Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Pirithariyaa Pithana Podhum-21

  • Thread Author
அத்தியாயம்….21

தான் அமர்ந்தும் தன்னை பாராது கை பேசியையே பார்த்து கொண்டு இருந்த லிங்காவை மேகா யோசனையுடன் பார்த்திருந்தாள்..

அவன் வேண்டும் என்று தன்னை பாராது இருக்கிறானா.. இல்லை உண்மையில் தன்னை கவனிக்கவில்லையா…? என்று.. நினைத்து கொண்டு இருக்கும் போதே..

நான்கு முறை ஆர்டர் எடுக்க வந்து சென்றவர் மீண்டும் வர.. இப்போது அவன் மேகாவிடம் கேட்காது லிங்காவிடம்..

“சார்..” என்ற அழைப்பிக் பேசியில் இருந்து கண்ணை எடுத்து நிமிர்ந்து பார்த்த போது தான் மேகா அங்கு அமர்ந்து இருப்பதை கவனித்து..

“ஒ வந்து விட்டாயா.. ரொம்ப நேரம் வெயிட் செய்துட்டு இருந்தியா…?” என்று அவள் ஈரம் படிந்த புடவையை பார்வையிட்ட வாறு கேட்டான்..

மேகா.. “இல்ல நானும் ஜஸ்ட் நீங்க வருவதற்க்கு கொஞ்ச நேரம் முன் தான் வந்தேன்..” என்றவளின் பேச்சில் ஆர்டர் எடுக்க வந்தவன்.. பக் என்று சிரித்து விட்டான்..என்ன முயன்றும் அவனால் சிரிப்பை அடக்க முடியாது போய் விட்டது..

லிங்கா அவனை நிமிர்ந்து பார்த்த போது சிரிப்பை கடினப்பட்டு அடக்கி கொண்டு.. “ சாரி சார்.. சாரி..” என்று என்ன முயன்றும் மீண்டும் அவனுக்கு சிரிப்பு பொத்து கொண்டு வந்து விட்டது.

லிங்காவுமே மெல்ல சிரித்த வாறு மேகாவிடம் என்ன வேண்டும் என்று கேட்டவன்..

“கோல்ட் காபி ..” என்று மேகா முகத்தில் கோபத்தை காட்டாது மிக சாதாரணமாக தன்னை கட்டிக் கொண்டு, அதுவும் அவன் சிரிப்புக்கு ஒத்து ஒதுவது போல அவளுமே தன் முகத்தில் புன்னகையை வலுக்கட்டாயமாக, வர வழைத்து கொண்டு கூறி முடிப்பதற்க்குள் படாத பாடு பட்டு போனாள்.

லிங்காவும். கோல்ட் காபி குடிக்க எண்ணி.. ஆர்டர் எடுப்பவனிடம். “ டூ கோல்ட் காபி..” என்று கூறியவன்.. அவன் போகும் முன்.

“ சிரிப்பு வந்தால் சிரித்து விடு.. ஏன் அடக்குற.?” என்று இலவச ஆலோசனை ஒன்று வழங்கிய பின்னேயே அவனை அனுப்பி வைத்தது..

மேகாவோ.. அவன் ஏன் சிரித்தான் என்று தெரிந்து சொல்கிறானா.? இல்லை தெரியாது சொல்கிறானா..? என்று தெரியாது மேகா தான் பல்லை கடித்து கொண்டு சிரித்த முகத்தோடு..

“ அப்புறம் லிங்கா.. லைப் எப்படி போகுது.?” என்று மிக கேஷ்வலாக தன் பேச்சை தொடங்கினாள்..

லிங்காவும்.. “ ம் ஃபைன்..” என்று அவனுமே சாதாரணமாக பதில் கூறினான்..

அவனின் இந்த பேச்சில் மேகாவுக்கு இன்னும் நம்பிக்கை வந்து விட்டது.. முன் லிங்காவிடம் அக்கறையாக பேசினாள் போதும்.. கூடவே கொஞ்சம் புகழ்ச்சி… முன் படிக்கும் போது.. அவனிடம் இருந்து கற்று கொள்ள.

“ எப்படி லிங்கா உனக்கு மட்டும் மேக்ஸ் சார் ஒரு முறை சொல்லி கொடுத்தாலே புரிந்து விடுகிறது.. நான் வீட்டில் இதை போட்டு போட்டு பார்த்தேன் லிங்கா. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஆன்சர் வருது..” என்று மேகா சொன்னால் போதும்..

லிங்கா தான் படித்து கொண்டு இருப்பதை கூட விட்டு அவளுக்கு புரியும் படி பொறுமையாக சொல்லி கொடுப்பான்.

கூடவே. “ உனக்கு மேக்ஸ் என்று இல்ல. எந்த சப்ஜெக்ட் என்றாலும் என் கிட்ட கேளு மேகா..” என்று அவனை சொல்ல வைத்து அனைத்து பாடத்தையும் அவனிடம் கற்று கொள்வாள்.
ஒரு முறை. லிங்காவோடு மேகா அதிக மதிப்பெண் எடுத்து விட.. மேகா லிங்கா கை பற்றி கொண்டு..

“ உன்னால் தான் லிங்கா.. நான் இவ்வளவு மார்க் எடுத்தேன்.. என் அப்பா அம்மா கூட பாராட்டினாங்க.. நான் அவங்க கிட்ட உன்னை பத்தி சொன்னேன்.. அவன் சொல்லி கொடுத்தால் மக்கு கூட மார்க் எடுத்து விடுவாங்க என்று..”

அப்படி பேசி பேசி தான் மேகா லிங்காவுக்கு தன்னை பிடிக்கும் படி செய்து விட்டாள்..

அதே மெத்தெட் ஃபாலோ செய்தால் போதும் என்ற கணக்கில் வந்த காபியை ஒரு மிடறு விழுங்கியவள்.. பார்வையால் லிங்காவையும் விழுங்குவது போல் பார்த்தவள்..

“ யூ ஹார் லுக்கிங்க ஹார்ட்..ஹன் ஹன்சம்..” என்று வெளிப்படையாக வார்த்தையாலும் சரி .. பார்வையாலும் சரி பாராட்டினாள்..

காபியை குடித்து கொண்டு இருந்தவன் மேகாவின் இந்த வெளிப்படையான பாராட்டில் அவள் முகத்தை பார்த்தவன் சிரித்து கொண்டே ..

“ தேங்கஸ்..” என்று சொல்லி மீண்டும் தன் காபி குடிப்பதில் கவனத்தை செலுத்த, மேகாவுக்கு தான் என்னவோ போல் ஆகி விட்டது.



“என்ன இது.முன் எல்லாம்..” என்று யோசித்தவள் பின் அப்போது டீன் ஏஜ் அதனால் தன் ஒரு பாராட்டுக்கு அப்படி மகிழ்ந்து போவான். ஆனால் இப்போது அப்படி வெளிப்படையாக அவன் மகிழ்ச்சியை காட்டா விட்டாலுமே..

பதிலுக்கு தன்னை பாராட்டி இருக்கலாமே, என்று நினைக்கும் போது தான் அவள் கவனத்தில் ஒன்று நினைவுக்கு வந்தது..

அது இது வரை.. அதாவது லிங்கா இந்த காபி ஷாப்புக்கு வந்ததில் இருந்தே தேவைக்கு தன் முகத்தை பார்த்து பேசுகிறான்.. தவறு தவறு தான் பேசியதற்க்கு பதில் அளிக்க என்று தன் முகத்தை பார்க்கிறான்..என்பதை உணர்ந்தவளின் மனதில் அபாய மணி அடித்தது..

இருந்தும் லிங்கா தன் மீது முன் இருந்த அந்த ஆசை மீது நம்பிக்கை வைத்தவளாக லிங்காவிடம் தன் பேச்சை தொடர்ந்தாள்.

“ இந்தியா வந்ததில் இருந்து நீங்க ரொம்ப பிஸி.. போல..” என்ற கேள்விக்கு காபியை குடித்து முடித்து விட்டதால் அதை டேபுல் மீது வைத்து விட்டு அங்கு இருந்த டீஷ் பேப்பரை எடுத்து தன் உதட்டின் மீது இருந்த அந்த காபி துளிகளை துடைத்து விட்டு…

பொறுமையாக.. “ ஆமாம்..” என்று அந்த ஒரு வார்த்தை பதில் சொல்ல ஐந்து நிமிடங்களை கடத்தினான்.

மேகாவுக்கு அடுத்து எப்படி பேச்சை எடுத்து செல்வது என்று புரியாது இருக்க இப்போது லிங்கா தன் இரு கைகளை டேபுல் முன் ஊன்றியது போல் வைத்து கொண்டு தன் உடலை டேபுல் ஒட்டியவது போல நகர்ந்தி விட்டு.

மேகாவிடம் பேசுவற்க்கு ஏதுவாக செய்த பின்.. நேர் கொண்டு அவள் முகத்தை பார்த்த லிங்கா..

“ ஏன் இவ்வளவு ஏஜ் ஆகியும் இன்னும் மேரஜ் செய்யாது இருக்கிங்க ..?” என்று கேட்டான்..

மேகா சத்தியமாக லிங்காவிடம் இருந்து இது போலான பேச்சை எதிர் பார்க்கவில்லை… என்ன பதில் சொல்வது என்று தெரியாது திணறியவளாக லிங்காவை பார்த்தாள்..

அவள் முகத்தையே பார்த்து கொண்டு இருந்ததால், அவள் முக மாறுப்பாட்டை கவனித்தவன்.. என்ன நினைத்தானோ..

“ சாரி.. சாரி உங்க கிட்ட நான் அந்த கேள்வியை கேட்டு இருக்க கூடாது தான்..” என்று அவசரமாக மன்னிப்பு கேட்க.



மேகா.. “ இல்ல இல்ல அப்படி எல்லாம் இல்ல… என் கிட்ட என்ன கேட்கவும் உங்களுக்கு உரிமை இருக்கு..” என்று சொல்லி கொண்டு இருக்கும் போது தான் மேகாவின் கவனத்திற்க்கு இன்னொன்றும் பட்டது.. அது லிங்கா தன்னை ஒருமையில் அழைக்காது பன்மையில் அழைத்து தன்னை தூரவிலகி வைப்பது போல் அவன் பேச்சு இருப்பதும்..

அதை உணர்ந்த நொடி அடுத்து பேசாது அமைதியாகி விட இப்போது லிங்கா பேசினான்..

“ இல்ல மிஸ் மேகா.. நான் உங்க கிட்ட அப்படி கேட்டு இருக்க கூடாது தான்.. ஒன்னா படித்த நாம எனக்கு மேரஜ் ஆகல. ஏன் நீங்க செய்து கொள்ளவில்லை என்று கேட்டது தப்பு தானே…? என்று சொன்னவன்.

பின்.. “ இந்தியாவில் லேடீஸ் மேரஜ் செய்யாது விட மாட்டாங்க தானே மிஸ் மேகா. அந்த தாட்ல கேட்டு விட்டேன் போல.. சரி அதை விடுங்க.. நான் உங்க கிட்ட தனியா பேச வேண்டும் என்று கேட்டதற்க்கு காரணம்..” என்று பேசிக் கொண்டு இருந்தவன் அந்த வார்த்தையோடு விட்டு மேகாவி முகத்தை ஆழ்ந்து பார்க்க..

இவ்வளவு நேரமும் லிங்காவின் பேசும் விதத்தில் குழம்பி போனவளாக தலை கவிழ்ந்து அமர்ந்து இருந்தவள்.. லிங்காவின் இந்த பேச்சில் சட்டென்று நிமிர்ந்து ஒரு வித எதிர் பார்ப்போடு அவன் முகத்தை பார்க்க.

லிங்கா இப்போது தன் பேச்சை விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து… “ அன்னைக்கு அதாவது படிக்கும் போது நீங்க எந்த இன்டென்ஷனில் என் கிட்ட பழகினிங்க என்று நான் உங்களுக்கு சொல்ல தேவை கிடையாது.. ஏன்னா அது உங்களுக்கே நல்லா தெரியும்.. எனக்கு தான் அப்போது புரியாது குழம்பி போய் தப்பு என் மீது தான் போல என்று நினைத்து கொண்டு விட்டேன்..

பின் தான் அதாவது கனடாவில் இருந்த போது கொஞ்ச ஆண்டுகள் கழித்து தான் எனக்கு புரிந்தது.. ஏதோ இருக்கு என்று..

அதனால் தான் மேரஜூக்கு பெண்கள் ஆண்களோட வயதில் சின்னவங்களா இருக்கனும் என்று சொல்றாங்க போல. ஏன்னா உங்களுக்கு எங்களை விட மெச்சூடு லெவல் அதிகம் பாருங்க..” என்று பேசியவனின் பேச்சு மேகாவுக்கு புரிவது போல் தான் இருந்தது.. இருந்தும் எதுவும் முகத்தில் காட்டாது இருந்தாலுமே அவளையும் மீறி முகத்தில் பதட்டம் காணப்பட்டது..

அதை லிங்காவும் கவனித்தான் தான் இருந்தும், அதை காட்டி கொள்ளாது…

“ எனக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒன்னு தான் மிஸ் மேகா… அன்னைக்கு என் பக்கம் தான் தப்பு என்று திருப்பி விட சொன்னது யார்..? நான் லவ் லெட்டர் கொடுக்கும் போது டீச்சர் வந்து விட்டாங்க தான்..

“நான் தான் கொடுத்தேன்.. சரி அதுவும் நியாயம் தான்.. ஆனாலுமே என்னை பொறுத்த வரை என்னை லெட்டர் கொடுக்க தூண்டியது என்னிடம் நீங்க பழகின விதம் தான்..”

“ஆனா அன்னைக்கு நீங்க பேசினது. நான் வலிய வந்து உன் கிட்ட தினம் தினம் லவ் டார்ச்சர் கொடுப்பது போல தான் பேசி வைச்சிங்க… எனக்கு தெரிய வேண்டியது ஒன்னு தான்.. அதை யார் சொல்லி நீங்க சொன்னிங்க.? இது மட்டும் தான்..”

“நீங்க என் கிட்ட உண்மை தான் சொல்ல வேண்டும்.. உங்க மீதே தப்பு இருந்தாலும், அதற்க்காக நான் உங்களை எதுவும் செய்ய மாட்டேன்.. காரணம். அந்த நிகழ்வு தான்.. என்னை இந்தியாவை விட்டு என் மாமாவிடம் கனடா போக வைத்தது.”

“நான் இங்கேயே இருந்து இருந்தால், நிச்சயம் அரை மெண்டலா தான் ஆகி இருப்பேன்.. தப்பு தப்பு என்ன ஆக்கி விட்டு இருப்பாங்க.. அன்னைக்கு நீங்க எனக்கு நல்லது தான் செய்து இருக்கிங்க..”

“உங்க பாஷையில் சொல்லனும் என்றால் கொஞ்ச நேரத்திற்க்கு முன் நீங்க சொன்ன ஹார்ட் ஹட் ஹன்சம்.. ஆக இன்னைக்கு நான் இருக்க காரணம் அன்றைய நாள் தான்.. அதனால அதை பத்தி நீங்க ஒரி பண்ணிக்காதிங்க..”

“உங்களை அன்னைக்கு அப்படி பேச வைத்தது யார்..?” என்று கேட்டு விட்டு லிங்கா மேகா முகத்தை பார்க்க. அங்கு பதட்டம் குடி கொண்டு இருக்க. அடுத்து லிங்கா கேட்ட.

“இன்னைக்கு உங்களை நான் திருமணம் செய்ய வைக்க அவங்க பேசின விலை என்ன..?” .. என்று கேட்டவன் பின் அவனே..

“என்னை இந்தியாவை விட்டு அனுப்பும் திட்டமா.? அது தான் இருக்கும் ஏன்னா.. உங்க வருங்கால கணவர் வெளிநாட்டில் இருப்பது தான் உங்கள் நிபந்தனையில் முதலாவதாக வருவது என்று எனக்கு தெரியும்..” என்று சொல்லி எழுந்து கொண்டவன்..

பின்.. “ உங்கள் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்யும் மாப்பிள்ளை வர என் வாழ்த்துக்கள்.. எனக்கு என் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்வது போல ஆள் கிடைத்தது போல.” என்று விட்டு அந்த காபி ஷாப்பை விட்டு போகும் முன் இவனுக்கு முதுகை காட்டி கொண்டு முகத்தை முக்காடு இட்டு அமர்ந்து இருந்தவளின் தலையை தட்டி விட்டு.

“அந்த ஆறி போன காபியை கவிழ்ந்து கொண்டு இன்னும் எத்தனை மணி நேரம் குடித்து கொண்டு இருப்ப.. வா போகலாம்..” என்று சொல்லி இவர்களுக்கு முதுகை காட்டி அமர்ந்து கொண்டு இருந்த மதுவின் கை பற்றி அழைத்து சென்றான்..
















 
Well-known member
Joined
Jun 2, 2024
Messages
135
Super update...nan nenachen intha Madhu ponnu epdiyum spy work panuwanu...Megha ku semma nosecut...adthu intha vishyathula Sivaprakash nose cut aaganum...
 
Well-known member
Joined
May 11, 2024
Messages
207
மேகா அவள் ஆசை லிங்கா பேசினால் புஷ்வாணம் போல் ஆகிவிட்டால் மது உன்னை லிங்கா கண்டுகொண்டது 😊😊😊😊🌺🌺🌺🌺
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
270
மேகா 🤣🤣🤣🤣 ரெஸ்ட் ரூம்க்கு நடையா நடந்தது எல்லாம் வீணா போச்சு.... 🤣🤣🤣🤣🤣 செம பல்பு... 😝

மது 🤣🤣🤣🤣 ஒரு ஸ்பை வேலைய கூட ஒழுங்கா பார்க்கத் தெரியல... 🤭
 

grg

Well-known member
Joined
Oct 18, 2024
Messages
234
😍😍😍
 
Top