Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Poiyenum Perum Velicham....

  • Thread Author
அத்தியாயம்…21

இன்னும் வீட்டிற்க்கு போகாது தன் முன் வந்து நின்ற கனகாவை பார்த்த மரகதம்.. “ என்ன கனகா இன்னும் வீட்டுக்கு போகலையா…?” என்று கேட்ட மரகதத்திடம் கனகா..

“ எனக்கு மனசே சரியில்ல ம்மா…. “ என்று கனகா மெல்ல பேச்சை தொடங்க..

அதற்க்கு மரகதம்.. “ என்ன கனகா திரும்ப உன் புருஷன் வீட்டவங்க ஏதாவது பிரச்சனை செய்யிறங்கலா…?” என்று கேட்ட போது கனகா..

“அது எல்லாம் ஒன்னும் இல்லேம்மா… இது உங்க வீட்டு சம்மந்தப்பட்ட விசயம்.. இதை பத்தி உங்க கிட்ட சொல்லலாமா என்று கூட யோசிச்சேன்.. ஆனா உங்க வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டு இருக்கேன். சொல்லாம விடவும் மனசு இல்ல ம்மா…” என்று சொல்லி கொண்டு இருந்த சமயம்..

உஷாவும் மரகதம் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.. உஷவை பார்த்த கனகா..

“தோ உஷாம்மா கூட இந்த வீட்டு மருமக தான் வந்து இத்தனை நாளில் ஒரு கேள்வி என்னை கேட்டு இருப்பாங்க.. ஆனா நேத்து வந்த அந்த ஸ்வேதா ம்மா வந்து என் கிட்ட ..” என்று கனகா சொல்லும் போதே மரகதமும் சரி உஷாவிம் சரி…

மரகதம். “ என்ன சொன்னா அவள் உன் கிட்ட..?” என்று கேட்டார் என்றால் உஷா.

“என்ன சொன்னாங்க..?” என்று கேட்டாள்..

“ நான் போகும் போது ஸ்வேதா அம்மா சமையல் அறையில் எல்லா பாத்திரமும் திறந்து பார்த்துட்டு இருந்தாங்க. நான் என்ன ம்மா வேண்டும்.. ? என்று கேட்டன் ம்மா.. அதுக்கு அவங்க. என்ன இது இத்தனை செய்து வெச்சி இருக்கிங்க. இத்தனையுமா சாப்பிடுவாங்க.. ? என்று கேட்கிறாங்கம்மா. எனக்கே ஒரு மாதிரியா ஆயிடுச்சி.. நம்ம உஷாம்மா மாசமா இருக்கு கொஞ்சம் சத்தா செய்து கொடுத்தா தானே.. குழந்தை நல்லப்படியா பிறக்கு பாவம் அதுக்கே கரு கலஞ்சி இப்போ இங்கு ஒய்வு எடுத்து சத்தா கொடுக்க தொட்டு குழந்தை நல்லா இருக்கு..” என்று கனகா பேச பேச..

மரகதத்திற்க்கு கோபத்தில் மூச்சி வாங்கியது என்றால் உஷாவுக்கு கனகா சொன்ன.. முன்னவே குழந்தை கலைந்து என்ற வார்த்தையும் அடுத்து பேசிய இங்கு சத்தா சமைக்க தொட்டு தான் குழந்தை நல்லப்படியா வளருது..” என்ற அந்த வார்த்தையில் தன்னால் அவளின் கை தன் வயிற்றின் மீது படிந்தது..

நேற்று ஷ்யாமுமே அது தான் சொன்னான்.. ஐந்தாம் மாதம் முடிந்து விட்டது உஷா… இங்கு என் அம்மா உன்னை நல்லா பார்த்துக்குறாங்க.. கனகாவும் ஜூஸ் சூப் காய்கறின்னு நல்லா சத்தா சமைச்சி கொடுக்குறதுல. முழு ஒய்வு தான் உனக்கு இங்கு… … அதோட இப்போ செக்கப்புக்கு போனப்பா டாக்டர் பரவாயில்லை இப்படியே மெயிட்டெண் பண்ணுங்க என்று சொல்லி இருக்காங்க. உஷா அம்மா கைய்யால உனக்கு சமச்சி கொடுக்கலேன்னாலும்.. கனகா கிட்ட சொல்லி உனக்கு தேவையானது செய்து கொடுக்க சொல்லிடுறாங்க.. “ என்றவன்.

பின்… “ இந்த மாசம் தான் உஷா வட்டி அசல் எல்லாம் கட்டிய பின்னும்.. கையில காசு நிக்குது.. நாம தனியா இருக்கும் போது வீட்டு வாடகை மளிகை.. கரண்ட் பில் என்று அப்ப்பா என்ன கஷ்டம்.. நாம முன்னவே இங்கு வந்து இருக்கனும் உஷா.. இந்த நேரம் பாதி கடனை அடச்சி முடிச்சி இருப்பேன்.” என்ற கணவனின் பார்த்தை உஷாவுக்குமே அதிக நம்பிக்கையை கொடுத்தது.

நாமும் மெல்ல மெல்ல கடனை அடச்சிடலாம்.. அதோடு நமக்கு குழந்தையும் பர போகுது.. குழந்தைக்குமே கொஞ்சம் சேமிக்கலாம்.. அதோடு ப்ரீத்தா குழந்தையை மரகதம் பார்த்து கொள்வது போல் தன் குழந்தையையும் பார்த்து கொள்வர்கள்.. கேர் டேக் வைக்காது.. நாமுமே வேலைக்கு போகலாம் “ என்று நேற்று தான் அவள் அடி மனதில் இருந்த பயம் எல்லாம் போய் கொஞ்சம் நம்பிக்கை வந்தது..

ஆனால் இது என்ன இவங்க கணக்கு பார்க்கிறாங்க.. என்ற பயம் ஏற்பட்டு விட்டது…

அந்த பயம் கலந்த பார்வையோடு தன் மாமியாரை பார்க்க.. மாமியாரோ கனகம் சொன்ன விசயத்தில்..

“இவள் கணக்கு பார்க்கிறாளா…?.? இவள் வீட்டை போல ரசமும் துவையலும் வெச்சி சாப்பிட சொல்றாளா.. இத்தனை வகை சாப்பிட்டு பழக்கம் இல்லாது ஜீரணம் ஆக கஷ்டம்ன்னா அவளை ரசம் சாதம் சாப்பிட சொல்லு…” என்று சத்தமாக கத்திய கத்தலில் அறையில் பேத்தியை தூங்க வைத்து கொண்டு இருந்த நீல கண்டன் அறையில் இருந்து வெளியில் வந்தவர் குழந்தை தூங்குவதால் அந்த அறையின் கதவை சாத்தி விட்டு மனைவியிடம் வந்தவர்.

“என்ன மரகதம் ஏன் இப்படி சத்தம் போடுற.. குழந்தையை இப்போ தான் கஷ்டப்பட்டு தூங்க வெச்சேன்…” என்று கணவன் சொன்ன வார்த்தை எல்லாம் மரகதத்தின் காதில் விழவில்லை.

மரகதம் சத்தம் மாறாது தன் கணவனிடம் ஒரு முறை கத்தி தீர்த்தார். “ யார் வீட்டில் யார் நாட்டாமை பண்ணுறது… இவள் வீடு மாதிரி பஞ்சபரதேசி வீடா இது… துவையலும் ரசமும் சாப்பிட…” என்று கனகா சொன்னதை கணவனிடம் சொன்ன மரகதம்..

“ இதை சும்மா விட கூடாது..” என்று சொல்லி நேரம் காலம் பார்க்காது தன் கைய் பேசியில் தன் பெரிய மகன் அக்னியை அழைத்து விட்டார்.

நீல கண்டன்.. “ இப்போ தானே மெசஜ் போட்டான்… தூங்க போறேன்…” என்ற வார்த்தை எல்லாம் காதில் வாங்காது.

இங்கு மனைவியிடம் பேசி விட்டு ஷ்யாமும் தானும் இருந்த வீட்டிற்க்கு வந்த அக்னி குளித்து விட்டு சித்ரா செய்து வைத்த உணவை உண்ட பின்.. ஷ்யாம் குழந்தையை அக்னி தூக்கும் போதே.

சித்ரா. “ அவனை அப்புறம் கொஞ்சலாம் முதல்ல தூங்கி எழுந்துக்கோண்ணா..” என்று ஒரு அதட்டல் போட்டாள்...

அக்னிக்குமே டையாடாக இருந்ததால் குழந்தையை சித்ராவிடம் கொடுத்தவன்..

“ மாமா தூங்கிட்டு வரேன் டா…. அப்புறம் விளையாடலாம்…” என்று சொல்லி விட்டு தான் தங்கி இருந்த அறைக்கு வந்தவன்.

தன் அம்மா அப்பாவுக்கு தான் வந்து சேர்ந்ததையும் தூங்கி எழுந்த பின் அழைப்பதாகவும் மெசஜ் போட்டு விட்டு அப்போது தான் தூங்க ஆரம்பித்து இருந்தான் நம் அக்னி அவன் அன்னை அழைக்கும் போது..

முதல் அழைப்பே அத்தனை எரிச்சல் கொடுத்தது.. யார் என்று கூட எடுத்து பார்க்காது தான் அக்னி தன் தூக்கத்தினை தொடர்ந்தான்..

ஆனால் மரகதம் விடாது அழைக்கவும் ஒரு வித எரிச்சலில் யார் என்று தன் கை பேசியை எடுத்து பார்த்தவன் அழைப்பது தன் அன்னை எனவும்..

‘இப்போ எதுக்கு கூப்பிடுறாங்க. இப்போ தானே மெசஜ் போட்டேன்…’ என்று நினைத்த நொடி வீட்டில் இருப்பவங்களுக்கு ஏதாவது பிரச்சனையா இருக்குமோ….? ஸ்வேதா ரொம்ப டல்லா இருந்தா உடம்புக்கு எதாவதோ என்று நினைத்த நொடி அக்னிக்கு தன் தூக்கம் எல்லாம் தூரம் போய் விட. அன்னையின் அழைப்பை ஏற்று காதில் வைத்த நொடி அழைப்பின் அந்த பக்கம் இருந்த மரகதம்..

“ அவள் மனசுல என்ன நினச்சிட்டு இருக்கா..?” என்று எடுத்த உடனே மகனிடம் கத்த தொடங்கி விட்டார்.

அக்னிக்கு புரியவில்லை யாரை அவள் என்று சொல்கிறார் என்று.. ஆனால் மரகதம் அடுத்து சொன்ன.

“நேத்து வந்தவ. சமையல் அறையில் நாட்டாமை செய்யிறாளோ…” என்றதும் தான் அக்னிக்கு அன்னை தன் மனைவியை தான் சொல்கிறார் என்பது புரிந்தது.

கோபம் அத்தனை வந்தது… அவள் நாட்டாமை செய்யாம யார் நாட்டாமை செய்வாங்க என்று கேட்க தான் நினைத்தான்.

ஆனால் தான் இங்கு இருக்க மனைவி அங்கு இருக்கும் இந்த சமயத்தில் தான் ஏதாவது சொன்னா. கண்டிப்பாக அது தன் மனைவிக்கு தான் பிரச்சனையாக முடியும் என்று நினைத்து தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டவனாக.

வர வழைத்துக் கொண்ட பொறுமையுடன்…. “ அவ என்னம்மா பண்ணா…?” என்று நிதானமாக கேட்டான்..

அக்னியின் அந்த நிதானமே மரகதத்திற்க்கு இன்னும் கோபத்தை கூட்டியது எனலாம்..

“என்ன டா என்ன பண்ணா என்று கேட்கிற.. கனகா கிட்ட போய் ஏன் எத்தனை வகை செய்த என்று கேட்டாலாம் டா…” என்று சொன்னதும்.

அக்னி இதை தான் கேட்டாள்.. “ யார் சொன்னது அந்த கனகா.. இதை நீங்க ஸ்வேதா கிட்ட கேட்டிங்கலா…?” என்று கேட்டவனிடம்..

“ அப்போ கனகா பொய் சொல்றா என்று சொல்றியா..” என்ற மரகதம் பேச்சு இத்தனை பேச்சையும் ஒரு வித பயத்துடன் கேட்டு கொண்டு இருந்த கனகா மரகதம் கடைடியான பேச்சில் உண்மையில் பதட்டம் கூடியது.

சத்தியமாக கனகா மரகதம் இப்படி அக்னிக்கு அழைத்து பேசுவார் என்று நினைக்கவில்லை.. அவளுக்கு இவர்களுக்கு ஸ்வேதாவை பிடிக்காது… நாம இப்படி சொன்னா..

தன்னிடம் அவள் சொல்வதை எல்லாம் கேட்காதே.. நீ எப்போவும் போல சமை என்று சொல்வாங்க.. நாம அதை ஸ்வேதா திரும்ப ஏன் இவ்வளவு சமைச்ச என்று கேட்டா மரகதத்தை கை காட்டி விடலாம்..

அதோடு மரகதம் ஸ்வேதாவிடம். “ நீ இதில் எல்லாம் தலையிடாதே என்று சொல்வாங்க…” இது கண்டிப்பாக ஸ்வேதாவுக்கு அவமானம் தானே.. பின் சமையல் விசயங்களில் ஸ்வேதா தலையிட மாட்டாள் என்று தான் அவள் நினைத்தது..

ஆனால் அக்னியை அழைத்து பேசியது.. இப்போது அக்னி சரியாக யூகித்து பேசியதில் பதட்டம் கூடியது..

அடுத்து என்னவோ என்று கனகா பயந்து கொண்டு இருக்கும் போதே அறையில் இருந்த குழந்தை பயந்து அழ. நீல கண்டன் தான்..

“நீ முதல்ல குழந்தையை போய் பாரு…” என்று சொல்லி மனைவியின் கையில் இருந்த கை பேசியை வாங்கி கொண்டு மரகதத்தை அறைக்கு அனுப்பி வைத்தது..

அதற்க்குள் கனகா… “ அய்யா நான் பொய் சொல்லலே ஐய்யா.” என்ற வார்த்தை கை பேசி வழியாக அக்னிக்கும் கேட்டது.

நீல கண்டன் தான். “ சரிம்மா நீ போம்மா..” என்று சொல்லி விட்டு அழைப்பில் இருந்த மகனிடம்..

“ அக்னி…” என்று நீல கண்டன் பேச்சை ஆரம்பிக்கும் போதே..

அக்னி.. “ என்னப்பா இது… கனகா நன் பொய் சொல்லலே என்று சொல்றா. அப்போ இத்தனை பேச்சும் கனகா இருக்க தான் பேசுறிங்கலா.. இப்படி இருந்தா கனகா எப்படி ஸ்வேதாவை மதிப்பா.. எனக்கு புரியலேப்பா.. நான் ஒரு மாசம் இங்கு தான்..

வந்த ஒரே நாள்ளே. பிரச்சனை செய்தா என்னப்பா. அர்த்தம். ஸ்வேதா கேட்டு இருந்தா கூட அதுல தப்பு இல்லேப்பா. ஏன்னா நான் எத்தனை இங்கு கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறேன் என்று அவளுக்கு தெரியும்.. ஆனா ஸ்வேதா கேட்டதை இப்படி கனகா அம்மா கிட்ட வந்து சொல்றான்னா.. எனக்கு சரியா படலேப்பா… ஒரு மாசம் ஒரே மாசம் தான்.. நான் அங்கு வந்துடுவேன்… அது வரை எந்த பிரச்சனையும் இல்லாம பார்த்துக்கோங்க…” என்று கோபமாக மகன் பேசி வைத்து விட..

மகன் சொன்ன நான் இங்கு கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறது அவளுக்கு தெரியும் என்ற வார்ட்த்தை அவரை பலமாக தாக்கியது….
 
Well-known member
Joined
Jul 13, 2024
Messages
512
Arumai. Agni, un oruthan support pothum Swetha ku
 
Well-known member
Joined
May 11, 2024
Messages
216
அருமை 👌👌👌👌👌👌அக்கினி பேசியதை கேட்ட நீலகண்டன் அவன் கஷ்டபட்டு சம்பாத்தியம் செய்வதை கூறுவது அவர் யோசனை செய்கிறார் இனி இவர் என்ன சொல்ல போகிறாரே 🤔🤔🤔🤔🤔🌺🌺🌺🌺🌺
 
Top