Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Poiyen Perum Velicham....7

  • Thread Author
அத்தியாயம்…. 7

மரகதம் இந்த முறை உன் அப்பா பெயரில் தான் சொத்து பதிவு என்று சொல்ல…அப்போது தான் ப்ரீத்திக்கு கொஞ்சம் நிம்மதி ஆனது…இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த அந்த வீட்டின் மாப்பிளை சுந்தரமும்…

“ நானுமே இதை பத்தி உங்க கிட்ட சொல்லனும் என்று தான் நான் நினச்சேன் அத்த… உங்க மகன் அக்னி தான் சம்பாதிக்கிறது நான் இல்ல என்று சொல்லலே.. ஆனா நீங்க அத்தனை ரிஸ்க் எடுத்து அத்தனை பணம் கொடுத்து படிக்க வைக்கலேன்னா.. அவர் இத்தனை டாலரில் சம்பாதிக்க முடியுமா…? முதல் சொத்து தான் அவர் பெயரில் வாங்கினாரு.. இண்டாவது இடத்தை உங்க பெயரிலோ இல்ல மாமா பெயரிலோ வாங்கி இருக்கலாம்…” என்று சொன்னான்…

அவனுக்குமே மாமனார் மாமியார் பெயரில் இருந்தால் தன் மனைவிக்கு பாகம் வருமே என்ற பேராசையில் தான் சொன்னது…

இப்போது மரகதம் முடிவே செய்து விட்டார்…அடுத்து அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு உண்டான இடத்தை தன் கணவர் பெயரில் தான் பதிவு செய்ய வேண்டும் என்று..

இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த அந்த வீட்டின் தலைவருக்கு மருமகனின் திட்டம் புரிந்தது தான்…இருந்தும் அமைதி காத்தார்…காரணம் மகன் ஆசைப்பட்ட வாழ்க்கையை அவனுக்கு அமைத்து கொடுத்து விட வேண்டும் என்று…

இந்த பெண்ணை எடுப்பதில் மனைவி மகளுக்கு துளி கூட விருப்பம் கிடையாது என்பது அவருக்கு தான் தெரியுமே, இதில் இடம் பற்றி பேசினால் திருமணத்தில் பிரச்சனை ஆக கூடும்.. அதோடு இடம் தன் பெயரில் தானே மனைவி வாங்க நினைக்கிறாள்…தான் மகனுக்கு கொடுத்து விட்டாள் ஆச்சி என்பது அவருடைய எண்ணம்…

இவர் பெயரில் சொத்து வாங்கினால் அவர் பிள்ளைகள் மூன்று பேருக்கும் அதில் சொந்தம் வந்து விடும் என்பது அவருக்கு தெரியாதா..?

அப்படி இவர் காலத்திலேயே அக்னிக்கு எழுதி கொடுத்து விட்டால். ஊரார் பார்வைக்கு அக்னி தம்பி தங்கையை ஏமாற்றி சொத்தை வாங்கி கொண்டு விட்டான் என்று சொல்ல மாட்டார்களா…? இது அவருக்கு புரியவில்லையா…? இல்லை அவருக்கே தான் நிர்வகிக்க போகும் கடை தன் பெயரிலே இருக்கட்டும் என்று நினைத்து விட்டாரா…தெரியவில்லை…

ஆம் அவருமே மகன் சூப்பர் மார்க்கெட் வைக்க இடம் என்றதும் தனக்கு மகன் வைத்து கொடுக்க நினைக்கிறான் என்று தான் நினைத்து விட்டார்..

பாவம் அவர்களுக்குமே மகன் இந்தியாவில் செட்டில் ஆகநினைப்பான் என்று நினைத்து பார்க்க வில்லை…அதுவும் க்ரீன் கார்ட் வாங்கிய பின்..

ஆம் அக்னி அமெரிக்க குடியுரிமையும் பெற்றுவிட்டான்..

அக்னியுமே சூப்பர் மார்க்கெட் வைக்க இடம் பாருங்க என்று தன் வீட்டில் சொன்னானே ஒழிய அது தனக்கு என்று சொல்லவில்லை..

ஆனால் இதை அனைத்தையுமே அக்னி தன் எதிர் கால திட்டங்களை தன் எதிர்காலத்திடம் சொல்லி விட்டான்…

சொன்னவன் சும்மா இல்லாது “ நீயுமே பாரு டா உன் ஆபிஸ் கிட்ட தான் எனக்கும் சூப்பர் மார்க்கெட் வைக்கும் என்ற எண்ணம்.. மெயின் ரோடில் இருக்கனும்…கட்டிடமா இருந்தா நமக்கு கொஞ்சம் பணம் மிச்சம் ஆகும்…” என்று தெளிவாகவும் சொல்லி விட்டான்...

எதிர் காலத்தில் இதை அனைத்தும் சேர்த்தும் தான் அக்னிக்கு மட்டும் அல்லாது ஸ்வேதா…ஏன் ஷ்யாமையும் அத்தனை கேவலமாக பேச…ஒரு தங்கையாக இத்தனை இழிவான பேச்சுக்களை தாங்க முடியாது…ஸ்வேதாவுமே பதிலுக்கு பேசும் சூழல் உருவாக கூடும் என்று நினைத்து பாராது அக்னி எப்போதும் தன் விசயத்தில் தனிப்பட்டு முடிவு எடுப்பது போல் இதையுமே அனைத்துமே அவன் விருப்பத்திற்க்கு மட்டும் செய்துக் கொண்டு இருந்தான்...

இப்படி அக்னி தெளிவாக தன் வீட்டிற்கு தன் எதிர்கால திட்டம் இது தான் என்று சொல்லாமலேயே ஸ்வேதாவை பெண் பார்த்து பூ வைத்து விட்டு வரச்சொல்லி விட்டான்.

மரகதமும் ப்ரீத்தியுமே வேறு வழி இல்லாது தான் அன்று ஸ்வேதா வீட்டுக்கு சென்றது…

அந்த சின்ன வீட்டை பார்த்து.. அதுவுமே சொந்த வீடு கிடையாது வாடகை என்றதில் இன்னுமே அதிருப்தி தான் தாய் மகளுக்கு…

ஆனால் அதை முகத்தில் காட்டாது சிரித்த முகத்துடன் தான் பெண்ணை பார்த்தும் பூவையும் வைத்ததோடு “அடுத்த வாரமே ஒரு நல்ல நாளை சொல்லி சிம்பிளா நிச்சயத்தை வைத்து கொள்ளலாம்..

அடுத்த மாதம் திருமணத்தை வைத்து கொள்ளலாம்…திருமணத்தை நாங்களே செய்கிறோம்..” என்று மிகவும் பெருந்தன்மையுடன் செய்வது போல் தான் மரகதம் ஸ்வேதா வீட்டில் பேசினார்..

அவருக்குமே வேறு வழி இல்லாது தான் இப்படி பேசும் படி ஆகிவிட்டது…

மகன் அங்கு போய் எதுவும் கேட்க கூடாது…. என்று திட்டவட்டமாக சொல்லி விட்டாலுமே மகளிடம் மரகதம்…

“அது எப்படி ஒன்னும் இல்லாது பெண்ணை கொண்டு வரது…ஒன்னும் இல்லாதவனே வண்டியை கொண்டா.. வெள்ளி இத்தனை கிலோ வேண்டும் நகை இத்தனை சவரன் வேண்டும் என்று கேட்கிறாங்க…

என் மகன் வெளிநாட்டில் அத்தனை சம்பாதிக்கிறான்.... அவனுக்கு ஒன்னும் இல்லாம பெண்ணை கூட்டிட்டு வரதா… சொந்தம் நடுவில் இது எவ்வளவு அசிங்கம்…

என்ன இப்படி எடுத்து இருக்க என்று என்னை கேட்க மாட்டாங்க… அதுவும் அக்னிக்கு பெண் பார்க்க சொல்லும் போது அத்தனை சொல்லி கேட்டு இருக்கேன்..

அவங்களும் ஒரு சில இடத்தை சொன்னாங்க.. நான் என் மகன் சம்பாதியத்துக்கு இது எல்லாம் ஒன்னுமே இல்ல என்று வேறு பேசி இருக்கேன்… இப்போ ஒன்னும் இல்லாத வீட்டில் இருந்து பெண் எடுத்து இருக்கேன் என்று தெரிஞ்சா எப்படி பேசுவாங்க… ” என்று அன்னையின் புலம்பலுக்கு…

ப்ரீத்தி தான்.. “ம்மா அண்ணன் திருமணம் முடிஞ்சதும் அந்த பெண் அண்ணன் கூட தானே போக போகுது...அதனால பெண்ணை பத்தி இங்கு இருக்குறவங்க யாருக்கும் தெரியாது.. நாமுமே பெண் பார்க்க யாரையும் கூட்டிட்டு போக தேவையில்லை...

அண்ணன் சொன்னது போல் சிம்பிளா நிச்சயத்தை முடிச்சிக்கலாம். அதுவும் வெளியில் பார்ட்டி ஹாலில் தான் செய்ய போறோம்... கல்யாணம் அண்ணன் சொன்னது போல் நாம தானே செய்ய போறோம்.. அதை கொஞ்சம் நல்ல மாதிரியே செய்து கொள்ளலாம்...

இப்போ நிச்சயம் கல்யாணம் ரிசப்ஷன் என்று எதுக்குமே தங்க நகை எல்லாம் போடுறது கிடையாது..ப்யூட்டிஷனே விக்கிற நகை எல்லாம் கொண்டாந்து போட்டு விட்றாங்க... அதனால வரவங்களுக்கு பெருசா எதுவும் தெரிய போறது கிடையாது..

யாராவது ஏதாவது நகையை பத்தி கேட்டா உங்களுக்கு எவ்வளவு சொல்ல தோனுதோ சொல்லுங்க...” என்று கூறிய மகளை மரகதம் அதிசயமாக பார்த்தவர்..

“என்ன டி எலி அம்மணமா ஓடுது...?” என்று தன் மகளை சரியாக கணித்து தான் மரகதம் கேட்டார்.

ஆம் மரகதம் கேட்டதுமே சரி தான்.. ப்ரீத்தி இத்தனை பேசுவதற்க்கு காரணம் தன் அண்ணன் ஆசைப்பட்ட பெண் கிடைக்க வேண்டும் என்பதற்க்காக மட்டும் கிடையாது...

சுந்தரம் இங்கு பேசி விட்டு தன் வீட்டிற்க்கு சென்றவன் தன் மனைவியிடம்.. “ தோ பாரு டி உன் அம்மா கூட சேர்ந்து உன் அண்ணன் கிட்ட பேசும் போது ஏதாவது ஏடா கூடமா பேசி வெச்சிடாதே.. புரியுதா...?

ஓரு வகையில் நமக்கு கீழ் இருந்து பெண் வருவதுமே நல்லது தான்...” என்று சொன்ன கணவனிடம் ப்ரீத்தி..

“ஏங்க இப்படி சொல்றிங்க.. என் அம்மா சொத்து இருக்கும் பெண் தான் உன் அண்ணன் சம்பாத்தியத்தை எல்லாம் பெருசா எடுத்துக்க மாட்டா..

இல்லாத வீட்டு பெண் எடுத்தா உன் அண்ணன் சம்பாத்தியத்தை நம்பி தான் அவளுமே இருப்பா.. அப்புறம் இங்கு பணம் அனுப்புறதுக்கு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்க வைப்பா உன் அண்ணனை என்று சொன்னாங்க....” என்று சொன்னதற்க்கு...

சுந்தரம். “ முதல்ல இப்போ உன் அண்ணன் மனசு சந்தோஷப்படுவது போல செய்யுங்க... கடந்த நாளு வருஷமா உன் அண்ணன் எந்த சொத்துமே வாங்கல... அதுக்கு முன்ன இரண்டு வாங்கி இருக்கான்...” என்று சுந்தரம் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே ப்ரீத்தி...

“அந்த இரண்டு சொத்துமே பெரிய சொத்துங்க...” என்று இடையிட்டு சொன்ன ப்ரீத்தியிடம் சுந்தரம்...

“அது தான் டி நான் சொல்றேன்.. அப்போ அவனுக்கு அத்தனை கமிட் மெண்ட் இருந்தது.. வீடு எடுத்து கட்டினது.. உனக்கு நகை போட்டு கல்யாணம் செய்து கொடுத்தது. அவன் படிப்புக்கு உண்டான கடனை அடச்சது என்று அத்தனை கமிட் மெண்டுக்கும் இடையில் அக்னி அத்தனை பெரிய சொத்து வாங்க முடிஞ்சது என்றால்,

இப்போ அவனுக்கு எந்த கமிட்மெண்டும் இல்ல... அதோடு சொத்து வாங்கி நாளு வருஷம் ஆகுது.. அப்போ இந்த நாளு வருஷத்தில் அவனின் பேங்க பேலன்ஸ் எத்தனை கோடி இருக்கும்...” என்று கணவன் சொன்னதுமே.

“ப்ரீத்தி என்னங்க சொல்றிங்க கோடியா...?” என்று வாயை பிளந்தாள் ப்ரீத்தி...

“ஆமாம் கோடி தான்.. என் கணிப்பு படி உன் அண்ணன் கிட்ட பத்து கோடியாவது இருக்கனும்....” என்று சொல்ல....

ப்ரீத்தி மீண்டுமே வாயை பிளந்து. “ என்னது பத்து கோடியா...?”

“ஆமாம் டி... இந்த முறை கண்டிப்பா இது வரை வாங்கியதோடு பெரிய சொத்தா தான் இருக்கும்.. டிப்பார்மெண்ட் ஸ்டோருக்குன்னா கண்டிப்பா மெயின் இடத்தில் தான் பார்ப்பாங்க... இந்த சொத்தை உங்க அப்பா பெயரில் வாங்கினா.. கண்டிப்பா உங்க அப்பா காலத்துக்கு பின்.. அந்த சொத்தை உங்க மூன்று பேருக்கு தான் சேரும்...” என்று கணவன் சொல்ல சொல்ல ப்ரீத்தியின் கண்கள் விரிந்து கொண்டே சென்றாலும் இடையில் ஒரு சந்தேகம் அவளுக்கு...

“அண்ணன் ஒத்துக்குமா ங்க... என் சம்பாத்தியம் என்று கேட்காது...?” என்றவளிடம் சுந்தரம்...

“உன் அண்ணன் கண்டிப்பா இந்தியாவில் செட்டில் ஆக மாட்டான்... இனியும் சம்பாதிப்பான்.. அடுத்து அடுத்து அவன் சொத்து வாங்கி தான் குவிக்க போறான்.. அதுக்கு நடுவுல இது எல்லாம் ஒரு சொத்தா அவன் கண்ணுக்கு தெரிய போறது இல்ல.. அதனால என்ன பண்ற.. உன் அண்ணன் ஆசைப்பட்ட படி.. இந்த பெண்ணையே எந்த பிரச்சனையும் பண்ணாது முடிங்க.. அதோடு உன் அம்மாவையும் பிரச்சனை செய்ய விடாதே... நான் அவ்வளவு தான் சொல்லுவேன்..,

அந்த பெண்ணுமே கல்யாணம் முடிந்து மிஞ்சி போனா ஒரு மாசம் தான் இந்தியாவில் இருக்கும்.. அந்த பெண் கிட்டேயும் நல்ல மாதிரியா இருந்துக்கோ ... புரியுதா... இந்த சொத்தோடு அவன் வாங்கி போற சொத்துமே இந்தியாவில் நாம பார்த்துக்குற மாதிரி செய்... இடமா இருந்தா ஆக்கிரமிப்பு செய்வாங்க என்று சொல்லி அதுல வீடு கட்ட வைக்கலாம்... வீடு கட்டும் பொறுப்பை நம்ம கிட்ட வருவது போல் பார்த்துக்கோ.... வாடகை விடுறது.. அப்படி எல்லாமே. மொத்ததுக்கு இந்தியாவில் இருக்கும் உன் அண்ணன் சொத்தை நாம பார்த்துக்குறது போல் செய்.. அப்போ தான் நம்ம பெண் உன் அண்ணன் குழந்தைக்கு கொஞ்சமாவது ஈடா வசதியில் இருக்க முடியும்.” என்று சொல்ல.

ப்ரீத்தியும் கணவன் பேச்சை தட்டாது.. இதோ அம்மாவையுமே சரி கட்டி பெண் பாத்து பூ வைத்து மிக மிக சுமுகமாகவே தான் ஸ்வேதா வீட்டில் நடந்து கொண்டனர்..

அதனால் ஸ்வேதா வீட்டவர்களுக்கும் அக்னியின் அம்மா தங்கைக்கு தன் வீட்டு சம்மந்தம் பிடிக்கவில்லை என்பது தெரியாது போயிற்று..

ஷ்யாம் தான் இவர்கள் பூ வைத்து சென்ற பின்.. தன் அம்மாவிடம்... “அக்னி வீட்டவங்க எப்படி நடந்து கொண்டாங்கம்மா....” என்று கெளசல்யாவிடம் அத்தனை முறை கேட்டது.

கெளசல்யாவோ... “ சம்மந்தி வீட்டவங்க ரொம்ப தங்கமானவங்க ஷ்யாம்.. நீங்க என்ன போடுறிங்க என்று எதுவுமே கேட்கல... ஏன் கல்யாணம் கூட அவங்கல செய்துக்குறேன் என்று சொல்லிட்டாங்க...” என்று தன் சம்மந்தி வீட்டை பாராட்டி பேசிய கெளசல்யா.

பின்.. “ ஆனாலும் நாம நம்ம வீட்டு பெண்ணை அப்படியே அனுப்பிவிட முடியாது ஷ்யாம்.. கல்யாண செலவில் பாதி நாம கொடுத்து விடலாம்.. அதே போல் நகை அவள் கிட்ட இருக்கு.. நான் ஒரு சீட்டு போட்டு இருக்கேன்.. அதிலேயும் நகை எடுத்துடலாம்... சாமன் வெள்ளி பாத்திரம் எல்லாம்.. நீ அனுப்புற காசுல கொஞ்சம் மிச்சம் பிடிச்சி அவளுக்கு சேர்த்து வைத்து இருக்கேன்...” என்று தன் மகளின் கல்யாணத்திற்க்கு செய்ய வேண்டியதை பட்டியல் இட.

ஷ்யாமுமே... ஒரு தொகை சொல்லி நான் அனுப்புறேன் ம்மா...” என்று சொன்னவனிடம்..

கெளசல்யா.... “ முடியுமா ஷ்யாம்.. நீயே குழந்தையோட இருக்கே. உனக்குமே செலவு இருக்குமே டா...” என்று தயங்கியவரிடம்..

“ம்மா இங்கு அக்னியும் எங்க கூட இருக்குறதால செலவு பாதி தான்ம்மா எனக்கு ஆகுது. அதோட அக்னி சாப்பாடுக்கு என்று கொடுத்துடுறான்... அதனால உங்களுக்கு அனுப்புற மிச்சம் நானுமே ஸ்வேதா கல்யாணத்துக்கு என்று சேர்த்து வைக்கிறேன் ம்மா...” என்று பேசிய மகனின் பேச்சு ஒரு தாயாக கெளசல்யாவுக்கு அத்தனை நிம்மதியை தந்தது...

இருந்துமே மகன் இங்கு பணத்தை கொடுத்து விட்டு அங்கு சின்ன குழந்தையை வைத்து கொண்டு கஷ்டப்பட போகிறான்.. அதுவும் மாப்பிள்ளை கல்யாணத்திற்க்கு பின் இந்தியாவில் தான் என்று சொல்லி இருக்காரு...

அப்போ அங்கு மகனுக்கு கஷ்டமாகிடுமே என்று நினைத்து... “ மாப்பிள்ளை இங்கு வந்துட்ட பின்... உனக்கு பிரச்சனை ஆகாதா ஷ்யாம்.. அதனால அந்த பணத்தை அங்கு வெச்சிக்கோ.. உன் தங்கையும் இந்த பத்து மாதம் சம்பளத்தை என் கிட்ட தான் கொடுத்து இருக்கா... அதனால பிரச்சனை இல்ல ஷ்யாம்...” என்று சொன்னதற்க்கு தான் அவரின் மகன் ஒரு மகிழ்ச்சியான ஒரு விசயத்தை கூறினான்..

அது என்ன என்றால்... “ம்மா இனி அது பத்தி எல்லாம் கவலை இல்லேம்மா... எனக்கு அக்னி வேலை பார்க்கும் கம்பெனியிலேயே வேலை கிடச்சிடுச்சு... மூன்று மாசம் முன்னாடி வேகன்ஸி இருக்கு நீ அப்ளே பண்ணு என்று அக்னி சொன்னான். நானுமே பண்ணி போன மாசம் இண்டர்வ்யூ அட்டண் பண்ணினேன்...

இண்டெர்வியூ அட்டண் பண்ணிய பின் கொஞ்சம் நம்பிக்கை தான் ம்மா எனக்கு... இருந்தாலுமே வேலை கிடச்சிட்ட பின் சொல்லலாம். ஒவ்வொரு முறையும் உங்க கிட்ட நம்பிக்கை சொல்லிட்டு பின் கிடைக்காது போகும் போது என்னை விட நீங்க தான் ரொம்ப

வருந்திருங்க... அது தான் இந்த முறை கிடச்ச பிறகு சொல்லலாம் என்று ம்மா...” என்ற மகனின் பேச்சு கெளசல்யாவுக்கு அத்தனை நிம்மதியை கொடுத்தது எனலாம்..

மகன் அத்தனை கஷ்டப்பட்டு வெளி நாட்டில் படித்துமே ஒரு நல்ல வேலையில் இல்லையே என்ற மனது வருந்திக் கொண்டு தான் இருந்தது.. இப்போது தான் அவருக்கு ஒரு நிம்மதி... பெண்ணுமே ஒரு நல்ல இடத்தில் செல்கிறாள்.. ஒரு தாயாக இன்னும் என்ன வேண்டும்..

அதுவும் மகள் திருமணத்திற்க்கு இப்போது என்ன அவசரம் என்று கேட்டவள்.. மாப்பிள்ளையிடம் பேசிய பின்.. கல்யாண கலை முகத்தில் வந்து விட்டது போல் தினம் மாப்பிள்ளையிடம் பேசிய பின் இன்னுமே முகத்தில் அழகு கூட பார்த்தவரின் மனது அத்தனை மகிழ்ச்சி.. இது போதும் கடவுளே... என்று கை கூப்பி கடவுளை பார்த்து கும்பிட்ட கெளசல்யா.

கணவனின் புகைப்படத்திற்க்கு முன் நின்று கொண்டு... உங்களுக்கு என்னங்க அவ்வளவு அவசரம் போவதுக்கு... நம்ம பசங்க சந்தோஷமா வாழ்வதை பார்க்க உங்களுக்கு கொடுத்து வைக்கலையே என்று சொன்னவருக்கு தெரியாது.... உண்மையில் கொடுத்து வைத்தவர் தன் கணவர் தான்...

இனி வரும் காலங்களில் பிள்ளைகள் கஷ்டப்படுவதை எல்லாம் பார்க்காது போய் சேர்ந்து விட்டார் என்று.

இங்கு அக்னிக்குமே தன் வருங்காலத்திடம் தினம் ஒரு முறையாவது பேசிவிடுவான்…. அவனுமே மூன்று வருடங்கள் தன் மனதில் பூட்டி வைத்த காதலை பெண்ணவளிடம் சொல்வதற்க்கே நேரம் சரியாக இருந்ததே ஓழிய..

அவனுமே தன் காதல் எதிர் காலதிட்டம் என்று பகிர்ந்தவன்.. தன் குடும்பத்தை பற்றி அதிகம் பகிரவில்லை.. அதனால் அக்னி இந்தியாவுக்கு வந்த நண்பன் ஒருவனிடம் கொடுத்து அனுப்பிய வைரம் மோதிரத்தை மாமியார் அவளுக்கு மாட்டி விட….அதை வீடியோ காலில் பார்த்து கொண்டு இருந்த அக்னியையும் தன் அண்ணன் அண்ணி குழந்தை என்று உள்ளம் பூரிக்க பார்த்து கொண்டு இருந்ததினால் அந்த எளிய நிச்சயமே ஸ்வேதாவுக்கு மன நிறைவை கொடுத்தது.

இத்தனை சீக்கிரம் நிச்சயத்தை முடித்தவனை நினைத்து கொண்டு அவன் வாங்கி கொடுத்த அந்த மோதிரத்தை தான் ஆசையாக வருடிக் கொண்டே இருந்த சமயம் தான் அக்னி ஸ்வேதாவுக்கு வீடியோ காலில் அழைப்பு விடுத்தான்…
 
Top