அத்தியாயம்…..2
பொய்யெனும் பெரும் வெளிச்சம்…
ஷ்யாமுக்கு முதலில் அக்னி என்ன சொல்கிறான் என்பதே புரியவில்லை.. பின்னுமே புரியவில்லை தான்… அவன் மனைவி சித்ரா தான்..
“ஏங்க உங்க பிரண்ட் உங்க தங்கையை பெண் கேட்கிறார்….” என்று எடுத்துக் கொடுக்கவும் .. அப்போது கூட ஷ்யாம் நம்பாது இது வரையும் கூட அக்னியையே பார்த்துக் கொண்டு இருந்தவன்.. அப்படியா என்பது போல் தலையாட்டி கேட்டான். கேட்டவனின் பார்வையில் அப்படி ஒரு அதிர்ச்சியும்.. ஆச்சரியமும் இரண்டும் கலந்து இருந்தது.
நண்பனின் பார்வையிலும், பாவனையிலும் அக்னி சட்டென்று சிரித்து விட்டான்.. கேட்கும் வரை தான் தயக்கம்.. அதாவது தொடக்க தயக்கம்..
இப்போது நண்பனை நேராக பார்த்தே… “ ஏன் எனக்கு உன் தங்கையை கொடுக்க மாட்டியா….?” என்று கேட்டவன்..
அவன் முன் இருந்த கை பேசியை எடுத்து அவனே ஷ்யாமின் விரல் எடுத்து ஷ்யாமின் கை பேசியை திறந்தவன்..
பின் அவனே அவன் அம்மா அனுப்பிய ஷ்யாமின் தங்கைக்கு பார்த்து இருந்த மாப்பிள்ளையின் புகைப்படமும் இன்ன விவரங்களையும் படித்து காட்டி…
“இவனை விட நான் எல்லாத்திலுமே பெட்டர் தானே… எனக்கு இந்த கேஸ்ட் அதுல எல்லாம் இன்ரெஸ்ட் இல்ல. ஆனா பெரியவங்க அது எல்லாம் பார்ப்பாங்க தான்.. அப்படி பார்த்தாலுமே நானுமே உங்க கேஸ்ட் தானே…. நான் பெண் கேட்டதுக்கு நீ ஏன் இப்படி ஷாக் ஆகி நிற்கிற….?” என்று கேட்டான்..
இப்போது ஷ்யாமுமே தன் அதிர்ச்சியில் இருந்து கொஞ்சம் வெளி வந்தாலுமே, முழுவதும் வெளி வரவில்லை..
இருந்துமே. “ இல்ல டா. இது வரை நீ என் தங்கையை பார்த்தது கிடையாது..பேசினதும் கிடையாது.. அது தான்.. அதோட நீ இப்படி கேட்பேன் என்று நான் எதிர் பார்க்கல... அது தான் ஷாக்காயிட்டேன்…” என்று சொன்னவனின் பேச்சையே கேட்டு கொண்டு இருந்தவனையே அக்னி பார்த்து கொண்டு இருந்தான்.. ஆனால் ஒன்றும் பேசவில்லை..
அக்னியின் இந்த பார்வையில் ஷ்யாம் தான்… “என்ன டா அப்படி பார்க்கிற…?” என்று திணறி கேட்டவனிடம் தன்னுடைய பார்வை மாற்றாது…
“இல்ல உன் தங்கைக்கு நான் தகுதி இல்லேன்னு நீ நினைக்கிறியா….?” என்று அக்னி கேட்ட நொடி அமர்ந்திருந்த ஷ்யாம் எழுந்து நின்று விட்டான்..
“என்னடா இப்படி சொல்ற….? நீ சொன்னது போல் இப்போ என் வீட்டவங்க பார்த்து இருக்கும் மாப்பிள்ளை உன்னை விட கம்மி என்ன கம்பேர் பண்ண கூட முடியாது…” என்று ஷ்யாம் சொல்லி கூட அக்னி தன் பார்வையை மாற்றது ஷ்யாமையே பார்த்து கொண்டு இருந்தான்…
பின் ஷ்யாம் என்ன நினைத்தானோ இப்போது அவனுமே அக்னியை நேர்க் கொண்டு பார்த்தவன்..
“உன் வீட்டில் இது பற்றி பேசி இருக்கியா… அவங்க ஒத்து கொண்டு விட்டாங்கலா...?” என்று கேட்க…
இப்போது அக்னிக்கு முன்பை விட கோபம் வந்து விட்டது…
“இன்னும் பேசல தான்… ஆனா சொன்னா உடனே ஒத்து கொள்ளுவாங்க. உன்னை போல் எல்லாம் இப்படி அதிர்ச்சியாக மாட்டாங்க.. வேண்டாம் என்று மறுக்க உன் தங்கைக்கு என்ன குறை…?” என்று ஆவேசமாக கேட்க…
ஷ்யாம் அக்னியை போல் ஆவேசம் எல்லாம் படவில்லை..
“முதல்ல உன் வீட்டில் பேசு.. அப்புறம் இதை பற்றி என் வீட்டில் பேசுறேன்…” என்று சொன்னவனுக்கு அக்னியிடம் பதில் இல்லை..
ஆனால் அவன் பார்வை பதில் சொன்னது அவன் கையில் இருந்த ஷ்யாமின் கை பேசி மீது அவன் வைத்து இருந்த பார்வையில்,
அதை வாங்கி கொண்ட ஷ்யாம்…. “ என் வீட்டுல இதை பத்தி யோசித்து சொல்றேன் என்று ஒன் வீக் தள்ளி வைக்கிறேன் போதுமா…” என்று சொல்ல.
அக்னி… “ இனி இந்த இடம் பற்றி யோசிக்க தேவையில்லை…” என்றவனின் பேச்சுக்கு ஷ்யாம் ஒரு பார்வை பார்த்தான் அவ்வளவே..
சித்ரா தான் தங்கள் அறைக்கு வந்ததும்… “ ஏங்க அக்னி ண்ணா உங்க தங்கையை மேரஜ் பண்ண கேட்டதும் நீங்க அப்படி சந்தோஷப்படுவீங்க என்று நினச்சேன்..
ஆனா நீங்க என்னன்னா… ….இப்படி பேசிட்டு வந்து இருக்கிங்க. உங்க தங்கையை அக்னி அண்ணாவுக்கு மேரஜ் செய்து வைக்க உங்களுக்கு விருப்பம் இல்லையா…? அண்ணா ரொம்ப நல்லவர் தானே…” என்று கேட்ட மனைவியிடம் ஷ்யாம்.
“ஏன் பிரண்ட் ரொம்ப ரொம்ப நல்லவன்… ஒரு பிரண்டா அவனின் இந்த நல்லவன் என்னை எந்த விதத்திலும் பாதிக்காது.. ஆனா என் தங்கையை கொடுக்கும் போது.. அந்த நல்லவன் என்னை இல்ல என் தங்கையை ரொம்ப பாதிக்க வைப்பான்..” என்று சொன்ன கணவனின் இந்த பேச்சு சித்ராவுக்கு சுத்தமாக புரியவில்லை…
காரணம் சித்ராவுக்கு அக்னி என்றவன் தன் கணவனின் நண்பனாக தனி நபராக மட்டும் தான் அவளுக்கு தெரியும்… அவனின் குடும்பம் விவரங்கள் முழுவதுமே அவளுக்கு தெரியாது..
அவளுக்கு மட்டுமா… படிப்பில் கோல்ட் மெடல்… வேலையில் அத்தனை திறமை.. அவனின் அந்த திறமை தானே ஷ்யாமுக்கு கிடைக்காத வேலை அக்னிக்கு கிடைத்தது..
ஆனால் பாசம் என்ற நூல் அவனின் கண்ணை மறைத்து விட்டதா என்று தெரியவில்லை… அதனால் தானோ தன் குடும்பத்தின் சுயநலம் இவனுக்கு தெரியாது போயிற்று..
நல்ல வேலை பாசம் என்ற நூல் மட்டுமே அவன் கண்ணை மூடி இருந்தது.. அதன் தொட்டு பணத்தை இந்தியாவில் இருக்கும் தன் குடும்பத்திற்க்கு எவ்வளவு கேட்டாலும் அனுப்பி விடுபவன்..
மீதத்தை தன் வங்கி கணக்கு அனுப்பி சேர்த்து வைப்பான்.. இந்தியாவில் அவனின் அப்பா அம்மா பார்த்து இருக்கு இடத்தை இவன் போய் இவன் பெயரில் தான் பத்திர பதிவு செய்து கொண்டான். அது வரை தப்பித்தான் என்று தான் சொல்ல வேண்டும்..
ஆனால் தன் பெயரில் சொத்து வாங்கி கொண்டது உண்மையில் தன் வீட்டவர்களை பற்றி தெரிந்து செய்யவில்லை.. டேக்ஸ் பிரச்சனை தொட்டு சிறிது லோன் எடுப்பான்.. இவன் லோன் எடுக்கும் தொட்டு சொத்தும் இவன் பெயரில் தானே வாங்கி ஆக வேண்டும்.. அதன் தொட்டு தான் வாங்கினானோ என்னவோ..
ஆனால் அக்னிக்கு தெரியாத அவன் வீட்டவர்களின் சுயநலம். ஷ்யாமுக்கு தெரிந்தது. ஆனால் சொல்லவில்லை… நண்பனிடமே சொல்லாத போது அவனுடைய பர்சனலை தன் மனைவியிடம் சொல்லுவானா என்ன…? அதனால் இது வரை சொன்னது கிடையாது…
ஆனால் இப்போது தன் தங்கையை இவனுக்கு திருமணம் செய்து வைக்கும் போது அது பிரச்சனை ஆகும் தானே.. அதனால் தான் தயங்குகிறான்..
இவன் நினைத்தது போல் தான் இந்தியாவில் அக்னி தன் வீட்டவர்களிடம் தன் காதலை சொல்லாது.. திருமணம் பற்றி பேசலாம் என்று நினைத்து அக்னி
அன்று தன் வீட்டவர்களிடம் பேசும் போது நல்ல வேலையாக அவனின் அம்மா மரகதமே அவனின் கல்யாணம் பேச்சை எடுத்தார்.…
அன்று மகன் அழைத்ததுமே மரகதம் “அக்னி நம்ம ப்ரீத்தாவோட ஒன்னு விட்ட நாத்தனாரை நீ பார்த்து இருக்க தானே….” என்று அவனின் தங்கையின் நாத்தனாரை பற்றி மரகதன் கேட்க…
அக்னிக்கு நியாபகம் இல்லாத போதும் யோசிக்க கூட தோனாது நம்ம விசயத்தை சொல்ல வந்தா இவங்க என்ன வேறு யாரோ பற்றி பேசுறாங்க என்று நினைத்து கொண்டவன்..
“இப்போ அவங்க பேச்சு எதுக்கும்மா….” என்று மகன் ஆரம்பித்தது தான்..
மரகதம்.. “ எதுக்கா சரியா கேட்ட போ… அந்த பொண்ணை உனக்கு கொடுக்கனும் என்று அவங்க ஒத்த கால்ல நிற்கிறாங்க டா… நூறு சவரன் போடுறாங்கலாம்.. நகை கூட பெரிய விசயம் இல்ல அக்னி.. இந்த பெண் வீட்டுக்கு ஒரே பெண் குரோம்பேட்டையிலேயே நாளு வீடு இருக்கு…
உன் பெயரில் இனி தனியா எந்த சொத்தும் வாங்க தேவை இருக்காது… அதுவே போதும்..” என்று மரகதம் அடுத்து என்ன சொல்லி இருந்து இருப்பாரோ..
ஆனால் அக்னி அடுத்து பேசவிடாது.. “ ம்மா அவங்க கிட்ட வேண்டாம் என்று சொல்லி விடுங்க…” என்றவனின் பேச்சு அத்தனை அழுத்தமாக வந்து விழுந்தது…
மகனின் இந்த அழுத்தமே மரகத்திற்க்கு மிக ஏமாற்றமாக தான் இருந்தது… அக்னி பாசக்காரன் தான்.. குடும்பத்தின் மீது பாசமும் பற்றும் அதிகம் தான்..
ஆனால் ஒரு சிலது தன் விருப்பம் என்று வந்தால் அவ்வளவு தான்.. அதிலேயே பிடியாக நிற்பான்.. அதற்க்கு சான்று இதோ அவனின் மேல் படிப்பான ms..
அத்தனை வசதி கிடையாது… இருக்க என்று சொந்த ஒரு வீடு மட்டுமே.. அதுவும் வழி வழியாக வந்த சொத்து..
அதன் தொட்டு வாடகை கொடுக்க தேவையில்லாது போனது.. மற்றப்படி குடும்பதலைவனான அக்னியின் தந்தை நீல கண்டன் சூப்பார்மார்க்கெட்டில் மேனஜராக இருந்தார்.. இருந்தார் என்றால் தற் சமயம் மகன் கை நிறைய சம்பாதிக்கவும் வீட்டில் முழு ஓய்வில் தான் தற்போது இருப்பது.
கணவனின் இந்த சம்பளம் மட்டும் மூன்று பிள்ளைகளுக்கு சாப்பாடு படிப்பு.. அதுவும் தரமான பள்ளியில் படிக்க வைக்க போதாது என்று மரகதமும் எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலைக்கு சென்றார்..
அதன் தொட்டு நல்ல பள்ளியில் அக்னிஷ்வரன்… அவனின் தங்கை ப்ரீத்தா தம்பி காமேஷ் மூன்று பிள்ளைகளையும் படிக்க வைக்க முடிந்தது… கூட மகளுக்கு கொஞ்சம் நகையும் வாங்கி வைத்து இருக்க.
அப்போது தான் அக்னி… பி,ஈ முடித்த பின் அமெரிக்காவுக்கு மேற்படிப்பு படிக்க போகிறேன்… பேங்க லோன் போட்டு இருக்கேன்.. இது கூட ஒரு ஐந்து லட்சம் தேவைப்படும் என்று சொல்ல..
பத்து வருடங்கள் முன். ஐந்து லட்சம் என்பது ஒரு பெரிய தொகை தான்.. அதுவும் அவர்களை போல் மத்தியதர வர்க்கத்தினருக்கு சொல்லவே தேவையில்லை…
எப்படி என்று யோசிக்க.. அக்னி தான் ப்ரீத்தாவுடைய நகையை அடகு வைத்து கொடும்மா… கண்டிப்பா அதை நான் மூட்டு கொடுப்பதோடு… அதை விட அதிகமா போட்டே அவளுக்கு நான் மேரஜ் பண்ணி வைப்பேன்..” என்று இதே குரலில் தான் அத்தனை அழுத்தமாக பேசினான். அதை செய்தானுமே…. அதில் எல்லாம் மரகதத்திற்க்கு ஒரு குறையும் கிடையாது..
மகன் இந்த எட்டு வருடமாக வெளி நாட்டு வேலை இவர்களின் குடும்ப நிலையை எங்கேயோ கொண்டு சென்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
இதோ அதன் தொட்டு தானே.. நீ எல்லாம் எனக்கு இணையா என்று பார்த்தவர்கள். வலிய வந்து பெண் கொடுக்க தயாரா இருக்காங்க.. ஆனால் இவன் என்ன.? இப்படி சொல்றான்… என்று நினைத்தவர்..
“என்ன அக்னி இப்படி சொல்ற.. உனக்கு வயசு முப்பது முடிஞ்சிடுச்சி ப்பா. இன்னுமே கல்யாணம் தள்ளி போடுவ.” என்று கேட்டவரிடம்.
அக்னி சுற்றி வளைக்காது… “ ம்மா நான் மேரஜ் தள்ளி போடல.. இந்த பெண் தான் வேண்டாம்.. என்று சொல்லும் போதே இங்கு மரகத்திற்க்கு மனது திக் என்று தான் ஆகிவிட்டது…
வெளிநாட்டு பெண்ணை கை காட்டுவானா என்று…. அப்படி காட்டி விட்டாலுமே இவர்களால் மறுக்க முடியாதே… இந்த குடும்பமே அக்னி நம்பி தான் இருக்கும் போது அது முடியுமா என்ன….?
என்ன குண்டை போட போகிறானோ என்று தான்.. “ என்ன அக்னி சொல்ற…?” என்று மரகதம் கேட்டவருக்கு பதிலாக அவரின் மகன்…
“நானே பெண்ணை பார்த்துட்டேன் ம்மா.. நீங்க போய் பெண் கேட்டால் போதும்….” என்று சொல்ல.
இங்கு மரகததிற்க்கு அடுத்து பேச்சு எழவில்லை…. தங்கள் என்ன நினைக்கிறோம் என்று கூட கேட்காது.. பெண் யார் என்று கூட சொல்லாது பெண் கேள் என்று மட்டும் சொன்ன மகனிடம் எதிர்த்து ஒரு வார்த்தை கூட அவரால் பேச முடியவில்லை..
இந்த பேச்சுக்கள் எல்லாம் ஸ்பீக்கரில் போட்டு தான் பேசிக் கொண்டு இருந்தது.. அதனால் அக்னியின் தந்தையுமே மனைவியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு கேட்டு கொண்டு தான் இருந்தார்.
அதன் தொட்டு இப்போது அக்னியின் தந்தை நீல கண்டன்…
“பொன்ணு யாருப்பா….?” என்று கேட்டார்.. காரணம் நீங்க போய் பெண் கேளுங்க என்பதிலேயே தந்தை புரிந்து கொண்டு விட்டார்.. பெண் இங்கு தான் இருக்கிறாள் என்பதை…. அதோடு அவருக்கு பெரியதாக ஆசை எல்லாம் கிடையாது…
அத்தனை உழைத்த மனிதருக்கு ஐம்பத்தி ஐந்து வயதிலேயே முழு ஓய்வு கொடுத்ததோடு தன்னால் முடியாத ஒரு வசதியான வாழ்வை குடும்பத்திற்க்கு ஏற்படுத்தி கொடுத்த மகனின் ஆசையை நிறை வேற்றி கொடுப்பதில் அவருக்கு எந்த வித பிரச்சனையும் இல்லை..
ஆனால் நீல கண்டன் போலவே அக்னியின் வீட்டில் இருக்கும் மற்றவர்கள் இருப்பார்களா…? குறிப்பாக அவனின் அன்னை மரகதம்.. அவனின் தங்கை ப்ரீத்தா…?