Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Poiyenum Perum Velicham....11

  • Thread Author
அத்தியாயம்….11



ஆம் உஷாவினால் பதில் சொல்ல முடியாத நிலை தான்… இரண்டு வருடங்கள் முன்பு. “ நீ இங்கு வராதே….” என்று சொன்ன உஷாவின் தாய் கிரிஜா.. தந்தை ராகவன் பேச்சை கேட்காது.. தாய்க்கு கர்பபை எடுத்து விட்டு மருத்துவமனையில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் அகரனிடம் கூட சொல்லாது அவள் கேரளாவுக்கு சென்று விட்டாள்.. அதுவும் அப்போது அவள் மூன்று மாதம் குழந்தையை சுமந்து கொண்டு இருந்த போது…

அந்த கேரளத்துக்கு சென்ற போது தான் கடைசியாக கரு கலைந்தது.. அதுவும் பயணம் செய்ததில் அலைச்சலில் குழந்தை கலைந்து விட்டது என்று இருந்தால் கூட அகரன் மனது தாங்கி இருக்குமா என்னவோ….

ஏகப்பட்ட கடன் வாங்கிய உஷாவின் பெற்றோரினால் அந்த குழந்தை கலைந்ததில் தான் அகரனின் மனம் தாளவில்லை.. அதுவும் எப்படிப்பட்ட இக்காட்டான நிலை… அன்று தன் மனைவி இருந்த நிலையை இன்னுமே யாரிடமும் சொல்ல கூட அகரனுக்கு தைரியம் இல்லை.. கூடவே அவமானமும் கூட.

ஆம் அவமானம் தான்… அக்னியின் அம்மா நினைத்து கொண்டு இருப்பது போல் உஷாவின் பெற்றோர் இப்போது செல்வ நிலையில் எல்லாம் கிடையாது…

இருந்தார்கள் முன் இருந்தார்கள்…அதாவது உஷா காலேஜ் படித்து கொண்டு இருந்த சமயம்.. செல்வமாகவும் செல்லமாகவும் வளர்ந்த பெண் தான் உஷா.

ஆனால் இவள் காலேஜ் கடைசி வருடம் படித்து கொண்டு இருந்த சமயம். இவளின் தந்தை நடத்தி வந்து இருந்த பைனான்ஸ் கம்பெனி பெரும் நஷ்டத்தில் ஆனது..

வாடிக்கையாளர்களிடம் கொடுத்த சில பணங்கள் முடங்கி விட்டது.. இவரிடம் இருக்கும் பணத்தை ஒரு சிலதை ஷேரில் போட்டு இருந்தார்…

அதுவும் கீழ் முகமாக போக… தன்னுடைய பைனான்ஸ் கம்பெனியை இழுத்து மூடியதோடு மஞ்ச பத்திரிக்கையும் கொடுக்கும் படியான சூழ்நிலை உஷாவின் குடும்பத்திற்க்கு வந்து விட்டது…

மஞ்சப்பத்திரிக்கை என்பது வாடிக்கையாளர்களிடம் தான். இவர் ஒரு சிலரிடம் மீட்டர் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார்.. அவர்கள் சும்மா இருப்பார்களா..? உஷாவின் பெற்றோரை கழுத்தை நெருக்க. அந்த சமயம் தான் உஷா சென்னையில் படிப்பை முடித்து அங்கேயே அகரன் வேலை பார்க்கும் ஐடி கம்பெனிக்கு சேர்ந்தது..

கேரளத்துக்கு செல்ல முடியாத நிலை தான் உஷாவுக்கு.. இனி இங்கு தான் தன் வாழ்வு என்ற முடிவோடு இருந்த சமயம் தான் அகரன் அவளின் பார்வையில் விழுந்தான்.

அகரன் நல்ல தேர்வாக அவளுக்கு பட்டது.. தெரியும்.. அகரனுக்கு அக்கா அண்ணன் இருக்கிறார்கள் என்று தெரியும்.. இருந்துமே நெருக்கமாக பழகினாள். காரணம் கேரளத்தில் கடன் கொடுத்த ஒரு நாற்பது வயதுக்காரன் ராகவனிடம்..

“உன் பொண்ணை கட்டிகொடு.” என்று நச்சரிக்க… இங்கு இவள் திருமணம் ஆகி செட்டில் ஆகினால் தான் சரியாக ஆகும்.. என்று அனைத்தும் திட்டம் போட்டு தான் உஷா செய்து முடித்தாள்…

அகரனிடம் கூட தன் வீட்டு சூழ்நிலையை சொல்லாது தான் குடும்பம் நடத்தினாள்.. ஆனால் தன் அன்னையை பார்க்க சென்ற போது ரயில் நிலையத்தில் இவளை பார்த்த கடன் கொடுத்த ஒருவன் இவளை பிடித்து வைத்து கொண்டு..

அவளின் தோற்றத்தை பார்த்து.. “ நீ நல்லா தானே இருக்க… உன் அப்பா வாங்கிய பணத்தை நீ கொடு.. அப்போ தான் உன்னை விடுவேன்…” என்று மிரட்டல் விடுக்க.

அதன் பின் தான் அகரனுக்கு உஷாவின் வீட்டின் உண்மையான நிலையே தெரியவந்தது.. தெரிந்த நொடி அவனுக்கு அத்தனை ஆத்திரம் தான்..

இருந்துமே மனைவி குழந்தை வேறு உண்டாகி இருக்கிறாள் என்று இருபது லட்சத்தை உடனே பிரட்டி… கொடுத்து விட்டு மனைவியை மீட்டு சென்னை வரும் வழியிலேயே கரு கலைந்து விட்டது..

காரணம் அதிகப்படியான மன அழுத்தம் பயமே என்று மருத்துவர் சொல்ல. இதோ அதன் தொட்டு தான் அகரன் மனைவியை திட்டுவது.

உஷா அக்னி ஸ்வேதாவை பார்த்து ஆதங்கம்படுகிறாள் என்பது கணவனாக அவனுக்கு புரிந்தது தான்.. ஏன் அவனுக்குமே அந்த ஆதங்கம் இருக்க தான் செய்கிறது.

ஆனால் அவன் என்ன செய்வான்… இத்தனை ஆண்டு கணவன் மனைவியாக சம்பாதித்துமே ஒரு சேமிப்பும் இல்லாது அவன் இருக்க…

அவன் கூட பிறந்தவர்கள் இருவருமே அடுத்து அடுத்து கட்டத்திற்க்கு முன்னேறிக் கொண்டு போக. தான் மட்டும் இப்படி இருப்பதில் அவனுக்கு மட்டும் கவலை இல்லாது இருக்குமா என்ன…?

ஆனால் என்ன செய்வது.. தான் அவசரப்பட்டத்துக்கு.. இது தேவை தான் என்பதான நிலையில் தான் அகரன் இப்போது இருப்பது.

இதில் ஒரு ஆறுதல் என்ன என்றால் மனைவி குழந்தை உண்டாகி இருப்பது தான்.. அது என்னவோ அனைவருக்கும் முன்பு தனக்கு தான் திருமணம் நடந்தது… இப்போது அக்னிக்கு திருமணம் முடிந்து தனக்கு முன்பு தந்தையாகி விட்டால், அனைத்திலுமே அவனுக்கு கீழ் நானா…?

ஆம் அகரன் மனம் இப்படியாக தான் சென்றது… அதோடு வாழ்க்கையில் எப்படியாவது செட்டில் ஆகி விட வேண்டும்… என்ற எண்ணம் தான் தற்போது அகரனுக்கு.. அதன் தொட்டு மனதில் அத்தனை இருந்துமே அமையாக பார்த்து கொண்டும் கவனித்து கொண்டு மட்டுமே இருந்தான்..

அக்னி ஸ்வேதா வர வேற்பு திருமணம் நல்ல முறையில் நடந்து முடிந்தது.. என்ன தான் சிக்கனமாக நடத்த வேண்டும் என்று மரகதம் நினைத்தாலுமே அக்னி இந்தியா வந்த இரண்டு நாட்களில் அதை பிரமாண்டமாக மாற்றி அமைத்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்..

மெனுவை சிம்பிளாக மரகதம் சொல்லி இருக்க.. அக்னி அதை அப்படியே மாற்றி விட்டான்.. அதோடு திருமண மண்டபத்தில் பூ அலங்காரம் செய்வது முதல் அனைத்துமே.. அதிலும் வீட்டில் இருந்த படியே தான்.

மரகதத்திற்க்கே இது அனைத்துமே திருமணம் சத்திரத்திற்க்கு வந்த பின்பு தான் தெரியுமே.. அதன் கோபம் வேறு மரகத்திற்க்கு… மகளும் சின்ன மகனும் அமைதியாக இருக்கும் படி சொன்னதினால் அமைதியாகி இருந்தார்.

இவர்கள் இப்படியான மனநிலையில் இருந்தாலுமே பெண் மாப்பிள்ளை நல்ல மன நிலையில் மகிழ்ச்சியோடும்.. அவர்களுக்கே உண்டான நாளாக அதை அமைத்து கொண்டு மனநிறைவோடு தான் அந்த திருமண விழா அவர்களுக்கு நடந்தது.

அதே போல் தான் ஸ்வேதாவின் அன்னை அண்ணன் அண்ணி… ஏன் ஷ்யாமின் குழந்தை பரத் கூட தன் மாமன் பக்கத்தில் சமத்தாக அமர்ந்து கொண்டான்..

அந்த குழந்தைக்கும் அக்னி புதியவன் கிடையாதே…அமெரிக்காவில் ஒரே வீட்டில் தானே வசித்தார்கள்.. அதன் தொட்டு பயம் இல்லாது அமர்ந்து இருந்தான்..

இதை பார்த்த ப்ரீத்திக்கு உரிமை உணர்வு எழ தன் குழந்தை நிஷாவை தன் அண்ணன் பக்கத்தில் பரத்தை இடித்த படி அமர வைக்க முயன்றாள்..

முயன்றாள் தான்… ஆனால் முடியவில்லை.. ஏற்கனவே இத்தனை ஜனத்தை பார்த்து பயந்து இருந்த குழந்தை மேடையில் புதியவனான ஒருவன் பக்கத்தில் அமர வைத்தால், இன்னும் பயம் கூட தானே செய்யும்..

இன்னும் கேட்டால் பரத் தான்… அந்த குழந்தையிடம் தன் மழலை குரலில்..

“ மாமா மாமா அலுவாதே…” என்று சொன்னான்..

ஆனால் குழந்தைக்கு அதை எல்லாம் கேட்கவில்லை.. தன் தாயிடம் தாவ தான் முயன்றது.

அக்னி தான்.. “ என்ன ப்ரீத்தா குழந்தை அழுவுறான் தானே தூக்கிக்கோ…” என்று சொன்னதும் வெடுக்கென்று தூக்கிக் கொண்டு கீழே வந்தவள் தன் குழந்தையில் தொடையில் கிள்ளி விட்டு.

“உன் அப்பனை போலவே மக்காவே இரு.. அது பாரு எப்படி உஷாரா உன் மாமன் பக்கத்தில் உட்கார்ந்துட்டு இருக்கான்…” என்று புலம்பிக் கொண்டு இருந்தாள்.. அவளுக்கு தன் குழந்தைக்கு தான் அக்னி தாய் மாமன்.. முதல் உரிமை தன் குழந்தைக்கு தான் என்ற எண்ணம் அவளுக்கு..

குழந்தைகளுக்கு எல்லாம் அந்த உரிமை… இது எல்லா தெரியாது தானே.. அந்த குழந்தையை பொறுத்த வரை.. அக்னி தாய் மாமனாகவே இருந்தாலுமே… அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இரண்டு நாள் முன்பு வந்தவன் அன்னியன் தானே…

இப்படியாக திருமணம் முடிந்து பெண் வீட்டில் அடி எடுத்து வைத்து. மாப்பிள்ளை வீடான தன் வீட்டிற்க்கு மனைவியை அழைத்து வந்தவர்களுக்கு முகூர்த்த தேங்காய் உடைத்து விட்டு பூஜை அலமாரியில் தீபம் ஏற்றி வணங்கிய பின்… பாலும் பழமும் தந்து அனைத்து சம்பிரதாயமும் நடந்து முடிந்து முடியவே மணி நான்கு தொட்டு விட்டது….

அதன் பின் மாப்பிள்ளை பெண்ணுக்கு இன்று முதல் இரவு.. எங்கு நடத்துவது என்ற பிரச்சனையை மரகதம் ஆரம்பித்து விட்டார்…

மீண்டுமே …” இதுக்கு தான் வீட்டை எழுப்பும் போதே… பெருசா கட்டிடலாமுன்னு சொன்னேன்.. எங்கே கேட்ட….” என்றவரின் இந்த பேச்சை பெண்ணுக்கு துணை என்று வந்த ஷ்யாமும் சித்ரா தேவியும் கேட்டு என்ன இது இப்போது இந்த பேச்சு தேவையா. இரண்டு அறை இருக்கு ஒன்னுல ஏற்பாடு செய்தா ஆச்சு… என்று மனதில் நினைத்தாலுமே கேட்டுக் கொள்ளவில்லை.

ஆனால் அக்னி… “ ம்மா அந்த பிரச்சனை எல்லாம் அப்புறம் பார்க்கலாம். முதல்ல வந்தவங்களை கவனிங்க….” என்று சொன்னவனிடம் மீண்டும் மரகதம்..

“ இல்ல அக்னி… உனக்கு இன்னைக்கு…” என்று பேச்சை பாதியில் முடித்தவரிடம்..

“நான் மகாபல்லிபுரத்துல ரூம் புக் பண்ணிட்டேன் ம்மா… இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவோம்..” என்று அக்னி முடித்து வைக்க.

ஆனால் அந்த பிரச்சனையை முடிக்கும் முடிவில் மரகதம் இல்லை போல்.. அதனால் தான்..

“என்ன இது அக்னி.. இது எல்லாம் பெரியவங்க எங்கு நேரம் எல்லாம் பார்த்து செய்யிறது… நீ பாட்டுக்கு இது போல செய்து வைத்தா நான் இங்கு பெரிய மனிஷி என்று எதுக்கு இருக்கேன் உன் அப்பா தான் எதுக்கு இருக்கார்…?” என்று கோபத்துடன் கேட்டார்.

அதற்க்கு அக்னி… “ இங்கு ரூம் இல்ல… வீடு பத்தலை என்று நேத்து சத்திரத்துக்கு போகும் முன்பு நீங்க தானே பேச்சை ஆரம்பித்தது…” என்று கேட்டவனிடம்..

மரகதம்.. “ அது வீட்ட பெருசா கட்டனும்…” என்றவரின் பேச்சை முடிக்கவிடாது அக்னி.

“அப்போ வீட்டை பெருசா கட்டினதும் இந்த பங்ஷன் வெச்சிக்கலாம் என்று சொல்றிங்கலா….?” என்று கேட்டவனின் பேச்சில் ஷ்யாம் மட்டும் அல்லாது ஸ்வேதாவுமே சிரித்து விட்டாள்..

அது மரகத்திற்க்கு கோபம் தந்து ஏதோ பேச வந்தவரின் பேச்சை சுந்தரம்.

“ அத்த அது தான் மச்சான் சொல்றாருலே அத்த.. அதுவும் இல்லாம அங்கு லீவ் எத்தனை நாள் கொடுத்து இருக்காங்கலோ…” என்று சொன்ன மருமகனின் பேச்சில் மரகதம் அமைதியாகி போனாலுமே ஷ்யாமும் ஸ்வேதாவும் சிரித்ததும்.. அனைத்துமே அவர்கள் இஷ்டப்படி நடப்பதுமே தன்னை ஒதுக்கி அனைத்தும் செய்கிறானா என்ற கோபத்தை கொடுத்தது தான் ..இருந்துமே மகள் அருகில் வந்து..

“ம்மா சும்மா இருங்கலேம்மா.. வீடு தானே. அண்ணா கண்டிப்பா இந்த முறை கட்ட சொல்வாங்க பாருங்க.. அண்ணாவுமே இந்தியாவுக்கு வரும் ஒவ்வொரு முறையும் இது போல வெளியில் தங்க முடியாது என்ற யோசனை வரும் தானே…” என்ற பேச்சில் அமைதியாக போக.

அதற்க்கு ஏற்றது போல் தான் மனைவியோடு மகாபல்லிபுரம் கிளம்பும் முன்பு… தன் தந்தையிடம்..

“ அப்பா இந்த வீடு கட்டினவரையே மேல ரூம் கட்ட ஏற்பாடு செய்துடுங்கப்பா. என்ன பட்ஜெட் என்று வந்து நான் சொல்றேன்…” என்று சொல்லி விட்டு கிளம்ப.

மரகதத்திற்க்கு அப்போது தான் மனது நிம்மதியானது… அதன் தொட்டு இத்தனை நேரமாக முகத்தை கடு கடு என்று வைத்து கொண்டு இருந்தவர்.. சிரித்த முகமாக வழி அனுப்பி வைக்க. இவை அனைத்துமே நம் ஸ்வேதா கவனித்து கொண்டு தான் இருந்தாள்.

இது தான் என்று ஒன்றும் புரியாதா போதும் முதலில் சிடு சிடு என்று இருந்த தன் மாமியார் அக்னி வீடு கட்டுவதை பேசியதும் தன்னிடம்.. குழைந்து பேசியதை கவனித்து கொண்டவள் பதிலுக்கு அவளுமே இன்முகமாக பேசி தான் தன் மாமியார் வீட்டில் இருந்து ஸ்வேதா விடைப்பெற்றது…
 
Well-known member
Joined
Jul 13, 2024
Messages
502
Arumai Viji ma. Niram maarum pachonthigal
 
Top