Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Poiyenum Perum Velicham....24....2

  • Thread Author
அத்தியாயம்….24….2

நடந்த அந்த பிரச்சனைகள் தொடங்கிய வேகத்தில் முடிந்தாலுமே விட்ட வார்த்தைகள் விட்டது தானே… அகரனுக்கு தான் இதில் பெரும் சிக்கல…குழந்தை போய் மானம் போய்… அனைத்திலுமே தான் ஒன்றுக்கும் உதவாதது போலான நிலையில் தான் இருப்பதாக அவன் எண்ணம்..

அது கொடுத்த தாக்கமானது சோர்ந்து போய் அழுதுக் கொண்டு இருந்த மனைவியின் தலை முடியை பிடித்து எழுப்பி நின்றவனின் செயலில் அனைவருக்கும் முன்பு அக்னி தான் அகரனை தடுத்து நிறுத்தியது..

“என்ன செய்யிற விடு…” என்று கத்தி முடியை விட வைத்தவனிடம்..

“நான் இன்னைக்கு இப்படி இருக்க காரணமே இவள் தான் அண்ணா….” நீண்ட நாட்கள் கழித்து அவன் வாயில் இருந்து தன்னை அண்ணா என்ற அழைப்பு குளிர்விக்கவில்லை..மாறாக நீ இத்தனை சுயநலகாரனா என்று தான் நினைக்க வைத்தது..

தெரியும் தம்பி கொஞ்சம் தனக்கு என்று தான் பார்ப்பான் என்று.. ஆனால் இந்த அளவில் அவனே எதிர்பார்க்காத ஒன்று…

அதை சொல்லவும் செய்தான். “ நீ மாறவே மாட்டியா டா. எந்த பிரச்சனை ஆனாலும் அதை அடுத்தவன் தலையில் போட்டுட்டு நி தப்பிக்க பார்ப்பியா….?” என்றவனிடம்..

“அப்போ இவள் தப்பு செய்யலையா….?” என்று கேட்டவனிடம்..

“அப்போ நீ தப்பு செய்யலையா. நீ ஒரு தப்பும் செய்யலையா.. “ என்று அவனையே ஊடுறுவி பார்த்து கேட்ட கேள்விக்கு அகரனால் பதில் சொல்ல முடியவில்லை… காரணம் அந்த கேள்வியை விட அக்னியின் அந்த பார்வையில் அனைத்து கேள்வியும் நிறைந்து இருந்தது..

பார்வையால் கேட்டது வார்த்தையினாலுமே கேட்டான். “ அக்கா நிச்சயம் அன்னைக்கு நீ கல்யாணம் செய்துட்டு வீட்டுக்கு வந்து நின்னா அவள் வாழ்க்கை என்ன ஆகும் என்று நீ யோசிச்சியா.. அதுவும் எப்படியான நிலையில் கல்யாணம் செய்துட்டு வந்த.. அப்படி என்ன டா அவசரம் உனக்கு..” என்று அகரனிடம் பேசிக் கொண்டு இருக்கும் போதே ப்ரீத்தா இடையில்.

“அவனுக்கு அவன் தான் முக்கியம் அண்ணா…” என்று சொன்னவளை திரும்பி பார்த்த அக்னி..

“உனக்கு…?” என்று கேட்டான்..

ப்ரீத்தாவோ… “ நான் என்ன செய்தேன்… அண்ணா…” என்று கேட்டவளிடம்..

“அது தான் சொல்றேன்.. நீ இந்த வீட்டிற்க்காக ஒன்னுமே செய்யல… ஒன்னுமே செய்யல… புரியுதா…. அதுவும் தம்பியின் கல்யாணத்தை வெச்சி அதிகமா நகை பணம் கேட்கிற இடமே முடிக்கனும் என்று நின்னு கல்யாணம் செய்துக்கிட்ட…” என்றவனின் பேச்சில்..

சுந்தரம்.. “ என்ன மச்சான் இப்படி சொல்றிங்க… நானா கேட்டேன் அம்மா தான் கேட்டாங்க.. எனக்கும் ப்ரீத்தாவே பிடிச்சி இருந்தது.. அவளுக்குமே என்னை பிடிச்சு இருந்தது.. அது தான் நான் அவள் கிட்ட பேசினேன்… உங்க அண்ணன் வெளி நாட்டில் நல்லா சம்பாத்திக்கிறான் தானே…. போடலாம் என்று.. ஆனா பாருங்க தங்கைக்கு போட்டது இப்படி சொல்லி காண்பிக்கிறிங்க…” என்று அக்னியையே தப்பு என்பது போல் பேசியவனின் முன் நின்ற.

அக்னி… “ உன்னை எல்லாம் நான் என்னைக்குமே மதிச்சது கிடையாது புரியுதா…” என்றவனின் பேச்சில் மரகதம்.

“அக்னி என்ன இது பேச்சு… அவர் உன் தங்கையின் புருஷன் இந்த வீட்டு மாப்பிள்ளை .. இப்படி பேச கூடாது அது உன் தங்கச்சி வாழ்வை தான் பாதிக்கம்… “ என்ற அன்னையையே ஒரு வித வெறுப்போடு பார்த்தான்.

அவனின் அந்த பார்வையில் மரகதம்.. திக்கி திணறி… “ என்ன அக்னி அப்படி பார்க்கிற….?” என்று கேட்ட அன்னையிடம்..

“ என் பொண்டாட்டி கிட்ட அப்படி பேசும் போது என் வாழ்க்கை பாதிக்கும் என்று நீங்க யோசிக்கலையேம்மா…?” என்று கேட்டவனிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாது முழித்து இருந்தவரிடம்..

அக்னி…மீண்டும்.. “ ஆனா பாருங்க நான் இந்த வீட்டு மாப்பிள்ளையை பத்தி பேசுனது எல்லாம் நடந்ததை தான் நான் பேசினேன்.. ஆனா நீங்க ஸ்வேதாவை பற்றி பேசினது.” என்று நிறுத்தியவனிடம்..

மரகதம். “ இந்த உஷா பண்ண விசயம் தப்பா போகலாம் அக்னி.. ஆனா அந்த ஷ்யாம் உன் காசை தானே அங்கு தின்னான். உன் வேலையை அவனுக்கு நீ விட்டு கொடுத்த தானே.” என்று சொன்ன தாயை இனி திருத்த முடியாது என்று நினைத்தவன்..

ஒரே பழ மொழியில் தான் அக்னி முடித்து கொள்ள பார்த்தான்.. அதாவது… “ தான் திருடன் பிறரை நம்பான் என்று சொல்வாங்க. உங்க போல ஷ்யாமையும் நீங்க நினச்சிட்டுங்க….” என்ற வார்த்தையில்..

ஆனால் ப்ரீத்தா “ நீ என்ன இப்படி பேசுற… அவங்க உன் அம்மா அப்பா.. உன் காசில் சாப்பிட்டதும் யாரோ ஒருத்தன் சாப்பிட்டதும் ஒன்னு என்று சொல்றியா அண்ணா.” என்றவளையே ஒரு மாதிரி பார்த்த அக்னி..

“ அப்பா அம்மாவுக்கு சாப்பாடு போடுறதுல எல்லாம் நான் கணக்கு பார்க்க மாட்டேன்.. அதோடு இது நான் சொல்லியே ஆகனும்.. ஷ்யாம் இப்போ இல்ல எப்போவும் என் காசில் சாப்பிட. இன்னும் கேட்டால் அவன் காசையாவது என் கிட்ட விட்டு இருக்கானே தவிர.. என் பணத்தில் அவன் இல்லை.. அதோடு வேலை… இது என்ன கூலி வேலையா.. அவனை நான் பார்த்த இடத்தில் சேர்த்து விட….

வேலை கிடைக்க அதற்க்கு உண்டான படிப்பு இருக்கனும்… எக்ஸ்பிரியன்ஸ் இருக்கனும்.. நேர்முக தேர்வில் வெற்றி பெறனும்.. அதுவும் முதல் கட்டம் இரண்டாம் கட்டம் என்று எத்தனையோ இருக்கு..

‘அது என்னவோ என் அப்பா கம்பெனி போலவும்.. அதுல நான் ஷ்யாமை சேர்த்து விட்டது போலவும். அதுவும் அவன் எனக்கு எந்த வேலை பார்த்து…”

இந்த வார்த்தையை சொல்லும் போது அக்னி அகரனை மிக கேவலமான ஒரு பார்வை பார்த்தான்.

இது எல்லாம் தெரியும்.. எல்லோருக்கும் தெரியும்… ஆனா பாரு ஸ்வேதாவை அசிங்கப்படுத்தனும்.. அது தான் உங்க குறி அது தானே..

என்ன வார்த்தை அது… இந்த வார்த்தை ஷ்யாமை மட்டும் கேவலம் படுத்தல .. என் பொண்டாட்டி இந்த வீட்டின் மூத்த மருமக அவள்.. அவளை மட்டுமா கூட என்னையும் தான் நீங்க கேவலப்படுத்தி இருக்கிங்க.. முப்பத்தி இரண்டு வருஷமா ஒழுக்கமா இருந்து மூன்று வருடமா நேரில் பார்க்காது பேசாது முறைப்படி கல்யாணம் செய்தவனை நீங்க கேவலப்படுத்தி இருக்கிங்க…” என்று இந்த வார்த்தைகள் சொல்லும் போது அவன் தொண்டை அடைத்து போய் விட்டது..

என்ன மாதிரியான வார்த்தை இது.. எப்படி படிப்பு வேலை குடும்பம் என்று இருந்தவனுக்கு இந்த பேரா.. தன்னாலேயெ இந்த வார்த்தையை தாங்க முடியவில்லையே.. தான்னாவது அவளை விரும்பினேன்..

ஆனால் அவளுக்கு இது பக்கா பெரியவர்கள் பார்த்து வைத்த திருமணம் தானே… இப்படியான பழி சொல் அவளை எப்படி பாதிக்கும் என்று நினைத்தவன்..

அனைத்தையும் சொல்லி விட்டான்.. நான் தான் விரும்பினேன் அவள் இல்லை என்று. ஆனால் அதை அவர்கள் நம்பவில்லை என்று அவர்களின் மெளனமே சொன்னது..

ஆனால் அக்னி அதை பற்றி கவலை படுவதாக இல்லை.. என்று நினைத்து ஏதோ பேச ஆரம்பிக்கும் போது அந்த இடத்திற்க்கு தன் அண்ணனோடு ஸ்வேதா அங்கு வந்து சேர்ந்தாள்..

சத்தியமாக அக்னி தன் மனைவியை அங்கு எதிர் பார்க்கவில்லை.. இங்கு வருவாள் என்று அவன் நினைக்கவும் இல்லை.. அவன் ஒரு முடிவோடு தான் இங்கு வந்தது..

ஆனால் அதற்க்கு முன் ஒரு சிலதை பேசி விட தான் இங்கு வந்தான்…. இப்படி அவளே வந்து நிற்கவும்…

இவன் நினைத்தது இப்போது வந்தார்கள் என்று…. ஆனால் ஸ்வேதா தன் வீட்டில் அண்ணா நீங்க மாமா ஆகிட்டிங்க என்று சந்தோஷமாக கூட சொல்ல முடியாத நிலை நினைத்து சொல்லி அழுதவளை தேத்த முடியாது போக..

சமாதானம் எல்லாம் வேலைக்கு ஆகாது என்று ஷ்யாம்..

“அவங்க சொன்னது என்னவோ சொன்னாங்க. இப்போ அழுது நீ உண்மை தான் என்று சொல்றியா..” என்ற அண்ணனின் கேள்வியில் ஸ்வேதா விக்கித்து போய் விட்டாள்..

கெளசல்யா தான்… “ என்ன டா பேசுற.. மாசமா இருக்கா…. அதை முழுசா சந்தோஷம் கூட பட முடியலையேன்னு இருந்தா.. நீ இப்படி பேசுற…” என்று சொன்னவரிடம்..

ஷ்யாம் பதில் சொல்லும் முன்பே… தேவி.. “ அவர் சரியா தான் அத்த பேசுறாங்க..” என்று சொன்னவள்.

கணவனிடம் கண் காட்ட… அதில் ஷ்யாம் தொடர்ந்து… “ மலைய பார்த்து நாய் குலைக்க தான் செய்யும் ஸ்வேதா. குலைக்கிற நாய எல்லாம் நாம குலைக்காத என்று சொல்ல முடியுமா சொல்.. அப்படி சொன்னா அது மலைக்கு தான் இழுக்கு.

நான் எப்படி என்று அவங்க தீர்மானம் செய்வாங்கலா… ஒருத்தவங்க தப்ப மூடி மறைக்கவோ… இல்ல அவங்க கைய்யாலாக தனத்தினாலோ… இப்படி மத்தவங்க மேல பழியை தூக்கி போடுவாங்க.. அப்படி சொல்ற வார்த்தைகள் எல்லாம் உண்மையா ஆகிடும்மா…” என்றவன்.

“எனக்கு மாமா என்ற பதவியை நீ கொடுத்து இருக்க ஸ்வேதா.. அதோட இப்போ நீ அம்மா ஆக போற.. அது எவ்வளவு பெரிய வரம் சொல்…

இந்த வரம் கிடைக்காது எத்தனை பேர் ஏங்கிட்டு இருக்காங்க.. உனக்கு அந்த ஆண்டன் நீ வேண்டாமலேயே அந்த வரத்தை கொடுத்து இருக்கிறார்..” என்றவன்.

“ இது நாம சந்தோஷமா இருக்கும் நேரம் டா… புரியுதா. நம்மை அழ வைக்கி நினைக்கிறவங்க எதிரில் நம்ம அவங்களுக்கு சந்தோஷத்தை தான் காட்டனும்.. வா காட்ட போகலாம்..” என்றவனின் பேச்சில் ஸ்வேதா மெல்ல மெல்ல யோசிக்க ஆரம்பித்தாள்..

ஆம் நான் ஏன் அழ வேண்டும்… அழுதாள் அவர்கள் சொன்ன உண்மை என்பது போல் தானே ஆக வேண்டும் என்று நினைத்தவளிடம்.

ஸ்வேதா… “ உன் புருஷனும் இந்தியாவுக்கு வந்து இருக்கான்…” என்றதும் இத்தனை நேரம் அழுது வடிந்து கொண்டு இருந்த முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி…

“அவர் எங்கேண்ணா அந்த வீட்டிற்க்கு போய் இருக்காரா..?” என்று கேட்டவள்..

பின் சிரித்துக் கொண்டே. “ ஸ்வீட் ஏதாவது வாங்கிட்டு வந்து இருக்கியா அண்ணா..?” என்று கேட்டவளை இப்போது ஷ்யாம் முறைத்து பார்த்தவன்.

“ம் ஸ்வீட் சாக்லேட். வாங்கிட்டு வர போல தான் வந்தோம் பாரு.” என்று சொன்னவனின் பாவனையில் சிரித்த ஸ்வேதா..

“அண்ணா வாங்க அங்கு போகலாம்.. போற வழியில் ஸ்வீட் வாங்கிட்டு போகலாம்.. சொல்லலாம் நீங்க மாமா என்று சொன்ன நேரம் உண்மையில் என் அண்ணன் மாமாவா ஆகிட்டாரு என்று…” சொல்லி இதோ இங்கு அழைத்து வந்து விட்டாள்…



…











..”
 
Active member
Joined
May 12, 2025
Messages
46
அருமை. அருமை. ஒரு வழியாக ப்ரீத்திக்கு தம்பி சுயநலவாதினு புரிஞ்சுடுச்சு போலவே? ஆனா அதை சொல்ல முன்னாடி கண்ணாடி பார்த்து சொல்லிக்கோம்மா. ஆனா என்ன சொன்னாலும் இதுங்க திருந்தாத கேசுங்க
 
Top