானோ.. மீண்டும் திரும்ப அவர்கள் அருகில் வந்து..

“ இனி என்னை பத்தியோ.. என் அம்மாவை பத்தியோ.. ஒரு வார்த்தை தப்பா வந்தா.. வந்தா என்ன வந்தா… வரக் கூடாது அவ்வளவு தான்..” என்று சொல்லி சென்று விட்டான்..

லிங்கா பேசி சென்ற பின் சிறிது நேரம் யாரும் பேசவில்லை.. பேசும் நிலையிலும் அங்கு யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..அவன் இவ்வளவு பேசுவான் என்பதே அங்கு இருந்தவர்களுக்கு இன்று தான் தெரிந்தது… இங்கு இருந்து போகும் போது பதினெழு வயது.. யாரிடமும் அதிகம் பேச மாட்டான்..


அவன் அம்மா இருந்தவரை அவன் அம்மாவிடம் பேசுவான்.. அதுவும் என்ன பேசுவான் என்பது தெரியாது.. அவனின் குரல் அவ்வளவு மெல்லியதாக தான் இருக்கும்..

பின் அந்த பேச்சும் அவனின் பதினான்காவது வயதில் சுத்தமாக நின்று விட்டது.. அவனின் அம்மா தற்கொலையின் மூலம்.. அதன் பின் இந்தியாவில் இருந்த அந்த மூன்று வருடத்திலும் யாரிடமும் எந்த பேச்சும் கிடையாது..
தாத்தா கேட்டதற்க்கு பதில் சொல்வான்.. அந்த பேச்சும் அவன் அப்பா அவன் அம்மா இறந்த மூன்றாம் மாதமே அப்போது தனக்கு பி,ஏ வாக இருந்த சுகந்தியை மணந்த பின் சுத்தமா இல்லாது போய் விட்டது..
அது தான் அவன் தன் அறைக்குள்ளேயே தன்னை அடைத்து கொண்டு விட்டானே…
அவன் யாரின் பேச்சுக்கும் செல்லாத போதும்… அனைவரும் அவனை பற்றி தான் பேசிக் கொண்டு இருந்தனர்.. காரணம் அவர்கள் வீட்டின் சொத்து.. ஆண் வாரிசின் வாரிசாக லிங்கேஷ்வரன் பிறந்ததே அதற்க்கு காரணம்..
அவர்கள் பேசிய விசயங்கள் இது தான்.. இந்த சொத்து எந்த காரணத்தை தொட்டும் லிங்காவுக்கு போய் விட கூடாது.. அதோடு அவர்கள் பள்ளி இன்டர்நேஷனல் பள்ளியாக்கப்பட்டு தரத்தில் அப்படி உயர்ந்த இடத்தை பிடித்து இருந்தது..

பெரிய இடத்து பிள்ளைகளை இவ்வளவு பணம் கொடுத்தும் இந்த பள்ளியின் சேர்க்க.. அவ்வளவு போட்டிகள் இருந்தன.

பெற்றோர்கள் தன் குழந்தைகள் இந்த பள்ளியில் படிக்கிறார்கள் என்று வெளியில் சொல்வதை பெருமையாக சொல்லும் அளவுக்கு அந்த பள்ளியின் தரமும்.. மதிப்பும் .. உயர்ந்து விட்டது..

அதோடு பள்ளியின் விரிவாக்கமாக கல்லூரியும் இணைத்து, அதுவும் வளர்ந்து .. இந்த குடும்பத்தின் பெயராக எஸ். எம் இருக்க.. அந்த வீட்டில் இருப்பவர்கள் அதை அடைவது தான் பெருமை என்று நினைத்து கொண்டு இருந்தனர்..

அதற்க்கு முதல் தடை கற்கலாய் இருக்கும் லிங்காவை எப்படி தகர்த்துவது என்று நினைக்கும் வேளயில் தான், அதற்க்கு ஒரு வாய்ப்பை லிங்காவே அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தது..

பள்ளி படிப்பின் இறுதியில் அவன் பள்ளியிலேயே படித்து கொண்டு இருந்த போது தான் தன்னோடு படிக்கும் பெண்ணான மேகா அவனிடம் நன்றாக பேசியது.
இவன் பேசவில்லை என்றாலும், வலிய வந்து பேசுவாள்.. அன்பாகவும் அக்கறையோடும்.. தன் நலன் விரும்பியாக பேச பேச.. அவள் பேச்சு லிங்காவுக்கு பிடித்து விட்டது..

வீட்டில் யாரோடும் பேச மாட்டான்.. ஒரே பேச்சு துணை அம்மா.. அம்மாவும் இப்போது இல்லை.. அதோடு அவர்களின் அந்த மரணம்.. அது கொடுத்த அழுத்தம்.. கூடவே தன் அப்பாவின் மறுமணம்.. அதுவும் அம்மா இறந்த மூன்றே மாதத்தில், மொத்தமாக தனக்கு தானே அனைத்து விசயங்களையும் அழுத்தி கொண்டு இருந்த சமயம் அது..

பாலைவனத்தில் ஒரு சிறு துளி நீர் போல் அவள் பேச்சு இருக்க, அதன் பின் லிங்காவும் மேகாவிடம் சகஜமாக பேசினான்..

போக போக லிங்காவுக்கு இந்த பேச்சு தன் வாழ் நாள் முழுவதற்க்கும் வேண்டும் என்று நினைத்து இரண்டான் கெட்டான நிலையில் இருந்த லிங்கா.. அவளுக்கு காதல் கடிதம் ஒன்றை எழுதினான்..

தனக்கு தெரிந்த தமிழில் கவிதை என்று நினைத்து அவன் எழுதிய எழுத்து அன்று பள்ளியில் கேலி பேச்சாக பேச பட்டது என்பது வேறு விசயம்..

அன்று எப்போதும் போல் தான் லிங்காவுக்கு வீட்டில் வெறுமையோடு விடிந்தது.. ஆனால் லிங்காவின் மனது வெறுமையோடு, அன்று விடியவில்லை.. ஆனால் அவனின் அன்றைய நாளின் முடிவில் அஸ்தமனம் எப்படி இருக்கும் என்று தெரியாது.. மகிழ்ச்சியோடு தான் எழுந்தான்..

ஒரு ஆர்வம் ..துடிப்பு.. தான் இந்த கடிதம் கொடுத்த உடன் என்ன சொல்வாளோ.. என்ற சந்தேகம் எல்லாம் அவனுக்கு கிடையாது.. கண்டிப்பாக தன்னை அவளுக்கு பிடிக்கும் என்பதை அவன் மிகவும் உறுதியாக நம்பினான்..

காரணம் மேகாவின் பேச்சுக்கள்… “ ஏன் லீ அமைதியா இருக்க… மனச விட்டு பேசு லீ… உன் வயசு பசங்க எப்படி இருக்காங்க.. எனக்கு நீ எப்போதும் சந்தோஷமா இருக்கனும் லீ.. அதுக்கு நான் என்ன என்றாலும் செய்வேன்..” என்பது போல் தான் அவளின் பேச்சுக்கள் இருக்கும்..
அவள் பேச்சு கொடுத்த அந்த நம்பிக்கையில் அவன் காதல் கடிதம் கையில் இருக்க, கண்ணாடி முன் நின்று அப்போது தான் அரும்பு மீசையாக துளிர் விட்டு இருந்ததை ஒரு விரல் கொண்டு அதை தடவி விட்ட வாறு…

பக்க வாக்கில் நின்று கொண்டு கண்ணாடியில் தன்னை பார்த்த பின்.. “ சீ வேண்டாம்..” என்று அடுத்து பின் இந்த பக்கம் நின்று கொண்டு என்று வித விதமாக நின்று பார்த்தவன் பள்ளிக்கு நேரம் ஆவதை உணர்ந்து பள்ளிக்கு வந்தவன் தன் வகுப்பு அறையில் அமர்ந்து கொண்டான்..

மற்ற மாணவ மாணைவிகள் பள்ளிக்கு வந்தாலுமே, கிரவுண்டில் தான் இருப்பார்கள்.. பள்ளியில் பெல் அடித்த பின் தான் வகுப்பறைக்கு வருவார்கள்.
ஆனால் லிங்காவும் மேகாவும் பள்ளிக்கு வந்ததும் தன் வகுப்பறையில் அமர்ந்து கொண்டு பேசி கொண்டும் படித்து கொண்டும் இருப்பார்கள்..

அன்றும் அதே போல் பள்ளிக்கு வந்ததும் தன் வகுப்பு அறைக்கு சென்றான்.. அங்கு அவனுக்கு முன்னவே மேகா அமர்ந்து இருக்க.. இவன் அவளை நோக்கி செல்லும் முன்னவே அமர்ந்து இருந்த அவள் அவனை நோக்கி வந்தவள்..

“ லீ லீ இந்த மேக்ஸ்..” என்று ஏதோ படிப்பை பற்றி ஆரம்பிக்கும் முன்னவே தன் பேக்கட்டில் இருந்த அந்த காதல் கடித்தத்தை முகத்தில் வெட்கம் சூழ மேகாவிடம் தந்தான்..

குழப்பமான முக பாவனையுடன் அதை வாங்கியவள் “ என்ன லீ…” என்று கேட்க..

“ பிரித்து தான் படியேன் .. “ என்று வெட்க முகம் மாறாது சொன்னவனை பார்த்து கொண்டே கடித்ததை படித்து கொண்டு இருக்கும் போது.. ஏதோ எடுக்க வந்த அந்த வகுப்பு ஆசிரியர்..

“ என்ன இங்கு என்ன செய்யிறிங்க…?” என்று கேட்டார்…

லிங்கேஷ்வரனுக்கு அந்த சமயம் ஆசிரியர் அங்கு வருவார் என்று நினைத்து பார்க்கவில்லை.. அதனால் ஒரு வித பதட்டம் அவன் முகத்தில் காணப்பட்டது…

மேகாவும் பாதி கடிதம் .. அது தமிழில் எழுத்து பிழையாக எழுதினாலும், அவளுக்கு புரிந்து விட்டது.. அது காதல் கடிதம் என்று.. லிங்கா அந்த பள்ளியின் தயாளரின் வீட்டு மகன் என்பதுமே தெரியும்.
அதனால் தன் மீது எந்த தவறும் வந்து விட கூடாது என்று நினைத்து லிங்கா வாய் திறப்பதற்க்கு முன் மேகா அந்த ஆசிரியர் முன் அழுது கொண்டே அவள் அருகில் சென்று..

“ மேடம் மேடம்.. லிங்கா லிங்கா… லவ் லட்டர் லவ் லட்டர் கொடுக்கிறான் மேடம்.. நான் ஒரு பிரண்டா தான் மேடம் அவன் கிட்ட பழகினேன்.. ஆனால் அவன் அவன்..” என்று அழுத்தவள்..

தன் அழுகையை தொடர்ந்து.. “நான் படிக்கனும் மேடம்.. நான் படிக்கனும்..” என்று தன் மீது தவறு இல்லை என்ற பட்சமாக பேசியதோடு.. லிங்காவின் மீது தான் தவறு இருப்பது போல பேசியதல், அந்த வகுப்பு ஆசிரியருக்கும் என்ன செய்வது என்று புரியாது..

அப்போது சிவ பிரகாஷின் கீழ் தான் அந்த பள்ளியின் நிர்வாகம் இருந்தது.. லிங்கா யார் என்பது அந்த ஆசிரியருக்கும் தெரியும் .. அதனால் அந்த ஆசிரியர் சிவ பிரகாஷின் முன் லிங்காவை நிற்க வைத்து விட்டார்..

அவருக்கு இது போதுமே.. இந்த வயதில் இது ஒரு சின்ன விசயம்.. தனியே அழைத்து பேசி சுமூகமாக முடிக்க வேண்டிய விசயத்தை பெரியதாக ஆக்கி விட்டார்..

அவன் எழுதிய அந்த கடித்தத்தை நோட்டிஸ் போர்டில் ஒட்டாத குறை ஒன்று தான் பாக்கி… அனைவரும் இருக்க படித்து அப்படி அவனை பள்ளியில் அசிங்கப்படுத்தியதோடு, வீட்டிலும் இதையே பெரிய பிரச்சனையாக மாற்றி விட்டார்..
“அந்த பள்ளி நம்முடையது.. நம்ம வீட்டு பையனே இப்படி செய்தது வெளியில் தெரிந்தால், இனி பெண் பிள்ளைகளை நம் பள்ளியில் எப்படி சேர்ப்பாங்க.. நம்ம நிர்வாகம் நம்ம வீட்டு பையனுக்கு தான் சாதகமா முடிவு எடுக்கும் என்ற அந்த எண்ணம் பெற்றோர்களுக்கு வந்து விட்டால், அது நம்ம பள்ளிக்கு தானே கெட்ட பெயர்..” என்று லிங்காவை பள்ளியை விட்டு அகற்றும் பணியை செய்த பின்..
அடுத்து வீட்டிலும் லிங்கா இருக்க கூடாது என்று… அப்போது மது சின்ன பெண் எட்டு வயதே நிறம்பியவள்.. அவளை காண்பித்து..


“ இன்னும் மூன்று வருடம் கழித்து இவளுக்கும் லவ் லட்டர் கொடுப்பான்.. ஏன் என்றால் அவன் உடம்பில் ஒடும் ரத்தம் அப்படி பட்டது..” என்று எப்போதும் போல் அவன் அன்னையையும் அசிங்கப்படுத்தி பேசியதில்..

அந்த வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அவனை ஒரு மாதிரியாக பார்க்க… பின் அவன் அறையில் கூட இருக்க முடியாது போனது..
அவனின் தாய் மாமாவுக்கு அப்போது தான் திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகி இருந்தன.. ஒரு ஆண் குழந்தையோடு கனடாவில் இருந்த தன் மாமனுக்கு அழைத்து விட்டான்..அவரும் அடுத்த ப்ளைட் பிடித்து இந்தியா வந்தவரிடம்..வந்தவரோடு அடம் பிடித்து சென்றவன் தான் லிங்கேஷ்வரன்.. இதோ இப்போது தான் இந்தியா வந்து இருக்கிறான்..
இதில் அன்று சிவ பிரகாஷூக்கு சாதமாக அமைந்த ஒரு விசயம்.. லிங்கா இந்த வீட்டில் இருக்க கூடாது.. வெளியில் ஹாஸ்ட்டல் அது போல சேர்த்து விட வேண்டும் என்று நினைத்து தான் அவர் அப்படி பேசியது..

ஆனால் வீடு என்ன நாட்டை விட்டே போனதில், அவ்வளவு நிம்மதி சிவ பிரகாஷுக்கு.. அவரை பொறுத்த வரை கல்யாண மண்டபம்.. தியேட்டர் இன்னும் பிற சொத்துக்கள் இது எல்லாம் அவருக்கு தேவையில்லை..


அவரின் தேவை பள்ளி கல்லூரி.. இதோ இந்த வீடு, தனக்கு அடுத்து இதை நிர்வாகம் செய்வது தன் மகனாக தான் இருக்க வேண்டும்.. அந்த முடிவில் தான் அவர் ஒவ்வொரு காயாக நகர்த்தி வெற்றியும் பெற்றார்..





ஆனால் இப்போதும் அது போலவே லிங்காவை இந்த குடும்பத்தை விட்டு வெளியேற்றி விடலாம் என்று அவனை பற்றி மிக சுலபமாக நினைத்து விட்டார்..



மற்றவர்களும் வந்தவனை முன் போலவே லேசாக இங்கு இருப்பவர்கள் நினைத்து இருக்க.. அவனோ

அப்போது கிள்ளினாலும் உடைந்து விடும் செடியாக இருந்தவன்.. இன்று வளர்ந்து ஆலமரமாக வளர்ந்ததோடு தன் விழுதுகளையும் வேர் ஊன்றி யாராலுமே அசைக்க முடியாத அளவுக்கு இருக்கிறான் என்று தெரியாது விட்டனர்..

இதோ இந்த பேச்சில் மொத்த குடும்பமும் ஆடி போய் இருக்க.. லிங்காவோ அந்த இடத்தை விட்டு போகும் போது அவனின் பார்வை அளவுக்கு அதிகமாக மதுவின் முகத்தை பார்த்து கொண்ட அதுவும் அவன் பார்வையில் மதுவின் உதட்டின் மேல் பொட்டு பொட்டாக இருந்த அந்த வியர்வையையுமே பார்த்து கொண்டே சென்றான்.. அதுவும் அவன் பார்வையை அனைவரும் கவனிக்கிறார்கள் என்று தெரிந்தே..


மதுவுக்கு லிங்காவின் பார்வை சரியா..? தவறா..? என்று தெரியவில்லை.. ஏன் அவனை பற்றி அவளுக்கு அவ்வளவாக தெரியாது என்பது தான் உண்மை..

லிங்கா இந்தியாவை விட்டு செல்லும் போது அவளுக்கு எட்டோ ஒன்பதோ வயது தான்.. தன்னை காட்டியும் பெரியப்பா ஏதோ சொன்னார்.. அதற்க்கு லிங்கா தன்னையே பார்ப்பதை பார்த்தாள்.. அவ்வளவு தான்.. என்ன ஏது என்று தெரியும் வயதோ . புரியும் வயதோ அப்போது இல்லை..

அடுத்து லிங்காவை பற்றியதான பேச்சை இந்த வீட்டில் அவள் கேட்டது கிடையாது.. பாட்டி உடல் நிலை சரியில்லாத போது தாத்தா தான் லிங்காவை வர வழைக்க வேண்டும் என்று சொன்னது..
அதற்க்கு அனைவரின் இடத்திலும் இருந்து பெரும் எதிர்ப்பு .. ஆனால் இப்போதும் இந்த வீட்டின் முடிவு தாத்தாவின் கையில் இருப்பதால் லிங்காவின் வருகையை யாராலும் தடுக்க முடியாது போய் விட்டது..

ஆள் ஆளுக்கு என்ன என்னவோ அவனை பற்றி பேசினாலும், மது அவனை பற்றி பேசுவது என்ன நினைக்க கூட இல்லை என்பது தான் உண்மை.. நினைக்கவும் யோசிக்கவும் தான் அவளுக்கு வேறு ஒன்று இருக்கிறதே…

ஆனால் லிங்காவோ மதுவை மறுநாளே அவனை பற்றி மட்டுமே யோசிக்கும் படி செய்து விட்டான்…
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
Lovely
Ava nenapu enna va irulum
நன்றி பா தொடர்ந்து படித்து கருத்துகள் சொல்லவும் நன்றி🙏💕
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
Dai madhuva yenna panna 🤔🤔🤔 nice interesting ud sis ❤️
நன்றி பா தொடர்ந்து படித்து கருத்துகள் சொல்லவும் நன்றி பா🙏💕
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
Great start mam..❤️❤️❤️
நன்றி பா தொடர்ந்து படித்து கருத்துகள் சொல்லவும் நன்றி பா🙏💕
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
Super story maam....intha story ku daily update varuma?
தினமும் கொடுத்து விடுவேன் பா.. ஆனால் நீங்களும் தினமும் கருத்து சொல்ல வேண்டும்.. டிலா
 
Well-known member
Joined
Jun 2, 2024
Messages
135
தினமும் கொடுத்து விடுவேன் பா.. ஆனால் நீங்களும் தினமும் கருத்து சொல்ல வேண்டும்.. டிலா
Kandippa maam..deal accepted maam 😊
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
270
அப்படி போடு.... 👏👏👏👏👏
யாருக்கு கற்பை காப்பாத்திக்கணுமோ அவங்க வீட்டை விட்டுப் போங்க..... 🤭🤭🤭🤭😆😆😆😆
இன்னும் பழைய சின்ன பையன் லிங்கான்னு நினைச்சு மிரட்டப் பார்த்தா நடக்குமா.... 😎😎😎😎

சிவபிரகாஷ் மாமனார் வீட்டு சொத்து மேல எவ்வளவு பேராசை..... 😡😡😡😡😡

இந்த கூட்டமெல்லாம் சேர்ந்து சதி பண்ணி தான் லிங்கா அம்மாவை தற்கொலைக்கு தூண்டி இருக்காங்க..... 🤬🤬🤬🤬🤬🤬

டீன் ஏஜ்ல நடந்த சின்ன விஷயம் புத்தி சொல்றதை விட்டுட்டு அவனை அசிங்கப்படுத்தி ஊரை விட்டே ஓட வச்சுக்காரு..... 😈😈😈😈

அப்பான்னு ஒருத்தன் பேருக்கு கூட பிள்ளைக்கு நிக்கல..... பொண்டாட்டி செத்து மூணு மாசத்துல pa கூட கல்யாணம்.... 🤮🤮🤮🤮 இதுல எல்லாரும் லிங்கா அம்மா கேரக்டரை தப்பா பேசுறாங்க.... 🤬🤬🤬🤬

இனி லிங்கா ஆட்டம் தான்.... 🔥🔥🔥🔥
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
அப்படி போடு.... 👏👏👏👏👏
யாருக்கு கற்பை காப்பாத்திக்கணுமோ அவங்க வீட்டை விட்டுப் போங்க..... 🤭🤭🤭🤭😆😆😆😆
இன்னும் பழைய சின்ன பையன் லிங்கான்னு நினைச்சு மிரட்டப் பார்த்தா நடக்குமா.... 😎😎😎😎

சிவபிரகாஷ் மாமனார் வீட்டு சொத்து மேல எவ்வளவு பேராசை..... 😡😡😡😡😡

இந்த கூட்டமெல்லாம் சேர்ந்து சதி பண்ணி தான் லிங்கா அம்மாவை தற்கொலைக்கு தூண்டி இருக்காங்க..... 🤬🤬🤬🤬🤬🤬

டீன் ஏஜ்ல நடந்த சின்ன விஷயம் புத்தி சொல்றதை விட்டுட்டு அவனை அசிங்கப்படுத்தி ஊரை விட்டே ஓட வச்சுக்காரு..... 😈😈😈😈

அப்பான்னு ஒருத்தன் பேருக்கு கூட பிள்ளைக்கு நிக்கல..... பொண்டாட்டி செத்து மூணு மாசத்துல pa கூட கல்யாணம்.... 🤮🤮🤮🤮 இதுல எல்லாரும் லிங்கா அம்மா கேரக்டரை தப்பா பேசுறாங்க.... 🤬🤬🤬🤬

இனி லிங்கா ஆட்டம் தான்.... 🔥🔥🔥🔥
உண்மை தான்.. அவங்க அம்மாவின் கஷ்டம்.. உண்மையில் சொல்ல முடியாத அளவுக்கு தான் இருந்தது.. நன்றி பா தொடர்ந்து படித்து கருத்துக்கள் சொல்லவும்.. நன்றி பா
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
லிங்கா சபாஷ். இதுங்க கிட்ட இப்படி பேசனும்
நன்றி பா தொடர்ந்து படித்து கருத்துகள் சொல்லவும்🙏💕
 
Top