Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Puthiyathoru Jodi....2 tesar...

  • Thread Author
அத்தியாயம்….2

குழந்தை தந்தையிடம் இருக்கட்டும் என்று சொன்ன நர்மதாவையும், குழந்தை என்னிடம் இருக்கட்டும் என்று சொன்ன துகிலனையும் மாறி மாறி பார்த்த அந்த நீதிபதி…

‘இதில் ஒன்றிலாவது இரண்டு பேரும் மாறி சொல்றாங்கலே… ‘ என்று மனதில் நினைத்து கொண்ட அந்த நீதிபதி வக்கீலாக இருக்கும் காலம் தொட்டு இதோ நீதிபதியாக அமர்ந்து இருக்கும் இந்த இடைப்பட்ட நாட்களில் இது போல மனதில் ஒன்று போல ஒற்றுமையாக இருக்கும் கணவன் மனைவிக்கு விவாகரத்து கொடுப்பது இது தான் முதல் முறை என்பது போல அவர்களுக்கு இனி நீங்க கணவன் மனைவி என்ற பந்தத்தில் இருந்து இரண்டு பேரும் விடுதலை பெறுகிறிர்கள் என்று சொல்லி விவாகரத்து அளித்து விட்டார்.

பின் அவரும் என்ன தான் செய்வார்… எங்களுக்கு விவாகரத்து வேண்டும் என்று அடமாக நிற்கும் போது… படிப்பிலும் சரி.. அந்தஸ்த்திலும் சரி உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் தான்… ஏன் இப்படியான ஒரு முடிவு என்று தெரியவில்லை.. அதனால் தான் இந்த ஆறுமாத காலமாக கொடுக்காது அவர் இழுத்து அடித்தார்.

ஆனால் ஒன்று போல திடமாக நிற்பவர்களிடம் இவர் முயற்சி பலனை தரவில்லை.. இதோ இன்று கொடுத்து விட்டார்.

அந்த நீதிமன்ற வளாகத்தை விட்டு இருவரும் ஒன்று போல பேசிக் கொண்டே தான் வெளியிலும் வந்தது…

அவர்கள் பின் இருவரின் வக்கிலும் ஓடி வந்தனர்.. “கொஞ்ச நேரம் வெயிட் பண்ணா. இரண்டு பேரும் சைன் பண்ணிட்டு உங்களோட அந்த டைவஸ் பேப்பரை வாங்கிட்டு போயிடலாம்..” என்று சொல்ல இருவரும்.

“ம் ஒகே..” என்று விட்டனர்.

துகிலன்.. “ எவ்வளவு நேரம் ஆகும்..?” என்று கேட்டதற்க்கு அவன் வக்கீல்.

“ஒரு ஹாப்னவர் ஆகும் சார்…” என்றதும் துகிலன் நர்மதாவை தான் பார்த்தான்.

நர்மதாவுமே அவன் என்ன கேட்க வருகிறான் என்று புரிந்து கொண்டவளாக…. “ ம் பக்கத்தில் இருக்கும் காபி ஷாப்புக்கு போகலாம்..” என்று சொல்ல இருவரும் இங்கு வந்தது போலவே ஒரே காரில் ஏறி தான் காபி ஷாப்புக்கு சென்றது..

இதை பார்த்த இரண்டு வக்கீலுமே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்….

பின் அதில் ஒரு வக்கீல்… “ படிப்பு, ஸ்டேட்டஸ்… தோற்ற பொலிவு என்று எல்லா வற்றிலுமே மேச் பார் ஈச் அதர் என்பார்களே அது போல தான் இருவரும் இருக்காங்க. இவங்க ஏன் டைவஸ் வாங்கிட்டாங்க…” என்று கேட்ட வக்கீலிடம்….

இன்னொரு வக்கீல்… “ அது தெரியல.. ஆனா நமக்கு இவங்க மூலம் நம்ம பாங்க் அக்கவுண்டில் கொஞ்சம் பணம் ஏறி இருக்கு… நாம அதை மட்டும் பார்த்தால் போதும்..” என்று சொல்லி வாங்கிய பணத்திற்க்கு உண்டான வேலையை பார்க்க சென்று விட்டனர்..

வக்கீல் சொன்னது போலவே இருவரும் காபி குடித்து விட்டு திரும்ப அந்த நீதிமன்ற வளாகத்தில் வந்த போது அவர்கள் இருவரும் கைய்யெழுத்து போட வேண்டிய பேப்பர் தயாராக இருந்தது…

அதில் இருவரும் கைய்யெழுத்து போட்ட பின்… இரண்டு வக்கீலுமே…

“இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்..” என்று சொன்னதுமே துகிலன் தன் கை கடிகாரத்தை தான் பார்த்தான்…

அதை கவனித்த நர்மதாவுமே…. “ உங்க கீழே இருக்கும் அந்த மால் பிராஜெக்ட் இப்போ பினிஷிங்க ஸ்டேஜில் இருக்கு லே துகி…?” என்று கேட்டவளிடம்..

ஆமாம் என்று நெற்றி நீவி கொண்டே யோசனை செய்தவனின் முக பாவனையில், நர்மதா துகிலனின் லாயரிடம்… “ அவர் சைன் பண்ணிட்டாருலே.. அவர் போகட்டும்.. அவர் பேப்பரை என் கிட்ட கொடுங்க நான் அவர் கிட்ட கொடுத்து விடுகிறேன்…” என்று துகிலன் வக்கீலிடம் பேசிய நர்மதா துகிலனை பார்த்து..

“நீங்க போங்க துகி.. நான் வாங்கிட்டு வரேன்…” என்று சொல்ல.

துகிலனின் யோசனை படிந்த முகம் சட்டென்று மாறி விட… நர்மதாவை தோள் அணைத்து விடுவித்து விட்டு.

“தேங்கஸ் நம்மூ….” என்று சொல்லியபடி தன் காரை நோக்கி சென்று கொண்டு இருந்தவன் என்ன நினைத்தானோ… நர்மதாவை திரும்பி பார்த்து..

“நான் போயிட்டு காரை நம்ம ட்ரைவரிடம் கொடுத்து அனுப்புறேன்.. நம்மூ…” என்று நர்மதா அவள் செல்ல வேண்டிய இடத்திற்க்கு எப்படி செல்வாள்.. வரும் போது தன்னோடு தானே வந்தது என்று யோசித்து அதற்க்கு வழி வகை செய்தவனாக தான் சென்றான் துகிலன்..

இரு வக்கீலுமே மீண்டும் ஒருவர் ஒருவர் பார்த்து கொண்டனர்.. பின்.. இவர்களின் செயல்களை பார்த்தால் நம்ம வேலைகளை பார்க்க முடியாது.. நாம தான் பார்த்துட்டே இருக்கனும் என்று முடிவு செய்தவர்களாக விரைந்து அந்த விவாகரத்து பேப்பரை தயார் செய்து விட்டு நர்மதாவிடமே இருவருடையதும் கொடுத்து விட்டனர்..

அதை பெற்றுக் கொண்ட நர்மதாவுமே துகிலன் அனுப்பி விட்ட அவன் காரில் ஏறியவள் இவர்கள் செய்து கொண்டு இருந்த மற்றோரு பிராஜெக்ட் சைட்டுக்கு காரை விட சொன்னாள் அந்த ஓட்டுனரிடம்…








 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
996
அந்த வக்கீல்களை போல தான் கேள்வி வருது. பின் ஏன் இந்த பிரிவு
அது தான் கதை யே... பாதி கதைக்கு மேல் தான் காரணம் வெளிவரும் பா
 
Top