Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Poiyenum Perum Velicham...1

  • Thread Author
அத்தியாயம்….1

பொய்யெனும் பெரும் வெளிச்சம்….

அமெரிக்காவில் அந்த வெனுசுலாவில் அமைந்திருக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பன்னிரெண்டாம் தளத்தில் தான் நம் கதையில் நாயகன் அக்னிவேஷ் தன் அறையின் உள் இருந்த அந்த பால்கனியின் கை பிடியை பிடித்து கொண்டு வானத்தை அன்னாந்து பார்த்து கொண்டு இருந்தான்..

மூச்சை கொஞ்சம் இழுத்து விட்டாலுமே மூக்கின் வழியாகவும், வாயின் வழியாகவும் புகை வரும் அளவுக்கு குளிர் அடித்தாலுமே, ஊ ஊ என்று ஊதிக் கொண்டு அங்கேயே இருந்தானே ஒழிய… பால் கனியை தாண்டி தன் அறைக்குள் செல்லவில்லை… காரணம் செல்ல பிடிக்கவில்லை..

அதற்க்கு காரணம் தன் படுக்கை அறைக்குள் நுழைந்தால், அதனை ஒட்டி இருக்கும் ஹாலில் அமர்ந்து இருந்த அவனின் நண்பன் ஷ்யாமும் அவனின் மனைவி தேவி சித்ராவும் பேசிக் கொண்டு இருப்பது அவன் காதில் தெளிவாக கேட்கும் படி உள்ளதினால் தான் அறைக்கு செல்லாது கொட்டும் பனியில் நின்று கொண்டு இருக்கிறான்…

காதில் விழ கூடாது என்று அக்னி இங்கு நிற்கும் அளவுக்கா காதல் பேச்சு அவர்கள் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தான் தவறு…

அவர்கள் இருவரும் குடும்ப விசயமாக அதாவது இந்தியாவில் இருக்கும் தன் குடும்ப விசயமாக தான் தம்பதியர் பேசிக் கொண்டு இருந்தனர்..

ஷ்யாம் குடும்பம் மட்டும் இல்லை இவன் குடும்பமும் இந்தியாவில் தான் இருக்கிறார்கள்..

பத்து ஆண்டுகளுக்கு முன் படிப்பதற்க்காக இங்கு வந்த அக்னியும் ஷ்யாமும் சேர்ந்து அறை எடுத்து தங்கி என்று இந்தியாவில் அலோ அலோ என்ற அளவில் மட்டும் இருந்த இந்த இருவர் அமெரிக்கா வந்து தான் நெருங்கிய நட்பாக மாறினர் என்பது நிஜம்..

எந்த அளவுக்கு நெருங்கிய நட்பு என்றால் ஷ்யாமுக்கு மூன்று வருடங்கள் முன்பே திருமணம் முடிந்து விட்டது… ஆண்களாக இருவர் மட்டும் இருந்ததினால் ஒரு படுக்கை அறை கொண்டு மட்டுமே தங்கி இருந்தனர்..

ஷ்யாம் திருமணம் முடித்து மனைவியோடு இங்கு வரும் போது அக்னி… “ ஷ்யாம் நீ இங்கு தங்கிகுறியா. இல்ல நான் வெளியில் பார்க்கட்டுமா….” என்று ஷ்யாம் திருமணம் என்று இந்தியா சென்று இருந்த போது அக்னி இங்கு இருந்து கேட்ட போது..

ஷ்யாம்… “ வெளியில் பாரு அக்னி.. ஆ 2BHK வா பாரு….” என்றவனின் பேச்சுக்கு ஏற்றது போலவே தான் அக்னி வீடு.. இதோ இந்த அடுக்குமாடி குடியிருப்பை பார்த்து வைத்து இருந்தான்..

ஆனால் அமெரிக்காவில் இது போல் வீட்டிற்க்கு டாலரில் கொடுத்து ஆகாது.. அதுவும் தன்னை விட கம்மியாக சம்பளம் வாங்கும் இவன் எப்படி தாக்கு பிடிப்பான் என்று மனதில் நினைத்தாலும், அதை ஷ்யாமிடம் கேட்கவில்லை..

முன் என்றால் இது போல் மனதில் நினைத்து இருக்க மாட்டான்.. அக்னி ஷ்யாமிடமே கேட்டு இருந்து இருப்பான்..

ஆனால் திருமணம் மனைவி என்று இருக்கும் போது அந்த மனைவி கொஞ்சம் ஆடம்பரமாக வாழ நினைத்தால் அதனால் சொல்லாது போக.

ஆனால் நடந்ததோ… இவர்கள் இருவருக்குமே ஒரு படி மேல் என்பது போல் தான் தேவி சித்ரா சிக்கனமாக இருந்தாள்.

எந்த அளவுக்கு சிக்கனம் என்றால் திருமணம் முடிந்து ஷ்யாம் தேவியோடு அமெரிக்கா வந்த தினத்தில் அந்த வீடு அக்னியும் தங்களோடு தங்க தான் அக்னி இரண்டு படுக்கை அறை கொண்ட வீடாக பார்க்க சொன்னேன் என்று அவன் சொன்ன போது..

அக்னி… “உனக்கு அறிவு இருக்காடா..?” என்று கேட்கும் போதே அங்கு வந்த தேவி..

“அவர் கூட நீங்க பத்து வருஷமா பிரன்ஸா இருக்கிங்க.. அதுவும் ஆறுவருஷமா ஒரே அறையில் தங்கி இருக்கிங்க.. இன்னுமா அவருக்கு அறிவு இருக்கா….? இல்லையான்னு நீங்க கண்டு பிடிக்கல ண்ணா…” என்று பேசியவளின் பேச்சில் ஷ்யாம் முறைத்தான் என்றால், அக்னி சிரித்து விட்டான்…

அதுவும் பார்த்த நாளே இப்படி அண்ணா என்று அழைத்து பேசியவளின் அந்த பேச்சில் உண்மையாக தங்கையாகவே நினைக்க தொடங்கி விட்டான் அக்னி…

அதனால் இப்போது தேவியிடமே…. “ இல்லேம்மா இவன் முன் போலவே என்னையும்..” எனும் போதே தேவி..

“நான் தான் பார்க்க சொன்னேன்.. ண்ணா…” எனறு சொன்னவளிடம்..

அக்னி… “ வேண்டாம்மா. அது சரியா இருக்காது..” என்றவனிடம் சித்ரா.

“ஏன் ண்ணா.. உங்களுக்கு நான் இருப்பது அன்கம்பர்டபுளா இருக்குமா….?” என்று கேட்டதும்..

அக்னி தேவியை முறைத்து… பின் “ என்னம்மா புரியாம பேசுற.. இப்போ தான் மேரஜ் ஆகி இருக்கு நியுலி கபுள் உங்களுக்கு தான் நான் இங்கு இருப்பது அன்கம்பர்டபுலா இருக்கும்…” என்றான்..

அதற்க்கு சித்ரா சொன்னது… “ அதுக்கு தான் டபுல் பெட் ரூம் பார்க்க சொன்னது ண்ணா….” என்று மட்டும் சித்ரா சொல்லி இருந்தால், அக்னி இந்த ஏற்பாடுக்கு ஏற்று கொண்டு இருப்பானா என்று தெரியாது..

ஆனால் அடுத்து சித்ரா சொன்ன.. “ இவர் சேலரி உங்களுக்கு தெரியும் ண்ணா…. ஊருக்கு என்ன அனுப்புறார் என்பதும் தெரியும்.. “ என்று சொன்னவளின் பேச்சுக்கு அனைத்திற்க்குமே அக்னி தலையாட்டும் படி தான் இருந்தது..

காரணம் அக்னிக்கு ஷ்யாம் வீட்டவர்களையும் தெரியும்.. அவனின் வீட்டு சூழ்நிலையும் அனைத்தும் தெரியும்.. அதே போல் தான் ஷ்யாமுக்குமே அக்னி வீட்டவர்களை பற்றியும்.. அவர்களின் குணநலன்களை பற்றியும் தெரியும்..

“ இப்போ நாங்க தனியா இருந்தா இவர் ஊருக்கு அனுப்பும் அந்த கொஞ்ச காசுமே அனுப்ப முடியாது ண்ணா. இவள் தங்கை இப்போ தான் MBA ஜாயின் பண்ணி இருக்கா… கண்டிப்பா இவர் அனுப்பும் பணத்தில் கொஞ்சம் குறைந்தாலுமே அங்கு பிரச்சனை தான் ண்ணா.” என்று சித்ரா சொன்ன அனைத்தும் சரி தான்..

ஆனாலுமே என்று நினைத்தவன். “ அப்போ நான் முன் இருந்த ரூமில் நீங்க தங்கிக்கோ சித்ரா. இது எனக்கு எடுத்துக்குறேன்…” என்று பார்த்து பணம் கொடுத்த அந்த புதிய வீட்டில் தான் இருப்பதாக சொன்னான் அக்னி… இப்படி சொல்வதால் அக்னி பெரிய இடம் என்று நினைத்து கொள்ள வேண்டாம்…

அது என்னவோ படிப்பு ஒன்று போல் இருவரும் எடுத்தாலும், வேலை இருவருக்கும் ஒன்று போல் கிடைக்கவில்லை…

எடுத்த உடனே அக்னிக்கு நல்ல கம்பெனியில் அதிக டாலரில் வேலை கிடைத்து விட்டது.. ஷ்யாம் இந்த வேலை கிடைக்கும் முன் தினம் கூலியாக ஓட்டல் பார் என்று தான் வேலை பார்த்தான்..

இரண்டு வருடங்கள் பின் தான் இந்த வேலையும் கிடைத்தது… அதுவும் சொல்லி கொள்ளும் படியான சம்பளமும் இல்லாது.. ஆனால் இங்கு தான் வேலை பார்த்து ஆகும்படியான வீட்டு சூழ்நிலை தான் ஷ்யாமுக்கு..

தந்தை இல்லாது மகன் ஆசைப்பட்டான் என்று தந்தை இறந்த போது வந்த பணத்தை மொத்தமும் கொடுத்து தான் ஷ்யாமின் அன்னை இவனை படிக்க இங்கு அனுப்பியது..

அதனால் இங்கு இருந்து எப்படியாவது இன்னும் நல்ல வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்று தான் ஷ்யாம் முயன்று கொண்டு இருக்கிறான்…

இவை அனைத்தும் அக்னிக்கும் தெரிந்ததினால், சித்ராவின் பேச்சை கேட்டான்.. அதாவது சித்ராவோ… அடுத்து தயங்கி சொன்ன…

“அண்ணா நான் ரூம் ரென்ட் மட்டும் மனசுல வெச்சிட்டு சொல்லலே..” என்று சொன்னவள் பின் தயங்கி..

“நீங்கள் பெயின் கெஸ்ட்டா இங்கு இருந்தா அதை வைத்து இங்கு நாங்க மேனஜ் பண்ணிப்போம்…” என்று சொன்னவளின் பேச்சை ஏற்று இதோ மூன்று வருடங்களாக அக்னி வாசம் இங்கு தான்.

இது வரை அக்னிக்கு அதில் எந்த வித பிரச்சனையும் வந்தது கிடையாது.. ஹாலில் கணவன் மனைவியாக இருந்து அவனுக்கு எந்த வித சங்கடத்தையும் ஷ்யாம் தம்பதியர் அவனுக்கு கொடுத்தது கிடையாது… ஆனால் இன்று…

அப்படி இவன் தன் அறைக்கு போக முடியாத அளவுக்கு என்ன பேசிக் கொண்டு இருக்கிறார்கள்..

வேறு ஒன்றும் இலைங்க. இந்தியாவில் இருக்கும் ஷ்யாமின் தங்கையான ஸ்வேதாவுக்கு ஒரு வரன் வந்து இருக்கிறது.. அந்த இடத்தையே முடித்து விடுவது போல் தான் ஷ்யாமும் சித்ராவும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்..

அவன் தங்கைக்கு திருமணம் பேசினால் இவனுக்கு என்ன வந்தது… ? இதை தானே நீங்கள் நினைப்பது.. அது ஷ்யாமின் தந்தையாக மட்டும் இருந்தால், ஒன்றும் இல்லை தான்..

இன்னும் கேட்டால் பணத்தால் ஏதாவது உதவி தேவையா…? என்று இவனுமே அங்கு அமர்ந்து பேசி இருந்து இருக்க கூடும்..

ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக மனதில் நினைத்து கொண்டு இருக்கும் பெண்ணுக்கு கல்யாணம் பேசும் போது… எந்த ஒரு ஆண்மகனால் அதை கேட்டு கொண்டு இருக்க முடியும்.. அதன் தொட்டு இங்கு இருக்க.

ஆனால் உன்னை நான் அப்படி இருக்க விட்டு விடுவேனா.. என்பது போல் அந்த இடத்திற்க்கு வந்த ஷ்யாம்..

“இங்கு நின்னுட்டு என்ன டா செய்யிற… ? அங்கு வா உன் தங்கை உன்னை கூப்பிடுறா..” என்று சொல்லி கைய்யோடு அவனை இழுத்து சென்று சித்ரா தேவியின் முன் அமர வைத்த பின்.. இவன் அங்கு இருந்து எழுந்து கொள்ளவா முடியும்…

அமைதியாக அமர்ந்து கொள்ள. அதற்க்குமே நான் விடுவேனா என்று சித்ரா தேவி… “ என்ன அண்ணா என்னவோ போல் இருக்கிங்க…? உடம்பு சரியில்லையா….?” என்று கேட்டவளிடம்..

அக்னி…. “ ஆம்..” என்று சொல்லி தன் அறைக்கு சென்று இருக்கலாம்..

ஆனால் பாவம் நம் அக்னிக்கு சட்டென்று பொய் பேச வராது… “ உடம்புக்கு ஒன்னும் இல்லேம்மா….” என்று விட்டான்..

உடனே சித்ராவோ… “ அப்போ மனசுக்கு பிரச்சனையா ண்ணா…” என்று சரியாக கேட்க.

முன் உடம்புக்கு ஒன்றும் இல்லை என்று சொன்னது போல் சொல்லாது அக்னி அமைதி காத்து பின் ..

“அது எல்லாம் ஒன்னும் இல்லேம்மா…” என்று சொன்னவனையே சித்ரா பார்த்து கொண்டு இருக்க..

அக்னி தான் ஒரு மாதிரி சங்கடமாக பார்த்தவன்… “ அது தான் ஒன்னும் இல்ல என்று சொன்னனேம்மா…” என்றவனின் பேச்சுக்கு சித்ரா அதே பார்வை பார்த்து கொண்டே….

“நான் ஒன்னும் சொல்லலையே ண்ணா….” என்று கேட்டவள்..

பின் இருவரின் பேச்சையும் மாறி மாறி பார்த்தும் கேட்டும் கொண்டு இருந்த ஷ்யாமிடம்..

“ஏங்க நான் ஏதாவது சொன்னேன்…” என்று தன் கணவனையும் துணைக்கு அழைத்தாள்.

அதற்க்கு ஷ்யாமோ ஆமாம் என்றும் இல்லாது இல்லை என்றும் இல்லாது இருபக்கமும் தலையாட்டினான். அவன் தான் தன் மனைவியின் பார்வையில் ஏதோ இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு விட்டானே.. அதோடு மனைவியின் இந்த முரண்ப்பட்ட பேச்சில் தான் ஷ்யாமுமே அக்னியின் மாற்றத்தை கவனித்தான்..

அவனுக்குமே இவனுக்கு என்ன பிரச்சனை என்பது போல் பார்க்க.. கணவன் மனைவியின் இந்த பார்வையில் அக்னி என்ன நினைத்தானோ…

“உன் தங்கையை எனக்கு மேரஜ் பண்ணி வெச்சிடுங்கலேன்….” என்று கேட்டு விட்டான்…








 
Top