Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Pirithariyaa Pithana Podhum - 22

  • Thread Author
அத்தியாயம்….22

காரில் ஏறி அமர்ந்ததில் இருந்து மது லிங்காவின் பக்கம் பார்வை திருப்பாது வெளியில் பார்வை இட்டு கொண்டு இருந்தவளை பார்த்த வாறு காரை செலுத்திக் கொண்டு இருந்த லிங்காவுக்கு இவ்வளவு நேரம் இருந்த மனஅழுத்தம் குறைவது போல் இருந்தது..

லிங்காவுக்கு என்ன தான் மேகாவின் பாதிப்பு இல்லாது போல பேசினாலுமே, அன்று அவன் பட்ட அந்த அவமானத்தை இப்போது நினைக்கும் போது கூட தன்னை தானே மிக கீழாக உணர்வான்..

அந்த அவனின் உணர்வு இன்று மேகாவை பார்த்ததினால் மட்டும் கிடையாது. கனடாவில் இருக்கும் போதே தான் இங்கு வந்த அந்த சூழ்நிலை நினைவுக்கு வந்து விட்டால் போதும்..

தான் அவ்வளவு ஏமாளியாகவா இருந்து விட்டோம் என்று தன்னை தானே திட்டி கொள்வானோ ஒழிய மேகாவையோ தன் பெரிய மாமாவையோ திட்ட மாட்டான்..

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள்.. காலம் கற்று தந்த பாடம் அது அவனுக்கு..



அப்போது அவன் டீன் ஏஜில் இருந்தவன் தான்.. ஆனால் அதே வயது தானே மேகாவுக்கும், அந்த வயதில் தன் வீக் பாயிண்ட் என்ன என்று தெரிந்து தன்னிடம் பேச தெரிந்தவளுக்கு, பாடத்தில் எழும் சந்தேகங்களை சுய நலத்தோடு தன்னிடம் தெளிவு படுத்தி கொள்ள தெரிந்தவளுக்கு..

படிப்பு எனும் போது அவள் தன்னிடம் அது போல் பழகி இருக்க வேண்டாம். “ லிங்கா இது சொல்லி கொடு ..” என்று கேட்டு இருந்தாலே சொல்லி கொடுத்து இருப்பான் தான்.

ஆனால் அவள் அது போல் பழகி.. சின்ன வயது என்றாலுமே, பழகிய பழக்கம் எது என்று பிரித்து தெரியாத அளவுக்கு லிங்கா முட்டாள் இல்லையே.. பாசம் அக்கறை அன்பு காட்டி தன்னை மேகா முட்டாளாக்கி விட்டாலுமே, லிங்கா முட்டாள் கிடையாது தானே.

ஏதோ காரணம் தன்னிடம் பழகினாள் என்று நினைத்தவனுக்கு இன்று மதியம் தான் மேகா அப்போதே தன்னிடம் ஏன் பழகினால், பின் ஏன் அனைவரும் முன்னும் அப்படி சொன்னால் என்ற காரணம் புரிந்து விட்டது..

மேகாவுக்கு அந்த வயதிலேயே லக்சரி வாழ்க்கை வாழ ஆசை.. அந்த பள்ளி தன்னோடது என்று தெரிந்து தான் தன்னிடம் பழகினாள்..

அதோடு அம்மா இல்லை அப்பா வேறு திருமணம்.. ஆண் வாரிசு என்பதால் பள்ளி என்னுடையது ஆகி விடும் என்று அந்த வயதிலேயே பல கணக்கு போட்டு தான் அவள் தன்னோடு பழகி இருக்கிறாள்..

பின் தான் கடிதம் கொடுத்த போது ஆசையோடு தன்னை அவள் பார்க்கும் போது தான் டிச்சர் வர பயந்தாலுமே, அவள் தன்னை பார்த்த அந்த பார்வை மாறவில்லை தானே..

பின் எப்போது மாற்றி பேசியது… தன் பெரிய மாமா முதலில் அவளை அழைத்து பேசிய பின் தன்னை அழைத்து விவரம் கேட்டு, அதன் பின் அனைவரின் முன்னும் தன்னை பொறுக்கி போல சித்தரிக்க காரணம், எந்த நாளும் தான் அந்த பள்ளியில் கால் எடுத்து வைக்க கூடாது என்று நினைத்து தானே.

பின் தானே தெரிந்தது. சிவ பிரகாஷ் பள்ளி மட்டும் கிடையாது. அந்த வீட்டை விட்டு அனுப்பவே தான் அவர் காய் நகர்த்தி இருக்கிறார் என்பது.

அவர் நினைத்தது போல் தான் அனைத்துமே நடந்தது.. ஆனால் அவர் நினைத்து பாராதது திரும்பவும் லிங்கா இந்தியா வந்ததோடு மட்டும் அல்லாது பள்ளி கல்லூரி தன் கையில் வரும் என்பதை.

ஆனால் முன் போலவே இந்த மேகாவை வைத்தே தன்னை இந்த நாட்டை விட்டு வெளியேற நினைத்தது தான் அவனால் பொறுக்க முடியாது போய் விட்டது..

தன்னை எவ்வளவு ஈசியாக நினைத்து இருந்தால், திரும்பவும் தன்னிடம் அதே முறையை தொடர நினைத்து இருப்பார்கள்… காட்டுக்கிறேன் நான் யார் என்பதை என்று பக்கத்தில் மது அமர்ந்து இருப்பதை மறந்தவனாக தன் மனதில் ரணத்தை ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்க..

முதலில் மதுவுக்கு லிங்காவின் மீது இருந்த கோபத்தில் காரில் ஏறியதில் இருந்து அவன் பக்கம் பார்க்காது முகத்தை திருப்பி அமர்ந்திருந்தவள்..

சிறிது நேரம் அவன் பார்வை தன் மீது தொட்டு தொட்டு மீண்டதில் மனதின் ஒரத்தில் கொஞ்சம் மழை சாரல் அடித்தது என்னவோ உண்மை..

சரி அந்த குளுமையை சிறிது நேரம் அனுபவிக்கலாம். பின் அவன் ஏன் மேகாவை பார்க்க வந்தான் என்று கேட்டு ஒரு பிடி பிடித்து விடலாம் என்று மது நினைத்து கொண்டு இருக்க..

லிங்காவோ சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தவன் பின் தன்னில் மூழ்கி போனதில் மதுவின் பக்கமே பார்வையை திருப்பவில்லை..

மது தான் மேகாவை பார்க்க வந்த கோபம் தான் கோபமாக இருக்கிறேன் என்று தெரிந்தே தன்னை சமாதானம் படுத்தாது இருப்பது இரண்டு சேர்ந்து அவனை கோபத்துடம் திரும்பி பார்த்தவள் கண்ணுக்கு, கோபம்.. சோகம் ஆற்றமை என்று நாறி மாற் லிங்காவின் முகத்தில் வந்து போன பாவனையில் தன் கோபம் மறந்தவளாக லிங்காவின் தொடை மீது கை வைத்து..

“ஈஷ் அத்தான்..” என்ற அழைப்பில் மெல்ல லிங்கா திரும்பி மதுவின் முகத்தை பார்த்தான்..

லிங்காவின் அந்த பார்வையில் அதிர்ந்து போன பெண்ணோ. “ஈஷ் அத்தான்..” என்று மது திரும்பவும் அழைத்தது தான் தாமதம்..

காரை பின் வண்டி ஏதும் வருகிறதா இல்லையா..? என்று கூட பாராது சட்டென்று ஒரம் கட்டி காரை நிறுத்தியவன்.



மது என்ன என்று உணரும் முன் அவளை இறுக்கி அணைத்து கொண்டான்.. அணைத்ததோடு மட்டும் அல்லாது அவள் முகத்தில் சிறு அளவு கூட விடாது தன் உதடு கொண்டு ஒத்தடம் கொடுத்து கொண்டு வந்தவன் அவளின் உதட்டில் வரும் போது மட்டும், அவன் உதடுகள் அந்த இடத்திலேயே நீண்ட நேரம் தஞ்சம் அடைந்து அந்த இடத்தை விட்டு மீண்டு நான் வர மாட்டேன் என்று அவன் உதட்டோடு அவன் மனமும் சத்தியாகிராகம் செய்து கொண்டு விட்டது..

மதுவின் நிலையோ லிங்காவின் நிலையை விட மோசம் என்று தான் சொல்ல வேண்டும்.. லிங்கா காரை நிறுத்தும் போதே ஏன் என்று கேட்க வாய் திறந்த வேளையில் தான் லிங்கா தன் முத்த தாக்குதலை தொடங்கியது..

முதலில் வேண்டாம் என்று மறுக்கும் விதமாக தான் தன் கை கொண்டு அவனின் தோளை தொட்டு தன்னில் இருந்து பிரித்து எடுக்க முயற்ச்சி செய்து கொண்டு இருந்தது.

பின் அந்த முத்த தாக்குதலை எதிர் கொண்டு பின் பதில் கொடுத்து என்று அவளுமே அதில் மூழ்கி விட்டதில் லிங்கா விலகியது கூட உணராது அந்த முத்தம் கொடுத்த ஈரம் இன்னும் அவள் முகத்தில் மிச்சம் இருக்க.. அந்த குளுமையில் கண் மூடி லயித்து போனாள் பெண்ணவள்..

லிங்கா மதுவின் அந்த நிலையை பார்த்து அவளிடம் மீண்டும் நெருங்க தான் மனது சொன்னது.. ஆனால் அறிவோ.. இது பொது இடம்.. இங்கு வைத்து என்ன செய்து கொண்டு இருக்க.. இப்போது எல்லோர் கையிலும் செல் இருக்கு.. இதை யாராவது படம் பிடித்து.. தான் என்றால் பரவாயில்லை மது .. அந்த நினைவில் இப்போது லிங்கா மது செய்ய நினைத்ததை அது தான் தன்னில் இருந்து மதுவை பிரித்து எடுத்து தள்ளி அமர வைக்கும் போது தான் மது தன்னிலைக்கே வந்தாள்.

வந்தவளுக்கு அவன் முகத்தை பார்க்க முடியவில்லை. என்ன இது நான் இவ்வளவு பலவீனமானவளா.? என்ற யோசனை தான் அவளுக்குள் ஒடியது..

அமெரிக்காவில் தனித்து இருந்து இருக்கிறாள்.. மதுமதி அழகானவள்.. அழகான பெண்களுக்கு வரும் லவ் ப்ரபோஸ் அவளுக்கும் இந்தியா மட்டும் இல்லாது அமெரிக்காவிலும் வந்தன. அதுவும் அழகு இளமை. பணம் என்று இருந்தவர்களின் காதலை ஏற்காது அவர்களின் மனது புண்பாடாது அதை நிராகரித்தும் இருக்கிறாள்..ஆனால் இன்று.. இருவரும் ஒருவருக்கு ஒருவர் இன்னும் காதல் கூட இன்னும் சொல்லி கொள்ளவில்லை.. ஆனால் பிடித்தம் இருக்கிறது என்பது இருவருக்கும் மற்றவர்கள் மனது புரிந்து தான் இருக்கிறது..

இது அனைத்தும் இருந்தும்.. நல்ல தாயின் வளர்ப்பு அவள் மனதை கேள்வி கேட்டது இது தான். இருந்தாலும், ஒரு பொது வெளியில் அதுவும் ஒரு ஆண் அவனே தன்னிலை வந்து உன்னை தள்ளி வைக்கும் அளவுக்கு நீ உன்னை இழந்து நிற்பாயா…? என்பதே..

ஒரு மனது இப்படி நினைத்தது என்றால், இன்னொரு வெட்கம் கெட்ட மனது.. உதடு என்ன பாவம் செய்தது..? முகம் முழுவதற்க்கும் முத்தம் கொடுத்தவனுக்கு தெரியாதா.? உதடும் முகத்தில் தான் இருக்கிறது என்று..

இப்படி மது மதி நினைத்தாள் என்றால், லிங்காவுக்கோ.. எவ்வளவு சீக்கிரம் இந்த பிரச்சனை எல்லாம் முடியும்.? மதுவை திருமணம் செய்வோம்.. அவளை பிரியாது ஒரே வீட்டில் என்ன.? ஒரே அறையில், அவன் மனதில் அந்த சிந்தனை வந்த போதே … சற்று முன் அவளின் வாசனை உணர்ந்த தன் மூக்கையும். அவள் முகத்தில் படிந்து இருந்த வியர்வையும் சுவைத்த தன் உதட்டையும் தன்னால் அவன் கை தொட்டு தழுவியது.



எந்த நேரத்தில் பிரச்சனை சீக்கிரம் தீர வேண்டும் என்று நினைத்தானோ… தற்போது அவன் கல்லூரி விடுதியில் கொலை உண்ட கேசை விசாரிக்கும் இன்ஸ்பெக்டரிடம் இருந்து லிங்காவுக்கு அழைப்பு வந்தது..

அழைப்பை ஏற்றதும், இன்ஸ்பெக்டர் என்ன சொன்னாரோ..? இங்கு லிங்கா..? “ ம் இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் அங்கு இருப்பேன்..” என்று சொன்னவனின் மனநிலை சிறிது நேரம் இருந்த மனநிலைக்கு முற்றிலும் வேறாக இருந்தது…

“மது நான் அந்த கேஸ் விசயமா இன்ஸ்பெக்டரை பார்க்க வேண்டி இருக்கு.” என்று லிங்கா சொல்லி கொண்டு இருக்கும் போதே..

“நான் ஆட்டோ பிடித்து வீட்டுக்கு போயிடுறேன் ஈஷ் அத்தான்..” என்று இடை புகுந்து மது சொன்னாள். ஆனா தலை நிமிர்ந்து அவனை பாராது குனிந்த வாக்கிலேயே..

குனிந்து இருந்த மதுவின் தலையையே பார்த்து கொண்டு இருந்தவன் அவள் பேச்சுக்கு எந்த மறுப்பேச்சும் பேசாது அமைதியாக இருக்க. தான் பேசியதற்க்கு பதில் இல்லாது போகவும் மது மெல்ல நிமிர்ந்து லிங்காவை பார்த்தாள்..



பார்த்தவள் கண்ணுக்கு தன்னையே பார்த்து கொண்டு இருந்த அவளின் ஈஷ் அத்தான் தெரிய… அவன் பார்வையில் மீண்டும் சட்டென்று குனிய பார்த்தவளை குனிய விடாது அவளின் மோவாயை பிடித்து தன்னையே பார்க்கும் படி பிடித்த அவன் பிடியை விடாது..

“ நாம ஒன்னும் அவ்வளவு பெரிய தப்பு எல்லாம் செய்து விடல மது… என்னைக்கு இருந்தால் நான் உன்னையே தான் மேரஜ் செய்துப்பேன்.. நீயும் அப்படி தானே…?” என்று கேட்டவனுக்கு உடனடியாக.

“ஆமாம் .. ஆமாம்..” என்று அவன் பிடித்து இருந்த கையையும் மீறி அவ்வளவு வேகமாக தலையாட்டி மது அவள் தன் ஒப்புதலை கூறினாள்..

அவளின் உடனடி பதிலில் சிரித்த லிங்கா.. “அப்புறம் என்ன..? என் முகத்தை பார்க்க அசிங்கப்படுற…? இந்த சமயத்துல நீ வெட்கம் தான் படனும்.. இது போல அசிங்கம் இல்ல புரியுதா..?

உன்னில் இருந்து நான் என்னை உடனே மீட்டுக் கொள்ள காரணம்.. இப்போ நான் உன் உதட்டை தொட்டால், நான் உன்னில் முழுவதுமா மூழ்கி போய் விட வேண்டும்.. நமக்குள் எந்த ஒரு இடஞ்சலும் இல்லாது இருக்க வேண்டும்..



உன் உதட்டின் பரிசம் போகுற போக்குல எல்லாம் நான் உணர கூடாது.. அது ஆழ்ந்து அனுபவித்து, நான் உணரும் அந்த உணர்வு.. நீயும் உணர்ந்து.. என் உணர்வை உனக்கு சரியா உணர்த்துகிறேனா என்று உன் கண்ணை பார்த்து கொண்டே நான் மட்டும் அனுபவிக்காது, உன்னையும் அனுபவிக்க வைத்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

அதுக்கு இந்த இடம் ஏற்றதும் இல்ல. இப்போ நேரமும் அதுக்கு உண்டானது கிடையாது..” என்று லிங்கா பேச பேச. அவன் சொன்னது போல் இப்போது மதுவின் முகம் அவமானத்தால் சிறுத்து போகவில்லை… வெட்கத்தால் சிவந்து காணப்பட..

அவள் கன்னத்தை தட்டி.. “தட்ஸ் குட்..” என்றவன் அவளை ஆட்டோவில் ஏற்றி விட்டு இன்ஸ்பெக்டர வர சொன்ன அந்த காபி ஷாப்பியை நோக்கி சென்றவனின் மனது.. இந்த பிரச்சனையை எல்லாம் விரைவில் முடித்து விட்டு. மதுவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே நிரம்பி வழிந்தது..



இன்ஸ்பெக்டர் சொன்ன அந்த காபி ஷாப்புக்குள் லிங்கா நுழைந்த போது, அங்கு இன்ஸ்பெக்டரோடு இரு இளைஞர்கள் அமர்ந்து இருப்பதை பார்த்த வாறே அவர்களை நோக்கி சென்றவன். அவர்கள் பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்த லிங்கா.

அந்த இளைஞ்சர்களை யோசனையுடன் பார்த்து கொண்டே இன்ஸ்பெக்டரிடம்.. “ கேஸ் விசயமா பேச தானே என்னை வர சொன்னிங்க…?”என்று கேட்டவனின் குரலில், இவர்கள் யார்.? என்ற மறைபொருள் அடங்கி இருந்தன..

அதற்க்கு அந்த இன்ஸ்பெக்டர். “ ஆமாம்.. ஆமாம் இப்படியும் இருக்குமா என்று எனக்கு ஒரு க்ளூ கிடைத்து இருக்கு… அதனால தான் உங்களை நான் வர சொன்னேன்,.. இவங்க யார் என்று நீங்க நினைக்கிறது எனக்கு தெரியுது மிஸ்டர் லிங்கா.

“அந்த க்ளூ கொடுத்தவங்களே இவங்க தான்.. அது என்ன என்பது நான் சொல்றதுக்கு பதில் இவங்களே சொன்னா நல்ல இருக்கும்..” என்று சொன்ன அந்த இன்ஸ்ப்வ்க்டர்.

லிங்காவிடம் அந்த இளைஞ்சர்களை முறையே.. “இவர் பெயர் கோகுல்.. இவர் டெக்ஸ்டைல்ஸ் வைத்து நடத்தி கொண்டு இருக்கிறார்” என்று மாநிறத்தில் நல்ல உயரட்த்தில் இருந்தவனை அறிமுகம் செய்து வைத்த இன்ஸ்பெக்டர்..

பின் அடுத்து அமர்ந்து இருந்த வெள்ளையாக அவனின் உயரமும் கோகுல் என்று அறிமுகம் செய்து வைத்தவனின் உயரம் அளவுக்கு தான் இருந்தான்..

அவன் பெயர் கரண் அவனுமே தொழில் அதிபர் தான் என்று இன்ஸ்பெக்டர் அறிமுகம் செய்து வைத்ததுமே.. மரியாதைக்கு இன்ஸ்பெக்டர் அறிமுகம் படுத்திய போது அவர்களை பார்த்து சிரித்த லிங்கா. தன்னை “ நான் லிங்கேஷ்வரன்.. “ என்று சொல்லும் போதே அந்த கரண்..

“ ம் தெரியும் சார்.. S.M கல்லூரி பள்ளியின் நிர்வாகியும் நீங்க என்பது தெரியும்..” என்று சொல்ல கோகுலும் தெரியும் என்பது போல் தான் சொன்னான்..

பின் லிங்கா இன்ஸ்பெக்டரிடம்… “ ஹாஸ்ட்டல் அந்த கொலை சம்மந்தமா ஏதாவது விசயம் தெரியுமா..? இவங்களுக்கு .” என்று நேரிடையாக கேட்க.

“தெரியுமா என்று தெரியல.. ஆனா இவங்க இரண்டு பேரும் ஒரு விசயம் சொன்னாங்க.. இவங்க சொன்ன விசயத்துக்கு பின்னே போனா.. ஒரு வேள அது இப்போ நாம தேடும் குற்றவாளியை போய் சேரலாம்..” என்று சொன்னதுமே இப்போது லிங்காவின் முழுபார்வையும் அந்த இரு இளைஞர்கர்கள் மீது தான் இருந்தது.

அந்த இரு இளைஞசர்களின் வயதும்.. இவன் வயதை ஒத்தது போல் தான் இருக்கும்..என்று இவன் யோசிக்கும் போதே இடையில் அந்த இன்ஸ்பெக்டர்..

“நீங்க ஒன்னும் கவனிச்சிங்களா தெரியல.. இரண்டு பேருமே பிஸ்னஸ்மேன்.. “ என்று சொல்ல..லிங்கா ஒன்றும் சொல்லாது தலையாட்டியவனிடம்..

“இது மட்டும் இவங்களுக்குள் இருக்கும் ஒற்றுமை இல்லை… இன்னும் இருக்கு. முதல்ல இவங்க இரண்டு பேரும் டைவஸ் ஆனவங்க…” என்று இன்ஸ்பெக்டர் சொல்ல..

இதுல என்ன இருக்கு..? இது இப்போ எல்லாம் இந்தியாவிலும் சகஜமா தானே ஆகிட்டு வருது’ என்று லிங்கா நினைத்ததை கிரண் சொல்லி விட்டான்..

“இதுல என்ன இருக்கு என்று தானே சார் நீங்க நினைக்கிறிங்க. இருக்கு.. அதாவது எங்க இரண்டு பேர் மனைவிகளும். “உங்க S.M கால்லூரியில் தான் படிச்சவங்க.



இரண்டு பேரும் உங்க கல்லூரி விடுதியில் தங்கினவங்க.. அதோடு இரண்டு பேரும் ஹாஸ்ட்டலில் தங்கி இருந்த அறையின் எண்… 307..”

இவ்வளவு நேரமும் ஏதோ சொல்கிறார்கள் என்று கேட்டு கொண்டு இருந்த லிங்கா. உங்க கல்லூரியில் படித்தவர்கள் எனும் போது கூட ஏனோ தானோ என்று தான் லிங்கா அவர்களின் பேச்சை கேட்டு கொண்டு இருந்தான்..

அவர்கள் கல்லூரியின் விடுதியில் தங்கி படுத்தவர்கள் என்ற பேச்சில் பின் சாய்ந்து அமர்ந்து இருந்தவனின் உடல் தன்னால் முன்னோக்கி வந்து அமர்ந்து அடுத்து என்ன சொல்வான் என்று காத்து கொண்டு இருக்க அவன் நினைத்தது போலவே.. அதே விடுதியின் அறை எண்ணை சொல்லவும்..

இப்போது லிங்கா இன்ஸ்பெக்டரிடம்.. ஷைலஜாவை பற்றி சொல்லி. “ அவளும் இறந்தவளின் அந்த அறையில் தான் தங்கி கொண்டு இருக்கிறாள்..

குளிக்கும் போது எடுத்த வீடியோவை காண்பித்து மிரட்டுகிறார்கள்.. அதுவும் அவர்கள் கை காட்டிபவனை இந்த பெண் திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லி..” என்று லிங்கா சொல்லிக் கொண்டு இருந்தவன் பின் என்ன நினைத்தானோ..

கரண்.. கோகுலிடம். “உங்க எக்ஸ் ஒயிப் வசதியானவர்களா..? என்று கேட்டவனுக்கு பதில் இல்லை.

“உங்க காலேஜில் மெரிட்டில் தான் படிக்க வந்தாங்க.” என்ற பதிலில் லிங்காவுக்கும் சரி.. அந்த இன்ஸ்பெக்டருக்கும் சரி.. பிரச்சனையின் முனை நூல் கையில் கிடைத்து விட்டது போல் உணர்ந்தார்கள்..

அதில் ஒரு தெம்பு வர லிங்கா அடுத்து.. “ தப்பா எடுத்துக்க வேண்டாம்.. உங்க எக்ஸ் ஒயிப் அழகா இருப்பாங்களா.?” என்றதற்க்கும் அவன் எதிர் பார்த்த பதில் தான் அவர்களிடம் இருந்து கிடைத்தது..

இன்றும் அவர்கள் எக்ஸ் மனைவியின் புகைப்படத்தை அந்த இளஞசர்கள் தன் கை பேசியில் வைத்து கொண்டு இருந்தார்கள்..

அதை காண்பித்ததும் லிங்காவுக்கும் அழகு பெண்கள் தான் என்று தோன்றியது..

கை பேசியில் இருந்த புகைப்படத்தை பார்த்த வாறே லிங்கா.. “ டைவஸ் ஆகிடுச்சி என்று சொல்றிங்க.. இன்னும் போட்டோ உங்க செல்லில் வைத்து இருக்கிங்க..” என்று கேட்டான்.

அதற்க்கு இருவருமே ஒன்று போல.. டைவஸ் சில்லி ரீசன் சார்.. ஒன்னும் இல்லாத பிரச்சனை தான்.. ஆனா டைவஸ் தந்தே ஆகனும் என்று ஒத்த காலில் நின்னாங்க..” என்று கரண் சொல்ல.

கோகுலும் அதே தான் சொன்னான்.. ஆனால் அவன்.. “நான் டைவஸ் கொடுக்க மாட்டேன் என்று அவ்வளவு அடமா நான் நின்னுட்டேன்.. நான் அந்த அளவுக்கு அவளை லவ் பண்ணி கல்யாணம் செய்துக்கிட்டேன் சார்.. பார்த்த உடனேயே எனக்கு அவளை அவ்வளவு பிடிச்சிது..” என்று சொல்லி கொண்டு இருக்க.

இப்போது லிங்கா கரணை பார்த்து.” உங்களுடையதும் லவ் மேரஜ் தானே..?” என்று கேட்டான்.. லிங்கா நினைத்தது போலவே. கரண் . “ ஆமாம்..” என்றான்..

பின் லிங்கா மீண்டும் கோகுலிடம். “ டைவஸ் கொடுக்க மாட்டிங்க என்று சொல்லிட்டு பின் எப்படி கொடுத்திங்க..?” என்று கேட்டதும்..

கோகுல் சங்கடப்பட்டு கொண்டே… “நான் எல்லோர் கிட்டேயும்.. உங்க கிட்ட நான் திருப்தியா இல்ல.. என்று சொல்வேன் என்று சொன்னா.. அதோடு அந்த வார்த்தை அவள் சொல்லும் போதே. அவ்வளவு வலி அவள் கண்களில் நான் பார்த்தேன் சார்.. ஏதோ ஒரு பயத்தில் பதட்டத்தில் தான் அவள் எப்போதும் இருப்பா..

காதலிக்கும் -போது என்னோடு அவளை சேர்த்து வைத்து அவங்க வீட்டு ஆள் பார்த்து விடுவாங்க என்ற பயத்தில் இருப்பதாக தான் அப்போது எல்லாம் நான் நினைத்தது….

ஆனால் அவளின் அந்த பயம்… பதட்டம் கல்யாணத்திற்க்கு பின்னும் தொடர்ந்த போது தான் நான் அவள் கிட்ட கேட்டேன்..அதுக்கு புது வீடு பிது உறவு என்று என்ன என்னவோ தான் சொல்வாள்.” என்று கோகுல் தன் மனைவியை ஒரளவுக்கு புரிந்து வைத்து பேச.

கரணும் கோகுல் சொல்ல சொல்ல.. “என் மனைவி கூட அப்படி தான் சார் இருந்தாள்.. அதோடு அதோடு என்று இழுத்தவன் பின்.. எங்களுக்குள் இருக்கும் அந்த பிசிக்கல் ரிலேஷன்ல கூட அவள் ரொம்ப வித்தியாசமா நடந்துப்பா சார்..

ஒரு நாள் நான் தொட்டா நாட்டமே இல்லாத மாதிரி.. இருப்பாள்.. நான் கூட உனக்கு மூட் இல்லேன்னா வேண்டாம் என்று கூட சொல்லி இருக்கேன்.

அப்போ உடனே இல்ல இல்ல அப்படி எல்லாம் இல்ல.. என்று என் மீது கை போடுவா. ஆனா அது ஒரு எந்திர தன்மையில் தான் இருக்கும்.. இதே இவள் தான் ஒரு சில நாள்.. எப்படி சொல்றது…? என்று தயங்கியவன் பின்..

என்னோட வேகம்.. என்னை விடவே கூடாது என்பது போல என்னவோ அன்னைக்கு தான் நாங்க வாழும் கடைசி நாள் போல நடந்துப்ப.. இது போல கொஞ்ச நாள் இருந்தவள் திரும்ப பழைய மாதிரி தான் ஏதோ ஒரு யோசனையில் எதிலுமே ஒரு நாட்டமே இல்லாது போல இருப்பா…” என்று தன் மண வாழ்க்கையை பத்தி ஒன்று விடாது அவன் சொல்லவும் ஒரு காரணம் இருந்தது..

தன்னிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின் அவளாவது மகிழ்ச்சியாக இருக்கிறாளா என்றால், அதுவும் கிடையாது உடல் இளைத்து பார்க்கவே அவள் மனது மகிழ்ச்சியில் இல்லை என்பது போல் தான் மற்றவர்களின் பார்வைக்கு தெரியும் படி அவள் தோற்றம் இருந்தன..

மற்றொருவனும் அதையே சொன்னான்.. ஆனால் அவன் தன் அந்தரங்க மண வாழ்க்கையை சொல்லாது.

“என் கிட்ட அப்படி வலுக்கடாயமாக டைவஸ் வாங்கி கொண்டவள் சந்தோஷமா இல்ல.. நான் கொடுத்த டைவஸ்க்கு உண்டான அந்த பணத்தை என்ன செய்தா என்று கூட தெரியல..மாத சம்பளத்திற்க்கு சொற்ப சம்பளத்திற்க்கு வேலைக்கு போயிட்டு இருக்கா..

யோசனையுடன் கேட்டு கொண்டு இருந்த லிங்கா இன்ஸ்பெக்டர் இருவரும் ஒரு சேர.

“எவ்வளவு பணம் கொடுத்திங்க…?” என்று கேட்டனர்.. அவர்கள் சொன்ன பணம் பல கோடிகள் எட்ட..

லிங்கா.. “ இவ்வளவா.?.” என்று அதிர்ந்து தான் போய் விட்டான்..

“ஏன்..?” என்பது தான் அவன் கேள்வி கேட்கவில்லை.. ஆனால் அவனும் அந்த அதிர்ந்த பார்வை சொன்னது.. அந்த கேள்விக்கு இருவரிடமும் விளக்கம் இருந்தது.. ஒன்று போல்…

“நிஜமா லவ் பண்ணேன்.. அவங்க குடும்பம் அந்த அளவுக்கு வசதி கிடையாது.. அதனால விவாகரத்துக்கு பின் பொருளாதாரத்தில் அவளுக்கு எந்த பிரச்சனையும் வர கூடாது என்று எங்களிடம் வசசி இருக்கு கொடுத்தோம் என்று கூறினர்..

கரண் மேலும் ஒரு தகவலாக… “எங்க டைவஸ்க்கு பின் தான் என் மனைவியின் தங்கைக்கு கல்யாணம் ஆச்சு.. என் மாமனார் பணத்திற்க்கு அவ்வளவு கஷ்டப்பட்டார். அவருக்கு சிட்டியை தள்ளி ஒரு இடம் இருக்கு.. அதை விற்க ட்ரைப் பண்ணும் போது தான் விசயம் என் காதுக்கு வந்தது..

நான் கொடுத்த அந்த பணத்தை எடுப்பது அவமானமாக கருதுகிறாரா இல்ல. அது என் மனைவியின் எதிர்கால வாழ்க்கைக்கு ஒதுக்கி வைத்து இருக்கிறாரே என்று தெரிய வேண்டி…

நான் நேரிடையாக என் மாமனார் கிட்டேயே போய் கேட்டு விட்டேன்.. ஆனா அதுக்கு அவர் கொடுத்த பதில் எனக்கு ஷாக்கிங்கா இருந்தது.. அந்த பணத்தை பத்தி வாயே என் மனைவி திறக்கவில்லை.. முதல அந்த பணம் எங்கு இருக்கு என்று பெத்தவங்களுக்கே தெரியல என்று சொன்னது தான். நான் கொடுத்த பணம் என்ன ஆச்சு என்று கேட்க எனக்கு ஒரு மாதிரி இருந்தது என்று நான் அது பத்தி நான் கேட்கவில்லை..

ஆனால் இப்போ எங்க இரண்டு பேருக்கும் ஏதோ இதில் இருக்குமா என்று சந்தேகமா இருக்கு.. எனக்கும் இவருக்கு போன வாரம் தான் தொழில் முறையில் சந்திச்சிக்கிட்டோம்.. பேச்சி வாக்கில் தான் டௌவட் பேச்சு வந்தது அந்த பேச்சு தொடர்ச்சி தான்.. இரண்டு பேரோட மனைவிகளின் ஒத்துமை ஆராய்ந்தோம்..

அந்த சமயம் தான் உங்கள் ஹாஸ்ட்டல் பெண் தற்கொலை.. அந்த அறை எண்..

என் மனைவி அந்த எண் ஒரு வாட்டி எங்க வங்கி லாக்கர் நம்பர் 304 எனும் போது அவள்.. “ அந்த நம்பரா..? என்று அதிர்ந்து கேட்டவள் பின்..

“நான் ஹாஸ்ட்டலில் தங்கி இருந்த ரூம் நம்பரும் அதே தான்.. அது எனக்கு ரொம்ப கசப்பான அனுபவத்தை கொடுத்தது என்று சொல்லி இருக்க… ” என்று கரண் சொல்ல கோகுலும்.. “ என் கார் நம்பர் கடைசி மூன்று எழுத்து அது தான்.. அதை அவள் மாத்தியே ஆக வேண்டும் என்று சொன்னவ. அவளும் கரண் மனைவி சொன்னதை தான் சொன்னா.

இரண்டு நாள் முன் செய்து தற்கொலை செய்து இறந்த பெண் அறையும் தற்போது தங்கி இறந்த பெண்ணின் அறையும் அதே தான் எனும் போது தான் எங்க இரண்டு பேருக்கும் சந்தேகம் வந்தது.. அதான் இப்போது இந்த கேசை ஹான்டில் செய்யும் இவரை பார்க்க வந்தோம்..” என்று முழுவிவரமும் சொல்ல..

லிங்காவுக்கும் அந்த அறையில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பது தான் ஷைலஜா தன்னிடம் தந்த அந்த பேசியின் மூலம் லிங்காவுக்கு தெரிந்து விட்டதே.



லிங்காவுக்கு இப்போது தனக்கு தெரிந்த இந்த விசயத்தை கரண் கோகுல் முன் இன்ஸ்பெக்டரிம் சொல்லலாமா வேண்டாமா..? என்பதே. காரணம் அவனின் அனுமானப்படி இவர்கள் மனைவி மார்களும் இது போல் பிரச்சனையில் மாட்டி தான் இப்படி நல்ல வாழ்க்கையை இழந்தார்களோ என்பது தான்..

லிங்கா நினைத்தது ஒரு வகையில் சரி தான். கரண் கோகுல் மனைவிமார்களும் , ஷைலஜா மாட்டியது போல் தான் மாட்டி கொண்டார்கள்.. ஆனால் லிங்கா நினைத்தது போல் அவர்களுக்கு கிடைத்த நல்ல வாழ்க்கையை இந்த பிரச்சனையின் மூலம் இழக்கவில்லை..

இந்த பிரச்சனையின் மூலம் தான் அவர்களுக்கு இந்த வாழ்க்கையே கிடைத்தது.. அப்போ ஏன் இழந்தார்கள்..? என்பது தானே உங்கள் கேள்வி..

அந்த வாழ்க்கையையே பிரச்சனையை உருவாக்கியவர்கள் தான் அமைத்து கொடுத்தார்கள்.. அதுவும் அதை அவர்கள் இழக்க வேண்டியே. என்று தெரியாது யோசித்தான்..

பின் அனைத்தும் பேசி சென்ற பின்.. ஏன்..? எதற்க்கு…? என்ற அனைத்திற்க்கும் காரணம் என்ன என்று இரண்டு நாளில் கிடைத்தது விடை..

அதுவும் அவர்களின் கேள்வியின் விடையாக அந்த வீட்டின் மூத்த மருமகனின் மருமகன் சேதுபதி தான் அனைத்திற்க்கும் காரணம் என்பதாக..

இரண்டு நாள் அந்த இன்ஸ்பெக்டர்.. முதலில் கரண் கோகுல் விவாகரத்திற்க்கு என்று கொடுத்த ஜீவனாம்சம் என்ன ஆனது என்று விசாரணை செய்ததில்.. இவர்கள் கணக்கில் அவர் அவர் கணவன் மார்கள் போட்ட தொகையை மணி நேரத்தில் வேறு ஒருவர் வங்கி கணக்கில் மாற்றம் அடைந்து இருந்தன. அந்த வங்கி கணக்கின் சொந்தக்காரன் அந்த வீட்டின் மாப்பிள்ளையின் மாப்பிள்ளை சேதுபதியுடையது..

பின் சில வருடங்கள் முன் அந்த ஹாஸ்ட்டலில் அந்த 304 ஏண்ணில் தங்கி இருந்த பெண்களை பற்றி விசாரித்த போது அனைத்து பெண்களுமே ஒன்று போல் திருமணம் அதற்க்கு பின் விவாகரத்து.. அதுவும் அவர்கள் திருமணம் செய்த மாப்பிள்ளை அனைவருமே சொல்லி வைத்தது போல் பெரும் செல்வந்தர்கள் . விவாகரத்துக்கு பின் விவாகரத்து பெற்ற பெண்களை அனைவருமே ஒரு பெரும் தொகையை ஜிவனாம்சமாக பெற்று கொண்டு இருக்கிறார்கள்..



பெற்று கொண்டவர்களின் வாழ்க்கை எப்போதும் போல் எளிமையாக தான் வேலைக்கு சென்று அதில் வாழ்க்கையை நடத்தி கொண்டு இருக்கிறார்கள்.. காரணம் அவர்கள் பெற்ற ஜீவனாம்சம் சொல்லி வைத்தது போல் சில மணி நேரத்திற்க்கு எல்லாம் சேதுபதியின் வங்கி கணக்குக்கு சென்றதே காரணம்..

ஆம் இந்த பெண்களுக்குள் வேறு ஒரு ஒற்றுமைகளும் இருந்தன.. அது அந்த பெண்கள் அனைவருமே ஸ்காலர்ஷிப்பில் அந்த கல்லூரியில் படிக்க வந்த பெண்கள்.. அனைவருக்குமே பின் பலம் சொல்லி கொள்ளும் படி கிடையாது..

அதே போல் அனைவருமே அழகிகள்… இதை அனைத்தையும் சேர்த்து வைத்து பார்த்தால், ஏதோ புரிவது போல் இருந்தது. லிங்காவுக்கும், இன்ஸ்பெக்டருக்குமே..

அதோடு ஷைலஜாவுக்கு வந்த அந்த வீடியோ சேதுபதியிடம் இருந்து தான் வந்தன என்ற ஆதரமும் கையில் இருக்க. சேதுபதியை அதிரடியாக கைது செய்தது காவல் துறை..

காவல் துறை விசாரணையில் சேதுபதியிடம் இருந்து அனைத்து உண்மைகளையும் காவல் துறைக்கே உரிய முறையில் தெரிந்து கொண்ட உண்மைகள்..

முதலில் அறை காலியாக இருப்பதை வைத்து தான் படிக்க வந்த பெண்களுக்கு அறையை ஒதுக்கி வைப்பது.. ஆனால் அந்த குறிப்பிட்ட 304 என்ற அந்த அறை மட்டும் எப்போதும் முதலில் எந்த பெண்களையும் அந்த ஹாஸ்ட்டலில் வார்டன் தங்க வைக்க மாட்டார்.. சேதுபதியின் கட்டளைப்படி..

பின் ஒரு மாதம் கடந்த நிலையில், சேதுபதி சொல்லும் பெண்களை.. அந்த ஹாஸ்ட்டலில் தான் வேறு ஒரு அறையில் தங்கி இருந்த பெண்ணை இந்த 304 அறையின் தங்க வைக்க சொல்வான்..

அதற்க்கு முன் ஏற்பாடாக அந்த பெண்கள் தங்கி இருந்த அறையில் கீசர் வேலை செய்யாது போய் விடும்.. மின் விசிரி மக்கர் செய்யும்.. இப்படி பிரச்சனை ஏற்பட்டு.. அதற்க்கு மாற்று நடவடிக்கையாக அந்த பெண்ணை சேதுபதி சொன்னது போல் 304 அறைக்கு மாற்றி விடுவார்கள்..

இது மட்டுமே அந்த வார்டனின் வேலை பின் அனைத்துமே சேதுபதியே பார்த்து கொள்வான்.. அதாவது அந்த அறையில் மட்டும் தான் குளியல் அறையில் சேதுபதி மிக நுண்ணிய கண்ணுக்கே தெரியாத கேமிராவை வைத்து உள்ளான்..

சேது பதி அதில் எந்த பெண்ணை தேந்தெடுத்து அதில் தங்க வைக்க அவனுக்கு குறைந்த பட்சம் ஒரு மாதம் கால அவகாசமாவது வேண்டும்..

பின் எவ்வளவு வேலை இருக்கிறது…? அழகான பெண்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.. அவர்கள் வசதியிலும் சொல்லி கொள்ளும் படி இருக்க கூடாது. மான அவமானம் பார்க்க அவர்கள் வீட்டில் அந்த பெண்ணை தவிர வேறு பெண்களும் இருக்க வேண்டும்… என்று அனைத்து விவரங்களும் சேர்க்க தான் அந்த ஒரு மாத காலம் அவகாசம்.. பின் அந்த வீடியோ எடுத்து மிரட்டி.. பெரும் தொழில் அதிபர்களை ஏதேச்சையாக சந்திப்பது போல் சேது பதி தான் ஏற்பாடு செய்து கொடுப்பான்.. நினைத்தது போல் காதல் மலரும்.. இல்லை என்றால் அந்த தொழில் அதிபரை கை வசம் வைத்து இருக்கும் மற்ற பெண்களை சந்திக்கும் படி செய்வான்..

அதே போல் தான் அந்த பெண்ணை வேறு ஒரு தொழில் அதிபரை சந்திக்க செய்வான்.. ஏதோ ஒன்று எதிலோ மாட்டி விட்டு விடுவான்.. உண்மையை சொல்வது என்றால் சேது பதி செய்தது பக்கா மாமா வேலை என்று கூட சொல்லலாம்….
































































 
Well-known member
Joined
Jun 2, 2024
Messages
135
Adapavi sethupathy....super ud maam..semma interesting ah irku...

Maam, oru idathula room no 307 nu irku...innoru idathula 304 nu irku...
 
Active member
Joined
May 11, 2024
Messages
193
Intha sethupathi ku periya thandanai kodukanum😈😈😈 paavam antha ponnunga,avanga family, husband um😥nice interesting ud sis ♥️
 
  • Like
Reactions: grg
Well-known member
Joined
May 24, 2024
Messages
258
Koiyala matnana
Summa vidakoodathu anda naya
 
  • Like
Reactions: grg
Well-known member
Joined
May 11, 2024
Messages
207
இனி மருமகன் மாமன் இருவருமே இனி கம்பி என்னவைத்திடுவான் லிங்கா காசுக்காக எத்தனை வேலை பார்த்து கொலை செய்துருக்காங்க
 
  • Like
Reactions: grg
Member
Joined
May 11, 2024
Messages
83
ஊரான் சொத்தை பறிக்க அநியாய பழி போட்டா சொந்த பொண்ணு வாழ்க்கையே போச்சு இப்போ...

மேகா டீச்சர் பார்த்தவோடனே தானே சொல்லுவா அதுக்கு பிறகு தானே சிவப்ரகாஷ் பேசி இருக்க முடியும் அப்புறம் எப்படி சிவப்ரகாஷ் சொல்லி கொடுத்த மாதிரி ஆகும்
 
  • Like
Reactions: grg
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
270
எவ்வளவு பெரிய மோசடி.. சேதுபதி பணத்துக்காக எவ்வளவு கீழ இறங்கி வேலை பார்த்துருக்கான்....😈😈😈😈😈 இப்போ மாட்டுனான்.... இதெல்லாம் அந்த சிவபிரகாஷ்க்கு தெரியாதா.... 🤔
 
  • Like
Reactions: grg
Well-known member
Joined
May 12, 2024
Messages
330
Enekku antha Sethupathi mela doubt irunthuthu… 🥴🥴🥴
Ippo antha Siva Prakash enna eppadi reaction koduppar nu pakanume 😏😏😏
 
  • Like
Reactions: grg
Top