அத்தியாயம்….22
மகனின் பேச்சிலேயே யோசனையுடன் இருந்த நீல கண்டன்.. மனைவி குழந்தையை தூக்கி கொண்டு மீண்டும் ஹாலுக்கு வந்தவர்…. கணவம் முகம் ஒரு மாதிரியாகி போனதை பார்த்து..
. “ என்னங்க சொன்னான்….?” என்று கேட்டதும் கோபமாக மனைவியை பார்த்தவர்… அப்போது தான் கவனித்தார் கனகாவுமே தன்னையே பார்த்து கொண்டு இருப்பதை..
மகன் சொன்ன கனகா முன் தான் இத்தனை பேச்சா என்பது நியாபகத்தில் வர… கனகாவை பார்த்தவர்..
“என்னம்மா வேலை முடிஞ்சிடுச்சா.. முடிஞ்சா கிளம்பும்மா …” என்றதில் கனகாவுக்கு ஒரு நிமிடம் பக் என்று ஆனது.. இது வரை வேலை முடிந்தால் கிளம்பு என்று யாரும் அந்த வீட்டில் அவளை சொன்னது கிடையாது…
இப்போது நீல கண்டன் இப்படி சொல்லவும்.. தன் வேலைக்கு பிரச்சனையோ என்று பயம் வர. ஆனால் அதற்க்குள் மரகதம்..
“என்னங்க அதுக்குள்ள கிளம்ப சொல்றிங்க.. உஷா ஜூஸ் குடிக்குற நேரம் ஆயிடுச்சி “ என்று கணவனிடம் சொன்னவர்.
கனகா பக்கம் திரும்பி.. “ உஷாவுக்கு மாதுள ஜூசும் அவருக்கும் எனக்கும் டீயும் வெச்சி கொண்டா..” என்று சொல்ல. கனகாவுக்கு அப்போது தான் நிம்மதியானது.. அப்பா நம்ம வேலைக்கு ஆபத்து இல்லை என்று..
ஆனால் அதற்க்குள் நீல கண்டன் தன் மனைவியிடம்.. “ நீ என்ன பிறந்ததில் இருந்தே சமையல்காரியோடு தான் பிறந்தியா.. இந்த வீட்டில் சமையல் அறை கூட உனக்கு தெரியாதா.. ஒரு ஜூசும் டீயும் உன்னால வைக்க முடியாதா…?” என்று ஒரு சத்தம் போட்டவர்..
கனகாவின் பக்கம் திரும்பி. “ நீ போம்மா..” என்று விட்டார்.. கனகா ஒரு மாதிரி திரும்பி திரும்பி பார்த்து கொண்டு தான் அங்கு இருந்து சென்றது..
கனகா சென்றதுமே.. மரகதம் தன் கணவனை பிடி பிடி என்று பிடித்து கொண்டார். “ ஒரு வேலையாள் முன்ன என்னை இப்படி பேசினா.. அவள் என்னை நாள பின்னே என்ன என்று மதிப்பா.?” என்ற மனைவியின் வார்த்தையானது..
மகன் சொன்ன. “ கனகா எதிரில் இப்படி பேசினா ஸ்வேதாவை எப்படி மதிப்பா…?” என்று கேட்டது நியாபகத்தில் வர.
மரகதத்தை கோபப்பார்வை பார்த்த நீல கண்டன்… ‘ இப்போ கொஞ்ச நேரம் முன்ன தான் நீ இந்த வீட்டு மருமகளை பத்தி கனகா கிட்ட அப்படி பேசிட்டு இருந்த.. அதோடு கனகா எப்படி அவ்வளவு தைரியமா இந்த வீட்டு மருமகளான ஸ்வேதாவை பத்தி கம்பளையிண்ட் செய்வது போல பேசுறா.. அந்த தைரியம் கனகாவுக்கு எப்படி வந்தது.. அவள் காது படவே நீ ஸ்வேதாவை பத்தி கீழா பேசவும் தானே….?” என்று கேட்டவர்..
பின் உஷாவை கை காட்டி… “ உஷாவை பத்தி கனகா இது போல் தப்பா உன் கிட்ட வந்து சொல்லி இருக்குமா.?” என்று கேட்டதும்..
இது வரை அனைத்தையும் பார்த்தும் கேட்டும் கொண்டு இருந்த உஷா.. நீல கண்டனின் இந்த கேள்வியில்.
உஷா பதறி போய். “ மாமா நான் என்ன மாமா செய்தேன்…” என்று கேட்டவளிடம்.
நீல கண்டன்.. “ நான் ஒரு உதாரணத்துக்கு தான் சொன்னேன் ம்மா.” என்று விட்டார்..
ஆனால் மரகதமோ சும்மா இல்லாது… “ இருக்க வீட்டு பெண்ணான உஷாவுக்கும் ஸ்வேதாவுக்கும் இணை சேர்ப்பிங்கலா..?” என்று கேட்டார்..
நீல கண்டனுக்குமே அய்யோ என்று ஆகி விட்டதில் . “ மரகதம் நான் ஒன்னு மட்டும் சொல்றேன்.. கூடிய சீக்கிரம் நம்ம குடும்பம் பிரிய போகுது அது மட்டும் நிச்சயம் .. அதுக்கு காரணம் நீயா மட்டும் தான் இருப்ப…” என்று சொன்னவர்..
பின் கடைசியாக… “ ஆனா இந்த வயசுக்கு மேல வெளியில் போய் உழைக்கும் தெம்பு எனக்கு இல்ல மரகதம்… “ என்று விட்டு அந்த கூடத்தில் ஒரு மூலையில் அமர்ந்து விட்டார்.
கணவன் இத்தனை சொல்லியுமே மரகதத்திற்க்கு உண்மையான நிலவரம் புரியவில்லை போல்..
அதன் தொட்டு.. “ நீங்க என்ன பேசுறிங்க .நம்மல விட்டு விடுவானா….? எப்படி விடுவான்…? நம்ம படிக்க வைக்காம தான்” என்று பேச தொடங்கிய மனைவியின் பேச்சில்..
இதுவே சொல்லிட்டு இருக்காதே மரகதம்.. நாம எல்லோரையும் தான் படிக்க வெச்சோம்.. ஏன் அகரனை அக்னி.. மேல் படிப்பு படிக்க இங்கு வான்னு கூப்பிடல… கூப்பிட்டான் தானே.. இன்னும் கேட்டா பெரியவன் பேங்க் லோன்ல இருந்து அவனே அலைந்து திரிஞ்சி எல்லாம் பார்த்தான்..
ஆனால் நாம என்ன செய்தோம் மரகதம். வீட்டில் இருக்கும் நகையை பேங்கில் வெச்சி பணமா கொடுத்தோம் அவ்வளவு தானே.. ஆனா அந்த நகைக்கு இரண்டு மடங்கா தானே அவன் கொடுத்தான்.. தோ இன்ன வரை அவன் உழைப்பில் தான் நாம சாப்பிட்டு இருக்கோம்.. அவன் சாப்பாட்டை சாப்பிட்டு அவன் பொண்டாட்டியையே இப்படி பேசினா அவன் சும்மா இருப்பான் என்று நீ நினைக்கிறியா.?” என்று கேட்டதுமே..
மரகதம் இன்னுமே தாட் பூட் என்று கத்த தொடங்கி விட்டார்… மனைவியின் ஆட்டத்தை பார்த்த நீல கண்டன். இது திருந்தாது பட்டா தான் புரியும் என்று நினைத்து கொண்டு அவர் தான் செருப்பு மாட்டிக் கொண்டு வெளியில் கிளம்பி விட்டார்.
மரகதமும் கத்தி விட்டு குழந்தைக்கு ஊட்ட சென்று விட.. பாவம் உஷா தான் இந்த வீட்டிற்க்கு வந்த தினத்தில் இருந்து சரியாக இந்த நேரத்திற்க்கு டான் என்று அவள் கையில் ஜூஸ் வந்து விடும்.. அது இல்லாது அமர்ந்திருந்தவளின் மனதில் திரும்பவும் வாழ்க்கையை பற்றிய பயம்.
அதோடு தன் மாமனார் சொன்ன அக்னி அகரனை கூட தான் படிக்க கூப்பிடான் என்ற வார்த்தையான தான் அவள் அடி மனதில் தங்கி விட்டது போய் படித்து இருக்கலாமே… படிச்சி அங்கு வேலை பார்த்து இருந்தால் இப்போ மத்தவங்க செய்வாங்கலா என்று எதிர் பார்த்துட்டு இருந்து இருக்க தேவையில்லையே.. என்று பல யோசனை அவளுக்கு..
அது கொடுத்த தாக்கமானது… கொஞ்சம் கொஞ்சமாக கோபமாக மாறி… அது கணவன் பக்கம் திரும்பி விட்டது..
இங்கு அக்னி தந்தையிடம் பேசியதில் தூக்கம் சுத்தமாக போய் விட்டது.. மனைவி இந்த நேரம் அலுவலகம் சென்று இருப்பாளா..? இல்லை என்றால் வண்டி ஓட்டிக் கொண்டு இருந்தா தான் அழைக்க வேண்டாம் என்று நினைத்து முதலில் மெசஜ் போட்டான்..
“ஆபிஸ் போய் சேர்ந்துட்டியா…?” என்று.
இவன் மெசஜ் போட்ட நொடி ப்ளூ டிக் ஆகி உடனே ஸ்வேதா கணவனை அழைத்து விட்டாள்..
எடுத்த உடனே… “ தூங்குறேன் தானே சொன்னிங்க. தூங்கம்மா என்ன செய்யிறிங்க…?” என்று கேட்டவளுக்கு பதில் அளிக்காது..
அக்னி… “ கனகா கிட்ட நீ என்ன கேட்ட டா…?” என்ற கணவனின் கேள்வியில் ஸ்வேதா அமைதியாகி விட்டாள். வெளியில் தான் அமைதி ஆனால் மனதில் வீட்டை விட்டு கிளம்பி அலுவலகம் வந்து ஒரு கால் மணி நேரம் தான் ஆகிறது. அதாவது அனைத்தும் சேர்ந்து ஒரு முக்கால் மணி நேரம் தான் ஆகிறது கனகாவிடம் கேட்டு.
அதற்க்குள் இந்த விசயம் அமெரிக்கா வரை சென்று இருக்கிறது.. தான் கேட்டது போல சென்று இருக்காது வேறு மாதிரியாக திரித்து தான் சென்று இருக்கும்.. அதே போல் கனகா தன் கணவனிடம் நேரிடையாக சென்று இருக்காது.. வீட்டவர்கள் தான் சொல்லி இருப்பார்கள் என்று பலவாறு யோசிக்க..
அக்னி தான். “ ஸ்வேதா.” என்று அழுத்தி அழைக்கவும் “ ம் சொல்லுங்க…” என்று சொன்னவளின் குரல் மாறி போய் இருந்தது.
“நான் உன்னை தப்பா எல்லாம் நினைக்கல டா…” என்றதும்..
ஸ்வேதா.. “ ஓ ஐய்யா தப்பா வேறு என்னை நினைப்பிங்கலா…?” என்று கேட்டு இருந்தாள்..
“ஏய்..” என்று சொன்னவன் சிரித்தவனின் சிரிப்பில் இத்தனை நேரன் இருந்த மன அழுத்தம் குறைந்தது..
“ என்ன டா சாப்பிட்டியா…?” என்று கேட்டவனுக்கு
“ ம் நான் சாப்பிட்டேன் நீங்க சாப்பிடிங்கலா…? என்று கேட்ட ஸ்வேதா பின்.. நேரிடையாக..
“யார் என்ன சொன்னாங்க…?” என்ற கேள்வியில் அக்னியுமே.
“நீ கனகா கிட்ட. ஏன் இத்தனை அயிட்டம் செய்த என்று கேட்டதா சொல்லி இருக்கா…?” என்று சொன்னதுமே.
ஸ்வேதா உடனே… “ அப்படி நான் கேட்டு இருந்தாலுமே தப்பு இல்ல.. ஆனா நன் அதை கேட்கல அளவு கேட்டேன்.. ஐந்து பேருக்கு பதிலா பத்து பேருக்கு போல சமச்சி இருந்தாங்க. அத தான் கேட்டேன்..” என்று ஸ்வேதா சொல்லவும்..
“ அவ்வளவா…” என்று கேட்டவன்..
பின்.. “ ஒரு வேல நையிட்டுக்கும் சேர்த்து செய்து இருப்பாங்க… என்று அக்னி சொல்ல.
அதற்க்கு ஸ்வேதா. “ அப்போ நையிட் வந்து செய்யிறது நாளைக்கு சாப்பிட செய்து வெச்சிட்டு போறாங்கலா என்ன.?” என்று இதை ஸ்வேதா இதை ஒரு விதமாக கிண்டலாக தான் கேட்டாள்…
அவளுக்கு கணவன் மீதும் கொஞ்சம் கோபம் தான்… குடும்பத்திற்க்கு என்று பணம் அனுப்ப வேண்டும் தான்.. அது தன் கடமையும் கூட. ஆனால் எவ்வளவு அனுப்புறோம்.. அது எந்த விதமாக செலவு ஆகுது என்று கூடவா ஒருவன் பத்து வருடமாக கவனிக்க மாட்டான்..
பத்து வருடமாக அனுபவித்தவர்கள்.. இப்போது அது இல்லாது போனால் . கண்டிப்பாக அதன் பழி தன் மீது தான் திரும்பும்..
அதற்க்கு என்று இப்படியே செலவு செய்வதை பார்த்து விட்டு சும்மாவும் இருக்க முடியாது … இந்த பணத்திற்க்காக இவள் பட்ட் கஷ்டம் தான் இவள் கண் முன் வந்து நிற்கிறது.. அதோடு தெரிந்தே ஏமாற அவள் தயாராக இல்லை.. அதன் எரிச்சலில் தான் கணவனிடம் இப்படி கிண்டலாக பேசியது…
மனைவியின் இந்த கிண்டலில் அக்னி… “ என் மீது ஏதாவது கோபமா டா.?” என்று கேட்டவனின் குரலானது பெண்ணவளின் மனதை என்னவோ செய்ய..
அதனால் மனதில் இருப்பதை எல்லாம் விடுத்து… “ ஒன்னும் இல்லேங்க..” என்ற மனைவியின் சோர்ந்த குரலில் அக்னிக்கு தான் என்னவோ போல் ஆனது..
“என்ன டா. ரொம்ப கஷ்டமா இருக்கா…?” என்று கேட்டதற்க்கு..
“இல்லேங்க.” என்று வாய் திறந்தாலுமே பெண்ணவளின் மனது சோர்ந்து தான் இருந்தது.
புதியதாக திருமணம் ஆன பெண்ணுக்கு உண்டான மனதில் இல்லாது கணவன் கூட இல்லாது ஒரு வித சோர்வு என்றால், அதை கூட உணர முடியாது இந்த குடும்ப அரசியல் அவளை இன்னுமே சோர்வு அடைய செய்தது என்பது தான் உண்மை..
மனைவி சொல்லவில்லை என்றாலுமே அக்னிக்கு புரிந்தது தான்.. மனைவியின் சோர்வு..
“ ஒரு மாசம் தான்டா.. அங்கே என்ன நடந்தாலும் கண்டுக்காதே நான் வந்து எல்லாம் பார்த்து கொள்கிறேன்.. எனக்கு இங்கே நிம்மதியா இருக்க முடியாதுடா… புரியுதா உனக்கு…” என்று சொன்னட்துமே.
ஸ்வேதாவுமே . கணவனிடம் சரி என்று தான் சொன்னாள்..
ஆனால் கணவன் மனைவி இருவருக்கும் தெரியாத ஒரு விசயம்…
இவன் வருவதற்க்குள் பிரச்சனை தன் கை மீறி போய் விடும் என்பது…
அதுவும் ஸ்வேதா கணவன் சொன்னது போல் தான் அமைதியாக போனாள்.. வீடு வந்தவளிடம் மரகதம்.
‘நீ என்ன சொன்ன கனகாவிடம்..?” கோபமாக கேட்ட போது கூட ஸ்வேதா நிதானமாகவே..
“ஏன் இவ்வளவு என்று நான் ஐட்டத்தை சொல்லலே அளவை தான் சொன்னேன்…” என்று சொல்ல
“ ஓ அப்படியா.. நீ சொன்னதை கனகா தான் தப்பா புரிந்து இருக்கா. போல..” என்று சொன்ன மரகதம்.
அப்போது கூட ஸ்வேதா சொன்ன அளவை பத்தி கவலை படவில்லை… கனகா உணவை அத்தனை ருசியாக சமைப்பாள்.. வெளியில் வேலையாள் அமைவது எவ்வளவு கஷ்டம் என்று தெரிந்து வைத்து இருந்த மரகதம் கனகாவை அழைத்து ஏன் என்று கூட கேட்காது விட்டார்..
கனகாவும் எப்போதும் போல் சமைத்து எடுத்து கொண்டு செல்ல. உஷாவுக்கு ஷவரசனை.. ப்ரீத்தா சுந்தரம் வந்து சாப்பிட்டு கட்டிக் கொண்டு செல்வது தொடர்ந்து.. அகரன் ஒரு காசை கூட கொடுக்காது குடும்பத்தை ஓட்டிக் கொண்டு சென்றான்..
அனைத்தும் பார்த்து கொண்டு இருந்த ஸ்வேதா ஒன்றும் சொல்லாது காலை எழுந்ததும் தன் வேலையை மட்டும் வீட்டில் பார்த்து கொண்டு சாப்பிட்டு மதியம் கட்டிக் கொண்டு அலுவலகம் செல்பவள்… மாலை அம்மா வீட்டிற்க்கு சென்று அவர்களுக்கு தேவையானதை வாங்கி கொடுத்து விட்டு அம்மாவுடன் ஒரு மணி நேரம் செலவிட்டு வீடு வர இரவு கூட ஆகிவிடும்..
இடை இடையே அந்த சூப்ப்பர்மார்க்கெட் மேல் அறை எழுப்புவது என்பது மட்டுமே செய்தாள்…
இப்படியே இருபது நாள் கடந்த போது தான் அலுவலக கேண்டில் காபி குடித்து கொண்டு இருந்த சமயம்ம்.
அந்த காபி மட்டும் அல்லாது மதியம் சாப்பிட்ட உணவுமே வாந்தி வந்து விட.. பக்கத்தில் அமர்ந்திருந்த கூட வேலை பார்க்கும் பெண்மணி.
வாழ்த்து சொல்ல முதலில் எதற்க்கு இந்த வாழ்த்து என்று தெரியாது குழம்ப ஸ்வேதாவின் முகத்தை பார்த்தே அந்த பெண்மணிக்கு தெரிந்து விட்டது..
அதனால்.. “ எப்போ கடைசியா டேட் ஆன./” என்று கேட்கவும் பெண்ணவளுக்கு புரிந்து விட. பெண்ணவள் மனதில் அத்தனை மகிழ்ச்சி..
அவளின் மலர்ந்த முகத்தை பார்த்த அந்த பெண்மணியும்… “ அது தான் போல.. முதல்ல இதை உன் ஹஸ்பண்ட் கிட்ட சொல்லு ஸ்வேதா..” என்று சொல்லி விட்டு இடையூறாக இல்லாது சென்று விட்டார்..
ஸ்வேதாவுமே முதலில் இதை தன் கணவனிடம் சொல்ல தான் நேரம் காலம் பார்க்காது கை பேசியை எடுத்தது.
ஆனால் குறைந்த பட்சம் மருந்தகத்தில் அந்த கிட வாங்கி உறுதி செய்து விட்டு அழைக்கலாம் என்று நினைத்து அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்து வரும் வழியில் அந்த கிட்டை வாங்கி கொண்டு வீடு வந்தவள் தன் செருப்பை கழட்ட கீழே குனியும் போது தான் கூடத்தில் அவளின் மாமியாரும் அவளின் கொழுந்தன் அகரனும் பேசிய பேச்சான மாமா பையன் என்ற வார்த்தை அவள் காதில் விழுந்தது.. யார் அது என்று யோசித்து கொண்டே செருப்பில் பக்கல்ஸ் கழட்டும் சமயம் தான் அகரன்.
அந்த ஷ்யாம் மாமா பையன் தன் தங்கையை காட்டி வேலையை வாங்கி கொண்டான் என்ற வார்த்தை காதில் விழ.
கழட்டிய செருப்பை கையில் வைத்து கொண்டு இருந்தவள் அதை எடுத்து கொண்டே கூடத்திற்க்கு விறு விறு என்று வந்தவள். தன் கையில் இருந்த செருப்பை கொண்டெ அகரனை அடித்தாள்..