Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Poiyenum Perum Velicham - 24...3

  • Thread Author
அத்தியாயம்….24….3
ஸ்வேதா வீட்டை விட்டு கிளம்பும் சமயம்
அகரன் தன் அண்ணனை மாமா என்றது…
அது கெட்ட வார்த்த கிடையாது.. மிக மிக
நல்ல வார்த்தை தான்.. அது சொல்வார்கள்
வாயை பொருத்து தான் அதன் அர்த்தம்
அமையும் என்று சொல்லலாம்..
இவர்களுக்காக என் வாழ்க்கையின்
இனிமையை நான் கெடுப்பானேன்…. இதோ
அண்ணன் சொல்வது போல் வேண்டாது
குழந்தை வந்து இருக்கிறது.. கணவனுன்
வெளி நாட்டில் இருந்து வந்து இருக்கிறான்..
ஸ்வீட் எடு கொண்டாடு என்பது போல்
மகிழாது என்ன..? இது என்று ஒரு வித
வீராப்பாக தான் வீட்டை விட்டு கிளம்பியது…
இது போலான நிலையில் இரு சக்கர
வாகனம் வேண்டாம் என்று கார் புக் செய்து
தான் தன் மாமியார் வீட்டிற்க்கு வந்தாள்..

வரும் வழியில் வீட்டில் சொன்னது போல்
ஸ்வீட்டும் வாங்கி கொண்டவளுக்கு
அப்போது தான் நியாபகத்தில் வந்தது உஷா
கர்பம் கலைன்ட விசயம்.
என்ன தான் என் மீது தப்பு இல்லை என்பது
என் மனசாட்ச்சிக்கு தெரியும் என்றாலும்,
ஏதோ ஒரு வகையில் மறை முகமாவது
தான் காரணமாகி விட்டோமோ என்று
நினைத்த நொடி வீட்டை விட்டு கிளம்பும்
போது இருந்த அந்த மகிழ்ச்சி இல்லாது
போக..
ஷ்யாம் கூட என்ன என்று கேட்ட போது
விசயத்தை சொன்னாள்..
ஷ்யாம் மீண்டுமே உன் மீது தப்பு கிடையாது
நீ இது போல் எல்லாம் யோசிக்காதே.
குழந்தைக்கு நல்லது இல்லை.. என்று என்ன
தான் அண்ணன் சொன்னதற்க்கு
தலையாட்டிக் கொண்டாலும் மனது ஏதோ
போல் தான் இருந்தது..

வீடு வந்தவர்கள் வெளி கேட்டும் திறந்து
இருப்பதை பார்த்து யோசனையுடன் தான்
ஸ்வேதா வீட்டிற்க்குள் நுழைய வாசல்
படியில் தன் காலை எடுத்து வைக்கும்
சமயம் தான்.
உஷா தனக்கு அபார்ஷன் ஆனது சொல்ல
ஆரம்பித்து இருந்தாள்.. அவள் சொல்வதை
கேட்க கேட்க வெளியில் நின்று கொண்டு
இருந்த அண்ணன் தங்கை இருவருக்குமே…
இப்படியும் ஒரு பெண் இருப்பாளா என்று
தான் நினைக்க தோன்றியது..
வரும் ஆத்திரத்திற்க்கு அனைவரையும்
அடித்து விட தான் ஸ்வேதா கை துரு
துருத்தது..
ஆனால் அதை அவள் செய்யவில்லை…
நல்லவர்களுக்கு நல்லது செய்யலாம் இது
போலானவர்களுக்கு என்ன செய்யலாம்
என்று யோசித்துக் கொண்டே தான்
வீட்டிற்க்குள் வந்தது..

விசயம் தெரியாத அக்னியோ … தன்
மனைவியையும் ஷ்யாமையும் பார்த்து
புரியாது தான் விழித்தான்.. சண்டை போட
வந்து இருக்கிறார்களா என்று அவன்
நினைத்ததிற்க்கு மாறாக அவர்கள் இருவரின்
முகமும் தெளிந்து இருப்பதை பார்த்தவனுக்கு
குழம்பியும் போனது…
இவள் கோபமாக தானே இங்கு வந்து இருக்க
வேண்டும்.. நியாயத்திற்க்கு தன் சட்டையை
பிடித்து சண்டை கூட போடலாம்.
“என்னை அமைதியா இரு என்று
சொன்னியே… இவங்களை அமைதியா இருக்க
சொன்னியா. என்னை அப்படி வைத்துக்
கொள்வேன்.. இப்படி வைத்து கொள்வேன்…
என்று சொல்லி விட்டு என்ன
இது..இப்படியான பேச்சை கேட்க எனக்கு
என்ன தலை எழுத்தா. என்று கேட்டாலும்
தப்பு கிடையாது தான்.

ஆனால் அவனின் மனைவி இதை எல்லாம்
செய்யாது நேராக அகரன் முன் தான் போய்
நின்றது..
அக்னி ஸ்வேதா மீண்டும் அடிக்க தான்
இங்கு வந்து இருக்கிறாள் என்று தான்
நினைத்துக் கொண்டாள்.. அப்படி அடித்தாலும்
தப்பு இல்லை… என்பதினால் அமைதியாக
நின்றுக் கொண்டான்.
ஆனால் ஸ்வேதா செய்ததே அவன்
நினைத்ததிற்க்கு முற்றிலுமாக மாறிய ஒரு
செயலை..
அவன் முன் தான் வாங்கி வந்த இனிப்பை
நீட்டியவள்..
“ எடுத்துக்கோ கொழுந்தனாரே…. உங்க வாய்
அது என்ன வாய் என்று எனக்கு தெரியல..
அது சாக்காடை தான்….அது உன்
பேச்சுலேயே எனக்கு புரிஞ்சி போச்சு…. ஆனா
பாரு… நீ என்ன அர்த்தத்தில் என் அண்ணனை
மாமா என்று சொன்ன என்று தெரியல…

ஆனா நான் அதை நல்ல அர்த்தமாவே
எடுத்துக்குறேன்.. “ என்று சொன்ன
ஸ்வேதாவையே புரியாது பார்த்து கொண்டு
இருந்தான்… ஸ்வேதாவோ…“என்ன இன்னும்
புரியலையா…என்று கேட்டவள்..
பின்… “ உண்மையில் நல்லவங்களுக்கு
நல்லது தான் நடக்கும் என்பது போல என்
அண்ணன் மாமாவா ஆகிட்டார்.” என்று
சொன்னவளின் பேச்சு அகரனுக்கு
புரியவில்லை..
ஆனால் குழப்பமாக மனைவியையே பார்த்து
கொண்டு இருந்த அக்னிக்கு உடனே புரிந்து
விட்டது..
அக்னி மனைவி இந்த வீட்டிற்க்குள்
நுழைந்ததில் இருந்து அவனின் பார்வை
முழுவதுமே தன் மனைவி பக்கமே தான்
இருந்தது..

கொஞ்சம் சோர்ந்து போய் தெரிகிறாளோ…
என்று தான் பார்த்த உடன் அக்னி நினைத்து
கொண்டது…
தன் வீட்டில் நடந்த பிரச்சனையினாலோ…
இந்த சோர்வு… என்ன சொல்லி அவளை நான்
திருமணம் செய்து கொண்டேன். ஆனால்
நான் அவளை எந்த மாதிரியாக வைத்து
கொண்டு இருக்கிறேன்..
ஒன்று அமெரிக்காவில் அனைத்து
வேலைகளையும் செய்து கொடுத்த பின்
அவளை திருமணம் நான் செய்து இருந்து
இருக்க வேண்டும்..இல்லை என்றால்
திருமணம் முடிந்த பின் அமெரிக்கா
செல்லாது இங்கேயே இருந்து இருக்க
வேண்டும்..
இப்படி நான் அவசரப்பட்டு இருந்து இருக்க
கூடாது.. இன்று காயம் பட்டு நிற்பது தன்
மனைவி தானே… என்று இத்தனையும்
மனதில் நினைத்து கொண்டு அவளையே

விழி அகலாது பார்த்து கொண்டு இருந்த
போது தான் அவன்ன் முற்றிலும் எதிர்
பாராது அகரன் முன் நின்றது பேசியது..
அவள் என் அண்ணன் மாமா என்று சொன்ன
போதே அக்னிக்கு சட்டென்று புரிந்து விட்ட
உடன் அவனின் பார்வை ஷ்யாமிடம் தான்
சென்றது..
அங்கு தெரிந்த அந்த மலர்ச்சியான முகத்தை
பார்த்தவன் உடனே அவனை இழுத்து
அணைத்து கொண்டான்…
“ டேய் டேய் நல்லவனே… இப்போ கட்டி
பிடிக்க வேண்டியது என்னைய இல்ல. என்
தங்கையை… அதோடு இப்போ அவள் உன்
ஒய்ப்… அவளை நானே அண்ணன் காரனே
கட்டிபிடிக்க சொல்றான்னு இப்போ என்னை
யார் என்ன சொல்றாங்க என்று பார்க்கலாம்…”
என்றும் சொல்ல.
அங்கு இருந்த யாராலும் ஒன்றும் பேச
முடியவில்லை. இங்கு தன் முன் நின்று

இனிப்பை நீட்டு கொண்டு இருந்த
ஸ்வேதாவை புரியாது பார்த்து இருந்தவன்..
அக்னி ஷ்யாம் இருவரின் பேச்சிலும் தான்
என்ன என்று புரிந்தது புரிந்த நொடி அவனின்
கண்கள் உஷா பக்கம் தான் சென்று மீண்டது…
என்ன என்று சொல்வான்.. தான் அத்தனை
ஆசையாக எதிர் பார்த்த ஒன்று… தனக்கு
இல்லாது தன் அண்ணனுக்கு…. அனைத்து
விசயத்திலுமே அவன் கொடுத்து வைத்தவன்
தான் என்று நினைத்தவன் அமைதியாகி
போக..
ஆனால் ஸ்வேதா இப்போது அமைதியாகி
போக எண்ணம் இல்லாது ஷ்யான் சொன்னது
போல் யார் இருக்கிறார்கள் இல்லை என்றும்
பாராது தன் மனைவியை இறுக அணைத்துக்
கொள்ளவில்லை என்றாலும் தன் தோள் மீது
மனைவியை சாய்த்துக் கொண்டான்..
இந்த அவனின் இந்த அணைப்பு குழந்தை
உண்டாகி இருக்கிறாள் என்பதற்க்காக மட்டும்

கிடையாது.. இருபத்திரெண்டு நாட்களின்
பிரிவை இந்த சிறு அணைப்பு ஈடுக்கட்டாது
தான்.. இருந்தும் மனைவியின் ஸ்பரிசம்
அவனுக்கு இப்போது மிக தேவையான
ஒன்றாக இருந்தது..
மனைவிக்கும் அப்படி தானே இருக்கும்..
அதுவும் கரு உண்டாகி இருந்த இந்த
சமயத்தில் இது போலான ஒரு சொல்..
அதோடு பழ போல் உஷா செய்து வைத்த
செயல் என்று மனைவிக்கும் தன் அணைப்பு
தேவையாக இருக்கும் என்று அவன்
நினைக்க..
ஆனால் இது எனக்கு இப்போதைக்கு
வேண்டாம் என்பது போல் அவனை
கொஞ்சம் தள்ளி நிறுத்தினாள்…
அக்னியோ… கூடத்தில் அனைவரும் முன்
இது போல் செய்வதால் தள்ளி நிறுத்தினாள்
என்று அவன் நினைக்க ஆனால் அவளோ…

“ உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்.. பேசி
முடிவு செய்து விட்ட பிறகு மத்தது வைத்துக்
கொள்ளலாம்…” என்று சொன்ன மனைவியின்
பாவனையில்.
அக்னியுமே… அவளை விட்டு கொஞ்சம்
தள்ளி நின்றவன்.. “ ம் சொல்…” என்பது போல்
சொன்னவனிடம் ஸ்வேதா.
உஷாவை காண்பித்து.. “ இவள் வீட்டில்
இருக்கும் வீட்டில் நான் இருக்க மாட்டேன்…
அதே போல் தான் உன் தம்பியை பார்க்க
பார்க்க எனக்கு அவன் சொன்ன வார்த்தகள்
தான் நியாயபகத்தில் வருது..
என்ன தான் மாமா என் குழந்தைகளின்
மாமா என்று நான் நல்ல மாதிரியாக எடுத்து
கொண்டாலுமே… இனி சேர்ந்து இருப்பது
சாத்தியம் ஆகாது.. அதே போல் தான்
உஷாவுமே இத்தனை திட்டம் போட்டவள்.
நாளைய பின்ன தனக்கு இல்லாத குழந்தை

இவளுக்கா என்று ஏதாவது செய்தாலும்
செய்வாள்.
அப்படியே செய்யவில்லை என்றாலும் நான்
ஏதாவது செய்து விடுவாளோ என்று பயந்து
பயந்து தான் நான் இந்த வீட்டில் இருக்க
வேண்டும்…”
இது வரை ஸ்வேதா வந்ததில் இருந்து
அவளையே பார்த்து கொண்டு இருந்த
மரகதம் அதுவும் குழந்தை உண்டாகி
இருக்கிறாள் த்என்பதில் மனதில் கொஞ்சம்
பரவசம் ஆனது என்பது நிஜம் தான்.
அதுவும் உஷாவின் குழந்தை கலைந்ததோடு
உஷா வீட்டவர்கள் பற்றி தெரிந்த விசயத்தில்
நமக்கு என்ன இருந்தாலும் பெரிய மகன்
தான் சாஸ்வஸ்தம் என்ற முடிவுக்கு
மரகதமே வந்து விட்டார்..
அதோடு அவரின் மகளும் அருகில் வந்து
மெல்ல அம்மா உஷாவை வீட்டில் வைத்து

இருப்பது நமக்கு எப்போ இருந்தாலும்
பிரச்சனை தான்.
இந்த கடன் காரன் பிரச்சனையை அண்ணன்
முடித்து வைத்து விடான்.. இனி தொடர்ந்து
வந்தால் என்ன செய்வது… அவங்க எத்தனை
பேர்க்கிட்ட பணம் வாங்கி இருக்காங்கலோ
என்று சொன்ன போது..
“அகரனை என்ன டி செய்யிறது…?” என்று
கேட்டார்…
“ உங்க சின்ன மகனை பற்றி
பேசாதிங்கம்மா இங்கு வீட்டிற்க்கு ஒத்த
பைசா இது வரை கொடுத்தது இல்ல.. கூட
பிறந்தவளுக்கு இது வரை ஒரு புடவை கூட
வாங்கினது இல்ல.. ஆனா மாமியார் வீட்டு
கடன் இருபது லட்சம் அடச்சி இருக்கான்..
எனக்கு வயிறு எரியுது என்றவளின் பேச்சில்
தான் மரகதம் உணர்ந்தது இன்று
மருத்துவமனைக்கு கட்ட கூட அவனிடம்
பணம் இல்லை போல்… என்று உணர்ந்தவர்

இருந்தும் சின்ன மகன் என்று யோசித்து
கொண்டு இருந்த சமயம் தான்..
ஸ்வேதா குழந்த உண்டாகி இருப்பது
சொன்னது. சரி பேசலாம் என்று நினைக்கும்
சமயம்..
தன் மகனை இந்த குடும்பத்தை விட்டு
பிரிப்பது போல் பேசியவளின் பேச்சில்..
மரகதஅனைத்தும் மறந்து தன் சுய ரூபத்தை
காட்டி விட்டார்
 
Active member
Joined
May 12, 2025
Messages
46
ரொம்ப நாள் நடிக்க முடியாது மரகதம். இப்ப நேராகவே உங்க பையனுக்கு ஒரு சாம்பிள் காட்ட போறீங்க போலயே
 
Top