Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Pirithariyaa Pithana Podhum-6

  • Thread Author
அத்தியாயம்…6

சம அந்தஸ்த்து.. தன் இனம் ஜாதகப் பொருத்தம் பார்த்த பின் தான் சோமசுந்தரத்தின் குடும்பம் முறைப்படி செல்வ சங்கரியை பெண் பார்க்க வந்தது.

பார்த்த உடன் அனைத்துமே பிடித்து போக. நல்ல நாள் பார்த்து ஊர் அறிய , மிக ஆடம்பரமாகவே ஜெய பிரகாஷுக்கும், செல்வ சங்கரிக்கும் நிச்சய தார்த்தம் நடந்தது.

பார்த்தவர்கள் அனைவருமே இது என்ன திருமணம் செய்வது போல் நிச்சயம் செய்கிறிர்கள்.. அப்போ திருமணத்தை ஒரு விழா போல் ஏற்பாடு செய்து விடுவீரகள் போல் .. அனைவரும் ஒன்றும் போல தான் கூறினார்.

ஆம் அவர்கள் சொல்வது போல் தான் நிச்சயத்தையே ஒரு திருமணம் போலவே இரு வீட்டவர்களும் சேர்ந்து நடத்தி விட்டார்கள்.. அதற்க்கு காரணம் இருவரின் ஜாதகப்படி இன்னும் ஆறு மாதம் கழித்து தான் திருமணம் செய்ய வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்ததால்,

நாளைய பின்னே பின் வாங்க முடியாத அளவுக்கு நிச்சயத்தை நடத்தி முடித்து விட்டனர்.. திருமணத்திற்க்கு நிறைய நாட்கள் இருந்ததால், திருமண வேலைகள் அவசர கதியில் நடத்தாது பொறுமையாக தான் நடந்தது..

இதற்க்கு இடையில் செல்வ சங்கரியை பார்க்க சோமசுந்தரத்தின் வீட்டில் இருந்து வரும் போது எல்லாம் ஜெய பிரகாஷும் வருங்கால மனைவியை பார்க்க வந்து விடுவான்..

அவருக்கு இது என்ன நிச்சயம் முடிந்து இவ்வளவு நாள் கழித்து கல்யாணம்.. அந்த வயதுக்கே உரிய அவரின் தேடலுக்கு வழி கிடைக்காததால் மனதில் ஒரு ஆதங்கம்..

அப்போது எல்லாம் கைய் பேசி கிடையாது வெளியில் போவதும். இல்லவே இல்லை.. இதோ இது போல வீட்டாட்களுடன் செல்லும் போது ஒரு ஒரே பார்வை.. இதை வைத்து தான் திருமணம் வரை காலம் தள்ளி ஆக வேண்டும்..

இதில் திருமணமும் தள்ளி வைத்தால்.. இரண்டு முறை தொலை பேசியில் செல்வ சங்கரி வீட்டை ஜெய பிரகாஷ் தொடர்பு கொண்டார் தான்..

ஆனால் செல்வ சங்கரியை தவிர அனைவரும் எடுத்தனர்.. ஏன் ஒரு முறை அந்த வீட்டு வேலைக்காரி கூட எடுத்தாள்.ஆனால் செல்வ சங்கரி தான் தொலை பேசியை எடுக்க காணும்..

எப்போதும் எளிதில் கிடைப்பதை விடை கிடைக்காததை நினைத்து தான் மனது ஏங்கும்.. அந்த நிலையில் தான் ஜெய பிரகாஷ் இருந்தார்..

செல்வ சங்கரியை தனித்து பார்த்து விட வேண்டும் பேசி விட வேண்டும்.. படித்த இளைஞன்… அந்த காலத்தில் நாகரிகத்தின் உச்சத்தில் இருந்தவருக்கு ஆசை..

அவரின் ஆசைக்கு தீணி போடுவது போல ஒரு நாள் அவருக்கு கிடைத்தது.. பத்திரிக்கை அடிப்பதில் ஒரு சந்தேகம்.. தொலை பேசியில் தொடர்பு கொண்ட போது, மழைக்காலம் ஆனதால் தொடர்பு கிடைக்கவில்லை..

அனைவருக்கும் ஒரு ஒர் வேலை இருந்ததால், அன்று சோமசுந்தரம் ஜெய பிரகாஷை தான் செல்வ சங்கரி வீட்டிற்க்கு அனுப்பியது..

அவருக்கும் அப்போது ஒரு வேலை இருந்தது தான். இருந்தும் செல்வ சங்கரியை பார்க்கவாவது செய்வோம் என்று நினைத்து தான்.. தனக்கு ஒரு வேலையும் இல்லை என்று சொல்லி செல்வ சங்கரி வீட்டிற்க்கு ஜெய பிரகாஷ் சென்றது..

பார்க்க மட்டுமாவது சான்ஸ் கிடைக்குமே என்று நினைத்து சென்ற ஜெய பிரகாஷுக்கு அன்று சுக்கிரன் உச்சத்தில் இருந்தார் போல..

வீட்டில் யாரும் இல்லாது செல்வ சங்கரி மட்டுமே வீட்டில் இருந்தாள்.. வீட்டின் அழைப்பு மணி ஒசையில் கதவை திறந்தவளுக்கு நிலப்படி வாசல் அந்த பக்கம் ஜெய பிரகாஷை பார்த்ததும் சங்கரிக்குமே, மனதும் கண்களும் ஒரு சேர பட பட என்று அடித்து கொண்டது.

ஜெய பிரகாஷுக்கோ கதவை திறந்ததும் கிடைத்த தேவதையின் தரிசனத்தில்… மெல்ல. “ எப்படி இருக்க..?” என்று முதல் பேச்சாக ஜெய பிரகாஷ் கேட்டார்.

அதற்க்கு செல்வ சங்கரியிடம் இருந்து ஒரு.. “ ம்..” என்று மட்டுமே பதிலாக வந்தது..

பின் இருவருக்கும் இடையே மெளனம்.. வாய் தான் மெளனம் காத்தாது ஆனால் கண்கள் ..

பின் ஜெய பிரகாஷோ.. “ நான் எப்படி இருக்கே என்று கேட்க மாட்டியா..?” என்று கேட்க.

கூச்சத்துடன்.. “ எப்படி இருக்கிங்க..” என்று செல்வ சங்கரி கேட்டாள்..

“ நான் நல்லாவே இல்ல. இப்படி கல்யாணத்தை தள்ளி வைத்து விட்டால்…. நான் எப்படி நல்லா இருப்பேன்.. “ என்று அப்போது தான் வெளியான ஒரு திரைப்பட வசனத்தை சொல்ல செல்வ சங்கரியோ தன்னை பார்த்து ஒரு கவிதை சொல்லி விட்டது போல அக மகிழ்ந்து தான் போய் விட்டாள்..

இத்தனை பேச்சுக்களும் நிலவாசப்படியில் இடையில் தான் நடந்தது.

பின் மீண்டும் இருவருக்கும் இடையே மெளனம்.. முன் போல வாய் பேசாத போதும் கண்கள் பேசிக் கொண்டன.. அதிலும் ஜெய பிரகாஷின் கண்கள் செல்வ சங்கரியின் வளைவு நெளிவுகளில் அதிகமாகவே பேசியது என்று தான் சொல்ல வேண்டும்..

மீண்டும் ஜெய பிரகாஷ்.. “ உள்ளே கூப்பிட மாட்டியா..” என்று கேட்டான்..

“ அய்யோய்யோ..” என்று தலையில் அடித்து கொண்ட செல்வ சங்கரி …“ வாங்க வாங்க..” என்று வீட்டிற்க்குள் அழைத்தாள்..

யாரும் இல்லாத வீட்டை பார்த்த ஜெய பிரகாஷ். “ வீட்டில் யாரும் இல்லையா..?” என்று கேட்டான்..

“ இல்ல அம்மா அப்பா கல்யாணம் முன்ன குல தெயவம் கோயிலுக்கு போகனும் என்று போயி இருக்காங்க.. தம்பி காலேஜ் போய் இருக்கான்..” என்று செல்வ சங்கரி சொன்னதுமே ஏனோ தானோ என்று அமர்ந்து இருந்த ஜெய பிரகாஷ்.. நன்றாக சாய்ந்த வாக்கில் அமர்ந்து கொண்டு…

“ அப்புறம் சங்கரி கல்யாண வேலை எல்லாம் எப்படி நடக்குது.” என்று பொதுவான பேச்சில் ஆரம்பித்து பின்.

உன் சேலை எல்லாம் காமி.அதை பார்த்து தான் நான் உனக்கு வாங்கி வைக்க வேண்டும்.” என்று ஜெய பிரகாஷ் சொன்னதும்.

செல்வ சங்கரி தன் அறையில் இருந்த உடையை எடுக்க அவள் அறைக்கு சென்ற போது கூடவே ஜெய பிரகாஷும் பின் சென்றவன்..

முதலில் அவள் வாங்கி வைத்த சேலையை பார்வை இட்டவன்.. பின் அந்த சேலையை ஒவ்வொன்றாக அவள் மீது போட்டு பார்த்து எடுத்து கொண்டு இருந்தவன் எப்போது அவள் உடுத்தி இருந்த சேலையை கழட்டினான் என்று செல்வ சங்கரி உணரும் போது ஜெய பிரகாஷின் கைகள் அவளின் மேனியில் தடம் பதிக்க ஆரம்பித்து விட்டது..

செல்வ சங்கரி பதறி போனவளாக. “ விடுங்க… விடுங்க… என்ன இது.?” என்று ஜெய பிரகாஷை தடுத்தாள் தான்..

ஆனால் ஜெய பிரகாஷோ.. “ நாம கல்யாணம் செய்துக்க போறவங்க தானே.. இதில் என்ன தப்பு இருக்கு.?.” என்ற கேள்வியில் ஒரு நிமிடம் செல்வ சங்கரியும் தன் எதிர்ப்பை காட்டாது தயங்கி தான் நின்றாள்..
பின் பெண்மைக்கே உள்ள ஒரு எச்சரிக்கை உணர்வில்.. “ வேண்டாம்.” என்று சொல்லி ஜெய பிரகாஷின் கைக்கு தன் மேனியில் பட தடை உத்தரவு போட்டாள் தான்..

ஜெய பிரகாஷோ.. “ சரி.” என்று சட்டென்று விலகியவன்.. “ என் மனைவி என்றால் என்னை புரிந்தி கொள்பவளாக இருக்க வேண்டும்.. என் ஆசையை புரிந்து நடந்துக்க வேண்டும்.. முக்கியமா என்னை நம்பனும்.. அப்படி பார்த்தா நீ என் மனைவியா வர தகுதி இல்லாதவள்.” என்று சொல்லி வெளியேற பார்த்தவனை பதறி போய் செல்வ சங்கரி..

“ இல்லங்க இல்லங்க.. அப்படி எல்லாம் இல்ல.” என்று சொல்லியவளிடம்..

“ என்ன இல்ல.. உன்னை தொட்டுட்டு விட்டு விட போறேன் என்ற பயத்தில் தானே இதுக்கு என்னை அனுமதிக்க மாட்டேங்குற.. இன்னும் கேட்டால் அத்தனை பேரை கூட்டி நம்ம நிச்சயம் நடந்தது. அது எப்படி உன்னை விட்டு விடுவேன்..” என்று ஆவேசமாக பேசினான்..

செல்வ சங்கரிக்கும் அந்த பயம் தான்.. நிச்சயம்.. அதுவும் அவ்வளவு பேரை அழைத்து செய்த நிச்சயம் கல்யாணம் மட்டும் நடக்கலேன்னா அவ்வளவு தான் என்ற பயத்தில் ஜெய பிரகாஷை பார்க்க..

ஜெய பிரகாஷோ.. “ என்ன நீ நம்பல தானே..?” என்று மீண்டும் கேட்க.

“ இல்ல நம்புறேன்..” என்று செல்வ சங்கரி சொன்ன போது.. “ அப்போ அதை செயலில் காட்டு…” என்று சொன்னான்..

ஜெய பிரகாஷ் அகராதியில் நிருபிப்பது என்றால், அவளை கொடுத்து என்பது அவர் செயல் முறையில் விளக்கம் கொடுத்து.. செல்வ சங்கரியை நிருபிக்கவும் செய்து விட்டு தான் அன்று தன் வீடு வந்தார்.

அதன் பின் ஜெய பிரகாஷுக்கு முன் போல் செல்வ சங்கரியிடம் பேச வாய்ப்பை தேடிக் கொள்ளவில்லை..

ஆனால் ஒன்னரை மாதம் கழித்து செல்வ சங்கரி அவனிடம் பேச காத்து கொண்டு இருந்தாள்.. காரணம் அந்த மாதம் வரும் மாதந்திர நாள் அவளுக்கு வரதாதே காரணம்..

இன்று போல் மருந்துகடைகளில் கற்ப பரிசோதனை சாதனங்கள் அவ்வளவு எளிதாக எல்லாம் கிடைத்து விடாது.. தாய்மை அடைந்து இருக்கிறாளா என்று உறுதி செய்யவே இரண்டு மாதங்கள் காத்திருந்து தான் ஆக வேண்டும்.

ஆனால் செல்வ சங்கரிக்கு அந்த பரிசோதனை எல்லாம் செய்யாத போதே தெரிந்து விட்டது . தான் தாய்மை அடைந்து விட்டோம் என்று… தாய்மையில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளும் அவள் உடம்பில் நடந்தது..

இதே திருமணத்திற்க்கு பின் இந்த கற்பம் தரித்து இருந்தால், இப்படியா பயந்து கொண்டு இருந்து இருப்பாள்.. வெட்கம் ஆசை. என்று இருந்து இருக்க வேண்டிய தாய்மையை பயத்தில் கடக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாள் செல்வ சங்கரி.. அதுவும் தனித்து.

ஜெய பிரகாஷை தொடர்பு கொள்ள அவர்கள் வீட்டு தொலை பேசிக்கு முயன்ற போது வேறு ஒருவர் எடுக்க செல்வ சங்கரி உடனே தொலை பேசியை வைத்து விட்டாள்..

அவளின் முக வாட்டமும் சரியாக சாப்பிடாதது .. இவை பார்த்து அவளின் அம்மா திருமண பயம் என்று நினைத்து.. அதற்க்கு ஏற்றது போல தைரியம் சொல்லி கொண்டு இருந்தார்.

“ நானும் உன் போல தான் கல்யாணம் முன் இருந்தேன்..” என்று செல்வ சங்கரியின் அம்மா சொல்லும் போது..

செல்வ சங்கரியோ.. ‘ இல்ல கண்டிப்பா என்னை போல நீங்க இருந்து இருக்க மாட்டிங்க. நீங்க என்ன யாருமே இருந்து இருக்க மாட்டாங்க..’ என்று மனதில் அலட்டிக் கொண்டாள்..

ஒரு முறை ஜெய பிரகாஷிடம் இந்த விசயத்தை சொன்னால் போது மற்றதை அவர் பார்த்து கொள்வார் என்று வருங்கால கணவனை நம்பினாள் அந்த பேதை..

ஆனால் ஜெய பிரகாஷிடம் சொல்ல நினைத்த ரகசியம்.. மற்றவர்கள் அனைவருக்குமே தெரிந்து விட்டது. அதுவும் அவள் சொல்லாமலேயே..

ஆம் தெரிந்து தான் விட்டது.. திருமணத்திற்க்கு முன் வீட்டில் கும்பிட வேண்டிய சாமி முறைகளை செய்ய பங்காளியை அழைத்து இருந்தார்கள் செல்வ சங்கரியின் வீட்டவர்கள்..

அப்போது எல்லாம் திருமணம் என்றால், உறவு முறையினர்கள் ஒரு வாரம் முன்னவே திருமண நடக்கும் வீட்டிற்க்கு வந்து தங்கி விடுவர்..

வந்தவர்கள் கூட மாட உத்தாசையாக இருக்கவும் செய்வார்கள்.. ஆனால் என்ன ஒன்று வம்பு பேச்சுக்களும் அங்கு குறையில்லாது பேசப்படும்..

“ செய்தி தெரியுமாடீ..” என்று ஆரம்பித்து அந்த வீட்டில் நடந்தது. இந்த வீட்டில் நடந்தது.. என்று வாய் பாட்டுக்கு பேசிக் கொன்டாலும், அதற்க்கு ஏற்றது போல கை பாட்டுக்கு வேலைகளை பார்க்கும்..
என்ன ஒன்று இந்த கல்யாண வீட்டில் மற்ற வீட்டை பற்றி பேசாது கல்யாண வீட்டை பற்றி அதுவும் கல்யாண பெண்ணை பற்றியே பேசும் படியாக ஆகி விட்டது தான் பெறும் அவமானமாக அமைந்து விட்டது.

முதலி விநாயகர் பூஜை முடித்த பின்.. சுமங்கலி பூஜையின் போது தான் வந்த மூத்த பெண்மணி ஒருவர் செல்வ சங்கரியை பார்த்து..

“ இது என்ன இவள் இப்படி இருக்கா. எனக்கு என்னவோ சரியா படலயே..” என்று தன் சந்தேகத்தை கிளப்பினார்..

செல்வ சங்கரியிம் அம்மா.? அது எங்களை விட்டு போகறா இல்ல. அது தான் டல்லா இருக்கா..” என்று அவரிடம் சொன்னவர் தனியே மகளிடம்..

“ ஏன்டி இப்படி இருக்க.. பாரு வந்தவங்க எல்லாம் உனக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லாதது போல பேசுறாங்க. கொஞ்சம் முகத்தை மலர்ச்சியா தான் வைத்து கொள்ளேன்.” என்று தன் பயத்தையும், தன் யோசனையையும் சொல்லி விட்டு பின் கல்யாண வேலையை பார்க்க சென்று விட்டார்…

பாவம் அவருக்குமே உண்மையானா நிலை புரியவில்லை..

செல்வ சங்கரியின் முகம் இன்னும் வெளிறி தான் போய் விட்டது.. அது அன்னையின் பேச்சால் மட்டும் கிடையாது. இது வரை மயக்கம் சாப்பிட பிடிக்காது என்று மட்டுமே கற்பமாக இருக்கும் பெண்களின் அறிகுறியை காட்டி கொண்டு இருந்தது.. ஆனால் காலையில் இருந்து பிரஷ் வாயில் வைத்த உடனே வயிற்றில் இருப்பது எல்லாம் வெளியில் வந்து விழும் அளவுக்கு வாந்தி..

ஏன் வாய் கொப்பளிக்க தண்ணீர் தொண்டைக்குள் சிறிது இறங்கி விட்டாலுமே, வாந்தி வந்து விட்டது.. அப்படி இருக்கு இன்னும் எப்படி இதை மறைத்து வைக்க முடியும்.. ?அதுவும் இத்தனை உறவு முறை இருக்கும் போது யாராவது கவனித்து விட்டாள்..

கவனித்து விட்டாள்.. என்று பயந்தவளுக்கு அப்போது தெரியவில்லை.. அந்த மூத்த பெண்மணி கவனித்த பின் தான் சரியில்லை என்று சொன்னது என்பதனை..

உலை வாயை மூட முடியும்.. ஊர் வாயை மூட முடியுமா..? அதுவும் அந்த மூத்த பெண் மணி தன் பேரனுக்கு செல்வ சங்கரியை கேட்டார்.. இவர்கள் அளவுக்கு வசதி இல்லாததால்.. செல்வ சங்கரியின் அப்பா மறுத்து விட.

இப்போது தனக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை அவர் விட்டு விடுவாரா என்ன.. தனக்குள் ஏற்பட்ட சந்தேகத்தை அங்கு வந்த உறவு முறைகளிடம் சொல்ல..

ஒரு சிலர்.. “ ஆமா நானும் கவனித்தேன் தான்..” என்று சொல்லினர்.. என்றால் ஒரு சிலரோ.. “ நம்ம வீட்டிலும் பெண் இருக்கு இப்படி அபாண்டமாக பேச கூடாது என்று கூறினார்.

இரு தரப்புக்கும் விடை தெரியும் படி.. பூஜைக்கு படையல் போட வேண்டி வடை சுட்டு கொண்டு இருந்தனர்… அந்த எண்ணைய் வாசனை என்ன அடக்கியும் முடியாது.. அதுவும் கூடத்தில் இருந்த செல்வ சங்கரி தன் அறையை நோக்கி ஒடும் முன்னவே வாந்தி எடுத்து விட்டாள்..

என்ன இது என்று பார்க்க. அந்த மூத்த பெண் மணியோ நான் தான் சொன்னேன்லே.. என்று சொல்ல.. இந்த விசயம் செல்வ சங்கரி பெற்றோர்.. சகோதரன் காதில் விழ. பெரியவர்கள்..

“ என்ன இது வாழ வேண்டிய பெண் மீது இப்படி பழி போடுறிங்களே..” என்று கண்ணீர் வடித்தனர் என்றால், அப்போது, இளைஞன் ஆன கலைசெல்வன் அருவாளை எடுத்து விட்டான்..

பின் வந்தவர்கள் சொன்னது தான் உண்மை என்று மருத்துவர் வந்து பரிசோதனை செய்து நிருபனம் ஆனதில், செல்வ சங்கரியை அவள் பெற்றோர் அடித்தே கொல்லும் அளவுக்கு போன பின்…

அதுவும்.. “ இதுக்கு யார் அப்பன்..” என்று கேட்டு கேட்டு அடிக்க.

செல்வ சங்கரி.. “ அப்பா அவர் தாம்பா நீங்க பார்த்து வைத்த மாப்பிள்ளை தாம்பா..” என்றதும் உடனே ஜெய பிரகாஷ் வீட்டிற்க்கு இந்த செய்தி பறந்தது.

இந்த செய்தியில் சோமசுந்தரத்தின் மொத்த குடும்பமும் செல்வ சங்கரி வீட்டிற்க்கு வந்து இறங்க.

மீண்டும் ஒரு பஞ்சாயத்து தொடங்கியது.. “ நல்ல குடும்பம் நல்ல பெண்.. என்று சம்மந்தம் பேசினால், என்ன இது அசிங்கம்.” என்று வேதவல்லி பேச..

அதற்க்கு ஒத்து ஊதுவது போல் தான் ஜெய பிரகாஷின் குடும்பத்தில் இருப்பவர்கள் ஒரு சிலர் பேசினர்.. கடைசியாக ஜெய பிரகாஷ் நல்ல வேலை நான் தான் அந்த குழந்தைக்கு அப்பன் என்று சொன்னதில், திருமணம் என்னவோ நல்ல முறையில் தான் நடந்து முடிந்தது..

ஆனால் செல்வ சங்கரியும், அவள் குடும்பத்தினரும் பட்ட அவமானங்கள். அன்று மட்டும் அல்லாது செல்வ சங்கரியின் இறுதி மூச்சு வரை தொடர்ந்தது என்பது தான் வேதனையான விசயம்..

இதில் என்ன கொடுமை என்றால், அன்றைய அந்த உறவுக்கு வற்புறுத்தியது என்னவோ ஜெய பிரகாஷ் தான்.. ஆனால் அவனை தவறாக சொல்லாத உறவும், நட்பும் செல்வ சங்கரியை தவறாக சொல்லியது தான் ஏனோ.

செல்வ சங்கரி தினம் தினம் ஜெய பிரகாஷ் வீட்டில் கொடுமையை அனுபவித்தாள்.. அடி இல்லை.. உதை இல்லை.. வசதியான வாழ்க்கை.. உடுத்த நல்ல துணி மணிகள்.. அணிய தங்க நகைகள் இருந்தும், செல்வ சங்கரிக்கு அந்த வீட்டில் மரியாதை துளியும் கிட்டவில்லை..
வேதவல்லி தினம் தினம்… “ ஆம்பிள்ளை அப்படி தான் அவசரப்படுவான்.. பொட்டச்சி தான் இழுத்து மூடி இருக்க வேண்டும்.” என்ற இது போலான பேச்சில் செல்வ சங்கரியின் மனது மறுத்து போய் கொண்டு இருந்தன.

சோமசுந்தரம் செல்வ சங்கரியை தவறாக பேசவில்லை தான்.. இன்னும் கேட்டால் அவர் காதில் சில சமயம் மனைவி பேசுவது விழுந்தால்.

“ என்ன இது அசிங்கமான பேச்சு.” என்று அவரை கண்டித்தும் இருக்கிறார் தான்.. ஆனாலும் வேதவல்லி பேசுவதை விடவில்லை..

வேதவல்லியே இப்படி பேசும் போது மூத்த மகள் காஞ்சனா.. அவரும் அவரால் முடிந்த மட்டும் செல்வ சங்கரியை காயப்படுத்தி கொண்டு தான் இருந்தார்..
அதுவும் ஒரு முறை அவள் கணவன் சாப்பிட வந்த போது வீட்டில் இவள் மட்டுமே இருந்தாள்.. அதனால் ..

“ சாப்பிடுறிங்களா..” என்று கேட்டு சாப்பாடும் போட்டு விட்டாள். இது ஒரு சாதாரண விசயம்..ஆனால் இதையே வேறு மாதிரியாக ஆக்கி விட்டாள் காஞ்சனா..

“ உனக்கு என் கணவர் அண்ணன் முறை ஆகுது.. புரியுதா…? உனக்கு தான் வீட்டில் யாரும் இல்லேன்னா ஆம்பிளைங்களை பார்த்தா வேறு மாதிரி ஆகி விடுமே…” என்ற அந்த பேச்சில் பெண்ணவள் மூச்சு அடைத்து தான் போய் விட்டாள்..

அதுவும் இந்த பேச்சு நடக்கும் போது அவள் கணவன் ஜெய பிரகாஷும் அங்கு இருந்தவர்.. அக்காவின் பேச்சுக்கும் வாய் திறவாது இருந்தது தான் கொடுமையின் உச்சம் எனலாம்..


இதில் என்ன ஒரு அதிசயம் என்றால், திருமணம் முன் ஜெய பிரகாஷ் செல்வ சங்கரியை அவ்வளவு ஆசையோடு அனுகியவர்.. அதன் பின் அருகே வர விடாது மாச மசக்கை செய்தது என்றால், அடுத்து அவர் வாயே..

“ நீ கொஞ்சம் என்னை அன்னைக்கு தள்ளி விட்டு இருக்கலாம்..” என்று பிறந்த குழந்தையான லிங்காவின் பாதம் தொட்ட வாறே பேசிய கணவனை அதற்க்கு அடுத்து அவள் தொடவில்லை..

பின் செல்வ சங்கரியின் தாய் தந்தை.. பெண் வாழ்க்கையை இதற்க்கு மேல் எங்களுக்கு பார்க்க சக்தி இல்லை என்பது போல் ஒன்றன் பின்னாக ஒருவர் சென்று விட..

பின் கலைசெல்வனும் ஒரிரு முறை அக்காவை பார்க்க இங்கு வந்து அவமானப்பட்டு போனதில் செல்வ சங்கரியே.

“ இனி நீ இங்கு வர வேண்டாம்..” என்று விட்டாள். பின் கலைசெல்வனும் இந்தியாவில் என்ன இருக்கிறது என்று தன் எதிர் கால வாழ்வை கனடாவில் அமைத்து கொண்டார்..

இதில் உச்சக்கட்ட அதிர்ச்சியா. இல்லை கொடுமையா. என்ன என்று சொல்வது லிங்காவை அந்த வீட்டில் ஜெய பிரகாஷின் மகனாக பாராது செல்வ சங்கரியின் மகனாக மட்டுமே பார்த்து நடத்தியது தான் இங்கு வேதனை குறிய விசயமாக ஆகியது.

அதுவும் அவன் பிறப்பு திருமணத்திற்க்கு முன்னவே உருவானது.. அதை வைத்து பேசினர்… செல்வ சங்கரியின் மகன் இவன் மட்டும் எப்படி இருப்பான்.. அப்படியே அவன் எதிரில் பேசுவர்.

அனைத்தும் ஏற்று பழகி கொண்ட செல்வ சங்கரி ஒரு நாள் மகனுக்கு பள்ளியில் ஒரு விழா.. அதில் அவன் பரிசு வாங்க உள்ளான் என்று ஜெய பிரகாஷுக்கு பேசியில் அழைத்தார்.

ஆனால் ஜெய பிரகாஷ் பேசியை ஏற்காது போனதால், மதியம் சாப்பாடு திருமண மண்டபதிற்க்கு உணவை கொடுத்து அனுப்பு என்றதில், அங்கு தான் இருப்பார் என்று செல்வ சங்கரி அங்கு சென்றாள்..

சென்றவள் அங்கு கண்ட காட்சி ஜெய பிரகாஷ் இன்னொரு பெண்ணோடு… பார்க்க கூடாத காட்சியை பார்த்தாள்.. ஒரு முறை அவள் வாழ்க்கையில் ஒரே முறை தான் செல்வ சங்கரி கணவனோடு திருமணத்திற்க்கு முன் உறவு கொண்டாள்.. அதன் பின் அதை வைத்து பேசிய பேச்சில் தாம்பத்திய வாழ்க்கையையே வெறுத்து விட்டால் தான்.

அதனால் கணவன் அது போல காட்சியை கண்ட போது அதிர்ந்ததை விட, ஜெய பிரகாஷ் அன்று செல்வ சங்கரியை பார்த்து பேசிய பேச்சில் தான் இத்தனை ஆண்டுகளாக மகனுக்காக மகனுக்காக என்று கேட்க கூடாத வார்த்தைகளை எல்லாம் கேட்டு கொண்டு இருந்தவள்..

அன்று அந்த பெண் முன்.. “ நீ என்னவோ ஒழுங்கு போல என்னடி முகத்தை அப்படி சுழிக்கிற. நான் கூப்பிட்ட உடனே தாலி ஏறாது வந்தவள் தானே.. நீ என்னவோ இவளை அப்படி பார்க்கிற.” என்ற பேச்சில் தான் வீட்டிற்க்கு வந்ததும் தூக்கில் தொங்கி விட்டாள்.. அன்று ஜெய பிரகாஷோடு இருந்த பெண் தான் இப்போது லிங்காவின் சித்தியாக இருக்கும் சுகந்தி…
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
270
ஜெயப்ரகாஷ் 🤬🤬🤬🤬🤬🤬இவனெல்லாம் மனுஷனே இல்லை.... 😈😈😈😈
இவன் குடும்பம் என்னவோ நல்ல பிள்ளையை பெத்த மாதிரி தப்பு பண்ணுனவனை விட்டுட்டு சங்கரியை தப்பா பேசுதுங்க..... 😡😡😡😡
சுகந்தி நல்ல வழியில வந்த மாதிரி முதல் கல்யாணம்ன்னு பொய் வேற....

லிங்கா இந்த குடும்பத்துல ஒருத்தரையும் விடக்கூடாது.... 😬😬😤😤😬😬
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
ஜெயப்ரகாஷ் 🤬🤬🤬🤬🤬🤬இவனெல்லாம் மனுஷனே இல்லை.... 😈😈😈😈
இவன் குடும்பம் என்னவோ நல்ல பிள்ளையை பெத்த மாதிரி தப்பு பண்ணுனவனை விட்டுட்டு சங்கரியை தப்பா பேசுதுங்க..... 😡😡😡😡
சுகந்தி நல்ல வழியில வந்த மாதிரி முதல் கல்யாணம்ன்னு பொய் வேற....

லிங்கா இந்த குடும்பத்துல ஒருத்தரையும் விடக்கூடாது.... 😬😬😤😤😬😬
நன்றி பா தொடர்ந்து படித்து கருத்துகள் சொல்லவும்🙏💕
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
Ada nathari
Summa vidakoodathu linga
Nalla vachi seiyanum
நன்றி பா தொடர்ந்து படித்து கருத்துகள் சொல்லவும்🙏💕
 
  • Like
Reactions: grg
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
Linga jeya prakash I nalla vachi seiyanum😈😈😈 paavam Selva sankari 😭nice interesting ud sis ❤️
நன்றி பா தொடர்ந்து படித்து கருத்துகள் சொல்லவும்🙏💕
 
  • Like
Reactions: grg
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
Adapaavingala....paavam Selvasankari....mudhal aapu intha Jeyapraksh kum Suganthiku vaikanum Linga...waiting for it...
நன்றி பா தொடர்ந்து படித்து கருத்துகள் சொல்லவும்🙏💕
 
Well-known member
Joined
May 12, 2024
Messages
330
Adappavi Jeya Prakash… ithanai kevalamana velai pannittu than ne Linga va kanneer vara parthiya 🤮🤮🤮
 
  • Like
Reactions: grg
Member
Joined
May 11, 2024
Messages
83
இந்த ஜெயா பிரகாஷ்க்கு எல்லாம் பாவம் பாக்கவே கூடாது
 
Top