Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Pirithariyaa Pithana Podhum...20

  • Thread Author
அத்தியாயம்….20

காலையில் மது உணவு உண்ணும் போது தான் லிங்காவும் சாப்பிட வந்து அமர்ந்தது.. சிறிது நாளாக லிங்காவும் சரி… மதுவும் சரி… இது போல் ஒன்றாக இருக்கும் நேரம் ஒருவர் அறியாது மற்றவர்கள் பார்த்து கொள்வார்வார்கள்..

அப்போது பார்க்கும் போது சில சமயம் அந்த ஒருவர் பார்வையிடுதலை மற்றவர்கள் கவனித்து விட்டால், பார்த்தவர்கள் முகத்தில் காணப்படும் அந்த அசடு வழிதல், பார்த்தவர்களுக்கு அதை நினைத்து நினைத்தே அன்றைய நாள் மகிழ்ச்சியில் கழியும்..

ஆனால் இன்று லிங்கா மட்டுமே தான் சாப்பிட்டு கொண்டே மதுவை பார்வை இட்டுக் கொண்டு இருந்தது.. ஆனால் மதுவோ அவன் பக்கம் தன் பார்வையை செலுத்தாது அவளின் மொத்த கவனமும் சாப்பிடும் தட்டிலேயே இருந்தது.

அவள் தட்டில் இருந்த அந்த உப்பும்மாவை பார்த்தவன் அவளின் கோபம் ஏன் என்று தெரிந்ததால் ஒரு புன் சிரிப்போடு தன் உணவை தொடர்ந்தான்..



அந்த சமயம் சிவ பிரகாஷ் .. “மேகா அம்மா கிட்ட பேசிட்டேன் லிங்கா.. நீ மேகா கிட்ட பேச அவங்க சரி என்று சொல்லிட்டாங்க. நான் உன் போனுக்கு மேகா செல் நம்பரை அனுப்புறேன்.. நீ என்ன என்று பார்த்து கொள்..” என்று சொல்ல.

இது வரை தன் உணவு தட்டில் மட்டுமே கவனத்தை வைத்து கொண்டு இருந்த மது.. அவள் பெரியப்பா சிவ பிரகாஷின் இந்த பேச்சுக்கு மட்டும் விருட்டென்று லிங்காவை நிமிர்ந்து பார்த்தாள்.

சிவ பிராகாஷின் இந்த பேச்சுக்கு அவள் தன்னை பார்ப்பாள் என்று அனுமானித்து இருந்த லிங்காவும், அப்போது மதுவை பார்க்க. இருவரின் பார்வையும் ஒரு நொடி நீடித்து விலகியதை யார் கவனித்தார்களோ இல்லையோ சிவ பிரகாஷ் கவனித்ததில் அவர் முகத்தில் சிந்தனை முடிச்சுக்கள் விழுந்தன.

லிங்கா தன் கல்லூரியில் இருந்த சமயம்.. விடுதியில் இறந்த பெண்ணை பற்றிய கேசை விசாரித்து கொண்டு இருந்த அந்த காவல் துறை அதிகாரி லிங்காவை அழைத்தார்.

அவர் அழைப்பு என்றதும் லிங்காவும் உடனே ஏற்றான்.. அந்த பக்கம் பேசியில் அந்த காவல் அதிகாரி சொன்ன விசயமான..



அதாவது பிரேத பரிசோதனை முடிவு சொன்னதில் லிங்கா.. “அது எப்படி பிரேதபரிசோதனையில் அந்த முடிவு வந்தது..? முன் தான் பணம் கொடுத்து கல்லூரியை காப்பற்ற செய்து இருப்பாங்க..

இப்போ இந்த கல்லூரி நிர்வாகம் முழுக்க முழுக்க என்னிடம் தானே இருக்கு.. இந்த பக்கம் இருந்து எந்த ஒரு பிரஷரும் அந்த டாக்டருக்கு போய் இல்லாத போது. இது போல் எப்படி..?” என்று குழப்பத்துடன் அந்த காவல் துறை அதிகாரியிடம் கேட்டான்..

அதற்க்கு காவல் துறை அதிகாரி.. “அந்த மருத்துவர் இது தான் கொடுத்து ஆக வேண்டும்.. இல்லை என்றால் முன் இறந்த பெண்களை பற்றிய விசாரணைக்கு போனால் அவர் மாட்டிக் கொள்வார்.. அதனாலும் இருக்கும். இல்லை முன் சொன்னவர்களே தான் மாட்ட கூடாது என்று இது போல் பிரேத பரிசோதனையில் தற்கொலை தான் என்று கொடு என்று சொல்லி இருக்கலாம்..” என்று கூறினார்..

ஆம் இப்போது இறந்த பெண்ணும் தற்கொலை தான் செய்து கொண்டாள் என்று உடல் கூறு ஆராய்ச்சி முடிவாக அந்த மருத்துவர் தன் அறிக்கையாக காவல் துறை அதிகாரியிடம் கொடுத்து இருக்கிறார்..



காவல் துறை அதிகாரி கூறிய இரண்டு வகையான சந்தேகத்தை நிவர்த்தி செய்ய என்ன செய்து இருக்கிங்க..?” என்று லிங்கா அந்த காவல் அதிகாரியிடம் கேட்டான்..

மற்றவர்கள் என்றால் அந்த நியாயமான காவல் அதிகாரி சொல்லி இருக்க மாட்டாஎ..

ஆனால் லிங்கா தன் கல்லூரியே ஆனாலுமே, உண்மை என்ன என்று கண்டறிய தனக்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்து கொண்டு இருக்கும் லிங்காவின் மீது அந்த காவல் அதிகாரிக்கு நல்லெண்ணம் ஏற்பட்டு விட்டதால், தான் செய்தவைகளை லிங்காவிடம் கூறினார்.

ஒரு எச்சரிக்கையோடு.. “ இது உங்கள் வரை தான் இருக்கனும்.. ஏன் என்றால் என் முதல் சந்தேகமே உங்க வீட்டு ஆட்கள் மீது தான்.. அதில் உங்கள் தாத்தாவும் தான் அடக்கம்..” என்று கூற்றில்..

லிங்காவும்.. “எனக்கு புரியுது சார். உங்கள் சந்தேகமும் நியாயமானது தான்.. அந்த கல்லூரி பெயரை காப்பற்றவா இல்ல. அந்த பெண்கள் இறக்கவே எங்கள் வீட்டில் இருப்பவர்களில் ஒருவர் காரணமா என்று தெரியும் வரை.. நான் எதுவும் யாரிடமும் இந்த விசயத்தை பகிர மாட்டேன்..” என்று வாக்குறுதி அளித்தன் பின் தான் கை பேசியின் தொடர்பை துண்டித்தான்..

லிங்கா காவல் துறை அதிகாரியின் இணப்பை துண்டித்த உடனே.. பதிவு செய்யாத எண்ணில் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

யார் என்று தெர்யாது பேசியின் அழைப்பை ஏற்ற பின் தான் அவனுக்கு தெரிந்தது அழைத்தது மேகா என்று.

அதுவும் அழைப்பில் லிங்காவின் குரலை கேட்ட உடனேயே.. மேகா பேசிய. “ஆள் மட்டும் கிடையாது குரலும் ரொம்ப மேன்லியா இருக்கு லிங்கா…

உன்னை பார்த்ததுமே அந்த டீன் ஏஜ்ஜில் பார்த்த என் லிங்காவா..? என்று நான் அசந்துட்டேன் லிங்கா.. அதுவும் கல்லூரி பள்ளி நிர்வாகம் ஏற்ற அன்னைக்கு மேடையில் நீங்க பேசிய அந்த ஆளுமையான குரலை கேட்டதுமே நான் ப்ளாட் லிங்கா..” என்று பேசியவள் விட்டால் இன்னும் என்ன என்ன உளறுவாளோ என்று நினைத்த லிங்கா.

“எது என்றாலும் நேரில் பேசி கொள்ளலாம்..” என்று கத்தரித்தது போல் லிங்கா பேச… லிங்காவின் மயக்கத்தில் இருந்த மேகா.. சரியா சொல்வது என்றால், லிங்கா தன் மீது அந்த வயதிலேயே லவ் லெட்டர் கொடுத்த அந்த தைரியத்தாலும் லிங்காவின் விட்டெத்தியான பேச்சை உணர்ந்து கொள்ளும் நிலையில் மேகா இல்லாததால், லிங்கா சொன்ன இடத்திற்க்கு சொன்ன நேரம் முன்னதாகவே மேகா அவனுக்காக காத்து கொண்டு இருந்தாள்.

லிங்கா கல்லூரி வேலை மட்டும் அல்லாது அன்று பள்ளியிலும் ஒரு வேலை இருந்ததால் அதையும் முடித்து கொண்டு தான் மேகாவை வர சொன்ன இடத்திற்க்கு லிங்கா சென்றது..

இங்கு காபி ஷாப்பில் காத்து கொண்டு இருந்த மேகாவோ நேரம் ஆக ஆக டென்ஷன் கூடியது..லிங்காவுக்காக காத்து கொண்டு இருந்த நேரத்திற்க்குள் அவள் அன்னை அவளுக்கு மூன்று முறை அழைப்பு விடுத்து விட்டார்.

“ என்ன மாப்பிள்ளை வந்து விட்டாரா..?” என்று கேட்டு..

காத்து காத்து வெறுத்து போய் விட்ட மேகாவோ அன்னையின் தொன தொனப்பில் எரிச்சலாகி.. “ நானே போட்ட மேக்கப் கலைந்து போயிடுமோ என்று இருக்கேன் நீ வேறு..” என்று தன் அன்னையிடம் எரிந்து விழுந்தாள்..



மேகாவின் அன்னையோ அவள் அந்த கத்தலை பொருட்படுத்தாது மேகா சொன்ன அந்த மேக்கப்பில்.. “மாப்பிள்ளை வருவதற்க்குள் அங்கு இருக்கும் ரெஸ்ட் ரூமில் டச்சப் செய்து கொள்ளுடீ..” என்ற அது தான் முக்கியம் என்பது போல் கூறினார்..

அதற்க்கும் மேகா. “எல்லாம் எனக்கு தெரியும்..” என்று தான் கத்தினாள்..

பின் என்ன அவள் அம்மா சொல்வதற்க்கு முன்னவே தன் முகத்தை டச்சப் செய்து கொள்ள ரெஸ்ட் ரூமூக்கு மூன்று முறை சென்று வந்து விட்டாள்.

அதை கவனித்த அங்கு வேலை செய்பவன் ஒருவன் இன்னொருவனிடம்..

“பின்னாடி பிச்சிக்கிச்சி என்று நினைக்கிறேன்..” என்று தன்னை காட்டி சொன்னவனின் பேச்சின் அர்த்தம் புரியவே மேகாவுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது… புரிந்த பின் அவர்களை முறைக்க மட்டும் தான் அவளாள் முடிந்தது.

ஏன் என்றால் அவள் இந்த காபி ஷாப்புக்கு வந்து ஒன்னரை மணி நேரம் கடந்து விட்டது…
இது வரை நான்கு முறை இவளிடம் வந்து ஆர்டர் எடுக்க வந்தவர்களிடம் மேகா.. “ ஒருவருக்காக காத்து கொண்டு இருக்கிறேன்.. அவர் வந்த பிறகு சொல்கிறேன்..” என்று இரண்டு முறை சொன்ன போது ஒன்றும் சொல்லாது போனவர்கள் மூன்றாம் முறை சொன்ன போது ஒரு மாதிரியாக அவளை பார்த்து கொண்டு சென்றவன்.. நான்காம் முறை வந்து கேட்டு விட்டு சென்றவன் அவன் அருகில் இருந்தவனிடம்..

மேகா காதில் விழ வேண்டும் என்றே. “ ஒசியில் ஏசி வாங்க வந்த கேசு போல.. கொஞ்ச நேரம் பார்க்கலாம் பின் பார்த்து கொள்ளலாம்..” என்ற அவர்களின் பேச்சில் மேகா மிக அவமானமாக உணர்ந்தாள்..

நேரம் செல்ல செல்ல ஒரு மனது சென்று விடலாமா.? என்று யோசிக்க இன்னொரு மனமோ.. இவர்களை எல்லாம் பார்த்தால் நம் வளமான எதிர்கால கனவு கனவாகவே சென்று விடும் என்று அவளே பல்லை கடித்து கொண்டு இருந்தாள்.

இதில் அவள் அன்னை வேறு சும்மா சும்மா அழைத்தால், அனைவரின் மீது இருந்த எரிச்சலை தன் அன்னையின் மீது கொட்டி விட்டாள்.

“எனக்கு எல்லாம் தெரியும்.. நீ சும்மா சும்மா எனக்கு ,போன் போடாதே.” என்று கத்தி விட்டாள்..



மேகாவின் அன்னையோ அவளுக்கு மேலாக… “ எனக்கு இது போல மாப்பிள்ளை வேண்டும்.. அது போல மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்டு கேட்டு.. உனக்கு வயது கூடி போனது தான் மிச்சம்.. உனக்கு வயது கூடியதோடு உனக்கு மாப்பிள்ளை பார்த்து அலைந்த உன் அப்பனும் போதுமடா சாமி என்று அந்த சாமி கிட்டேயே போய் சேர்ந்து விட்டார்..

நீ கேட்டது போல வசதி அழகு பிக்கல் பிடுங்கல் இல்லாது.. அதுவும் உன் சின்ன வயசுல ஆசை வைத்த சம்மந்தம் வந்து இருக்கு..

அதை சமார்த்தியமா தக்க வைத்து கொள்ள தான் உன் வயசை காட்டி கொடுத்து இந்த மாப்பிள்ளையும் போயிட போறான் என்று தான் தவித்து உனக்கு போன் போட்டேன்.. இவனும் உனக்கு வயசு கூட என்று சொல்லிட்டா உன் கல்யாண கனவு கனவோடவே போயிடும்.” என்று பெண்ணுக்கு ஒரு வருடம் இரண்டு வருடம் கிடையாது…

ஏழு வருடங்கள். மேகா இரண்டு பட்டம் வாங்கிய பின் அவளின் தந்தை உயிரோடு இருக்கும் போது ஆயிரம் எதிர் பார்ப்போடு தான் தன் மகளுக்கு வரன் தேட ஆரம்பித்தது..

மேகாவின் எதிர் பார்ப்பு மிக நீளம். அதாவது மாப்பிள்ளை வசதியாக இருக்க வேண்டும்.. அதே சமயம். ஒரே மகனாகவும் இருக்க வேண்டும்..

மாப்பிள்ளைக்கு தாய் தந்தை இல்லை என்றால் ஷேமம்.. அப்படி இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் ஒன்றாக இருக்க கூடாது.

அதாவது தனிக்குடித்தனம்.. என்று மேகா பெரிய மனது செய்து தாய் தந்தை இருக்கலாம் என்று சொன்னவள்.. கூடவே.. பொருளாதரத்தில் மகனை எதிர் பாராது அவர்கள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தாள்..

இன்னும் சில நிபந்தனையாக படிப்பு அழகு என்று அவளின் எதிர் பார்ப்பின் நீளத்தில் அவளின் அன்னை…

“ நீ சொன்னதற்க்கு மாப்பிள்ளை ஆர்டர் செய்து தான்டீ கொண்டு வர வேண்டும்..” என்று கூறினார்.

ஆனால் மேகாவின் தந்தையோ.. “என் மகளுக்கு என்ன குறை.. அழகு வசதி.. எல்லாம் இருக்கு.. அவளே மாப்பிள்ளையை தேடி கொள்ளாது என் விருப்பம் இது என்று சொல்றா பாரு..

அந்த பெண்ணுக்கு அவள் எதிர் பார்ப்புக்கு தோதா மாப்பிள்ளை கொண்டு வரலேன்னா நான் என்ன அப்பன்..” என்று கேட்டவர் கூட. ஆண்டுகள் செல்ல செல்ல.

அதுவும் வசதி என்றால் தங்களை விட பல மடங்கு கூடி என்றதில்.” ஒரு சிலது விட்டு கொடுக்கலாமே..” என்று கேட்டவரிடம்..

“ எனக்கு எத்தனை பிரபோஸ் வந்தது தெரியுமா டாட்… ஆனா அது எல்லாம் வேண்டாம் என்று நான் ஏன் சொன்னேன். உறவுக்கு முன்னாடி நீங்க தலை குனிய கூடாது என்று.. ஆனால் நீங்க. என் எதிர் பார்ப்புக்கு மாப்பிள்ளை கொண்டு வர முடியாது என்னை அட்ஜஸ்ட் செய்துக்க சொல்றிங்க..” என்று மனதை தொடும் வகையாக பேசியதில் அந்த தந்தையும் மகளின் எதிர் பார்ப்புக்கு மாப்பிள்ளை தேடி தேடி மாப்பிள்ளை வராது எமன் வந்தது தான் மிச்சம் என்று அவர் போய் சேர்ந்து விட்டார்..



பின் அந்த வேலை அன்னையின் கைக்கு வந்து விட.. அவரும் பார்த்து பார்த்து தன் கணவனிடம் தன்னை அனுப்பி விட்டு தான் மகள் ஒய்வாள் போல.. என்று நினைக்கும் சமயம்..

மேகாவின் வயது அதாவது முப்பது தொட்டத்தில் இரண்டாம் தாரமாக.. ஆனால் வசதியோடு மாப்பிள்ளை வர.. இவள் மாப்பிள்ளைக்கு தாய் தந்தையே இருக்க கூடாது என்று சொன்னவளுக்கு அடிஷனலாக மகளும் இருக்கும் இடமாக தரகர் ஒரு இடத்தை கொண்டு வந்தவர்.

“ பெண்ணுக்கு வயது கூடி போய் விட்டது.. இது போல் தான் இனி வரும் .” என்றதில் மகள் தற்கொலை முயற்சியை கையில் எடுக்க அவளை சமாதானம் செய்து.

“உனக்கு பிடித்தது போல் வரன் கொண்டு வரேன்..” என்று சொன்ன போது தான் லிங்காவின் மாமா சிவ பிரகாஷ் இவர்கள் வீடு தேடி வந்து ஒரு சில கோரிக்கையோடு இந்த இடம் உங்க மகளுக்கு முடித்து வைக்கிறேன் என்று சொன்னது..



சரி இந்த மாப்பிள்ளைக்கு தான் தன் மகளை முன்னவே பிடிக்குமே என்று மகள் கிளம்பி போகும் வரை தைரியத்தில் இருந்த மேகாவின் அன்னை…

பக்கத்து வீட்டு பெண்மணி சொன்ன. “ முன் போல உன் மகள் முகம் லட்சணம் இல்ல .. அதுக்கு தான் காலத்தில் பயிர் செய் என்று சொல்லி இருக்காங்க… மேக்கபோடு கொஞ்சம் பார்ப்பது போல இருக்கா.. ஆனாலும் முகத்தில் மூப்பு தட்டி விட்டது..” என்ற பேச்சில் தான் மேகாவின் அம்மா பயந்து போய் மேகாவுக்கு அத்தனை முறை கை பேசியில் அழைத்தது..

லிங்கா இப்படி தாய் மகள் இருவரையும் டென்ஷன் படுத்தி விட்டு மிக சாவாகாசமாக அந்த காபி ஷாப்புக்குள் தன் காரை வந்து நிறுத்தினான்..

மேகா வாசல் பார்த்தப்படி அமர்ந்து இருந்ததாலும், லிங்காவின் காரை ஏற்கனவே மேகாவுக்கு தெரிந்ததாலும், லிங்கா வந்து விட்டான் என்று மகிழ்ச்சி அடைந்த மேகா.. உடனே ஏதோ நினைத்து சட்டென்று தன் பேசியில் இருக்கும் கேமிராவை ஆன் செய்து தன் முகத்தை பார்த்தவளுக்கு அவ்வளவு திருப்தி இல்லாது போய் விட்டது.. கூடவே அன்னை சொன்ன பேச்சும் நினைவுக்கு வர..

அங்கு வேலை செய்தவர்களை எல்லாம் கணக்கில் எடுத்து கொள்ளாது திரும்ப ரெஸ்ட் ரூமுக்கு சென்று தன் முகத்தை மீண்டும் ஒரு முறை டச்சப் செய்த பின் தான் அமர்ந்து இருந்த இருக்கையை நோக்கி வந்தவள் கண்ணுக்கு லிங்கா தான் அமர்ந்து இருந்த இருக்கையில் சரியாக எதிரில் அமர்ந்த வாறு தன் கை பேசியில் ஏதோ பார்த்து கொண்டு இருந்தான்..



மேகாவுக்கு தூரம் இருந்து பார்த்த போதே.. அவன் அழகில், அதுவும் அந்த மேன்லி லுக்கில் மொத்தமாக விழுந்து போனவள்.. இப்போது அருகில் பார்க்க பார்க்க இன்னுமே அவன் மீது ஆசை கூடி போனது.

முன் இவனை கை நழுவி விட்டு விட்டோமே என்று இருந்தவளுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.. இந்த வாய்ப்பை நான் விட்டு விட கூடாது என்ற முடிவோடு லிங்காவின் எதிரில் சென்று அமர்ந்தாள்…




 
Well-known member
Joined
May 24, 2024
Messages
258
Pinnadi pichikicha ha ha athan nadakapothu
 
  • Like
Reactions: grg
Active member
Joined
May 11, 2024
Messages
193
Linga yeppadi avala nosecut panna poran nu waiting 😍😍😍nice interesting ud sis ❤️
 
  • Like
Reactions: grg
Well-known member
Joined
Jun 2, 2024
Messages
135
Bulb vaanga pora...nee epdi college la join pana nu visranai pana than intha meeting oh nu enaku thonuthu...
 
  • Like
Reactions: grg
Well-known member
Joined
May 11, 2024
Messages
207
மேகாவின் பேர்ஆசைக்கு லிங்கா என்ன ஆப்புவைக்க போறானோ 🤔🤔🤔🌺🌺🌺
 
  • Like
Reactions: grg
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
270
அளவுக்கு அதிகமா எதிர்பார்ப்பு வச்சு வந்த வரனை எல்லாம் தட்டி கழிச்சா கடைசில எப்படி இருந்தாலும் சரின்னு கிடைக்கிறத ஏத்துக்கிட வேண்டிய நிலை தான் வரும்....
மேகாக்கு இன்னும் புரியல....

லிங்கா எதுக்கு வந்துருக்கான்னு தெரியாம நடையா நடந்து பெயிண்ட் அடிச்சுட்டு இருக்கா பாவம்...... 🤭🤭🤭
செம பல்பு குடுக்கப் போறான்.... 🤣🤣🤣🤣🤣
 
  • Like
Reactions: grg
Member
Joined
May 11, 2024
Messages
83
இப்படி ஒரு ஆளுக்கு நீ லெட்டர் கொடுத்து இருக்க வெண்டியது இல்ல லிங்கா
 
  • Like
Reactions: grg
Top