அத்தியாயம்….23…3
ஷ்யாம் கதவை தட்ட தட்ட தங்கை திறவாது போக வெளியில் இருந்த தாய் மகன் இருவருக்கும் பதட்டம் கூடியது.. மகள் ஏதாவது தவறான முடிவு எடுத்து விடுவாளோ என்று நினைத்து…
அதன் தொட்டு கெளசல்யா மகனிடம்… “ ஷ்யாம் சீக்கிரம் கதவை உடைடா….” என்று சொன்னவரை பார்த்து அவரின் மருமகள்…
“ என்னது கதவை உடைக்கிறதா…? அத்த இது வாடகை வீடு…. உங்களுக்கு அது நியாபகத்தில் இருக்கா…? நம்ம இங்கு வாடகைக்கு வரும் போது ஆணி கூட அடிக்க கூடாது என்று சொல்லி தான் இந்த வீட்டு ஒனர் நமக்கு வாடகை விட்டார் என்று எங்க கல்யாண போட்டோ மாட்ட ஆணியை அடிச்சதுக்கு தான் உங்க புள்ள இது தேவையில்லாத ஆணி என்று புடுங்கி போட்டாரே அது உங்களுக்கு நியாபகத்தில் இல்லையா அத்த..?” என்று கேட்டவளை தாயும் மகனும் முறைத்து பார்த்தனர்..
ஷ்யாம் ஒரு படி மேல் சென்று… “ எப்போ உனக்கு ஜோக் அடிக்கிறது என்ற விவஸ்த்தை இல்லையா.?” என்று வேறு திட்டியவனிடம்.
தேவி கூலாக… “ இப்போ உங்க அம்மா கதவை உடை என்று மெல்ல சொன்னாங்கலே… நீங்க அதை சத்தமா ரூமில் இருக்க உங்க தங்கை காதுல விழுவது போல சொன்னாவே அவ கதனை திறந்து வந்துட போறா…” என்று சொன்னவளை இன்னும் முறைத்து விட்டு ஷ்யாம் செய்தது என்னவோ மனைவி சொன்னதை தான்.
அது தாங்க. “ ஸ்வேதா இப்போ கதவை திற்க்கலேன்னா கதவை உடைச்சிடுவேன்.” என்று சொல்ல… தேவி சொன்னது போலவே ஸ்வேதா சிறிது நேரம் கழித்து அழுது வீங்கிய முகத்துடன் ஷ்யாம் முன் வந்து நின்றாள்…
தேவிக்கு தான் தன் நாத்தனார் பற்றி நன்கு தெரியுமே… வீண் செலவு செய்ய கூடாது.. காசை பார்த்து பார்த்து தான் அவள் செலவு செய்வாள். அப்படி இருக்க தன்னால் கதவை உடைத்து அது சரி செய்ய காசை வீண் விரையம் செய்ய அவள் விட்டு விட மாட்டள் என்று தான் அப்படி சொன்னது. அவள் எதிர்பார்த்தது போல் ஸ்வேதா வந்து நிற்கவும் தன் கணவனை ஒரு முறை முறைத்தவள் பின் நாத்தனாரின் கை பிடித்து…
“இப்போ எதுக்கு நீ இத்தனை அழுகை அழுது சீன் போடுற….?” என்று கேட்டவளை மீண்டும் முறைத்த ஷ்யாம்..
“ஒழுங்கா பேசுறது என்றால் அவள் கிட்ட பேசு… இல்லேன்னா தள்ளு நான் என் தங்கை கிட்ட பேசிக்கிறேன்…” என்ற கணவனை தானும் முறைத்து..
“நான் ஒன்னும் தப்பா பேசல… சரியா தான் பேசினேன்… அவன் பேசினதுக்கு இவள் அடிச்சா.. அந்தம்மா பேசினதுக்கு துப்புன்னா… நல்ல பெண்ணுக்கு வர வேண்டிய நியாயமான கோபத்தை தான் அவள் அங்கு காட்டிட்டு வந்தா.. இவள் என்ற தொட்டு இதோட விட்டுட்டு வந்தா.. அங்கு நானா இருந்து இருந்தா என் புருஷனை பேசின வாயை கிழிச்சிட்டு வந்து நிற்பேன்…” என்றவள்..
பின் அவளே… “ ஒரு நாள் என் கிட்ட மாட்டாமயா போயிட போறாங்க….” என்று தன் கணவனை பேசிய பேச்சில் திட்டி தீர்த்து விட்டவளை ஷ்யாம் தான்..
“ அதை எல்லாம் அப்புறம் பார்த்துப்போம் தேவி.. இப்போ முதல்ல அவளை பாரு…” என்று ஸ்வேதாவை கண் காட்டினாள்..
இப்போது தேவி ஸ்வேதாவின் அருகில் அமர்ந்தவள் அவள் தோள் பற்றி…. “ இப்போ எதுக்கு இப்படி அழுவுற ஸ்வேதா… அவனை அடிச்சது தப்பு என்று நினைக்கிறியா….?” என்று கேட்ட கேள்விக்கு..
ஸ்வேதா இல்லை என்று மறுப்பாக தலையாட்டியவளிடம் தேவி மீண்டும்..
“அப்போ அந்த பொம்பளைய துப்பினது தப்புன்னு நினைக்கிறியா….?” என்று கேட்டதற்க்கு.
அதற்க்குமே ஸ்வேதா இல்லை என்று தான் ஆட்டியது..
தேவி மீண்டும்.. “ அண்ணா இதுனால உன்னை தப்பா நினைப்பாரு உன்னை விட்டு போயிடுவாரு என்று நினைக்கிறியா…?” என்று கேட்டதற்க்கு ஸ்வேதா தன் அண்ணியை நேர்க் கொண்டு பார்த்தவள்.
இப்போது வாய் திறந்தே. “ கண்டிப்பா என்னை விட்டு போக மாட்டார்..” என்று சொன்ன ஸ்வேதாவையே குடும்பத்தினர் வியந்து பார்த்தனர் என்றாள் தேவி மீண்டுமே..
“அப்போ எதுக்கு டி இப்படி அழுது வடிஞ்சிட்டு இருக்க….?” என்று கேட்ட அண்ணியிடம் இப்போது வார்த்தைகள் வராது மெளனம் காத்தாலுமே கண்களின் இருந்து மீண்டும் கப கப என்று கண்னீர் வந்து கொண்டு இருந்ததை பார்த்த தேவிக்கு இத்தனை நேரம் இருந்த விளையாட்டு பேச்சை கை விட்டவளாக.
“தோ பாரு….” என்று ஸ்வேதாவை தன்னை பார்க்க வைத்தவள்…
“வேறு ஏதாவது பிரச்சனையா டி..? சொல்.. உண்மையை சொல் என்று கேட்டவளிடம் தான் மறைத்து வைத்து இருந்த கர்பத்தை உறுதி செய்யும் அந்த கருவியை காட்ட..
ஒரு நிமிடம் தாங்கள் பார்த்தது சரி தானே என்று அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்… பின் அனைவரின் முகத்திலுமே ஒரு சிரிப்பு…. கெளசல்யா ஷ்யாம் இருவமே அவள் அமர்ந்திருந்த இருக்கையின் கீழ் அமர்ந்து கொண்டவர்கள்..
“ இது எவ்வளவு சந்தோஷப்பட கூடிய விசயம். இதுக்கு ஏன்ம்மா இப்படி அழுதுட்டு…” என்று அவர்கள் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே ஸ்வேதா இன்னுமே விக்கி விக்கி தான் அழுதாள்…
ஸ்வேதா அவ்வளவு சீக்கிரத்தில் அழ கூடிய பெண் கிடையாது.. தந்தை இல்லாது வளர்ந்ததினாலோ… அவள் சிறு வயதிலேயே அவளின் அண்ணனும் வெளி நாட்டிற்க்கு படிக்க சென்றதினாலோ… கடைக்கு வெளி வேலை என்று போய் தைரியமான பெண்ணாக தான் இருப்பாள்…
அப்படி பட்ட பெண் இப்படி அழவும்.. அனைவருமே பதறி… “ என்ன டா என்ன பிரச்சனை….?” என்று கேட்ட போது..
தன் கையில் இருந்த கருவியை காட்டி… “ இதை வைத்து ரொம்ப ரொம்ப எப்படி சொல்லனும்… என்று அத்தனை ப்ளான் பண்ணி வெச்சி இருந்தேன் ண்ணா… எனக்கு இது தான் இருக்கும் என்று தெரிந்து ஆபிசில் இருந்து வீடு வரும் வரைக்கும்.. அவர் கிட்ட எப்படி சொல்லனும்..” என்று அவள் சொல்லும் போதே முகம் கொஞ்சம் சிவந்த போதும்.. அது நடக்கவில்லையே என்ற வேதனை அதனையும் தான்டி அவள் முகத்தில் தெரிந்தது…
அதை கேட்ட அனைவருக்குமே வேதனையாக இருக்க. பின் அவள் அடுத்து ஷ்யாமை பார்த்து..
“ உங்க கிட்ட அண்ணா நீங்க மாமாவா ஆக போறிங்க என்று சொல்ல நினச்சேன் ண்ணா ஆனா அந்த மாமா வார்த்தையே என்னை வெறுக்கும் படி செய்து விட்டாங்கலேண்ணா “ என்று சொன்ன நொடி அங்கு இருந்த அனைவரும் துடி துடித்து தான் போய் விட்டனர்..
தாய் மாமன் பதவி எத்தனை உயர்ந்த ஒரு பதவி.. இந்தியாவில் அதுவும் குறிப்பாக கிராமங்களில் எல்லாம் தாய்க்கு பின் தாய் மாமன் என்று தான் அந்த உறவை கொண்டாடி தீர்த்து விடுவார்கள்..
பெரும் பாலான தாய் மாமன்கள் தான் தந்தை ஆகும் முன்பே தான் தாய் மாமன் ஆகி விடுகிறார்கள்… ஏன் என்றால் தங்கையே இருந்தாலும் வீட்டில் பெண் இருந்தால் அந்த பெண்ணுக்கு திருமணம் செய்த பின் தான் ஆண்களுக்கு செய்வார்கள்… அதன் தொட்டு குழந்தையாக கூட பிறந்த சகோதரி பிள்ளைகளை தான் தொட்டு தூக்கி கொஞ்சுவது..
ஆனால் இங்கு அந்த மாமா என்ற வார்த்தையையே அசிங்கம் படுத்துவது போலான இந்த நிலையில் தன்னை வைத்து விட்டார்களே என்று சொல்லி சொல்லி கதறி அழுதவளை ஒரு வழியாக தேற்றி முடித்தாலுமே ஸ்வேதா..
“ நான் எந்த தப்பும் செய்யல தான். ஆனால் அந்த உஷா அபார்ஷனுக்கு நானுமே ஒரு காரணம் ஆகி விட்டேனோ என்று ஒரு குற்றவுணர்ச்சியா இருக்கு.” என்று இங்கு சொல்லி அழுதுக் கொண்டு இருக்கும் அதே வேளயில்..
உனக்கு அந்த குற்றவுணர்ச்சியே தேவையில்லை என்பது போலான விசயங்கள் தான் அக்னி வீட்டில் நடந்து கொண்டு இருந்தது….
நீல கண்டனுக்கு எப்போதும் குடும்பம் என்று வந்து நிற்கும் அக்னி.. இன்று அகரனை வெளியில் வைத்து பேசு என்று சொன்னதில் கொஞ்சம் வருத்தம் தான்..
அதன் தொட்டு. “ என்ன அக்னி உன் கிட்ட நான் இதை எதிர் பார்க்கவில்லை….” என்று அனைவரும் சென்ற பின் கேட்டதும்..
அக்னியும்.. தன் தந்தையை தான் நேர்க் கொண்டு பார்த்து… “ நானுமே உங்க கிட்ட இருந்து இது போல எதிர்பார்க்கலப்பா..” என்று விட்டான்..
மகனின் இந்த பேச்சில் தந்தை கொஞ்சம் அதிர்ந்து தான் போனார்.. பின்..
“ வீட்டு பொம்பளைங்க விவாகரத்தில் நாம தலையிட்டா குடும்ப அமைதி கெட்டு போயிடும் ப்பா….” என்ற தந்தையின் பேச்சில்.. அக்னி சிரித்து விட்டான்..
பின் நிதானமாக… “ உங்களுக்கு இரண்டு ஆம்பிள்ளை பிள்ளைங்க ஒரு பெண் பிள்ளை என்று தானே நான் நினைத்து இருந்தேன்…” என்ற அக்னியின் பேச்சு நீல கண்டனுக்கு புரியவே கொஞ்ச நேரம் தேவைப்பட்டது..
புரிந்த பின்… “ அக்னி நீ என்ன பேச்சு பேசுற… அவன் உன் தம்பி அவனை நீ பொட்ட என்பது போல் பேசுவீயா…. என்ன டா நினச்சிட்டு இருக்க….” என்று தன் வயதை மீறி கத்திக் கொண்டு இருந்தவரை அமைதியாக பார்த்த அக்னி..
ஒரே ஒரு வார்த்தை தான் கேட்டான். “ ஸ்வேதா என் மனைவி… அவளை பார்த்து தான் உங்க சின்ன பையன் அப்படி பேசி இருக்கான். ஏன் உங்க மனைவியுமே ஆமாம் என்பது போல் தான் பேசி இருக்காங்க… இதோ இப்போ இத்தனை ஆவேசமா பேசுற நீங்க அப்போ ஏன் அமைதியா இருந்திங்க. எனக்கு புரியல…” என்ற மகனின் பேச்சில் பதில் சொல்ல முடியாத தந்தை தடுமாறி போனாலும் அதை மறைக்க.
அடுத்த வார்த்தையாக… “ தப்பு தான் அக்னி.. ஆனா உன் பொண்டாட்டி சும்மா இல்ல அடிச்சா ஒரு ஆம்பிள்ளையே செருப்பால அடிச்சா.. அதனால இப்போ சின்ன மருமகளுக்கு அபார்ஷன் ஆகிடுச்சி.” என்றவரின் பேச்சு வார்த்தைகளில் இருந்த வேறு பாட்டையே தான் அக்னி உள்வாங்கி கொண்டு இருந்தான்..
ஸ்வேதா தன் பொண்டாட்டி என்றும்.. உஷா சின்ன மருமகள் என்பதையுமே உணர்ந்தான்.. ஆனால் கேட்கவில்லை .. கேட்டால் இதற்க்கும் ஒரு காரணம் கண்டிப்பாக சொல்வார்.
அந்த பெண்ணுக்கு அபார்ஷன் ஆனது வருந்த கூடிய விசயம் தான்.. ஆனால் தன் மனைவி இது பழி விழுவது போலான இந்த பேச்சை எப்படி தடிப்பது.. தன் மனைவி மீது தவறு இல்லை… கணவனை அடித்தது அவளுக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும்.. ஆனால் தன் அண்ணனை பற்றி இது போலான பழி சொல் அதுவும் அசிங்கமா பேசினால் தன்மானம் உள்ள எந்த பெண் தான் சும்மா இருப்பாள்..
ஆனால் இவர்கள் அதை எல்லாம் விடுத்து தன் மனைவி மீது தான் பழி போட பார்ப்பார்கள் என்று இவன் நினைத்து கொண்டு இருக்கும் போதே அந்த வீட்டிலன் மேல் வேலைகள் செய்யும் பணிப்பெண் சுந்தரம்பாள் இவர்கள் அருகில் தயங்கி தயங்கி வந்து நின்றால்..
அவளை பார்த்ததும் நீல கண்டன். “ என்னம்மா நீ இன்னுமா போகலை…? “ என்று.. ஒரு மாதிரியான குரலில் கேட்டார்.
மேல் வேலைகளை எப்போதோ சுந்தரம்பாள் முடித்து விட்டாள்.. வெளியில் போகும் சமயம் தான் அந்த குண்டர்கள் வந்து வெளியில் சத்தம் போட்டது..
கதபை சாத்திய நீல கண்டன் தான். “ இப்போ போகாதே… அவங்க போன பிறகு போ …” என்று சொன்னது.
அவங்க போய் எவ்வளோ நேரம் ஆகிடுச்சி.. போகாது… வீட்டு விசயத்தை ஒட்டு கேட்டுட்டு இருந்தாளா என்ற கோபத்தில் தான் சுள் என்று கேட்டது… அதுவும் மகன் தன்னை அப்படி பேசியதை கேட்டு இருக்காளே…. என்று வேறு கோபம் அவருக்கு..
ஆனால் சுந்தரம்பாள் அப்போது கூட போகாது அக்னியை காட்டி…
“தம்பி கிட்ட ஒன்னு சொல்லனும்…” என்ற சொல்லவும்.
நீல கண்டன். “ என்ன சொல்லனும்… எது சொல்றது என்றாலும் அப்புறம் சொல் போ…” என்று விரட்ட.
ஆனால் சுந்தரம்பாள் போகாது அக்னியை பார்த்து.
“தம்பி அந்த உஷா பொண்ணுக்கு உங்க மனைவியால எல்லாம் கருகலையில தம்பி.. ஸ்வேதா அம்மா ஆபிசுல இருக்கும் போதே உஷாவுக்கு தீட்டு வந்துடுச்சி தம்பி .” என்று சொன்னதும் நீல கண்டன்
“என்ன உலற …?” என்று ஒரு அதட்டல் போட்டார்..
ஆனால் அக்னியோ முதலில் சுந்தரம்பாள் தன்னிடம் பேச வேண்டும் என்றதுமே.. இந்த நேரத்தில் என்ன இது என்று ஒரு வித மெத்தனமாக தான் கேட்டு கொண்டு இருந்தான்..
ஆனால் சுந்தரம் சொன்ன விசயத்தில் …. “ என்ன சொல்றிங்க ம்மா…?” என்று கேட்ட மகனிடம் நீல கண்டன்..
“ அது ஏதோ உலருது அக்னி….” என்று சொன்னவர் பின் சுந்தரம்பாளை பார்த்து.
“ என்ன கண்டதை பேசுற. உனக்கு என்ன தெரியும் என்று இப்படி பேசுற… இரண்டு நாள் முன்ன உஷாவுக்கு அபார்ஷன் ஆகும் போது நீ வீட்டிலேயே இல்ல… என்ன குடும்பத்துக்குள்ள குழப்பத்தை பண்ண பார்க்கிறியா….?” என்று கோபமாக பேசியவரிடம்..
“நான் குழப்பத்தை பண்ண பார்க்கலையே… இந்த வீட்டு உப்பை பத்து வருஷமா நான் சாப்பிடுறேன்.. இந்த வீடு கஷ்டப்பட்ட காலத்தில் இருந்து நான் இங்கு இருக்கேன்.. அப்போ எல்லாம் குழப்பம் பண்ண பார்க்காம இப்போ ஏன் அய்யா பண்ண போறேன்..
நான் சாப்பிடுற சோத்துல இந்த தம்பியோட காசு இருக்குப்பா… அந்த தம்பி இதோ இப்படி வாடி போய் இருக்குறத என்னால பார்க்க முடியல.. அதுவும் எனக்கு தெரிஞ்ச ஒரு விசயத்தை சொல்லாம போக முடியல …” என்று சொன்ன சுந்தரம்பாளை நீல கண்டம் மீண்டும் ஏதோ பேச முயலும் முன் அக்னி.
அவரை தடுத்தவன்.. “ நீங்க சொல்லுங்கம்மா.. ஆனா பொய் சொல்ல கூடாது…” என்றவனிடம்..
சுந்தரம்பாள் “ கண்டிப்பா இல்லேப்பா… அன்னைக்கு அதான் இரண்டு நாள் முன்ன நான் எப்போதும் போல பத்து மணிக்கு வந்தேன் .. சாம துலக்கிட்டு வீடு பெருக்கிட்டு இருக்கும் போது உஷாம்மா ரூமுக்கும் போகும் போது.. ஏதோ கவுச்சி வாட போல வீசுச்சி நான் கூட உஷாம்மா கிட்ட என்னம்மா ஏதோ நாத்தம்மா இருக்கு என்று கேட்டதுக்கு உஷாம்மா என் மீது கோபமா பேசிச்சிம்மா..
சரின்னு நமக்கு என்னன்னு நான் பெருக்கிட்டு இருக்கும் போது பெட்சீட்டில் ஏதோ சிவப்பா கரை இருந்துச்சி… நான் கூட ஏதோன்னு நினச்சிட்டு விட்டு பெருக்கிட்டு போயிட்டேன் தம்பி..
ஆனா பின் பக்கம் வாஷிங்கமிஷினில் இருக்கும் துணியை எடுத்து உலர்த்தும் போது ஏற்கனவே அங்கு ஒரு பெட்சீட் காஞ்சி இருந்தது தம்பி… அதுலேயும் கொஞ்சம் ரத்தம் திட்டு… அப்புறம் தான் தோனுச்சி… அந்த ரத்தம் திட்டு தீட்டு கரைன்னு.. அந்த கவுச்சி வாடை கூட அது தான்னு புரிஞ்சது தம்பி…உண்டாலி இருக்கும் உஷாம்மா பெட்சீட்டில் தீட்டுன்னா
நான் பதறி போய் உஷாம்மா ரூமுக்கு போனா.. அவங்க யாரோ அவங்க பிரண்ட் கிட்ட பேசினது என் காதுல விழுந்துச்சிம்மா… அபார்ஷன் ஆகி எத்தனை மணி நேரம் வரை ரத்தப்போக்கு போகும்.. எத்தனை மணி நேரம் வரை தாக்கு பிடுக்கும் போல பேசிட்டு இருந்தாங்க தம்பி… அப்போ தான் எனக்கு புரிஞ்சது. உஷாம்மாவுக்கு தெரியாம எல்லாம் இல்ல.. என்னவோ மறைக்க பார்க்குறாங்க என்று நான் அப்படியே மத்த வேலைய பார்க்க போயிட்டேன் தம்பி…” என்றவரின் பேச்சை அக்னி அதிர்ந்து போய் கேட்டு கொண்டு இருந்தான் என்றால் நீல கண்டன்..
“என்ன உலற…? ” என்று கேட்டார்…
…