அத்தியாயம்….19
துகிலனுக்கு தற்சமயம் வெளியில் செல்லும் மனநிலையிலேயே அவன் இல்லை… குழந்தை நர்த்தகனிடம் சொல்லி விட்டோம் .. இப்போது அழைத்து செல்லவில்லை என்றால் குழந்தை ஏமாந்து போய் விடுவான் என்ற ஒரே காரணத்திற்க்காக தான் அவனை அழைத்து கொண்டு வெளியில் சென்றது….
நர்மதா கூட… “பேபி கிட்ட நான் சொல்றேன் துகி.. நீ வேணா இன்னைக்கு நம்ம ஓட்டலுக்கு போயேன்….” என்று அவன் எப்போதும் இது போல குழப்பமான மனநிலையில் இருந்தால்,அவர்கள் ஓட்டலில் துகிலனின் தன்னிப்பட்ட அறையில் தங்கி கொள்வான்…
வி.ஐ. பிக்களுக்கு என்று தனிப்பட்டு இருக்கும் நீச்சல் குளத்தில் நேரம் பார்க்காது நீந்துவான்.. சிறிது மதுவும் எடுத்துக் கொள்வான் தான்..
மூன்று ஆண்டுகளுக்கு முன் துகிலன் அங்கு அடிக்கடி சென்று தங்குவான்… பின் நர்மதா ஒரு முடிவு இது தான் என்று எடுத்த பின்… இப்போது எல்லாம் துகிலனுக்கு அங்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாது போய் விட்டது..
எந்த ஒரு விசயத்திற்க்குமே தீர்வு கிடைக்காத வரை தான் நாம் குழப்பி கொள்வது எல்லாம்.. இது தான் தீர்வு என்று முடிவு எடுத்து விட்டால், பின் நம் மனது அமைதியடையும்… அதனால் தான் மூன்று ஆண்டுகளுக்கு முன் குழப்பத்தில் இருந்தவனுக்கு தீர்வு நர்மதா சொல்லி விட்டாள்..
ஆனால் இன்றைக்கு அவனுக்கு குழப்பம் இல்லை.. கோபம்… தன்னை சந்தேகப்படுகிறார்களா….? என்ற கோபம்… தன்னை நம்ப வில்லையா….? என்ற ஆதங்கம்…
அதுவும் நேற்று இரவு கூட அவளோடு நான் பேசினேன்…அதுவும் பன்னிரெண்டு மணி வரை.. தன்னிடம் அவளின் பெற்றோர் வருவதை சொல்லி இருக்கலாமே.. சொல்லி இருந்தால் அவங்களை அலைய விடாதே நானே உன்னை அழைத்து போக வருகிறேன் என்று சொல்லி இருந்து இருப்பேன்..
அதிகம் பேசாத நானே இவளிடம் மட்டும் தானே நான் அதிகம் பேசுகிறேன்.. ஆனால் இவள்…. தன்னை போல அவளுக்கு தன்னிடம் ஆசை இல்லையா.? இல்லை இவளுக்குமே இவளின் அப்பா அம்மா போல் நம்பிக்கை இல்லையா….?
இத்தனை குழப்பத்தில் இருந்தவனிடம் தான் நர்மதா ஒட்டலில் அவனுக்கு உண்டான அறையில் தங்க சொன்னது…
“ம் வேண்டாம் நம்மூ… ஐயம் ஆல் ரைட்…” என்று விட்டான்… அந்த பேச்சில் நர்மதா துகிலனை நம்பாத பார்வை பார்த்தாள்..
நர்மதாவின் அந்த பார்வையயும், அந்த பார்வைக்கு உண்டான பொருளையும் புரிந்தும் துகிலன் அடுத்து எதுவும் பேசாது தன் மகனை அழைத்து கொண்டு வெளியில் மாலை வரை சிற்றியவன் பின் வீடு வந்து விட்டான்…. எப்போதும் எந்த விசயம் என்றறாலும் நர்மதாவிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளும் துகிலனுக்கு மஞ்சுளாவை பற்றியதான விசயத்தை மட்டும் அவனால் நர்மதாவிடம் சொல்ல முடியவில்லை..
காரணம்.. சொன்னால் தான் மஞ்சுளாவை குறை சொல்லும் படியாகும்.. அதுவும் அவனுக்கு பிடிக்கவில்லை…
குழந்தையோடு வெளியில் சென்று வந்த இந்த இடைப்ப நேரத்திற்க்குள் தன்னை சமனும் படுத்தி கொண்டான்.. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்லுவார்கள்… நாள் முழுவதுமே தன் மகனோடு இருந்ததில் துகிலன் ஒரு தெளிவுக்கும் வந்து விட்டான்…
ஆனால் இங்கு மஞ்சுளா தான் ஏற்கனவே கலங்கி போய் இருந்த குளத்தில் இன்னுமே சேறு வந்து கொட்டியது போல அவள் மனது அந்த சேறு போலவே கொழ கொழ என்று குழப்பி கொண்டான நிலையில் ஆளாகி விட்டாள்..
இரவு கணவன் அழைக்கும் நேரத்திற்க்கு அழைக்காது போகவும் தான் மஞ்சுளாவுக்கு கணவனுக்கு கோபம் வந்து விட்டதோ என்ற சந்தேகமே அவளுக்கு வந்தது.
காரணம் காலையில் மாலினியும் ஷண்முகமும் அங்கு இருந்து வந்த பின்…
“மாப்பிள்ளை வர வேற்பு வைக்கிறேன். வைத்தே பின்னே உன்னை அழைச்சிட்டு போறேன் என்று சொல்லிட்டாரு மஞ்சு…” மாலினியின் பேச்சில் தெரிந்த தெளிவில் பாவம் மஞ்சுளாவுமே நம்பி விட்டாள்…
ஆனால் மஞ்சுளா கூட உடனே எல்லாம் நம்பவில்லை தான்…
“ம்மா உண்மையா தான் சொல்றிங்கலா…? அவர் கோபம் படவில்லையா.. ..? கோப படவில்லையா…?” என்று ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டு உறுதிப்படுத்தி கொண்டாள்..
மாலினியுமே… “ நான் ஏன் டி பொய் சொல்ல போறேன்… நானுமே கொஞ்சம் பயந்தேன் தான்.. ஆனா பாரு… நானே ஈவினிங்க வந்து கூட்டிட்டு போறேன் என்று சொன்னவரு . இந்த வர வேற்பு பத்தி உன் அப்பா சொன்னதும்.. அப்போ ரிசப்ஷன் முடிஞ்சே நான் எங்க வீட்டுக்கு அழச்சிக்கிறேன் என்று சொல்லிட்டாரு….”
பாவம் மாலினிக்கு துகிலன் கோபத்தில் தான் சொல்கிறான் என்று தெரியாது போய் விட்டது.. அதோடு தாங்கள் சென்ற போது வசந்தி பேசியதை எல்லாம் சொல்லவில்லை….. காரணம் இதை சொன்னால் கண்டிப்பாக மகளின் மனது வேதனை அடையும் என்று தெரிந்ததினால், மாலினிக்கு அது தான் இனி எல்லாம் சரியாக போகிறதே .. இப்போ இதை எல்லாம் சொல்லனுமா… திருமணம் ஆன பெண்ணுக்கு உண்டான மகிழ்ச்சியோடு பெண் இருக்கட்டுமே என்று நினைத்தார்..
பாவம் மாலினி மஞ்சுளாவிடம் அவள் மாமியார் வீட்டில் நடந்து முழு விசயமும் சொல்லி இருந்து இருந்தால், அவள் கண்டு பிடித்து இருந்து இருப்பாளோ என்னவோ..
ஆனால் கண்டு பிடித்தும் என்ன செய்ய முடியும்… இதோ அன்னையின் பேச்சில் மதியத்தில் இருந்து இரவு வரையிலான குறைந்த பட்சம் அந்த நிம்மதி கூட அவளிடம் இருந்து இருக்காது அவ்வளவே…
அன்னை சொன்னதை நம்பிய மஞ்சுளாவின் அந்த நம்பிக்கை எல்லாம் இரவு வரை தான் அவளுக்கு கிட்டியது.. எப்போதும் கணவன் அழைக்கும் அந்த நேரம் கடந்த பின்.. கணவன் அழைக்காததினால், அவளே கணவனை அழைத்தாள்..
அழைத்தவளின் அழைப்பை ஏற்காது அவளின் வாட் சாப்பில் ஒரு மெசஜ்… நான் பிஸி என்று… சரி என்று இவளும் பதில் கொடுத்தவள் இரவு வணக்கம் என்றதோடு .. மஞ்சுளா தூங்க முயன்றாள்… ஆனால் அவளாள் தூங்க முடியவில்லை..
அப்படி இப்படி என்று திரும்பி திரும்பி படுத்து பார்த்தவள் மீண்டும் தன் கை பேசி எடுத்து ஒரு ஐந்து நிமிடம் முக நூல் பக்கத்தில் இருந்தவளுக்கு மீண்டும் கணவனின் மெசஜை பார்க்கும் எண்ணம்.
இன்று அனுப்பியதில் ஒன்றுமே இல்லை தான். ஆனால் நேற்று. முன் இரவு என்று இவளை அழைக்கும் முன் துகிலன் மெசஜ் போட்டு விட்டு தான் அழைப்பான். அதில் ஒரு சில அந்தரங்கமான சமிஞ்சையும் கொடுப்பான்..
இப்போது மஞ்சுளாவுக்கு அதை பார்க்க ஆசை துளிர் விட.. தன் வாட்சாப் பக்கம் சென்று பார்த்தவளுக்கு கணவன் இப்போதுமே ஆன்லைனில் இருப்பது காண்பிக்க..
வேலை இருக்கு என்றால், ஆனா ஆன் லைனில் இருக்கார்.. ஆபிஸ் விசயமா யாருக்காவது வாட்சாப்பில் தகவல் சொல்றாரோ என்று மஞ்சுளா நினைத்த நொடி அவன் ஆன்லைனை விட்டு சென்று விட்டு இருந்தான்..
மஞ்சுளாவுக்கு அப்போது தான் சந்தேகம் வந்தது.. தான் ஆன்லைனில் வந்ததை பார்த்து தான் சென்றானோ என்று.. அப்போ அப்போ என் மீது கோபமா..? ஏன்..? புரியவில்லை..
இப்போது மஞ்சுளா நேரத்தை எல்லாம் பார்க்கவில்லை கணவனை அழைத்தாள்… ஆனால் இப்போது அவனின் கை பேசி ஸ்வூச் ஆப் செய்யப்பட்டதாக வர.. அன்று மஞ்சுளாவுக்கு தூக்கம் பறி போனது.
அன்று மட்டுமா.? தொடர்ந்த நாள்களிலுமே தொடர்ந்து கணவனை இவள் அழைக்க. அவன் தவிர்க்க … என்று ஆனதில், ஒரு வாரம் கடந்தது தான் மிச்சம்.
அந்த ஒரு வார காலத்திலுமே மஞ்சுளாவுக்கு சரியாக உண்ணாது தூங்காது… பார்க்கவே சோர்ந்து போய் தெரிந்தாள்…
மஞ்சுளா வீட்டில் இதை பற்றி மூச்சு விடவில்லை…. அவர்களாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்பது ஒரு காரணம் என்றால், மற்றோரு காரணம்…. மைதிலியின் அப்பா வந்து வீட்டில் பேசி விட்டு சென்று இருந்தார்.
முதலில் கோபமாக இருந்த அவள் அன்னை கூட துகிலன் வர வேற்பு வைக்கிறேன் என்றதில் மைதிலியின் அப்பாவிடம் நல்ல மாதிரி தான் பேசினார்..
விரைந்து திருமணத்தை நடத்தி விடலாம்.. நிச்சயம் எல்லாம் தனியாக வைக்க தேவையில்லை.. திருமணம் முன் நாளே வைத்து கொள்ளலாம் என்று பேசி முடிவு செய்து சந்தீப் ஜாதகமும் மைதிலியின் அப்பாவிடம் கொடுத்து விட்டு..
இருவரின் ஜாதகப்படி நல்ல நாள் பார்த்து நீங்க சொல்லுங்க என்று விட்டு மைதிலியின் தந்தை இவர்கள் வீடு வந்து சென்று இரண்டு நாள்கள் தான் கடந்து இருந்த சமயமும் அது…
ஆனால் எதையும் காட்டி கொள்ள கூடாது என்று மஞ்சுளாவின் மனது நினைத்தாலும், அவளின் முகம் அதற்க்கு ஒத்தழைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்..
மூன்று வீடு தள்ளி இருக்கும் அவளின் அத்தை சுப்பம்மா நீண்ட நாட்கள் கழித்து அன்று இவர்களின் வீடு வந்து இருந்தார்.. அப்போது மஞ்சுளா அவள் அறையில் தான் படுத்து கொண்டு இருந்தாள்.
படுத்து கொண்டு மட்டும் தான் இருந்தாள் தூங்க எல்லாம் இல்லை.. அவளுக்கு தான் இரவிலேயே தூக்கம் கிட்ட வருவேனா என்று அவளுக்கு ஆட்டம் காட்டி கொண்டு இருக்கிறதே…
அதனால் அவள் அத்தை வந்தது அவர்களின் பேச்சு சத்தத்தில் அவளுக்கு தெரிந்தது தான். ஆனாலுமே வெளியில் சென்று அவர்களிடம் பேசும் மனநிலையில் அப்போது இல்லை…
காரணம் காலையிலேயே அவளின் அன்னை மாலினி…. “ என்ன மஞ்சு உங்க மாமியார் வீட்டிற்க்கு போய் வந்து ஒரு வாரம் ஆகுது.. இன்னுமே அவங்க இந்த வரவேற்பு பத்தி பேச காணும்.. மாப்பிள்ளை உன் கிட்ட ஏதாவது சொன்னாரா…?’ என்று கேட்டார்..
அன்னையிடம் மஞ்சுளா ஒன்றும் சொல்லாததினால், இரவில் மாப்பிள்ளை மகளிடம் பேசுகிறார் என்று பாவம் நினைத்து விட்டார் போல…
அப்போது மஞ்சுளா உணர்ந்தாள்.. இன்னும் இதை மூடி மறைத்து வைக்க முடியாது என்று… அம்மாவின் கேள்விக்கு என்ன சொல்லலாம் என்று மஞ்சுளா யோசிக்கும் சமயம்..
மாலினி தன் மகள் கண்களை சுற்றி கருவளையத்தை பார்த்து விட்டு..
“என்ன மஞ்சு நையிட் முழுக்க மாப்பிள்ளை கிட்ட பேசிட்டு இருக்கியா என்ன….? தூங்காது இப்படி கருப்பு விழுந்து கிடக்கு..?” என்று கேட்டவர் பின் அவரே..
“என்ன செய்யிறது கல்யாணம் ஆகி பத்து நாள் கூட இல்ல. அதுக்குள்ள இங்கு வந்துட்ட… சாயங்கலாம் உன் அப்பா வரட்டும்.. அவரை விட்டு சம்மந்தி வீட்டுக்கு பேச சொல்றேன்… சீக்கிரம் வர வேற்பு வெச்சிட்டு உன்னை அங்கு கூட்டிட்டு போகட்டும்… நீ சரியா கூட சாப்பிட மாட்டேங்குற… இட்லி ஆகிடுச்சி சாப்பிட்டு போய் தூங்கி எழு.. பார்க்கவே வெச்சோன்னு இருக்கே…” என்று சொன்ன தாயை மறுக்காது வைத்த இட்லியில் ஒன்றே ஒன்று மட்டும் சாப்பிட்டு விட்டு மற்றதை மாலினிக்கு தெரியாது வெளியில் நிற்கும் நாய்க்கு வைத்து விட்டு தட்டை ஷிங்கில் போட்டு வந்து படுத்தவள் தான் இன்னும் வெளியில் போகவில்லை..
ஆனால் போய் தான் ஆக வேண்டும்.. மாலைக்குள் அம்மா அப்பாவின் நிம்மதியும் கெட போகிறது … கூட இதனால் சந்தீப்புக்குமே பிரச்சனை என்று அவள் பாட்டுக்கு நினைத்து படுத்து கொண்டு இருந்த மஞ்சுளாவின் செவியில் அவளின் அன்னை பேசிக் கொண்டு இருந்த..
“தூங்குறா அண்ணி.. நான் தான் தூங்க அனுப்பினேன்.. சரியா சாப்பிட கூட மாட்டேங்குறா….” என்ற மாலினியின் பேச்சுக்கு…..
“மாலினி மஞ்சுக்கு கல்யாணம் முடிந்து ஒன்னரை மாசம் ஆகுதுல… கல்யாணம் முடிந்து அவள் தலைக்கு ஊத்திட்டாளா…? என்ற இந்த பேச்சில் படுத்து கொண்டு இருந்த மஞ்சுளா விடுக்கென்று எழுந்து அமர்ந்து விட்டாள்….