Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Puthiyathoru Jodi.. 1 .tesar

  • Thread Author
அத்தியாயம்…1

ஐந்து வயது குழந்தையை இடுப்பில் தூக்கி கொண்டு மூன்று வீடு தள்ளி இருக்கும் தன் அத்தையின் வீட்டை நோக்கி அந்த வேகாத வெயிலில் நடந்து கொண்டு இருந்தாள் நம் கதையின் நாயகி மஞ்சுளா….

காலுக்கு செருப்பு மாட்ட கூட அவளுக்கு அவகாசம் தரவில்லை அவளின் அன்னை மாலினி…

“அவங்க வந்துட்டே இருக்காங்கலாம்… குட்டியை கூட்டிட்டு சீக்கிரம் உன் அத்தை வீட்டுக்கு ஓடு ஓடு..” என்று சொல்லி தள்ளாத குறையாக வீட்டை விட்டு தள்ளிய தள்ளலில் காலில் செருப்பை மாட்ட கூட மறந்து இரண்டு அடி எடுத்து வைத்ததில் காலில் உணர்ந்த சூட்டில் தான் அய்யோ செருப்பு போடலையே… என்று நினைத்தவள் மீண்டும் வீட்டுக்கு திரும்பி செருப்பு போட்டு கொண்டு வரலாம் என்று எல்லாம் நினைக்கவில்லை..

தெரியும் இப்போது செருப்பு எடுக்க போனால், அந்த செருப்பாலேயே அன்னை தன்னை அடிக்க கூடும் என்று… .

அதனால் குதி காலால் வேகமாக நடந்தவள் இன்னும் ஒரு எட்டு வேகமாக எடுத்து வைத்தால் அத்தையின் வீட்டிற்க்குள் சென்று விடலாம் என்று தன் நடையிl வேகத்தை கூட்டி நடக்க..

அவள் இடுப்பில் அமர்ந்து இருந்த அவளின் அக்கா ஜெயமாலினியின் மகள் தீஷாவோ…. “ சித்தி சித்தி பசிக்குது…” என்ற வார்த்தையில் தன் காலில் உணர்ந்த சூட்டை கூட மறந்தவளாக நின்று விட்டாள்..

அருகில் தாய் இல்லாத குழந்தைக்கு சரியான நேரத்திற்க்கு சாப்பாடு கூட கொடுக்காது.. என்ன இது தன்னையே நொந்து கொண்டு விட்டாள்..

ஆனால் வீட்டில் நிலவும் சூழ்நிலையில் வீட்டில் சாப்பாடு செய்யும் மனநிலை கூட மாலினிக்கு இல்லாது, காலையில் குழந்தை தீஷாவுக்கு பாலோடு இரண்டு பிஸ்கெட் கொடுத்ததோடு சரி.. வீட்டில் மற்றவர்களும் வெறும் காபியோடு தான் இருக்கின்றனர்…

வீட்டின் சூழ்நிலை பெரியவர்களுக்கு தெரியும்.. அதனால் மணி மதியம் பன்னிரெண்டு தொட்ட போது கூட சாப்பிட வேண்டும் என்ற உணர்வே கூட இல்லாது இருக்கிறோம்… ஆனால் குழந்தைக்கு வீட்டின் நிலை தெரியுமா என்ன…?

“பாட்டி வீட்டில் சாப்பிடலாம் செல்லக்குட்டி..” என்று சொன்னவள் நடையை இன்னுமே வேகம் கூட்டினாள்… தன் கால் சூட்டோட்டு குழந்தைக்கு பசி என்றதில்,

தீஷாவும்.. “ ஐய் சுப்பு பாட்டி சூப்பரா குக் பண்ணுவாங்க.. சூப்பரா இருக்கும்.. “ என்று வாய் மொழியாக மட்டும் அல்லாது சைகையினாலுமே சூப்பர் என்று பாவனையாக சொல்ல.. குழந்தையின் அந்த பாவனையை பார்த்து ரசித்த மஞ்சுளாவின் மனது…. எப்படி தன் குழந்தையை விட்டு அவளாள் போக முடிந்தது..

இந்த ஒரு மாத காலமாக மஞ்சுளா இதை எத்தனை முறை நினைத்தாள் என்று சொல்ல முடியாத அளவுக்கு.. குழந்தையை பார்க்க பார்க்க.. எப்படி அவளாள் முடிந்தது..? எப்படி அவளாள் முடிந்தது..? இதை எண்ணமால் இருக்க முடியவில்லை..

இதோ அத்தையின் வீடும் வந்து விட… திறந்து இருந்த கேட்டின் உள் சென்றவள்.. அத்தையின் வீடு எப்போதும் இது போல திறந்து இருக்காதே என்று யோசனையோடு நடந்தவளின் வேகம் கொஞ்சம் மட்டுப்பட்டு இருந்தது..

காரணம் கால் சுடாத அளவுக்கு மரத்தின் நிழல் ஒரு காரணம் என்றால், மற்றோரு காரணம் அத்தையின் கணவர் கணபதி ஏதோ சத்தமாக சண்டை இடுவது போல பேசிக் கொண்டு இருந்ததில், இப்போது வீட்டிற்க்குள் போகலாமா வேண்டாமா என்ற யோசனையோடு அங்கு சிறிதாக கட்டி இருந்த திண்ணையில் குழந்தையை அமர வைத்தவள்..

அங்கு மரத்தில் கைக்கு எட்டும் தூரத்திலேயே தொங்கி கொண்டு இருந்த கொய்யாவை பரித்து தன் துப்பட்டாவில் துடைத்து குழந்தையிடம் கொடுத்தாள்…

தீஷாவுக்கு கொய்யா என்றால் மிகவும் பிடிக்கும்.. அதுவும் பழுத்த கொய்யா என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவாள் குழந்தை…. கூட பசியும் சேர்ந்து கொள்ள கொடுத்த உடனே சாப்பிட தொடங்கி விட்ட தன் அக்கா மகளை பார்த்து கொண்டே அவளின் பக்கத்தில் அமர்ந்து கொள்ள…

இப்போது வீட்டின் உள் இருந்து இன்னுமே சத்தமாக பேச்சுக்குரல் இவள் காதில் மிக தெளிவாகவே விழும் அளவுக்கு இருந்தது.

அதிலும் கணபதி மாமா சொன்ன…. “முதல்ல உன் தம்பி மகளை நம்ம சுரேஷ்க்கு கட்டி வைத்து விடலாம் என்று நீ ஆசைப்பட்டதுக்கு நான் மறுப்பு சொன்னானே….” என்று கோபமாக கேட்ட குரலில் மஞ்சுளாவின் மனது தட தட என்று ஆகி விட்டது.

இப்போது நாம் இங்கு இருப்பது சரியில்ல போய் விடலாம் என்று தான் மஞ்சுளா நினைத்தாள்..

ஆனால் அத்தையின் வீட்டில் இருப்பவர்கள் சண்டையின் மும்மூரத்தில் ஹாலில் ஆரம்பத்தில் இருந்தவர்கள் இப்போது ஹாலின் தொடக்கத்திற்க்கு வந்து விட்டார்கள் போல. அதனால் தான் முன் சண்டை என்ற அளவில் மட்டுமே சத்தமாக கேட்டது.. இப்போது தெளிவாக வார்த்தைகள் கேட்கும் அளவில் ஆனது…

இவர்கள் அமர்ந்து இருக்கும் அந்த திண்ணை வீட்டின் ஓரத்தில் இருக்கிறது.. இப்போது தான் வெளியில் போக வேண்டும் என்றால் கேட்டை தான்டி தான் போக வேண்டும்.. கேட் வீட்டின் நடு பகுதியில் இருப்பதால், கண்டிப்பாக தன்னை அவர்கள் பார்த்து விட கூடும்.. அது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்த கூடும் என்று நினைத்து மஞ்சுளா அமைதியாக அமர்ந்து விட.

வீட்டின் உள் தொடர்ந்த சண்டையில் அவர்கள் பேசும் வார்த்தைகள் தெளிவாகவே மஞ்சுளாவின் காதில் விழுந்தன…

அவளின் மாமா தொடர்ந்து… “ நான் பணத்தை எப்போதுமே பார்த்தது இல்ல சுப்பு.. அதனால் தான் உன் தம்பியின் பெரிய மகள் அந்த ஜெயமாலினியையே நம்ம பெரிய மகன் மகேஷுக்கு எடுக்க நினைத்தேன்… ஆனா அவன் காதல் என்று அந்த சந்திராணியை கொண்டு வந்து நிறுத்திட்டான்… அவள் ஆடாத ஆட்டம் எல்லா போட்டு இப்போ தான் தனியா போனதில் வீடு கொஞ்சம் அமைதியா இருக்கு” என்ற கணவனின் பேச்சுக்கு ,.

மஞ்சுளாவின் அத்தை சுப்பம்மாள்…” அது தானுங்க எனக்கு பயமா இருக்கு. நம்ம சின்ன மகனுக்கு வரும் மருமகளும் பெரியவள் போல இருந்து விட்டால், மஞ்சு என் தம்பி மகள்… அதுவும் நமக்கு கீழே இருக்கும் வீட்டில் பெண் எடுத்தா நமக்கு அடங்கி இருப்பா….” என்ற மனைவியின் பேச்சை கணபதி ஏற்றுக் கொள்ளவே இல்லை.

அவரின் வாதம் இதுவாக தான் இருந்தது.. அதாவது… “ இப்போ நீ சொன்னியே அந்த பயம் எனக்கும் இருக்க தான் செய்யுது…. அதனால தான் உன் தம்பி பொண்ணு வேண்டாம் என்று நான் தலை பாடா அடிச்சிக்கிறேன்…

நம்ம பெரிய மருமகளாவது பணத்திமிரில் ஒரு ஆட்டம் போட்டு அவள் புருஷனோடு தான் தனிக்குடுத்தனம் போன. இதனால நம்ம மனது தான் கஷ்டப்பட்டதே தவிர.. மானம் எல்லாம் போகவில்லை… மருமகளுங்க சண்டை போட்டு தனிக்குடித்தனம் போவது எல்லாம் சகஜம் தான்..

ஆனால் இப்போ நான் உன் பேச்சை கேட்டு உன் தம்பியின் இரண்டாவது பொண்ணு நான் நம்ம பையனுக்கு கட்டிட்டு வந்தா… இவள் அவள் அக்கா போல வேறு ஒருத்தனை கூட்டிட்டு ஓடி போனா.. நம்ம மானம் தானே பறந்து போகும்…” என்று சொன்ன நொடி மஞ்சுளா எதை பற்றியும் யோசிக்காது குழந்தையை தூக்கி கொண்டு அங்கு இருந்து ஓடி விட்டாள்..
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
996
Acho… Jeyamalini odi poittala??? Appo ava husband enge?
முதல் அத்தியாயத்தில் வ்ருவான் பா... ஆனால் இவன் இல்லை நாயகன்...
 
Top