Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

poiyenum perum velicham....20

  • Thread Author
அத்தியாயம்….20

மனைவியையே பார்த்து கொண்டு இருந்த அக்னி… “ நீ என் கிட்ட பொய்யும் சொல்வீயா டா…?” என்று கேட்டு ஸ்வேதாவின் பயத்தை இன்னும் கூட்டும் வகையாக கேள்வியில் பாவம் பெண்ணவளுக்கு முதலில் புரியவே இல்லை.. எனும் போது என்ன என்று சொல்லுவாள்..

தன் கேள்வி மனைவிக்கு புரியவில்லை என்பது ஆணவனுக்கு அவள் முகபாவனையே காட்டி கொடுக்க…

இப்போது அக்னி நேரிடையாக… “ அப்போ நீ நையிட் புல்லா தூங்கவே இல்ல… அது தானே உண்மை…” அவளின் சிவந்த கண்களையும் அதிகம் சோர்ந்து போன முகத்தையும் பார்த்து கொண்டு கேட்டவனுக்கு..

இப்போது பெண்ணவள் ஆமாம் என்பது போல் தலையாட்டியவள்.. பின் ..

“ப்ளைட்டில் சாப்பிட்டிங்கலா சாப்பாடு எல்லாம் ஓகேவா என்பது போலான பேச்சு பேசிய பின்.. ஸ்வேதா தான் நேற்றை அந்த சூப்பர்மார்க்கெட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்து வந்ததை பற்றி சொல்லலாமா…? அந்த குடவுனையுமே சேர்த்து வாங்குவதை சொல்லவில்லையே.. ஏதாவது நினைத்துக் கொள்வானா.. கொஞ்சம் இடம் கொடுத்தால் ரொம்ப அட்வான்டேஜ் எடுத்து கொள்வதாக நினைத்து கொள்வானா…? என்று பல யோசனை மனதில் எழ பெண்ணவள் ஒன்றும் பேசாது பார்த்து கொண்டு இருந்தாள்..

அவளின் முகபாவனையில் அக்னி என்ன புரிந்து கொண்டானோ…. “ என் கிட்ட ஏதாவது சொல்லனுமா ..?” என்று கேட்டது தான் தாமதம்…

ஆம் இல்லை என்று சொல்லாது அவள் நேற்று எங்கு எங்கு போனாள்.. வங்கிக்கு போனதை தவிர்த்து அனைத்தையும் சொல்லி முடித்தாள்.. ஆனால் ஏன் தான் இத்தனை அவசரமாக செய்கிறேன் என்பதையும் சொல்லவில்லை…

அனைத்தையும் பொறுமையாக கேட்டு கொண்ட அக்னி… “ அதுக்கு எதுக்கு இத்தனை பதட்டம். இன்னும் கேட்டால் என் வேலையை நீ ரொம்ப ஈசி பண்ணி கொடுக்குற.” என்று சொன்னவன்.

பின்… “ நேத்தே ஏன் இத்தனையும் செய்த பாரு… உன் முகமே சோர்வா இருக்கு.” என்றவனின் அக்கரையில் பெண்ணவளின் மனம் குளிர்ந்து தான் போய் விட்டது..

விமான நிலையத்திற்க்கு ஷ்யாமும் வந்து விட..

“ உன் அண்ணன் வந்துட்டான் “ என்றதும் சிறுது நேரம் தன் அண்ணனிடமும் பேசிவிட்டு கை பேசியை வைத்தவளின் மனது இப்போது தான் நிம்மதி ஆனது..

மாமியார் வீட்டவர்கள் இவர்கள் என்ன செய்தாலும்.. என்ன நினைத்தாலும்.. என்ன பேசினாலும் தனக்கு பிரச்சனை இல்லை.. . காரணம் இது போல் சுயநலக்காரர்களிடம் நல்ல பெயர் வாங்கி அவளுக்கு ஒன்றும் ஆக போவது கிடையாது..

ஆனால் தன் கணவன் தன்னை பற்றி தவறாக சொன்னால் என்ன அதை அவன் கண் பார்வையில் பார்த்தாலுமே கண்டிப்பாக பெண்ணவளாள் தாங்கி கொள்ள முடியாது…

அதன் நிறைவில் தான்.. குளித்து முடித்து விட்டு இன்று திருமணத்திற்க்கு என்று எடுத்து இருந்து விடுமுறை முடிவடைந்ததால் அலுவகம் செல்வதாக இருந்தது … அதன் திட்டு அலுவலகம் செல்வது போல் கிளம்பி வெளியில் வந்த போது..

நேற்று போலவே அனைவரும் சாப்பிடும் மேஜையில் அமர்ந்திருந்தனர்… ப்ரீத்தாவும் கணவனுமே சாப்பிட்டுக் கொண்டு இருப்பதை பார்த்தவளுக்கு புரிந்து விட்டது… தினம் தினம் இங்கு தான் சாப்பாடு போல என்று..

அப்போது கனகா வந்து அங்கு இருந்த டீப்பாவின் மேல் இரு டிப்பான் பாக்ஸ் பேக் வைத்து விட்டு.

“ ப்ரீத்தாம்மா உங்களுக்கு மாப்பிள்ளை சாருக்கும் கட்டி வெச்சிட்டேன் ம்மா..” என்றதில் ஸ்வேதா உண்மையில் இன்னுமே அதிர்ந்து தான் போய் விட்டாள்..

அப்போ இவங்க வீட்டில் ஸ்டேவ்வே பத்த வைக்க மாட்டாங்கலா என்று நினைக்க .. ஸ்வேதா நினைத்தது தான் சரி என்பது போல் டிபனை சாப்பிட்டு முடித்த பின் கனகா போட்டு கொண்டு வந்த காபியை கணவன் மனைவி இருவரும் குடித்து விட்டு குழந்தையை மரகதத்திடம் கொடுத்து விட்டு செல்வதை அவளுமே சாப்பிட்டுக் கொண்டு தான் பார்த்து கொண்டு இருந்தாள்..

ஒன்றும் பேசவில்லை.. கணவன் இல்லாது இதை பற்றி தான் பேசினால் அது தப்பாக தான் முடியும் என்பது பெண்ணவளுக்கு தெரியும்..

ஆனால் ஒன்றை முடிவு செய்து விட்டாள்… இனி இது தொடர விட கூடாது என்பது மட்டும்… அதனால் அமைதியாக சாப்பிட்டு முடித்தவள்… சமையல் அறைக்கு சென்று தனக்கு என்று மதியத்திற்க்கு உணவை எடுத்து கொண்டவள் என்ன என்ன சமைத்து இருக்கிறது என்றும் ஒரு பார்வை பார்த்து கொண்டாள்.. அப்போது தான் ஒன்றை கவனித்தால். அது உணவின் எண்ணிக்கை மட்டும் கிடையாது.. அளவுமே அதிகமாக தான் சமைத்து இருந்தது..

ப்ரீத்தா சுந்தரம் கட்டிக் கொடுத்தாயிற்று தானுமே கட்டிக் கொண்ட பின்னுமே நான்கு பேருக்கு உண்டான அளவு போல் இல்லாது எட்டு ஒன்பது போருக்கு உண்டான அளவு போல் இருக்கவும் யோசனையுடன் ஸ்வேதா அப்படியே நின்று விட.

மேஜையில் இருந்தவற்றை எல்லாம் மீண்டுமே எடுத்து கொண்டு சமையல் அறைக்கு வந்த கனகா… ஸ்வேதா ஏதோ யோசனையுடன் நின்று கொண்டு இருப்பதை பார்த்து விட்டு..

“எதுன்னா வேணுமாம்மா . டீ காபி… நீங்க ஹாலுக்கு போங்கம்மா… நானே சூடா எடுத்துட்டு வரேன்.. நல்ல புடவை கட்டிட்டு ஆபிசுக்கு ரெடியாகிட்டு இங்கு நின்னா புடவையில் ஏதாவது கர பட்டுட போகுதும்மா..

அதோடு இனிமே ப்ரீத்தாம்மாவுக்கும்.. மாப்பிள்ளை சாருக்கும் கட்டி கொடுப்பது போல உங்களுக்கும் நானே கட்டிட்டு வெச்சிடுறேன் ம்மா… “ என்று பட பட என்று பேசியவளையே ஸ்வேதா அதே யோசனை முகபாவத்துடன் தான் பார்த்து கொண்டு இருந்தாள்..

அப்போது தான் அவளுக்கு இன்னொன்று நினைவுக்கு வந்தது.. அது வீட்டவர்கள் யாருமே சமையல் அறைக்கு வருவது கிடையாது. டீ கூட கனகா தான் எடுத்து கூடத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கிறாள்..

அப்போ இந்த வீட்டவங்கள் எது எது செய்யனும் என்று மட்டும் தான் சொல்வாங்கலா… என்ன செய்யிறாங்க. செய்யல என்று எட்டி கூட பார்க்க மாட்டாங்கலா என்ன.?

அப்போ காய் கரி யார் வாங்கி கொண்டு வருவது…? மளிகை.? நினைக்க நினைக்க பெண்ணவளுக்கு அத்தனை கோபம் ஆத்திரம் வந்தது…

வெளிநாட்டில் சம்பாத்திதால் வேலை செய்யாது பணம் வந்து விடுமா. உறவை பிரிந்து நட்பை பிரிந்து.. ஏன் உடல் நிலை சரியில்லை என்றாலுமே அவர்களே தான் துவைத்து…. சமைத்து … பாத்திரத்தை தேய்த்து என்று செய்ய வேண்டும்…

எத்தனை எத்தனை விட்டு இந்த பணத்தை சம்பாதிக்கிறார்கள் என்று யோசிக்க கூட மாட்டார்களா..

இதோ கணவனுக்கு தன்னை விட்டு செல்ல மனதே இல்லை.. ஆனாலும் எதற்க்கு சென்றான்.. இந்த ஒரு மாதம் சென்றால் கிடைக்கும் அந்த அதிகப்படியான பணத்திற்க்காக தானே…அனைத்தையும் நினைக்க நினைக்க பெண்ணவளுக்கு அத்தனை அத்திரமாக வந்தது..

அது கொடுத்த தாக்கத்தில் ஸ்வேதா கோபமாக தான் கனகாவிடம்.

“எத்தனை வருஷமா சமையல் செய்யிறிங்க…?” என்று கேட்டதில் கனகா.

தான் செய்த சமையல் பிடிக்கவில்லை என்று நினைத்து..

“ம்மா நான் இங்கேயே ஐந்து வருஷமா செய்யிறேன் ம்மா. இதுக்கு முன்ன கூட ஒரு ஐய்யர் வீட்டில் செய்தேன். அதுக்கு முன்னே..” என்று சொல்லிக் கொண்டு போகும் கனகாவை அடுத்து பேசவிடாது..

“இத்தனை வருஷம் செய்துமே இத்தனை பேருக்கு எவ்வளவு செய்யனும் என்ற அளவு உங்களுக்கு தெரியாதா…? “ என்று இதை கோபமாக தான் செய்து இருந்த உணவு பொருட்களின் பாத்திரத்தை மூடியை திறந்து காட்டி கேட்டவள்.. அதே கோபத்துடன் தான் வெளியில் வந்து யாரின் முகத்தையும் பார்க்க பிடிக்காது வண்டியை எடுத்து கொண்டு தன் அலுவலகம் சென்றது..

இங்கு கனகம் சமையல் அறையில் அப்படியே அச்சு அடித்தது போல் நின்று விட்டாள்.. இங்கு வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்கள் ஆகிறது…



முதலில் அளவாக தான் சமைத்தாள்.. நீல கண்டன் தான் பொருட்களை வாங்கி கொண்டு போடுவார்…

ஆனால் அத்தனை வகை சமைக்க வேண்டும்.. முதலில் சேரும் போது பன்னிரெண்டு ஆயிரம் சம்பளம் தான். காலையில் வந்து காலைக்கும் மதியத்திற்க்கும் சமைத்து வைத்து விட்டு செல்பவள்.. அதோடு இரவு ஒரு ஏழு மணிக்கு வந்து இரவு உணவை செய்து விட்டு செல்வாள்..

ப்ரீத்தா கருவுண்டாகிய உடனேயே இங்கேயே இருந்து விட… அப்போது மரகதம் தன் மதியம் ஒரு வாட்டி வந்து போ கனகா… ப்ரீத்தாவுக்கு சூப்பு ஜூஸ் வெச்சி கொடுத்துட்டு போவ…” என்று சொன்னவருக்கு உடனே சரி என்று சொல்லாது கனகம் முதலில் தயங்கினாள்.

பன்னிரெண்டாயிரம் கொடுத்து விட்டு எத்தனை வகை சமைக்க சொல்றாங்க.. இதுல மதியம் ஊடே வேறு வரனும் என்று சொல்றாங்க என்று அவள் யோசிக்கும் போதே….

மரகதம்.. “ சம்பளம் கூட்டி போட்டு பதினைந்து ஆயிரமா கொடுக்கிறேன் கனகம். அதோடு மதியம் நீ மீந்து போறத வீட்டிற்க்கு எடுத்துட்டு போ…” என்றதும் தான் கனகம் சம்மதித்தது..

அதன் படி மதியம் ஒரு மணிக்கு வந்து மரகதம் செய்ய சொல்வதை செய்து விட்டு அவர்கள் சாப்பிட்ட மிச்சம் அனைத்தையுமே கனகம் தன் வீட்டிற்க்கு எடுத்து செல்ல தொடங்கினார்.

அத்தனை வகைகளை தன் பிள்ளைகள் ரசித்து சாப்பிடுவதை பார்த்து அது பத்தாது பிள்ளைகள் என்னம்மா கொஞ்சமா இருக்கு…? என்று கேட்ட போது கனகா..

சமையல் செய்யும் போது தன் பிள்ளைகளுக்கும் சேர்த்து அதிகம் செய்ய தொடங்கினாள்.. அதன் பின் தனக்கு தன் கணவனுக்கு என்று தங்கள் குடும்பத்திற்க்கும் சேர்த்து செய்தாள்..

இது வரை என்ன இவ்வளவு செய்யிற என்று யாரும் கேட்டது கிடையாது.. காரணம் இந்த வீட்டவர்கள் யாரும் சமையல் அறைப்பக்கம் வந்து எட்டி கூட பார்க்க மாட்டார்கள்..

ஒரு வகையில் கனகம் அவர்கள் இந்த பக்கம் வராது பார்த்து கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.

பின் மெல்ல மெல்ல ப்ரீத்தாவுக்கு குழந்தை பிறந்த பின் குழந்தையை கணவன் மனைவி இருவரும் பார்த்து கொள்வதால் நீல கண்டனுக்கு வெளியில் சென்று பொருட்களை வாங்க முடியாது போக.

ஆன் லைனில் ஆர்டர் போட்டாலும். போன் செய்து வழி சொல்லுங்க.. என்று கேட்பது.. என்று ஒரு வித எரிச்சல் ஏற்பட..

பின் மரகதம் அதையும் கனகத்திடமே ஒப்படைத்து விட்டார்.. முதலில் மீன் மார்க்கெட் வழியா தானே வர.

“ப்ரீத்தா இது கேட்டா என்று மீன் இறால் என்று வாங்கி வர சொன்னவள் பின் இந்த குடும்பத்திற்க்கு தேவையான அனைத்து வாங்கும் பொறுப்பும் கனகத்திடம் ஒப்படைத்து விட்டனர்..

இப்போது கனகம் அதிலுமே கொஞ்சம் பணத்தை பார்க்க ஆரம்பித்து விட்டாள்… உண்மையை சொல்வது என்றால் கனகம் இப்போது எல்லாம் தன் வீட்டில் டீ காபி போட தான் ஸ்டவ்வையே பத்த வைக்கிறாள்..

தங்கள் குடும்பத்திற்க்கூ இங்கு இருந்து தான் சாப்பாடு எடுத்து கொண்டு செல்வது.. இங்கு வாங்கும் சம்பளம்.. இங்கு தவிர இன்னொரு வீட்டில் வேலை பார்க்கிறாள் அந்த சம்பளம் ஒரு கணிசமான தொகை கிடைப்பதினால்..

கவர்மெண்ட் பள்ளியில் படித்து கொண்டு இருந்த தன் இரு பிள்ளைகளையும் தனியார் பள்ளியில் சேர்த்து விட்டாள்.. கூடவே கணிசமாக ஒரு தொகையும் சேமிப்பில் இருக்க.

இப்போது ஸ்வேதா இப்படி கேட்டு விட்டு சென்றதில் கனகா பயந்து தான் போய் விட்டாள்..

பின்பு தான் கொஞ்சம் யோசித்தாள்.. ஸ்வேதாவை கல்யாணம் செய்யவே இந்த வீட்டவர்களுக்கு பிடிக்காதுலே… அது தான் சமையல் அறையில் கனகா வேலை பார்க்கும் போது கூடத்தில் அந்த வீட்டவர்கள் சத்தமாக தானே பேசுவார்கள். அதன் தொட்டு இது தெரிந்து இருக்க.

கனகா ஒரு யோசனை செய்தவளகா நேராக மரகதம் முன் போய் நின்றாள்…
 
Well-known member
Joined
May 11, 2024
Messages
215
சூப்பர் 👌👌👌👌👌👌👌ஸ்வேதா இனி என்ன செய்ய போகிறாள்🤔🤔🤔 ஆனால் அதற்கு மரகதம் கனகம் வத்தி வைக்க போகும் பேச்சை கேட்டு அடுத்து என்ன 🤔🤔🤔🤔🤔🤔🌺🌺🌺🌺
 
Top