Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Poiyenum Perum Velicham....18

  • Thread Author
அத்தியாயம்….18

நீல கண்டன் நினைத்தது போல் தான் ஸ்வேதா ஆட்டோவில் போகும் போது அவள் உடல் உணர்ந்த அந்த குளுமையும், அதன் தொட்டு இங்கும் ஏசியா என்று தான் அவள் பார்வை மேல் நோக்கி சென்றது..

கூடத்தில் எந்த கதவும் இல்லாது.. இப்படி ஏசி அதுவும் இருபதுக்கும் குறைவான டிகிரியில் வைத்து கொண்டு நாள் முழுவதும் இருந்தால் கரண்ட் பில் எவ்வளவு வரும்…

அவள் இந்த பதினைந்து நாளில் அவள் மனதில் அந்த வீட்டவர்களின் பேச்சும் செயல்களையுமே கவனித்தாளே ஓழிய.. அவளின் பார்வையில் இதை எல்லாம் படவில்லை..

அதோடு இந்த பதினைந்து நாளில் பாதி நாள் ஹனி மூனில் இருந்தால் என்றால், மற்றைய நாளில் அவள் அம்மா வீட்டில் தானே இருந்தாள்..

இங்கு இருந்ததே இரண்டே நாட்கள் தான்… அதுவும் அதில் பாதி நாள் ஷாப்பிங்க என்று சென்று விட்டது.. மீதம் இருந்த நேரம் கணவனின் பிரிவை இதை மட்டுமே தான் நினைத்துக் கொண்டு இருந்தாள் பெண்ணவள்…

முன் அதாவது ஹனி மூனுக்கு வந்த நாளுமே என்ன இது ரூமை விட ஹால் ஜில்லுன்னு இருக்கு.. பரவாயில்லை மரம் இருப்பதினால் நல்லா காத்து வருது போல என்று தான் நினைத்தாள்.. ஆனால் அந்த குளுமை இயற்கை கொடுக்கவில்லை செயற்கை தான் கொடுத்தது என்பதை இப்போது தான் உணர்ந்தது..

அதை நினைத்து கொண்டவள்.. கூடவே மேஜையில் அடக்கி வைத்திருந்த உணவு வகைகள்.. சமைக்க என்று சமையல்க்காரி… ஏன் சமையல்காரியை வைத்து சமையல் செய்ய வேண்டும்.? இப்போது தான் கணவனின் தம்பி தம்பி மனைவி இருக்காங்க. முன் அவருடைய அப்பா அம்மா மட்டும் தானே..

இருவருக்கு மட்டும் சமைக்க சமையல்காரியா.? சமையல்காரியை வைக்கலாம் தப்பு கிடையாது.. அது எப்போது என்றால் உடல் நிலை சரியில்லாத போது வைக்கலாம்… இல்லை என்றால் பிறந்ததில் இருந்தே சமையல் அறைப்பக்கம் போகாது வசதியாக வாழும் பெண்கள் வைத்து கொள்வார்கள்..

ஆனால் அந்த இரண்டும் இங்கு இல்லை.. மரகதம் ஒரு திடகாத்திரமான பெண் மணி தான்… அதே போல் வசதி என்ன…? மாத செலவு பத்தாது ஆறு ஆயிரம் ஏழு ஆயிரத்திற்க்கு எக்ஸ்போர்ட்டில் வேலைக்கு சென்றும் இருக்கிறார் மரகதம்.

இந்த தகவல்கள் ஸ்வேதா தன் தந்தை இறந்து இவள் பட்ட கஷ்டத்தை கணவனிடம் சொன்ன போது அவனுமே.. அவன் பட்ட கஷ்டத்தை சொன்ன போது அவளுக்கு தெரிந்த விசயங்கள் இது…

அப்படி கஷ்டப்பட்டவர்களா.. இன்று பணத்தின் மதிப்பு தெரியாது இத்தனை ஆடம்பரமாக செலவு செய்வது… இத்தனை செலவுகள் யார் பணத்தில் செய்வது என்பது அவளுக்கு தெரிய வேண்டி இருந்தது.

அது தான் கைய்யோடு கணவனின் கணக்கு புத்தகத்தையும் கொண்டு வந்து விட்டாள். அவளின் அம்மா வீட்டில் இருந்த சமயம் அக்னி…

இந்த முறை அமெரிக்கா சென்று ஒரு மாதத்தில் திரும்பி விடுவதால் கூடவே.. இனி அங்கு போகவும் மாட்டேன் என்பதால் அங்கு இருக்கும் பணத்தை இங்கு இருக்கும் பேங்குக்கு தான் அனுப்பி விடுவேன் டா. அதனால என் அக்கவுண்ட்டில் உனக்கும் ஜாயிண்ட் அகவுண்ட்டா செய்து விடுகிறேன். என்று சொல்லி இவளை அழைத்து சென்று சொன்னது போல் ஜாயின்ட் அக்காவுண்டாக மாற்றி விட்டான்.

அதற்க்கு பெண்ணவளும் மறுக்கவில்லை.. காரணம் அது தான் கணவர் வீட்டவர்கள் காசு பணம் விசயத்தில் எப்படி என்று காட்டிவிட்டார்களே… அதன் தொட்டு இதோ கணவனின் வங்கி கணக்கில் தன் பெயரும் இணைந்த தொட்டு வங்கிகணக்கு புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்தவள்

தன் தாய் வீடு வந்தாள்.. கெளசல்யா மகளின் சோர்ந்த முகத்தை பார்த்து விட்டு…

“என்ன பாப்பா சாப்பிடுறியா…?” என்று கேட்டவருக்கு.

“இல்லேம்மா வீட்டில் இடியாப்பம் கால் பாயா சாப்பிட்டு தான் வந்தேன்ம்மா .. அதனால டீ மட்டும் வெச்சி கொடு..” என்று சொல்லி சோர்ந்து போய் கூடத்தில் இருக்கும் ஷோப்பாவிலேயே அப்படியே படுத்து விட்டாள்..

அன்னை டீ கொண்டு வந்து கொடுக்கவும் குடித்து விட்டு தன் இரு சக்கர வாகனத்தின் சாவீயை எடுத்து கொண்டவள்.

“அம்மா நான் கிளம்புறேன் ம்மா.. இது எடுக்க தான் இங்கு வந்தேன்…” என்று சொல்லி கிளம்ப பார்த்த மகளை கெளசல்யா.

“என்னடி இப்போ தான் வந்த அதுக்குள்ள கிளம்புற. அம்மா உனக்கு பிடிச்ச மோர் குழம்பு வைக்கிறேன் சாப்பிட்டு போ டா..” என்று சொல்ல..

ஸ்வேதா. “ ம்மா உண்மையில் காலையில் சாப்பிட்டதே ரொம்ப எவியா தான் இருக்கும்மா. வேண்டாம். அதோடு பேங்க போற வேலை இருக்கு.. நாளைக்கு ஆபிசுக்கு போயிட்டு இங்கு வரேன் ம்மா..” என்றதும்.

“ம் சரி டா பார்த்து போயிட்டு வா .” என்று சொன்னவர்.. பின் அவருக்கு அவரே சொல்வது போல்.. மாப்பிள்ளை ஊருக்கு போறாரு என்று செய்து இருப்பாங்க போல என்ற பேச்சு ஸ்வேதா காதில் விழ.. ஸ்வேதாவுக்கு அப்போது தான் ஒன்று உணர்ந்தாள்.. அது வெளி நாட்டில் இருந்து வந்த மகனுக்கு என்று அந்த வீட்டில் எந்த வித தனி உணவும் சமைத்து போடவில்லை என்பது..

இதை எல்லாம் நினைத்து கொண்டே தான் முதலில் அவள் எப்போதும் பெரிய நகை கடையில் மாதம் கட்டும் பத்தாயிரத்தை கட்டி விட்டு. பின் கணவன் கணக்கு வைத்து இருக்கும் வங்கிக்கு சென்றது.

கணவன் வங்கி கணக்கில் தன் பெயரும் இணைத்து இருந்ததினால், அங்கு இருந்த ஊழியரிடம்… இவள் வங்கி புத்தகத்தை கொடுத்ததும் வருடக்கணக்கி பிரிண்ட் செய்யாது இருப்பதை பார்த்து…

“என்னம்மா இத்தனை வருஷத்திற்க்கு உண்டான வரவு செலவை ஏத்தி கொடுக்க சொல்றிங்க.” என்று முனு முனுத்து கொண்டே தான் அக்கவுண்ட் எண்ணை அழுத்தி பார்த்தது.. அதில் கணக்கில் அடங்கா.. அதுவும் வெளி நாட்டில் இருந்து பணம் வரும் வரவையும் டெப்பாசிட் எண்ணிக்கை தொகையை பார்த்து விட்டு மிக பவ்வியமாக.

“மேனஜர் ரூமில் உட்காருங்க மேடம்.. இன்னும் பத்து நிமிஷம் ஆகும்..” என்று சொன்னதற்க்கு ஸ்வேதா வேண்டாம் என்று மறுத்தும்..மேனஜர் அறையில் அமரவைக்கப்பட்டாள்.

அவளுக்கு அங்கு டீ கொடுத்து பின் அந்த மேனஜர் இதில் போடுங்க அதில் போடுங்க என்று பேசியது எதுவும் காதில் வாங்காது அவள் வந்த வேலை முடிந்ததும்… அந்த ஸ்டேட்மெண்டை கையில் வாங்கியவளின் பார்வை முழுவதும் மாதம் மாதம் மாமனார் வங்கி கணக்கில் கணவனின் கணக்கில் இருந்து எவ்வளவு போகிறது என்பதை தான் பார்த்தாள்..

காரணம் இரண்டு நாட்கள் முன் தான்… மாமனாருக்கு இரண்டு லட்சம் பணத்தை அக்னி ட்ரான்சர் செய்து இருந்தான். இவளின் பெயரை இணைக்கும் போது இவளின் கை பேசி எண்ணையும் கொடுத்து இருந்ததினால் இவளுக்கும் மெசஜ் வந்தது…

கணவன் சொன்னது வீட்டு செலவுக்கு என்றதில் அவள் மனது மாதம் மாதமா என்று நினைத்தவள் பின் இருக்காது… ஒரு மாதத்திற்க்கு எங்காவது இரண்டு லட்சம் ஆகுமா…? அதுவும் இரண்டு பேருக்கு என்று எண்ணிக் கொண்டவளின் அந்த எண்ணம் பொய் என்பது போல் தான் அந்த ஸ்டேட்மெண்ட் சொன்னது..

ஆம் மாதம் மாதம் இரண்டு லட்சம் பணம் கணவன் வங்கி கணக்கில் இருந்து மாமனார் கணக்குக்கு சென்று கொண்டு இருக்கிறது என்பதை காட்டா.

ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி போய் விட்டது.. அத்தனை கஷ்டப்பட்டு முன்னேறியவர்களுக்கு கண்டிப்பாக இப்படி இஷ்டப்படி செலவு செய்ய எப்படி மனது வரும்…? என்ற கோபத்தில் நேராக தன் மாமியார் வீட்டிற்க்கு போய் கத்தி விட தான் முதலில் தோன்றியது.

பின் கொஞ்சம் யோசித்தாள்.. ஒவ்வொன்றாக யோசித்தாள்… தன் கணவன் வெளிநாட்டில் ஒருவன் சம்பாதிக்க இங்கு இவர்கள் ஆடம்பரமாக செலவு செய்யவும், அவர்கள் செட்டில் ஆகவும் தான்.. வந்த வரை லாபம் என்று இருந்தவர்கள்… கணவன் வெளிநாட்டு வேலையை விட்டு இங்கு வருகிறேன் என்று சொன்னதும் குடும்பமே பதறி போய் விட்டது போல..

இவர்களை கத்தி சண்டை போட்டு எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது.. தான் பணம் கணக்கு பார்த்து சண்டை போட்டால், தன் கணவன் முன் தன்னை பணத்தாசை பிடித்தவள் என்பது போல் தான் இவர்கள் காட்டி விடுவார்கள்..

அப்படி அவன் தன்னை நினைக்க மாட்டான் தான். ஆனால் தன் கணவன் தன்னை ஒரு நிமிடம் கூட அப்படி இருக்குமோ என்று யோசித்தால் கூட, தன்னால் தாங்க முடியாது என்ற எண்ணத்தில் தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டவளின் மனதில் அடுத்து என்ன செய்வது என்ற திட்டம் உண்டானது…

அது பெரியவர்கள் ஒரு பழமொழி சொல்வார்கள்… எரியுறதை பிடிங்கி விட்டால் கொதிக்கிறது தன்னால் அடங்கி விடும் என்று.

தன் கையில் இருந்த கணவனின் டெப்பாசிட் என்று அனைத்தையும் ஒரு பார்வை பார்த்தாள்.. இவ்வளவு என்று கணவன் அவளிடன் சொன்னான் தான்.. அது தான் இருக்கிறது…

முதலில் கணவனின் கனவு.. தங்களின் எதிர்காலம் என்று மட்டுமே அந்த தொகை பார்த்தவள்.. இப்போது இந்த தொகை கணவனின் உழைப்பு.. இதை அந்த சுயநல கூட்டத்தில் இருந்து எப்படி காப்பாற்றுவது.. அதே போல் இனியுமே மாதம் மாதம் இரண்டு லட்சம் போகாது என்ன செய்வது என்று யோசித்தவள் பின் ஒரு முடிவு எடுத்தவளாக.

முதலில் தங்களின் வர வேற்புக்கு வந்தவர் சொன்ன அந்த சூப்பர்மார்க்கெட்டை பற்றி விசாரிக்க தன் அலுவலகத்திற்க்கு சென்றாள்..

இவள் செல்லும் சமயம் மதியம் சாப்பிடும் நேரம் என்பதினால், அவளை பார்த்ததும். “ என்னம்மா கல்யாண பொண்ணு …” என்று கேலி கிண்டல் என்று செய்தவர்களுக்கு இவளுமே சிரித்த முகமாக பதில் அளித்து விட்டு பின் தான் பேச வேண்டிய நபரிடம் சென்றாள்..

அவரிடம்.. “ சார் அன்னைக்கு அந்த சூப்பர்மார்க்கெட் பத்தி சொன்னிங்கலே.. அதை பத்தி கேட்க தான் வந்தேன் சார்…” என்று ஸ்வேதா சொன்னதும்..

“நல்ல நேரத்தில் தான் வந்து இருக்கேம்மா. இப்போ அந்த கடையின் ஓனரே கடையில் இருக்கிறார்.. வா போய் ஒரு நடை பார்த்து விடலாம்.” என்று அழைக்க. இவளும் அவருடன் கிளம்பிவிட்டாள்..

கடையும் ஒரு சுத்து முழுவதுமாக பார்த்தாள்… முன்பு பொருள் வாங்க இங்கு வந்து இருக்கிறாள்.. அப்போது அவளின் கவனம் வாங்கு பொருட்கள்.. அதனின் விலை.. எக்ஸ்பிரி டேட்.. இதில் தான் இருக்கும்..

இப்போது அந்த கடையில் அளவு கட்டடாம்.. பாதுகாப்பு… என்று அனைத்தும் பார்த்தாள்ல் இங்கு வரும் முன் சூப்பர்மார்க்கெட் வாங்கும் முன் என்ன என்ன பார்க்க வேண்டும்.. என்று ஏஐயிடம் கேட்டு தெரிந்து.. பார்த்தவளுக்கு ஏக திருப்தி..

அதே போல் முதலாளி அறையில் சென்றவள்… எலெக்ரிஷன்… கழிவுகள் போகும் வசதி… தண்ணீர்… என்று அனைத்தும் கேட்டு தெரிந்து கொண்டாள்..

அவருமே சூப்பார்மார்க்கெட் மட்டும் போதுமா..இல்லை பின் பக்கம் குடவுன் இருக்கு அதுவும் வேண்டுமா….? என்று கேட்டவரிடன்..

“நான் அதை பார்க்கவில்லையே” என்று சொன்னவளிடம்.அந்த முதலாளி..

“அந்த கொடவுனுக்கு வழி பின் தெருவுமா.. கடை உள்ளே பின் பக்கம் ஒரு பெரிய கதவு இருக்குலேம்மா.. அது வழியா கூட அந்த குடவுனுக்கு போகலாம்..

சரக்கு ஏத்தி இறக்க பின் தெருவை தான் பயன்படுத்துவோம்…” என்று விளக்கமாக சொல்ல.

அதையும் பார்த்து விடலாம் என்று பார்த்தவளுக்கு கண்டிப்பா இத்தனை பெரிய சூப்பார்மார்க்கெட்டுக்கு குடவும் கண்டிப்பாக தேவை தான்.. இதை நாம வாங்கவில்லை என்றால் தனிப்பட்டு வேறு யாருக்காவது கூட விற்று விடுவார்.. காரணம் வழி தான் தனித்து பின் தெரு இருக்கே… பின் நமக்கு தேவைப்படும் போது குடவுன் கிடைக்கவில்லை என்றால்..

கடை பக்கத்திலேயே குடவுன் இருப்பது தான் வசதி.. என்று தன் மனதில் ஒரு கணக்கை போட்டுக் கொண்டே பார்த்து முடித்தவள்..

பின் மீண்டும் முதலாளி அறைக்கு வந்து அவரிடம்… “ குடவுனும் நாங்கலே வாங்கிக்கிறோம்.. அதே போல நீங்க சொன்ன தொகையை யே கொடுக்க முடியாது சார்.. நீங்களும் கொஞ்சம் இறங்கி வாங்க.. முதல்ல டாக்குமெண்ட்ஸ் பார்த்துக்கலாம்.. அது எல்லாம் சரியா இருந்தா.. அதுக்குள்ள என் கணவரும் வந்துடுவாரு.. அப்புறம் மத்ததை பேசிக்கலாம் சார்…” என்று சொல்லி அனைத்திலும் திருப்தி வர. குறிப்பிட்ட ஒரு தொகையை கொடுத்து விட்டு டாக்குமெண்ட்டையும் வாங்கி கொண்டவள்..

அதில் தனக்கு தோன்றும் சிறிய சந்தேகங்களான . டாக்குமெண்ட் பற்றிய விசயங்களான முப்பது வருடத்திற்க்கு உண்டான தாய் பத்திரம் இருக்கா..? இது மூதையார் சொத்தா…? என்று ஒரு சில சந்தேகங்கள் கேட்டு கொண்டு ஜெராக்ஸ்ஸை பெற்றுக் கொண்ட பின்.. அழைத்து வந்தவருடன் வெளி வந்த ஸ்வேதாவிடன்..

உடன் வந்தவர்.. “பரவாயில்லைம்மா சின்ன பெண்ணா இருந்தாலும் இத்தனை விசயம் தெரிந்து வைத்து இருக்க” என்ற பாராட்டுக்கு சிரித்தாள் அவ்வளவே..

ஆனால் மனதில். தன் தாய் வீட்டிற்க்கு போகும் போதும்.. வங்கியில் காத்திருக்கும் சமயத்திலும் தான் இணைய வழி மூலம் இத்தனையும் தெரிந்து கொண்டது.

எந்த ஒரு விசயமும்.. நமக்கு தேவைப்படாத போது.. அந்த விசயத்தை நாம் கவனிப்பது கூட இல்லை.. ஆனால் தேவைப்படும் போது.. அதுவும் கணவனின் வீட்டவர்களிடம் இருந்து பணத்தை காப்பாற்றுகிறேன் என்று இப்படி ஏமாந்து போய் விட கூடாது இல்லையா.

இதோ கூட வந்த வரை வழி அனுப்பி விட்டு கைய்யோடு தன் அத்தை வீட்டவர்க்ஸ்ள் சொத்து வாங்கினால் பார்க்கும் லாயரிடம் கொடுத்து விட்டு..பின்

ஒரு டிடெக்ட்டிவையும் அணுகி அந்த சூப்பர்மார்க்கெட் பற்றியும்.. வாரிசுகள் ஏதாவது மறைக்கிறார்களா என்பதை பற்றி விசாரிக்க சொல்லியும்.. அதன் பின் தன் உடன் படித்த தோழி ஒருவள் சமீபத்தில் தான் வீடு கட்டி முடித்து இருந்தாள்… வீடு நல்ல முறையில் கட்டி கொடுத்து இருப்பதாக அவள் சொல்லி இருந்ததும் நியாயபகத்தில் வர.

அங்கு இருந்து நேராக அங்கு தான் சென்றது… அவளிடம் கட்டி கொடுத்தவரின் கை பேசி என்ணை வாங்கி கொண்டு அவரையும் பக்கத்தில் இருந்த ஒரு காபி ஷாப்புக்கு அழைத்து மாடியில் ஒரு அறை போடுவதை பற்றி பேசிய பின் தான் அவள் வீடு வந்தது..

அவள் வீடு வரும் போது மணி ஆறு கடந்து தான் ஸ்வேதா வீடு வந்தது..

வீட்டிற்க்குள் நுழையும் போதே கூடத்தில் ப்ரீத்தாவும் அவள் கணவனும் இருந்தனர். அவர்கள் முன் மாலை சிற்றூண்டி சாப்பிட்டு முடித்த தட்டும் டீ கப்புமே இருந்ததை பார்த்து கொண்டே தான் ஸ்வேதா தான் தங்கை இருந்த அறைக்கு சென்றது…










 
Well-known member
Joined
May 11, 2024
Messages
213
super 👌👌👌👌👌👌👌swetha move next 🤔🤔🤔🤔🤔🌺🌺🌺🌺🌺
 
Top